Sunday, January 26, 2020

எனது இரண்டு உலகங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள் - குல்ஜார் சாப் எழுதிய ஹைதர் பட பாடல்

Sire udhad gaye hain subah shaam ke
Wo mere do jahaan saath le gaya,
Tamaam daastaan saath le gayaa..

காலையின் மாலையின் எல்லைகள் கலந்து விட்டன (இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை)
அவள் எனது இரண்டு உலகங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்
எனது வாழ்வின் அனைத்து சம்பவங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்

Bitti naaye.. doori..
Chuon zaraay
Baalmara-e-yo

நான் உன்னிடமிருந்து தூரமாக இருக்கிறேன்
நான் உனது மறுபாதி
என் அன்பானவனே!

Kya kar hove tham
Zar-zaro
Baalmara-e-yo...!

நான் என்ன செய்ய இப்பொழுது?
(நீயே) அனைத்தும்
என் அன்பானவனே!

Wo bepanaah pyaar karta tha mujhe,
Gaya to meri jaan saath le gaya,
Tamaam daastaan saath le gaya..

அவள் என்னை அளவின்றி (உயிருக்கு உயிராய்) நேசித்து வந்தாள்
என்னை பிரிந்த போது, என் வாழ்க்கையை (உயிரை) அவளுடன் எடுத்து சென்று விட்டாள்
எனது வாழ்வின் அனைத்து சம்பவங்களையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்

Sharmand karthas
Aftaabo
Kaymi haal yi zoon

என்னை சங்கடப்படுத்திவிட்டாய்
என் பரிபூரண ஒளிக்கதிரே (சூரியனே)
நீயின்றி என் (நிலவின்) நிலை எப்படி இருக்கும் என்பதை அறிவாயோ?

Khand chaini
Ghach so
Lajj so daraeye
Baalmar-e-yo..

உனது (நினைவு) துகள்களை
நான் எனது சிந்தையில் வைத்துள்ளேன்
என் வாசல் கதவிலேயே  காத்திருக்கிறேன்
என் அன்பானவனே!

Main sajde se utha to koi bhi na tha,
Wo paav ke nishaan saath le gaya

நான் என் தொழுகையை முடித்து விட்டு பார்த்தேன், ஒருவரும் இல்லை
என் காலடியின் அடிச்சுவட்டையும் அவளுடன் எடுத்து சென்று விட்டாள்

Gaya to meri jaan saath le gaya..