அல் ஃகஃப்ஃபார் - மன்னிப்பவன் - Al-Ghaffar
குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 85 - ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)
வசனம்: 14
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 40- ஸூரத்துல் முஃமின் (நம்பிக்கை கொண்டவர்)
வசனம்: 3
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே மீள வேண்டியதிருக்கிறது.
மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் மஸ்னவியிலிருந்து:
தண்ணீர் அழுக்கிடம் சொன்னது, “அருகில் வா!”
அழுக்கு சொல்லிற்று, “நான் வெட்கத்தால் அவமானமாக இருக்கிறேன்!”
தண்ணீர் பதலளித்தது, “என் உதவி இல்லாமல் எவ்வாறு உன் வெட்கம், அவமானம் கழுவப்பட்டு தூய்மையடைய முடியும்?”
Credit:
திருநாமங்கள்:
http://www.sufism.org/society/asma/index.html
குரான் ஷரீஃப் தமிழில்:
http://www.tamililquran.com/qurandisp.php?start=85
Image Credit:
http://madaniwallpaper.com/99_names_3d-desktop-wallpapers.html

0 comments:
Post a Comment