Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Friday, July 08, 2011

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி - ஆனந்த் - பழைய இந்தி பட விமர்சனம் 2

”எழுத்தாளர்கள் நம்மூர்ல நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்காங்க.. முன்னாடிலாம் அவங்க இலக்கிய கூட்டத்துக்கு சைக்கில்ல வந்துகிட்டுருந்தாங்க... இப்ப என்னடான்னா கார்ல எல்லாம் வந்திறங்குறாங்க...” என்கிறார் ஒருவர்

இன்னொருவர், “நானும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள் வச்சிருந்தேன்.. ஆனா, என் கதைய வெளியிடுறதுக்காக அந்த சைக்கிளை வித்துட வேண்டியதா போச்சு..”

தொடர்ந்து வரும் சிரிப்பலையோடு தான் படம் தொடங்குகிறது.
---------------------
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.. இந்த படத்தை பற்றி எழுத சொன்னால் (அதாவது என்னை நானே எழுத சொன்னால், வேறு யாரு என்னை எழுத சொல்ல போகிறார்கள்? - ஆபிதீன் நானாவை தவிர்த்து) இந்த படத்தின் மொத்த வசனத்தையுமே எழுதுவேன். அவ்வளவு அழுது அவ்வளவு ரசித்து அவ்வளவு பார்த்து அவ்வளவு புரிந்து இருக்கிறேன்.
------------------------

டாக்டர் பாஸ்கர் பானர்ஜி முதல் தடவையாக எழுதிய ”ஆனந்த்” என்ற புத்தகத்தை அந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக ருஸ்டம் டிரஸ்ட் தேர்ந்தெடுத்து சர்ஸ்வதி விருதையும் வழங்குகிறது.

அந்த புத்தகத்தை எழுத உந்துதலாக இருந்த நபரையும் அந்த நபரின் வாழ்க்கையையும் மைக் பிடித்து மக்களோடு அந்த மருத்துவர் பகிர்ந்து கொள்கிறார்.

டாக்டர் பாஸ்கர் பானர்ஜி ஒரு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்.

கேன்சர் என்பது கொடிய வியாதி. எங்கள் குடும்பத்திலேயே இரண்டு சீதேவிகளை இந்த பாழாப்போன நோய்க்கு பலி கொடுத்து இருக்கிறோம். (தவிர்க்க இயலாத குறுக்கீடு.. சாரி.. )

ஆனந்தை பற்றி டாக்டர் சொல்கிறார்,

”ஆனந்த் நண்பர்களை அதிகம் விரும்புவார்.
செல்லுமிடமெல்லாம் அவர் நண்பர்களையும் நட்பையுமே தேடினார்.
அதனால் தான் இந்த கதையை நான் வெளியிடுகிறேன்.
ஏனெனில் அவரது நட்பு இந்த உலகம் முழுக்க பரவ வேண்டும் என்பதற்காக ...”

டாக்டர் பானர்ஜி அவரது மருத்துவ தொழிலில் சந்தித்த மரணங்கள், வலிகள், துயரங்களை நினைத்து மனம் நிலை கொள்ளாமல் இருக்கிறார்.

அவரால் இருக்கும் வியாதிகளை குணமாக்க முடியாமல் போகும் போது இயலாமையை எண்ணி அவர் மீதே வெறுப்பு கொள்கிறார்.

சிலர் விட்டமின்கள் குறைவாக இருப்பதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது பலர் உணவே இல்லாத தட்டுபாட்டில் வறுமையில் வாடுகையில் - அவர் அதை கட்டுப்படுத்த சரியாத ஆயுதமின்றி மனம் உடைகிறார்.

மருந்து மாத்திரை நோயை குணப்படுத்தலாம். ஆனால் வறுமையை என்ன செய்ய முடியும்? - தவிக்கிறார்.

உப்பு வாங்கவே காசில்லாதவரிடம் மருந்து வாங்க சொல்லி எவ்வாறு கேட்க முடியும்? - அவரே கேட்டுக் கொள்கிறார்

ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து குழந்தை பிறந்ததாக சொல்லி இனிப்புகளும் மிட்டாய்களும் வழங்கிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு வீட்டில் ஒருவர் இறந்து போனதற்காக அழும் குரலும் கசப்புகளும் கேட்டுத் தாங்காமல் புழுங்குகிறார்.

“ஒருவர் இறந்து விட்டார்.. இன்னொருவர் இறப்பதற்கு பிறந்து இருக்கிறார்..” புலம்புகிறார்.

இந்த சமயத்தில் தான் அவர் ஆனந்த் செய்கலை சந்திக்கிறார்.

