Showing posts with label குல்ஜார் சாப் பாடல்கள். Show all posts
Showing posts with label குல்ஜார் சாப் பாடல்கள். Show all posts

Sunday, January 26, 2020

எனது இரண்டு உலகங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள் - குல்ஜார் சாப் எழுதிய ஹைதர் பட பாடல்




Sire udhad gaye hain subah shaam ke
Wo mere do jahaan saath le gaya,
Tamaam daastaan saath le gayaa..

காலையின் மாலையின் எல்லைகள் கலந்து விட்டன (இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை)
அவள் எனது இரண்டு உலகங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்
எனது வாழ்வின் அனைத்து சம்பவங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்

Bitti naaye.. doori..
Chuon zaraay
Baalmara-e-yo

நான் உன்னிடமிருந்து தூரமாக இருக்கிறேன்
நான் உனது மறுபாதி
என் அன்பானவனே!

Kya kar hove tham
Zar-zaro
Baalmara-e-yo...!

நான் என்ன செய்ய இப்பொழுது?
(நீயே) அனைத்தும்
என் அன்பானவனே!

Wo bepanaah pyaar karta tha mujhe,
Gaya to meri jaan saath le gaya,
Tamaam daastaan saath le gaya..

அவள் என்னை அளவின்றி (உயிருக்கு உயிராய்) நேசித்து வந்தாள்
என்னை பிரிந்த போது, என் வாழ்க்கையை (உயிரை) அவளுடன் எடுத்து சென்று விட்டாள்
எனது வாழ்வின் அனைத்து சம்பவங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்


Sharmand karthas
Aftaabo
Kaymi haal yi zoon

என்னை சங்கடப்படுத்திவிட்டாய்
என் பரிபூரண ஒளிக்கதிரே (சூரியனே)
நீயின்றி என் (நிலவின்) நிலை எப்படி இருக்கும் என்பதை அறிவாயோ?

Khand chaini
Ghach so
Lajj so daraeye
Baalmar-e-yo..

உனது (நினைவு) துகள்களை
நான் எனது சிந்தையில் வைத்துள்ளேன்
என் வாசல் கதவிலேயே  காத்திருக்கிறேன்
என் அன்பானவனே!

Main sajde se utha to koi bhi na tha,
Wo paav ke nishaan saath le gaya


நான் என் தொழுகையை முடித்து விட்டு பார்த்தேன், ஒருவரும் இல்லை
என் காலடியின் அடிச்சுவட்டையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்

Gaya to meri jaan saath le gaya..
Wo mere do jahaan saath le gaya,
Tamaam daastaan saath le gayaa..


என்னை பிரிந்த போது, என் வாழ்க்கையை (உயிரை) அவளுடன் எடுத்து சென்று விட்டாள்
அவள் எனது இரண்டு உலகங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்
எனது வாழ்வின் அனைத்து சம்பவங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்

Thursday, September 26, 2019

அட.. வந்து விடு! - குல்சார் சாபின் ஹைதர் பட பாடல்




வந்து விடு இப்போதே!
(கஷ்மீரில்) வாழ்க்கை பறிபோய்விட்டது
(கஷ்மீரின்) உலகம் மறைந்து விட்டது
உறங்கி விடு (கப்ரின் குழிக்குள்ளே)

Arre Aao Na, Ke Thak Gayi, Hai Zindagi, So Ja
அட.. வந்து விடு!
(கஷ்மீரில்) வாழ்க்கை வற்றி விட்டது
உறங்கி விடு (கப்ரின் குழிக்குள்ளே)

Na Shaam Na Savera, Andhera Hi Andhera (x2)
(கஷ்மீரில்) மாலைகளும் இல்லை காலைகளும் இல்லை -
வெறும் இருட்டு இரவுகள் மட்டுமே.. இருட்டு இரவுகள்...

Hai Roohon Ka Basera, So Jao...
(கப்ரின் குழி தான்) ஆன்மாக்களின் வசிப்பிடம் .. உறங்கி விடு இங்கேயே!

Arre Aao Na…
அட.. வந்து விடு!

Chhota Na Bada, Koi Lamba Hai Na Bauna Hai
(கப்ரில்) பெரியவரும் இல்லை சிரியவரும் இல்லை
உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை

Kabaron Ke Tadabon Mein, Lambi Neend Sona Hai
கப்ரின் மத்தியில், நீண்ட உறக்கம் கொண்டு விடு

Na Bistar Hai Na Bori, Na Bhaand Na Gilauri
பாயும் இல்லை மெத்தையும் இல்லை
பாட்டு கச்சேரியும் இல்லை வெத்தலை பாக்கும் இல்லை

Farishton Ki Lori, So Jao
மலக்குகளின் (தேவதைகளின்) தாலாட்டு மட்டுமே உண்டு..! உறங்கி விடு (கப்ரின் குழிக்குள்)

Friday, December 19, 2014

ஜெஹ்லம் ஜெஹ்லம் - குல்சார் சாபின் ஹைதர் பட பாடல்

கஷ்மீரை தனி நாடு கோரிக்கையோடு போராடும் குழுவின் ஒருவருக்கு மருத்துவம் பார்த்த குற்றத்திற்காக விசாரனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அலிகார் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகன் இதனை கேள்விப்பட்டு ஊர் திரும்புகிறார்.ஊர் திரும்பியவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

விசாரணைக் கைதியாக அழைத்து செல்லப்பட்ட தந்தையை காணவில்லை.
மருத்துவம் தனது வீட்டிலேயே வைத்து பார்த்திருந்ததால் அவரது வீட்டையும் வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள்.
தனது தந்தையின் இரண்டாவது மனைவியும் தனது தந்தையின் தம்பியும் மகிழ்வோடு இருப்பதை காணுகிறான்.
தாங்க இயலாத சோகங்களோடும்
தந்தையை காணுவோம் என்ற நம்பிக்கையோடும்
காதலியின் உதவியோடு
கஷ்மீரின் ஜெஹ்லம் நதிக்கரையோரம்
தேடி அலைகிறான்
தனது தந்தையை.

ஜெஹ்லம்... ஜெஹ்லம்..
நானும் தேடுகிறேன்.


Jhelum, jehlum dhoondhe kinara

ஜெஹ்லம்
ஜெஹ்லம்
(ஜெஹ்லம் என்பது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பாய்ந்தோடும் நதி - இந்தியாவும் பாகிஸ்தானும் ஹிஸ்டாரிகலாக பிரிந்த போதும் ஜியாகரிஃபிகலாக பிரியாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது)
அது தனது கரையை
தேடுகிறது...

Dooba sooraj, kin aankhon mein
Sooraj dooba, kin aankhon mein
Jehlum hua khaara

எந்த கண்களில் அஸ்தமனமாகிறது சூரியன் -
சூரியனின் அஸ்தமனம் எந்த கண்களில் ஆகிறதோ
(அங்கே தான் ஜெஹ்லம் தன் கரையை தேடுகிறது) ஜெஹ்லம் (அந்த கண்களிலிருந்து வரும் கண்ணீரைப் போலவே) உவர்ப்பாய் மாறி வருகின்றது

Kis se poochhein kitni der se dard ko sehte jaana hai
Andhi raat ka haath pakad kar kab tak chalte jaana hai

யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை
இன்னும் எவ்வல்ளவு காலம் தான்
இந்த வலியை சுமந்து கொண்டிருப்பது - என்று?
யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை
குருடாய்ப் போன இரவின் கைகளை துணையாக பிடித்துக் கொண்டு
எவ்வளவு தூரம் தான் வாழ்க்கையில் கடந்து செல்வது - என்று?

Lahu lahu lahu waqt ka khoon hua re
Lahu lahu lahu
Lahu behta angaara, lahu behta angara

இரத்தம் இரத்தம் இரத்தம் - காலங்களை கொன்று குவித்திருக்கிறது
இரத்தம் இரத்தம் இரத்தம்
இரத்தம் தணலாய் எரிந்து கொண்டிருக்கிறது

Sunday, June 15, 2014

அப்கெ நா சாவன் பர்ஸே - கினாரா பட குல்ஜார் சாப் பாடல்






Taaliyon Ke Shor Mein Ek Gumsum Khamoshi Bhi Thi
Ek Aisi Khamoshi Jo Ghataon Ke Barasne Se Pehle Sunayi Deti Hai
Aarti Ki Chhalki Hui Aankhon Mein Wo Khamoshi Yun Theher Gayi Thi
Jaise Keh Rahi Ho


கைதட்டலின் இறைச்சலுக்கு நடுவே ஒரு நிசப்தம் மறைந்தபடி உள்ளது
அந்த நிசப்தமானது மழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னர் உள்ள 
அமைதியை ஒத்திருக்கிறது
அந்த நிசப்தமானது ஆர்த்தியின் (கதையின் நாயகி) ஈரவிழிகளை நிறுத்தி விடுகிறது
அது யாது சொல்கிறதென்றால்...

