(Sister of Islam "Hooriya Rafeeq" from Pakistan)
மவ்லித், மீலாதுந்நபி இன்றைக்கு ஒரு விவாததற்குறிய பொருளாகி விட்டது
‘நபி வழி நடக்காத இவர்களுக்கு விழா என்ன ஒரு கேடு..”
“நபி பிறந்த தினமும் மறைந்த தினமும் ஒரே நாள் தான். இவர்கள் பிறந்ததற்காக கொண்டாடுவது முரணாக இருக்கிறது”
”கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை”
“எந்த நபியிடத்திலும் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று குரானில் வரும் போது இவர்கள் இந்த நபிக்கு மட்டும் எப்படி விழா எடுக்கலாம்”
“இது பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத ஒரு புதுமை - பித் அத்”
- இப்படியாக இவர்களின் பிறந்த தினத்திலிருந்து இதே பல்லவியை தான் (”ஷிர்க்”கை விட்டுட்டேனே - இது ஷிர்க்) நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி அறியாத நிலையிலிருந்து கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
இவர்கள் எந்த காரணம் கொண்டும் இந்த மாதத்தை நபி பிறந்த தினத்தை அனுசரிக்காமல் போகட்டும்.. அதை பற்றி தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை..
ஆனால் ‘மவ்லித்’ என்று வரும் போது எங்களின் அதாவது இதனை அணுசரிக்கும் என் போன்றோரின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று விளக்குவதில் வார்த்தைகள் தட்டுபாடு ஏற்படுவது உண்டு.
உணர்வுகளை எந்த வார்த்தையில் சொல்லி அடைத்து போட முடியும்?
மீலாத் என்றமுஸ்லீம்கள் கூடும் ஒரு நிகழ்வை குறிக்கும் வார்த்தையை புரிந்து கொள்வதற்கு இதையொத்த வேறு வார்த்தைகளை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முற்படலாம்.
பள்ளிகூடத்தில் பரீட்சைக்கு படிக்கும் போது மாணவர்கள் குரூப்பாக சேர்ந்து படிப்பதுண்டு. (படிக்காமல் குறட்டை விட்டு பரீட்சையில் கோட்டையும் விடுவதுமுண்டு - அது வேறு விஷயம்) குரூப் ஸடடி என்று சொல்வோம்.
இதையே முஸ்லீம்கள் கூடி இஸ்லாம் சார்ந்த செய்திகளை பேசினால் ’மஜ்லிஸ்’ அல்லது ‘ஹலகா’ என்று சொல்வதுண்டு.
மீலாத் என்பதன் விளக்கம் அதன் பெயரில் இல்லை... இந்த தினத்தை ஒரு reference point ஆக வைத்து கூடுகின்ற மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது, இந்த தினத்தில் கலந்து கொள்பவர்களின் உணர்வுகள் எங்கனம் இருக்கின்றது என்பதில் தான் இருக்கிறது.
இறைவன் வந்து உங்கள் செயல்களையோ அல்லது சொற்களையோ பார்ப்பதில்லை. அவன் உங்களின் உள்ளங்களை தான் பார்க்கின்றான்.
நாங்கள் ஹிஜ்ரி ஆண்டை ஒரு ஆண்டு கனக்காக நபிகள் நாயகம் அனுசரிக்காத போதும் ஏற்றுக் கொண்டு தானிருக்கிறோம்.
இதனால் அவர்களுக்கு மாறு செய்கிறோம், இல்லாத புதுமையை செய்து விட்டோம் என்றும் அர்த்தமாகாது. இது ஒன்றும் வெறுக்கத்தக்கதோ மார்க்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் செயலோ அல்ல.
மீலாதும் இதே போல் தான் எங்களுக்கு - நாங்கள் ஒன்றும் அருவருக்கத்தக்க காரியங்களை செய்யவில்லை. மற்ற நாட்களில் கூடாமல் போவதற்கு எங்களுக்கு ஏதேதோ உலக excuseகள் உள்ளன.
இந்த நாளில் நாங்கள் இத்தகைய excuseகளை தூக்கி வைத்து விட்டு ஒன்று கூடுகிறோம்.
உவைஸ் கர்னி (றலி) என்பவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் பல் உடைந்து விட்டது என்று கேள்விபட்டவுடன் எந்த பல் என்று தெரியாததால் தனது அத்தனை பல்லையும் உடைத்து கொண்டார்களாம்.
இது போன்ற அன்பு எல்லாம் சொல்லி கொடுத்தெல்லாம் வராது. கிதாபுல படிச்சும் வராது. அல்லாஹ் எந்த உள்ளத்தை பார்ப்பதாக சொல்கிறானோ அந்த உள்ளத்தில் கருவுற்று பிறந்து வளரனும். அப்படி வருவதற்கும் இறைவனின் அருள் வேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீன நகருக்கு சென்று ஆறு ஆண்டுகள் கழித்து மக்கா நோக்கி திரும்புகிறார்கள்.
அவ்வாறு ஆயிரத்து நானூறு பேருடன் வந்த போது ஹுதைபியா என்ற இடத்தில் இறைநாட்டப்படிகூடாரமடித்து தங்கினார்கள் என்பது நமக்கு தெரிந்த செய்தி தான்.
அப்போது மக்கத்துகுறைஷி தரப்புகளிடமிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் உள்ளே வர அனுமதிக்க கூடாது என்று சொல்லி திருப்பி அனுப்ப பல பேர் வந்து பேசினார்கள். அதில் பேசிவிட்டு சென்ற ஒருவர் குறைஷிகளிடம் திரும்பி பெருமானார் (ஸல்) அவர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த அன்பை இவ்வாறு விளக்கினார்...
“கண்டேன், கண்டேன், ரோமானிய மன்னாதி மன்னன் கெய்ஸரின் அரசவையையும் கண்டேன்.
கண்டேன், கண்டேன் பாரசீகப் பேரரசன் கிஸ்ராவின் பாராளுமன்றத்தையும் கண்டேஎன்
அங்கு கூட அவர்களின் ஏவலர்கள் கூட இரு கை ஒடுக்கி வாயைக் கையில் புகைத்து நின்ற காட்சியை காணவில்லை
முஹம்மதின் (ஸல்) முன்னிலையில் தான் நான் அக்காட்சிகளைக் கண்டேன்..
- என்று சொல்லி விட்டு தொடர்கிறார்...
“அவர்களின் உமிழ் நீரைக் கையிலேந்தி உடலிலே பூசிக்கொள்பவர் எத்தனை பேர்?
அவர்களின் உளு செய்யும் நீர் தரையிலே துளிகூட விழாது கையிலே தாங்கித் தங்களின் உடலிலே தடவிக் கொள்பவர் எத்தனை பேர்? என்று வாயார்ந்தார் அவர்.”
இந்த பிரியமெல்லாம் கிதாபை பார்த்து தான் வருமா? இல்லை பெருமானார் (சல்) அவர்கள் தான் அப்படி செய்ய சொல்லி தான் வந்ததா?
அருமை சஹாபாக்களை பற்றி “அண்ணன் எப்போ சாவான்... திண்ணை எப்போ காலியாகும்..” என்று இப்லீஸை விட அறிவு கேள்விகள் தொடுக்கும் இப்லீஸின் அண்ணன்மார்களுக்கும் தம்பிமார்களுக்கும் அன்பு பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. புரிய வைக்க முற்படுவதிலும் அர்த்தமில்லை..
மீலாது என்பது ‘ஹல்கா”வை போல் கூட அல்ல... உதாரணமாக ஹல்காவுக்கு தேவைப்படுவது போல் pre-requisite இதற்கு தேவை இல்லை.. குறிப்பிட்ட படிப்பு, குறிப்பிட்ட அறிவு இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை.
மீலாதில் கலந்து கொள்ள ஒரே ஒரு Criteria மட்டுமே உண்டு... ஒரே ஒரு அடிப்படை காரணம் மட்டுமே உண்டு.. அது பெருமானார் (சல்) அவர்களின் மீதுள்ள அளவு கடந்த அன்பு மட்டுமே... அன்பு மட்டுமே.. அன்பு மட்டுமே.. (ஆதாரம் அல்ல)
பின் குறிப்பு:
நாகூர் தர்ஹாவில் நடந்த மீலாது விழா குரான் ஷரீஃப் ஸூரா மனப்பாடமாக கிராஅத்தாக ஓதும் போட்டியில் எனது தங்கையின் மகனார் ஷகீல் அஹ்மதுக்கு சிறப்பு பரிசு கிடைத்துள்ளது... அல்ஹம்துலில்லாஹ்...
இணைப்பு:
http://www.mysticsaint.info/2012/01/message-rabiul-awwal-milad-nabi.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+mysticsaint+%28Inspirations+and+Creative+Thoughts%29