Friday, November 25, 2011

Sunday, November 20, 2011

படகோட்டும் தோழனே.. - ‘குஷ்பு’ பட குல்ஜார் சாப் பாடல்


O majhi re
Apna kinara nadiyan ki dhaara hai


படகோட்டும் தோழனே


நமது கரை
என்பதே
நதியின் பூமியல்லவா..
------------
Saahilon pe bahnewale, khabi suna to hoga kahin o
Ho kaagazon ki kashtiyon ka kahin kinara hota nahin
O majhi re majhi re
Koi kinara jo kinare se mile woh apna kinara hai

கடலோர பயணத்தில்
வாழ்பவனே


நீ 
எங்கேனும்
இதனை
கேட்டறிருந்திருக்க கூடும்


காகிதத்தினாலான
கப்பல்களுக்கு
கரைகள்
என்பதே கிடையாது



படகோட்டும் தோழனே


ஒரு கரை
இன்னொரு கரையை
சந்திக்கும்
கரையே
எனது
கரை ஆகும்
-------------
Paniyon mein bah rahe hain kai kinare toote hue o
Ho raaston mein mil gaye hain sabhi sahare chhoote hue 
Koi sahara majhadhaare mein mile jo, apna sahara hai

நீரிலேயே மிதந்து
செல்வதால்


கரைகள்
துருப்பிடித்து
வலுவிழந்து
வருகிறது


உதவும்
கரங்களால்
வழிகள்
கைக்கு எட்டியது


ஓ 
படகோட்டும் தோழனே


எந்த கைகள்
நடுக்கடலில் மூழ்கும்சமயம்
உதவ வருகின்றதோ
அந்த கைகளே
நட்பின் அடையாளமாகும்

வழிபோக்கன் நான் நண்பர்களே - குல்ஜார் சாபின் ‘பரிச்சே’ பட பாடல்


Musafir Hoon Yaaron Na Ghar Hai Na Tikhana
Mujhe Chalte Jaana Hai Bas Chalte Jaana

வழிபோக்கன் நான்
என் இனிய 
நண்பர்களே..!

எனக்கென்று
ஒரு வீடும் 
இல்லை
ஒரு வாசலும்
இல்லை

நான் 
பயணம் செல்ல 
வேண்டும்
ஆனால்
நான்
பயணம்
சென்று கொண்டே
இருக்கிறேன்
-------
Ek Raah Rukh Gayi Tho Aur Judh Gayi
Main Mura Tho Saath Saath Raha Murgayi
Hawaon Ke Paron Par Mera Ashiana

ஒரு 
சாலை (கனவு, ஆசை)
முடியும் போது
இன்னொரு 
சாலை
அதோடு வந்து
இணைகின்றது

சரி வேண்டாமென்று
நான் திரும்பினால்
என்னோடு
சேர்ந்து
சாலையும்
திரும்பி விடுகின்றது

பாதங்களின்
கீழே உள்ள
காற்றில் தான்
என் குடியிருப்பு
உள்ளது
-----------


Din Ne Haath Thaam Kar Idhar Bithaliya
Raat Ne Ishaare Se Udhar Bulahliya
Subah se Shaam Se Mera Dostana

பகலானது
என் கைகளை
இங்கேயே (சாலையிலேயே)
பிடித்து வைத்துக்
கொள்கிறது

பகல் முடிந்து
இரவு வந்ததும்
அங்கே (வேறு ஒரு சாலை)
வரும் படி
சைகை காட்டி
அழைக்கிறது

இப்படிதான்
பகலும்
இரவும்
எனக்கு நண்பர்களானது
-----------

ஒருவரும் எங்கேயும் இல்லை - ’கினாரா’ பட குல்ஜார் சாப் பாடல்



Koee Naheen hain kahee


ஒருவரும் 
எங்கேயும் இல்லை


Sapno mein kyon kho gayee bolo na


சொல்...
ஏன்
நீ 


கனவுகளில்
கனவுகளாய்
கலைகிறாய்..?
-----------------
Phir aankh nam ho gaye
Phi koee yaad aa gayaa hain


கண்களில்
ஈரங்களை
கலக்கிறாய்..?
யாரையோ
நீங்காமல்
நினைக்கின்றாய்...?


Roshanee kam ho gayee


வெளிச்சம்
குறைந்து கொண்டே
வருகிறது


Kinara milega yahee
Milega kinara yahee
Yahee re
Yahee re


கரையை
அடைந்து விட்டாய்


இங்கே
இங்கே
இங்கேயே..!
---------------
Baat thee khwab kee
Khwab mein beet chokee hain
Khwab doharaatee naheen


என்னுடையது
கனவுகளின் 
கதையாகும்


கனவுகளிலேயே
அல்லது
கனவாகவே
என் 
கனவுகளின் கதை
முடிந்து விட்டது


கண்ட கனவு
மீண்டும்
தொடர்வதில்லை
அல்லது
வருவதில்லை


Zindagi sapno naheen
Zindagi sapno naheen
Naheen re
Naheen re


வாழ்க்கை
என்பது
கனவுகளல்ல


வாழ்க்கை 
என்பது
கனவுகளல்ல
----------------------

Friday, November 18, 2011

உங்கள் அன்பை கொடுங்கள் - சுஃபி டாகுமெண்ட்ரி

பாகிஸ்தானிய படைப்பாளியான நமீரா அஹமத் என்பார் 30 நிமிடங்கள் வரை வரக்கூடிய ஒரு டாக்குமெண்ட்ரியை எடுத்துள்ளார்.

இது ஒரு வகை Reed-flute ஊதுகுழல் இசைக் கருவியை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது.






13வது நூற்றாண்டில் வாழ்ந்த மிகப் பெரிய கவிஞரும் சூஃபியுமான மௌலான ஜலாலுத்தின் ரூமி (றஹ்) அவர்களின் வழிகாட்டுதலின் படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை மௌலவியா தரீக்காவாதிகள், மௌலவிய்யா சூஃபிகள், சுழலும் தர்வேஸ்கள் என்று பல பேர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த தரீக்கா துருக்கியில் பிறந்திருந்தாலும் உலகம் முழுக்க பரவலாக காணப்படுகின்றது. இவர்கள் எழுதிய "Song of the Reed" என்ற கவிதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த டாக்குமெண்ட்ரி.


மௌலவிய்யா தரீக்கா: http://sufism.org/

இஸ்லாத்தின் அத்தாட்சி என்று வழங்கப்பட்ட இமாம் கஜ்ஜாலி அவர்கள் பயணம் பற்றி இஹ்யாவு உலூமித்தினில் கிதாபுஸ் ஸஃபர் என்ற ஒரு நூலை வரைந்திருப்பார்கள். இதனை எங்களின் ஹஜ்ரத் அவர்கள் தமிழில் “பயணத்தின் பயன்” என்று ஆக்கி எங்களை பயன்பெற வைத்தார்கள்.

இறைவன் நம்மை படைத்த பிறகு இந்த உலகத்திற்கு நாம் பயண நிமித்தமாக தான் வந்திருக்கின்றோம், வந்த வேலை முடிந்தவுடன் அல்லது வந்த கால தவணை முடிந்தவுடன் திரும்பி அவனிடமே செல்ல வேண்டியிருக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் நிறைய பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். முக்கியமான இரண்டு பயணங்கள் இந்த இடத்தில் நம் கவனத்தை ஈர்க்கின்றது.

ஒன்று: அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றது (ஹிஜ்ரி ஆண்டு இந்த வருடத்திலிருந்து தான் துவங்குகின்றது)

இரண்டாவது: அவர்கள் மதினாவிலிருந்து ஹஜ்ஜு செய்ய திரும்பி மக்காவிற்கு வந்தது.

உடலை முறிக்கும் பொறுப்புகளை சுமந்து கொண்டு சென்ற அவர்கள் இறைவனிடம் திரும்ப ஹஜ்ஜுக்கு வரும் போது தெளிவான வெற்றியை பெற்றவர்களாக திரும்பவும் மக்காவுக்குள் நுழைந்தார்கள்.

http://hermetic.com/bey/caravan.html 

ஒவ்வொரு மனிதருடைய பயணமும் இறைவனிடமிருந்து வந்திருந்தாலும் அவர்கள் இந்த உலகிலே காணப்படுகின்ற நிலையில்லாத சொற்ப நேரமே சுகம் அளிக்கின்ற உடலையும் உள்ளத்தையும் உயிரையும் அழிக்கின்ற அவைகளுக்கு உதவாத ஆனால் அவர்களை கவர்கின்ற காரியங்களில் தன்னையே மறந்து போய் விடுகின்றனர்.

அவர்களுக்கு அடிக்கடி எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று நினைவூட்டப் பட வேண்டும். இல்லையேல் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து விடுவார்கள்.

நம்முடைய வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்தி சென்றுக் கொண்டே இருந்தால் ஒரு நாள் நாம் இறைவன் முன்னிலையில் நின்று கொண்டிருந்தோம்.


குரான் ஷரீஃப்

7. ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)

172 வது வாக்கியம்

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: 


“நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, 


அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை நினைவூட்டுவீராக; 


நிச்சயமாக இதனை விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் சொல்லாதிருக்கவும்.

ஆதமுடைய சந்ததியினரான மனிதனுக்கு இறைவன் மிகப் பெரிய பொறுப்புகளை எடுத்துக் காட்டினான், தனக்கே பிரதிநிதியாக்கினான், மனிதன் அந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான். 

அவ்வாறு ஏற்றுக் கொண்ட மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயத்தை இழந்து தான் யார் என்பதை மறந்து தனக்கு தானே தீங்கிழைத்துக் கொண்டான்.

குரான் ஷரீஃப்

33 ஸூரத்துல் அஹ்ஜாப்

72வது வாக்கியம்

நிச்சயமாக (1) வானங்களையும், (2) பூமியையும், (3) மலைகளையும் அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; 


ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன்; 


அதைப் பற்றி அவை அஞ்சின; 


ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்; நிச்சயமாகஅவன் அறியாமையினால் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டான்.

மனிதன் பண்டியை சாப்பிடுவது ஹராம் என்பது குரான் ஷரீஃபின் வாக்கு. உண்மையில் ஹராம் என்றால் புனிதம் என்று அர்த்தம். கஃபதுல்லாஹ்விற்கு ஹரம் ஷரீஃப் என்று ஒரு பெயர் உண்டு. புனிதத்தலம் என்று இதன் பொருள்.

