Showing posts with label இந்தி பாடல். Show all posts
Showing posts with label இந்தி பாடல். Show all posts

Saturday, September 17, 2011

கியா ஹுவா தெரா வாதா - ரஃபி சாப் பாடிய பாடல்


ஷம்மி கபூர் சொன்னாராம், “ரஃபி இல்லாமல் நான் முழுமையடைய வில்லை” என்று..

உண்மையில் ரஃபி சாப் இல்லாமல் இந்தி சினி பாடல்களும் முழுமடையவில்லை.

சினிமாக்களில் காதலி தன்னை (இந்த படத்தில் பணம், காசு தரும் வசதிக்காக) ஏமாற்றி விட்டதாக கருதி காதலன் பாடும் காதல் தோல்வி பாடல்களில் மிகச் சிறந்த 1 பாடல் என்று தேர்ந்தெடுத்தால் அதில் இந்த பாடல் நிச்சயம் இடம் பெறும்.

”வெண்ணிலா வெள்ளிதட்டு” என்று இந்த பாடலை தழிழ் வடிவிலும் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்தது உண்டு.

இந்த பாடலுக்காக ரஃபி சாபுக்கு தேசிய விருது கிடைத்தது.

யுனானி மருத்துவரும், அரபி, பார்ஸி பட்டம் பெற்ற ஆலிமும், கவிஞருமான மஜ்ரூஹ் சுல்தான் பூரி என்பவர் தான் இந்த பாடலை எழுதினார்.




Kya hua tera waada
Woh kasam, woh iraada

என்ன ஆயிற்று...?
உங்களது வாக்கு..!
நீங்கள் சொன்ன அந்த சத்தியம்..!!
உங்களுக்கு தோன்றிய அந்த நோக்கம், ஆசை ...!!!

Bhoolega dil jis din tumhe
Woh din zindagi ka aakhri din hoga

உங்களை
என் இதயம்
மறக்கும்
தினம் -
அத்தினமே
என் வாழ்க்கையின்
கடைசி
தினமாகும்
---------------
Yaad hai mujhko, tune kaha tha 
Tumse nahin roothenge kabhi


எனக்கு நினைவிருக்கிறது

நீங்கள் சொன்னவை
ஒரு பொழுது கூட
நானின்றி
வாழமாட்டேன் என்றீர்கள்

Dil ki tarah se haath mile hain
Kaise bhala chhootenge kabhi

இதயங்களின்
வழியே தானே
நம் கைகள்
இணைந்தது
பின்பு
பிரிந்ததெப்படி?

Teri baahon mein beeti har shyaam
Bewafa yeh bhi kya yaad nahin

உங்களது
அரவணைப்பில் தான்
எனது
ஒவ்வொரு
மாலைபொழுதும்
கழிந்தது
காதலுக்கு
விசுவாவசமாக இல்லாதவரே...!
இது என்ன
நினைவில்லையா
உங்களுக்கு..?
--------------------------------------
Oh kehne waale mujhko farebi
Kaun farebi hai yeh bata

என்னை வஞ்சகன்
என்று
உரைத்தவரே..!
யார் வஞ்சகர்
கொஞ்சம்
நிதானித்து
சொல்லுங்கள்..!

Woh jisne gham liya pyaar ki khaatir
Ya jisne pyaar ko bech diya

யார் வஞ்சகன்..?
காதலுக்காக
வலியை
வாங்கிக் கொண்டவரா?
அல்லது
காதலை
காசு பணத்துக்காக
விற்று விட்டவரா?

Nasha daulat ka aisa bhi kya
Ke tujhe kuch bhi yaad nahin

என்ன
வகையான
போதையை
இந்த பணம்
தந்திருக்கிறது
பாருங்கள்..!
உங்களுக்கு
காதல் பற்றிய
எந்த
ஞாபகமும் இல்லாமல்
செய்து விட்டது..!
-------------------------------
Kya hua tera waada
Woh kasam, woh iraada

என்ன ஆயிற்று...?
உங்களது வாக்கு..!
நீங்கள் சொன்ன அந்த சத்தியம்..!!
உங்களுக்கு தோன்றிய அந்த நோக்கம், ஆசை ...!!!



Bhoolega dil jis din tumhe
Woh din zindagi ka aakhri din hoga

உங்களை
என் இதயம்
மறக்கும்
தினம் -
அத்தினமே
என் வாழ்க்கையின்
கடைசி
தினமாகும்

-------------------------------

Saturday, November 27, 2010

எனது வேண்டுகோளை செவிமடுங்கள் - ’லெகின்’ பட குல்ஜார் சாபின் பாடல்



ஒரு மகளின் 
வேண்டுகோள் 
தனது 
அன்பான தந்தைக்கு..!


ஆ........ஆ..........ஆ.......... 
என்ற ஆலாபனையோடு 
துவங்கும்
அந்த வேண்டுகோள்
சுனியோ ஜி ஆரஜ் ஓ பாபுலா ஹமார்
என்று பயணிக்கிறது


துணையாக...
கொஞ்சம்
சுகம்
கொஞ்சம்
சோகம்
கூடவே
நானும்..
விரும்பினால் 
நீங்களும்..!


