முந்தைய பகுதிகளின் இணைப்பு:
1 - http://nagoreismail786.blogspot.com/2009/09/1.html
2 - http://nagoreismail786.blogspot.com/2009/11/2.html - (புதிய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது)
3 - http://nagoreismail786.blogspot.com/2009/12/3.html
4 - http://nagoreismail786.blogspot.com/2010/07/4.html
5. http://nagoreismail786.blogspot.com/2010/08/5.html
6. http://nagoreismail786.blogspot.com/2011/03/6.html
7. http://nagoreismail786.blogspot.com/2011/09/6.html
--------------------------
ஜட்ஜப்பாவை பற்றி எழுதி விட்டு இராமயணத்தை பற்றி எழுதாமல் விட்டால் எப்படி?
----------------------------
மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய மாண்புமிகு இராமசந்திரனை மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினான் என்றால்...
மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே...?
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே...?
- மேலே கண்டது கலைஞர் அவர்களின் கவிபேச்சு தான் இடைத்தேர்தலில் எம்ஜி இராமசந்திரன் அணி வெற்றி பெற்ற சமயம் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில்.
-----------------
மூதறிஞர் இராஜாஜி வாலி வதத்தை விமர்சித்து கூறும்போது -
"இராமன் என்கிற வெள்ளைத் துணியிலே விழுந்த கரும் புள்ளி" என்றார்
----------------------------------------------------
இராமயணம் சம்மந்தப்பட்ட விவாதத்திலே அதிகம் விவாதிக்கப்பட்டது இராமாயணம் உண்மையாக நடந்த வரலாறா அல்லது புனையப்பட்ட கதையா என்பது கூட அல்ல - இராமன் வாலியை மறைந்திருந்து கொன்ற சம்பவம் பற்றித் தான்.
இத்தகைய விவாதங்கள் இராமயணத்தை நம்பாத பகுத்தறிவாளர்களிடமோ அல்லது இந்து மதம் சாராத மாற்று மதத்தவர்களிடையேயோ எழுந்த எழுகின்ற விவாதங்கள் அல்ல. இராமயணத்தை முழுமையாக நம்பி இராமனை கடவுளென்று ஏற்றுக் கொண்டவர்களிடையே கூட இருந்து தான் வருகிறது.
முக்கியமாக இராமன் வாலியை கொன்ற முறையை பற்றி பலவாறாக விவாதங்கள், பட்டிமன்றங்கள், கேள்விகனைகள் இப்படியாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான விவரிப்பில் வால்மீகி இராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் கூட சில வித்தியாசங்கள் இருக்கின்றது.
சுக்வீரன் வாலியிடம் அடைக்கலம் கேட்டு வந்த போது வாலி அடைக்கலம் தர மறுக்கிறான். அத்தோடு தனது சகோதரனான சுக்வீரனின் மனைவியை வாலி அபகரித்தும் கொள்கின்றான்.
இதன் காரணத்தால் இராமன் வாலியை மறைந்திருந்து அம்பெய்தி கொல்கிறான். கொன்ற பிறகு வாலி உடனே சாகவில்லை, மறைந்திருந்து கொன்றதற்கான நியாயங்களை இராமனிடம் கேட்கிறான்.
அவன் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு இராமன் வால்மீகியில் இப்படி பதில் சொல்கிறார், “நீ யார் இதை கேட்க? நீ ஒரு விலங்கு. ஒரு விலங்கை எப்படி வேண்டுமானாலும் வேட்டையாடலாம். எதிர் நின்று தான் கொல்ல வேண்டும் என்கிற சட்டமில்லை. இது வேட்டை நியதி”
”ஆனால் சகோதரனுடைய மனைவியை கைப்பற்றிக் கொள்வது கூடாது” என்பது மனிதனுக்குறிய தர்மம். அதெப்படி மனிதனுக்குறிய தர்மத்தை விலங்கின் மீது ஏற்றலாம்...? என்ற கெள்வி எழுப்புகிறான் வாலி
“வேதம் படித்தவன் விலங்காக இருந்தாலும் மனுதர்மம் கட்டுபடுத்தும்” என்று பதிலளிக்கிறான் இராமன்.
“நீ சொல்வதெல்லாம் சரி என்று வைத்துக் கொண்டாலும் மறைந்திருந்து கொல்வானேன்..” என்று நெற்றி பொட்டில் குறி வைக்கிறான் வாலி
இந்த கேள்விக்கு இராமனே பதில் சொல்ல முடியாமல் போகவே இலட்சுமணன் தான் வாலிக்கு சமாதானம் சொல்கிறான். அந்த சமாதானமும் ஏதோ சமாளிக்கும் விதமாக தான் அமைந்திருக்கிறதே தவிர நியாயம் என்று தெளிவாக எடுத்து இயம்பவில்லை பெரும்பாலாருக்கு திருப்தியளிக்கவில்லை.
கம்பராமாயணத்தில் இராமன் வாலியையும், சுக்வீரனையும் முதலில் “பித்து ஆய விலங்கு” என்று பகுத்தறிவில்லாத விலங்கு என்று கூறுகிறார். ஆனால் வாலியை கொன்ற பிறகு வாலி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது “.. நீ விலங்கல்ல...” என்று கூறுகிறான்.
இத்தகைய முரண்பாடுகள் கம்பராமாயணத்திலே இராமனிடம் காணப்படுவதாய் கருத்துக்கள் வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.
இப்படி பலவாறாக விவாதப் பொருளாக விளங்கிய இந்த கேள்விகளை ஜட்ஜப்பா எடுத்துக் கொண்டு தனது வக்கீல், நீதிபதிக்கே உரிய வாதப் பிரதிவாதங்களை சீர்தூக்கிப் பார்த்து புதிய அணுகுமுறையோடு அணுகி அவர்களுக்கு சரி என்று பட்டதை வைத்து விடை கான முயன்றார்கள்.
அந்த முயற்சியின் வெளிப்பாடு தான் “மூன்று வினாக்கள்” என்ற ஒரே புத்தகம். 400 பக்கங்களுக்கும் மேலாக இருக்கும் அந்த புத்தகத்தில் வாலி வதம் பற்றிய கருத்தாக்கமே பிராதனமாக இருந்தாலும் மொத்த இராமாயனத்தையுமே படித்த திருப்தியை கொடுக்கும்.
இந்த நூலை காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த பெரியவர் பரமாச்சாரியார் படித்து விட்டு ஜட்ஜப்பாவிடம், “நீங்கள் சீஃப் ஜஸ்டிஸ். ராமனுக்கு ஜஸ்டிஸ் பண்ணிவிட்டீர்கள்” என்று பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்தினார்கள்.
-------------------------------
A.K.Ramanujam - http://en.wikipedia.org/wiki/A._K._Ramanujan - Author of "Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translations"
வாலி வதை சம்மந்தமான வாத பிரதிவாதங்கள்:
http://periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1935&fileName=Jul&cCount=11
http://mathimaran.wordpress.com/2008/12/19/article148/
http://www.vallamai.com/special/deepavali/187
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=81104301&edition_id=20110430&format=html
0 comments:
Post a Comment