அப்போ பண்டி சாப்பிடுவது என்றால் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மனிதன் புனிதமானவன், அவன் சாப்பிடும் அளவிற்கு பண்றி தகுதி வாய்ந்தது அல்ல எனப்து தான்.

ஆங்கிலத்தில் கூட ஒரு பழமொழி உண்டு... What you eat - What you are என்று - 


இறைவன் ஒட்டுமொத்தமாக அத்தனை மனிதனையும் கண்ணியப்படுத்தியுள்ளான், மேன்மைபடுத்தியுள்ளான்.


குரான் ஷரீஃபின் எந்த இடத்திலும் நாம் வானத்தையோ, பூமியையோ, மலையையோ அல்லது கடலையோ கூட கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று சொன்னதே இல்லை.

குரான் ஷரீஃப்

17 ஸூரத்துல் பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)

70வது வாக்கியம்

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும் கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள பலவற்றையும் விட அவர்களை மேன்மைப் படுத்தினோம்.


மேன்மையாக வாழ வேண்டிய ஒவ்வொரு ஆதமுடைய மகனார்களும் தன் உள்ளத்தில் ஷைத்தான் விதைத்த உலக ஆதாயங்களுக்காக உண்மை நிலையை விற்று விட்டான்.



குரான் ஷரீஃப்

7. ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)

16 - 17 வது வாக்கியம்

(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக விட்டதன் காரணத்தால், அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.


”பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்”


இப்படி வழி கெட்டு போன மனிதனுக்கு வழிகாட்டுதலையும் நேரான பாதையில் சென்ற அருள்பாலிக்கப்பட்டவர்களான் ஷெய்கு மார்களையும் அவ்வப்போது அனுப்பி வைத்த வண்ணமே உள்ளான்.

அவர்கள் மனிதர்கள் அவர்கள் யார் என்பதை ஞாபகப் படுத்தி வைப்பார்கள். அவர்களின் பொறுப்புகளை நினைவூட்டுவார்கள். அவர்கள் மனிதர்களுக்கு வலியாக உதவிக்கரம் நீட்டுவார்கள். இந்த உலகம் முழுக்க பரவியிருக்கும் இறைவனின் அத்தாட்சிகளை அவர்கள் அறிமுகப் படுத்தி வைப்பார்கள்.

மேலே கண்ட கருத்தை அடிப்படையாக வைத்து மௌலானா ரூமி (றஹ்) அவர்கள் ”ஊதுகுழல் இசைக் கருவியின் பாட்டு” என்று ஒரு சூஃபிக் கவிதை வரைந்துள்ளார்கள்.

அதில் காட்டிலே மூங்கில் பிறக்கின்றது. அதை ஒரு குழல் இசைக் கருவியை பார்க்கின்றான். அந்த மூங்கிலில் ஒன்றை வெட்டி தனது இடத்திற்கு கொண்டு வருகிறான்.

தனது சொந்த வீட்டை விட்டு பிரிந்து வந்த ஏக்கத்தில் இருக்கும் ஒரு குழல் இசைக் கருவியில் அழுகை தான் இந்த ”ஊதுகுழல் இசைக் கருவியின் பாட்டு”

இந்த பாட்டை கீழ்கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து மொத்த புத்தகத்தில் உள்ள 47வது பக்கத்தில் படிக்கலாம்:
"Rumi - In the Arms of Beloved" - PDF Download through 4shared: http://www.4shared.com/document/IpbWLujc/Rumi-_In_the_arms_of_the_belov.html

Listen to the song of the reed,

How it wails with the pain of separation:


“Ever since I was taken from my reed bed
My woeful song has caused men and women to weep.
I seek out those whose hearts are torn by separation
For only they understand the pain of this longing.
Whoever is taken away from his homeland
Yearns for the day he will return.
In every gathering, among those who are happy or sad,
I cry with the same lament.
Everyone hears according to his own understanding,
None has searched for the secrets within me.
My secret is found in my lament—
But an eye or ear without light cannot know it. . . .”


The sound of the reed comes from fire, not wind—
What use is one’s life without this fire?
It is the fire of love that brings music to the reed.
It is the ferment of love that gives taste to the wine.
The song of the reed soothes the pain of lost love.
Its melody sweeps the veils from the heart.
Can there be a poison so bitter or a sugar so sweet
As the song of the reed?
To hear the song of the reed
everything you have ever known must be left behind.


*These lines form the opening of Rumi’s most famous work, the Masnavi.




குரான் ஷரீஃப்

17 ஸூரத்துல் பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)

109வது வாக்கியம்

இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் அதிகப்படுத்தும்.


(ஸஜ்தா)

அவசியம் காண வேண்டிய
Documentary Link:
http://www.cultureunplugged.com/documentary/watch-online/filmedia/play/2480/Give-Me-Your-Love

Sufism in Quran Shareef: 
http://cyclewalabanda.blogspot.com/2007/11/sufism-in-quran.html

Thursday, November 10, 2011

அல்-கவ்ஸர் - குரான் ஷரீஃபின் சிறிய அத்தியாயம்

ஸூரத்து அல்-கவ்ஸர்

அல்-கவ்ஸர் - மிகுந்த நன்மைகள்

குரான் ஷரீஃபின் 108வது அத்தியாயம்

மக்காவில் அருளப்பட்டது



1. (நபியே!) நிச்சயமாக, நாம் உமக்கு கவ்ஸரை கொடுத்திருக்கின்றோம்

2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக

3. நிச்சயமாக, உம்முடைய பகைவன் - அவனே சந்ததியற்றவன்
----------------------------------------------------------------

குரான் ஷரீஃபின் சவால் என்று இதற்கு முன்பு நான் ஒரு பதிவிட்டிருந்தேன். இதனை இங்கே படிக்கலாம்:

http://nagoreismail786.blogspot.com/2009/12/blog-post_11.html

சுருக்கமாக:

குரான் ஷரீஃப் என்பது இறைவன் எனக்கு அருளியது - என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய போது, அதனை ஏற்காத குறைஷிகள் ‘இது மனிதனால் எழுதப்பட்டது’ என்ற வாதத்தை முன்வைத்தார்கள்.

அரபி பேசாதவர்களை ‘வாயே இல்லாதவர்கள்’ என்பது போல் ஏளனமாய் பேசியவர்களிடம், குரான் ஷரீஃப் சவாலை முன்வைத்தது - அந்த சவால் இது தான் - நீங்கள் எல்லாருமா சேர்ந்து குரான் ஷரீஃபை போல் ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள் - என்பது தான் அது.

மூன்றே வரிகளை கொண்ட மேலே கண்ட இந்த அத்தியாயத்தை மிஞ்சிய ஒன்றை படைக்க பெரும் கூட்டம் போராடியது. முடிவில் தோல்வியை ஒப்புக் கொண்டது - மா ஹாதா கலாமுல் பஷர் - இது மனிதனால் எழுதப்பட்டது அல்ல - என்று கஃபதுல்லாஹ்விலேயே எழுது கட்டி தொங்க விட்டார்கள் வார்த்தை விஞ்ஞானிகள்.

ஆம், மூன்று வரிதான் இந்த வசனம் - ஆனால் இதை போல் ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி இருப்பதையும், அதை சரியான இடத்தில் பொருத்தி இருப்பதையும், அர்த்த செறிவையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதையும் பார்த்தால் வேறு எந்த கிதாபிலேயும் இதை போல் ஒரு அத்தியாயமேனும் கிடையாது என்றே சொல்ல முடிகிறது.

இந்த அத்தியாயத்தின் ஒலி பெயர்ப்பு:

இன்னா அ அதய்னா கல் கவ்ஸர்


ஃப ஸல்லிலி ரப்பிக வன்ஹர்


இன்ன சானியக ஹுவல் அப்தர்


முதல் வரியில் வரும் ‘கவ்ஸர்’ என்ற வார்த்தை குரான் ஷரீஃபில் வேறு எந்த இடத்திலும் வரவில்லை.

’கவ்ஸர்’ என்றால் ஒரு மொழி பெயர்ப்பில் தடாகம் என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது சரியான அல்லது முழுமையான மொழி பெயர்ப்பு அல்ல.

அரபியில் ’காஃப், ஸெ, ரெ’ என்ற மூல வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை பிறந்திருக்கிறது.

இந்த மூன்று எழுத்துக்களை பயன்படுத்தி வரும்....

’கஸ்ரா’ என்ற அரபி வார்த்தைக்கு ’மிகுதியான’ என்று அர்த்தம்

‘கஸீர்” என்ற அரபி வார்த்தைக்கு ’இன்னும் மிகுதியான’ என்று அர்த்தம். ஆனாலும் இந்த வார்த்தைக்கு இன்னும் மிகுதியான எது? என்று கேட்டால் - நல்லது, கெட்டது இரண்டையும் குறிக்கும்.

ஆனால் ‘கவ்ஸர்’ என்ற வார்த்தை அளவிட முடியாத, கணிக்க முடியாத, முடிவுறாத, தொடர்ச்சியான, எல்லையில்லாத என்று அவ்வளவு வார்த்தைகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.

அரபி வார்த்தைகள் பூராவையும் ஸ்கேன் பண்ணி பார்த்தாலும் ‘அளவிட முடியாத’ என்ற இந்த வார்த்தைக்கு ஈடாக ஒரு வார்த்தை கிடைக்காது.

இந்த வார்த்தை குரான் ஷரீஃபில் வேறு எந்த இடத்திலும் வராதது எதை குறிக்கிறது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது போல் வேறு யாருக்குமே வழங்கப்படவில்லை என்பதும் விளங்க முடிகிறது.

அதுவும் தவிர, ’கவ்ஸர்’ என்ற அளவிட முடியாத நன்மைகளை மட்டும் தான் குறிக்குமே தவிர இந்த வார்த்தைக்கு தீமை என்ற பொருள் எந்த விதத்திலும் பொருள்படாது.

இந்த வார்த்தை அமைந்திருக்கும் இடம் பிரம்மிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

அப்படி எங்கே அமைந்திருக்கிறது..?

முதல் வரியின் இறுதியில்..

அதனால் என்ன..?

இதன் பொருள்... ஏராளமான நன்மைகளை வழங்கியிருக்கிறான்... ஆனால் அது இன்னது மட்டும் தான் என்ற எல்லைகள் எல்லாம் கிடையாது...

