முந்தைய பகுதிகளின் இணைப்பு:
1 - http://nagoreismail786.blogspot.com/2009/09/1.html
2 - http://nagoreismail786.blogspot.com/2009/11/2.html
3 - http://nagoreismail786.blogspot.com/2009/12/3.html
4 - http://nagoreismail786.blogspot.com/2010/07/4.html
**************************************************************
என்னை விட என் மச்சான் ஜாஃபர் சுல்தான் தான் ஜட்ஜப்பாவுடன் அதிகமாக உரையாடியது கேள்விகள் கேட்டது எல்லாம்.
ஒரு முறை நாகூரில் நடந்த ஒரு கலவரத்தில் மாற்று மத சகோதரர்களால் ஒரு மதக் கலவரத்தின் போது ஒருத்தரின் வீட்டு வாசல், வாசல் கேட் எல்லாம் உடைக்கப்பட்டது, அப்போது அவர்கள் கத்திக் கொண்டே உடைக்கிறார்கள், ‘இது தாண்டா அந்த வெள்ளையண்ட வீடு..’ என்று. அவ்வளவு பாப்புலர் ஃபிகர் இன் நாகூர். அந்த வெள்ளையன் வேறு யாருமல்ல.. சாட்சாத் என்னோட மச்சான் ஜாஃபர் சுல்தானே தான்.
ஒரு முறை ஜட்ஜப்பா வீட்டில் சங்கராச்சாரியார் (மறைந்த பெரியவர்) படம் அவர்களின் மேசை மேல் இருந்ததை பார்த்து விட்டார் இந்த ஜாஃபர் சுல்தான்.
வச்சிருந்தா உம்பருக்கு என்னா..? நீம்பர் வாய வச்சுகிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே..
“இவர்ட படமெல்லாம் ஏன் இங்கே கொண்டு வந்து வச்சிருக்கீங்க..” - கேட்டே விட்டான்
இளங்கன்று பயமறியாது..
அத்தோடு நிற்கவில்லை அவன், “இவர்ல்லாம் சாமியார்ல.. இதெல்லாம் நம்ம வச்சுக்கலாமா..?”
அட படுவாப் பயலே..! யார்ட்ட போய் என்னா கேக்குறது..
ஜட்ஜப்பா சொன்னார்கள், ‘என் மேல இவருக்கு பிரியம்.. இவர் மேல எனக்கு பிரியம்..” என்று.
என் மச்சானுக்கு அந்த நேரம் பார்த்து அந்த பதிலே போதுமானதாக இருந்தது.
அவன் போன பிறகு, அவர்களின் அருமை மகளாரை அழைத்து, “இந்த போட்டோவை பத்தி கேக்குறாரு.. கூப்ட்டு ஒக்கார வச்சு விளக்கம் கொடுக்கலாம்.. சொன்னா விளங்குமா..? மத வெறி புடிச்சவன்..” என்று மச்சான பத்தி தெளிவாக இப்படி சொல்லியிருந்தாலும் அவர்களுக்கு என் மச்சான் மேல் ரொம்ப பிரியம்.
ஒரு முறை ஜாஃபர் சுல்தான், “நீங்க எழுதுன புக் எதாவது உங்க ஞாபகார்த்தமா தாங்க ஜட்ஜப்பா..” என்று கேட்ட போது அவர்களின் மகளாரை கூப்பிட்டு அவர்கள் எழுதிய ‘இனிக்கும் இராஜநாயகம்’ என்ற புத்தகத்தை அவர்களுடைய கையெழுத்தை போட்டு கொடுத்தார்கள்.

0 comments:
Post a Comment