Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Sunday, September 18, 2011

ஜட்ஜப்பா - பகுதி 7

முந்தைய பகுதிகளின் இணைப்பு:

1 - http://nagoreismail786.blogspot.com/2009/09/1.html 

2 - http://nagoreismail786.blogspot.com/2009/11/2.html 

3 - http://nagoreismail786.blogspot.com/2009/12/3.html 

4 - http://nagoreismail786.blogspot.com/2010/07/4.html

5. http://nagoreismail786.blogspot.com/2010/08/5.html 



6. http://nagoreismail786.blogspot.com/2011/03/6.html 


------------------------------------------------------------------


நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது எங்கள் வகுப்புக்கு பின்னர் தான் மிதிவண்டி நிறுத்துமிடம் இருக்கும். தமிழ் வாத்தியார் ‘கம்பராமாயணம்’ பாடம் நடத்த வருகிறார் என்றால் மிதிவண்டியை வகுப்புக்கு அவர் வர முடியாமல் நிறுத்தி ‘அந்த பக்கமா வாங்க...’ ‘இந்த பக்கமா வாங்க..’ என்று இழுத்தடிப்போம்.


தமிழ் வாத்தியார் சொல்வார், “ஏண்டா.. ஒன் தாத்தா தமிழறிஞர்.. கம்பராமாயணத்துல புலி.. ஆனா நீயும் இருக்கியே..?” என்று சி.தமிழ்ச்செல்வன் என்ற வாத்தியார் சொன்னது இன்னமும் நீங்காமல் நினைவில் நிற்கிறது.


எனது மச்சான் ஜாஃபர் சுல்தான் ஜட்ஜப்பாவிடம், “இதையெல்லாம் (கம்பராமாயணத்தை எல்லாம்) ஏன் போய் நீங்கள் எழுதுறீங்க... ஜட்ஜப்பா?” என்று கேட்டே இருக்கிறான்..


நாகூரில் சொல்லரசு ஜாஃபர் முஹ்யித்தின் மாமாவின் ஆலோசனையோடு தொடங்கப்பட்ட “இஸ்லாமிய கலாச்சாரக் கழகம்” ரொம்ப காலத்திற்கு முந்தி செயல்பட்டு வந்தது. குஞ்சாலி மரைக்காயர் தெருவில் இந்த கழகம் அமைந்து இருந்தது.


இந்த கழகத்தின் சார்பில் “இஸ்லாமிய இலக்கிய மாநாடு” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மாநாட்டில் பேசுவதற்கு ஜட்ஜப்பாவை அழைத்து இருந்தார்கள்.


அவர்களும் மகிழ்வோடு கலந்துக் கொண்டு பேசினார்கள். சுல்தான் தைக்காவில் தான் இந்த மாநாடு நடந்தது.


அப்போது கைலி, தொப்பி சகிதமாக பேசிய ஜட்ஜப்பா சுவைபட சிலவற்றை பேசினார்கள்.. அதில் எனக்கு ஞாபகம் இருப்பது சில.. அதிலிருந்து சில..


“ஏறினால் இறங்காதது இரண்டு... ஒண்ணு விலைவாசி.. இன்னொன்னு வயசு...”


“நான் சென்னை வாசி என்று ரொம்ப பேர் எண்ணுகிறார்கள்... நான் எப்போதும் சொல்வது... நான் நாகூர் வாசி தான்...”


“என்னை கம்பராமாயணம் பற்றியே பேசுகிறீர்களே என்று குறைபட்டுக் கொள்பவர்கள் நிறைய பேருண்டு என்பது எனக்கு நன்றாக தெரியும்.. ஆனால் அவர்களை நான் கேட்டுக் கொள்வது.. நீங்கள் அதனை படித்திருக்கிறீர்களா? அதில் தமிழ் இருக்கிறது.. இலக்கியம் இருக்கிறது.. அதை படித்து பாருங்கள்..”


- இப்படியாக விளக்கம் கொடுத்து வந்தார்கள்...


நான் கம்பராமாயணத்தை பரீச்சைக்காக கூட படித்ததில்லை.                                இந்த பேச்சுக்கு அப்புறம் கூட சரி என்ன தான் இருக்கிறது.. படித்து தான் பார்க்கலாமே.. என்று நினைப்பு கூட வரவில்லை..





ஆனால் ஜட்ஜப்பா எழுதிய “கம்பன் கண்ட சமரசம்” என்ற நூலை வாசித்து இருக்கிறேன்..


ஒரு ஊர்ல ஒரு பள்ளிவாசல் கட்டுனாஹல்வோ.. ஆனாக்கா.. அங்கே இருந்த ரெண்டு குரூப்புக்கும் சண்டை வந்துடுச்சு.. இதனால் பாதி கட்டுனதோட அப்படியே விட்டிருந்தாஹா... 


பள்ளி திறப்பு என்று முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட நாளும் வந்தது.


’சரி தான்.. சண்டை தானே போனா போகட்டும்...’ என்று ஒரு மாதிரி திறப்பு விழாவும் ஏற்பாடானது...


பல பேச்சாளர்கள் அழைக்கப்பட்டார்கள்..


விழாவில் பேசிய ஒரு ஆலிம் இப்படி சொல்லியிருக்கார், பாதி சிமெண்ட் பூசியும் பூசாமலும் விட்டிருந்த சுவரை காண்பித்து, “இன்னும் இந்த பள்ளியில் ஏற்பட்ட பூசல் முடியவில்லையா..?” என்று


அது மாதிரி பொதுவாக மதம் என்றால் பூசல்கள் இருக்கும்...

ஒரே கடவுளை வணங்குறேன் பேர்வழி என்பார்கள்.. ஆனால் 999 குழுக்களாக பிரிந்து கிடப்பார்கள்...

ஒரு மதத்துக்குள்ளேயே இப்படி பூசல் நீடித்திருக்க இரு மதங்களுக்கு இடையே பூசல் இல்லாமல் இருக்குமா..? சொல்லவே வேண்டாம்...

‘ஒன் மதமா..? என் மதமா..? ஆண்டவன் எந்த மதம்..?” என்று குண்டு போட்டு கொன்று குவித்து சண்டை போட்டுக் கொள்வார்கள்..

சைவம், சமணம், வைணவம் - இப்படி பல சண்டைகளை இந்திய வரலாறும் ரத்த கரையை மத சின்னங்களாக கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை தானே..

ஆனால்.. கம்பன் கண்ட சமரசம் - என்ற நூலில் - ஜட்ஜப்பா அவர்கள் - சமய ஒற்றுமையை கம்பன் கருத்தாக கொண்டிருந்தான் என்று விலாவரியாக எடுத்து இயம்புகிறார்கள்.

சமரசம் என்றால் ‘ஒற்றுமை’ என்று ஒரு அர்த்தமும்... ஏக பரம்பொருளோடு சமாதி நிலையில் இருப்பவர்கள் ஒன்று படும் போது “எல்லாம் யார் செய்ல” என்றெல்லாம் முட்டாள்தனமாக என்னைப் போல் கேள்வி எழுப்பாமல் “எனது செயல், நினது (அதாவது பரம்பொருளின்) செயல்” என்று ஒரு தன்மை உருவாகிறதல்லாவா.. அந்த வகையான ஒரு ஒன்றுபடுதலையும் குறிக்கும் என்று விளக்குவார்கள்.

கம்பன் காலத்தில் சைவ, சமண பூசல்கள் இருந்ததாம். அதனால் வால்மீகி இராமாயணத்தில் கூட இல்லாத ஒரு சமரசத்தை கம்பன் வருந்திய உளத்தோடு பூசல்களை அகற்றும் நோக்கத்தில் பாடியதாக சொல்கிறார்கள்.

உதாரணமாக கம்பராமாயணத்திலிருந்து ஒரு காட்சி...

கடத்தி செல்லப்பட்ட சீதையை காப்பாற்றி கொண்டு வர சுக்வீரன் வானர சேனைகளை திரட்டுகிறான். பெரும் திரளாக வானர சேனை நிற்கிறது. இதனை கண்ட ராமன் பாடுவதாக கம்பன் ’தானை காண் படல”மாக கவிபாடுவது யாதெனில்...

”ஈசன் மேனியை, ஈர்-ஐந்து திசைகளை, ஈண்டு இவ்
ஆசு இல் சேனையை, ஐம்பெரும் பூதத்தை, அறிவை,
பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை
வாசமாலையாய்!- யாவரே முடிவு எண்ண வல்லார்.”

- இது தான் அந்தப் பாடல்

அதாவது வானர சேனை எல்லையற்று இருந்தது என்பதை பாட கம்பன் ஆறு உவமானங்களை எடுத்து சொல்கிறாராம்.

1. ஈசன் மேனி - அதாவது ஈசனான கடவுளுக்கு மேனி என்பதே கிடையாது - இந்த பிரபஞ்சமே அவரது மேனி தான். இதற்கு எல்லையில்லை

2. ஈர்-ஐந்து (அதாவது பத்து) திசைகள் - ஒரு திசைக்கே எல்லை வகுக்க முடியாது. இங்கே பத்து திசைகளாம்..

3. ஐம்பெரும் பூதம் - பூதத்தையும் கட்டுப்படுத்த முடியாது

4. அறிவு - அறிவுக்கு எல்லை ஏது?

5. பேசும் பேச்சு - சுபஹானல்லா... பேச்சு தானே... விவாதம் என்று தொடங்கி விட்டால் அது முடிவுற்று விடுமா, என்ன..?

6. சமயங்கள் பிணக்குறும் பிணக்கு - இது தான் இங்கே ரொம்ப முக்கியமானது - சமயங்கள் பிணக்குற்று ஒன்றுக் கொன்று அடித்துக் கொள்வது என்பதற்கும் முடிவே கிடையாது. இது உண்மை தானே...

ஆக, இத்தனையையும் தான் கம்பன் வானர சேனைகளுக்கு உவமானமாக பாடுகிறாராம்.

கம்பனுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த சமயப் பூசல்கள் பிடிக்காமல் அவரது உள்ளம் பாதித்து தான் இப்படி எழுதியிருப்பதாக இந்த ‘கம்பன் கண்ட சமரசத்தில்’ எழுதி இருப்பார்கள்.

இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான பாடல்களை குறிப்பிட்டு கம்பன் சமயங்களுக்குள் சமரசத்தையே காண்கிறார், நாடுகிறார் என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்கள்.

கம்பனுக்கு சமயப் பூசல்கள் பற்றி வேதனை இருந்ததோ என்னவோ அது எனக்கு தெரியாது. ஆனால் இவர்களுக்கு இரு சமயத்தார்கள் சண்டை பிடித்துக் கொள்வதில் மிகுந்த வேதனை இருந்தது என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

0 comments: