Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Saturday, October 15, 2011

சாலையில் வாழ்நாளை கழிக்கின்றேன் - குல்ஜார் சாபின் ‘நம்கீன்’ பட பாடல்

சாலையில்
வாழ்நாளை கழிக்கும்
ஒரு வழிபோக்கர்
கெருலால்.

தனது பயணங்களின்
நடுவே
ஒரு முறை

சிலநாள் மட்டும்
ஓர் ஊரில் (ஹிமாச்சல் பிரதேஷ்)
தங்க நேர்கிறது.

அது ஒரு
சிறிய கிராமம்
அங்கே
உயிர் விட
தயாராயிருக்கும்
மாடி வீடு
நான்கு பெண்மணிகள்
வசிக்கும்
அழகிய கூடு

அம்மா -
நாட்டின் தலைவி
அல்ல
இவர் குடும்ப தலைவி
ஆனாலும் ஒற்றுமை
ஒன்றுண்டு
இவருக்கும்
மறதி உண்டு

பேசும் பேச்சு
ஒருசாராரின்
கலாச்சாரமாய்
கருதிய காலமுண்டு

கலாச்சாரத்தில்
இடிவிழுந்ததாலோ
என்னவோ
இவர்

தனக்குத்தானாக
பேசிக்
கொள்வதுமுண்டு

இவருக்கு
வயிற்றில் முளைத்த
மூன்று முகங்கள்

நிம்க்கி, மித்து, சிங்க்கி

பருவ மேகம்
வந்த பின்னும்
மழை பொய்த்த
பூமி
இவர்கள்

கெருலாலின்
வாகனம்
இங்கே தான்
ஓய்வு கேட்டது

ஆரம்பத்தில்
பழைய வண்டியாய்
மக்கர் செய்தாலும்
பழகப்பழக
விரைவுச் சாலை
பயணமாய் தொடர்கிறது..
வாழ்க்கை

கடைசி கியரில்
அதிவேக
பயணம்
விபத்தாய்
அமைகிறது
“வெளியூர்
செல்லும் படி”
வந்த
மேலாளரின்
உத்திரவு...

அந்த வாழ்க்கை
பயணத்தை
முடித்துக் கொண்டு
இந்த
சாலை பயணத்தை
தொடங்குகிறார்
நம் கெருலால் -

இதோ
வழிபோக்கர்களின்
உலக கீதம்...


---------------------------------------------------
படத்தில் வரும் காட்சி கீழே...

raah pe rahate hai, yaadon pe basar karate hai

khush raho yehale watan  hum to safar karate hai

சாலையில்
வசிக்கின்றேன்
நினைவுகளில்
வாழ்கின்றேன்


என் சொந்தங்களே..!
மகிழ்வாய் இருங்கள்
நான்
இதோ
இப்போது
என் பயணத்தை
மேற்கொள்கின்றேன்!!


jal gaye jo dhoonp mein to saayaa ho gaye
aasamaan kaa koee konaa, thodaa so gaye
jo gujar jaatee hain bas  us pe gujar karate hai
முதல் சரணம்: கடும் வெயில் கொதிக்கும் அனல்

கொளுத்தும் கதிரில்
எரியும் உடலில்
நிழலை தேடினேன்
வானின் குடையில்
ஏதோஒரு மூலையில்
உறங்கி போகின்றேன்
கடந்து போகின்ற
ஒன்றில்
தங்கி போகின்றேன்
நான்


(வாட்டும் வெயிலில் ஓய்வு ஒழிச்சலின்றி பயணம் மேற்கொள்ளும் லாரி ஓட்டுபவர்கள் பயணத்தின் 
நடுவே சாலையில் தங்கி ஓய்வெடுப்பதுண்டு - அனைவரும் ஒரு நிமிடமும் நிற்க விரும்பாத கடந்து 
செல்கின்ற இந்த சாலையின் நடுவே தான் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்)

udate pairo ke tale jab bahatee hain jameen
mud ke humane koee manjil dekhee hee nahee
raat din raahon pe hum  shaam o shehar karate hai 

இரண்டாம் சரணம்: கடும் குளிர் குளுவும் மழை

பாதத்தின் கீழே
பறக்கும் பூமி
ஆறாய் ஓடுகிறது
அவசர கதியில்
விடுபட்ட வாழ்வை
மறந்தே போகின்றேன்
ராவும்பகலும் சாலையில்
நான்
ஓய்வெடுக்கும் இடமே
என்நகரம்