Abke naa saawan barse
abke baras to barsengi ankhiyaan
abke naa saawan barse

இந்த வருட
மழை மாதம்
வரப்போவதில்லை
ஆனால் அதற்கு
பதிலாக
கண்ணீர் மழை
மட்டுமே
கண்களிலிருந்து வருகிறது..

(வடநாட்டிலெல்லாம் வேலைக்கு வேறு மாநிலத்திற்கு செல்லும் கணவன் மழை மாதமான "சாவன்" எனும் மாதத்தில் வீட்டிற்கு மனைவி மக்களை காண வருவதுண்டு... ஆனால் கணவன் இறந்து விட்ட படியால் மழைமாதமே வரப்போவதில்லை என்று பாடுகிறார்)

Abke naa saawan barse
abke baras to barsengi ankhiyaan
abke naa saawan barse

இந்த வருட
மழை மாதம்
வரப்போவதில்லை
ஆனால் அதற்கு
பதிலாக
கண்ணீர் மழை
மட்டுமே
கண்களிலிருந்து வருகிறது..

jaane kaise ab ke mausam beete
beetegi jo tere bin wo kam beete
tere binaa saawan soone
ae tere binaa ab to ye man tarse


எப்படி வரும்
நீயில்லாத
இந்த மழைக்காலம்
என்று
அறியவில்லை
நீயில்லாத
மழைக்காலம்
என்பது
ஒரு அழிவுக்காலமே...
நீயின்றி
இப்போது
இந்த மனம்
ஏங்கி தவிக்கிறது

jaane kab aaye din, din dhal jaaye
tere bin ankhiyon se raat naa jaaye
tere binaa raat naa jaaye
ae tere binaa ab to ye din tarse


ஒவ்வொரு பகலும்
எப்படி வருகிறது
எப்படி செல்கிறது
என்பதை நான்
அறிவதேயில்லை
நீயின்றி
இரவானது
என்னை விட்டு
செல்வதே இல்லை

Tuesday, December 11, 2012

ஹுஜுர் இஸ் கதர் பி - மாசும் இந்தி பட குல்ஜார் சாபின் பாடல்

இது கதைப்படி பார்ட்டியில் பாடும் பாடல்

அழகான கஜல்

செவிக்கு இனிமை சேர்ப்பவர்கள்: சுரேஷ் வாட்கரும் புபிந்தர் சிங்கும்



Hujoor is kadar bhee naa itaraake chaliye
Khule aam aanchal naa laharaa ke chaliye
ஓ மங்கையே.!
இவ்வளவு அலட்சியமாக
நீ செல்லலாகாது..!
உன் தலைதுண்டு (ஸ்கார்ப்)
காற்றில் விலகி ஓடுவதறியாமல்
இவ்வளவு மிடுக்காக
நீ நடக்கலாகாது..!
Koee manachalaa agar pakad legaa aanchal
Jaraa sochiye aap kyaa kijeeyegaa
Lagaa de agar, badh ke julfon mein kaliyaan
To kyaa apanee julfe zatak dijeeyegaa
ஒரு வம்பன்
உன் துப்பட்டாவை
பிடித்திழுத்தால்
நீ என்செய்வாய்..?
கன நேரம்
யோசித்து பார்..!
பருவ மங்கையே..!
உன் கூந்தலில்
ஒரு வம்பன்
பூவை வைத்து
சென்றால்
நீ தூர எரிந்து விடு..?
Badee dilanashee hain haseen kee ye ladeeyaan
Ye motee magar yoo naa bikharaayaa kije
Udaa ke naa le jaaye zonkaa hawaa kaa
Lachakataa badan yoo naa laharaayaa kije
வழியில் வருவோரிடமெல்லாம்
சிரித்து வைத்து
உன் விலைமதிப்பற்ற
சிரிப்பை வீணாக்கிவிடாதே
ஒரு புயல்காற்று 
உன்னை அடித்து
சென்று விடுமென்று
அஞ்சுகிறேன்
ஆதலால் நவீன மங்கையே
அலட்சிய நடை 
வேண்டாம்

