வானம் தவணை முறையில் வெளிச்சத்தை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கும் மாலை நேரம்.
நீங்க எப்படி ஆரம்பிக்க போறீங்க? சுஜாதா கேட்டாள்.
அவள் காதலன் சுந்தர் சலைத்துக் கொண்டான்,” சே.. காதலை காதலிக்கிட்ட சொல்ற அவஸ்தையை விட வீட்ல சொல்ற அவஸ்தை தாங்க முடியலை”.
சுஜாதா, “நீங்க கண்டிப்பா சொல்லிடுவீங்களா? என்றாள்.
சுந்தர், சொல்லாமல்.. நான் அப்பாகிட்ட எப்படி சொல்றதுன்னு ஒத்திகை பார்த்துட்டேன். நீயும் கண்டிப்பா சொல்லிடு” என்றான்.
சுஜாதா பதறினாள், “சம்மதிக்கலைன்னா..?”
சுந்தர் தீர்மானமாக சொன்னான், சம்மதிச்சா நல்ல சன்னதியில கல்யாணம்- சம்மதிக்கலைன்னா நாளை ROMல் கல்யாணம்”- இருவரும் புறப்பட்டார்கள்-
சுந்தர் வீடு-
அப்பா பாலசந்தர் கத்தினார்- “உனக்கு கல்யாணத்துக்கு இது தருணம் அல்ல- நான் செத்து போயிடலை உனக்கு எப்ப பெண் பார்க்கணும்னு எனக்கு தெரியும் அது வரைக்கும் பேசாமல் இரு- நான் வேற எதையும் கேட்க தயாராயில்லை”.
சுஜாதா வீடு-
விவாகரத்தான அக்கா வித்யா திட்டினாள்- “இன்னும் படிப்பு முடியலை பெரிசா படிச்சு முன்னுக்கு வரப் போறேன்னு சொன்னே- காதல், கத்திரிக்காய் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு படிக்கிற வழியை பாரு- உனக்கு காதல் இப்ப ரொம்ப முக்கியம் இல்லை- வேற ஏதாவது என் கிட்ட சொல்லணுமா?
ROM-
இனிதாக திருமணம் நடந்தது- மணமக்கள் இருவரும் மாலையும் கையுமாக வெளியே வந்தார்கள்- அதிர்ந்தார்கள்- வெளியே சுந்தரும் சுஜாதாவும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்- சற்று முன் திருமணம் நடந்தது அல்லவா? அதில்
மணமகன்- பாலசந்தர்(சுந்தர் அப்பா)
மணமகள்- வித்யா(சுஜாதா அக்கா)
0 comments:
Post a Comment