யஷ் சோப்ரா 1932 ஆம் ஆண்டில் லாஹூரில் பிறந்தவர், இவர் நிறைய வெற்றி படங்களை தயாரித்து இயக்கி இருந்தாலும் உதாரணமாக வக்த் (1965), அமிதாப் நடித்த திவார் (தமிழில் ரஜினி நடிக்க தீ என்று வெளியானது), கபிகபி, திரிசுல் (தமிழில் ரஜினி நடிக்க மிஸ்டர் பாரத் என்று வெளியானது), எனக்கு இவர் இயக்கிய படத்திலேயே பிடித்த படம் திலிப் குமார் நடித்த மஷால் என்ற படம் தான் மிகவும் பிடித்தமான படம்.
ஷாருக் நடித்த டர் என்ற படத்தை சென்னையில் மெலடி தியேட்டரிலேயோ அல்லது ஜெயப்பிரதா தியேட்டரிலேயோ பார்த்து இருக்கிறேன். தில் தோ பாகல் ஹெய்ன், வீர் ஜரா, சாந்தினி, ரொம்பவுமே காண்ட்ரவர்சியலான சில்சிலா என்ற படத்தையும் இயக்கியவர் இவர் தான்.
சில்சிலா என்ற படத்தில் அமிதாப், ஜெயபாதுரி, எனக்கு மிகவும் பிடித்த நடிகையான ரேகா, எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகரான சஞ்சீவ் குமாரும் நடித்து இருப்பார்கள். இந்த படம் அமிதாப், ரேகா வின் உரிமை இல்லா உறவை அப்படியே எடுத்து சொல்வதாக அமைந்திருந்தது.
சலிம்-ஜாவித் என்ற ஜாம்பவான்கள் இந்தி சினிமாவிற்கு நிறைய வெற்றி படங்களை அள்ளி தந்திருக்கிறார்கள். சலிம் என்பவர் சல்மான் கானின் தகப்பனார், ஜாவின் பிரபல பாடலாசிரியர், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மியின் கணவர், ஷாருக்கானின் டான் பட இயக்குனர் ஃபர்ஹான் அக்தரின் தகப்பனார்.
இருவரின் கைவண்ணத்தில் உருவான ஷோலே என்ற படம் இன்றைய அளவும் இந்தி சினிமாவிற்கு ஒரு லேண்ட்மார்க்காக இருந்து வருகிறது.
ஒரு முறை ஜாவிதிடம் கேட்டார்கள், நீங்கள் எதை எழுதினீர்கள், சலீம் எதை எழுதினார் என்று - அதற்கு ஜாவின் இப்படி பதில் சொன்னார், வெர்ப் எல்லாம் நான் எழுதினேன், நவுன் எல்லாம் சலிம் எழுதினார் என்று.
யஷ் சோப்ராவின் இயக்கத்தில் வெளியான திவார், திரிசுல், காலாபதர் என்ற மூன்று படத்தையும் எழுதி தந்தவர்கள் சலிம் ஜாவித் தான்.
மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தை ஆங்கில படமான் ‘த காட் ஃபாதர்” என்ற படத்தின் தழுவல், இன்ஸ்பிரேஷன், ஈயடிச்சான் காப்பி என்று பலவாறாக புகழ்ந்து தள்ளப்பட்டிருக்கிறது.
மேற்படி ஆங்கில படத்தை நான் பார்த்தது கிடையாது ஆனால் நாயகன் என்ற திரைப்படத்தையும் சலிம்-ஜாவித் எழுதிய திவார் எனும் படத்தின் ஒவ்வொரு காட்சியையுமே நாயகனாக என்னால் ஒப்பீடு செய்ய முடியும்.
அப்படி பார்த்தால் தீவார் என்ற படம் தான் ‘த காட் பாதர்’ என்ற படத்தின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் என்று நினைக்கிறேன்.
மணிரத்னம் அவர்கள் காலாபதர் படத்தில் வரும் சில காட்சிகளை அப்படியே அக்னி நட்சத்திரத்திலும் பயன்படுத்தியிருப்பார். கார்த்திக் பிரபு சண்டை போட வரும் போதெல்லாம் ஏதோ ஒரு வழியில் எலக்ட்ரிக் டிரெயினில் கூட்டம் ஏறுவது போன்று சண்டை தட்டுபட்டு போவது போல் அமிதாபும் சத்ருகன் சின்ஹா சண்டை போட வரும் போதெல்லாம் கடையில் கூட்டம் வந்து கலைத்து விடுவது போன்று காட்சிகள் அமைந்திருக்கும்.
