Thursday, April 28, 2011

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் (திரைப்பட பாடல்கள்)

தேனின் சுவை 
காதுகளுக்கு..!


அர்த்தமுள்ள வரிகள்
வாழ்க்கைக்கு..!
----------------------------------------------------------




டெல்லியில் அவளோடு பழகியிருக்கிறான். கவிதையாய் பழகியுமிருக்கிறான். உறுதி செய்யப்பட்ட மரணத்தை உடல் பரிசோதகர்கள் அறிவித்து விட அவளை விட்டு தூரமாக மும்பைக்கு பயணிக்கின்றான்.

வாழ்க்கையை போலவே அவனும் புதிரானவன். மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவன். சோகங்களை தனக்குள் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் உயர்மனநிலை படைத்தவன்.

அவன் காதலியிடமிருந்து தூரமாக வந்ததே அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்பதால் தான். இதோ அவனது சோகங்கள் ராகங்களாக... ராகங்கள் ஏழுவர்ணக் கனவுகளாக...

------------------------------------------------


கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் துக்கம்

Teri ankhon ke saye churaye rasili yaadon ne,

(அந்த கனவானது)
உனது விழிகளின்
வழி
எண்ணங்களை 
களவாடி
இனிய நினைவுகளால்
நிரப்பி விடும்



Choti baaten,
சிறிய விஷயங்கள்

Choti choti baaton ki hai yaadein bani,

சிறிய விஷயங்கள்
தான்
நாம் அதிகமாக
நினைவில் வைத்துக்
கொள்வது

Bhoole nahin bithi hui ek choti ghadi,

ஒரு 
சின்ன கனத்தை
கூட
நான்
மறக்கவே இல்லை


Janam janam se, aankhen bichaaye, tere liye in rahon mein,

பல பிறப்புகளாய்
வழி மேல்
விழி வைத்து
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்..

Bhole bhale,

குழந்தைத்தனம்
(சிறுபிள்ளைத்தனமான என்ற அர்த்தத்தில் சொல்வோமே அதுவல்ல - ஒரு குற்றங் குறை அறியாத கள்ளம் கபடமில்லாத)

Bhole bhale dil ko behlate rahe,
உனது
குழந்தைத்தனமான
இதயத்தால்
நான்
களிப்படைகிறேன்

Tanhai mein tere khayalon ko sajate rahe,

தனிமையில்
உனது நினைவுகளை
ஆடையாய்
அணிந்து கொள்கிறேன்

Kabhi kabhi tho, aavaaz dekar, mujhko jagaya khabon ne,

சில பொழுதுகளில்
உனது
குரல் கேட்கிறது
அந்த குரல்
என்னை 
விழிப்படைய செய்கிறது


Roothi raatein,

கோபமான இரவுகள்

Roothi hui raaton ko jagaya kabhi,

கோபமான இரவுகளை
நான்
சில பொழுதுகளில்
வாங்கி வருகிறேன்

Tere liye bithi subah ko bulaya kabhi,

வேறு 
சில பொழுதுகளில்
அழகான அமைதியான சுபுஹ் (விடிந்தும் விடியாத அதிகாலை) நேரங்களை
வாங்கி வருகிறேன்

Tere bina bhi, tere liye hi, diye jalaye raaton mein,

நீயின்றி
உனக்காக
இரவில்
விளக்கை ஏற்றுகிறேன்
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)

----------------------------------------------------------



தனது சோகங்களை பகிர்ந்து கொள்ளாததற்கு காரணம் சொல்கிறான், ‘அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் செல்ஃபிஷ்’ என்று.

அவன் தங்கையாக பாவிக்கும் அவளது திருமண நாளன்று தன்னை நீண்ட நாள் வாழ வாழ்த்தும் படி வேண்டி நிற்கிறாள்.

அவனோ, ‘தன் வயதை கூட தர முடியாதே..’ என்று உளம் புழுங்குகிறான்.

இவனது வானம் இரவாடைக்கு (நைட் டிரஸ்ஸுக்கு) மாறிக் கொண்டிருக்கிறது..

அப்போது இவனது நினைவுகளில்..

-------------------------------------------------


kahii.n duur jab din Dhal jaae

எங்கேயோ 
தொலை தூரத்தில்
நாளின் முடிவில்

saa.Njh kii dulhan badan churaae

மாலைப் பொழுதெனும்
மணமகளின்
உடல்
களவாடப்படும் பொழுது

chupake se aae

ரகசியமாக

mere Kayaalo.n ke aa.ngan me.n

எனது நினைவுகளின்
தலைவாசலில்

koi sapano.n ke diip jalaae, diip jalaae

யாரோஒருவர்
கனவுகளெனும்
விளக்கை
ஏற்றினர்


kabhii yuu.Nhii.n, jab huii.n, bojhal saa.Nse.n

சில பொழுதுகளில்
எனது சுவாசம்
காரணமின்றி
கடினமாகிறது

bhar aaii baiThe baiThe, jab yuu.Nhii.n aa.Nkhe.n

காரணமின்றி
என் கண்கள்
கண்ணீரில்
நனைந்து விடுகிறது

tabhii machal ke, pyaar se chhal ke

யாரோ ஒருவர்
உள்ளத்தில் 
கிளர்ச்சியை தூண்டியதுடன்
காதலோடும் என்னுடன் 
காலாற நடக்கின்றனர்

chhue koii mujhe par nazar na aae, nazar na aae

இதயத்தை தொடும்
அவர்
கண்களுக்கு மட்டும் தென்படவில்லை

kahii.n to ye, dil kabhii, mil nahii.n paate

சில பொழுதுகளில்
இரு இதயங்கள்
சந்தித்துக் 
கொள்வதில்லை

kahii.n se nikal aae, janmo.n ke naate

ஆனால்
சில பொழுதுகளில்
சந்தித்தேயிராத
அந்த இதயங்களுக்குறியவர்கள்
ஜென்மம் வரை 
இணைந்திருக்கின்றனர்

ghanii thii ulajhan, bairii apanaa man

என்ன புதிர் இது
இந்த இதயத்தில்
என்ன முரண்பாடு
இந்த இதயத்திற்குள்

apanaa hii hoke sahe dard paraae, dard paraae

ஒருவருக்கு
உரிமையாயிருக்கிறது
பிறரின்
சோகங்களை
சுமக்கிறது



dil jaane, mere saare, bhed ye gahare

என் இதயத்திற்கு
மட்டுமே 
தெரிந்த 
இரகசியம்

ho gae kaise mere, sapane sunahare

எப்படி 
என் கனவுகள்
தங்கமாக
மாறுகிறதென்பது

ye mere sapane, yahii to hai.n apane

இது என்னுடைய
கனவு
இது ஒன்றுதான்
இப்போது எனக்கென
இருக்கும்
ஒரே ஒரு
உறவு

mujhase judaa na ho.nge inake ye saaye, inake ye saaye

என்னை விட்டு
பிரிவதில்லை
அந்த கனவின்
நிழலும் கூட
அந்த கனவின்
நிழலும் கூட

----------------------------------------------------------




’நேற்று நல்லா தாங்க எங்கூட பேசிக் கொண்டிருந்தார்..’

‘போன வாரம் கூட கடைத்தெருவில் பார்த்தேன்..’

‘நல்லா தானே இருந்தார்..’

- நம்மிடம் இருந்தவர் எங்கே மறைந்து போனார்..?

அதுவும் போன இடம் சொல்லாமல்...?

போய் வந்தவர் யாராவது இருப்பின் நில்லுங்கள்..!

போன இடம் பற்றி பகிருங்கள்....

--------------------------------------------------------



Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர்.. 

Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்               


Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே இருக்கும் விழித்தெழுவதில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே கழித்திருக்கும் விழித்தெழுவதேயில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும் 


Ek din sapno ka raahi
ஒரு நாள், கனவினை பின் தொடர்ந்த அவர்


 Chalaa jaaye sapno se aage kahan
கனவினை கடந்து சென்று விடுவார்,
கனவினை கண்டவர் எங்கே தான் கண் காணாத இடத்திற்கு சென்று விட்டார்?

Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்


Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும் Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்


Sukh dukh sang sang jhele
சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்


Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்Sukh dukh sang sang jhele
சுக துக்கங்க(ளில்)ளை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர்


Wahi chunkar khaamoshi
அவரே அவர் எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் மௌணமாக... 


Yun chale jaaye akele kahan
எங்கே தான் தன்னந்தனியாக செல்கின்றனரோ...?


Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்


Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்

Wednesday, April 27, 2011

நவீன சாமிரிகள்

குரான் ஷரீஃப் வசனம்:


நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.


-ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) - 152 வது வசனம்


இந்த வசனம் ரொம்ப முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வசனம். 

அதாவது யாகூர் நபி என்றழைக்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகளை பிர்அவ்ன் எனும் அரசன் அடிமையாக்கி தன்னையே கடவுளென வணங்கி வரும் படியும் ஏவினான். இறைவன் அந்த மக்களை மூஸா நபி மூலமாக காப்பாற்றி பிர் அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அழித்த பிறகு இறைவனிடமிருந்து செய்தியை பெற தூர்சினாய்க்கு செல்கிறார்கள்.

மூஸா நபிய்வர்கள் 40 நாட்கள் தான் தன்னுடைய மக்களை விட்டு பிரிந்து போனார்கள், வேறு எங்கும் அல்ல, இறைவனைக் கண்டு கட்டளைகளை பெற்று வர தூர்சினாய்க்கு தான் சென்றார்கள். 


இறைவன் மூஸா நபியவர்களுக்கு உண்மையான இறை மார்க்கத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் போலியான இன்னொரு போட்டி மார்க்கத்தை சாமிரி என்பவர் உருவாக்கினார். எந்த மக்கள் இறைவனின் அத்தாட்சியை கண்கூடாக பார்த்தார்களோ அதே மக்கள் அந்த சாமிரி உருவாக்கின அந்த போட்டி மதத்தை உடனே ஏற்றுக் கொண்டார்கள்.

திரும்பி வந்து சாமிரியிடம் மூஸா நபியவர்கள் இது பற்றி ’உன் விஷயமென்ன?’ என்று கேட்டபோது அவன் அழகாக பதில் சொன்னான்.


“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.


-ஸூரத்து தாஹா - 96 வது வசனம்


அவர்கள் காணாத ஒன்றை சாமிரி கண்டு இருக்கிறார். 


எதில் கண்டு இருக்கிறார்?


தூதரின் காலடி மண்ணில், 


- சாமிரி பொய் சொல்லவில்லை என்று கொண்டால் (உண்மையும் அது தான்), இதிலிருந்து நாம் சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.


1. தூதரின் காலடி மண்ணில் ஏதோ ஒரு அற்புதம் இருந்திருக்கிறது.


2. தூதரின் காலடியில் இருந்த ஏதோ ஒரு அற்புதத்தை சாமிரியும் கண்டு இருக்கிறார்.


3. மற்றவர்களுக்கு இந்த அற்புதம் விளங்கவில்லை, அவர்கள் இந்த அற்புதத்தை கவனிப்பாராகவும் இருக்கவில்லை.


4. மற்றவர்களை விட சாமிரியான இவர் மறைவான உண்மைகளை அறியக்கூடியவராகவும் இருந்திருக்கிறார். 


5. அந்த தூதர் காலடி பட்ட மண்ணுக்கு எந்த அளவுக்கு சக்தி இருந்தது என்றால் அதை சாமிரி எறிந்த போது காளைக் கன்றுக்கு சப்தம் (அதாவது உயிர் வந்தது போல்) தோன்றியது.


6. அப்படி போலியான போட்டி மதத்தை உருவாக்க தூதரின் காலடி மண்ணில் தான் பார்த்த அந்த மறைவான அற்புதத்தை பயன்படுத்திக் கொண்டார்.


7. அவ்வாறு அவர் உருவாக்குவதை அவரின் மனம் அவருக்கு அழகான செயலாக காட்டியிருக்கிறது.


நபிகளின் வரிசையில் முத்திரை முடிந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் நம்மிடம் எத்தனையோ சாமிரிகள் எத்தனையோ காளைகன்றை கொண்டு வந்து விட்டனர்.


சிலர் கேஸட், சிடி போட்டு உண்மைக்கு புறம்பானவற்றை கொண்டு வந்தார்கள், 


சிலர் அரசியல், பணம், பதவியை கொண்டு வந்தார்கள்.

சிலர் மந்திரம், தந்திரம் செய்து காட்டினார்கள்.

சிலர் தன்னை இறை தூதர் என்றே காதில் காதியானி சொன்னார்கள்.

இவ்வாறு தங்களின் மனம் அவர்களுக்கு எதையெல்லாம் அழகாக காட்டியதோ அந்த அழகிய பேச்சுக்களை எல்லாம் விற்பனை செய்து வந்தார்கள். மூஸா நபி இறங்கி வந்ததை போல் இமாம் மஹதி (றஹ்) அவர்கள் வரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்...


"There are as many paths to God as there are souls on Earth." - ஹதீது

Wednesday, April 20, 2011

இரண்டு கண்கள் ஒரு கதை - குல்ஜார் சாபின் பாடல்கள்



பாடலை பாடியவர்: ஆர்த்தி முகர்ஜி

இந்த பாடலை பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது.

பாடல் காட்சியில் நடித்தவர்கள்:


ஷபனா ஆஜ்மி (படத்தில் கணவர் ஜாவித் அக்தருடன்)

நஸிருத்தீன் ஷா

சுப்ரியா பதக் (நஸிருத்தின் ஷாவின் நிஜத்தில் மனைவி)

குழந்தைகள் மூவர்:

ஊர்மிளா மடோண்ட்கர்


ஜுகல் ஹன்ஸ்ராஜ்

பேபி ஆராதானா




படத்தின் இயக்குனர்: சேகர் கபூர்

படத்தின் வசனம், பாடல்களை எழுதியவர்: குல்ஜார் சாப்

--------------------------------

இந்துவாகிய (படத்தில் ஷபனா ஆஜ்மியின் பெயர் இந்து) அவள் தனது குழந்தைகளை கண்களின் கதையை சொல்லி உறங்க வைக்கிறாள். அவள் ஏற்றுக் கொள்ள முடியாத துயரங்கள் அவளுக்குள் உறங்காமலே இருக்கின்றன.

தனது கணவனுக்கு வேறொரு பெண்ணோடு ஏற்பட்ட தொடர்பில் பிறந்த அந்த குழந்தையை ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை அவள்.

ஆனால் கணவனுக்கோ அவளை ஏமாற்ற வேண்டும் என்பதோ அவளை தர்ம சங்கடப் பட வைக்க வேண்டுமென்பதோ நோக்கமில்லை.

ஆனால் அதே சமயத்தில் தனது தாயை இழந்து தந்தை யார் என்று அறியாமல் இருக்கும் அந்த மகனை அரவணைத்து ஏற்றுக் கொள்ளவும் அவன் தயக்கம் காட்டவில்லை.

தனக்கு சொந்தம் என்று இருந்த அந்த அன்பின் வடிவை பறிகொடுத்து விட்டு தனது தாயின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபரின் வீட்டில் யாரும் முகம் கொடுத்து பேசாத அந்த துயரத்தில் தான் அவன் இந்த கண்களின் கதையை கேட்கிறான்..

அவனுக்கு அவனது தாயாரின் நினைவுகள் கண்ணீரின் துணையோடு வந்து வதைக்கிறது...

ஒரு வித தனிமையின் சிறையில் சிக்கித் தவிக்கும் அவனுக்கு இந்த இரண்டு கண்களின் கதை அவனை விட்டும் ரொம்ப தூரம் சென்று விட்ட அவனது தாயின் அருகில் சில நேரத்திற்காவது கொண்டு சேர்த்து விடுகிறது..

இதோ குல்ஜார் சாபின் வார்த்தை தோரண வரவேற்பில் இரு கண்களின் கதை இரு செவிகளில் நுழைகிறது...

Do nainaa, ek kahaanee
thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee


இரண்டு கண்கள்
ஒரு கதை
சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..
------------------------------------
chhotee see do jeelon mein
wo bahatee rahatee hai
koee sune yaa naa sune
kahatee rahatee hai
kuchh likh ke aur kuchh zubaanee


கதை சிறிய சொற்றொடர்களாக
முடிவுறாமல் பொழிந்து
கொண்டே இருக்கிறது
யாரும் கேட்கிறார்கள்
அல்லது கேட்காமல் இருக்கிறார்கள்
(என்பது பற்றிய சிந்தனையில்லாமல்)
கதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது
ஏதோ அர்த்தம் தெரியாமல் எழுதியவையிலிருந்து
ஏதோ அர்த்தம் தெரியாமல் பேசியதிலிருந்து

thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee
Do nainaa, ek kahaanee



சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..

இரண்டு கண்கள்
ஒரு கதை...
-----------------------------------------
thodee si hai jaanee huyee
thodee see nayee
jahaa ruke aansoo
wahee pooree ho gayee
hai to nayee fir bhee hai puraanee


கொஞ்சம் தெரிந்தவையிலிருந்து
கொஞ்சம் புதியவையிலிருந்து
(கதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது)
எப்பொழுது கண்ணீர் முடிவுறுகிறதோ
அப்பொழுது கதையும் முடிவுறும்
இது புதியது தான், ஆனாலும் பழையது

thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee
Do nainaa, ek kahaanee




சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..

இரண்டு கண்கள்
ஒரு கதை...
-----------------------------------------
ek khatm ho to
doosaree yaad aa jaatee hai
hothhon pe phir bhoolee huyee
baat aa jaatee hai
do nainon kee hain ye kahaanee


ஒன்று (கதை) முடிவுறும் போது,
இன்னொன்றின் ஞாபகம் வந்து கதை தொடங்கி விடும்
எப்போதோ மறந்து போன அந்த கதை
உன் வாய் நுனியில் வெளிவர காத்திருக்கும்
இது தான் அந்த இரு கண்களின் கதை


(தொலைந்து போன நினைவுகளை வானில் தேடும் பொழுது காட்சி முடிவுறுகிறது)

Sunday, April 10, 2011

தேர்தல் சிறப்பு காட்சி - குல்ஜார் சாபின் ஹூ தூ தூ (கபடி) படத்திலிருந்து ஒரு காட்சி





நானா:
சபாஷ்..! சபாஷ்..!

எதுக்காக இப்படி போட்டு இடுப்பை வளைக்கிறே...!

ஏய்.. தம்பி..! இந்த் சாப்பாட்டை கொண்டு போய் உள்ளே வைப்பா..!

வந்து உட்கார்..!

(கோழியிடம்..) இரு..இரு.. கத்துறதுனால எந்த பலனும் இல்லை..!  உனக்கும் எனக்கும் ஒரே எதிர்காலம் தான்..!

தபு: அப்டின்னா..?

நானா:
இரண்டு பேரோட தலையும் ஒரு நாளைக்கு வெட்டுபட தானே போவுது..?

தபு: உங்களுக்கு பயமாவே இல்லையா?

நானா:
யாரை பார்த்து? அசைவம் சாப்பிடறவங்கள பார்த்தா?

தபு: (அவங்ககிட்டேந்து) இல்லை,

நானா:
அப்புறம்..

தபு: அரசியல்வாதிகிட்டேர்ந்து.. (உங்களுக்கு பயமா இல்லையா?)

நானா:
அட..! அவங்க கிட்டே எனக்கு என்னா பயம்.. அவங்களே பாதுகாப்பில்லாம இருக்காங்க.. அவங்க இதே தான் (கபடி ஆட்டத்தை காட்டி) செஞ்சிகிட்டு இருக்காங்க.. அங்கே பாரு.. இது என்ன இது..? உனக்கு தெரியுமா?.. ம்...

தபு: தெரியும்.. கபடி..

நானா:
ஆமா..! நாங்க ”ஹூ தூ தூ” என்று தான் சொல்வோம்.. அரசியல்வாதிங்க இதே தான் விளையாடிட்டு இருக்காங்க..  தூக்குறது... எறியிறது.. இழுக்கிறது.. காயப்படுத்துறது.. அடுத்தவங்கட காலை புடிச்சு இழுக்குறது.. கையை முறிக்கிறது.. அவங்களை உட்கார வைக்கிறது.. இவங்களை நிற்க வைக்கிறது... (சிரித்து விட்டு) இது தான் நம்முடைய தேசிய விளையாட்டா இருக்கணும்.. நீ என்னா நினைக்கிறே..?

தபு: உண்மை தான்

நானா:
ஆமாவா.. எவ்வளவு அருமையான ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்..

(கபடியை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கை தட்டுகிறார்கள்)

நானா தொடர்கிறார்:

இந்த கிராமத்துக்காரங்க மாதிரியே தேசம் முழுவதும் உட்கார்ந்து இந்த கபடி ஆட்டத்தை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க.. ஒரு வார்த்தை பேசாம..  ஊமையா..

(எழுந்து)

50 வருஷத்துக்கு முன்னாடி நம்ம தேசம் மந்திரிகளையும் மினிஸ்டர்ஸ்களையும் மட்டும் தான் உருவாக்க முடிஞ்சிச்சு.. ஒரே ஒரு.. தலைவரை கூட உருவாக்க முடியலை..

தபு: அத எப்படி உருவாக்கிறது..?

நானா:
உண்மை, நம்பிக்கை..  நீ எதை செய்றீயோ அதுல உனக்கு நம்பிக்கை இருக்கணும்.. (You must believe in what you do)

Wednesday, April 06, 2011

வாழ்க்கையே.. உன்மீதெனக்கு கோபம் இல்லை..! ஆச்சர்யம் தான்!! - குல்ஜார் சாப் பாடல்கள்

சேகர் கபூரின் முதல் இந்தி படம் ‘மாசும்’. 


குழந்தைத்தனமான, அப்பாவியான, ஒரு விபரமும் அறியாத என்று அர்த்தப்படும்.


இதே படம் தமிழில் ‘பூ பூவா பூத்திருக்கு’ என்று கெடுத்தார்கள் மன்னிக்கவும் எடுத்தார்கள்.


படத்தில் வசனங்களும் பாடல்களும் குல்ஜார் சாபின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.


கதை சுருக்கம்:


மனைவி, இரண்டு அழகான வெள்ளை ரோஜா போன்ற பிள்ளைகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் நசிருதீன் ஷாவிற்கு ஒரு தொலைபேசி நய்னிதால் என்ற ஊரிலிருந்து வருகிறது.


‘வந்து உங்க குழந்தைய கூட்டிட்டு போங்க..’ என்று


அதிர்கிறார் நசீர்.


பரிதாபத்துக்குறிய ஒரு பெண்ணின் அழுத்தமான ஏக்கத்தில் பங்கெடுத்த போது விளைந்த உயிர் ஒன்றை பற்றி மனைவி ஷபனா ஆஜ்மியிடம் பக்குவமாக சொல்கிறார்.


எவ்வளவு பக்குவமாக சொன்னாலும் எந்த மனைவியும் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக இயல்பாகவே இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி போகிறது.


குழந்தையை கூட்டிட்டு வந்து இங்கே சில நாட்கள் வைத்திருந்து விட்டு பிறகு நய்னிதாலிலேயே ஹாஸ்டலில் சேர்த்து விடுவதாக உத்திரவாதம் கொடுத்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார் நசீர்.


குழந்தைக்கு தந்தை யார் என்று தெரியாது.


தந்தையின் தற்போதைய மனைவி தன்னை ஏன் வெறுத்து ஒதுக்குகிறார் என்று புரியாமல் அந்த மகன் தவிக்கிறான்.


தான் பெற்ற குழந்தைகளோடு நெருக்கமாக இந்த மாற்றாந்தாயின் மகன் பழகுவதை விரும்பாத அவர் ஒரு கட்டத்தில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு மறுவேளை பார்க்கவும் என்ற உத்திரவு போடுகிறாள்.


குழந்தையை கூட்டிக் கொண்டு ஹாஸ்டலுக்கு வருகிறார் நசீர்..


ஆனால் குழந்தையோ ஹாஸ்டலில் தங்குவதை விரும்பவில்லை..


நசீருக்கு அந்த சமயத்தில் கூட வாழ்க்கையை வெறுக்க முடியவில்லை.. ஒரு கவிஞனை போல் ஆச்சர்யப்படுகிறார்... சந்தோஷமாக சிரித்து களித்தது எல்லாம் திருப்பி வாழ்க்கை கடனாக வசூல் செய்து விடுவதாக பாடுகிறார்.
---------------------
மகன்: அங்கிள், உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

தந்தை: அப்படியா? பேட்டே (மகனே..!) உன்னையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

ம: என் அப்பா... என் அப்பா வந்தாங்கன்னா கூட... நான் அவங்க கூட தங்க மாட்டேன்..

த: ஏன்...?

ம: நான் உங்க கூட தான் தங்குவேன்.. 
(சிறிய மௌணம்)
நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாம்மா..?
---------------------
Tujhse naaraz nahi zindagi
Hairaan hoon main
Ho..hairaan hoon main 

வாழ்க்கையே..! 
உன் மீது 
எனக்கொன்றும் 
கோவம் இல்லை 
ஆச்சர்யம் தான்.. 
ஆமாம்.. 
ஆச்சர்யம் தான்.. 

Tere masoom sawalon se
Pareshaan hoon main
Ho..pareshan hoon main 

உன்னுடைய 
வெள்ளந்தித் தனமான 
கேள்விகள் 
எனக்கு தர்மசங்கடத்தை 
ஏற்படுத்துகின்றன.. 
ஆமாம் 
குற்றஉணர்வை 
ஏற்படுத்துகின்றன..
---------------------
Jeene ke liye socha hi nahi
Dard sambhalne honge
Muskuraaye to muskuraane ke
Karz utaarne honge
Muskuraun kabhi to lagta hai
Jaise hothon pe karz rakha hai

ஒருபோதும் 
நினைத்ததில்லை
வாழவேண்டுமெனில்
துயரங்களை சுமந்துதான்
பழகவேண்டுமென்று

(நினைத்து கூட பார்த்ததில்லை)
சிரிக்க வேண்டுமெனில்
கடனாக தான் 
சிரிக்க வேண்டுமென்று

நீ கொடுத்த
ஒவ்வொரு
சிரிப்பின் போதும்
இதழ்கள் எனக்கு
நினைவூட்டுகிறது
இதற்குறிய
கடனை திருப்பி 
செலுத்தியே 
ஆக வேண்டுமென்று..
---------------------
Zindagi tere ghum ne
Humein rishte naye samajhaye
Mile jo humein dhoop mein mile
Chhanv ke thande saaye

துயரங்கள்
நிறைந்த
உன் வாழ்க்கை
நம் உறவுக்கு
புதிய அர்த்தங்களை 
தந்திருக்கிறது

மகிழ்ச்சியான தருணத்தில்
அனுபவித்த இன்பங்கள்
இப்போது தான்
வலிகளை காட்ட
ஆரம்பித்திருக்கிறது..
---------------------
(கதவை தாழிட்ட படியே)

த: தேங்க் யு... தேங்க் யு வெரி மச்....

ம: நான் இந்த ஹாஸ்டலில் தங்க மாட்டேன்..

த: ஹை... ஏன்..?

ம: எனக்கு இது புடிக்கவே இல்லை...

த: இங்கே தங்கலாம்.. நிறைய புள்ளைங்க இங்க தங்கி படிக்கிறாங்க..

ம: நான் டெல்லில தங்க முடியாதுல்ல..? 

த: இல்லை.. நீ இங்கே தான் ஹாஸ்டலில் தங்கிக்கணும்..

ம: நான் ஏன் உங்க கூட தங்க முடியாது...?
---------------------
Aaj agar bhar aayi hai
Boonde baras jaayengi
Kal kya pata inke liye
Aankhe taras jaayengi
Ho..jaane kab ghum hua kahan khoya
Ek aansoo chhupa ke rakha tha

இப்போது
குளாமாக 
காட்சி தரும்
எனது கண்கள்
வரண்டு போய் விடும்

யாருக்கு தெரியும்
நாளை
யாருக்காக ஏங்கும்
என்று

ஆனந்த கண்ணீர்
ஒன்றிரண்டை
சேமித்து வைத்திருந்தேன்
அது எங்கே
தொலைந்து போனது
என்ற சுவடு கூட
தெரியவில்லை..!
---------------------
தந்தை மகன் வரைந்த ஓவியங்களை பார்த்து விட்டு: வெரி குட், (ஒரு வயதானவரும் ஒரு சிறுவனும் இருக்கும் ஓவியத்தை பார்த்து விட்டு) அப்புறம், இது யாரு?


மகன்: இது நானும் என்னோட அப்பாவும்


த: ம்ஹீம்.. (என்று தலையை ஆட்டிவிட்டு) உங்க அப்பா கண்ணாடி போட்டிருப்பாரா?


ம: ஆமாம்

வாழ்க்கையே..! 
உன் மீது 
எனக்கொன்றும் 
கோவம் இல்லை 
ஆச்சர்யம் தான்.. 
ஆமாம்.. 
ஆச்சர்யம் தான்..  

(கண்ணாடியை கழட்டுகிறார்)

உன்னுடைய 
வெள்ளந்தித் தனமான 
கேள்விகள் 
எனக்கு தர்மசங்கடத்தை 
ஏற்படுத்துகின்றன.. 
ஆமாம் 
குற்றஉணர்வை 
ஏற்படுத்துகின்றன..
-------------------------
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அமானத் அலி என்பவர் ஜி டிவியின் சரிகமப எனும் நிகழ்ச்சியில் குல்சார் சாபின் மகளார் மேக்னா குல்சார் முன் பாடியது.

மிகவும் நெகிழ்வுடன் ரசிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை பாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

எல்லோர் கண்களிலும் கண்ணீர்...