சிலர் சொல்கிறார்கள், “பெருமானாருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை..’ என்று

சிலர் சொல்கிறார்கள், “பெருமானாருக்கு இன்ன இன்ன கட்டத்தில் மட்டும் அல்லது பதிவு செய்து வைக்கப்பட்டவை மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது..” என்று

- இந்த இரண்டு கூட்டத்தாரின் வாதத்தை உடைத்தெறிகிறது இந்த ‘கவ்ஸர்’ எனும் வார்த்தை பொருத்தப்பட்டிருக்கும் இடம்.

இதை எப்படி இறைவன் சொல்கிறான் என்பதை கவனியுங்கள்...

நிச்சயமாக, 

... இது இந்த அத்தியாயத்தின் முதல் வார்த்தை... அதாவது இந்த வார்த்தையில் ஒரு அழுத்தம்... ஒரு உண்மை...

நாம்


இங்கே ‘நாம்’ என்று இறைவன் தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்கிறான்..

இறைவன் ஒருவன் என்றால் ‘நான்’ என்று தானே வரவேண்டும்.. அதனால இறைவன் பலவன் தான் ஆதாரம் கிடைத்து விட்டது என்று கூப்பாடு போட்டு விடாதீர்கள் இலக்கியத்தை மருந்துக்கும் அல்ல மருசுக்கு கூட (நாகூர் பாஷையில் சுவை) தொட்டு பார்க்காதவர்களே..!

‘நாம்’ என்றால் ஒரு கம்பீரம்.. ஒரு மெஜஸ்டிக்...

அதாவது இப்படி அர்த்தம் கொள்ள வேண்டும்...

படைத்தவனாகிய, எதையும் செய்ய ஆற்றலுடையவனான நான் - இது தான் ‘நாம்’ என்று அர்த்தமாகிறது

வழங்கியிருக்கின்றோம்

இங்கே ’வழங்கியிருக்கின்றோம்’ என்ற வார்த்தை இறைவனிடமிருந்து பெருமானாருக்கு வழங்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்தி விட்டது.

எதை வழங்கியிருக்கின்றோம்..?

கவ்ஸரை - மிகுதியான நனமைகளை

இந்த வார்த்தைக்கு பிறகு எந்த வார்த்தையும் குறிப்பிடாதது எதை குறிப்பிடுகிறது என்றால் ‘அனைத்தையும்’ என்பதை தான்.

சிலர் சொல்கிறார்கள் அல்லவா.. ‘இன்ன இன்ன கட்டத்துல மட்டும் இன்ன இன்னத மட்டும் தான் வழங்கியிருக்கின்றான்..’ என்று - அது தவறு - இந்த வசனம் - அதை யாரு இவர் சொல்வதற்கு..? - எல்லா அதிகாரமும் உடைய நான் உமக்கு எல்லையில்லாத நன்மைகளை வழங்கியிருக்கின்றேன். அவ்வளவு தான்.. இன்னது தான் என்றெல்லாம் வரையறுத்து கூற முடியாது.

ஆனால் மொழிபெயர்ப்பாளர்களில் உள்ள அறிஞர்கள் இதனை ‘சொர்க்கத்தில் அமைக்கப்பட்ட தடாகம்’ என்று மொழி பெயர்த்துள்ளனர்.

அதாவது அந்த நன்மை ‘தடாகம்’ என்பது தான் என்ற அர்த்தத்தில்.

ஆனால் ‘கவ்ஸர்’ என்றால் ‘தடாகம்’ என்ற அர்த்தம் வராது. அல்லது இது மட்டுமே என்று உறுதியாக கூறிவிட முடியாது.

அடுத்தது இரண்டாவது வரி..

எனவே

அதாவது இறைவனிடமிருந்து பெருமானாருக்கு குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது என்பது நிச்சயமான உண்மை தான் ஆனால் இந்த நன்மைகள் யாவற்றையும் எல்லாவற்றையும் சும்மாவெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது.

எந்த உலகத்துலயும் எதுவும் ஒண்ணும் செய்யாம எல்லாம் கிடைக்காது.

அதனால் தான் ‘அதனால..’ என்ற பொருள்படும் ‘எனவே..’ என்று வருகிறது..

அதாவது ‘சும்மா’ கிடைக்காதுல்ல...

என்ன செய்ய வேண்டும்..? என்பதை சஜ்ஜஸ்ட் செய்கிறது.

தொழுகை செய்யுங்கள்


வணங்குங்கள்.. நன்றி செலுத்துங்கள்...

யாரை?

உம்முடைய இறைவனை


முதலில் நான் உமக்கு மிகுந்த நன்மைகளை வழங்கியிருக்கின்றோம் என்ற போது ‘நாம் வழங்கியிருக்கின்றோம்’ என்று அதிகாரமாக பன்மையில் கூறி விட்டு ணங்குங்கள்என்று சொல்லும் போது பாருங்கள், ‘உம்முடைய இறைவனை..’ என்று ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறதை.

ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் From ’First Person Plural’ to ’Second Person Masculine Singular Possessive Pronoun’ க்கு என்று Grammatical Shift ஆகியிருப்பதை கவனியுங்கள்.