சலிம்-ஜாவித் திவார் படத்தின் திரைக்கதையை எழுதிய பிறகு யஷ் சோப்ராவிடம் வந்து ‘உங்களிடம் இந்த திரைக்கதையை நாங்கள் தருகிறோம், ஆனால் சில கண்டிசன், படத்தின் ஹீரோவை விட எங்களுக்கு காசு தர வேண்டும் (கதாசிரியர்கள் இப்படி எல்லாம் டிமாண்ட் பண்ண முடியுமா? - உண்மையா தெரியவில்லை - எப்பவோ படித்தது), படத்தில் ஒரு புள்ளி கூட மாத்த கூடாது, முக்கியமாக கிளைமேக்ஸ் என்று கேட்டுக் கொண்டார்களாம்.
திரைக்கதையை படித்து விட்டு யஷ் சோப்ரா ஒத்துக் கொண்டு காட்சி வடிவமாக்கி காட்டினார். அமிதாப்பை சூப்பர் ஸ்டாராக்கிய படம் அது.
சலிம்-ஜாவித் ஏதேதோ காரணத்தால் பிரிந்த பிறகு ஜாவித் யஷ் சோப்ராவிற்கு நெருக்கமான ஆளாக இருந்தார். சில்சிலா என்ற படம் தான் ஜாவித் அக்தராக முதன் முதலில் பாடல் எழுதிய படம்.
‘ஏ கஹான் ஆகயே ஹம்.. ” என்ற பாடல் அவர் எழுதிய சூப்பர் ஹிட் பாடல். ஜாவித் சலிமிடமிருந்து பிரிந்த பிறகு முதன்முதலாக எழுதிய (கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்) படம் தான் மஷால் எனும் எனக்கு பிடித்த திரைப்படம்.
யஷ் சோப்ரா 21ந் தேதி டெங்கி எனும் கொடிய பாக்டிரியா காய்ச்சலினால் இறந்து போய் விட்டார்.
அவர் இயக்கிய மஷால் எனும் எப்போதோ பார்த்த திரைப்படத்தை பற்றிய நினைவு வருகிறது.
இந்த படத்தில் திலிப் குமார் யஷ் சோப்ராவுடன் முதல் முறையாக இணைந்தார். திலிப் குமாரின் பவர் பெர்ஃபார்மெண்ஸை இந்த படத்தில் பார்க்கலாம்.
இந்த படத்தில் அனில் கபூர் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் யஷ் சோப்ரா கமலஹாசனை தான் அணுகினார். கமலஹாசனிடம் யஷ் கதையின் அவுட் லைனை சொன்ன போது ரொம்பவும் எக்ஸைட் ஆகியிருக்கிறார் கமலஹாசன்.
ஆனால் அதே சமயம் முழு கதையையும் ஜாவித் அக்தரிடம் கேட்டு தெரிந்த பிறகு திலிப்குமாருக்கு ஈக்வலான ரோல் இல்லை என்று கூறி விலகி விட்டாராம் நம்ம கமலஹாசன்.
அதோடு ஜாவித் அக்தர் அனில் கபூரை ரெகமண்ட் செய்ய அவர் நடிக்க ஒப்புக் கொண்டு ஆளாகினார்.
இன்றைக்கு நேர்மையான ரோலை ஹீரோவுக்கு கொடுத்தால் கூட கேலி கூத்தாகும் நிலை இருக்க நேர்மையான பத்திரிக்கையாளராக விநோத் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.
எஸ்.கே. வர்தன் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு பெரிய மனுசனை பற்றிய இருட்டு செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்.
வர்தனாக அம்ரிஷ் புரி அடிக்கடி, ‘துனியா பஹுத் கராப்.. (இந்த உலகம் மிகவும் மோசமானது..)’ என்று பன்ச் லைன் பேசிக் கொண்டே இருப்பார்.
படத்தில் சில காட்சிகள் உள்ளன...
அம்ரிஷ் புரி திலிப் குமாரை அவரது பத்திரிக்கை அலுவலகத்தில் சந்திக்கும் காட்சி
- ஒவ்வொருத்தருக்கும் ஒரு விலை உண்டு, அந்த விலை என்ன என்று தெரிந்து கொண்டு கொடுத்து விட்டால் அந்த நபர் நம்முடைய ஆள் தான் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு வருவார்.