குல்ஜார் சாபின்
மையில் பிறந்த 
குழந்தை..!


லதாவின் 
குரலோடு கலந்த
இனிமை..!







(காட்சியில் நடிப்பு: டிம்பிள் கபாடியா, அலோக் நாத்)


Sunio ji araj mhaari o baabula hamaar

எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!

Sunio ji araj mhaari o baabula hamaar

எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!

Saavan aayo, ghar le jaiyho
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்

Saavan aayo, saavan aayo ghar le jaiho baabula hamaar
மழைகாலம்
தொடங்கி விட்டது,
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்

Sunio ji, sunio ji, sunio
செவிமடுங்கள்,
செவிமடுங்கள்,
செவிமடுங்கள்

Bheeje bheeje angana ki yaad jo aave

ஈரம் - ஈரம்
நிறைந்த
நம் வீட்டின் முகப்பு
என் நினைவலைகளுக்கு
வரும் போது

Rukhi rukhi ankhiyon mein reti udaave 

காய்ந்து போன -
காய்ந்து போன
என் கண்களில்
மணல் பறக்கிறது

Sooni sooni, sooni sooni

வெறுமை,
வெறுமை,
வெறுமை,
வெறுமை

Sooni sooni kori ankhiyaan bhejiyo phuhaar

(மரித்து போன) வெறுமையான
வெறுமையான
என் கண்களுக்கு
நீருற்றை
அனுப்பி வையுங்கள்

Sunio ji araj mhaari o

என் வேண்டுகோளை
செவிமடுங்கள்,

Sunio

செவிமடுங்கள்

Bisra diyo hai kaahe bides bhijaaike 

என்னை
ஒரு அறிமுகமில்லாத
புதிய இடத்திற்கு
அனுப்பி வைத்து
என்னை
ஏன்
மறந்து போனீர்கள்?


Hamka bulaai re baabul doliyaan livaaike 

ஒரு வண்டியை
அனுப்பி
என்னை
ஏன்
நீங்கள் திரும்ப
அழைத்துக்
கொள்ளக் கூடாது..?
என் தந்தையே!


Bhejo ji, bhejo ji

தயைகூர்ந்து அனுப்புங்கள்,
தயைகூர்ந்து அனுப்புங்கள்


Bhejo ji doli uthaaye chaaro kahaar

வண்டியோடு
சேர்த்து
ஒரு நான்கு பேரையும்
அனுப்புங்கள்
(என் ஜனாசாவை தூக்க)


Sunio ji araj mhaari o baabula hamaar

எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!

Saavan aayo, ghar le jaiyho baabula hamaar

மழைகாலம்
தொடங்கி விட்டது,
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்
என் அன்பான தந்தையே!


Sunio ji, sunio ji, sunio ji


தயைகூர்ந்து செவிமடுங்கள்,
தயைகூர்ந்து செவிமடுங்கள்,
தயைகூர்ந்து செவிமடுங்கள்

Sunday, May 23, 2010

இந்த சந்திப்பிலிருந்து பயணத்தை தொடங்க வேண்டும் - குல்சார் சாப் எழுதிய பாடல்

ஆன்ந்தி எனும் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்:

1. இஸ் மோடு சே ஜாத்தே ஹெய்ன் - இந்த பதிவில் இதன் தோராயமான மொழிபெயர்ப்பை படிக்கலாம்

2. சலாம் கீஜியே ஆலி ஜனாப் ஆயிஹே - முஹம்மது ரஃபி சாப் அவர்கள் பாடிய கவாலி. ஐந்து வருடத்திற்கு மட்டும் ஓட்டு கேட்டு வரும் கட்சி தலைவர்/தலைவிகளை பார்த்து மக்கள் கிண்டலடித்து பாடுவது போல் அமைந்திருக்கும். இந்த பாடலின் மொழிபெயர்ப்பு பின்பு பதியப்படும் (தேர்தல் நேரத்தில்)

3. தும் ஆகயே நூர் ஆகயா ஹெய்ன் - நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது.. நீ மட்டும் வந்திரா விட்டால்.. இப்படி போகிறது அந்த பாடல்.

4. தேரே பினா ஜிந்தகி சே கோயி - இந்த அல்டிமேட் பாடலை பற்றி இந்த பதிவில் படிக்கலாம். 

இப்போது இந்த 'இஸ் மோடு சே ஜாதே ஹெய்ன்' என தொடங்கும் இந்த பாடல் தொடங்கும் சூழலுக்குள் செல்ல வேண்டியதாகிறது.

காதலன் அவன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். பெரிய தங்கும்விடுதியில் துணை மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலியானவள் பெரிய வியாபாரியின் மகள். அந்த வியாபாரியோ தனது மகளை அரசியலில் ஈடுபட வைக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அந்த காதலனும் காதலியும் தங்கள் காதலையும் வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சத்தையும் இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த பாடல் அந்த காதலனும் காதலியும் கணவன் மனைவியாகி கருத்து வேறுபாடுகளால் 9 வருடங்களாக பிரிந்து தற்போது மனைவி பெரிய அரசியல்  கட்சியின்  தலைவியாகி கனவன் மேலாளராக இருக்கும்  அந்த  ஹோட்டலில்   வந்து தங்க நேரிடுகிறது.

தனது மனைவி வந்து ஹோட்டலில் தங்கியிருப்பது கணவருக்கு தெரியும். தனது கணவர் தான் அந்த ஹோட்டலின் மேலாளர் என்பதை தன்னை தூக்கி வளர்த்த பிந்தா காக்கா என்பவர் மூலமாக தெரிந்து கொள்கிறாள். பிந்தா காக்கா என்பவர் இருவருக்கும் பிறந்த குழந்தையை கவனித்து கொள்வதற்காக கணவருடனேயே தங்கியிருந்திருப்பார்.

தான் தூக்கி வளர்த்த பிள்ளையை 9 வருடங்கள் கழித்து அவளுக்கு பிடித்த கீரை செய்து கொண்டு கொடுத்து அவளின் கணவருடனேயே தங்கி விட்டதாக சொல்லி விட்டு விடைபெறும் போது இந்த பாடல் தொடங்குகிறது.

இந்த பாடலின் முடிவில் மனைவி 9 வருடங்களுக்கு பிறகு தனது கணவனை சந்திக்கிறாள்

கட் டூ.. காதலன் காதலி அகேய்ன்..

அவர்கள் இருவரும் வாழ்க்கை எனும் சந்திப்பில் (சந்திப்பு என்றால் பல சாலைகள் சந்திக்கும் இடம்) நிற்கிறார்கள். அவர்களின் முன்னால் நிறைய பாதைகள் இருக்கின்றன.. எந்த வழியே செல்வது என்பது அவர்கள் முன் நிற்கும் கேள்வி. காதலிக்கு தான் தேர்ந்தெடுக்கும் பாதை காதலனிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதும் காதலனுக்கு காதலியிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம்...



Is mod se jaate hain - 2

இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்

Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe - 2

சற்று 
மெதுவாக செல்லும்
பாதை
சற்று 
துரிதமாக செல்லும்
பாதை

- மேலே சொன்ன இரு பாதைகளில் ஒன்றினை வழியாக தேர்ந்து எடுக்க வேண்டும், அப்படி எடுத்து சென்றால் -

Patthar ki haveli ko
Shishe ke gharaundo mein
Tinko ke nasheman tak

கற்களாலான அரண்மனை
கண்ணாடியினாலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்

-
'கற்களாலான அரண்மனை' என்பது பிரிந்து விடாத நிலையான வாழ்க்கை அதாவது நீடித்து நிற்கும் மணவாழ்வு

கண்ணாடி வீடு என்பது சிறிது காலம் தாங்கும் ஆனால் ரொம்ப பிரஸ்ஸரை தாங்க முடியாது, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடும் மணவாழ்வு

வைக்கோலாலான சிறு குடில் என்பது இந்த இடத்தில் ஊதி விட்டால் கூட பறந்து விடும்.. பவுண்டேஷன் இல்லாத அதாவது அடித்தளம் இல்லாத கொஞ்சம் நாள் கூட வாழாமல் பிரிந்து விடும் இந்த கால மண வாழ்க்கையை கூட உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்..

மேலே சொன்ன இந்த மூன்று சேரிடங்களும் உள்ளது. அந்த லவ் பேர்ட்ஸ் மிகவும் ஜாக்கிரதையாக தங்களது பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்..

Is mod se jaate hain

Aa…Is mod se jaate hain

இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..


ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..

Aandhi ki tarha ud kar ik raah guzarti hai - 2
Sharmaati huwi koyi qadmo se utarti hai
In reshmi raaho mein ik raah to woh hogi

Tum tak jo pahonchti hai
Is mod se jaati hai

புயலைப் போல்
கடுமையான
பாதைகளும்
உண்டு
வெட்கப்பட்டுவதை போல்
நழுவி செல்லும்
பாதைகளும்
உண்டு -
இத்தகைய
பட்டு போன்ற
பாதைகளில்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
உன்னிடம்
நிச்சயம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்

Ik door se aati hai paas aake palat-ti hai - 2
Ik raah akeli si rukti hai na chalti hai
Ye soch ke baithhi hu ik raah to woh hogi
Tum tak jo pahonchti hai is mod se jaati hai

சில பாதைகள்
தூரத்திலிருந்து வருகிறது
(உன்னிடம் அழைத்து செல்லும் என்று நினைத்த போது)
அந்த பாதை
திரும்பி (ஏமாற்றி விட்டு)
பக்கத்திலேயே ( பயணத்தை தொடங்கிய இடத்திற்கே)
வந்து சேர்த்துவிடுகிறது
ஒரு பாதை
நகராமல் (தவறான வழியைகாட்டுகிறது)
தனிமையில் உள்ளது
நான் யோசனையில்
உட்கார்ந்து விட்டேன்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
நிச்சயம்
உன்னிடம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்