உமக்கு வழங்கியிருக்கின்றோம்... அது என்னால் முடியும்..


அதுக்காக.. 


நீர் என்ன செய்ய வேண்டும்?


நெருங்கி வரவேண்டும்... 


தொழுகை முஃமீன்களுக்கு மிஹ்ராஜ் தானே...?


மிஹ்ராஜ் என்பது இறை நெருக்கம் தானே...


அது மட்டுமல்ல.. தொழுகையோடு நிறுத்திக் கொள்ள முடியுமா?


அதோடு குர்பானியும் கொடுப்பீராக


தியாகமும் செய்ய வேண்டும்.. 


உதாரணமாக ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்..


இந்த வார்த்தையை இதற்கு முந்தைய அத்தியாயமான ஸூரத்துல் மாஊனையும் (அற்பப் பொருள்) ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.


http://nagoreismail786.blogspot.com/search/label/107%20%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D

எந்த அளவுக்கு உலோபியாக இருக்கக் கூடாது என்பதை அந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனமும் ஏழாவது வசனமும் தெளிவாக சொல்லி விடுகிறது.

மூன்றாவது வசனத்தில் - ஏழைகளுக்கு உணவளிப்பதை அவன் தூண்டுவதில்லை என்று அருமையாக வரும்... அதாவது இவனும் உணவளிக்க மாட்டான்... மத்தவங்க ஏழைகளுக்கு உணவு வழங்குவதை ஆதரிக்கவும் மாட்டான் -

ஏழாவது வசனத்தில் - அற்பமான பொருளை கூட மத்தவங்களுக்கு கொடுக்க விட மாட்டான் - ‘இதை ஏங்க அவருக்கு போய் கொடுக்குறீங்க..?’ என்று கெடுத்து வுடுவான்.

அதே மாதிரி இந்த வசனத்தில் வரும் தொழுகை செய்யுங்கள் என்பதையும் ‘மாஊன்’ அத்தியாயத்தோடு ஒப்பிட்டு பார்த்து எப்படியெல்லாம் தொழ கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து மூன்றாவது வரி...

நிச்சயமாக

மறுபடியும் முதல் வரியில் வந்தது போல் எதையோ உறுதிபடுத்துகிறது.. நிச்சயமாக.. துளி கூட மாற்றமில்லாமல்...

உம்முடைய பகைவன்

மூன்று வரிகளிலும் ‘க’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது

அதாவது ‘உம்முடைய’ என்று பொருள்படுகிறது.

இது எதற்காக என்றால் இந்த வசனம் யாரிடம் பேசுகிறது என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்

அது யாரென்றால்..?

பெருமானார் (ஸல்) அவர்களிடம் தான் அவர்கள் தான் டார்கெட் ஆடியன்ஸ்.

பகைவனுக்கு நிச்சயமாக என்ன ஆகிறது என்று கேட்டால்...?

அவன்

இன்னும் தெளிவாக பெருமானார் (ஸல்) அவர்களுக்கு யார் பகைவராக இருக்கிறார்களோ குறிப்பாக அவர்கள் தான்..

ஏன் அவர்களுக்கு.. என்ன..?

அவர்கள் தான்

சந்ததியற்றவர்கள்


இதற்கு பிறகு வார்த்தையே கிடையாது.. சந்ததியற்றவருக்கு எப்படி ஒரு தலைமுறை இருக்காதோ அதே போல..

தவிர, சந்ததியற்றவர்கள் என்றால் இறந்த பிறகு அவர்களை நினைத்து பார்த்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய கூட ஆளிருக்காது. இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு வேறு காரணங்களும் இல்லாமல் இல்லை.

உதாரணமாக, பெருமானாரின் ஆண் குழந்தையின் மறைவிற்கு பிறகு எதிரிகளில் ஒருவர் ‘அப்தர்’ என்று இந்த வார்த்தையை தான் பயன்படுத்தி ‘வாரிசில்லாதவர்’ என்று கிண்டல் செய்தார்.
-------------------------
மேலே சொன்னவை மட்டுமல்லாது படிக்கும் போது வரும் ஓசை, ரைம்ஸ்

உதாரணமாக...

கவ்ஸர்

வன்ஹர்

அப்தர்

இப்படி இன்னும் சொல்லப்படாத செய்திகள் எவ்வளவோ இருக்கிறது இந்த அத்தியாயத்தில்.

ஒரு ஒப்பற்ற அற்புதமாய் குரான் ஷரீஃப் விளங்குகிறது.

Wednesday, November 09, 2011

Sharing Session - 2

Sharing Session - 1


எந்த ஒரு கருத்திலும் பல மாறுபட்ட வேறுபாடுகள் இருப்பது இயல்பானது தான்.


ஒரு சாரார், பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதை பார்த்து விட்டு, இது பெண்களின் ஒரு இன்ஃபீரியர் ஸ்டேடஸாக உள்ளது என்பார்கள்.


ஒரு சாரார், பெண்கள் அவ்வாறு உடை அணிவதை சோசியல் ஆர்டருக்கு எந்த திரட்டும் இல்லை என்பதோடு அது மாடரேட் பிஹேவியரை ஊக்குவிக்கிறது என்பார்கள்.


நான் இரண்டாவது சாராரில் ஒருவன் என்பதை எழுத வேண்டியதில்லை.