எஸ்.கே. வர்தன் வாசலிலேயே நிற்பார். விநோத் எழுதிக் கொண்டு இருப்பார்.
எஸ்.கே - நான் உள்ளே வரலாமா?
விநோத் - உள்ளே வாங்க
எஸ் - நான் யாருன்னு என்னய அறிமுகப்படுத்திக்கிறேன். நான் தான் எஸ்.கே. வர்தன். இப்போ உள்ளே வர அனுமதி கிடைக்குமா?
வி - உள்ளே வாங்க
எஸ் - (உள்ளே வந்து நாற்காலியை காட்டி) உட்காரலாமா என்று கேட்க விநோத் கையை காட்டி அமருங்கள் என்கிறார்.
எஸ் - நன்றி.. நான் உங்க நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை, எனக்கு தெரியும் நீங்க ஒரு பிஸியான ஆளென்று. அதனால தான் நானே உங்கள தேடி பார்க்கணும்னு வந்திருக்கிறேன். இதுவரைக்கும் நான் எதுக்காக வந்திருப்பேன்னு நீங்க கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு நம்புறேன்.
வி - பாருங்க மிஸ்டர் வரதன். நான் மொதல்ல செல விஷயத்த தெளிவு படுத்த விரும்பறேன்.. ஒண்ணு ...நான் உங்கள பத்தி எழுதுனது உங்க மேல உள்ள தனிப்பட்ட விரோதத்துனால அல்ல - ரெண்டாவது... நான் எதையும் ஆதாரம் இல்லாம எழுதல...
எஸ் - அப்படிலாம் இல்ல சார்...நீங்க என்னய தப்பா புரிஞ்சுகிட்டீங்க... நான் எழுதுனத தவறு சொல்ல வரல... நான் உங்க கிட்டே நட்பு கரம் நீட்ட தான் வந்திருக்கிறேன்..
வி - நம்ம ரெண்டு பேரும் நட்பு பாராட்டுற அளவுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன இருக்கு..?
எஸ் - அப்படி எல்லாம் சொல்லகூடாது சார் நீங்க... நீங்க மிகப் பெரிய அறிவாளி..ஆனால் இந்த உலகம் ரொம்ப மோசமானது விநோத் குமார் சாப்... உங்கள இந்த உலகம் அங்கீகரிக்கவே அங்கீகரிக்காது. உங்க எழுத்த பார்த்த ஒடனே எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.. என்ன அழகா எழுதுறீங்க.. ஆனால் சாதாரண ஒரு செய்தி தாள்ல வர்ரத நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. உங்களோட ஜபர்தஸ்தான பேப்பரான வருது... ஆனா இந்த அலுவலகம்..
கோவர்த்தன் சாலைல ஒரு பெரிய கட்டடம் இருக்கு.. அங்கே ஆபிஸ் பிளாக்ஸ் எல்லாம் நல்ல விலைக்கு வருது...
வி - (இடைமறித்து... கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டு) இங்கே பாருங்க.. வர்தன்.. நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது.. நீங்க இங்கே வர்ரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் வேலை பார்த்து கிட்டு இருந்தேன்.. அந்த வேலைய நான் முடிக்கணும்... அதனால தயவு செய்து..
(கோபமாக எழுகிறார்)
எஸ் - நீங்க ரொம்ப புத்திசாலின்னு தான் நான் சொல்வேன்..நம்ம வெளிப்படையாவே பேசுவோம்.. எவ்வளவு வேணும்..? வெளியில கார்ல பணம் இருக்கு... எவ்வளவு பணம் வேணும்னு யோசிச்சு சொல்லுங்க..
வி - (யோசிக்கிறார் - யோசித்து விட்டு ஒரு அறை விடுகிறார்) நான் இப்போ அறையிறதுக்கு முன்னாடி இதை செய்ய கூடாதுன்னு தான் யோசிச்சேன் மிஸ்டர் வர்தன்..ஆனா நீங்க பேசுன ச்சீப்பான வியாபாரத்துக்கு இதை விட சிறந்த பதில் வேற எதுவும் என்னால தர முடியாது... நீங்க போகலாம்.
எஸ் - (கடுங் கோபத்துடன் எறிக்கின்ற பார்வையில்) மிஸ்டர் விநோத் குமார்.. நான் உள்ளே வர்ரதுக்கு முன்னாடியே சொன்னேன் நான் எஸ்.கே.வர்தன்.. நீயும் எல்லாத்தையும் கேட்டுகிட்டே தான் இருந்தே... அப்படியிருந்தும் என்னை...
வி - (இடைமறித்து) வாசல் கதவு அந்த பக்கம்... அதோ அந்த பக்கம்... (கையை நீட்டி காட்டுவார்) - (தர்வாஜா உஸ் தரா...உஸ் தரா...)
நெருப்பு பொறி பறக்கும் ஜாவித் சாபின் வசனத்தில். அப்பா... என்னமா நடித்து இருப்பார்கள் திலீப் குமாரும் அம்ரிஷ் புரியும்.
அடுத்து எனக்கு பிடித்த காட்சி...
அனில்கபூரை திலிப்குமார் அனிலின் வீட்டில் சந்திக்கும் காட்சி
திலிப் குமார் அனில் கபுரிடம் கோவித்து கொண்டு வீட்டு பக்கம் வரக்கூடாது என்று சொல்லி யிருப்பார்.
ஏனெனில்.. அனில் கபூரின் நண்பர் ஒரு அங்காடியில் போய் ஒரு பொருளின் விலையை கேட்பார், அந்த கடையின் சேல்ஸ் மேனோ ஒரு பெண்ணிடம் வியாபாரம் செய்து கொண்டிருப்பார், அந்த நண்பர் கடையில் உள்ள ஒரு கேமராவை தொட்டு எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருப்பார், கடை சேல்ஸ் மேன், ‘தொடாதே... சேரில வாழுற உனக்கு எல்லாம் எதுக்கு இத தொடறே...” என்பது போல் கேட்டு விடுவார்.. அனில் கபூருக்கு தெரிய வர கடையை போட்டு அடித்து உடைத்து விடுவார்.
கடையை உடைத்த செய்தி மட்டும் கேள்விப்படும் திலிப் குமார் இன்னமும் ரவுடியிசத்தை விடவில்லை என்று கூறி அனில் கபூரை கடிந்து வெளியேற்றி விடுவார். திரும்பவும் கேள்விபட்டு அனில்கபூரை அவர் வீட்டிற்கே போய் சந்திப்பார்.. “நான் ஒன்னய தப்பா சொல்லி காயப்படுத்திட்டேன்...” என்று ஆரம்பிப்பார்..
அனில் கபூர், “நான் தப்பா நினைக்க என்ன இருக்கு சார்.. இது தான் மொதோ தடவயா என்ன... என்ன பத்தி எல்லாரும் தப்பு தப்பா பேசுறது.. நான் மட்டும் இல்லை.. எங்க அப்பா அம்மாவும் ரொம்ப கேவலமான வார்த்தைகளை எல்லாம் கேட்டிருக்காங்க... சாப்...
எனக்கு அஞ்சு வயசிருக்கும் சாப்.. எங்க அப்பா என்னய மார்க்கெட்டுக்கு கூட்டிட்டு போவாரு... நாங்க நிறைய கடையை எல்லாம் பார்த்துகிட்டே போவோம்...
அப்போ என்னோட அப்பா ஒரு தடவை ஒரு துணிய தொட்டு பார்த்தாரு... கட காரர் கத்துனாரு, திட்டினாரு..”ஏய்.. துணி மேல கைய வைக்காதே... ஹஹ்ஹா.... அந்த அதே துணிய தான் சாப் எங்க அப்பா பஞ்சாலைல வேல பாத்து தைச்சு தர்ராரு.. அதே துணி கடைக்கு வந்ததோட யாரு தச்சதோ அவங்களையே தொட கூடாதுன்னு கேவலமா சொன்னா...
தொடாதே.ன்னு சொன்னா கேட்டுட்டு போவ நான் ஒண்ணும் எங்க அப்பா இல்லை சாப்... கடைல உள்ள பொருள தொடாதேன்னு சொன்னா... கடையைய தொட்டுடுவேன் சாப் (உடைத்தெறிந்துடுவேன் சாப்)...
சாப்... அந்த பில்டிங் இருக்குல சார்... அங்கே தான் எங்க அம்மா வீட்டு வேல பார்த்தாங்க... ராவும் பகலும்.. பத்து பாத்திரம் தேய்க்கிற வேல... கைல அடிபட்டுடிச்சு... ஒருத்தர் கூட சொல்லல...”சாவித்ரி... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க”ன்னு... எங்க அம்மா கைல துணிய வச்சு சுத்திகிட்டு அப்பவும் தேய்ச்சுகிட்டே தான் இருந்தாங்க... அப்படியே கைல செப்டிக் ஆயிடிச்சு சாப்... அப்ப வந்து சொல்றாங்க... “எதயும் தொடாதே... எதையும் தொடாதே...” அம்மா என்ன மட்டும் தனியா விட்டுட்டு எறந்து போயிட்டாங்க...” என்று கோபத்தில் வெடித்து சொல்லும் காட்சி.. (கமலஹாசன் சார் மிஸ் பண்ணிட்டீங்களே..!)
அடுத்து...
சுதாவான வஹிதா ரஹ்மான் வயிற்று வலியில் துடிக்க திலிப்குமார் நடுரோட்டில் ‘கோயி ஹெய்ன்..(யாராவது இருக்கீங்களா?) என்று கதறி துடிக்கும் காட்சி..
எஸ்.கே. வர்தனின் புண்ணியத்தால் பத்திரிக்கை ஆபீஸ் எரிந்து.. வாடகை வீட்டிலிருந்து வெளியேறி நடுத்தெருவில் நிற்க நேரிடும் போது மனைவிக்கு தாங்க முடியாத வயிற்று வலி...
அந்த காட்சியை பார்க்க...
மும்பையில் கிரேண்ட் ஹோட்டல் அருகில் எடுக்கப்பட்ட இந்த காட்சியை பற்றி ஒரு பேட்டியில் யஷ் சோப்ரா சொல்லும் போது நான்கு நாட்கள் இரவில் போய் எடுத்தோம், எடுத்த 4 நாளிலும் திலிப்குமாரின் கிரேஃப் ஆஃப் எமோஷன்ஸ் அவுட் ஆஃப் லைனுக்கு போகவே இல்லை என்றார்.
இவர் இறுதியாக எடுத்த படமான “ஜப் தக் ஹெய்ன் ஜான் (என் இறுதி மூச்சு உள்ள வரை..) எனும் படம் ஷாருக் கான் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளி வர தயாராய் இருக்கிறது.
சமீபத்தில் சல்மான் நடித்து சக்கை போடு போட்ட ‘ஏக் தா டைகர் (ஒரு சிங்கம் இருந்தது...) என்ற படம் இவரது தயாரிப்பில் வந்த படம் தான்.
யஷ் சோப்ரா எடுத்த படங்களிலேயே மஷால் தான் - மஷால் என்றால் வெளிச்சம் (வழி காட்டுவது) அல்லது தீப்பந்தம் (தீயதை எரிப்பது) என்று பொருள் - எனக்கு மிகவும் பிடித்தமான படம்.
அவரின் சில படைப்புகள் நல்ல வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன..
யஷ் சோப்ரா சாப்..
ரெஸ்ட் இன் பீஸ்...

அடுத்ததாக..
திலிப்குமார் அனில்கபூரை படிக்க ஊருக்கு அனுப்பி வைத்திருப்பார். அனில் கபூருக்கு நேர்மையை கற்று கொடுத்த திலிப்குமாரோ மிகப்பெரியா டானாக மாறியிருப்பது தெரிய வருகிறது..
இடைவேளை வரை.. திலிப்குமார் நேர்மையாக இருப்பார்... அனில்கபூர் ரவுடியாக இருப்பார்...
இடைவேளைக்கு பின்பு.. திலிப்குமார் டானாகா மாறி விடுவார்... அனில்கபூர் நேர்மையான பத்திரிக்கையாளராக மாறிவிடுவார்.
இதை பற்றி படத்தில் திலீப் குமார் அனில் கபூரிடத்தில் சொல்லி காட்டுவார், “இது வந்து ஃபுட் பால் மேட்ச் மாதிரி... செகண்ட் ஹாஃபில் இடம் மாறி தான் விளையாடணும்...” என்று
அப்போ திலீப் குமார் தான் மாறியதற்கான காரணத்தை அனில் கபூரிடம் சொல்லி காட்டும் அற்புதம்... வேறு எவராலயும் நடிக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நடிப்பு இருக்கும்... கண்கள், கைகள் எல்லாம் நடிக்கும்...