Bahot khubasoorat hain, har baat lekin
Agar dil bhee hotaa, to kyaa baat hotee
Likhee jaatee fir daastaan-ye-mohabbat
Vek afasaane jaisee mulaakaat hotee
வாய்பேச்சு அனைத்தும்
அழகாய் தான் இருக்கிறது
ஆனால்
அழகாய் இருக்க வேண்டிய
ஒன்றுண்டு
அது தான் இதயம்
(அது அழகாய் இருந்தால் தான் அனைத்தும் அழகாய் இருக்கும், அப்படி அழகாய் இருக்கும் பட்சத்தில்)
நம் காதல்கதைகள்
தொடரும்
இவ்வளவு ஏன்..?
நம் ஒரு சந்திப்பின்
காதல்கதை கூட
உலா வரும்
நாளைய உலகில்...


Sunday, October 07, 2012

எல்லையில்லை உனது கடல் கண்களில் - 7 கூன் மாஃப் எனும் படத்தில் வரும் குல்ஜார் சாபின் பாடல்


இந்த லிங்கில் பாடல் தொடங்கும் முன் வரும் கவிதை இடம் பெறுகிறது:
http://www.youtube.com/watch?v=dM12mtXKRk8&feature=relmfu

 தொடங்கும் முன் வரும் கவிதை:

Ik baar to yun hoga, thoda sa sukoon hoga
Na dil mein kasak hogi, na sar pe junoon hoga
என்றேனும் ஒரு நாள் இது நடைபெறும் - 
கொஞ்சம் அமைதி பெறும்

என் இதயத்தில் அப்போது இபோது இருக்கும் இந்த ஏக்கம் இருக்காது
அப்போது இந்த (தலைக்)கனம் இருக்காது

இனி பாடல்

bekaraan hai bekaraan 
aankhein bandh kijay na
dubne lagey hai 
hum saans lene dijay na 
Lillaah...
ek zara chehra udhar kijay inayat hogi
aap ko dekh ke badi der se meri saans ruki hai 
எல்லையில்லை எல்லையில்லை
உன் கடல் போன்ற பெரிய கண்களை
கொஞ்சம் மூடிக் கொள் -
அதன் ஆழத்தில் 
மூழ்குகின்றேன்...
மூச்சு திணறுகின்றேன்..
யா அல்லாஹ்..!
உன்னைத் தவிர யாருமில்லை..!
எனக்கொரு உபகாரம் செய்
உன் தெய்வாதீனம் பொருந்திய முகத்தை
வேறொரு பக்கம் திருப்பி விடு
நான் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்கிறேன்..
உனை பார்க்கும் என் கண்கள் - உன் முகத்தை விட்டு 
மீள முடியாமல் தவிக்கையில்
என் சுவாசம் பறிபோகிறது
(Udti-udti si nazar mujhko chho jaaye agar
Ek tasleem ko har baar meri aankh jhuki hai
aap ko dekh ke badi der se meri (saans) ruki hai)
- Muqarrar... Muqarrar

ekzara dekhiye toh aapke paaon tale kuch toh atka hai kahin
waqt se kahiye chale
Udti udti si nazar mujhko chu jaaye aa gaye ek taslim ki
har baar meri aankh jhuki hai

aap ko dekh ke badi der se meri saans ruhi hai

உன் பாதங்களின் கீழ் கொஞ்சம் உற்றுப் பார்..! 
எதுவோ மிதிபட்டு கிடக்கின்றது பார்..!
அது காலநேரமின்றி வேறொன்றுமில்லை
உன் பாதங்களை விட்டு நகர்ந்து செல்ல அதற்கு அனுமதி அளி..! 
போகிற போக்கில் நீ பார்க்கின்ற பார்வை எனக்கு ஸலாம் சொல்கிறது
என் கண்கள் பதிலாக தலை சாய்த்து ஸலாத்தை மரியாதையோடு ஏற்றுக்கொள்கிறது
உனை பார்க்கும் என் கண்கள் உன் முகத்தை விட்டு
மீள முடியாமல் தவிக்கையில்
என் சுவாசம் பறிபோகிறது.

