Monday, March 26, 2012

கத்ரா கத்ரா - இஜாஜத் திரையில் வரும் குல்ஜார் சாபின் பாடல்

இஜாஜத் - குல்ஜார் சாப் எழுதிய இந்த திரைக்கவிதை எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு ஒரு வகையில் நெருக்கமான ஒன்றும் கூட.

சுதா நினைவு தெரியாத போதே மஹிந்தர் தான் தனது கணவன் என்று நினைத்து வளர்ந்தவள். நினைவு கைகூடும் தருவாயில் ஒரு நாள் தனது வாசலில் வருகிறான்.

மஹிந்தர், தானும் ஒரு பெண்ணும் திருமணம் ஆகாமலே சேர்ந்தே ஒரே வீட்டில் இருப்பதாக சொல்லி சுதாவின் கனவுக் கூட்டை கலைத்தவுடன் - சுதா கலவரம் அடையாமல் கதறி அழாமல் அவனை புரிந்து கொள்ள முற்படுகிறாள். ஆசிரியை அல்லவா அவள்..?

மஹிந்தரோடு சேர்ந்திருக்கும் அந்த பெண் மாயா எனும் சுதந்திர பறவையோ உத்திரவு வாங்காமலும் வார்த்தை சொல்லாமலும் வானம் நீட்டி சிறகை விரிக்கிறாள். பரந்த வானத்தில் பறந்த அவளை பார்க்கவே முடியவில்லை.

மஹிந்தர் சுதா இருவரது திருமணம் இந்த சூழ்நிலையில் இருவரது தாத்தாவின் வற்புறுத்தலின் பேரில் மேடை ஏறுகிறது.

பறந்து சென்ற பழைய பறவை கூடு தேடி மீண்டும் வருகிறது.

மாயாவல் மஹிந்தரின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் மஹிந்தரிடம் தான் பெற்று வந்த அன்பை மீண்டும் பெற வேண்டும் என்றும் பிடிவாதம் இருக்கிறது.

மஹிந்தர் மாயாவை மறப்பதென முடிவெடுக்கிறான். இருந்தும் பல தவறான புரிதல்களால் சுதா மஹிந்தரை பிரிய நேர்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு...

புகைவண்டி நிலையத்தின் காத்திருப்பு அறையில் பொழிகின்ற மழை ஈரத்தின் வாசனை அவர்களின் பழைய வாழ்க்கை நினைவுகளை கிளறி விடுகிறது.

ஒரு கட்டத்தில் காட்சியானது காத்திருப்பு அறையிலிருந்து கல்யாணம் தந்த பழைய மகிழ்ச்சியான தருணங்களை பின்நோக்கி இழுத்து செல்கிறது..

சுதாவிற்கு தெரியும் தனது கணவரான மஹிந்தர் மாயாவை காதலித்தவன் என்று. இருந்தாலும், தான் சிறிய வயதிலிருந்து கனவு கண்டு வந்த காதலனோடு இருக்கும் அந்த கனத்தில் லயிக்கிறாள். இந்த கனம் வருங்காலத்தில் தொடர வேண்டும் என்றும் தனது வாழ்க்கை முழுதும் இந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்றும் கவிபாடுகிறாள்.



Qatra-qatra milti hai
qatra-qatra jeene do
Zindagi hai (zingadi hai - inner voice)
Bahne do (bahne do - inner voice)
Pyaasi hoon main
Pyaasi rahne do
Rahne do, na...

துளித்துளியாய்
கடந்து செல்கின்றது
அவ்வாறே 
கடந்து செல்லட்டும்

இதுதான் வாழ்க்கை
இவ்வாறே 
கடந்து செல்லட்டும்

என்னை 
தாகத்தில் 
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்

அப்படியே ஆகட்டும்

(மன்னிக்கவும்: இவ்வளவு மட்டமான ஒரு மொழிபெயர்ப்பை வேறு எங்கேயும் படித்திருக்க முடியாது. இதை எப்படி தமிழில் அழகாக்குவது என்று தெரியவில்லை. சரி நானே எழுதி நானே படிக்கும் பாடல் தானே.. அப்படியே இருந்து விட்டு போகட்டும்..)

(அதாகப்பட்டது சுதா சொல்கிறாள்:

மஹிந்தரோடு இருக்கும் பொழுதுகள் எப்படி கழிகின்றது என்றால் ஒவ்வொரு துளியாய், ஒவ்வொரு விநாடிக்கும் குறைவான நேரமாய் அனுபவிக்கப்பட்டு அவளை விட்டு கடந்து செல்கிறதாம். 

இது தான் அவள் தேடிய வாழ்க்கையாம்.. 

இப்படி அந்த நேரங்கள் கடந்து செல்லும் போது, தனது காதல்கணவர் யாரிடமும் பங்கு போடாத தனக்கு மட்டுமே உரித்தான பிரியத்தை வழங்க வேண்டும், நேரத்தை கழிக்க வேண்டும் என்று தாகம் அதாவது தேடல், தவிப்பு பிறக்கின்றதாம், அவ்வாறே மனம் அந்த பிரியத்தை தேடி தவிக்கட்டும் என்று கவிமழை பொழிகிறாள். 

இதே போல் கீழ் வரும் வரிகளுக்கும் அர்த்தம் போட்டு விளங்கிக் கொள்ளவும் என்று வாசிக்கும் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்)

Kal bhi to kuchh aisa hi hua tha
Neend mein thi, tumne jab chhua tha
Girte-girte baahon mein bachi main
Sapne pe paaon pad gaya tha
Sapnon mein, bahne do
Pyaasi hoon main
Pyaasi rahne do

நேற்று 
எனக்கு
நேர்ந்தது என்ன
என்று
நீ அறிவாயா?
துயில்கொண்டு
நான் 
இருந்த போது
உன் தொடல்
உணர்ந்தேன்..

