ஒரு நாள் தெரியாத்தனமா ஒரு கேள்வி கேட்டேன்,
”விபத்துகள் நடக்காம இருப்பது என்பது யாருடைய பொறுப்பு?” - என்று..
“கடவுள்” என்ற பதில் வந்தது கேள்வி கேட்கப்பட்டவரிடமிருந்து
எனக்கு மூளை கீளை எல்லாம் குழம்பி போச்சு...
”என்னது கடவுளா..?” - நான்
“ஆமாங்க... உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா..?” - எதிர்தரப்பு..
“கடவுள் நம்பிக்கை எல்லாம் இருக்கு.. ஆனா இதுக்கு எப்படி கடவுள் பொறுப்பாகும்..?” என்றேன் நான்.
“நீங்க என்ன தான் வேலய முடிச்சு வெட்டி முறிச்சாலும் நடக்குறது தான் நடக்கும்.. விதிய யாராலயும் மாத்த முடியாது... விதிங்கிறது கடவுள் எழுதியது.. தலை எழுத்துங்குறது கடவுளோட காப்பி ரைட் உள்ளது. ஒருத்தருக்கு காப்பி ரைட் உள்ளத இன்னொருவரால மாத்த முடியுமா..?” - பொறிந்து தள்ளிவிட்டார் போங்கள்.
தொடர்கிறார் கேளுங்கள்...
“சுனாமி வந்துச்சுல்ல... எத்தனை பேர அழிச்சிட்டு போனுச்சு.. .. யாரால என்னா செய்ய முடிஞ்சிச்சு...” என்று அது இது எது என்று பொளந்து கட்டி விட்டார்.
நான் என்னா செய்வேன்...
”எனக்கு இப்ப கடவுள் பதிலளிக்க உதவுவாரா..? இல்லை என் விதி பேந்த பேந்த விழிப்பது தானா..?” என்று நிலை குலைந்து போயிட்டேன்...
இந்த இடத்தில் ஒரு குரான் ஷரீஃப் செய்தி
குரான் ஷரீஃபில் சூரத்துல் பகறாவில் 258, 259, 260 ஆகிய மூன்று வசனங்களிலும் மூன்று வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அதில் 258 வது வசனத்தை இங்கே எழுதுகிறேன்... (நன்றி: தமிழில் குரான் இணைய தளம்)
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக, இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டு போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
மேலே கண்ட வசனத்தில் இறைவன் நேசித்த கலீலுல்லாஹ்வாகிய இப்ராஹீம் நபியவர்களுக்கும் (அலை) கொடுங்கோல் அரசன் நம்ரூதுக்கும் இடையே நடந்த விவாதம்.
நம்ருத் என்பவன் அந்த கால இராக் நகரை ஆட்சி செய்தவன், அந்த கால மக்கள் யாவரையும் தன்னையே “இறைவன்” என்று அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவன்.
இப்ராஹீம் (அலை) அவங்க சொல்றாங்க, “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ அவனே என்னுடைய் இறைவன்” என்று -
உடனே கொடுங்கோலனான நம்ரூத் என்ன செய்றான் - ஒரு அப்பாவியை கைகாண்பித்து ‘இவனை கொன்று விடுங்கள்” என்று சொல்கிறான், அத்தோடு நிறுத்தாமல் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியை ”விடுதலை” என்று விடுவிக்கவும் செய்கிறான்.
அத்தனையும் செய்து விட்டு, “நானும் தானே ஒருத்தனுக்கு உயிர் கொடுக்கிறேன் - இன்னொருத்தனுடைய உயிரையும் எடுக்கிறேன் - அப்ப நான் தானே இறைவன்...” என்கிறான்
நம்ரூத் பிறப்பு இறப்பு பற்றிய உண்மையான தத்துவத்தை அறியவில்லை. ஒருத்தரை மரணத்திலிருந்து தடுத்து விட்டால் அப்போது அந்த சமயத்தில் அவர் தடுத்து விட்டார் என்று தான் அர்த்தம் - எல்லா நேரமும் இதையே செய்து கொண்டிருக்க முடியாது. ஒருவர் இயற்கையாகவே மரணம் அடைகிறார் என்றாலும் அந்த மரணத்தை நம்ரூத் ஏற்படுத்தவில்லை..
இதையெல்லாம் அறியாமல் பேசும் நம்ரூதிடம் ”எல்லாம் என்னாலயும் முடிஞ்சிடுச்சு, பார்த்தீங்களா?” என்று கூறி மக்களை ஏமாற்றி விடுவான் என்பதாலோ என்னவோ கலீலுல்லாஹ் அவர்கள் சர்வ சக்தியை பற்றி அடுத்தது பேசி உணர வைத்தார்கள்.
”அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்கிறான் - நீ தான் உயிரை எடுக்கிறவன் உயிரை பறிக்கிறவன் எல்லா சக்தியும் உனக்கும் இருக்குங்கீறில்ல - நீ தான் இறைவன்னா - நீ அதை மேற்கில் உதிக்க வை - பார்க்கலாம்” என்பது போல் சொல்லி விட -
அந்த நேரத்தில் நம்ரூத், தான் கிழக்கில் உதிக்க வைக்கவில்லை என்பதனை மட்டுமல்ல தன்னால் மேற்கில் உதிக்க வைக்க முடியாது என்பதனையும் நன்கு உணர்ந்து விட்டான்.