டாக்டர் பானர்ஜியின் அப்பாவும் மருத்துவர் தான். அப்பாவான அவர் காலத்தில் வாங்கிய வீட்டில் தான் இப்போது மகனான டாக்டரும் வசித்து வருகிறார். அவரை வளர்த்த ரகு காகா என்பவருடன் தங்கி இருக்கிறார். ரகு காக்கா தான் இவரை தூக்கியோ தூக்காமலோ வளர்த்தவர். டாக்டர் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனது கிராமத்திற்கே செல்ல தயாராக இருக்கிறார் இந்த ரகு காக்கா.

டாக்டர் பானர்ஜிக்கு பிரகாஷ் குல்கர்னி என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். பானர்ஜி மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கும் அதே ஊரில் இவர் மருத்துவ தொழில் செய்கிறார். சம்பாதிக்கிறார். வசதியோடு இருக்கிறார்.

இந்த இரு டாக்டர்களுக்கும் டெல்லியில் டாக்டர் திரிவேதியிடமிருந்து ஆனந்த் என்பவரின் மருத்துவ குறிப்புகள் ஊடுகதிர் படங்கள் கடுதாசியோடு கைக்கு கிடைக்கிறது.

ஆனந்த் என்பவருக்கோ ”லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்” என்ற வியாதி.

டாக்டர் பானர்ஜி கோபப்படுகிறார், “ஏன் திரிவேதிக்கு தெரியாதா? இதுக்கு தான் மருந்தே இல்லையே? - எதுக்காக இங்கே அனுப்பி விடுகிறார்?” -

"இல்லை, அது ஆனந்துக்கு தெரியாது.. அவர் ஆம்புலேட்டரி ஸ்டேஜில் தான் இருக்கிறார், பம்பாயையும், நம்மையும் பார்க்க வருகிறார்..” என்று பதில் சொல்கிறார்.

ஊடுகதிர் படத்தை போட்டு காட்டுகிறார்.

டாக்டர் பானர்ஜி, “இதுல பார்க்க என்னா இக்கிது? - இன்னும் கொஞ்சம் நாள்ல வயிறு பெருசா வீங்குன மாதிரி போயிடும், கேன்சர் கட்டி வெடித்து விடும், சுவாசம் பாதிக்கப்படும், மிஞ்சி மிஞ்சி போனா, இன்னும் 4 அல்லது 6 மாசம் தான்..”

சொல்லிக் கொண்டிருக்கும் போதே நர்ஸ் வந்து கதவை திறந்து ”ஆனந்த்ன்னு யாரோ உங்களை பார்க்க டில்லியிலிருந்து வந்திருக்காங்க..” என்கிறார்

“நாளைக்கில்ல வரணும்..  சரி.. வரச் சொல்..’

அந்த நர்ஸ் சென்று விட, பானர்ஜி “எங்கே தங்குவார்?” என்று கேட்கிறார்

“இங்கே தான்.. நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.. திரிவேதிட நெருங்கிய நண்பர்... இன்னும் 4 மாசம் தானே “

சொல்லிக் கொண்டிருக்கும் போதே... “தோஸ்த்.. “ ஆனந்தின் குரல் காற்றில் ஒலி அலைகளாய் மிதந்து செவிக்கு வருகிறது.

இனி ஆனந்த்தின் பேச்சு பம்பாய் முழுக்க காற்றோடு கலந்து விடுகிறது..

ஆனந்த் புன்னகைத்துக் கொண்டே,

நான் சொல்லலையா? நாம மறுபடி சந்திப்போம்ண்டு.. நான் கேள்விபட்டேன், உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னு.. மனைவி எப்படி இருக்காங்க?.. ஜூனியர்... சீனியர்... (குழந்தைங்க...?)..  என்ன நண்பா..? 3 வருஷமாச்சு.. இந்த டாக்டருக்கு ஒரு கம்பவுண்டர் வேண்டாமா?.. நீங்க பேசாம திரிவேதிய கன்சல்ட் பண்ணி பாருங்களேன்..

படபடவென பொறிந்து தள்ளும் ஆனந்தை டாக்டர் பிரகாஷ் அதே அறையிலேயே அமர்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் பானர்ஜிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

ஆனந்த் புதிய மனிதரை பார்த்ததும்..

“அர்ரே.. பாபுமூஷாய்.. காலேஜ்ல பெண்கள் உங்களை அப்படி தான் கூப்பிடுவாங்க இல்லையா? டாக்டர் திரிவேதி ஒண்ணு விடாம எல்லாத்தையும் என்கிட்டே சொல்லி விட்டார்.. காலேஜ்ல எல்லா பெண்களுக்கும் உங்க மேல ஒரு ஆர்வம் பிரியம் இருந்துச்சாம்ல.. இப்ப எப்படி..? ”

பானர்ஜிக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதை உணர்ந்த குல்கர்னி பேச்சை மாற்றுகிறார், “ஆனந்த்.. நீங்க நாளைக்கி தானே வர்ரதா இருந்திச்சு..?’