Is mod se jaate hain - 2

Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe

Patthar ki haveli ko
shishe ke gharaundo mein
Tinko ke nasheman
tak  (tak means all the above three)

Is mod se jaate hain
Aa…Is mod se jaate hain

இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்


சற்று
மெதுவாக செல்லும்
பாதை
சற்று
துரிதமாக செல்லும்
பாதை


கற்களாலான அரண்மனை
கண்ணாடியிலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்
இந்த
மூன்றில் ஒன்றிற்கு
செல்ல


இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்


ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்
------------------------------------------------------------------------------------------------

குல்சார் சாப்  பாகிஸ்தானில் உள்ள 'டினா' எனும் ஊரில் பிறந்ததினாலோ என்னவோ இவர் பாடல்களில் நிறைய உருது வார்த்தைகள் கல்ந்திருக்கும்,
ஆர்.டி.பர்மன் இந்த பாட்டிற்கு இசையமைத்து முடித்த பிறகு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டாராம்.. திடீரென்று.. இந்த பாடலில் உள்ள ஒரு வார்த்தையான 'Tinko ke nasheman'  வில் வரும் 'நஷேமனை' குறிப்பிட்டு இது எங்கே உள்ளது என்று கேட்டாராம்.

அதற்கு குல்சார் 'நஷேமன்' என்றால் 'குடிசை' என்று விளக்கினாராம்.

சஞ்சீவ் குமாரும் கூட இதே கேள்வியை கேட்டிருக்கிறார்.

குல்சார் சாபின் பாடல்களுக்கு சரியான விளக்கத்தை அவர் மட்டும் தான் விளக்க முடியும்..

Friday, May 21, 2010

இரண்டு பித்தர்கள் பகலிலும், இரவிலும் வாழ்க்கையை, வசிப்பிடத்தை தேடி -

இந்த பதிவில் இதே படத்தில் வரும் 'ஏக் அகேலா இஸ் ஷெஹர் மெய்ன்' என்ற பாடலை சோக அலைவரிசையில் கேட்டு லயித்திருக்கலாம். இதே பாடலை மகிழ்ச்சியின் அலைவரிசையில் இங்கே பாடப்படுகிறது அல்லது பதியப்படுகிறது.

படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர் (கோல் மால் (தமிழில் தில்லுமுல்லு) எனும் படத்தில் நடித்தவர் தான்), ஜரினா வஹ்ஹாப் (மை நேம் இஸ் கானில் ஷாருக்கானின் - அம்மிஜானாக - அம்மாவாக வருபவர்)
பாடியவர்கள்: பூபிந்தர், ரூனா லைலா (- இவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்)

இந்த பாடலுக்காக குல்ஜார் சாபுக்கு பிலிம்பேர் 'சிறந்த பாடலாசிரியர்' விருதை வழங்கி விருதுக்கு பெருமை சேர்த்துக் கொண்டது..

கட்டுமானம் நடைபெறும் ஓர் கட்டடத்தின் இடையே ஒரு நடுத்தர வர்க்க இளஞ்சோடிகள் தங்களுக்கு ஓர் இல்லம் வேண்டும் என்ற கற்பனையில் கவிஞர்களாகவோ அல்லது பித்தர்களாகவோ மாறிய போது.. என்னையும் இசையின் காதலானாக மாற்றி விட்டார்கள்..




Bhupinder: Do diwaane shaher mein, raat mein aur dopahar mein
Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
(repeated by Runa)

இரு பித்தர்கள்
இந்த நகரத்தில்
இரவும்
பகலும்
வாழ்வாதாரம் தேடுகின்றனர்.. (ஆபோ தானா என்றால் நீரும் உணவும் என்று அர்த்தம்)
ஓர்
வசிப்பிடம் தேடுகின்றனர்..

Runa: In bhoolbhulaiya galiyo mein, apna bhi koyi ghar hoga
Ambar pe khulegi khidki ya, khidki pe khula ambar hoga

(repeated by Bhupinder)

இந்த
சிக்கல் நிறைந்த
குழப்பமான
வழிதடங்களுள்
நமக்கென்று
ஒரு
இல்லம்
இருக்கும்..

விண்ணில்
சாளரம்
திறக்கும்
அல்லது
சாளரம் வழி
தெளிவான வானமது
தெரியும்

Asmaani rang ki aankho mein
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்

R: Asmaani ya aasmaani?
ஒப்பிடமுடியாதவா அல்லது நீல நிறமா? (வானத்தின் நிறமா?)

B: Asmaani rang ki aankho mein

Basne ka bahaana dhhundhhte hain, dhhundhhte hain
R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்
நாம்
குடியேற
காரணம்
தேடுவோம்

நாம்
தேடுவோம்

வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம் தேடுவோம்

B: Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்R: Taare, aur zameen par?

பூமியில் இறங்கி
நடக்கும் போது


நட்சத்திரம், அதுவும் பூமியில்..?

