Thursday, April 26, 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் - 4


பொறுமையாளன் - அஸ்-ஸபூர் - The Patient One

குரான் ஷரீஃப்

அத்தியாயம்: ஸூரத்து அன்ஃபால் (8) - போரில் கிடைத்த வெற்றி பொருள்கள்

வசனம்: 46

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.



மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் மஸ்னவியிலிருந்து:

நீங்கள் முழுக்க முழுக்க குழப்பத்திலும் துன்பத்திலும் சிக்கி இருந்தால்,
பொறுமையை கையாளுங்கள் - பொறுமை தான் இன்பங்களின் திறவுகோல்



Credit:
http://sufism.org/foundations/ninety-nine-names/as-sabur-the-patient-one-2

குரான் ஷரீஃப் தமிழில்:
http://www.tamililquran.com/qurandisp.php?start=8

Image Credit:
http://www.madaniwallpaper.com/view-99_as_sabur_6-1024x768.html

Audio chants of  99 asmaul husna:
http://wahiduddin.net/words/99_chants/99_Names_chanted_Seemi_Ghazi.mp3   

வேலையிட பாதுகாப்பும் ஆரோக்கியமும் - பகுதி 2

அப்படி செய்வதற்கு அதாவது hazard ஐ நீக்குவதற்கு அல்லது riskஐ குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பாதுகாப்பில் அடங்கும்.


உதாரணமாக, ....(தொடரும்..)
------------------------------------------------------
உதாரணமாக 


வேலையிட ஆபத்து என்பது கடினமான இயந்திரங்களில் கட்டுமான பணியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமல்ல ஹெல்மெட்டே போடாமல் டை கட்டிக் கொண்டு ஏஸியின் கீழே உட்கார்ந்து கொண்டு எந்த ஒரு பாரத்தையும் தூக்கி வெயிலையே பார்க்காதவர்களுக்கு கூட வரலாம்..


எப்படியெனில்.. தொடர்ச்சியாக கணினியை பார்த்துக் கொண்டே இருப்பதை எடுத்துக் கொண்டால்  கண் வலி, கழுத்து வலி, கை வலி எல்லாம் வந்து தொலைக்கும். இப்படி வரும் ஆபத்துகளை ergonomic hazards என்பார்கள்.


(hazardsஐ பல வகையாக classify பண்ணலாம். physical hazards (e.g. noise, heat, vibration), chemical hazards (toxic, flammable, explosive, acid, alkali), electric hazards (damaged cable, damage socket, electrical overload), mechanical hazards (unguarded rotary parts of the machine), biological hazards (bacteria, virus causes various infectious diseases such as SARS,தற்போது பயமுறுத்தி கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல்) அந்த வகையில் நாம் மேலே கணினியினால் வரும் இந்த பாதிப்புக்கு ergonomic hazard என்று பெயர்)


இந்த பல வலிகளை வராமல் தடுக்க ஒரு வழி அல்ல பல வழிகள் உள்ளது. இந்த வழிகளை கட்டுபடுத்தும் வரிசைமுறை என்று சொல்வார்கள், அதாவது ஆங்கிலத்தில் Hierarchy of Controls என்று சொல்வார்கள்.


இந்த வரிசையில் முதலாவதாக வருவது “நீக்குதல்” (Elimination) - அதாவது எது ஆபத்து ஏற்படுத்துகிறதோ அதனை முற்றிலுமாக நீக்கி விடுதல்.


அதாவது கணினியை அலுவலகத்திலிருந்து அகற்றி விடுவது. (இப்படி சொன்னால் சண்டைக்கு எல்லாம் வரக் கூடாது)


பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் அப்படி நீக்கி விடுவது ஒன்றும் தவறல்ல.. உதாரணமாக, ஆஸ்பெஸ்டாஸ் என்று ஒரு கனிமம் உள்ளது. அது fire proof க்காக கூரைகளில் எல்லாம் பயன்படுத்தப் பட்டு வந்தது. 