Tuesday, June 26, 2012

ஏ அஜ்னபி - குல்சார் சாபின் தில்சே பட பாடல்



Oh Pakhi Pakhi Pardesi
என் இனிய பறவைகளே..!
தூரத்து தேசத்திலிருந்து
சொந்த நிலம்
துறந்து 
பருவகாலத்துக்கு (சீசனுக்கு) மட்டும்
வந்து 
திரும்ப 
சென்று விடும் 
என் இனிய பறவைகளே..!
Aye ajnabi tu bhi kabhi aawaaz de kahin se

ஓ வழிபோக்கனே..!
நீ 
எங்கிருந்த போதிலும்
சில பொழுதாவது
என் பெயரை 
மட்டும்
உச்சரித்து விடு..!

Main yahan tukdon mein jee raha hoon
Tu kahin tukdon mein jeen rahi hai


நான் இங்கே
உடைந்து போயிருக்கிறேன்
இருப்பினும்
வாழ்ந்து கொண்டு 
தானிருக்கிறேன்

நீயும் அங்கே
நிச்சயமாய்
உடைந்து போன
வாழ்க்கையோடு
தான்
உறவாயிருப்பாய்..!
Roz roz resham si hawa aate jaate kehti hai bata
Resham si hawa kehti hai bata
Vo jo doodh dhuli masoom kali
Vo hai kahan kahan hai
Vo roshni kahan hai 

vo jaansi kahan hai
Main adhoora tu adhoori jee rahein hain


ஒவ்வொரு நாளும்
வருடி செல்லும்
வாடை காற்று
என்னை கேட்டு
நச்சரிக்கிறது..

பாலில் குளித்ததை
போல் -
பூவிதழின் மென்மை
கொண்ட -

அந்த மங்கை
எங்கே?

அந்த பூ
எங்கே?

அதன் ஒலி
எங்கே?

என் வாழ்க்கை
எங்கே?

நான் 
இன்னமும்
முழுமையடையவில்லை

நிச்சயமாக தெரியும்
நீயும்
பாதி வாழ்க்கை
தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்..!

Tu to nahin hai lekin teri muskurahatein hain
Chehra nahin hai par teri aahatein hain
Tu hai kahan kahan hai
Tera nishaan kahan hai
Mera jahan kahan hai
Main adhoora tu adhoori jee rahein hai

நீ
இங்கே
இப்போது
இல்லை
ஆனால்
உனது 
சிரிப்பொலி
செவிகளில்
ஒலிக்கிறது

உன்
முகம் 
கண்ணெதிரே
இல்லை
ஆனால்
உனது
காலடி
சத்தம்
கேட்கிறது

நீ மட்டும்
எங்கே
சென்றாய்?

உனது
இருப்பின் அடையாளங்கள்
எங்கே?

என் உலகம் 
எங்கே?

நான் 
இன்னமும்
முழுமையடையவில்லை

நிச்சயமாக தெரியும்
நீயும்
பாதி வாழ்க்கை
தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்..!

Saturday, May 12, 2012

தலைமீது இறைகாதலின் நிழலுடையோரின் பாதங்களின் கீழ் சொர்க்கம் உள்ளது - தில்சே பட குல்ஜார் சாபின் பாடல்


இந்த பாடலை பற்றி இங்கே அருமையாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இங்கே:  http://pirapanjakkudil.blogspot.com/2012/03/1.html

ஆனா, அதுக்காக என் பாணியில் மொழி(பெயர்)கெடுக்காமல் விட்டுவிட முடியுமா?

இதோ...

இது ஒரு அருமையான சூஃபியிச பாடல். சூஃபியிச மரபில் இறைக் காதலை பெண்ணின் மீதான காதலோடு ஒப்பிட்டு எழுதப்படுவதுண்டு.

தூய்மையான நேசத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட காதலை பற்றி இங்கே உதாரணமாக வைக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாவிட்டால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையாவது புரிந்து கொள்ள முற்பட வேண்டுகிறேன்.

Jinke sar ho ishq ki chaaon
Paaon ke neeche jaanat hogi
Jinke sar ho ishq ki chaaon


எவரின்  எண்ணங்களில் (தலைமீது)
இறைகாதலின் நிழல் 
உள்ளதோ
அவருடைய பாதங்களின் கீழ் 
சொர்க்கம் உள்ளது    

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (X 4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே..

Saare ishq ki chhaaon chal chaiyya chaiyya
Saare ishq ki chhaaon chal chaiyya


அனைவரும் 
அந்த காதலின் 
பாதையில் செல்லுங்கள்

Pau janat chale chal chaiyya chaiyya
Pau janat chale chal chaiyya


சொர்க்கத்தின் 
பாதையில் இருப்பதை
உணர்ந்து கொள்வீர்கள்

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Voh yaar hai jo khushboo ki tarah
Voh jiski zubaan urdu ki tarah

நேசத்திற்குறியவன்...
காற்றில் கலந்த
நறுமணத்தை 
போன்றவன்

நேசத்திற்குறியவன்..
பேசும் பேச்சு
உருதுகவிதையை
போன்றது

Meri shaam raat, meri kaayanat
Voh yaar mera sainya sainya

அவனே 
என் பகல்
அவனே
என் இரவு
அவனே
எனது உலகம்
அந்த நேசத்திற்குறியவனே
எனது வாழ்க்கைதுணை

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (X3)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே..  

Gulposh kabhi itraaye kahin
Mehke to nazar aa jaaye kahin
(X2)
பார்க்கும்
பூக்களின் நிறங்களில்
மறைந்திருப்பதும்
அவனது அடையாளமே
பூக்களின் நறுமனமாய்
காற்றில் கலந்திருப்பதும்
அவனது அடையாளமே

Taaveez banaake pehnoon usay
Aayat ki tarah mil jaaye kahin
(X2)

அவனை
காணும் பாக்கியம்
கிட்டினால்
புனிதமான குரான் ஷரீஃப்
வசனங்களை
தாயத்தாக்கி
அணிந்து கொள்வது
போல் 
அவனையே 
அணிந்து கொள்வேன்
நான்

Gulposh kabhi itraaye kahin
Mehke to nazar aa jaaye kahin


பார்க்கும்
பூக்களின் நிறங்களில்
மறைந்திருப்பதும்
அவனது அடையாளமே
பூக்களின் நறுமனமாய்
காற்றில் கலந்திருப்பதும்
அவனது அடையாளமே

Taaveez banaake pehnoon usay
Aayat ki tarah mil jaaye kahin

அவனை
காணும் பாக்கியம்
கிட்டினால்
புனிதமான குரான் ஷரீஃப்
வசனங்களை
தாயத்தாக்கி
அணிந்து கொள்வது
போல் 
அவனையே 
அணிந்து கொள்வேன்
நான்

Voh yaar hai jo imaan ki tarah
Mera nagma vohi mera qalma vohi
Mera nagma nagma mera qalma qalma

எனது 
அந்த நேசத்திற்குறியவன்
அவன் மீதே
நம்பிக்கை வைத்தேன்
அவன் பெயரையே
இன்னிசைத்தேன்
அவன் இருப்பையே
சாட்சியம் செய்கிறேன்
அவனே எனது இன்னிசை
அவனே எனது சாட்சியம் (எனும் திருமந்திரம்)


Mera nagma nagma mera Qalma Qalma
(X3)
அவனே எனது இன்னிசை அவனே எனது சாட்சியம் (எனும் திருமந்திரம்)

Yaar misaal-e-ous dhale
Paaon ke tale firdaus chale
Kabhi daal daal kabhi paat paat
Main hava pe dhoondhoon uske nishaan

அவனை காண்பது
சிரமமே
அவன் பனித்துளியை
போல் 
தோன்றி மறைபவன்
சில நேரங்களில்
தோன்றுபவன்
சில நேரங்களில்
(கண்களிலிருந்து) மறைபவன்
(அவனை தேடி அடைவது சிரமம் தான், அவனை காண்பது என்பது கடினம் தான் - எனினும்)
அவனது அடையாளத்தை
காற்றில் தேடியே 
தான்
எனது பயணத்தை

சொர்க்கத்தின் பாதையில்
தொடர்கிறேன்



Saare ishq ki chhaaon chal chaiyya chaiyya
Saare ishq ki chhaaon chal chaiyya


அனைவரும் 
அந்த காதலின் 
பாதையில் செல்லுங்கள்

Pau janat chale chal chaiyya chaiyya
Pau janat chale chal chaiyya


சொர்க்கத்தின் 
பாதையில் இருப்பதை
உணர்ந்து கொள்வீர்கள்

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Main uske roop ka shehdaai
Vo dhoop chhanv se harjaai
Vo shokh hai rang badalta hai
Main rangroop ka saudaai (X2)

நான் அவனது
அழகின்
காதலன்

அவனோ
வெயிலாகி
நிழலாகி
புதிரானவன்

ஒவ்வொரு
ஒளிமயமான
வர்ணங்களிலும்
மாறி மாறி
வருபவன்

அந்த வர்ணத்தோடும்
அந்த அழகோடும்
மட்டுமே
எனது வியாபாரம்
எனது சிந்தனை
எல்லாம்...

Jinke sar ko ishq ki chhaaon
Paaon ke neeche jannat hogi
(X2)

எவரின்  எண்ணங்களில் (தலைமீது)

இறைகாதலின் நிழல் 
உள்ளதோ
அவருடைய பாதங்களின் கீழ் 
சொர்க்கம் உள்ளது  

Meri shaam raat meri kaaynaat
Vo yaar mera sainya sainya

அவனே 
என் பகல்
அவனே
என் இரவு
அவனே
எனது உலகம்
அந்த நேசத்திற்குறியவனே
எனது வாழ்க்கைதுணை

Chal chaiyya chaiyya chaiyya chaiyya  (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Saare ishq ki chhaaon chal chaiyya chaiyya
Saare ishq ki chhaaon chal chaiyya


அனைவரும் 
அந்த காதலின் 
பாதையில் செல்லுங்கள்

Pau janat chale chal chaiyya chaiyya
Pau janat chale chal chaiyya


சொர்க்கத்தின் 
பாதையில் இருப்பதை
உணர்ந்து கொள்வீர்கள்

Chal chaiyya chaiyya chaiyya chaiyya  (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Voh yaar hai jo khushboo ki tarah
Voh jiski zubaan urdu ki tarah

நேசத்திற்குறியவன்...
காற்றில் கலந்த
நறுமணத்தை 
போன்றவன்

நேசத்திற்குறியவன்..
பேசும் பேச்சு
உருதுகவிதையை
போன்றது

Meri shaam raat, meri kaayanat
Voh yaar mera saiyya saiyya

அவனே 
என் பகல்
அவனே
என் இரவு
அவனே
எனது உலகம்
அந்த நேசத்திற்குறியவனே
எனது வாழ்க்கைதுணை

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (X10)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Tuesday, May 08, 2012

என்னை உயிர் என்று அழைக்காதே - அனுபவ் பட குல்ஜார் சாபின் பாடல்

An intimate yet decent song... 


My favourite..


நடிப்பு:


சஞ்சீவ் குமார் 
தனுஜா (நடிகை காஜோலின் தாயார்)


பாடியவர்: 


கீதா தத் - http://en.wikipedia.org/wiki/Geeta_Dutt





------------------------
Meri Jaan
Mujhe Jaan na kaho
Meri Jaan
Meri Jaan


என்னில் நெருக்கமானவரே..!
என்னை உயிரென்று
அழையாதிரும்..!
என்னில் நெருக்கமானவரே..!
என்னில் நெருக்கமானவரே..!


Jaan na kaho
anjaan mujhe
Jaan kahan 
rahti hai sada


அறியாமலே 
என்னை
உயிரென்று 
அழைத்திடாதே..!
உயிர் எங்கே
நிரந்தரமாக
தங்குகிறது?


Anjaane kya jaanein
Jaan ke jaaye kaun bhalaa


என் உயிர்
அழைப்பது
அறியாமலே
எங்கே 
சென்று விட்டாய்?


நீ செல்வதற்கு
பதிலாக
என்உயிர்
பிரிந்து
செல்வதே
மேலாக 
தோன்றுகிறது


Sookhe Saawan
baras gaye
Itni baar 
In aankhon se


எத்தனையோ முறை
என் கண்களை
கடந்து
வறண்ட வசந்தம்
பயணித்திருக்கிறது


Do boondein na barsein
ini bheegi palkon se


என் கண்ணிமை
இரண்டு சொட்டு 
கண்ணீரை கூட
என்
ஈர கண்களை
விட்டு
விலக விடவில்லை
------------------------------------------
Honth jhookein
jab hothon par
Saans uljhi ho
Saason mein


இதழ் 
இதழோடு
நெருங்குகையில்
சுவாசம்
சுவாசத்தோடு
கலந்திருக்கையில்


Do judwaa
hoton ki
baat kaho
aankhon se


இரட்டை பிறவியான
இதழ்கள் 
சொல்ல நினைப்பதை
இரட்டை பிறவியான
கண்கள்
மொழிபெயர்த்து
சொல்லட்டும்..!