'வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்' ன்னு சொல்வாங்க, அதோட 'குழந்தைய வளர்த்துப் பார்'ன்னும் சேர்த்துக்கலாம்னு தோணுது.
இங்கே சிங்கப்பூரில் பங்களாதேஷை சேர்ந்த நண்பரின் நண்பர் ஒருவரின் குழந்தை முந்தா நாள் இறந்து விட்டது. நேற்று ஜனாசா எடுத்தாகி விட்டது.
குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் மறைப்பை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டது. கழுத்தில் சுற்றிய படியே அங்கிருந்து ஓட முயன்று இருக்கிறது. கழுத்து நெறிக்கப்பட்டு குழந்தை மௌத்தா போயிடுச்சு.
(அதாவது குழந்தை நாற்காலியில் உட்கார்ந்து மேசை மேலுள்ள கணினியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னையே அறியாமல் ஜன்னலில் உள்ள மறைப்பில் தன் கழுத்தை தானெ சுற்றிக் கொண்டது. இது தெரியாமல் விளையாடி முடிந்ததும் இடத்தை விட்டு நகர முயன்ற போது கழுத்தில் மாட்டியிருந்த அந்த மறைப்பு பிடித்து அந்த பிள்ளையை இழுக்க நாற்காலியிலிருந்து கீழே விழுந்து தொங்கி இருக்கிறது பிள்ளை.)
(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்)
குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கே தானே சும்மா விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்றெல்லாம் விட்டு விட முடியாது.
எதையாவது எடுத்து வாயில போட்டுடும். பிளாஸ்டிக் ஜாமான், சின்ன சின்ன விளையாட்டு பொருள்கள், மருந்து, மாத்திரைகள், வீடு சுத்தம் செய்கின்ற அமிலங்கள் இப்படி எல்லாத்தையும் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.
ஒரு அம்மா துணிகளை இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போன் வந்தது என்று துணியின் மீது கார்ட் லெஸ் அயர்ன் பாக்ஸை வைத்து விட்டு பேச போயிருக்கின்ற நேரம் குழந்தை வந்து தொங்கி கொண்டிருந்த துணியை பிடித்து இழுத்திருக்கிறது. நினைத்து பாருங்கள், துணியோடு சேர்ந்து அயர்ன் பாக்ஸும் விழுந்தால் என்னாகும் என்று.
குழந்தைக்கான விளையாட்டு பொருள்கள் வாங்கும் போது '3 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஏற்றது அல்ல' என்றும் 'நச்சு தன்மையுடையது' அல்ல என்றும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை கவனித்து பார்த்து தான் வாங்க வேண்டும்.
இன்னும் சமைக்கும் போது எல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக குழந்தையை அருகில் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் ஒரு ரெண்டு மூன்று வருஷத்துக்கு முன்னாடி இங்கே என் குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு சுத்திலும் தலையணையை வைத்து வீடு கட்டுற மாதிரி அடுக்கி வைத்து விட்டு கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று திரும்பி பார்த்தால், தலையணையை எல்லாம் தாண்டி கட்டிலின் ஓரத்துக்கு வந்து கட்டிலிலிருந்து இறங்கி கொண்டிருக்கிறது என் குழந்தை. பயங்கரம்.
சாதாரணமாக பெரியோர்களான நமக்கே, நம்மை சுற்றியிருக்கும் எந்த செயல் அல்லது சூழல் அல்லது பொருள் எவ்வாறெல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படி தெரியும் என்று எதிர்பார்ப்பது?
ஆனால் பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமக்கு மட்டுமல்ல நம் குழந்தைக்கு எது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அடையாளம் கண்டு அதை தடுக்கும் கடமை நமக்கு இருக்கவே செய்கிறது.
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Thursday, February 11, 2010
Tuesday, November 10, 2009
கைத்தொலைபேசியை பயன்படுத்துவது ஆபத்தானதா?
இன்றைக்கு ஒரு மெயிலை படித்தேன், அதில் கைத்தொலைபேசியை (ஹேண்ட் போன் அல்லது செல்லுலர் போன் அல்லது செல்) பேண்ட்டில் மாட்டிக் கொண்டு போனால் இடுப்பு எலும்பு நொறுங்கி விடும் என்று துருக்கி நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். 150 பேர்களிடம் நடந்த சோதனையில் 122 பேர்களின் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் அந்த மெயில் சொன்னது.