கீழ் கண்ட வீடியோ எனக்கு பிடித்திருந்தது...


ஸ்கார்ஃப் அணிந்தால் அடங்கி ஒடுங்கி இருக்க சொல்வதாக அர்த்தமில்லை.. 


A true brave muslim woman in New York

Tuesday, November 08, 2011

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசை பாடல்கள் - 2

இஸ்லாம் எனக்கு அமைதியை தந்தது - ஏ ஆர் ரஹ்மான்

http://rahmaniac.wordpress.com/2008/05/27/islam-gives-me-peace-a-r-rahman/
-------------------------------------------------------
படம்: அதா
ஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2008/06/meherbaan-from-ada-lyrics-and.html


-------------------------------
படம்: புளு
ஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2009/09/blue-2009-lyrics-and-translation-bhoola.html


-------------------------------------
படம்: டெல்லி - 6




பெரும்பாலான சூஃபி பாடல்களில் ‘மவ்லா’ என்ற பதம் பயன் படுத்தப்பட்டிருக்கும்.

இவ்வார்த்தை அரபி எழுத்தான் ‘வாவ் - லாம் - யெ (W - L - Y)' என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். 


இதே மூல வார்த்தை குரான் ஷரீஃபில் பல்வேறு வார்த்தைகளாக மாறி பல இடங்களில் வந்திருக்கிறது. ஒரு குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாவது, இந்த மூல வார்த்தையை பயன்படுத்தி பெயர்ச்சொல்லாக 124 தடவையும் வினைச்சொல்லாக 112 தடவையும் வந்திருக்கிறதாம்.


வலா, வலாயத், விலாயத், அவ்லா, வலி - இப்படியாக மேற்சொன்ன மூல எழுத்திலிருந்து பிறந்த வார்த்தைகள் வருகிறது. இதன் தோராயமான அர்த்தமானது தலைவர், முதன்மையானவர், காப்பவர், நேசர் (நண்பர்), உதவியாளர், மேலான உரிமையுள்ளவர் - என்பதே யாகும்.


குரான் ஷரீஃபின் 5 வது அத்தியாயமான சூரத்துல் மாயிதாவில் (உணவு மறவை) 55 வது வசனமும் 56 வது வசனமும் இந்த மூல வார்த்தையிலிருந்து பிறந்த ஒரு வார்த்தையை எடுத்து பயன்படுத்தி நமக்கு யார் யாரெல்லாம் ’வலி’யாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.


”நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள் (வலி): அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர் இறை நம்பிக்கை கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ஏழைக்குறிய வரியையும் செலுத்தி பணிவுடன் (humbled) நடந்து கொள்கிறார்களோ அவர்கள் தாம்"


”அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இறை நம்பிக்கையாளர்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஹிஸ்பல்லாஹ்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்”


இந்த வசனத்தை சூஃபியாக்கள் அணுகும் விதம் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டது. 


சூஃபியாக்களின் புரிதலின்படி மவ்லா என்றால் அது ஒரு சங்கிலி தொடர் - மவ்லா என்றால் இறைவன் - மவ்லா என்றால் அவனது தூதுவர் (ஸல்) அவர்கள் - மவ்லா என்றால் இறைநம்பிக்கையாளர்கள் அதாவது பாத்திஹா சூராவில் வருவது போல் அருள் பாலிக்கப்பட்டவர்கள், ஆன்மிக வழிகாட்டிகள்.


கதிர்கும் எனும் இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘மவ்லா’ எனும் பதத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற ஹதீது ஒன்றை சொன்னார்கள்..


http://nagoreismail786.blogspot.com/2011/06/blog-post_12.html

”என்னை எவர்கள் மவ்லாவாக ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மவ்லாவாக அலி (றலி) அவர்கள் இருக்கிறார்கள்”

பெரும்பாலான சூஃபி வழியின் ஆரம்ப முடிச்சு அலி (றலி) அவர்களிடமிருந்து தொடங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது.

இறைபாதையில் சென்றவர்களை தலைவர்களாக, அவர்களோடு நெருங்கியிருக்கக் கூடியவர்களாக, அவர்களை நேசிக்கக் கூடியவர்களாகவும்  ஆக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

10: ஸூரத்து யூனுஸ் (நபி)
வசனம்: 30

There will every soul become acquainted with what it sent before, and they will be brought back to Allah, their Mawla....
--------------------------------------------------------------


Arziyan saari mein, chehre pe likh ke laaya hoon
Tumse kya maangoon mein, Tum khud hi samajh lo.

என்னுடைய 
அதீத ஆவலினால்
உன்னிடம் வந்துள்ளேன்

என்னுடைய தேவை
என் முகத்திலேயே
எழுதப்பட்டுள்ளது


இன்னும் 
வாய்திறந்து
வசனம் படித்து
நான் என்ன
கேட்பது?


உனக்கு 
தெரியாதது
என்று
எதுவும் இல்லை

Ya Maula..
Maula Maula
Mere Maula..
Maulaaaaa...



ஓ அனைத்திற்கும் முதன்மையானவனே!
தலைவனே தலைவனே!
என்னுடைய ஆன்மீக வழிகாட்டியே!
எனது நேசத்திற்குறியவரே!

Darare Darare Hai Mathey Pe Maula

Marammat Muqaddar ki kardo Maula
Mere Maula….

நல்லது
கெட்டது
முன் தலையில்
முன்மொழியப்பட்டுள்ளதே


முதன்மையானவனே!


என்னால் 
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!

Tere dar pe jhuka hun mitha hun Bana hun 
Marammat Muqaddar ki kardo Maula 

உனது
கருணை மிகு
பள்ளிவாசலில்
நான்
சிரம் தாழ்கிறேன்
நான்
என்னையே அழித்துகொள்கிறேன்
நான்
புதுபிறப்பெய்துகிறேன்

என்னால் 
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!

Jo bhi Tere Dar aaya..Jhukne Jo Sar aaya
Mastiyan Peeye Sabko..Jhoomta Nazar aaya..


Pyaas Leke Aaya tha..Dariya Woh bhar Laya..
Noor ki Baarish Main bheegta sa tar aaya..

உன்
கருணைமிகு
வாசல் வரும்
யாரும்
உன்னிடம்
சிரம் தாழ்த்தி
முழுமையாக
உன்னிடம்
ஒப்படைக்கவே வருகின்றனர்


பேருண்மையை 
கண்டுகொண்டவர்
பரவசத்தில்
மகிழ்ந்து
ஆடுகின்றனர்


தாகத்தோடு 
வருகின்றவர்
ஓடுகின்ற நதியை
பெற்று திரும்புகின்றனர்


நூரெனும் 
இறைஒளி
பொழியும் 
மழைநீரில்
நீந்தியபடி
செல்கின்றனர்

Ooo ek khushboo aati thi
Main Bhatkta Jaata Tha
Reshmi Si Maaya Thi
Aur Mein Takta Jaata Tha


Jab Teri Gali Aayaa, 

Sach Kabhi Nazar Aayaa
Mujhme Hi woh Khushboo Thi, 
Jise Tune ilwaaya

நறுமணம்
வருகிறது -
அதன் தேடலில்
தொலைகிறேன்
நான்


சிலிர்க்கும்
மாயங்கள் -
அதன் மர்மங்களில்
புதைகின்றேன்
நான்


(அதன் உட்பொருள் விளங்காமல் தவிக்கின்றேன்)


எப்பொழுது
உனது வாசலுக்கு
வந்தேனோ
உண்மைகள்
யாவும்
விளங்கிற்று


நறுமணம்
என்னுடையது 
தான் -
அதை
எனக்கு
அறிமுகப் படுத்தியது
நீ தான்


Tootke Bhikharna Mujhko Zaroor Aata hai 
Varna Ibaadatwaala Shaur Aata Hai
Sajde Mein Rehne Do Ab Kahin Na Jaaongaa
Ab Jo Tumne Thukraaya To Sawar Na Paaongaa


உடைப்பதுவும்
காயப்படுத்துவதும்
எனக்கு
கைவந்த
கலையாகிறது


உன்னை
உளப்பூர்வமாக
வணங்குவது
தான்
வர மறுக்கிறது


உனது 
கருணை பார்வையின்
கீழ் நான் 
இருக்க வேண்டுகிறேன்


வேறு இடம்
எங்கும்
நான்
செல்லேன்


நீ
என்னை
மறுத்து விட்டால்
நான்
பிழைக்க 
மாட்டேன்


Sar Udhaake Meine To Kitni Khwahishein Ki Thi

Kitne Khwaab Dekhe The Kitni Koshishein Ki Thi
Jab Tu Roobaroo Aayaa…..
Jab Tu Roobaroo Aayaa, Nazar Na Mila Paayaa
Sar Jhukaa Ke Ek Pal Mein…
Sar Jhukaa Ke Ek Pal Mein, Maine Kyaa Nahin Paaya
Maula Maula Maulaa Mere Maula..


என்னுடைய 
தேவைகளை
வரிசைப்படுத்த
எனக்கு எந்த 
தயக்கமும்
ஏற்படவில்லை


கணக்குவழக்கில்லாத
கனவுகள்
காணவும்
எனக்கு எந்த
கலைப்பும்
ஏற்படவில்லை


ஆனால்
நீ
நேருக்கு நேராக
என்னை
சந்திக்கும் போது
நான்
அந்த
பார்வையின் சந்திப்பை
தாங்க முடியாமல்
வெட்கி 
அவமானத்தால்
தலை குனிகிறேன்


எனினும்,
விலைமதிக்க முடியாத
அந்த கனத்தில்
தயார் செய்து
வைத்திருந்த 
தேவைகளை
தூக்கி எறிந்து விட்டு
உன்னிடம் 
தலை குனிந்து
முழுவதுமாய்
ஒப்படைக்கிறேன்


இனி
நான் 
தேடுவதற்கும்
வேண்டுவதற்கும்
எதுவுமில்லை
உனது
அன்பை 
பெற்ற பிறகு
எனக்கு
அனைத்தும்
கிடைத்து விட்டது


என் முதன்மையானவனே!
என் நேசத்திற்குறியவனே!!

Mora Piya Ghar Aayaa, Mora Piya Ghar Ayaa
Maula Maula Maulaa Mere Maula…
Maula Maula Maulaa Mere Maula…



எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்


எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்


எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே


எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே