Showing posts with label நியாயம் வேண்டி. Show all posts
Showing posts with label நியாயம் வேண்டி. Show all posts

Thursday, December 03, 2009

போபால் விபரீதம் - ஒரு தொழிற்சாலை பேரழிவு

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ந் தேதிக்குள் 3ந் தேதி புகுந்து கொண்டிருந்த நேரம். அன்று இரவு எப்போதும் உறங்க போன அந்த அப்பாவி பொதுமக்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், 3ந் தேதி காலையிலே நாம் அனைவரும் குடும்பம் குடும்பமாக, ஆமாம் ஒரு வீட்டின் அறையின் உள்ளே அம்மா, அப்பா இருவரும் இறந்து கிடக்க ஹாலில் பிள்ளைகள் இறந்து கிடக்க, அதாவது பிள்ளைகள் இறந்தது பெற்றோர்களுக்கு தெரியாது, பெற்றோர்கள் இறந்தது பிள்ளைகளுக்கு தெரியாது, இப்படி உடனடியாக இறந்த ஆயிரக்கணக்கான பேரையும் சேர்த்து 3000க்கும் மேற்பட்டவர்கள் இறந்து கிடந்தனர்.

இவ்வளவு பெரிய பாதக செயலுக்கு காரணமாக எந்த வகையிலாவது  பெரியண்ணன் (நன்றி: ஆபிதீன் நானா) சம்மந்தப்பட்டிருக்கணுமே என்ற கணிப்பை ஏமாற்றாமல் யுனியன் கார்பைட் என்ற அமெரிக்க நிறுவனத்திலிருந்து கசிந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் என்ற இரசாயனமே அந்த பேரழிவுக்கு காரணமானது.

யுனியன் கார்பைட் என்பது அமெரிக்க இரசாயன தயாரிப்பு ஆலை, இது பலவேறுபட்ட இந்திய முதலீட்டாளர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டு மெதில் ஐசோ சயனைட் எனும் பூச்சி கொல்லி மருந்தை தயாரித்து வந்தது.

இரசாயனங்கள் பொதுவாகவே பல்வேறு தேவைகளுக்காக தயாரிக்கப்பட்டாலும் அது மனிதனின் உடலுள்ளே சென்று விட்டால் நமக்கு ஆபத்தையும் தீங்கையும் ஏற்படுத்தும்

இரசாயனமானது மனிதனின் உடலின் உள்ளே மூன்று வழிகளில் உள்ளே செல்கிறது
1. வாய் வழியாக
நம்முடைய உடலை ஒரு வீடு என்று வைத்து கொண்டால் வாயை வாச கதவு என்று சொல்லலாம் மருத்துவர்கள் கூட இதனை gate way of the body என்று தான் சொல்வார்கள்.

யாரும் வேண்டுமென்றே இரசாயனத்தை வாயில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை, தெரியாமல் உள்ளே போய் விடும், சில தொழிற்சாலை ஊழியர்கள் தண்ணீர் குடிக்கிற பாட்டிலில் தின்னரை (- இது ஒரு பெட்ரோ இரசாயனம்) ஊற்றி வைக்கிறார்கள், அப்போது தெரியாமல் தண்ணீர் என நினைத்து வாயில் ஊற்றி கொண்ட சம்பவங்கள் உண்டு.

இது தவிர, வேலை பார்த்து விட்டு முறையாக கை கழுவாமல் சாப்பிட்டாலும் வாய் வழியாக உள்ளே நுழைந்து விடும்

2. தோல் வழி

இரசாயனங்கள் தோலில் பட்டால் நம் தோலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத வியர்வை துவாரங்கள் வழியாக உள்ளே நுழைந்து விடும், சாயம் அடிக்கிற வேலை பார்த்து விட்டு கையில் சாயம் இருந்தால் தின்னரை வைத்து துடைப்பதை பார்த்திருக்க்கிறேன். தின்னரானது மேற்கூறிய துவாரம் வழியாக உள்ளே நுழைந்து விடும்

3. சுவாச வழி

இது ரொம்ப ஆபத்தானது, தொழிற்சாலையிலேயே வேலை பார்க்காத போபால் வாசிகள் சுவாசம் வழியாக தான் இரசாயனத்தை உள்ளே இழுத்தார்கள் அதுவும் தூங்கி கொண்டிருக்கும் போது.

அப்படி உள்ளே இழுக்கப்பட்ட அந்த இரசாயனமான மெதில் ஐசோ சயனைட் என்பது நச்சுத்தன்மையுடைய வாயு. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு தண்ணீரோடு கலந்தால் அது எதிர்வினை (reactive) தரக்கூடியதுமாகும்

பேரழிவு சம்பவம் நடந்த தினத்தன்று அப்படி தான் அந்த மெதில் ஐசோ சயனைட் சேமித்து வைக்கும் தொட்டியில் தண்ணீர் தவறுதலாக கலந்து விட்டது. அந்த தொட்டியில் அனுமதிக்கப்பட்ட சேமிப்பு கொள்ளளவை விட அதிகமான அளவில் அந்த இரசாயனம் இருந்ததால் பாதுகாப்பு மூடியை உடைத்து கொண்டு வெளியே வந்து ஊர் முழுவதும் பரவ தொடங்கியது.

