முதலில் இந்த ஹனிஃபா அண்ணன் அவர்களின் பாட்டை பிடியுங்கள்..
பத்தாதுல்ல..
இந்தாங்க இன்னொன்று..
போதுமா..?
வாழ்நாளெல்லாம் போதாதே
வள்ளல் நபிகளின் புகழ் பாட
- என்பது தான் உண்மை.
மு.மேத்தா அவர்களின் நாயகம் ஒரு காவியம் கவிதை நூலிலிருந்து..
காவிய நாயகர்
முழுநிலவே! வள்ளல்
முகமதே! (ஸல்) அவர்களே
உங்களைநான்
பிறைநிலாச் சொற்களால்
பேசுகின்றேன்...
மனிதர்களில்
இவர் ஒரு
மாதிரி...
அழகிய
முன்மாதிரி!
உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம் -
காலடியில் மகுடங்கள்
காத்துக் கிடந்தன...
இவரோ ஓர்
ஏழையாகவே
இறுதிவரை வாழ்ந்தார்!
பெருமானார் பிறப்பை பற்றி காலத்தின் தவம் என்று பாடுகிறார்
இறுதி நபியின்
வருகைக் காகவும்
ஒளிமிகு வாழ்வின்
உதயத்திற்காகவும்
காலம் அங்கே
கடுந்தவம் செய்தது.
காலையும் மாலையும்
கலிமாச் சொன்னது!
பாலை மணலெலாம்
பகல் நோன்பிருந்தது!
தோளிணைந் திலைகள்
தொழுகை நடத்திடக்
காற்றும் சென்றது
ஹஜ்ஜு யாத்திரை!
எழில்மலைக் கைகளை
ஏந்திய படியே
வானம் நட்சத்திர
வாய்களைத் திறந்து
தூங்காது இரவெலாம்
துஆக் கேட்டது!
இறைவன் -
அகிலத்திற்கே ஓர்
அருட்கொடை யாக
சாந்த நபிகளை
‘ஜக்காத்’ வழங்கினான்!
பத்தாதுல்ல..
இந்தாங்க இன்னொன்று..
போதுமா..?
வாழ்நாளெல்லாம் போதாதே
வள்ளல் நபிகளின் புகழ் பாட
- என்பது தான் உண்மை.
மு.மேத்தா அவர்களின் நாயகம் ஒரு காவியம் கவிதை நூலிலிருந்து..
காவிய நாயகர்
முழுநிலவே! வள்ளல்
முகமதே! (ஸல்) அவர்களே
உங்களைநான்
பிறைநிலாச் சொற்களால்
பேசுகின்றேன்...
மனிதர்களில்
இவர் ஒரு
மாதிரி...
அழகிய
முன்மாதிரி!
உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம் -
காலடியில் மகுடங்கள்
காத்துக் கிடந்தன...
இவரோ ஓர்
ஏழையாகவே
இறுதிவரை வாழ்ந்தார்!
உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம் -
எல்லோரும்
வாயிற் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருந்தார்கள்
இறுதி நபியாய்
எழுந்தருளிய இவர்தான்
தாழிட்ட மனக்கதவைத்
தட்டினார்.
அகதியாய் இதயங்கள்
அலைந்து கொண்டிருந்தபோது
இவருடைய
தோள்களே மானுடத்தைத்
தூக்கிக் கொண்டன.
கை கொடுத்த இவருடைய
‘கை’ -
தொழுகை!
எழுதப் படிக்கத்
தெரியாதவர்தான்...
ஆனால்
இவர்தான்
பூமியின் புத்தகம்!
சிம்மாசனங்களில் இவர்
வீற்றிருந்ததில்லை...
அண்ணலார்
அமர்ந்திருந்த இடமெல்லாம்
அரியணையானது!
கிரீடங்களை இவர்
சூட்டிக் கொண்டதில்லை...
பெருமானார்
தலையில் தரித்ததெல்லாம்
‘மணிமகுடம்’ என்றே
மகத்துவம் பெற்றது!
மக்கத்து மண்ணை இவர்
போர் தொடுத்து வென்றார்
அகில உலகத்தையும்
போர் தொடுக்காமலே
வெற்றி பெற்றார்!
கவலைகளால் இதயம்
கனக்கும் வேளையில் -
பெருமானாரின்
நினைவுக்குளத்தில் நான்
நீராடுவேன் -
இதயக் கவலைகள்
எடை இழந்து போகும்!
நடைபயிலும் கால்கள்
எங்கேனும்
நாட்காட்டி ஆனதுண்டோ?
மக்காவிலிருந்து மதீனாவுக்கு
இவர் நடந்தார் -
ஹிஜ்றி என்னும்
ஆண்டுக் கணக்கு
ஆரம்பமானது!
இவர்
இறைவனின் துறைமுகம்!
இங்கேதான் திருமறை
இறக்குமதியானது!
இவர் -
இறைவனின் துறைமுகம்...
இங்கிருந்துதான்
திருமறை
எல்லா நாடுகளுக்கும்
ஏற்றுமதியானது!
பெருமானார் பிறப்பை பற்றி காலத்தின் தவம் என்று பாடுகிறார்
இறுதி நபியின்
வருகைக் காகவும்
ஒளிமிகு வாழ்வின்
உதயத்திற்காகவும்
காலம் அங்கே
கடுந்தவம் செய்தது.
காலையும் மாலையும்
கலிமாச் சொன்னது!
பாலை மணலெலாம்
பகல் நோன்பிருந்தது!
தோளிணைந் திலைகள்
தொழுகை நடத்திடக்
காற்றும் சென்றது
ஹஜ்ஜு யாத்திரை!
எழில்மலைக் கைகளை
ஏந்திய படியே
வானம் நட்சத்திர
வாய்களைத் திறந்து
தூங்காது இரவெலாம்
துஆக் கேட்டது!
இறைவன் -
அகிலத்திற்கே ஓர்
அருட்கொடை யாக
சாந்த நபிகளை
‘ஜக்காத்’ வழங்கினான்!
No comments:
Post a Comment