Wednesday, October 12, 2011

இப்பொழுதெல்லாம் என் பாதங்கள் தரை மீது படுவதேயில்லை - குல்ஜார் சாபின் ‘கர்’ படப் பாடல்


Aaj kal paaw jameen par naheen padate mere
bolo dekhaa hain kabhee, tumane muze udate huye

இப்பொழுதெல்லாம் 
 
என் பாதங்கள் 
தரைமீது 
படுவதேயில்லை - 

காற்றில்  
மிதப்பதாய் 
உணர்கிறேன் 

அவ்வாறு 
பறப்பதை 
நீ 

பார்த்திருந்தால் 
கொஞ்சம்  
சொல்லிவிட்டு செல்-






jab bhee thaamaa hain teraa haath  to dekhaa hain
log kahate hain kee, bas haath kee rekhaa hain
hum ne dekhaa hain do  takadeeron ko judate huye

நான் 
 
உன் கரங்களை 
பற்றிப் பிடிக்கும் 
போதெல்லாம் 

நீ கண்டதுண்டா? 

அகிலமே 

சொல்கிறதே - 

“இவர்கள் 
பொருத்தமான 
ஜோடிகள்” 
என்று 

நாம்  
கண்களால் 
காண்கிறோம் 

இதோ  
இங்கே 
ஈருடல்  
ஒன்றானது






neend see rahatee hai, halakaasaa nashaa rahataa hain
raat din aakhon me, yek cheharaa basaa rahataa hain
par lagee aakhon ko dekhaa hain kabhee udate huye

ஒரு மாதிரி
உறக்கத்திலும் 
மயக்கத்திலும் 
இருப்பதாய்

உணர்கிறேன் 

காலையிலும் 
மாலையிலும் 
ஒரே முகம் 
எப்பொழுதும் 
கண்ணெதிரே 
தெரிகிறது 

முகத்தில் 
பொருத்தப்பட்ட 
கண்கள் 
பறப்பதை  
நீ 

பார்த்திருந்தால் 
கொஞ்சம் 


சொல்லிவிட்டு செல்-


jaane kyaa hotaa hai, har baat pe kuchh hotaa hain
din mein kuchh hotaa hai, aaur raat mein kuchh hotaa hain
thaam lenaa jo kabhee dekho humei udate huye

எனக்கு என்ன 
ஆயிற்று..?
ஒரு விதியும் 
விளங்கவில்லை
ஆனால்
நீ பேசும்
ஒவ்வொரு பேச்சிலும்
ஏதோ ஆகின்றது
பகலில்
ஒரு மாதிரியும்
இரவில்
வேறு மாதிரியும்
ஆகின்றேன்
என்னை
கெட்டியமாக 
பிடித்துக் கொள்ளுங்கள்
நான்
பறக்கின்றேன் பார்

No comments: