I am not a racist. I am against every form of racism and segregation, every form of discrimination. I believe in human beings, and that all human beings should be respected as such, regardless of their colour.
- (Malcom X) Malik al Shabbaz
------------------------------------------------------------------------------------
இன்றைக்கு மனிதர்கள் பலவிதமான் முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறார்கள். விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் இப்படி மனித சமுதாயம் அடைந்திருக்கும் முன்னேறம் விண்ணை முட்டுகிறது.
ஆனால் இவ்வளவு ஸ்ட்ராங்கான பில்டிங்கின் முன்னேற்றத்திலும் வீக்கான பேஸ்மெண்ட்டாக ஒருவருக்கொருவர் விரோதத்தையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்துள்ளனர். இதன் வளர்ச்சியோ முன்னதைக் காட்டிலும் அதிவேகமான வளர்ச்சியாக விண்ணையே துளைத்துக் கொண்டு சென்று விட்டது எனலாம்.
குரான் ஷரீஃபின் அறிவிப்புப் படி மனிதர்கள் யாவரும் ஒரே குடும்பமாக தான் ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனால் அவர்களிடையே ஒட்டிக் கொண்டே வந்த பொறாமையின் காரணமாக அவர்களுக்குள் வேறுபாட்டையும் மாறுபாட்டையும் பார்க்க துவங்கினார்கள்.
குரான் ஷரீஃப்
2: ஸூரத்துல் பகர (பசு மாடு)
213வது வாக்கியம்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
மேலே படித்த வசனத்தின் படி மனிதர்களிடையே உண்டான பொறாமை அவர்களை ஒருவருகொருவரை வேறுபடுத்தி காட்டியது.
எதையெல்லாம் முன்னெடுத்து வைத்து வேறுபடுத்தி பார்க்க துவங்கினார்கள் தெரியுமா?
பேசும் மொழிகள்
தோலின் நிறங்கள்
- இப்படியாக,
இன்னும் நிறையவே வேறுபாடுகளை கண்டுபிடித்தார்கள் இந்த பொறாமை கொண்டவர்கள்,
உதாரணமாக, பிறப்பை வைத்து வேறுபாடு, சேர்த்து குவித்திருக்கும் செல்வம், மண்டையில் அடைத்திருக்கும் கல்வியறிவு, இவ்வளவு ஏன், நம்மடவர்கள் ஆதார ஹதீதுகளை வைத்துக் கொண்டே நாங்க வேற என்று வேறுபடுத்தி பார்க்க தொடங்கி விட்டர்கள்

30: ஸூரத்துர் ரூம் (ரோமானிய பேரரசு)
22வது வாக்கியம்
மேலும் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
மனிதர்களுக்கு இடையேயான இந்த வேறுபாடுகள் இறைவனின் அத்தாட்சிகளில் உள்ளது தான். ஆனால் இது கற்றரிந்தோருக்கு மட்டுமே தெரிகின்றது என்கிறது குரான் ஷரீஃப்.
மன்சூர் ஹல்லாஜ் என்ற சூஃபி ஞானி சொல்வார்கள் - “இறைவனை பார்க்க வில்லையென்றாலும் குறைந்த பட்சம் இறைவனின் அத்தாட்சியையாவது கண்டுகொள்” என்று -
இந்த வேறுபாடுகள் எதற்காக இருந்தாலும் நிச்சயமாக மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு பேசி பகைத்துக் கொள்வதற்காக அல்ல - இதை குரான் ஷரீஃப் அழகாக ஓர் உதாரணத்துடன் சொல்லிக் காட்டுகிறது.
குரான் ஷரீஃப்
35: ஸூரத்துர் பாத்திர் (படைப்பவன்)
27வது வாக்கியம்
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
28வது வாக்கியம்
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
மேலே கண்ட உதாரணத்தில் மழை நீர் ஒரே மூலத்திலிருந்து இறங்கினாலும் பல விதமான கனிகளை வெளியாக்குகின்றன, அதே போல் தான் மனிதர்களிடையே பலவிதமானவர்களும் இருக்கிறார்கள், ஆனால் எவர்கள் அறிஞர்கள் என்றால் இந்த வேறுபாட்டை வைத்து பிரிவினை ஏற்படுத்தி அதன் மூலம் பிழைப்பு நடத்தாமல் அவனுக்கு அஞ்சி நடப்பவர்கள் தாம் என்ற கருத்தே இதன் அடிப்படையாகும்.