B: of course
சந்தேகமே இல்லை..

Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்
பூமியில் இறங்கி
நடக்கும் போது

R: Hmmm hmmm
ஹும்.. ஹூம்..

B: Aakaash zameen ho jaata hai
வானம்
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்

R: A aa aa
ஆ..

B: Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai
அந்த இரவானது
மீண்டும்
இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி
விடும்..

R: Jab taare zameen par chalte hain


Aakaash zameen ho jaata hai
Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai

விண்மீன்கள்
பூமியில் இறங்கி
விளையாடும் போது
வானமானது
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்
அந்த இரவானது
மீண்டும்
தனது இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி விடும்


B: Pal bhar ke liye
R: Pal bhar ke liye
சில நொடிகளுக்கு மட்டிலும்
சில நொடிகளுக்கு மட்டிலும்


B: Pal bhar ke liye in aankho mein
சில நொடிகளுக்கு மட்டிலும் இந்த கண்களில்

Ham ek zamaana dhhundhhte hain, dhhundhhte hain
நாம் ஓர் உலகை தேடுவோம், தேடுவோம்..

R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம்
தேடுவோம்

Sunday, May 02, 2010

உன்னிடமுள்ள என்னுடைய வேறு சில உடைமைகளையும் திரும்ப அனுப்பவும் - குல்ஜார் சாப் பாடல்கள்

கொட்டுகின்ற ஒரு மழை நாள் இரவில் மஹேனும் சுதாவும்  புகைவண்டி  நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் சந்தித்து கொள்கிறார்கள்.  மஹேனும் சுதாவும் திருமணமாகி பிரிந்து வாழ்கிறவர்கள். இருவரும் மறக்க நினைத்திருந்த அவர்களது வாழ்க்கையை திரும்பி பார்க்க அந்த அறையும் அன்று பெய்த மழையும் ஒரு சந்தர்பத்தை வழங்குகிறது.

அவர்களுடைய அந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மூன்றாவது நபராக அந்த அறையில் அவர்களுடனே விடியும் வரை வசிக்கிறது இல்லை இல்லை விடிந்த பின்னும் கூட தொடர்கிறது. அவர்களின் பிரிவுக்கு  மஹேனுக்கும் மாயாவுக்கு திருமணத்திற்கு முன்பிருந்த உறவு திருமணத்திற்கு பின்பும் தொடர்வதாக சுதா நம்புவதும் சுதாவின் உரிமை கொண்டாடுதலுமே காரணமாக அமைகிறது.

ஆனால் சுதாவை கரம் பிடித்த பிறகு மாயாவை மறந்து விட்டு சுதாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவே மஹேன் ஆசைப்பட்டான். மஹேனுக்கு நடந்த ஒரு வகை கட்டாய திருமணத்திற்கு  முன்பு  திடிரென்று சொல்லாமல் கொல்லாமல் காணாமல் போன மாயா திருமணத்திற்கு பிறகு திடீரென்று வந்து நிற்கிறாள்.

மஹேனை பொறுத்தவரை அவனுக்கு அது கட்டாய திருமணம் அதுவும் மாயா திடீரென மறைந்ததால் எப்போது வருவாள் ஒருவேளை திரும்பவே வராமல் கூட போய்விடலாம் என்ற நிலையில் ஒத்துகொண்ட திருமணம்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு மாயா வந்தால் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என வாக்குறுதி கொடுத்து நடந்தேறிய திருமணம். இப்போது திடுதிப்பென்று மறைந்த மாயா திரும்ப வந்து நிற்கிறாள். என்ன செய்வான் அவன்?

சுதாவை பொறுத்தவரை தனது கணவன் தனக்கு மட்டுமே முழுமையாக கிடைக்க வேண்டும் என்று எல்லோரையும் போல் ஆசைப்படும் பெண்மணி. திருமணத்திற்கு முன்னர் மஹேன் தனக்கும் மாயாவுக்கு உள்ள தொடர்பை நேர்மையாக வெளிப்படுத்திய போது மாயவையே திருமணம் செய்து கொள்ள சொல்லி ஒதுங்க நினைத்தாள் கஷ்டத்துடன் தான். ஆனால் மாயா மாயமாய் மறைந்து விட்ட நிலையில் மஹேனின் மாயாவை மறந்துவிடுகிறேன் என்ற வாக்குறிதியை நம்பி திருமணம் செய்து கொண்டாள்.

மாயாவை பொறுத்தவரை இப்படி ஒரு திருமணம் நடந்தேறும் என்று அவளுக்கு தெரியாது, அவளுக்கென்று யாருமும் கிடையாது. அவள் இப்படி தான் அடிக்கடி சொல்லாமல் கொல்லாமல் அமைதியை தேடி மறைந்து போவாள். ஒரு முறை அப்படி மறைந்து விட்டு திரும்பி வந்த போது கிடைத்து கொண்டிருந்த அன்பு இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்று நம்பவும் முடியாமல் வேறு எந்த ஆதரவும் கூட இல்லாமல் இல்லை பிற ஆதரவையும் விரும்பாமல் தவிக்கின்றாள்.

யார் மீதும் குற்றம் சொல்ல முடியாத அந்த சூழலில்  கைதிகளாகிறார்கள்  மூவரும். மஹேன் வீட்டில் குடியிருந்த போது மாயா புழங்கிய துணி மணிகளை அப்படியே போட்டு வைத்திருந்தால் கெட்டு போய் விடும் திருப்பி அனுப்பி வைத்தால் அவளாவது உபயோகப் படுத்திக் கொள்வாள் என்று அந்த துணிமணிகளை திருப்பி அனுப்பி வைக்கிறார்கள் சுதாவும் மஹேனும்.

மாயா திருப்பி வந்த சாமான்களை பெற்று கொண்டு அவளது வேறு சில உடைமைகளையும் அந்த வீட்டில் இருப்பதாக சொல்லி ஒரு பக்க கவிதையை தந்தியில் அனுப்புகிறாள்.

'இது தான் மாயா' என்று மஹேன் கவிதையை படிக்க ஆரம்பிக்க ஆரம்பத்தில் கவிதை என்று எண்ணி ரசிக்க ஆரம்பித்த சுதா அவளுக்கு உரிமையான உடைமைகளையும் கேட்கும் போது எதிர்வினை செய்கிறாள்...

இனி..
மஹேனின் குரலில் மாயாவின் கவிதையை சுதாவோடு சேர்ந்து நாமும் கேட்க தொடங்குவோம்.. அதை தொடர்ந்து மாயாவே அவளது கவிதையை பாடுகிறாள்..




மஹேன்:
உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை நாம் இருவரும் விளக்குகள் பொருத்தப்படாத மிதிவண்டியில் ஓட்டி வந்ததற்காக பிடிபட்ட போது, நாம் பசியோடும், தாகத்தோடும் இருப்பதாகவும் கையில் காசில்லாத ஏழைகளை போலும் நடித்தோமே, அப்போது நம்மை பிடித்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள்  நம் மீது இறக்கப்பட்டதோடு நமக்கு 50 பைசாவும் கொடுத்து விட்டு சென்றாரே.. அதில் 25 பைசா என்னுடையது. அதையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்...

சுதா:
ஹௌ சுவீட்.. என்ன இனிமை? அப்புறம்...

மஹேன்:
உன்னுடன் கழித்த இளவேனில் கால ஈர இரவுகளில் ஒன்றினை என்னுடைய கடிதங்களில் ஒன்றில் மடித்து கிடக்கிறது. அந்த இரவினையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்..

என்னுடைய வேறு சில பொருள்களும் உன்னுடன் உள்ளது. அதனையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்.. அதில் இலையுதிர் காலமும் அடக்கம்.. அந்த காலத்தில் இலையுதிர்ந்த சப்தம் என் காதோரம் கவிதை பாடி சென்றது, அந்த மரத்தின் தண்டுகள் இன்னமும் நடுக்கத்தில் இருக்கின்றன.. அவைகளை திருப்பி கொடுத்து அனுப்பவும்..

நூற்றி பதினாறு சந்திர இரவுகளையும், உன் தோலில் உள்ள மச்சத்தையும், ஈரம் காயாத மருதானி வாசனைகளையும், ஒருவருக்கொருவர் செய்த பொய்யான சத்தியங்களையும்..

சுதா:
நான் ஏன் அதையெல்லாம் அவளிடம் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்?
இதையெல்லாம் திருப்பி அனுப்பாத போதும், மாயா நம்மோடு தான் இரவும் பகலும் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய பொருள்களென்று அவள் திரும்ப கேட்பதை அனுப்பாமல் நம்மோடு வைத்திருந்தால் மட்டும் என்ன ஆகி விடும்..?

மாயா:
Mera kuch saamaan tumhare paas pada hai
o o o ! saavan ke kuch bheege bheege din rakhe hain
aur mere ik khat main lipti raat padi hai
vo raat bhujaa do, mera vo saamaan lauta do
mera kuch saamaan tumhaare paas pada hai
patjhad hai kcuh ... hai na ?
o ! patjhad main kuch patton ke girne kee aahat
kaanon main ek baar pahan ke laut aai thee
patajhad kee vo saakh abhi tak kaanp rahi hai
vo saakh gira do, mera vo saamaan lauta do

என்னுடைய வேறு சில உடைமகளும் உன்னிடம் உள்ளது
இளவேனிற் கால ஈர தினங்களை அங்கே உன் வீட்டில் வைத்துள்ளேன்
அத்தோடு இனிமை நிறைந்த இரவுகளையும் என் கடிதத்தில் மடித்து வைத்துள்ளேன்
அந்த இரவுகளை முடித்து விட்டு எனக்கு என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பவும்
இது அல்லாமல், என்னுடைய வேறு சில உடைமைகளும் உன்னிடம் உள்ளன
இலையுதிர்ந்த சில மரங்கள் இருந்தனவே.. இப்பவும் இருக்கின்றது தானே?
அங்கே மரத்திலிருந்து இலையுதிர்ந்த சத்தங்களும் உண்டு
ஒரு முறை அந்த சத்தம் என் காதோரம் வந்து விட்டு திரும்ப சென்று விட்டது
அந்த மரத்தின் தண்டுகள் இப்பவும் நடுங்கிகொண்டு இருக்கின்றது
அந்த தண்டை எடுத்து என்னுடைய உடைமகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------
ek akeli chhataree main jab aadhe aadhe bheeg rahe the
aadhe sookhe aadhe geele, sukha to main le aaye thee
geela man shayad bistar ke paas pada ho
vo bhijwa do, mera vo saamaan lauta do

நாம் ஒரு முறை ஒரே குடையில் பாதி நனைந்து சென்ற போது
பாதி நனைந்தும் பாதி நனையாமலும் இருந்தோம், நனையாமல் இருந்த பகுதியை என்னுடன் எடுத்து வந்து விட்டேன்
ஆனால் நனைந்த பாதி அங்கே தான் எங்கேயோ உனது படுக்கையில் ஓரமாக படுத்திருக்கலாம்
அதை திருப்பி அனுப்பி வைத்து விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து இதனையும் திருப்பி அனுப்பி வைத்து விடவும்
--------------------
ek so sola chaand ki ratain ek tumhare kaandhe ka til
geeli mahendi ki khushbu, jhoot mooth ke shikwe kuch
jhooth mooth ke wade sab yaad karaa do
sab bhijwa do, mera vo saamaan lauta do

ஒரு நூற்றி பதினாறு இரவுகளும், உன் தோல்பட்டையில் உள்ள மச்சத்தையும்
ஈரம் போகாத மருதாணியின் நறுமணத்தையும், போலியாய் கோபப்பட்டு கிறுக்கர்களை போல் நடந்த காட்சிகளையும்
ஒன்றுவிடாமல் எனக்கு அத்தனையையும் நினைவூட்டும் நாம் செய்து கொண்ட பொய்யான சத்தியங்களையும்
இன்னும் என்னுடையதான அத்தனையையும் திருப்பி அனுப்பி விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------------
ek ijaazat de do bas, jab isako dafanaaungee
main bhi vaheen so jaungee
main bhi vaheen so jaungee

அத்தோடு எனக்கு நீ ஒரு அனுமதியையும் வழங்கி அனுப்பி விடவும், எப்போது அந்த உடைமைகளை நான் எரிக்கின்றேனோ
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதர்கான  அனுமதியையும் வழங்கிவிடவும்
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதற்கான அனுமதியையும் வழங்கி விடவும்
---------------------
படம்: இஜாஜத்
கவிதை(கஜல்) வரிகள்: குல்ஜார்
இயக்கம்: குல்ஜார்
நடிப்பு: நசிருதீன் ஷா, ரேகா, அனுராதா படேல்
இசை: ஆர்.டி.பர்மன்
பாடியவர்: ஆஷா போன்ஸ்லே (ஆர்.டி.பர்மனின் மனைவி)
படம் வெளியான ஆண்டு: 1987
தேசிய விருதுகள்:
சிறந்த பாடகி: ஆஷா போன்ஸ்லே (1988)
சிறந்த பாடலாசிரியர்: குல்ஜார் (1988)

Saturday, May 01, 2010

மௌனமான காதல் கதையை தண்ணீரினால் எழுதினால்.. - இந்தி (குல்ஜார்) பாடல் வரிகள்

குல்ஜார் சாபின் கஜலுக்கு நான் ரசிகன். அவர் எழுத்தில் இருக்கும் புள்ளிகளை கூட நான் ரசிக்கிறேன்.

ஏற்கனவே 'ஆன்ந்தி' எனும் படத்தில் வரும் 'தேரா பினா ஜிந்தகி சே கோயி' எனும் பாடலை அதில் வரும் வசனங்கள் உள்பட மொழி பெயர்த்திருந்தேன்.

அதன் பிறகு சென்ற பதிவில் 'கினாரா' படத்தில் வரும் 'நாம் கும் ஜாயேகா' பாடலையும் ஏதோ எனக்கு தெரிந்த வரையில் மொழி பெயர்த்திருந்தேன்.

இப்போது அந்த வரிசையில் மூன்றாவது பாடல் 'லிபாஸ்' எனும் படத்தில் வரும் 'காமோஷ் ச அஃப்சானா..' பாடலை மொழி பெயர்க்க முயற்சி எடுத்திருக்கிறேன்.

இனி பாடல்,




பல்லவி
(பெண்)
காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சானா

யாரும் அறிந்திராத
இந்த 
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திராத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 1
(பெண்)
தில் கி பாத் நா பூச்சோ, தில் தோ ஆத்தா ரஹேகா
தில் பஹேகாதா ரஹா ஹேய்ன்; தில் பஹேகாதா ரஹேகா
தில் கோ தும்னே, ஓ, குச் சம்ஜ்ஹாயா ஹோதா

என் மனதை பற்றி
மட்டும்
எதுவும் கேட்டுவிடாதே
அது
ஓரிடத்தில்
நிலையாக நில்லாமல்
சுற்றிக் கொண்டே
இருக்கிறது


மேலும்
அது
பயத்தில்
நடுங்கி கொண்டுமிருக்கிறது -
இன்னமும்
நடுங்கி கொண்டே
தானிருக்கிறது


நீ தான்
என் மனதிடம்
எதுவோ
சொல்லியிருக்க கூடும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திராத
இந்த
மௌணமானகாதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!


சரணம் 2
(பெண்)
செஹ்மே சே ரெஹ்தே ஹெய்ன் ஜப் யே தின் தல்தா ஹெய்ன்
ஏக் தியா புஜ்தா ஹெய்ன், ஏக் தியா ஜல்தா ஹெய்ன்
தும்னே கோய், ஓ, தீப் ஜலாயா ஹோதா

பகலின்
வெளிச்சம்
முடிவுறும் போது
இருள்
தொடங்க இருப்பதை
எண்ணி
நான்
அச்சமடைந்தேன்.!


ஒரு
விளக்கு
அணைந்த பொழுது
இன்னொரு
விளக்கு
திடீரென
எரிய ஆரம்பித்தது


அந்த விளக்கை
நீ தான்
ஏற்றியிருக்க
வேண்டும்..!

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத 
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 3
(ஆண்)
கித்னே சாஹில் டூண்தே, கோயி ந சாம்னே ஆயா
ஜப் மஜ்தார் மெய்ன் தூபே, சாஹில் தாம்னே ஆயா
தும்னே சாஹில், ஓ, பெஹ்லே பிச்சாயா ஹோதா

எத்தனையோ
கரைகளை தேடி
அலைந்திருந்தேன்
எதுவும்
என் கண்களுக்கு
தென்படவில்லை


நடுக்கடலில்
நான் மூழ்கவிருந்த
நேரத்தில்
கரை ஒன்று
கை கொடுத்தது


நிச்சயமாக
அந்த கரை
நீ
அமைத்த 
தாகதானிருக்கும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை


நானும்
கேட்டிருக்க
போவதில்லை

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

Sunday, April 18, 2010

நாம் கும் ஜாயேகா - பெயர் மறைந்து விடும் - இந்தி பாடல்

 கார் மெக்கானிக்காக இருந்து ஸ்பானரை பிடித்துக் கொண்டிருந்த 'சம்பூரன் சிங் கல்ரா' என்ற பஞ்சாபியான அவர் 'குல்ஜாரா'க மாறி பேனாவை பிடிக்க ஆரம்பித்த போது மழையாக பொழிந்தது கவிதை.

அப்படி ஒரு மழை தான் இந்த பாடல்.
நனைந்து விடுங்கள்
குல்ஜார் காய்ச்சல்
வந்தால்
மீண்டும் நனைந்து விடுவது நன்மை பயக்கும்..

 

நான் புரிந்து கொண்டதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்:

பல்லவி:

Naam gum jaayegaa,
Cheharaa ye badal jayegaa
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பெயர் மறைந்து விடும்
முகம், என் தோற்றம் மாறி விடும்
என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்
(which means - if you bother to remember)

சரணம் 1:
Waqt ke sitam, kam hasin nahin
Aaj hain yahaan, kal kahin nahin
Waqt se phare agar, mil gaye kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

(கண்ணீரை தரும்)
காலம் நேரம் கொடுமையானது,
ஆனால் அதுவே அழகானதும்


இன்று இங்கே (இம்மையில்) இருக்கின்றோம்
நாளை இருக்க போவதில்லை


கால நேரங்களுக்கு
கட்டுப்படாத
ஒரு உலகத்தில்
நாம் சந்திக்கக் கூடும்
(அப்போது...)


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 2:
Jo guzar ga_i, kal ki baat thi
Umr to nahin, ek raat thi
Raat kaa silaa agar, phir mile kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

எது நடந்ததோ
அது
நேற்றைக்கு சொந்தமானது


அது ஒரு இரவை
போன்றது
வாழ்க்கை முழுமைக்குமானது
அல்ல


அந்த இரவின் தொடர்ச்சி
திரும்பினால்,
நாம்  மீண்டும்
(அந்த இரவை)
அனுபவிக்கலாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 3:
Din dhale jahaan, raat paas ho
Zindagi ki lau, uunchi kar chalo
Yaad aaye gar kabhi, ji udaas ho
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பகலின் நேரங்கள்
முடிவுரை
எழுதும் போது -
இரவு
எப்போதும்
அருகிலேயே
இருக்கும்
(உடனே
தொடங்கிவிடும்)


(அப்போது)
உன்
வாழ்க்கை எனும் விளக்கின்
ஒலியை
அதிகமாக்கி விடு


உனக்கு கண்ணீரை
தந்த
அந்த கனங்களை
(அந்த விஷயங்களை)
நினைத்துக்
கொண்டிருக்க வேண்டாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்