Tuesday, June 26, 2012

ஏ அஜ்னபி - குல்சார் சாபின் தில்சே பட பாடல்



Oh Pakhi Pakhi Pardesi
என் இனிய பறவைகளே..!
தூரத்து தேசத்திலிருந்து
சொந்த நிலம்
துறந்து 
பருவகாலத்துக்கு (சீசனுக்கு) மட்டும்
வந்து 
திரும்ப 
சென்று விடும் 
என் இனிய பறவைகளே..!
Aye ajnabi tu bhi kabhi aawaaz de kahin se

ஓ வழிபோக்கனே..!
நீ 
எங்கிருந்த போதிலும்
சில பொழுதாவது
என் பெயரை 
மட்டும்
உச்சரித்து விடு..!

Main yahan tukdon mein jee raha hoon
Tu kahin tukdon mein jeen rahi hai


நான் இங்கே
உடைந்து போயிருக்கிறேன்
இருப்பினும்
வாழ்ந்து கொண்டு 
தானிருக்கிறேன்

நீயும் அங்கே
நிச்சயமாய்
உடைந்து போன
வாழ்க்கையோடு
தான்
உறவாயிருப்பாய்..!
Roz roz resham si hawa aate jaate kehti hai bata
Resham si hawa kehti hai bata
Vo jo doodh dhuli masoom kali
Vo hai kahan kahan hai
Vo roshni kahan hai 

vo jaansi kahan hai
Main adhoora tu adhoori jee rahein hain


ஒவ்வொரு நாளும்
வருடி செல்லும்
வாடை காற்று
என்னை கேட்டு
நச்சரிக்கிறது..

பாலில் குளித்ததை
போல் -
பூவிதழின் மென்மை
கொண்ட -

அந்த மங்கை
எங்கே?

அந்த பூ
எங்கே?

அதன் ஒலி
எங்கே?

என் வாழ்க்கை
எங்கே?

நான் 
இன்னமும்
முழுமையடையவில்லை

நிச்சயமாக தெரியும்
நீயும்
பாதி வாழ்க்கை
தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்..!

Tu to nahin hai lekin teri muskurahatein hain
Chehra nahin hai par teri aahatein hain
Tu hai kahan kahan hai
Tera nishaan kahan hai
Mera jahan kahan hai
Main adhoora tu adhoori jee rahein hai

நீ
இங்கே
இப்போது
இல்லை
ஆனால்
உனது 
சிரிப்பொலி
செவிகளில்
ஒலிக்கிறது

உன்
முகம் 
கண்ணெதிரே
இல்லை
ஆனால்
உனது
காலடி
சத்தம்
கேட்கிறது

நீ மட்டும்
எங்கே
சென்றாய்?

உனது
இருப்பின் அடையாளங்கள்
எங்கே?

என் உலகம் 
எங்கே?

நான் 
இன்னமும்
முழுமையடையவில்லை

நிச்சயமாக தெரியும்
நீயும்
பாதி வாழ்க்கை
தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்..!