நான் 
கையிலிருந்து
தவறி விழும்
குழந்தையை போல்
விழுந்து விட்டேன்

அவ்வாறு
தவறி
ஒரு கனவில் 
விழுந்து விட்டேன்

அந்த
கனவு வாழ்விலேயே
நான்
வாழ்ந்து விட
வேண்டும்

என்னை 
தாகத்தில் 
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்

அப்படியே ஆகட்டும்


Tumne to aakaash bichhaaya
Mere nange pairon mein zameen hai
Paa ke bhi tumhari arzoo ho
Shayad aise zindagi haseen hai
Arzoo mein, bahne do
Pyaasi hoon main
Pyaasi rahne do

நீ
பறப்பதற்கு
ஆகாயம் அமைத்தாய்
நானோ
வெறுங்காலோடு
பூமியில்
நிற்கிறேன்

நான்
உன்னோடு
இருக்கும் போது
தான்
உன்னை
அதிகமாக தேடுகிறேன்
உன்னுடனான
இந்த வாழ்வு
மிக அழகானது

அந்த 
தேடல் வாழ்விலேயே
நான் 
மூழ்கி விட 
வேண்டும்

என்னை 
தாகத்தில் 
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்

அப்படியே ஆகட்டும்


Halke-halke kohre ke dhuen mein
Shaayad aasmaan tak aa gayi hoon
Teri do nigaahon ke sahaare
Dekho to kahaan tak aa gayi hoon
Kohre mein, bahne do
Pyaasi hoon main
Pyaasi rahne do

மூடுபனியின் 
புகை நடுவே
வெளிச்சம் தேடி
அலைந்தேன்
நான்

தூரம் அறியாமலே
ஆகாயத்திற்கே
வந்தடைந்து விட்டேன்

உனது கண்கள்
காட்டிய பாதையில்
என் கால்கள்
எங்கே 
வந்து விட்டது
பார்..!

அந்த 
மூடு பனியிலேயே
நான் 
கரைந்து விட 
வேண்டும்


என்னை 
தாகத்தில் 
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்

அப்படியே ஆகட்டும்
----------------

குரல்: ஆஷா (இந்த பாடலில் ஆஷா இரு குரல்களில் பாடுவது போல் மிக்ஸிங் செய்யப்பட்டிருக்கிறது).
வரிகள்: குல்ஜார் சாப்
இசை: ஆர்.டி.பர்மன்

ஸூரத்துந் நஸ்ர் (உதவி)

ஸூரத்துந் நஸ்ர் - உதவி

குரான் ஷரீஃபின் 110வது அத்தியாயம்



1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும் போதும்,


2.மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாக பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,


3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்

------------------------------------------------------------

இறைவன் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்தான். உண்மையையும் சத்தியத்தையும் கொண்டு மக்களிடம் வந்த போதெல்லாம் அவர்களின் கூற்றை உதாசீனப்படுத்தி வழிகேட்டிலேயே இருந்து வந்தார்கள்.

ஓராண்டு அல்ல ஈராண்டு அல்ல முழுதாக பதிமூன்று ஆண்டுகள் கடுமையான அழைப்பிற்கு பிறகும் மக்கள் இஸ்லாத்தை ஏற்பதாகவே இல்லை சொற்பமானவர்களை தவிர.

பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனைப்படுகிறார்கள், எந்த அளவிற்கு என்றால் ஒரு கட்டத்தில் இறைவனே இப்படி சொல்கிறான்...

26. ஸூரத்துஷ்ஷூஃரா (கவிஞர்கள்) - 3வது வாக்கியம்


அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!

- பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கள் வழிகேட்டில் இருப்பதை எண்ணி கவலையுற்று அவர்கள் நேர்வழியில் வராமல் இருப்பதற்காக மிகுந்த வேதனையுற்றார்கள் என்பதை தான் இறைவன் “உங்களையே நீங்கள் அழித்துக் கொள்வீங்க போல..” என்று கூறுகிறான்.

அவர்கள் இறைவன் தனக்கு விதித்த மிஸ்ஸனில் கண்ணும் கருத்துமாக இருந்ததோடு மக்கள் மீது அதிக அன்பு செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள் அதாவது அவர்கள் இறைவனின் கோபத்திற்கோ வேதனைக்கோ ஆளாகக் கூடாது என்பதால் மிகவும் வருந்தினார்கள் என்பதையுமே இந்த ஆயத்து சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

(http://www.theholybook.org/content/view/7786/2/)

இறைவன் சொல்கிறான்,

முதல் வாக்கியம்:

அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வரும் போதும்

- இங்கே உதவி என்ற வார்த்தைக்கு ”நஸ்ர்” என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதே ‘நஸ்ர்’ என்ற வார்த்தை பிறிதொரு இடத்திலும் வருகிறது.

3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) - 123வது வாக்கியம்


“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான் (நஸரகுமுல்லாஹ்); ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


இங்கே “நஸ்ர்” எனும் வார்த்தை வினைச்சொல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அரபியில் வினைச்சொல் என்பது பெயர்ச்சொல்லை விட வலிமை குறைந்தது.

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயத்தில் “நஸ்ர்” எனும் வார்த்தை பெயர்ச்சொல்லாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அதாவது, பத்ரு போரில் குறைவான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இருந்த போதிலும் அல்லாஹ்வுடைய உதவி கிடைத்ததில் வெற்றி பெற்றார்கள் அல்லவா அந்த உதவியை compare பண்ணும் போது இந்த ஆயத்தில் வரும் உதவி மிகவும் வலிமை மிகுந்தது.

சாதாரணமாக உதவி என்றாலே அது உயர்வான செயல், ஒரு மனிதர் சரியான நேரத்தில் இன்னொரு மனிதருக்கு செய்யும் உதவியானது இந்த உலகத்தை விட மிகப் பெரியது என்று எனக்கு தமிழ் வாத்தியார் திருக்குறள் பாடத்தில் சொல்லி கொடுத்து இருக்கிறார்.

ஆனால் இந்த உதவி எப்பேர்பட்ட உதவி என்றால் எதனோடும் compare பண்ண முடியாத வெற்றி - இது நஸ்ருல்லாஹ் - அதாவது அல்லாஹ்வின் உதவி.
-
அடுத்து வெற்றி எனும் வார்த்தை, இந்த வார்த்தைக்கு அரபியில் “ஃபத்ஹு” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதெ “ஃபத்ஹு” என்ற வெற்றியை குறிக்கும் வார்த்தை குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில் இடம் பெற்றிருக்கிறது.

48. ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி) - 1வது வாக்கியம்


நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக (ஃபத்ஹன்) உமக்கு வெற்றி (ஃபதஹ்னா) அளித்துள்ளோம்.


பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் அரசியல் வெற்றியாக குறிப்பாக இரண்டு வெற்றியை சொல்லலாம்.

1. ஹுதைபிய்யாவில் கிடைத்த வெற்றி

2. மக்கா வெற்றி

மேலே குறிப்பிட்ட இந்த வெற்றி ஹுதைபிய்யாவில் கிடைத்த வெற்றியை குறிக்கிறது.

ஹுதைபிய்யா எனும் இடத்தில் பெருமானாரோடு குறைஷிகள் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் போட முன்வந்தார்கள். ஒப்பந்தத்தில் என்னவோ முஸ்லீம்களுக்கு எதிரான வாசகங்கள் நிரம்பி தான் இருந்தன. உதாரணமாக எந்த நோக்கத்திற்காக முஸ்லீம்கள் புறப்பட்டு வந்தார்களோ ஹஜ் செய்வதற்காக அந்த ஹஜ் யாத்திரையை அந்த ஆண்டு நிறைவேற்றாமல் திரும்பிவிட வேண்டும் என்று இருந்தது.

இதை பெரும்பாலான முஸ்லீம்கள் மிகப் பெரிய தோல்வியாக கருதினார்கள். இந்த ஒப்பந்தத்திற்கு இணங்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் இறைவன் இவ்வாறு ஒப்பந்தம் செய்ததை “தெளிவான வெற்றி” என்று வர்ணிக்கின்றான்.

இத்தனை ஆண்டு காலமாக பெருமானார் (ஸல்) அவர்களை சொல்லணா துன்பமிழைத்தனர்.

பைத்தியக்காரர்கள் என்று கூறினர்

கல்லை விட்டெறிந்தனர்

டெர்ரரஸிட் என்றனர்

எக்ஸ்டிரீமிஸ்ட் என்றனர்

இவர்கள் மனிதநேயமற்றவர்கள் என்று புலம்பினர்

இவர்கள் பெண்களை அடிமைபடுத்துகிறார்கள் என்று உளறினர்

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டனர்

வீட்டை விட்டு ஊரை விட்டு வெளியேற்றினர்

- இப்படியெல்லாம் பெருமானாரை (ஸல்) அவர்களை recognize செய்யாமல் இருந்த மக்கத்து குறைஷிகள் இங்கே ஒரு மிகப் பெரும் தலைவராக மதித்து ஒப்பந்தம் போட முன்வந்தனர். 


பெருமானார் (ஸல்) அவர்களின் மக்காவில் 13 ஆண்டுகள் அடைந்த தொல்லைகளுக்கும், மதினாவில் 6 ஆண்டுகள் அடைந்த மன உளைச்சலுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் இறைநம்பிக்கைக்கும் பொறுமைக்கும் அவர்களை recognize செய்வதை விட அந்த நேரத்தில் மக்கத்து குறைஷிகளுக்கு வேறு வழியில்லாமல் கொண்டு வந்து விட்டிருந்தது.


இந்த ஒப்பந்த செய்தி அக்கம் பக்கத்து அரபு நாடுகளுக்கு பரவ ஆரம்பித்ததும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை மிகப் பெரும் தலைவராக பார்க்கத் துவங்கினார்கள். இதை தான் அல்லாஹ் தெளிவான வெற்றி என்று மிக அழகாக குறிப்பிடுகிறான்.


ஆனால் இந்த வெற்றி கூட “பத்ஹன்” என்று கடைசியாக அரபி எழுத்தான “நூன்” என்ற வார்த்தையோடு வருகிறது.


ஆனால் நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த அத்தியாயத்தில் வரும் “வல் ஃபத்ஹு” என்ற வார்த்தையோ “அந்த வெற்றி The Victory” என்று கம்பீரமாக தனித்து நிற்கிறது. ஆகையினால் இது ஹுதைபிய்யா வெற்றியை விட மிக பெரிய வெற்றியை குறிக்கிறது.


இரண்டாவது வாக்கியம்:


மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாக பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்


இந்த வசனத்தில் அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களிடம் குறிப்பாக ஒன்றை சொல்கிறான், அது தான் “நீங்கள் கண்களால் பார்ப்பீர்கள்...” என்று -


எதை?


மக்கள் அணியணியாக group after group அல்லாஹ்வின் மார்க்கத்தில் (தீனில்லாஹி) பிரவேசிப்பதை


மற்ற நபிமார்களை போல் அல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்நாளிலேயே மக்கள் அணியணியாக பிரவேசிப்பதை பார்ப்பார்கள். அல்லாஹ் பெருமானர் (ஸல்) அவர்களின் மனதை ஆறுதல் படுத்துகிறான், பொறுமைக்கு கூலி வழங்குகின்றான்.


உமர் (றலி) அவர்கள் இந்த ஆயத்திற்கான விளக்கத்தை சுல்தானுல் முஃபஸ்ஸிரீன் (the king of all those who explain) என்றழைக்கப்பட்ட இப்னு அப்பாஸ் (றலி) அவர்களிடம் வினவிய போது பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட mission முடிவுக்கு வந்துவிட்டதை உணர்த்துவதாக விளக்கமளித்துள்ளார்கள்.


பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பான அல்லாஹ்வின் மார்க்கத்தில் அழைப்பு பணி மக்கள் எல்லோரும் அணியணியாக வந்து சேர்ந்தால் உதாரணமாக யெமன் நாட்டிலிருந்து 700 பேர்கள் வந்து இஸ்லாத்தில் இணைந்தனர் அவர்களின் பொறுப்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்பது தான் பொருளாகும் என்ற அவர்களின் வியக்கத்தக்க ஒரு view pointஐ வெளிப்படுத்தினார்கள்.