இன்னொரு வசனம் இப்படி வருகிறது...
குரான் ஷரீஃப்
49: ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)
13வது வாக்கியம்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும் (shu'uban - அதாவது தேசத்துடையவர்களாகவும் nations), கோத்திரங்களாகவும் (qabaila - அதாவது குழுக்கள், வம்சாவளிகள் tribes) ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக (atkakum - most righteous of you) இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர் (most noble of you). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(Refer: the book "qabila - tribes" - http://books.google.com.sg/books/about/Qabila.html?id=rE2FAAAAMAAJ&redir_esc=y)
இஸ்லாத்தை பொறுத்த வரை மனிதர்கள் குரங்கிலிருந்தோ அல்லது சிங்கம் புலியிலியிருந்தோ அல்லது வேறு எந்த மிருகத்திடமிருந்தோ வந்தவர்களல்ல,
மனிதனை மிருகத்தோடு எல்லாம் ஒப்பிட்டு ஒரு வகையாக கேவலப்படுத்தவில்லை மாறாக மனிதனை சிரத்தையோடு படைத்தான், அவனுடைய ஆவியை ஊதினான் என்று தான் மனிதனை கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.
மேலே கண்ட இந்த வசனத்தில் ரொம்பவும் கவனிக்க வேண்டிய வாசகம் “மனிதர்களே!..” என தொடங்கும் இந்த வசனம் தான்.
அப்படி என்ன இதில் முக்கியத்துவம் என்றால்...?
இதற்கு முந்தைய வசனங்கள் அனைத்தும் “முஃமீன்களே!..” என்று தொடங்கியிருக்கும் போது இந்த வசனம் மட்டும் சட்டென்று “மனிதர்களே..!” என்று மாற்றியிருப்பது தான்.
இந்த வசனத்திற்கு லீடாக தான் முந்தைய வசனங்களை என்னால் பார்க்க முடிகிறது. முந்தைய வசனங்கள் எதுவுமே ஆழ்ந்து படித்து புரிந்துக் கொண்டு பின்பற்ற வேண்டியவை தான் என்றாலும் நான் குறிப்பிட்டு இங்கே எழுத நினைக்கும் வசனம் இதே அத்தியாயத்தில் வரும் 11வது வசனமாகும்.
இந்த அத்தியாயத்தில் முஃமீன்களை பார்த்து இறைவன் கட்டளையிடுகிறான். ஒரு சமூகத்தார் இன்னொரு சமூகத்தாரை பார்த்து பரிகாசம் செய்ய வேண்டாம் என்று.
இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால், ஒரு சமூகத்தை பார்த்து, “காலா”, “சப்பாத்தி”, “மதராஸி”, “பச்சை”, “மாவு”, “மஞ்சள்” - இன்னும் எப்படி எப்படி எல்லாமோ ஒருவருக்கொருவர் பரிகாசம் செய்து கொள்கிறார்கள் - இப்படி எல்லாம் செய்யவே கூடாது.குறிப்பாக சாதியை குறிப்பிட்டு பழித்து சொல்வது அறவே வெறுக்கப்பட வேண்டிய ஒழிக்கப் பட வேண்டிய ஒன்று.
மால்கம் எக்ஸ் என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர், அவர் சார்ந்த இன மக்களின் உரிமைக்காக போராடிய மிகப் பெரிய சக்தியாக விளங்கியவர், முஸ்லிமாக மாறிய பிரபலங்களில் மிக முக்கியமானவர்.

இதையெல்லாம் சொல்லி விட்டு “மனிதர்களே!” என்று ஆரம்பித்து நீங்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் தான், பல தேசத்தவர்களாக, பல குடும்பம் குழுக்களாக பிரிந்திருப்பது உங்களில் ஒருவரை ஒருவர், “இன்னாரின் மகன், இன்னாரின் குடும்பம் இன்ன நாட்டுக்காரர்” என்ற அடையாளத்திற்காக மட்டும் தான். இதனால் உங்களுக்கு அல்லாஹ்விடத்திலே எந்த கண்ணியமும் நிச்சயமாக கிடையாது, அதாவது நான் சவுதி அரேபிய சிட்டிசன், அமெரிக்க சிட்டிசன் என்பதிலெல்லாம் கண்ணியம் கிடையாது, யார் கண்ணியம் உடையவர்கள் என்றால் யார் நேர்மையாக, நீதமாக, பயபக்தியோடு நடந்து கொள்கிறீர்களோ அவர்கள் தான், இதனால் அப்படி நடந்து கொள்வதால் உங்களுக்கு நீங்கள் யாராக இருந்தாலும் சரியே கண்ணியம் உண்டு என்று இறைவன் தீர்ப்பளித்து இருக்கிறான்.
மனிதர்கள் மாறுபட்டு இருந்தாலும் மேலே கண்ட வசனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களிடையே கூட ஆப்கானி, பாகிஸ்தானி, ஈரானி, ஷியா, சுன்னி என்ற பல வேறுபாடுகள் நாடுகள், மொழிகள், நிறங்கள், உயரங்கள் செல்வங்கள் கல்வியறிவு இப்படியாக வேறுபட்டு இருந்தாலும் ஹஜ் என்று வரும் போது ஒரே அணியாக அதாவது “உம்மத்” என்ற ஒரே அடையாளமாக இணைந்து விடுகிறார்கள் என்பதே இஸ்லாத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.
இந்த ஹஜ் எனும் பயனம் தான் மால்கம் - எக்ஸ் என்பவரின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
-------------------------------------------------------------------------------------------------
True Islam taught me that it takes all of the religious, political, economic, psychological, and racial ingredients or characteristics, to make the Human Family and the Human Society complete
- (Malcom X) Malik al Shabbaz
----------------------------------------------------------------------------------------------------
மால்கம் எக்ஸ் என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர், அவர் சார்ந்த இன மக்களின் உரிமைக்காக போராடிய மிகப் பெரிய சக்தியாக விளங்கியவர், முஸ்லிமாக மாறிய பிரபலங்களில் மிக முக்கியமானவர்.
இவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் ஹஜ்ஜின் போது இவருக்கு ஏற்பட்ட தாக்கம். ஹஜ் என்பது உலகின் பல பாகங்களிலிருந்து மனிதர்கள் தனது நாடு இனம் மொழி குலம் கோத்திரம் அடையாளம் பால் இப்படி எல்லா பிரிவுகளையும் உடைத்தெறிந்து படைத்த ஒரே இறைவனின் முன்னால் முழுமையாக சரணடைந்தவர்களாக இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற செல்லும் ஒரு மிகப் பழமையான பயணமாகும்.
இந்த பயணத்தை பற்றி மால்கம் எக்ஸ் குறிப்பிடும் போது, “இந்த பூமியில் நான் வாழ்ந்த இந்த 39 வருடத்தில், புனித நகரான மக்காவில் மட்டுமே முதன் முறையாக அனைத்தையும் படைத்தவனின் முன்பாக நிற்பதாக உணர்ந்ததோடு ஒரு முழுமையான மனிதனாக நான் உணர்த்துக் கொண்டதும் ஆகும்” என்றார்.
மறைந்த சகோதரருக்கு இந்த (பிப்ரவரி) மாதம் 21ந் தேதி நினைவு நாள்..
இறைவன் இவருக்கு மேலான ஆஹிர் வாழ்க்கையை அருள்வானாகவும்..!
அன்னாரின் நினைவாக...
அல் ஃபாத்திஹா...
---------------------------------------------------------------------------------------
I am and always will be a Muslim and my religion is Islam
அல் ஃபாத்திஹா...
---------------------------------------------------------------------------------------
I am and always will be a Muslim and my religion is Islam
- (Malcom X) Malik al Shabbaz
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
All praise is due to Allah - the Lord of all the Worlds
- (Malcom X) Malik al Shabbaz
-------------------------------------------------------------------------------------------------------------------