(அதிவேகமாக பயணம் செய்யும் போது சாலையை கவனித்தால் அது பறந்து போகின்ற மாதிரி - ஆறு ஓடுவது போல் ஓடிக் கொண்டே இருப்பதை கவனித்திருக்கலாம் - இத்தகைய அவசர பயணத்தில் வாழ்வின் அழகான பக்கங்களை திரும்பி பார்க்க நேரமிருப்பதில்லை - நம் முகத்தில் ’கண்’ முன்னே தானே இருக்கிறது அதனால் இருக்கலாம் - இதற்கு நடுவே இவர்கள் ஓய்வெடுக்கும் இடமே இவர்களின் ஊராகிறது)   

aise ujde aashiyaane tinke udgaye
bastiyon tak aate aate raste mud gaye
hum thahar jaaye jahaan ho usko sehar karte hai

மூன்றாம் சரணம்: கடும் காற்று அலைகழிக்கும் புயல்

கனவுகூடு அழிகின்றது
நினைவு குடிலோ
சிதறுகின்றது
இலக்கை நோக்கி
செல்ல செல்ல
பாதை மாறுகின்றது
பயண வழியில்
எங்கேனும்
நிறுத்திய இடமே
என்நகரம்

(கோட்டை போல் கட்டிய ஏழைகளின் கனவுகள் எல்லாம் பணக்காரர்களின் காணும் கனவுகளால் 
இடிந்து போகின்றது - ஏழைகளான இவர்கள் முன்னேறி செல்ல செல்ல பணக்காரர்கள் பாதைகளைஇவர்களின் வசதிக்கு ஏற்றாற் போல் மாற்றி மாற்றி அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் - கண் சரியாக 
பார்க்காமல் போன தவற்றால் தவறி விழுந்தாலும் காலில் அடிபட்டால் வலி காலுக்கு தானே வரும் - 
கண்களுக்கு வராது அல்லவா? - அது போலே பணக்காரர்கள் தவறு செய்தாலும் ஏழைகளுக்கே வலி 
வந்து சேருகிறது - நாளின் முடிவில் இவர்கள் எந்த ஊரில் வண்டியை நிறுத்த நேருகிறதோ அந்த இடமே இவர்களின் நகரமாகிறது)




விசில் அடிச்சி கூப்பிடறது
விசில் அடிச்சி ரசிக்கிறது
இப்படி எதுவுமே
எனக்கு பிடிக்காது
ஆனால்
இந்த விசில்....



------------------------------------


நம்கீன் - இந்த படத்தின் ஆடியோ கேஸட்டில் குல்ஜார் சாப் பேசுவார்.
இதனை அப்படியே இங்கே எழுதி விடுகிறேன்..


ராஹோன் பெ ரெஹ்னே வாலே யெ முஸாஃபிர் - கெருலால்
ஸஃபர் ஸஃபர் கர்தே கர்தே
எக் பார் தூர்
தராஜ் கெ பஹாதோன் மெய்ன் ஜா கர் ருக் கயா

எக் சோட்டா ஸா காவோன் தா
ஆர்
உஸ் காவோன் மெய்ன்
டூட்டா பூட்டா ஸெ எக் கர்

ஜஹான் சார் அவ்ரத்தோன் கா ஏக்
அதூர்சா பரிவார் ரெஹ்தா தா


அம்மா தி ஸாத் ஸெ ஊப்பர் கி
குச் ஸாத்தியாயி ஹுயி சி
குச் பெகி ஹுயி
அப்னே ஆப் ஹி செ பாத்தேன் கர்தி ரெஹ்தி தி

ஆர் உஸ் கி தீன் பேடியான்
நிம்க்கி, மித்து ஆர் சிங்க்கி
ஸாதி கிஸி கி நஹி ஹோ பாயி

லோக் கெஹ்தெ ஹெய்ன்
மா பாப் கெ
சீந்தெ நா படெ ஹொன்தெ
தொ தீனோ பிஹாயி ஜாதின்
தேக்னெ மெய்ன் பி தொ ஆகிர், அச்சே: காஸி ஹெய்ன்

படி
ஸாதி ஸெ
உம்ர் ஸெ
குஜர் சுகி ஹெ

ஆர் சோட்டி
லட்கோன் கி தரா
ராஸ்தோன் மெய்ன்
துட்டெ மார்த்தி ச்சல்த்தி ஹெய்ன்

ஸாதி கி
உம்ர் கோ
பஸ் பஹுன்ச்சி கி
அப் பஹுன்ச்சி

ஆர் மன்ஜ்லி
பெச்சாரி குங்கி ஹெய்
கெருலால் நெ அக்ஸர் உஸெ
குங்குனாதெ சுனா ஹெய்
பெஹ்னெய்ன் கெஹ்தி ஹெய்ன் கி
வொஹ் கீத் லிகா கர்த்தி ஹெய்ன்

0 comments: