முஹம்மத் (ஸல்) அவர்களின் சீரிய பண்புகள்
1
ஸூரத்துல் அஹ்ஜாப் (33)
வசனம்: 21
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி - உஸ்வதுன் ஹஸனதுன் - an excellent (outstanding) example
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
2
ஸூரத்துல் அஹ்ஜாப் (33)
வசனம்: 22
உண்மையாளர் - ஸாதிக் (வஸதக) - Truthful
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
3
ஸூரத்துல் கலம் (68)
வசனம்: 4
முஹம்மத் (ஸல்) அவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர்கள் - வ இன்னக அலயா ஹுலுகின் அளீம் - Recieved a Conduct Certificate as "Exalted Moral Character" from the Almighty
மேலும், நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
4
ஸூரத்துன்னிஸாவு (4)
வசனம்: 65
அவர்களே நீதிபதி
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
5
ஸூரத்துன்னிஸாவு (4)
வசனம்: 175
அவர்களே அத்தாட்சி அவர்களே பேரொளி
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்
6
ஸூரத்துல் ஹாஃக்ஃகா (69)
வசனம்: 40
அவர்கள் கண்ணியமிக்கவர்கள் - கரீம் - Honoured, Noble
நிச்சயமாக, இது கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்
7
ஸூரத்துல் அஃராஃப் (7)
வசனம்: 199
முஹம்மத் (ஸல்) அவர்கள் மன்னிக்கும் மாண்பாளர் - Forgiving
எனினும் மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
8
ஸூரத்துந் நூர் (24)
வசனம்: 51
அவர்களின் தீர்ப்புக்கு கீழ்படிந்தவர்களே வெற்றியடைந்தவர்கள்
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அழைக்கப்பட்டால், அவர்கள் சொல் எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், கீழ்படிந்தோம்” என்பது தான்; இவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
9
ஸூரத்துல் ஆலஇம்ரான் (3)
வசனம்: 121
போர் படைத் தளபதி - Brave: Commands Muslims in battle
நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
- இன்ஷா அல்லாஹ் தொடரும்

0 comments:
Post a Comment