(இப்னு அப்பாஸ் (றலி) அவர்களை பற்றிய ஒரு ஹதீது:
Narrated By Ibn 'Abbas: Once the Prophet embraced me and said, "O Allah! Bestow on him the knowledge of the Book (Qur'an)." [Sahih Bukhari, Vol 1, Book 3, Hadith #075])

மூன்றாவது வாக்கியம்:

3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்


இதன் ஒலிபெயர்ப்பு:

ஃபஸப்பிஹ் பிஹம்தி ரப்பிக வஸ்தக்ஃபிருஹு இன்னஹு கான தவ்வாபா

பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி வெற்றிகரமாக முடிவுற்றவுடன் அவர்கள் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.

1. இறைவனின் புகழை கொண்டு தஸ்பீஹ் செய்வது

2. இறைவனிடம் மன்னிப்பு கோருவது

பொதுவாக ஏதேனும் துன்பமோ துயரமோ நம்மை அடைந்து விட்டால், அல்லாஹ்வை ஒரு மனதாக நினைத்து கேட்க வேண்டியதை பட்டியலிட தொடங்கிவிடுவோம், அதுவே ஒரு நல்லது நடந்து விட்டால் பேருக்கு அல்லாஹ்வின் பேரை ஒரு வார்த்தையில் புகழ்ந்து விட்டு கிடைத்த நல்லதை அனுபவிக்க அதில் மூழ்கி விடுவோம்.

ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறோ நமக்கு வேறு விதமாக இருக்க கற்று தருகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை பெரும் படை கொண்டு எந்த இரத்தவெறியாட்டம் இல்லாமலும் வன்முறை இல்லாமலும் அமைதியான வெற்றியை கண்ட போது எந்த போர் வீரரும் மக்களின் மீதோ அல்லது அவர்களின் உடைமைகள் மீதோ உரிமை கொண்டாடவில்லை. இராணுவ அணிவகுப்பு நடைபெறவில்லை, கொலைவெறி கோஷங்கள் இல்லை, ஒரு /பார்ட்டி இல்லை, டான்ஸ் இல்லை, மாறாக போர்வாள் உறைக்குள் மறைந்து ஒலிந்து கொண்டிருந்தது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மிகவும் தாழ்மையோடு இறையில்லத்தில் அமைதியாக தவாப் செய்ததையும், இறைவனை புகழ்ந்து வணங்கியதையுமே பார்த்து வியக்க முடிகிறது.

இறைவன் முதலாவதாக தஸ்பீஹ் செய்ய சொல்கிறான். குரான் ஷரீஃபின் கீழ்வரும் வாக்கியத்தை கவனிப்போம்:

29: ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி) - 45வது வாக்கியம்


இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.  நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (நினைவு கூறுவது) மிகவும் பெரிதாகும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

ஆகவே
அல்லாஹ்வின் உதவி என்பது பெரியது
அல்லாஹ்வை நினைவு கூர்வது, புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்வது என்பது மிகப்பெரியது.

Sunday, March 25, 2012

வாழ்க்கையே.. வாழ்க்கையே... - யுவ்ராஜ் திரையில் வரும் குல்ஜார் சாப் பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்

குரல்: சிரினிவாஸ்
வரிகள்: குல்ஜார் சாப்
இசை: ஏஆர்.ரஹ்மான்



Zindagi zindagi
kya kami reh gai 

வாழ்க்கையே..
வாழ்க்கையே..
என்ன குறைபாடுகள்
இன்னமும்
மிச்சம் உள்ளது?
என்ன ஒன்று
குறைந்து போனது..?

aankh ki kor mein 
kyun nami reh gai 

ஏன் இன்னமும்
கண்களின் 
வளையங்களில்
ஈரம் உள்ளது?

tu kahan kho gai 
koi aaya nahi 

நீ
எங்கே தான்
மறைந்து விட்டாய்?
ஒருவரும்
வரவில்லை

dopahar ho gai
koi aaya nahi 

பாதி நாள் (பாதி வாழ்க்கை)
ஓடியே விட்டது
இன்னமும்
ஒருவர் கூட
வரவில்லையே..?

din aaye din jaaye
sadiyan bhi gin aaye
sadiyan re 

நாட்கள்
வந்த வண்ணமும்
சென்ற வண்ணமும்
உள்ளன
இவ்வளவு ஏன்..?
நூற்றாண்டுகள் கூட
கடந்து விட்டன...

tanhai lipti hain
lipti hain saanson ki
rasiya re 

இதுவரை
என்னை தனிமை
மட்டுமே
அரவணைத்து வருகிறது
தனிமையே
சுவாசமாய் இருக்கிறது
என் அன்பானவளே..!

tere bina badi pyasi hain
tere bina hain pyasi re 

நீயின்றி
அவைகள் 
தாகத்தால் துடிக்கின்றன..
நீயின்றி
அவைகள்
தாகத்தால் தவிக்கின்றன..

naino ki do sakhiyan re
tanha re, main tanha re 

(அவைகள்.. எவை என்றால்..?)
ஜோடியாய்
சேர்ந்தே இருக்கும்
எனது 
இரு கண்கள்..      

தனிமையில்..

(நீயின்றி)
நான்
தனிமையை உணர்கிறேன்...
-----------
subah ka kohaara hain
sham ki dhool hain
tanhai hain 

அதிகாலை
பனிமூட்டம்
அந்திமாலை
புழுதிகூட்டம்
அப்புறம்
அந்த தனிமை..

raat bhi zard hain 
dard hi dard hain
ruswai hain 

இரவும் கூட
மைஇருட்டு..

வலி..

வலி ஒன்று
மட்டுமே
உள்ளது...

ஏமாற்றமும்
அவமானமும்
தந்து விட்டு சென்றது..

kaise kate 
saanse uljhi hain
raatein badi jhulsi jhulsi hain 

இரும்பு பிடியாய்
பிடித்திருக்கும்
இவைகள்...
என்னை 
விட்டு
எப்படி
விலகி ஓடும்...?

சுவாசம் 
இப்போது
சிரமம்
இரவு
இங்கே மெதுவாய்
எரியும்

naina kori sadiyan re
tanha re
main tanha re 

என் கண்கள்
மறைந்து சென்ற
வெறுமையான 
நூற்றாண்டாய்
மாறிப் போனது..

தனிமையில்..

(நீயின்றி)
நான்
தனிமையை உணர்கிறேன்...

Saturday, March 17, 2012

வேலையிட பாதுகாப்பும் ஆரோக்கியமும் - பகுதி 1

உலகம் முழுக்க வேலையிடத்தில் நடக்கும் விபத்துகளால் ஏராளமானோர் அடிபட்டு காயம் ஏற்படுவதுடன் மரணமும் அடைகின்றனர்.

2009ஆம் ஆண்டு இந்தியாவின் ஜெய்ப்பூர் மாநிலத்தில் IOC ஆயில் டிபோட்டில் நடந்த விபத்தை இங்கே பார்வையிடலாம்.

http://dl.dropbox.com/u/43485237/IOC%20fire%20incident.pdf 

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் ஜனவரி முதல் ஜூன் வரை 30 ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர்.


பொதுவாக அதிக அளவு வேலையிட ஆபத்துள்ள வேலையிடம் என்றால் அது கட்டுமான வேலை நடைபெறும் இடம், கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்ப்பு வேலை நடைபெறும் இடம், எண்ணெய், பெட்ரோ இரசாயன வேலை நடைபெறும் இடம், உற்பத்தி துறை தொழிற்சாலைகள் தான்.

மேற்சொன்ன இடங்களிலெல்லாம் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு வெளிநாட்டு ஊழியர் சிங்கப்பூர் வருவதற்கு முகவருக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்பொழுது மனிதவள அமைச்சகத்தினால் வழங்கப்படும் In-Principal Approval எனும் ஆவணத்தில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உள்பட எல்லா விபரங்களும் எழுதியிருக்கிறது.


http://www.mom.gov.sg/MOMDoc/Employer_Kit.pdf  

நான் சொல்ல வருவது, உதாரணமாக, ஒரு ஊழியர் 4000 வெள்ளி கொடுத்து விட்டு சிங்கைக்கு வேலைக்கு வருகிறார் என்று வையுங்கள், அவரும் முகவர் சொன்ன வார்த்தைகளை அதாவது நல்ல வேலை, நல்ல தங்குமிட வசதி முக்கியமாக நல்ல சம்பளம் இப்படியாக எல்லாம் சொல்லி ஆசைப்பட்டு வந்த பிறகு மனதுக்கு பிடிக்காமல் போனாலும் அவர் தொடர்ந்து இங்கே இருந்தாக வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. 

இது ஏனெனில், கொடுக்கப்பட்ட 4000 வெள்ளியை அவர் கடன் வாங்கி வட்டி வாங்கி கட்டியிருப்பார், குடும்ப சூழல், இப்படி பல காரணத்தினால் பொறுத்து போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அப்படியே வேலையில் இருந்து பழகி கொள்ளலாம் என்று இருக்கும் போது தான் வேலையிட ஆபத்துகள் அவர்களை எந்த நேரமும் எதிரிகளை போல் அழிப்பதற்கு காத்திருக்கிறது.

சிங்கப்பூர் சட்டப்படி ஆபத்துகளை குறிப்பிடுவதற்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுகிறது.

1. Hazard

2. Risk

இதில் Hazard என்றால் மனிதர்களுக்கு தீங்கினையும் காயத்தையும் ஏற்படுத்தக்கூடிய எதுவுமே Hazard (anything with the potential to cause harm or injury) எனப்படும்.

இதில் ‘எதுவுமே’ என்பது எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.

ஒரு பாதுகாப்பில்லாத செயல் - (உதாரணமாக ஈரமான தரையில் நின்று கொண்டு மின்சார வேலை பார்ப்பது)

ஒரு பாதுகாப்பில்லாத சூழல் (உதாரணமாக வேலையிடம் போதுமான வெளிச்சம் இல்லமல் இருப்பது)

ஒரு ஆபத்தான இரசாயன பொருள் (உதாரணமாக அரிக்கும் பொருளான அமிலம்)

ஒரு இயந்திரம் (உதாரணமாக ஃபோர்க் லிஃப்ட்)

மின்சார் கம்பி வடங்கள்

இப்படி எதுவா வேணா இருக்கலாம். அப்படி பார்த்தால் வேலையிடத்தில் இருக்கும் அனைத்துமே அடங்கி விடும் எனலாம். 

Risk என்பது மேற்கூறிய Hazardனால் ஏற்படும் விளைவுகளை குறிக்கும்.

உதாரணமாக ராத்திரியில் (பகல்ல கூட தான்) கையில பணம், காசு, நகை எல்லாம் எடுத்துகிட்டு போறது Hazard என்றால் யாராவது நம்மை அடித்து போட்டு பணத்தை எடுத்து செல்வது Risk எனப்படும். 


இன்னும் சொல்லப் போனால் Risk என்பது அப்படி பணம் பறிபோவதற்கு எவ்வளவு தூரம் சாத்தியம் உள்ளது என்பதை பொறுத்து அது low riskஆ அல்லது medium riskஆ அல்லது high riskஆ என்பதை கண்டறிய வேண்டும். அப்படி கண்டறியும் முறைக்கு Risk Assessment என்ற பெயர் வழங்கப்படுகிறது.

இங்கே உள்ள சட்டப்படி எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன் முதலாளி Risk Assessment செய்தாக வேண்டும். அப்படி அவர் செய்ய வில்லை என்றால் அவருக்கும் முதல் குற்றத்திற்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
http://statutes.agc.gov.sg/aol/search/display/view.w3p;page=0;query=DocId:cd9437b7-419b-40de-99a3-09f2e7b8c90a%20Depth:0%20ValidTime:01/10/2007%20TransactionTime:01/10/2007%20Status:inforce;rec=0;resUrl=http://statutes.agc.gov.sg:443/aol/browse/relatedSLResults.w3 

ஆக, ஒரு ஊழியர் அவ்வளவு பணத்தை கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி கொடுத்து வருவதற்கு ஒரேஒரு காரணம் தான். அது தான் கொடுத்ததை விட அதிகமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது. அதாவது ‘லாபம்’ அடைய வேண்டும் என்பது.

ஆனால் வேலையிடத்தில் இருக்கும் ஆபத்துகளினால் உயிரிழப்பு ஏற்பட்டு இறந்து போகிறார்கள் அல்லவா அவர்களுக்கு compensation பணம் கொடுப்பார்கள், உதாரணமாக 4000 வெள்ளி கொடுத்து வரும் அவர் இறந்து விட்டார் என்பதற்காக 100,000 வெள்ளி கொடுக்கிறார்கள் என்று வையுங்கள். அந்த பணம் லாபமா? என்றால் இல்லை - அது Total Loss என்று தான் சொல்லப்படும்.
ஆக, நான் சொல்ல வருவது மேலே சொன்ன Hazard என்பதை வேலையிடத்தில் இருந்து முற்றிலுமாக நிவர்த்தி செய்து விட்டாலோ அல்லது அந்த Hazardனால் ஏற்படும் Riskஐ குறைத்து low risk ஆக்கி விட்டாலோ அந்த இடம் பாதுகாப்பாக அமையும்.


அப்படி செய்வதற்கு அதாவது hazard ஐ நீக்குவதற்கு அல்லது riskஐ குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பாதுகாப்பில் அடங்கும்.


உதாரணமாக, ....


(தொடரும்..)

Friday, March 16, 2012

ஹஜ்ரத் வீடு - சிறுகதை


 1

தெருவாடிகள் சேர்ந்து கிட்டிபில்லு, கபடி, ஐஸ்பால் ரெடி விளையாடும் பருவம். பெருசா ஒண்ணும் வெளையாடி கிழிச்சதில்லை என்றாலும் தெருவாடிகள் யாவரும் ஒன்று கூடி ஆச்சிகனிமா வீட்டு வாசலில் கூடி பைசா பிரயோஜனம் இல்லாத - ஆனாலும் கோடி ரூவா கொடுத்தாலும் கிடைக்காத வீண் பேச்சுக்கள் பேசி மகிழ்ந்த காலமது.

சோத்தை விடவும் சினிமா முக்கியமாக தோன்றிய காலமது. வீடியோ வந்த புதுசு. சின்னாப்பாவுக்கு சினிமா காட்ட வேண்டுமென்பது ஆசை. வீட்டு வாசலில் அட்டையில் ‘இன்று புதுக்கவிதை” என்று எழுதி தொங்க விடப்படும். அதை பார்த்து விட்டு ஒரு ஜமா வீடியோவில் படம் பார்க்க வந்து விடுவார்கள். 

ஒரு முறை சங்கத்த பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு சுரேஷ் நாய் குட்டியோடு நடித்த 'செல்வி' எனும் படம் பார்க்க கூட்டத்தோடு கூட்டமாக செவத்தை ஒட்டி ஒக்காந்து படம் பார்த்து கொண்டிருக்க, தூரத்திலிருந்து ம்மா பார்த்து விட, கிட்டே வந்து சட்டையை பிடித்ததும், ‘சும்மா வுடுங்கனி..’ என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க.. வுட்டேன் ஓட்டம்.. வாசல் பக்கம்.. 

மூச்சிறைக்க நின்ற இடம்.. சங்கத்த பள்ளி.. (நாகூர் முஸ்லீம் சங்கம், குஞ்சாலி மரைக்காயர் தெரு). நல்ல பிள்ளை மாதிரி ஓதிகிட்டு இருக்கும் போது துப்பட்டியோடு வாசலில் ம்மா வந்து நல்ல பிள்ளையாட்டம் ஓதிக்கிட்டு இருந்த என்னை ஒண்ணும் பேசாமல் வூட்டுக்கு கூட்டிட்டு வந்து.. வாங்க வேண்டியத வாங்கியது எல்லாம் சிரிப்பா சிரிச்ச கதைகள்.

அப்படி ஒரு நாள் ஆச்சிகனிமா வூட்டு வாசல்ல உக்காந்து இக்கிம் போது தான் ஒருத்தஹ வந்து இறங்குனாஹா, ‘கண்ணுல கண்ணாடி, ஒரு பெரிய மேஜர் ஜெனரல் மாதிரியான தோற்றம், கைலி தான், அரை கை சட்டை” இப்படி சகிதமா வந்திறங்கிய அவர்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை.

சின்னாப்பா யாரையும் சத்தம் போடக் கூடாது என்று சைகை காட்டி விட்டு மிகவும் பவ்யமாக அவர்கள் முன்னால் நடந்து சென்றார்கள். 

கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வீடியோ ஓடும் சத்தம் கேட்டு நாங்களும் வீடியோ பார்க்க ஓடினோம்.

வீடியோவில் ஓடிக் கொண்டிருந்த படத்தை விடவும் நான் வந்த அது புது மனுஷரை தான் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.

கையில் சிகரெட். 
நிலைத்த பார்வை.

மொத்த வீடும் கர்ச்சீஃப் விழுந்த சத்தம் கூட இல்லாமல் கப்சிப் என்று இருந்தது.

கொஞ்ச நேரம் காட்சி முடிந்ததும் வெளியே கிளம்பும் போது என்னிடம் வந்து கன்னத்தில் கை வைத்தார்கள்.

சின்னாப்பா இன்னாரின் மகனார் என்று என்னை அறிமுகப்படுத்தி சொன்னதும்..

“வாப்பா நல்லா இக்கிறாஹலா.. சலாம் சொல்லுங்க..”

அடுத்தடுத்த பிள்ளைகள்..

மறைந்து போனார்கள்.

எனக்கு யார் இவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

-------------------

2

ஹிலுரு (அலை) அவர்களை பற்றிய வரலாறு குரான் ஷரீஃபில் வருகிறது. அந்த பெயரோடு அல்ல.. ‘நம் அடியார்..’ என்ற அடைமொழியோடு வருகிறது. அவர்களின் பெயரில் தெருமுனையில் ஒரு பள்ளி இருந்தது.

தொழுவுற அந்த பள்ளிக்கு போய் பெண்கள் எல்லாம் கபுரடிக்கு ஜியாரத் செய்ய போவது போல் போய் வந்தார்கள்.

கேட்டால், “ஹிலுறு நபி அங்கே ஹாலிற் ஆகிறார்கள்’ என்று காரணம் சொன்னார்கள்.

சின்னாப்பா தான் டெய்லி பள்ளிக்கு போய் ஹிலுறு நபியின் நினைவாக ஃபாத்திஹா ஓதி வந்தார்கள்.

கொஞ்ச நாளாக போக வில்லை. ஏன் என்று கேட்டால், ‘ஹஜ்ரத் அங்கே போய் ஜியாரத் எல்லாம் செய்யக் கூடாது’ என்றார்கள் என்றும் ‘ஹிலுறு (அலை) அங்கே ஹாலிற் ஆக வில்லை என்றும் கூறுவதாகவும்’ சொன்னார்கள்.

ஹிலுறு (அலை) ஹாலிற் ஆகிறார்கள் என்பதை 101 சதவிகிதம் நம்பி வந்த எனக்கு அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னவர்கள் மீது எனக்கு ஆத்திரமாக வந்தது.

‘இவர்களுக்கு என்னா தெரியும்?’ என்று கேட்டேன்.

’அப்படி சொன்ன ஆள் யார்?’ என்ற தேடலின் விளைவாக தெரிந்து கொண்டது ‘கையில் சிகரெட்டோடு கன்னத்தில் தடவியவர்கள் தான் அது’ என்று தெரிந்த போது கலவரம் கண்ட எங்க ஊர் மாதிரி கதிகலங்கி போனேன்.

அப்படி கலவரமடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தது, அதில் முதன்மையானது, “இவர்கள் ஹஜ்ரத்தா?’ என்பதே அது.

தோற்றம் தான் காரணம்.

கையில் தஸ்பீஹ் இருக்க வேண்டிய இடத்தில் சிகரெட் இருந்தது
முகத்தில் தாடி இல்லை. கிளீன் ஷேவ் பண்ணி இருந்தது.
உட்காரும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்..’ இல்லை
எந்திருக்கும் போது, ‘அல்லாஹு அக்பர்’ இல்லை

இவர்களா ஹஜ்ரத்?

-------------------------

3

நண்பர்கள் ஹஜ்ரத் வீட்டில் நடப்பதை பற்றி கிண்டலடித்தார்கள்.

அவர்கள் வீட்டில் புர்தாஹ் ஷரீஃப் மஜ்லிஸ் ஓதப்பட்டது.

வாரா வாரம் ஞாயிறு இரவன்று ஓதப்படும் இந்த மஜ்லிஸுக்கு வீட்டை கழுவி சுத்தம் செய்யப்படும்.

வஹ்ஹாபிகள் எல்லாம் விரல் நீட்டாத தலையெடுக்காத காலத்தில், ஒரு பக்கத்து தெருவாசி இப்படி கேட்டார், “குரான் பெருசா? (பெருசு என்றால் அதன் சைஸால் அல்ல, புனிதமானதா என்ற அர்த்தத்தில்) புர்தா பெருசா?”

நான், “இதென்ன கேள்வி, ‘குரான் ஷரீஃப் தான் பெருசு..” என்றேன்

அவர், ‘குரான் ஓத கழுவி வுட மாட்டாஹலாம், புர்தாவுக்கு வூட்டையே கழுவி வுடுவாஹலாம்.. பாருங்க.. இதெல்லாம் பித்ஆவாக்கும்.. ஷிர்காக்கும்..’ - வஹ்ஹாபிகளுக்கே முன்னோடி நாங்கள்

இன்னும் ”அதாக்கும் இதாக்கும்” என்று கண்டபடி பேசி கலைந்து போனோம்..

கொஞ்ச நாள் கழித்து, எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது, டாக்டர் ஊசி போட்டார், மருந்து மாத்திரை கொடுத்தார், எது கொடுத்தும் தேவலையா போகலை.

எனக்கு எடுத்த பிளட் டெஸ்ட், யுரின் டெஸ்ட், எல்லா டெஸ்டுகளுமே என்னை தவிர நார்மலாகவே இருந்தது.

அப்புறம் என்ன...? - ஓதி பார்த்தா என்ன...?

வேறு யார் கிட்டே ஓதி பார்க்குறது? அவங்கள விட்டா...?

கூட்டிட்டு போனார்கள்...

அங்கே உள்ளே போன போது எனக்கு என்னவோ போல இருந்தது.

என்னடா ‘எஹல பத்தி எஹ வூட்ல ஓதுற புர்தா ஷரீஃபை பத்தி அப்படி இப்படி பேசியிருக்கிறோம்.. இப்போ அஹல்ட்டயே ஓதி பாக்க வந்திருக்கிறோமே..” என்று

தெருவாடிகள் பார்த்து விட்டால் என்ன செய்வது? - யோசனையாக உள்ளே போன எனக்கு அதிர்ச்சி...

எந்த பக்கத்து தெருவாசி குரான் பெருசா? புர்தா பெருசா? என்றெல்லாம் கேள்வி கேட்டாரோ - அதே அவர் ஹஜ்ரத்தின் காலை தன் கண்ணில் வைத்து ஒத்தி கொண்டு இருந்தார் -

----------------------------------

4

அந்த பக்கத்து தெருவாசியான அவர் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது அவர் ரூம்மெட் ஒருவர் தூக்கு போட்டுக் கொண்டு உயிரை விட்டார்.

தன்னை சாகடித்துக் கொண்ட அந்த நண்பரிடன் உயிருக்கு உயிராக பழகியிருந்த அவர் அன்றிலிருந்து மனம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.

போகாத ஊரில்லை, பார்க்காத டாக்டரில்லை.. கொஞ்சம் கூட சரியாகாமல் இருந்து வந்தார்.

கடைசியாக அவரது வீட்டில் ஹஜ்ரத்திடம் கூட்டி வந்தார்கள்.

பத்து ஆளுடைய பலத்தோடு கட்டுக்கடங்காமல் கிடந்த அவரை பெரும் படையே கட்டி இழுத்து போய் அவர்கள் முன்னால் நிறுத்தியது.

ஹஜ்ரத் அவர்கள் அப்பொழுது தான் தூங்கி எழுந்த மாதிரி இருந்தார்கள்.

‘அவரை விடுங்கள்..” என்றார்கள்..

ஒரு பார்வை தான் பார்த்தார்கள்...

சுருண்டு விழுந்து விட்டார் அந்த நண்பர்.

அப்பொழுது விழுந்தவர் தானாம். எழுந்திருக்கும் போது புதிய மனிதராக எழுந்து இருந்தார்.

எனக்கு அவர்கள் தலை வைத்து ஓதி பார்த்தில் மருந்தில் காணாத நலம் அன்னாரின் மகத்துவத்தில் நலமாக தான் போயிருந்தேன்.

ஆனாலும் இவையெல்லாம் எனக்கு குழப்பத்தை அதிகரித்தனவே தவிர தெளிவான நிலைக்கு இன்னும் நான் வரவில்லை.

பொதுவாக சூஃபியிசம் வாயிலாக இஸ்லாத்திற்கு நுழைபவர்கள் முதலில் பெரும்பாலும் நோய் வாய்ப்பட்டிருப்பார்கள். யாராலும் குணமாக்க முடியாமல் போயிருக்கும். அதன் பிறகு ஒரு சூஃபியின் சகவாசத்தால் இவரது உடல் குணமாகியிருக்கும்.

இப்படி குணமாக்கும் சூஃபிகள் தங்களை குணமாக்கும் வைத்தியர்களாக விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. போஸ்டர் அடித்து ஒட்டுவதில்லை. அவர்கள் பாட்டுக்கு ஓரிடத்தில் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களை பற்றி கேள்விப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.

இவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல, முக்கியமாக மதம், ஜாதி இவைகள் ஒரு தடையே அல்ல. இது முழுமையான மனித சேவை.

சரி, நோய் என்றால் என்ன? அது குரான் ஷரீஃபின் ஒரு வாக்கியத்தையோ அல்லது அல்லாஹ்வின் திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமோ அந்த நோய் குணமாகி விடுமா என்ன? கெட்டுப் போன உடல் உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுமா? மேலே சொன்ன வாசகத்தையோ திருநாமத்தையோ இவர்கள் என்றூ அல்லாமல் வேறு யார் சொன்னாலும் குணமாகி விடுமா? அவ்வளவு சுலபமானது தான் நோய் குணமாகி விடும் என்றால் இவ்வளவு மருத்துவமனைகள் உயிரைக் காப்பாற்ற உயிரை எடுப்பது ஏன்?

- இப்படியாக தலையை பிய்த்துக் கொண்டு யோசித்து கொண்டிருந்ததில் மூன்று முடிவுகள் இருப்பதாக ஒரு முடிவுக்கு வந்தேன்.

1. இப்படியெல்லாம் குணமாக்க யாராலையும் முடியாது.

2. இப்படி குணமாக்க இவர்களால் மட்டுமே முடியும். நம்மாலெல்லாம் முடியாது.

3. இவர்களை போல் குணமாக்க நம்மாலும் முடியும்.

இந்த மூன்று முடிவுகளில் ஒன்றே ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எதை தேர்ந்தெடுப்பது?

5

இறுதியாக, மூன்றாவதை தேர்ந்தெடுத்தேன். ஏன் நாமும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை முயன்று பார்த்து அனுபவத்தில் சரி அல்லது தவறு என்று தெரிந்து கொள்ள கூடாது.

நீச்சல் கற்றுக் கொள்ள முடிவெடுத்தவுடன் டைனிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு இருந்தால் எப்படி?

ஹஜ்ரத் அவர்களது வீட்டிற்கே புறப்பட்டேன்.

ஒவ்வொரு நாளும் போய் வாசலில் அமர்ந்து இருப்பேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு என்னை உள்ளே வர அனுமதி தந்தார்கள்.

உள்ளே போய் உட்கார்ந்து இருப்பேன்.

நான்கு மணி நேரம் போய் இருக்கும். நாலு வார்த்தை கூட சேர்ந்தாப்ல பேசியது கிடையாது.

இப்படியே ஒரு வாரம், ஒரு மாதம் கடந்தது.

ஒரு முறை ஒருவர் ஹஜ்ரத் வீட்டிற்கு வந்தார், ஒரு பேப்பர் கட்டிங்கை கொண்டு வந்திருந்தார்.

அதை கொண்டு வந்து, ஹஜ்ரத் அவர்களிடம் காட்டி, “இங்கே பாருங்க... ஹஜ்ரத்.. ஒரு மீனோட படம் இது... இதுல அல்லாஹ்ன்னு எழுதியிருக்கு... நம்ம மார்க்கம் தான் உண்மையான மார்க்கம்... இதெல்லாம் குதரத்..” - அது இதுன்னு பில்டப் கொடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.

எனக்கு அவர் பேச்சை கேட்ட போது புதிதாய் ஒரு வீரம் வந்த மாதிரி..”மாஷா அல்லாஹ்..” என்று பெருமை உணர்வோடு சொல்லிக் கொண்டே திரும்பி  ஹஜ்ரத் அவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.

அவர்கள் முகத்தில் ஒரு சொட்டு மாறுதல் கூட இல்லை. ஒரு பெருமிதம் இல்லை. இந்த செய்தியை கேள்விபடும் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்பவும் இருந்தது.

என்னா இது, இப்படி இருக்கிறார்கள்...? இதற்கு ஒரு சின்ன ஆச்சர்யம் கூட இல்லையே...?

- யோசித்துக் கொண்டிருந்த போது...

ஹஜ்ரத் அவர்கள் என் பக்கம் திரும்பி சொன்னார்கள், “இந்த மாதிரி செய்திலாம் கேள்வி பட்டுட்டு உங்க ஈமான வளர்த்துகாதீங்க... நாளைக்கு மாட்டுட கன்னுல இவர் உருவம் தெரியுதும்பாங்க... அப்போ அதையும் ஈமான் கொள்ளுவீங்களா...?”

- இப்படியாக இருந்தது அவர்களின் பேச்சு..

உடல் நோய் குணமாக்குவதில் அனுபவம் கிடைப்பது இருக்கட்டும்... எனக்குள் நிறைய மன நோய் இருக்கிறதே அதனை முதலில் குணமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பட்டது.

அதற்கு எங்கள் ‘ஹஜ்ரத் வீடு’ தான் சரியான இடம் என்பதே நான் கண்ட முதல் அனுபவம்.