Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Wednesday, August 03, 2011

சவ்ம்

நவய்து சவ்ம ஆதின் அன் அதாயி ஃபர்லல் ரமலான் ஆதி ஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா - இந்த வருடத்து ரமலான் மாதத்து ஃபர்லான (கடமையான) நோன்பை நாளை பிடிக்க அதாவாக நிய்யத்து செய்கிறேன்.. அல்லாஹ்வுக்காக..

காட்டுபள்ளில இமாம் சாபு (மூக்கு மாமா) தராவியா தொழுவய முடிச்சதும் சொல்லி கொடுக்க எல்லோரும் கோரஸாக பின்னாடியே சொல்லியது நினைவிற்கு வருகிறது..

மேலே சொன்ன நிய்யத்தில் சவ்ம் என்ற வார்த்தை நோன்பை குறிக்கும். ஆனால் ’சவ்ம்’ என்ற வார்த்தை சிரியக் மொழியில் இருந்து மருவப்பட்டது என்று விக்கி சொல்கிறது. பார்க்க: http://en.wikipedia.org/wiki/Sawm 


ஆனால் ‘சவ்ம்’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் இருப்பதாக சூஃபியாக்கள் விளக்கமளிக்கின்றனர். 


அந்த இரண்டு அர்த்தங்களுமே மேலோட்டமாக பார்க்கும் போது ஒன்றுக்கொன்று  முரண்பாடான அர்த்தங்களை கொண்டது. ஆனால் குரான் ஷரீஃப், ஹதீதுகளில் பொறுத்து சிந்திக்கும் போது இரண்டு அர்த்தங்களுமே ‘சவ்ம்’ என்ற பதத்திற்கு பொருந்தி நிற்கிறது.


முதலாவதும் பிராதனமான அர்த்தமாவது:

  • குறிப்பிட்ட ஒன்றை செய்யாமல் இருப்பது, 
  • தவிர்த்து விடுவது, 
  • செய்ய மறுப்பது
  • to refrain
  • to abstain



இரண்டாவது வரும் அர்த்தமானது:

  • எல்லைகளை கடந்து உயர்வது
  • to raise beyond

பசி என்ற உணர்வை வயித்துக்கு நாம் எப்போதுமே காட்டியதில்லை.


காலைல இடியாப்பம் ப்ராட்டா மதியானம் வரும் வரைக்கும் தேத்தணி உப்பு ரொட்டி பவல் சாப்பாட்டுக்கு கொத்துகறியும் குப்பத்தாவும் தூங்கி எந்திரிச்சதும் தேத்தணி தொட்டுக்க உப்பு ரொட்டி மக்ரிபுக்கு பாங்கு சொல்ற நேரத்துல புராட்டா உருண்டை, காண்டா பொறியல் அப்புறமா இஷா தொழுவ முடிஞ்ச கையோட முர்தபா.. மர்ஹபா..


இப்படி ஒரு லைஃப் ஸ்டைல் நம்முடையது..


சொர்க்கத்துல சோத்துக் கடை இருக்கோ என்னவோ இங்கே சோத்துக் கடை தான் ரொம்ப பேருக்கு சொர்க்கமாவே இருக்கு.. ஃபுட் பேரடைஸ்...


இப்படி சாப்டுகிட்டு இருந்தா உடம்பு மனசுல தோன்றுகிற எண்ணங்களுக்கு எல்லாம் சலாம் போட ஆரம்பிச்சிடும்.


ரமதான் மாதத்தில் நாம் பகலில் உடலுக்கு என்னவெல்லாம் நியாயமாக தேவையோ அதை உடலுக்கு கொடுக்காமல், காட்டாமல் தவிர்த்து விடுவோம். இந்த காலகட்டத்தில் எதுவெல்லாம் ‘ஹலால்’ என்று தெளிவாக குறிப்பிட்டு வந்தோமோ அதெல்லாம் ‘ஹராமாக’ மாறி விடுகிறது.


மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் உடலுக்கு கட்டளையிடுகிறது. உடல் சொன்ன மாதிரி சலாம் போட்டுட்டு பொறத்தியார பத்தி இல்லாததும் பொல்லாததும் பேசணுமா - நா நாகூசாமல் பேசுகிறது. 
அடுத்தவங்கள அடிக்கணுமா - கை கைமேல் பலனை தருகிறது
போவ கூடாத எடத்துக்கு போவணுமா - கால் வெற்றி நடை போடுகிறது


இப்படி ஒவ்வொரு உறுப்பும் தோன்றுகிற எண்ணங்களுக்கு எல்லாம் கட்டுப்பட்டு கட்டுப்பட்டு அது எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதோ அதை மறந்து இழந்து புதிய உலகில் அதற்கு சம்மந்தமில்லாத வாழ்க்கையில் சுகம் கண்டு வருகிறது.


ஆனால் ரமலான் மாதத்தில் சஹரில் எந்திரிச்சு சாப்பிட்ட பிறகு நிய்யத் சொல்லப்படுகிறது. இனி இரவு வரும் வரை எதுவும் சாப்பிட போவதில்லை என்று. 