ஆனால் இது சிங்கப்பூரில் முற்றிலுமாக தடை செய்து விட்டார்கள். ஏன் என்றால் இது நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். 


அதை நீக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் hierarchy of control இருக்கும் ஒரு வழிகளில் கணினியை நீக்குவது தான் முதலாவது வரிசையில் உள்ளது.


இது சரியாக வராது அதாவது reasonably practicable இல்லை என்றால் இரண்டாவது வரிசையில் இருக்கும் கட்டுபடுத்தும் முறைக்கு செல்லலாம்.


(குறிப்பு: 
“reasonably practicable” என்பது சிங்கப்பூர் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அழகான அர்த்தமுள்ள வார்த்தை.. 


அதாவது வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலையினால் ஆபத்து காத்து இருக்கிறது. அந்த வேலையின் போது ஏற்படும் ஆபத்துகளினால் ஏற்படும் விளைவுகளை தடுக்க முதலாளி reasonably practicable நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


reasonably - can afford to do it, செலவு செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்


practicable - capable of being done, நடைமுறைக்கு சாத்தியமானதாக இருத்தல் வேண்டும்)


அப்படி இரண்டாவது வரிசையில் இருப்பது "substitute" மாற்றுதல் என்பதாகும். இதை ஒரு உதாரணம் மூலமாக சொல்வதென்றால் வாள் போய் கத்தி வந்தது என்பார்கள் அல்லவா? அதுவே தான். ஆஸ்பெஸ்டாஸுக்கு பதிலாக கேல்சியம் சிலிகேட் பயன்படுத்துவதை இது குறிக்கும். ஆஸ்பெஸ்டாஸ் என்ன தேவைக்கு பயன்படுத்தினோமோ அந்த தேவையை இது நிறைவேற்றி விடும், அதே சமயத்தில் ஆஸ்பெஸ்டாஸால் வரும் பேராபத்து இதில் இல்லை.


கணினிக்கு பதிலாக வேறொரு வேலைக்கு வேறொரு வழிமுறையை கையாள்வது. இதற்கும் (reasonably practicable) சாத்தியமில்லை என்றால் மூன்றாவது வரிசைக்கு தாவ வேண்டியது தான்.


மூன்றாவது வரிசையில் இருப்பது "Engineering Controls" - பொறியியல் கட்டுப்பாடுகள்


glare, contrast இவைகளை சரி செய்தால் நம்ப முடியாத அளவிற்கு கண் வலியை குறைத்து விடும். நல்ல வெளிச்சம் இருத்தல் வேண்டும். கணினி அமைந்திருக்கும் இடம் உங்கள் கண்களுக்கு ஏற்றவாறு அமைத்தல் வேண்டும். 


இந்த தளத்திற்கு சென்று விட்டு வாருங்கள்:  http://ergonomics.about.com/od/office/ss/computer_setup.htm


இதற்கு அடுத்த வரிசையில் வருவது management/administrative controls - நிர்வாக நடவடிக்கைகள்


20 நிமிடத்திற்கு ஒரு தரம் கணினி திரையிலிருந்து கண்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும். தூரத்தில் உள்ளதை அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும்.


கட்டக் கடைசியாக வருவது "Personal Protective Equipment" - சுய பாதுகாப்பு சாதனங்கள்


Anti-radiation வகை கண்ணாடிகளை அணிந்து கொள்வதை இது குறிக்கும்.


இப்படியாக ஆபத்தினால் ஏற்படும் விளைவுகளை தடுக்க சரியான, முறையான நடவடிக்கைகளை எடுத்து கண்களை கணினி திரையிலிருந்து வெளியாகும் கதிரிலிருந்தும், நமக்கு பிடிக்காததை அல்லது பிடிக்காதவர் எழுதியதை நல்லா உருக்கி அந்த எழுத்தையே எரித்து விடுவது போல் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுத்துக் கொள்ள வேண்டும்.


