Showing posts with label நோன்பு கஞ்சி. Show all posts
Showing posts with label நோன்பு கஞ்சி. Show all posts

Sunday, September 13, 2009

ஹலீம் கஞ்சி செய்வது எப்படி?

பகுதி 1:

கடலை பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
துவரம் பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
பச்சை பயிறு - கால் (ரைஸ் குக்கர்) கப் அளவு
பாஸ்மதி அரிசி (அல்லது) பச்சரிசி - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
மேற்கூறிய அனைத்தையும் தண்ணீரில் ஒரு 15 நிமிடத்திற்கு அப்படியே போட்டு வைக்க வேண்டும்

15 நிமிடம் கழித்த பிறகு பருப்புகளை களைந்து அனைத்து தண்ணீரையும் வடித்து விட்டு
உடைத்த கோதுமை யை (முக்கால் ரைஸ் குக்கர் கப் அளவு)
அந்த பருப்புகளில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்

பகுதி 2
கோழியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) அல்லது இறைச்சியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) சின்னசின்ன துண்டுகளாக அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் (அல்லது) கொத்துகறியும் (கால் கிலோ) வாங்கி வைத்துக் கொள்ளலாம்

பகுதி 3

குக்கரை (பிரஸ்டிஜ் வகை) அடுப்பில் வைத்து
அந்த குக்கரில்
எண்ணெய் (4 சோறு வைக்கிற ஆப்பை அளவு) ஊற்றி
பட்டை (சின்ன துண்டு 1), கிராம்பு (4),
வெங்காயம் (பெரியது 1 1/2), (நன்றாக வதங்கணும், கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால் பொண்ணிறமாக வந்துவிடும்)
இஞ்சி பூண்டு (5 டேபிள் ஸ்பூன்), (மீண்டும் வதங்கணும்)
நன்றாக மீண்டும் வதக்கிய பிறகு
தக்காளி (2),
பச்சை மிளகாய் (4),
மல்லி கீரை (கொஞ்சம்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு தாளித்து

அதுலேயே
மிளகாய் தூள் (1 1/2 டேபிள் ஸ்பூன்),
மிளகு தூள் (1 டேபிள் ஸ்பூன்),
ஜீரக தூள் (1 டேபிள் ஸ்பூன்),
மஞ்சள் தூள் (1 டேபிள் ஸ்பூன்),
உப்பு தூள் (தேவையான அளவு),
கரம் மசாலா (அல்லது) இறைச்சி மசாலா (4 டேபிள் ஸ்பூன்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கி

பகுதி 2 ல் உள்ள கோழி அல்லது இறைச்சி அல்லது கொத்துகறியை கொட்டி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

அடுத்து

பகுதி 1ல் உள்ள அனைத்து பருப்புகளையும் கொட்டி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி குக்கரை மூடி கொஞ்சம் ஆவி வந்தவுடன் குக்கர் வெயிட்டை போட வேண்டும்

குக்கரில் 4 சத்தம் வந்தவுடன் அடுப்பை அடக்கி விட வேண்டும்

ஆவி போனவுடன் குக்கரை திறந்து ஆப்பையில் பருப்பை நன்றாக மசித்து பார்க்க வேண்டும்.

எல்லாம் நன்றாக வெந்து கஞ்சி போல வந்தவுடன் தேங்காய் பால் - 5 கரண்டி (டேபிள் ஸ்பூன்) - ஊற்றி கஞ்சியை எறக்கி விட வேண்டும்

ஹலீம் கஞ்சி தயார்

5 அல்லது 6 பேர் வரை நன்றாக சாப்பிடலாம்

நன்றாக இருந்தால் சொல்லி அனுப்பவும்