ஆனந்த், “அட.. இது என்னோட பழக்கமாவே போயிடிச்சு.. நான் பிறக்கும் போதே டாக்டர் 21 ந்தேதி தான் நான் பொறப்பேன்னு சொன்னாங்க.. ஆனா நான் அதுக்கு முன்னாடியே பொறந்துட்டேன்.. அதே மாதிரி தான்.. இப்போ வந்து டாக்டர் நான் இன்னைக்கி தான் இறந்து போவேன்னு ஒரு தேதி குறிச்சாங்கன்னா.. நான் கண்டிப்பா சொல்றேன்.. அதுக்கு முன்னாடியே எறந்து போயிடுவேன்..”

திடீரென்று ஞாபகம் வந்தவராக.. பிரகாஷிடம் வந்து..

“தோஸ்த்.. என் சாமான்வோ எல்லாம் நான் ஆஃபிஸ் உங்க ரூம்ல வச்சிருக்கேன்.. ஒரு சூட்கேஸ்.. ஒரு டேப் ரெக்கார்டர்.. நான் டிரஸ்லாம் கொண்டுட்டு வந்துட்டேன்.. ஆனாக்கா பெட் கொண்டுட்டு வரலை..”

- கவலை வேண்டாம் எல்லாம் ஏற்பாடு பண்ணி விட்டேன்.. மேலே ரூம் இருக்கு தங்கிக்கலாம்.. உங்களோட எக்ஸ்ரேயை தான் டாக்டர் பானர்ஜி கிட்டே காட்டி பேசிகிட்டு இருந்தேன்..

”அடடே என் படம் தான் இங்கே ஓடிட்டு இருக்கா..?”  பாபுமூஷாய் பக்கம் திரும்பி, “ஏய் பாபுமூஷாய்.. என்ன கிடைச்சிச்சு..?”

”நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்.. நான் எல்லாத்தையும் டாக்டர் திரிவேதி கிட்டே பேசிக்கிறேன்..”

“என்ன அதிசயமா இருக்கு.. என்னை பத்தி பேசறீங்க.. நான் எப்படி கவலைப்படாம் இக்கிறது?”

- என்றதும் டாக்டர் பானர்ஜிக்கு கோபம் வருகிறது, “உங்களுக்கு என்னா தெரியனும்?’ என்று கேட்கிறார்

“அட்லீஸ்ட் என்ன வியாதின்னு அதோட பேராச்சும் சொல்லுங்க..”

”வியாதிட பேர தெரிஞ்சிகிட்டு என்னா செய்ய போறீங்க..?” கோபம்..

“ஒண்ணும் செய்ய போறதில்லை.. ஆனா பேரு கண்டிப்பா தெரியணும்..” பிடிவாதம்..

“நான் இப்போ லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்னு சொன்னா உங்களுக்கு ஏதாவது வெளங்குமா?”

”என்னா சொன்னீங்க.. என்னா சொன்னீங்க... திரும்ப சொல்லுங்க..” ஆனந்த் ஆர்வமாகிறார்..

”லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்”

ஆனந்த், “வாவ்.. வாவ்.. என்னா வார்த்தை.. என்னா பேரு.. ஏதோ வைசராயோட பேரு மாதிரில்ல இருக்கு.. என்ன அருமையான வியாதி.. நீங்க அருமையான டாக்டர் பாபுமூஷாய்.. என்னா பேரு.. லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்.. விவிதபாரதில வர்ர விளம்பரம் மாதிரியும் இருக்குது பாருஙளேன்..”

டாக்டர் பானர்ஜி கோபத்தோடு எழுந்து, “இது விளையாடுற விஷயமில்ல.. உங்களுக்கு லிம்போசெர்கோமான்னா என்னான்னு தெரியுமா?” இந்த வியாதிய பத்தி தெரியுமா உனக்கு?” - கோபத்தில் வெடிக்க..

ஆனந்த் பயந்து போய், “என் வயித்துல... குணப்படுத்தவே முடியாத ஒரு கட்டி இருக்கு.. அதனால.. நான் 6 மாசத்துக்கு மேல உயிரோடவே இருக்க முடியாது.. இதோட மெடிக்கல் டெர்மா தான் இருக்கணும்.. இல்லையா?” என்று அமைதியாக கேட்க - டாக்டர் பானர்ஜி ஆச்சர்யமாக பார்க்க -

ஆனந்த் தொடர்கிறார், ”இதுக்கு ஏன் திடீர்ன்னு கோவப்படறீங்க.. ஓ..! இப்ப தான் எனக்கு புரியுது.. உங்களுக்கு என் மேல கோவம் இல்ல.. உங்களுக்கு உங்க மேலேயே தான் கோவம்.. என்னய குணப்படுத்த முடியலைல.. அதனால தான்..”

பாபுமூஷாய்க்கு என்ன சொல்வதென்றே விளங்க வில்லை..

“ஏய் பாபுமூஷாய்.. ஏஷா பாலோ பாஷா பாலோ நய் (பெங்காலி வார்த்தை) இவ்வளவு அன்பு நல்லதல்ல (என்று அர்த்தம்).. பாபுமூஷாய் நான் உங்களை மருத்துவ பரிசோதனை செய்ய போறேன்..”

”ஏன்? எனக்கு என்னா?”

கைய குடுங்க.. டாக்டரின் கையை பேஷண்ட் பிடிக்கிறார்

டாக்டர், “பல்ஸ் இங்கே இருக்கு..” என்று காட்ட

 “ஷ்” என்று “எதுவும் பேசக்கூடாது” என்பது போல் சைகை காட்டி விட்டு

“சான்ஸே இல்லை.. பாபுமூஷாய்.. உங்களுக்கு இப்ப என்னா வயசு?”

“30”

”30.. நூத்துல 30 கழிச்சா எவ்வளவு..?”

“70”

“70.. நீங்க இன்னும் 70 வருஷத்துக்கு மேலே உயிர் வாழ முடியாது.. உங்க உடம்புக்கு என்னா வந்திருக்குன்னு தெரியுமா?.. உங்க ஜிஸ்ம்.. உடல்.. சரீரம்.. கொஞ்சம் கொஞ்சமா அழுகிட்டே வருது.. ”

“நீங்க என்னா சொல்ல வர்ரீங்க?”

“70 வருஷத்துக்கும் 6 மாசத்துக்கும் என்னா பெரிய வித்தியாசம் இருக்கு..

மரணம் ஒரு நொடியில வந்துடும்..

நான் இந்த ஆறு மாசத்துல எத்தனையோ லட்சக்கணக்கான கனங்கள் நான் வாழ

நான் அனுபவிக்க முடியும்..

பாபுமூஷாய்..


ஜிந்தகி படி ஹோனி ச்சாயிஹே.. லம்பி நஹி.. (வாழ்க்கை பெருசா (சிறப்பா) இருக்கணும் நீளமா (நிறைய நாள்) இருக்கணும்னு அவசியமில்ல..)

மௌத் பத்திய பயத்த விடுங்க.. மௌத்தின் அடிப்படை எஸ்ஸன்ஸ் என்னன்னு உங்களுக்கு தெரியுமா, தோஸ்த்?


ஜப் தக் ஜிந்தா ஹூன் த்தப் தக் மரா நஹின் ஜர் மரா கயா சாலாஹ்.. மெய்ன் ஹி நஹின் (நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் எனக்கு மரணம் கிடையாது.. நான் மரணிக்கும் போது.. மகனே.. நானே கிடையாது) 

இதுக்கு போய் ஏன் பயந்துகிட்டு..”


”என்னய மன்னிச்சிடுங்க.. ஆனந்த சாப்..”

”சாப்.. ஏய்.. பாபுமூஷாய்.. வாழ்க்கை பெருசா இருக்கு.. ஆனா நேரம் குறைவா இருக்கு.. எல்லாத்தையும் கட் பண்ணி வேக வேகமா காரியங்கள முடிக்கணும்.. குறைஞ்ச பட்சம் இந்த சாபுங்குற மரியாதையையாவது கட் பண்ணிக்கலாமே..”

எல்லாம் பேசி கீசி முடிந்து தனது ரூமுக்கு போகும் போது, ஆனந்த் பாபுமூஷாயிடம், “என்ன மன்னிச்சிடுங்க பாபுமூஷாய்.. திரிவேதி சொல்லி தான் அனுபவிச்சார்.. உங்க கிட்டே மஜா கிஜா பண்ண கூடாதுன்னு.. என்ன செய்றது.. பழக்கத்த விடுறது கஷ்டம் தானே.. அவருக்கு எங்கே தெரிய போவுது, ஏன்..?” என்று கண்களை சிமிட்டி மறைகிறார்.

- தொடரும்

இந்த ஆனந்த் பானர்ஜி சந்திப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.. நான் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன்.. அதனால் தான் ஒன்று விடாமல் எழுத நேர்ந்து விட்டது..

ஆனந்த் பற்றிய எனது பழைய பதிவுகள்:

http://nagoreismail786.blogspot.com/2011/07/1.html - ஆனந்த் பட விமர்சனம் பகுதி 1


http://nagoreismail786.blogspot.com/2011/03/blog-post.html - மௌத் இந்தி பட காட்சிகள்


http://nagoreismail786.blogspot.com/2011/04/blog-post_27.html - ஆனந்த் திரைப்பட பாடல்கள்

0 comments: