பத்ரு தரும் பாடம் நிறையவே இருந்தாலும் ஒரே ஒரு குரான் ஷரீஃபின் வசனத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அத்தியாயம் 8: ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றி பொருள்கள்)
11 வது வசனம்
(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
மேலே கண்ட இந்த வசனத்தை கூர்ந்து கவனித்து படித்து பார்த்தால் அந்த யுத்தத்தில் மிகப் பெரிய வழிகாட்டுதலை இறைவன் பத்ருயீன்களுக்கு வழங்கியிருப்பது தெரிய வரும்.
அத்தோடு ஒரு போராளி போருக்கு முன்னால் தன்னை தூய்மைப்படுத்தவும் உறுபடுத்திக் கொள்ளவும் வேண்டும் அதாவது பெரிய ஜிஹாதான தன் மனதையும் நம்பிக்கையின் பால் உறுதிபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து இயம்புகிறது.
இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்வதோடு பத்ரு யுத்தம் சம்மந்தமாக நான் கண்ட இரு காணொளி பதிவுகளை இணைத்துள்ளேன்.