அதனால் அவன் பேச வழியில்லாமல் வாயடைத்து போனான்.
அப்போ என்னாவுது எல்லாமே இறைவன் செயல் என்று தானே ஆவுது..
அப்டின்னா என்னால் கேள்வி கேட்கப்பட்டவர் சொன்னது சரி தானே...
.. என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னாடி...
அவர் கடைசியா சொல்லும் போது “சுனாமிய பத்தி சொன்னாருல்லையா..”
சுனாமி என்பது "இயற்கை நிகழ்வு (Natural Phenomenon)" என்று அறிவியல் ரீதியாக வழங்கப்படுகிறது
அந்த இயற்கை நிகழ்வினால் நிறைய பேர் இறந்தாங்க இல்லையா அது வந்து "Natural Disaster" அதாவது ”இயற்கை நிகழ்வால் பேரழிவு” எனப்படுகிறது.
அது மட்டுமல்ல...,
தொடர்ச்சியா வெள்ளம் வரும் வரை மழை பெய்றது...
சுட்டு பொசுக்குற மாதிரி வெயில் காயுறது..
இப்படி மனிதனால் நிகழ்த்த முடியாதது அல்லது மனிதன் நிகழ்த்தாது எல்லாமே "Natural Phenomenon" தான்.
மிகப் பெரிய மனித அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய "Natural Phenomenon"களை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்...
1. பூமி நிலை சம்மந்தப்பட்டது - உதாரணமாக நில நடுக்கம்
2. வானிலை சம்மந்தப்பட்டது - உதாரணமாக புயல்
3. கடல் நிலை சம்மந்தப்பட்டது - உதாரணமாக சுனாமி
ஆக, இதெல்லாம் “இயற்கை நிகழ்வு” அல்லது மத நம்பிக்கையாளர்கள் சொல்வது போல் “இறைவன் விதித்தது”. எதுவோ ஒன்று.
ஆனால் இத்தகைய இயற்கை நிகழ்வினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க முடியாமல் போனால் ”அது மனித குற்றமே” என்பது தான் என் கருத்து.
வெயில் அடித்தால் குடை பிடிக்கிறோம் - தண்ணீர் குடிக்கிறோம் - நன்னாரி சர்பத் குடிக்கிறோம்
மழை பெய்தால் குடை பிடிக்கிறோம், மழை கோட் போடுறோம்
மின்னல் வெட்டினால் ஷெல்டர் உள்ளே போகிறோம்
மனிதனால் தடுக்க முடியாதது வேண்டுமென்றால் “இயற்கை நிகழ்வுகளாக” இருக்கலாம்.
ஆனால் மனிதனால் தடுக்கக் கூடியது என்னவென்றால் “இயற்கை நிகழ்வால் ஏற்படும் பேரழிவுகளை” என்பது தான் உலக வரலாறுகள் சொல்லும் உண்மை பாடம்.
ஆனால் பேரழிவுகளை தடுக்க மனித முயற்சியால் முடியும் என்பதால் கடவுளை முற்றிலுமாக மறந்து விட வேண்டும் என்பதும் அல்ல...
அதற்காக மூடநம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் ஒன்று என்று புரிந்து கொள்ளவும் கூடாது...
உதாரணமாக...
ஒருத்தர் ஆட்டோவை கையை காட்டி நிறுத்த சொன்னார்...
ஆட்டோ நிறுத்தப்பட்டாது...
நிறுத்தியவர் ஏறி உட்கார்ந்தார்...
டிரைவர் கேட்டார், “எங்கே போறீங்க..?” என்று
ஏறி உட்கார்ந்தவர் சொல்லியிருக்கார், “என்னங்க.. போவும் போதே எங்கே போறீங்கன்னு கேக்கறீங்க..? போற காரியம் உருப்படுமா?’ என்று
அதாவது “எங்கே போறீங்க?”ன்னு ஒருத்தர் கேட்டதனாலேயே ஏதோ கெட்டது நடக்கும்... போற காரியம் நிறைவேறாது என்று நினைப்பது தவறு. உண்மையில் அப்படி கேட்கப்பட்டு, போன காரியம் நிறைவேறாமல் போனாலும் அதற்கு ”எங்கே போறீங்க?” என்று கேட்டது காரணமாக இருக்க முடியாது, நிறைவேறாது என்ற நினைப்பு வேண்டுமென்றால் காரணமாக இருக்கலாம். ஆனால் இது வேற பாடம்...
- இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்மந்தமே இல்லை...
அதே சமயத்தில்...
வெள்ளம் என்பது இயற்கையான நிகழ்வு தான்
ஆனால் அதை தடுக்க நூஹ் நபியவர்கள் (அலை) அவர்கள் கப்பல் கட்டியது என்பது “மனித முயற்சி”யே.
ஆனால் அதற்கு இறை ஆதரவு இருந்தது என்பதனையும் மறுப்பதற்கில்லை.
மனிதன் செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் ”எல்லாம் அவன் செயல்” என்று சொல்வதையும் ஏற்க முடியவில்லை...

வயசாவுறது..
இறந்து போறது..

0 comments:
Post a Comment