இது போல் பல சுவாரஸ்ய மெயில்களும் ஹேண்ட் போனை பற்றி வந்ததுண்டு. இரண்டு பக்கமும் ஹேண்ட் போனை வைத்து முட்டை பொறிப்பது போல் எல்லாம் வந்து நம்மை பயமுறுத்தியதுண்டு. அதாவது நம்முடைய காதும் அதோடு சேர்ந்து மூளையும் சேர்த்து சமைக்கப்பட்டு விடுமோ என்று நினைத்து பார்த்தது உண்டு.
ஆனால் நினைத்து தான் பார்த்தோமே தவிர, அதற்காக கலங்கியதெல்லாம் கிடையாது, அது உண்மையாக இருக்குமோ என்று கவலையாவது பட்டிருப்போமா என்றால் அதுவும் கிடையாது என்றே நினைக்கிறேன்.
சரி ஒரு வேலை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட யாரும் ஹேண்ட் போன் பேசுவதை நிறுத்த போவதில்லை என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் உடம்புல இடுப்பு எலும்பு எப்படி ஒரு பாகமோ அது போலவே ஹேண்ட் போனும் ஒரு பாகமாகவே ஆகி விட்டது. yes, hand phone is not our belonging, it is part of our body.
சிகரெட் குடிச்சா கேன்சர் வரும்னு சொன்னாங்க, அதுக்காக சிகரெட் குடிக்கிறதை யாரும் நிறுத்திட்டாங்களா, என்ன? - அதுவும் தவிர சிகரெட் கம்பெனி ஆரம்பித்து நஷ்டமா போன முதலாளி யாருமே இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.
சிகரெட் அட்டை பெட்டியில் சிகரெட் கம்பெனி காரர்கள் போடுவது போல் "சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது" என்று ஹேண்ட் போன் கம்பெனி காரர்கள் "ஹேண்ட் போன் பயன்படுத்துவது தீங்கானது" என்று போடுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில் இது வரை ஹேண்ட் போனால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேர்கள் என்ற ஆதாரம் இல்லை (there is no conclusive evidence for adverse effects) என்று உலக சுகாதார மையம் (WHO) உள்பட அனைவருமே சொல்லுகின்றனர்.
(long long ago so long ago no body can say how long ago) சிகரெட் கண்டுபிடிக்கப்பட்ட போது கூட இத்தனை பேர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஆதாரம் இருந்திருக்குமா? - யோசிக்க வேண்டிய விஷயம். விஞ்ஞானிகள் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப மாட்டார்கள் (நம்ம தௌஹீது வாதிகள் அல்லது வஹ்ஹாபிகளை போல என்று இங்கே யாரும் அநாவசியமாக ஒப்பிட வேண்டாம்)
ஹேண்ட் போனை பற்றி தெரிந்து கொள்வதற்கு கதிர்வீச்சு (ரேடியேசன்) பற்றி தெரிந்து கொள்வது நல்லது.
ரேடியேசன் இரண்டு வகைப்படும்.
1. (ionising radiation - alpha, beta, gamma, neutron and x-ray)
அயனைசிங் ரேடியேசன் (ஆல்பா, பீட்டா, காம்மா, நியுட்ரான் மற்றும் எக்ஸ் ரே)
2. (non-ionising radiation - ultraviolet, visible, infrared, microwave/rf, laser, ultrasound)
நான் - அயனைசிங் ரேடியேசன் (அல்ட்ராவயலட், விசிபிள், இன்ப்ராரெட், மைக்ரோ வேவ் அல்லது ஆர்.எஃப்., லேசர், அல்ட்ரா சவுண்ட் ரேடியேசன்)
இதில் அயனைசிங் ரேடியேசன் மிகவும் ஆபத்தானது. உதாரணமாக எக்ஸ்ரே வை எடுத்து கொள்வோம். தொழிற்சாலைகளில் பல பயன்பாடுகளுக்காக இதனை பயன்படுத்துகிறோம். உதாரணமாக, வெல்டிங் வைத்த பிறகு உள்ளே தெறிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவதற்கு இதனை பயன்படுத்துகிறோம்.
இதனை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது, இதன் டோஸேஜை சிவர்ட் என்ற அளவில் நாம் அளக்கிறோம். இங்கே சிங்கப்பூரில் ஒரு ஆண்டுக்கு ரேடியேசனில் வேலை பார்க்கும் ஊழியர்கள் (National Environmental Agency - NEA Regulations)சட்டப்படி 20 மில்லி சிவர்ட்டுக்கு மேல் டோஸேஜை உடம்பில் பெறக் கூடாது. இதுவே அனுமதிக்கப்பட்ட அளவு.
அயனைசிங் ரேடியேசன் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும் போது உடனடி பாதிப்பு (acute effect), அல்லது நீண்ட நாட்கள் கழித்து தெரியும் பாதிப்பு (chronic effect) மற்றும் தலைமுறை சார்ந்த பாதிப்பு (genetic effect) ஏற்படலாம். கேன்சர் கூட வரலாம்.
ஆனால் நான் அயனைசிங் ரேடியேசன் என்பது தோல் எறிச்சல் (skin burn) அல்லது கண் பாதிப்பு (eye injury), இந்த இரண்டு பாதிப்புகளை தவிர வேறு எந்த பாதிப்புகளும் இருப்பதாக அறியவில்லை. ஆனால் நான் - அயனைசிங் ரேடியேசன் வகையை சேர்ந்த அல்ட்ராவயலட் எனும் ரேடியேசன் தோல் புற்று நோயை உருவாக்கலாம்.
இப்போது ஹேண்ட் போன் மேட்டருக்கு வருவோம். அது மைக்ரோவேவ் வகையை சேர்ந்தது. இத்தகைய ரேடியேசன் கேன்சரை உருவாக்குவது என்பதெல்லாம் நம்ப முடியாத அல்லது நிரூபிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஹேண்ட் போனின் பவர் அவுட் புட் 6.3 மில்லி வாட்ஸிலிருந்து 600 மில்லி வாட்ஸ் வரை. இந்த பவரை வைத்துக் கொண்டு முட்டையை எல்லாம் வேக வைப்பது சாத்தியமே இல்லை என்று தான் நான் அறிகிறேன்.
என்றாலும் தலைவலி, உறக்கமின்மை, மறதி, சோர்வு போன்ற பாதிப்புகள் வரலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
SAR (Specific Absorption Rate) - என்று சொல்கிறார்களே அது என்ன என்றும் தெரிந்து கொள்வது நல்லது. அதாவது 'சார்' என்றால் நம் உடலில் எவ்வளவு மைக்ரோவேவ் அல்லது ஆர்.எஃப் ரேடியேசன் உள்ளே செல்கின்றது என்பதை கணக்கிடும் அளவு.
'சார்' அளவு எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவுக்கு நல்லது என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக 2 க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று the International Commission on Non-Ionising Radiation Protection (ICNIRP) பரிந்துரை செய்துள்ளது.
இது போக, என் நண்பர் ஒருவர் இங்குள்ள மருத்துவமனைக்கு அவரின் தாயாரை காண சென்றார். அங்கே அவர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். அந்த மருத்துவமனையில் போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்தார்கள். அங்கே அவரின் தாயாருக்கு தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவருக்கு போன் மூலம் முக்கிய அழைப்பு வந்தது. அவர் மெதுவாக நகர்ந்து போன் பேச போனார். இங்கே தண்ணீர் இறங்குவது திடீரென்று நின்று விட்டது. நர்ஸ் வந்து பார்த்து விட்டு, "இங்கே போன் பேசக் கூடாது என்று போட்டிருக்கோம்ல.." என்று சொன்னதும் அவர் ஆடிப் போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.

Tuesday, September 15, 2009
துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியானது சம்மந்தமாக..
தட்ஸ் தமிழ் டாட் காமில் படித்த செய்தி
2 துப்புரவு தொழிலாளிகள் கிணற்றை தூர் வாரும் பணியில் ஈடுபட்ட போது விஷ வாயு தாக்கி பலியாகி விட்டதாக படித்தேன்.
அதன் இணைப்பு இங்கே உள்ளது
இன்றைய தேதிக்கு மனித உயிர்களுக்கு அப்படி ஒன்றும் மதிப்பு கிடையாது. மனித உயிர்கள் என்று கூட என்னால் சொல்ல முடிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் சாதி, மதம், நாடு, மொழி என்று பிரிந்து கிடக்கிறார்கள்.
ஒரு கதை கூட சொல்வார்கள். அமெரிக்காவின் நியுயார்க் நகரின் சாலையில் ஒரு குழந்தையை நாய் ஒன்று கடித்து கொன்றிருந்ததாம். அப்போது அதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் குழந்தையை காப்பாற்ற வேண்டு நாயை அடித்து கொன்று விட்டார்.
அதை பார்த்துக் கொண்டிருந்த அந்நகரின் காவல் அதிகாரி ஒருவர், ஓடி வந்து குழந்தையை காப்பாற்றிய அவரின் கையை பிடித்து , "வீரமிக்க நியுயார்க் வாசி ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று பாராட்டினாராம்.