அல்லா... இவ்வளவு நேரம் குனிஞ்சு எழுதுனதுல கழுத்த சுளுக்கிகிச்சு.. எந்த கண்ட்ரோல யூஸ் பண்ணலாம்...


Elimination....?

Friday, April 06, 2012

ச்சோட் ஆயே ஹம் வோ கலியான் - மாச்சிஸ் திரையில் வரும் குல்ஜார் சாபின் பாடல்

தீவிரவாதிகள் பிறப்பதில்லை - வலிய போய் துயரங்களை கேட்டு பெறவுமில்லை - அவர்கள் நம்மை போல் வீட்டில் தெருவில் வியாபாரத்தில் சுற்றி வந்தவர்கள் தான் - விதிக்கப்பட்ட சூழலின் காரணமாக துயரம் நிறைந்த துக்கம் கனக்கின்ற வாழ்க்கையில் வாழும் இவர்கள் தாங்கள் எதையெல்லாம் விட்டு விட்டு வந்திருக்கிறோம் என்பதை திரும்பி பார்க்கிறார்கள்

திரை: மாச்சிஸ்
http://www.nagoreismail786.blogspot.com/2009/12/blog-post_18.html



Chhod aaye hum woh galiyaan


அந்த தெருவினை
அப்படியே
விட்டுவிட்டு
வந்துவிட்டோம்

Jahan teri pairon ke
kamal gira karti thi


Hanse to do gaalon mein
bhanwar pada karti thi


Teri kamar ke bal pe
nadi muda karti thi


Hansi teri sun sun ke
fasal paka karti thi

எந்த தெருவில்
நம் 
பாதம் பட்டவுடன்
தாமரை மலர்கள்
மலர்ந்தனவோ

எந்த தெருவில்
நாம்
மகிழ்ந்து திரிந்து
சூறாவளியாய்
சுற்றி வந்தோமோ

எந்த தெருவில்
உனது
இடுப்பின் வளைவின்
வழியே
நதிகள் ஓடிபாய்ந்ததோ

எந்த தெருவில்
உனது
புன்னகையில்
பயிர்கள்
அறுவடை செய்யப்பட்டதோ


அந்த தெருவினை
அப்படியே
விட்டுவிட்டு
வந்துவிட்டோம்

Jahan teri edi se 
dhoop uda karti thi
Suna hai us chaukhat pe
ab shaam raha karti thi


Laton se uljhi lipti
ek raat hua karti thi
Kabhi kabhi takiye pe
wo bhi mila karti hai

எங்கே நம்மக்கள்
சுற்றம்சூழ
சூரிய வெப்பத்தில்
கூடி மகிழ்ந்திருந்தோமோ


அந்த தெரு
வீட்டின் தலைவாசல்
பற்றி
நான் இப்போது
கேள்விப்படுகிறேன்..
அது
எப்போதும்
இருளின் மையநிழலில்
இருண்டு கிடக்கிறதாம்


ஓர் இரவு
ஒன்று
கால்களோடு
சிக்கிக் கொண்டு
மடித்து
வைக்கப்பட்டிருக்கிறது


Dil dard ka thukda hai
pathar ki dali si hai


Ek andha kuan hai ya
ek band gali si hai


Ek chhota sa lamha hai
jo khatm nahin hota


Main laakh jalata hoon
yeh bhasm nahin hota

இதயம் 
வலிகளின் குவியலால்
உடைகிறது


உடைந்து
உடையாத கற்களாய்
உருமாறியது


ஒரு
நீரில்லாத
ஆழமான கிணறு
ஒரு
இருளசூழ் குறுக்குபாதை


ஒரு சிறிய
கனம்
ஒன்று உள்ளது
அந்த கனம்
இன்னும்
முடியவே இல்லை


அந்த கனம்
எவ்வளவு தான்
எரிக்க முற்பட்டாலும்
எரிந்து போக
மறுக்கிறது