ஒரு தடவை இங்கே சிங்கப்பூரில் கட்டுமான தல வேலையிடத்தில் ஒரு தமிழ்காரர் ஏணியில் ஏறி நின்றவாறு வேலை செய்ய வேண்டியிருந்தது. அப்போது ஒரு தாய்லாந்த் நாட்டை சார்ந்தவர் ஏணி உயரம் என்பதால் கீழே ஏணியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
ஏணி சிறிது ஆடியிருக்கிறது. மேலே நின்ற தமிழ் காரர் பயந்தவாறு கீழே நின்ற தாய்லாந்த் காரரிடம் ’ஏணி ஆடுது.. நல்ல இறுக்கமாக பிடி..” என்று சொல்ல வேண்டும்.
எப்படி சொல்வது..? இருவரும் புதுசு.. இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. இருக்கவே இருக்கு சைகை பாஷை.
மேலிருந்து இரண்டு கையை அசைத்து ‘ஏணி ஆடுது..’ என்று சொல்லியிருக்கிறார்.
நம்ம கீழே இருந்த தாய்லாந்த் காரர் இல்ல, ஏணியை வேகமா பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி எடுத்துட்டார்.
மேலே உள்ள அவர் வடிவேல் ரேஞ்சுக்கு கொலை நடுங்கி போய் ‘ஆள விட்டா போதும்னு கீழே இறங்கி விட்டார்..’
*****************************************************************
*****************************************************************
சி.இ.ஒ. விடமிருந்து மூத்த மேலாளர்களுக்கு குறிப்பாணை:
இன்றைக்கு பதினோரு மணிக்கு சூரிய கிரகணம் பிடிக்க உள்ளது. இது சூரியனானது சந்திரனுக்கு பின்னால் 2 நிமிடங்கள் மறைவதை குறிக்கும். இது எல்லோராலும் வழக்கமாக காண இயலாது என்பதால், சீருந்து நிறுத்துமிடத்தில் ஊழியர்கள் பார்ப்பதற்காக நேரம் ஒதுக்கப்படும். ஊழியர்கள் பத்திலிருந்து பதினோருக்குள் வந்து விட வேண்டும். நான் சூரிய கிரணத்தை பற்றியும் குறைந்த விலைக்கு கிடைக்கும் பாதுகாப்பு கண்ணாடி பற்றியும் சிறு உறையாற்ற இருக்கின்றேன்.
மூத்த மேலாளரிடமிருந்து துறை சார்ந்த தலைவர்களுக்கு குறிப்பாணை
இன்று பத்திலிருந்து பதினோரு மணிக்கு எல்லா ஊழியர்களும் சீருந்து நிறுத்துமிடத்தில் சந்திக்க வேண்டும். இதை தொடர்ந்து சூரிய கிரணம் பிடிக்கும். இது இரண்டு நிமிடம் நீடிக்கும். இது குறைந்த செலவில் மூக்கு கண்ணாடி மூலம் பாதுகாப்பாக அமையும். முன்னதாக, சி.இ.ஓ. நமக்கு தகவல்கள் வழங்க சிறிய சொற்பொழிவை ஆற்றுவார். இது வழக்கமாக நடைபெறுவது அல்ல.
துறை சார்ந்த தலைவரிடமிருந்து தள மேலாளருக்கு குறிப்பாணை
சி.இ.ஓ சூரிய கிரணம் என்ற முறையில் சூரியனை இரண்டு நிமிடம் மறைய வைக்க சிறிய சொற்பொழிவாற்ற இருக்கிறார். இது நாம் வழக்கமாக பார்க்கக் கூடியதல்ல. அதனால் ஊழியர்கள் 10 அல்லது 11 மணிக்கு சீருந்து நிறுத்துமிடத்தில் சந்திக்க வேண்டும். நீங்கள் குறைந்த அளவு செலவு செய்தாலே போதும், இது பாதுகாப்பானதாக இருக்கும்.
தள மேலாளரிடமிருந்து மேற்பார்வையாளருக்கு குறிப்பாணை
சி.இ.ஓ. சூரியனை இரண்டு நிமிடத்திற்கு மறைய வைப்பதை காண 10 அல்லது 11 ஊழியர்கள் சீருந்து நிறுத்துமிடத்திற்கு செல்வார்கள். இது வழக்கமாக நடைபெறாது. இது பாதுகாப்பானதும் வழக்கம் போலவே இதில் உங்களுக்கு செலவும் உண்டு.
மேற்பார்வையாளரிடமிருந்து ஊழியர்களுக்கு குறிப்பாணை
சி.இ.ஓ. மறைவதை பார்க்க வேண்டி சில ஊழியர்கள் இன்று சீருந்து நிறுத்துமிடத்திருக்கு செல்வார்கள், . இது வழக்கமாக நடைபெறாது என்பது வருத்தத்திற்குறியது.
********************************************************
பேசிட்டா பிரச்சினை தீர்ந்துடும்னு அவ்வளவு உறுதியாக சொல்லி விட முடியாது. பேசுபவர்கள் எந்த கருத்தில் சொன்னார்களோ அதே கருத்தில் நாம் புரிந்து கொள்ள வில்லை என்றால் பிரச்சினை இன்னும் பெரிதாக கூட ஆகி விடலாம்.
நம்மடவர்கள் சில பேர ‘பாய்’ன்னு சொன்னா அடிக்க வருவதற்கும் இது தான் காரணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக சொன்னார்கள், ‘மக்களிடம் பேசும் போது அவர்களின் பகுத்தறிவுக்கு தக்கவாறு பேசுங்கள்’ என்று.
இன்றைக்கு பேசுபவர்கள் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் யாரிடம் பேசுகிறோம் என்பதையும் விளங்காமல் பேசுகிறார்கள்.
என்னை கேட்டால் மௌலானா ரூமி அவர்கள் சொன்னது போல், ‘மௌனமே இறைவனுடைய மொழி, மற்றவையெல்லாம் மோசமான மொழிபெயர்ப்பு (