அதற்கு அவர், "நான் நியுயார்க் வாசி அல்ல.." என்று பதிலுறைத்தாராம்
உடனே காவலதிகாரி, "பரவாயில்லை.. ஒரு வீரமிக்க அமெரிக்கர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று புன்னகைத்திருக்கிறார்
அதற்கும் அவர், "நான் அமெரிக்கரும் அல்லர்.." என்று கூறினாராம்
"அப்படி என்றால் யார் தான் நீங்கள்" என்று கேட்டதற்கு "நான் பாகிஸ்தானி" என்றாரம்
உடனே அடுத்த நாள் செய்தி தாளில் "தீவிரவாத பாகிஸ்தானி அநியாயமாக நடு ரோட்டில் நாயை அடித்து கொன்றார்.." என்று வந்ததாம்.
இப்படி மனிதர்கள் தான் மனிதர்கள் என்பதை மறந்து அவர்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கும் பல் வேறு சாதி மத நாடு மொழி இனம் வர்க்கம் போன்ற முகமூடிகளை அணிந்து சுய முகங்களை இழந்து பல காலங்கள் மறைந்தோடி விட்டது.
நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் துப்புரவு தொழிலாளிகள் இறந்தால் அவர்களுக்கான உரிமைகளை பற்றி பேச வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காகத் தான்.
சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.
ஊழியர்கள் சாக்கடை அமைக்க, சுத்தம் செய்ய, இருப்பதை மூட, இன்னும் பல்வேறு பணிகளுக்காக பூமிக்கு அடியில் இறங்கி வேலை பார்க்க வேண்டி உள்ளது.
பூமிக்கு கீழுள்ள இடங்களை ஆங்கிலத்தில் கன்ஃபைண்ட் ஸ்பேஸ் என்றும் தமிழில் வரையறுக்கப்பட்ட இடம் என்றும் அழைப்பார்கள்.
இத்தகைய இடங்களின் விளக்கமாவது..
1. உள்ளே செல்வதற்கும் உள்ளிருந்து வெளியேறுவதற்கும் குறைவான வழிகளே இருக்கும்
2. இயற்கையான காற்றோட்டம் இருக்காது
3. இயற்கையான வெளிச்சம் கிடைக்காது
4. அது வேலை செய்வதற்கான இடமல்ல (அதாவது அலுவலகம் போன்றோ கடைகள் போன்றோ அமைக்கப்பட்ட இடமல்ல)
மேற்கூறிய விளக்கங்களையுடைய இடங்களில் ஊழியர்கள் இறங்கும் போது அவர்களுக்கு உயிர் போகக் கூடிய அளவிற்கு ஆபத்துகள் உள்ளது.
அவையாவன..
1. உயிர்வாயு பற்றாக்குறை (ஆக்ஸிஜன் டெஃபிஸியன்ஸி)
2. தீயும் விபத்துகளும் கூட ஏற்படும்
3. நச்சுத்தன்மையுடைய அல்லது விஷத்தன்மையுடைய வாயுக்கள்
இதில் ஹைட்ரஜன் சல்பைட் என்ற விஷ வாயு பத்து லட்சம் பங்கு காற்றில் வெறும் பத்து பங்கு அளவு மட்டுமே கலந்து இருந்தாலும் நம் உயிருக்கு ஆபத்து உள்ளது.
ஆகவே ஊழியர்களை ஆபத்தான வரையறுக்கப்பட்ட இடங்களில் இறங்க சொல்வதற்கு முன்பு தேவையான உயிர்வாயு உள்ளதா என்று சோதிப்பதுடன் எரியக்கூடிய வாயுக்கள், விஷ வாயுக்கள் இல்லை எனவும் 100 சதவிகிதம் உறுதியாக தெரிந்தவுடன் தான் இறங்க சொல்ல வேண்டும்.
மேற்கூறிய இடத்தில் வேலை செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும். அதிகாரிகள் இடத்தை சோதனையிட வேண்டும். அனைவருக்கு பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்.
விபத்துகள் விடுமுறைக்கு செல்வதே இல்லை. "இன்றைக்கு எங்க ஊட்டு காலண்டர்ல நல்ல நேரம்னு போட்டிருக்கு அதனால விஷ வாயு வந்தா கூட எனக்கு ஒண்ணும் ஆவாது" என்றெல்லாம் சொல்லி ஏமாந்து போக கூடாது. பாதுகாப்பு தான் உயிருக்கு உத்திரவாதம்
உயர்நீதி மன்றம் இத்தகைய விபத்துகளை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆராய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை இந்த மாத துவக்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி நல்ல துவக்கம் தான்
இது போன்ற வேலையிட விபத்துகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்

Labels:
பாதுகாப்பு,
வேலையிட விபத்துகள்
Subscribe to:
Posts (Atom)