உங்களுக்கு தானாக தோன்றிய எண்ணங்களின் கண்ட்ரோலில் இருந்த உடல் உங்களின் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தோன்றிய எண்ணங்களின் கண்ட்ரோலில் வந்து விடுகிறது.


தானாக தோன்றும் எண்ணங்கள் இப்போதும் தோன்ற ஆரம்பிக்கும். உடனே உடலுக்கு தகவல் கொடுக்கும். உடலோ பசியில் வாடி வதங்கி போய் இருக்கும். உடல் அந்த எண்ணங்களுக்கு பதில் கொடுக்க முடியாத நிலையில் சிறைப்பட்டு இருக்கும்.


இதை தான் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகிறது என்று சொல்லப்பட்டது. 


இந்த நேரத்துல நீங்க அப்படியே உங்க உடலை கவனித்து கொண்டே இருக்க வேண்டும். நேரத்தை போக்க பாட்டு கேக்குறது, டிவி பார்க்குறது என்று விலங்கை  உடைத்து விடக்கூடாது. 


உடலை அதிகமாக அசைக்க கூடாது. மௌலானா ரூமி (றஹ்) அவர்கள் சொல்வார்கள், ‘கருவில் இருக்கும் சிசுவை போல் உடலை அசையுங்கள்’ என்று. கவனிக்க வேண்டும் கவனித்து தான் அசைக்க வேண்டும்.


இப்போது நீங்கள் உணருவீர்கள்.. மனம் எப்படி உடலை கண்ட்ரோல் பண்ணிக் கொண்டு வந்தது என்று. இப்போது உணருவீர்கள்... மனதை எதுவோ ஒன்று கண்ட்ரோல் பண்ணி வருகிறது என்பதை.


அல்லாஹ் திருமறையில் சொல்வது போல், “உங்களுக்குள்ளேயும் அத்தாட்சிகள் உள்ளன நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?” என்று.


அப்படி நோக்குவதற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


ஆதம் (அலை) அவர்களை இறைவன் தன்னுடைய ரூபத்தில் (ஃபார்மில்) படைத்தான் என்ற ஹதீது உள்ளது. உங்களின் உடல் அமைதியுறும் போது அந்த ரூபத்தை தெரிந்து கொள்ளலாம். ஓடையில் நீர் தெளிவாக அமைதியாக கலக்கமில்லாமல் இருக்கும் போது வானில் இருக்கும் நிலவின் உருவத்தை தெளிவாக பார்ப்பது போல் பார்க்கலாம்.


’.. பின்பு இரவு வரும் வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள்..’ என்று இறைவன் விளிக்கிறான். 


இரவு வரும் வரை எதுவெல்லாம் நமக்கு நமது உடலுக்கு முதன்மையாக தேவையாக இருந்ததோ அந்த உடல் ரீதியான தேவைகள் அடங்கி ஒடுங்கி போன நேரத்தில் எப்போது அது கடைசி தேவையாக மாறிய போது நோன்பை திறந்து பூர்த்தி செய்து விடலாம்.


கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே பழக்கப்படுத்தி நாம் சரியான இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டு உங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் போது கடைசி பத்து இரவுகள் வரும். 


இங்கே தயாராவது மிகவும் முக்கியம்.


If you are ready for a thing - it is sure to happen: எங்கள் ஹஜ்ரத்தின் மொழிகள் அவர்களின் குரலிலேயே கேட்கிறது.


அந்த பத்து இரவுகளிலும் ஓர் குறிப்பிட்ட இரவு இருக்கிறது. 


”நிச்சயமாக நாம் அதை லைலத்தில் கத்ரில் இறக்கினோம். (லைல் என்றால் இரவு என்று பொருள்)


மேலும் லைலத்துல் கத்ர் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?


லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்”


இரவு வரும் வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்ற இறைவன் ஒரு ஆயிரம் மாதங்களை விட சிறந்த அந்த இரவை பற்றி சொல்கிறான். அந்த இரவு இறை உத்தரவுக்காக இறை கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. 


“அதில் மலாயிகத்மார்களும் ரூஹும் தன்னுடைய ரப்பின் கட்டளையின் படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர் (with every decree)”


யார் உண்மையாகவே உள்ளச்சத்தோடு வீணாண விவாதங்களின் குழப்பங்களில் ஈடுபடாமல் தனக்குள்ளிருக்கும் அத்தாட்சியை கண்டார்களோ அவர்களுக்கு -


“ஸலாம்..! அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்”


ஆக, ’சவ்ம்’ என்ற வார்த்தை ’விலகியிருப்பது’ என்ற அர்த்ததையும் மட்டுமல்லாது ’உயர் நிலைக்கு செல்வது’ என்ற இரண்டு கருத்தையுமே உள்ளடக்கி வைத்து இருக்கிறது.


அனைவருக்கும் என் ஸலாம்..!

0 comments: