Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Friday, December 31, 2010

திரைக்கதை வைத்தியர் - கே.பாக்யராஜ்

கதை சொல்றது எல்லோருக்கும் பிடிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை.. ஆனால் கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும். இதெல்லாம் கதை என்று கழட்டி விடாதீர்கள்.

நான் சின்னவனா இருந்தப்போ எனக்கு தூக்கம் வரவைக்க எங்க வூட்ல எங்க பாட்டியா மாமரக்கா கதை, சபூர் கட்டை கதை, லவை கதை என்று ஏராளமான கதை சொல்வார்கள். எல்லா கதையிலும் கடைசியாக சுபம் போட்டு முடிக்கும் போது, ‘நானும் போனேன், வாய்க்கு ஒரு வெத்தலை கூட தரல..’ என்ற பன்ச் டயலாக்கோடு தான் முடிப்பார்கள்.

கதை சொல்வதோடு மட்டுமல்லாமல் எங்களது வாயால் கதையை கேட்டு மழலை மொழியில் சொல்லக் கேட்டும் மகிழ்வார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது அந்த கதையை அதன் ஆன்மா கெடாமல் சிறுவர்கள் நாங்கள் சொல்லி காட்டுவோம். அதை விட கவனிக்க வேண்டிய விஷயம் அப்படி மனதில் பதியும் படி கதை சொல்வார்கள் என்பது தான்.

சினிமாவில் காட்சி வடிவத்தில் கதை சொல்வது என்பது ரொம்பவே சிக்கலான விஷயம் தான். இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் ஒன் லைன் என்ன என்று கேட்கிறார்கள் என்று படித்ததுண்டு. ஒன் லைனில் கதை சொல்லுங்கள் என்று எங்கள் பாட்டியாவிடம் சொன்னால், ஒன் லைன்லயும் சொல்ல முடியாது டெலிபோன் லைன்லயும் சொல்ல முடியாது என்று லொல்லு சபா செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

பொதுவாக சினிமாவாகப்பட்டது,

கதாநாயகனுக்கு உயிரை குடிக்கும் நோய் - வாழ்வே மாயம்
கதாநாயகிக்கு உயிரை குடிக்கும் நோய் - பூவே பூச்சூடவா
கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இருவருக்குமே உயிரை குடிக்கும் நோய் - இதயத்தை திருடாதே

கதாநாயகனுக்கு மனப்பிறழ்வு நோய் - எங்கிருந்தோ வந்தாள்
கதாநாயகிக்கு மனப்பிறழ்வு நோய் - மூன்றாம் பிறை
கதாநாயகனுக்கும் கதாநாயகனுக்கும் மனப்பிறழ்வு நோய் - மீண்டும் ஒரு காதல் கதை

இப்படியாக, சினிமாவை பொறுத்த வரை கதை என்று புதிதாக எதையும் சொல்லி விட முடியாது அதே காதல் அதே கத்திரிக்காய், அதே அருவா அதே பழிவாங்கல் தான்.

ஆனால் திரைக்கதை அமைப்பதில் தான் படத்தின் வெற்றியும் சுவாரஸ்யமும் அடங்கி இருக்கிறது என்பது திரைப்படங்களை பார்த்து ரசித்தவன் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டும் கொண்ட எனது அனுபவ செய்தி.

அந்த வகையில் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை ஆசிரியர் யார் என்றால் அது நம்மவர் பாக்யராஜ் அவர்கள் தான் என்று ஒட்டு மொத்த இந்தியாவே ஒத்துக் கொள்ளும்.

இவரது திரைக்கதையில் இடைவேளை வரை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உறவு (அது காதலாகவோ அல்லது காதல் கைகூடி திருமணம் வரை சென்றதாகவோ இருக்கலாம்) நகைச்சுவையுடன் வளர்ந்து ஒரு சில காரணத்தால் பிரிவு வரை பயணிக்கும். இடைவேளை முடிந்து கதை வளரும் போது பிரிந்தவர் மீண்டும் இணைவதற்கு மிகவும் ஹெவியான ஒரு காரணத்தை புகுத்தி முடிவை சுபமாக்குவார் (ஓரிரு படங்களில் சுகம் கலந்த சோகமாக்குவார்)

இதை திரைக்கதை டிரீட்மெண்ட் என்று சொல்லலாம். அந்த வகையில் திரு.பாக்யராஜ் அவர்களை நான் திரைக்கதை வைத்தியர் என்கிறேன். இதற்கு ஒரே ஒரு படத்தை பற்றி மட்டும் உதாரணமாக சொல்கிறேன். (பிறிதொரு சமயத்தில் மேலும் இவரது படங்கள்)

படம்: மௌன கீதங்கள்

இந்த படத்தின் கதையை இவர் சொல்லும் அழகே தனி. பேருந்தில் பிரிந்து வாழும் கணவனும் மனைவியும் பயணம் செய்கிறார்கள். பயணத்தினூடே அவர்களது முதல் சந்திப்பு முதல் காதல் மலர்ந்து திருமணத்தில் கலந்து ஒரு காரணத்தால் பிரிவு வரை சென்றதை அசை போடுகிறார்கள்.

இடைவேளை வந்து விடுகிறது..

கணவன் இன்னொரு பெண்ணோடு சந்தர்ப்ப வசத்தில் வசமாக மாட்டிக் கொண்டு சந்தோஷம் கொண்டாடியதை தொடர்ந்து கடும் கோவத்தில் பிரிந்து இருக்கும் மனைவி திரும்ப என்ன காரணம் இருந்தால் அவனோடு சேர்ந்து வாழுவாள்..?

பல முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பார் திரைக்கதை ஆசிரியர்.(பின்னே முந்தானை முடிச்சு போட்டவருக்கு முடிச்சை அவிழ்க்க மட்டும் தெரியாதா என்ன..?)

அதில் முக்கியமாக..

 ஒரு வயதானவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து அதிர்ச்சியாகி மூர்ச்சையாகி விடுவார். அதை தொடர்ந்து அவர் மனைவி இறந்து விட்ட செய்தி அறிந்து அவருடன் வேலை பார்க்கும் கதாநாயகி உள்பட எல்லோரும் மயானத்தில் நின்றிருக்க மனைவியின் சிதை எறிக்கப்படும் இடத்தில் தானும் உடன் கட்டை ஏறுவது போல் நெருப்பில் விழ போக எல்லோரும் அவரை தடுக்கிறார்கள்.

கொஞ்ச நாள் கழித்து அவரே ஒரு பத்திரிக்கையை கொடுப்பார், தனக்கு கல்யாணம் என்று. கதாநாயகி கேட்பார் அவரது தோழியிடம், ‘என்னா இது.. அன்னைக்கு தான் தனக்கு வாழ்க்கையே போச்சுன்னு உடன்கட்டை ஏற போனாரு.. இப்ப இன்னொரு கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்கிறாரே..?’ என்று புருவத்தை மேலுயர்த்தி கேட்க..

தோழி சொல்கிறார், ‘பொண்டாட்டி செத்த மூணாவது நாளே இன்னொரு கல்யாணத்த பண்ணிக்கிற இவர பத்தி யோசிக்காம மூணு வருஷமாகியும் கல்யாணமே பண்ணிக்காம ஒன்னையே நெனைச்சிக்கிட்டு இருக்காறே.. அவர பத்தி கொஞ்சம் சீரியஸா நெனைச்சு பாரு..’ என்று (வசனம் எக்ஸேக்டா உள்ளது அல்ல..)

அதை தொடர்ந்து முத்தாய்ப்பாக ஒரு கட்டத்தில் கதாநாயகியை அவரின் நடத்தையில் அவர் வேலை செய்யும் அலுவலகமே சந்தேகம் கொள்கிறது.
அவரது தோழி கூட, ‘நான் ஒன்னை நம்புறேன்.. ஒன் வயச நம்ப நான் தயாரா இல்லை..’ என்பது போல் வார்த்தையை கொட்டி விடுகிறார். ஆனால் அதே அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் பிரிந்த கணவரின் அறையை திறக்க அவரிடம் பணியாள் ஒருவர் கதாநாயகி சுகுணாவை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொண்டிருக்க..

பிரிந்த கணவன் கொதித்தெழுகிறான், ‘ஷட் அப்..’ என்று.. அதோடு விடவில்லை, ‘சுகுணா நெருப்பு மாதிரி.. நெருப்பை கரையான் அறிச்சிடுச்சுன்னு சொன்னா நீ நம்புவியா..?’ என்று கேட்கிறார்.

வேறு என்ன வேணும் - அந்த சுகுணாவுக்கு..?

பிரிந்தவர் மீண்டும் சேருகிறார்கள்.. இனி பேச ஏதுமில்லை..

5 comments:

ஷஹி said...

wow...gud one...by the way this is Mrs.Shahi

ரஹீம் கஸாலி said...

அருமையான அலசல். எனக்கு பிடித்த இயக்குனர்களில் முதன்மையானவர் திரு பாக்யராஜ் சார் தான். எத்தனையோ இயக்குனர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் கதை சொல்லும் பாணிக்கும் , திரைக்கதை அமைப்புக்கும் இன்றுவரை பாக்யராஜ் அவர்களே உதாரணமாக காட்டப்படுவதே அவரின் வெற்றி....

nagoreismail said...

"wow...gud one..."

Many thanks..

"by the way this is Mrs.Shahi"

Very surprising Bhabiji

So, all those articles written by you or brother..?

nagoreismail said...

திரு.பாக்யராஜ் அவர்களின் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தின் திரைக்கதை ஒன்று போதும்.. அதை போல் ஒரு லவ் ஸ்டோரி எவரும் எடுக்க முடியாது என்பது எனது கருத்து.. கடைசியில் ஒரு அற்புத்மான வசனம் கோபாலகிருஷ்ணன் (சுமனின் அப்பாவாக நடித்திருப்பார்) பேசுவார், அது எனக்கு மிகவும் பிடித்த வசனம், கதைப்படி சுமன் பூர்ணிமா குளியளறையில் இருக்கும் போது எட்டிப் பார்ப்பார், இந்த கேவலமான காரியத்தை கண்டிக்கும் விதமாக, அவர் சொல்வார், 'நான் உங்க ம்மாவோடு 35 வருஷமா குடும்பம் நடத்தியிருக்கேன்.. ஒரு நாள் நைட் கூட எங்க அறையில விளக்கு எறிஞ்சதில்லை.. அந்த அளவுக்கு நாங்க செக்ஸுக்கு மரியாதை கொடுத்திருந்தோம்.. ஆனா நீ.." என்பது போல் அந்த வசனம் அமைந்திருக்கும்.. செருப்பால் அடிச்சது போல் இருந்தது..

ஷஹி said...

dont know which articles u mean..i write in moondram konam and aasainila..only i write from my family..thanks anyway.