டைட்டானிக் சம்பவம் நடந்த போது கப்பலை உடைத்து கொண்டு தண்ணீர் உள்ளே புகுந்தது தெரிந்தும் முதல் இருபது நிமிடத்திற்கு ஆட்டமும் பாட்டமுமாய் தான் இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன், ஆனால் போபால் சம்பவத்தில் ஊர் அபாய எச்சரிக்கை ஒலியே ஒரு மணி நேரம் கழித்து தான் ஒலித்ததாம்.

ஹென்றிக் என்பவர் 1950ல் ஒரு தியரியை அறிமுகப்படுத்தினார், அதற்கு பெயர் ஹென்றிக் டொமினோ தியரி என்று பெயர். அந்த தியரியில் விபத்துகளின் அடிப்படை காரணம் - basic cause (முதல் மூலக் காரணம் - root cause அல்ல) என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார்.
1. பாதுகாப்பற்ற செயல்
2. பாதுகாப்பற்ற சூழல்

ஆனால் பொதுவாக எல்லா பாதுகாப்பற்ற சூழலும் பாதுகாப்பற்ற செயல்களினாலேயே விளைகிறது. அதாவது மனித தவறுகளே - human failing காரணமாக இருக்கிறது.

இந்த மனித தவறுகளுக்கும் காரணமாக மூன்று சொல்லப்படுக்கிறது

1. அலட்சியம் - carelessness
2. திறனின்மை - incompetence
3. அறியாமை - ignorance

ஆனால் ஒரு தொழிற்சாலையை நிர்வகிப்பவர்களுக்கு அறம் சார்ந்த, மனித நேய மிக்க சமூக பொறுப்புகள் உள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரி தனக்கு பொறுப்பு இல்லை என்று தன்னை சட்டப்பூர்வமாக விடுவித்து கொண்டார் என்று அறியும் போது என்ன தான் முடிவு?

படிக்க: http://www.bookrags.com/research/bhopal-case-este-0001_0001_0/


நேற்றோடு சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிறது.

மனதில் பதிந்து விட்ட அவர்களின் நினைவாக இந்த பதிவு

Monday, July 20, 2009

நீதி கிடைக்குமா?

நேற்றைய தினமலரில் படித்த செய்தி, இதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

http://www.dinamalar.com//sambavamnewsdetail.asp?News_id=11563

பொதுவாக பெண்களுக்கு நடக்கும் அநீதி தொடர்ந்து கொண்டே வருகிறது, ஒரு கருத்துக்காக இதை சொல்கிறேன், பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் என்று யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் சொல்கின்றது. இது ஒரு குறீயீடாக கூட சொல்லப்பட்டிருக்கலாம்.

அதாவது தலையில் இருந்து அல்லது காலிலிருந்து படைக்கப்பட்டவள் என்றால் ஆணை விட பெண் மேலானவள் என்றோ அல்லது ஆணை விட பெண் கீழானவள் என்றோ முறையே அர்த்தமாகி போகும்.

ஆனால் விலாவிலிருந்து என்றால் அது உடலின் நடு பகுதியில் இருப்பதால் ஆணும் பெண்ணும் சமம் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஆணுக்கு அதிகாரம் இருக்குமேயானால் அவன் சமமாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று கூட பொருள் கொள்ள முடியும்.

இன்னும் யூத வேதத்தில் (ஹெப்ரிவ் தல்முத்)  விலா எலும்பு கைகளுக்கு கீழே இருப்பதால் அவள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதயத்திற்கு அடுத்தபடியாக இருப்பதால் அவள் நேசிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேலே கொடுத்திருக்கும் இணைப்பில் காதலித்து மணமுடித்த அந்த ஆண் தனது காதல் மனைவியிடம் உன் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளாதே என்று தகராறு செய்திருக்கிறான். இது அவர்களது குடும்ப விஷயம் என்று விட்டு விடலாம், இந்த விஷயம் தற்கொலை செய்தி வரை வராமலிருந்தால்.

"நீ பேசக்கூடாது.." என்று வெறும் வார்த்தைகளால் சொல்லியிருந்தால் தற்கொலை வரை போயிருக்க முடியாது. அடித்திருக்கலாம், வேறு வழிகளில் துன்புறுத்தியிருக்கலாம்.

பரிதாபத்துக்குறிய அந்த பெண் நிர்வாணமாக தூக்கில் தொங்கப்பட்டிருக்கிறாள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளின் காலையில் அந்த பெண்ணின் தாயார் தொலைபேசியில் 8:23 மணிக்கு தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து செய்தி சொன்ன போது, "நான் குளிச்சிட்டு கோயிலுக்கு போறேன்..' என்று சொல்லியிருக்கிறார்கள். (இது பத்திரிக்கையில் இல்லாத செய்தி). சரியாக 11 மணிக்கு தாயாருக்கு தற்கொலை செய்தி போகிறது.

எது எப்படியிருப்பினும், தற்கொலை என்பது சந்தேகத்திற்குறியதாக படுகிறது. பத்திரிக்கை செய்தியில் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் கூறியிருக்கும் கருத்தும் சிந்திக்க கூடியது தான். 

தவறிழைத்தவர்கள் அவ்வாறு தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.