Showing posts with label ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி. Show all posts
Showing posts with label ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி. Show all posts

Friday, July 08, 2011

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி - ஆனந்த் - பழைய இந்தி பட விமர்சனம் 2

”எழுத்தாளர்கள் நம்மூர்ல நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்காங்க.. முன்னாடிலாம் அவங்க இலக்கிய கூட்டத்துக்கு சைக்கில்ல வந்துகிட்டுருந்தாங்க... இப்ப என்னடான்னா கார்ல எல்லாம் வந்திறங்குறாங்க...” என்கிறார் ஒருவர்

இன்னொருவர், “நானும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள் வச்சிருந்தேன்.. ஆனா, என் கதைய வெளியிடுறதுக்காக அந்த சைக்கிளை வித்துட வேண்டியதா போச்சு..”

தொடர்ந்து வரும் சிரிப்பலையோடு தான் படம் தொடங்குகிறது.
---------------------
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.. இந்த படத்தை பற்றி எழுத சொன்னால் (அதாவது என்னை நானே எழுத சொன்னால், வேறு யாரு என்னை எழுத சொல்ல போகிறார்கள்? - ஆபிதீன் நானாவை தவிர்த்து) இந்த படத்தின் மொத்த வசனத்தையுமே எழுதுவேன். அவ்வளவு அழுது அவ்வளவு ரசித்து அவ்வளவு பார்த்து அவ்வளவு புரிந்து இருக்கிறேன்.
------------------------

டாக்டர் பாஸ்கர் பானர்ஜி முதல் தடவையாக எழுதிய ”ஆனந்த்” என்ற புத்தகத்தை அந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக ருஸ்டம் டிரஸ்ட் தேர்ந்தெடுத்து சர்ஸ்வதி விருதையும் வழங்குகிறது.

அந்த புத்தகத்தை எழுத உந்துதலாக இருந்த நபரையும் அந்த நபரின் வாழ்க்கையையும் மைக் பிடித்து மக்களோடு அந்த மருத்துவர் பகிர்ந்து கொள்கிறார்.

டாக்டர் பாஸ்கர் பானர்ஜி ஒரு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்.

கேன்சர் என்பது கொடிய வியாதி. எங்கள் குடும்பத்திலேயே இரண்டு சீதேவிகளை இந்த பாழாப்போன நோய்க்கு பலி கொடுத்து இருக்கிறோம். (தவிர்க்க இயலாத குறுக்கீடு.. சாரி.. )

ஆனந்தை பற்றி டாக்டர் சொல்கிறார்,

”ஆனந்த் நண்பர்களை அதிகம் விரும்புவார்.
செல்லுமிடமெல்லாம் அவர் நண்பர்களையும் நட்பையுமே தேடினார்.
அதனால் தான் இந்த கதையை நான் வெளியிடுகிறேன்.
ஏனெனில் அவரது நட்பு இந்த உலகம் முழுக்க பரவ வேண்டும் என்பதற்காக ...”

டாக்டர் பானர்ஜி அவரது மருத்துவ தொழிலில் சந்தித்த மரணங்கள், வலிகள், துயரங்களை நினைத்து மனம் நிலை கொள்ளாமல் இருக்கிறார்.

அவரால் இருக்கும் வியாதிகளை குணமாக்க முடியாமல் போகும் போது இயலாமையை எண்ணி அவர் மீதே வெறுப்பு கொள்கிறார்.

சிலர் விட்டமின்கள் குறைவாக இருப்பதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது பலர் உணவே இல்லாத தட்டுபாட்டில் வறுமையில் வாடுகையில் - அவர் அதை கட்டுப்படுத்த சரியாத ஆயுதமின்றி மனம் உடைகிறார்.

மருந்து மாத்திரை நோயை குணப்படுத்தலாம். ஆனால் வறுமையை என்ன செய்ய முடியும்? - தவிக்கிறார்.

உப்பு வாங்கவே காசில்லாதவரிடம் மருந்து வாங்க சொல்லி எவ்வாறு கேட்க முடியும்? - அவரே கேட்டுக் கொள்கிறார்

ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து குழந்தை பிறந்ததாக சொல்லி இனிப்புகளும் மிட்டாய்களும் வழங்கிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு வீட்டில் ஒருவர் இறந்து போனதற்காக அழும் குரலும் கசப்புகளும் கேட்டுத் தாங்காமல் புழுங்குகிறார்.

“ஒருவர் இறந்து விட்டார்.. இன்னொருவர் இறப்பதற்கு பிறந்து இருக்கிறார்..” புலம்புகிறார்.

இந்த சமயத்தில் தான் அவர் ஆனந்த் செய்கலை சந்திக்கிறார்.

டாக்டர் பானர்ஜியின் அப்பாவும் மருத்துவர் தான். அப்பாவான அவர் காலத்தில் வாங்கிய வீட்டில் தான் இப்போது மகனான டாக்டரும் வசித்து வருகிறார். அவரை வளர்த்த ரகு காகா என்பவருடன் தங்கி இருக்கிறார். ரகு காக்கா தான் இவரை தூக்கியோ தூக்காமலோ வளர்த்தவர். டாக்டர் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனது கிராமத்திற்கே செல்ல தயாராக இருக்கிறார் இந்த ரகு காக்கா.

டாக்டர் பானர்ஜிக்கு பிரகாஷ் குல்கர்னி என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். பானர்ஜி மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கும் அதே ஊரில் இவர் மருத்துவ தொழில் செய்கிறார். சம்பாதிக்கிறார். வசதியோடு இருக்கிறார்.

இந்த இரு டாக்டர்களுக்கும் டெல்லியில் டாக்டர் திரிவேதியிடமிருந்து ஆனந்த் என்பவரின் மருத்துவ குறிப்புகள் ஊடுகதிர் படங்கள் கடுதாசியோடு கைக்கு கிடைக்கிறது.

ஆனந்த் என்பவருக்கோ ”லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்” என்ற வியாதி.

டாக்டர் பானர்ஜி கோபப்படுகிறார், “ஏன் திரிவேதிக்கு தெரியாதா? இதுக்கு தான் மருந்தே இல்லையே? - எதுக்காக இங்கே அனுப்பி விடுகிறார்?” -

"இல்லை, அது ஆனந்துக்கு தெரியாது.. அவர் ஆம்புலேட்டரி ஸ்டேஜில் தான் இருக்கிறார், பம்பாயையும், நம்மையும் பார்க்க வருகிறார்..” என்று பதில் சொல்கிறார்.

ஊடுகதிர் படத்தை போட்டு காட்டுகிறார்.

டாக்டர் பானர்ஜி, “இதுல பார்க்க என்னா இக்கிது? - இன்னும் கொஞ்சம் நாள்ல வயிறு பெருசா வீங்குன மாதிரி போயிடும், கேன்சர் கட்டி வெடித்து விடும், சுவாசம் பாதிக்கப்படும், மிஞ்சி மிஞ்சி போனா, இன்னும் 4 அல்லது 6 மாசம் தான்..”

சொல்லிக் கொண்டிருக்கும் போதே நர்ஸ் வந்து கதவை திறந்து ”ஆனந்த்ன்னு யாரோ உங்களை பார்க்க டில்லியிலிருந்து வந்திருக்காங்க..” என்கிறார்

“நாளைக்கில்ல வரணும்..  சரி.. வரச் சொல்..’

அந்த நர்ஸ் சென்று விட, பானர்ஜி “எங்கே தங்குவார்?” என்று கேட்கிறார்

“இங்கே தான்.. நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.. திரிவேதிட நெருங்கிய நண்பர்... இன்னும் 4 மாசம் தானே “

சொல்லிக் கொண்டிருக்கும் போதே... “தோஸ்த்.. “ ஆனந்தின் குரல் காற்றில் ஒலி அலைகளாய் மிதந்து செவிக்கு வருகிறது.

இனி ஆனந்த்தின் பேச்சு பம்பாய் முழுக்க காற்றோடு கலந்து விடுகிறது..

ஆனந்த் புன்னகைத்துக் கொண்டே,

நான் சொல்லலையா? நாம மறுபடி சந்திப்போம்ண்டு.. நான் கேள்விபட்டேன், உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னு.. மனைவி எப்படி இருக்காங்க?.. ஜூனியர்... சீனியர்... (குழந்தைங்க...?)..  என்ன நண்பா..? 3 வருஷமாச்சு.. இந்த டாக்டருக்கு ஒரு கம்பவுண்டர் வேண்டாமா?.. நீங்க பேசாம திரிவேதிய கன்சல்ட் பண்ணி பாருங்களேன்..

படபடவென பொறிந்து தள்ளும் ஆனந்தை டாக்டர் பிரகாஷ் அதே அறையிலேயே அமர்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் பானர்ஜிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

ஆனந்த் புதிய மனிதரை பார்த்ததும்..

“அர்ரே.. பாபுமூஷாய்.. காலேஜ்ல பெண்கள் உங்களை அப்படி தான் கூப்பிடுவாங்க இல்லையா? டாக்டர் திரிவேதி ஒண்ணு விடாம எல்லாத்தையும் என்கிட்டே சொல்லி விட்டார்.. காலேஜ்ல எல்லா பெண்களுக்கும் உங்க மேல ஒரு ஆர்வம் பிரியம் இருந்துச்சாம்ல.. இப்ப எப்படி..? ”

பானர்ஜிக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதை உணர்ந்த குல்கர்னி பேச்சை மாற்றுகிறார், “ஆனந்த்.. நீங்க நாளைக்கி தானே வர்ரதா இருந்திச்சு..?’

ஆனந்த், “அட.. இது என்னோட பழக்கமாவே போயிடிச்சு.. நான் பிறக்கும் போதே டாக்டர் 21 ந்தேதி தான் நான் பொறப்பேன்னு சொன்னாங்க.. ஆனா நான் அதுக்கு முன்னாடியே பொறந்துட்டேன்.. அதே மாதிரி தான்.. இப்போ வந்து டாக்டர் நான் இன்னைக்கி தான் இறந்து போவேன்னு ஒரு தேதி குறிச்சாங்கன்னா.. நான் கண்டிப்பா சொல்றேன்.. அதுக்கு முன்னாடியே எறந்து போயிடுவேன்..”

திடீரென்று ஞாபகம் வந்தவராக.. பிரகாஷிடம் வந்து..

“தோஸ்த்.. என் சாமான்வோ எல்லாம் நான் ஆஃபிஸ் உங்க ரூம்ல வச்சிருக்கேன்.. ஒரு சூட்கேஸ்.. ஒரு டேப் ரெக்கார்டர்.. நான் டிரஸ்லாம் கொண்டுட்டு வந்துட்டேன்.. ஆனாக்கா பெட் கொண்டுட்டு வரலை..”

- கவலை வேண்டாம் எல்லாம் ஏற்பாடு பண்ணி விட்டேன்.. மேலே ரூம் இருக்கு தங்கிக்கலாம்.. உங்களோட எக்ஸ்ரேயை தான் டாக்டர் பானர்ஜி கிட்டே காட்டி பேசிகிட்டு இருந்தேன்..

”அடடே என் படம் தான் இங்கே ஓடிட்டு இருக்கா..?”  பாபுமூஷாய் பக்கம் திரும்பி, “ஏய் பாபுமூஷாய்.. என்ன கிடைச்சிச்சு..?”

”நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்.. நான் எல்லாத்தையும் டாக்டர் திரிவேதி கிட்டே பேசிக்கிறேன்..”

“என்ன அதிசயமா இருக்கு.. என்னை பத்தி பேசறீங்க.. நான் எப்படி கவலைப்படாம் இக்கிறது?”

- என்றதும் டாக்டர் பானர்ஜிக்கு கோபம் வருகிறது, “உங்களுக்கு என்னா தெரியனும்?’ என்று கேட்கிறார்

“அட்லீஸ்ட் என்ன வியாதின்னு அதோட பேராச்சும் சொல்லுங்க..”

”வியாதிட பேர தெரிஞ்சிகிட்டு என்னா செய்ய போறீங்க..?” கோபம்..

“ஒண்ணும் செய்ய போறதில்லை.. ஆனா பேரு கண்டிப்பா தெரியணும்..” பிடிவாதம்..

“நான் இப்போ லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்னு சொன்னா உங்களுக்கு ஏதாவது வெளங்குமா?”

”என்னா சொன்னீங்க.. என்னா சொன்னீங்க... திரும்ப சொல்லுங்க..” ஆனந்த் ஆர்வமாகிறார்..

”லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்”

ஆனந்த், “வாவ்.. வாவ்.. என்னா வார்த்தை.. என்னா பேரு.. ஏதோ வைசராயோட பேரு மாதிரில்ல இருக்கு.. என்ன அருமையான வியாதி.. நீங்க அருமையான டாக்டர் பாபுமூஷாய்.. என்னா பேரு.. லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்.. விவிதபாரதில வர்ர விளம்பரம் மாதிரியும் இருக்குது பாருஙளேன்..”

டாக்டர் பானர்ஜி கோபத்தோடு எழுந்து, “இது விளையாடுற விஷயமில்ல.. உங்களுக்கு லிம்போசெர்கோமான்னா என்னான்னு தெரியுமா?” இந்த வியாதிய பத்தி தெரியுமா உனக்கு?” - கோபத்தில் வெடிக்க..

ஆனந்த் பயந்து போய், “என் வயித்துல... குணப்படுத்தவே முடியாத ஒரு கட்டி இருக்கு.. அதனால.. நான் 6 மாசத்துக்கு மேல உயிரோடவே இருக்க முடியாது.. இதோட மெடிக்கல் டெர்மா தான் இருக்கணும்.. இல்லையா?” என்று அமைதியாக கேட்க - டாக்டர் பானர்ஜி ஆச்சர்யமாக பார்க்க -

ஆனந்த் தொடர்கிறார், ”இதுக்கு ஏன் திடீர்ன்னு கோவப்படறீங்க.. ஓ..! இப்ப தான் எனக்கு புரியுது.. உங்களுக்கு என் மேல கோவம் இல்ல.. உங்களுக்கு உங்க மேலேயே தான் கோவம்.. என்னய குணப்படுத்த முடியலைல.. அதனால தான்..”

பாபுமூஷாய்க்கு என்ன சொல்வதென்றே விளங்க வில்லை..

“ஏய் பாபுமூஷாய்.. ஏஷா பாலோ பாஷா பாலோ நய் (பெங்காலி வார்த்தை) இவ்வளவு அன்பு நல்லதல்ல (என்று அர்த்தம்).. பாபுமூஷாய் நான் உங்களை மருத்துவ பரிசோதனை செய்ய போறேன்..”

”ஏன்? எனக்கு என்னா?”

கைய குடுங்க.. டாக்டரின் கையை பேஷண்ட் பிடிக்கிறார்

டாக்டர், “பல்ஸ் இங்கே இருக்கு..” என்று காட்ட

 “ஷ்” என்று “எதுவும் பேசக்கூடாது” என்பது போல் சைகை காட்டி விட்டு

“சான்ஸே இல்லை.. பாபுமூஷாய்.. உங்களுக்கு இப்ப என்னா வயசு?”

“30”

”30.. நூத்துல 30 கழிச்சா எவ்வளவு..?”

“70”

“70.. நீங்க இன்னும் 70 வருஷத்துக்கு மேலே உயிர் வாழ முடியாது.. உங்க உடம்புக்கு என்னா வந்திருக்குன்னு தெரியுமா?.. உங்க ஜிஸ்ம்.. உடல்.. சரீரம்.. கொஞ்சம் கொஞ்சமா அழுகிட்டே வருது.. ”

“நீங்க என்னா சொல்ல வர்ரீங்க?”

“70 வருஷத்துக்கும் 6 மாசத்துக்கும் என்னா பெரிய வித்தியாசம் இருக்கு..

மரணம் ஒரு நொடியில வந்துடும்..

நான் இந்த ஆறு மாசத்துல எத்தனையோ லட்சக்கணக்கான கனங்கள் நான் வாழ

நான் அனுபவிக்க முடியும்..

பாபுமூஷாய்..


ஜிந்தகி படி ஹோனி ச்சாயிஹே.. லம்பி நஹி.. (வாழ்க்கை பெருசா (சிறப்பா) இருக்கணும் நீளமா (நிறைய நாள்) இருக்கணும்னு அவசியமில்ல..)

மௌத் பத்திய பயத்த விடுங்க.. மௌத்தின் அடிப்படை எஸ்ஸன்ஸ் என்னன்னு உங்களுக்கு தெரியுமா, தோஸ்த்?


ஜப் தக் ஜிந்தா ஹூன் த்தப் தக் மரா நஹின் ஜர் மரா கயா சாலாஹ்.. மெய்ன் ஹி நஹின் (நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் எனக்கு மரணம் கிடையாது.. நான் மரணிக்கும் போது.. மகனே.. நானே கிடையாது) 

இதுக்கு போய் ஏன் பயந்துகிட்டு..”


”என்னய மன்னிச்சிடுங்க.. ஆனந்த சாப்..”

”சாப்.. ஏய்.. பாபுமூஷாய்.. வாழ்க்கை பெருசா இருக்கு.. ஆனா நேரம் குறைவா இருக்கு.. எல்லாத்தையும் கட் பண்ணி வேக வேகமா காரியங்கள முடிக்கணும்.. குறைஞ்ச பட்சம் இந்த சாபுங்குற மரியாதையையாவது கட் பண்ணிக்கலாமே..”

எல்லாம் பேசி கீசி முடிந்து தனது ரூமுக்கு போகும் போது, ஆனந்த் பாபுமூஷாயிடம், “என்ன மன்னிச்சிடுங்க பாபுமூஷாய்.. திரிவேதி சொல்லி தான் அனுபவிச்சார்.. உங்க கிட்டே மஜா கிஜா பண்ண கூடாதுன்னு.. என்ன செய்றது.. பழக்கத்த விடுறது கஷ்டம் தானே.. அவருக்கு எங்கே தெரிய போவுது, ஏன்..?” என்று கண்களை சிமிட்டி மறைகிறார்.

- தொடரும்

இந்த ஆனந்த் பானர்ஜி சந்திப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.. நான் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன்.. அதனால் தான் ஒன்று விடாமல் எழுத நேர்ந்து விட்டது..

ஆனந்த் பற்றிய எனது பழைய பதிவுகள்:

http://nagoreismail786.blogspot.com/2011/07/1.html - ஆனந்த் பட விமர்சனம் பகுதி 1


http://nagoreismail786.blogspot.com/2011/03/blog-post.html - மௌத் இந்தி பட காட்சிகள்


http://nagoreismail786.blogspot.com/2011/04/blog-post_27.html - ஆனந்த் திரைப்பட பாடல்கள்

Sunday, July 03, 2011

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி - ஆனந்த் - பழைய இந்தி பட விமர்சனம் 1

'மறுமை' இருக்கின்றதா இல்லையா என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்த செய்தி. ஆனால் ஒட்டுமொத்தமா ஒரு ஆள் விடாம எல்லோரும் ஒத்துக் கொள்கிற செய்தி 'மரணம்' நிச்சயம் உண்டு என்பதை தான். 


ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயமாக இருக்கும் வீட்டை காலி பண்ண வேண்டிய நிலை வரும்.  ஒரு பாழாய்ப் போன வியாதியும் வலியும் வேதனையோடு நம்மை கரை சேர்த்து விடும். எப்படையை கொண்டும் இதனை தடுக்க முடியாது, எக்கு கோட்டையில் ஒலிந்தாலும் இதிலிருந்து தப்பவே முடியாது.                         


அந்த காலத்தில் எல்லாம் யாருக்காவது நோய் வந்து விட்டால் அவர் ’சீக்காளி’ என்று கிண்டல் செய்வார்கள். இன்றைக்கு ’இவர் தான் எங்க ஃபேமிலி டாக்டர்’ என்பதில் தான் குடும்ப கவுரவமே அடங்கியிருக்கிற மாதிரி, ’அந்த டாக்டர் தான் எங்களுக்கு ஃபேமிலி டாக்டர்’ என்கிறார்கள் அதாவது ஒட்டு மொத்த ஃபேமிலியும் சிக்காக நோயாளியாக இருப்பதில் பெருமை கொள்வது தான் நாகரீகமாக நம்பி தொலைக்கப்படுகிறது.   


-------------------------------------------------------------------------


பழைய இந்தி படங்களில் எனக்கு குல்ஜார் சாபின் படங்களுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தது ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி அவர்களின் படங்கள் தான். ஆனாலும் இவரின் படங்களுக்கு  குல்ஜார் சாப் அவர்களும் இவரின் படங்களுக்கு வசனங்கள், பாடல்களை எழுதி பங்காற்றியுள்ளார்கள்.


ஹ்ரிஷ்டா என்று அன்பாக அழைக்கப்பட்ட இவரை 27 ஆகஸ்ட் மாதம் 2006ஆம் ஆண்டு இவ்வுலகை விட வலியுறுத்தப்பட்டிருந்தாலும் இந்த சிப்பி சில முத்துக்களை நம்மிடம் கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறது.


இந்த சிப்பியின் முத்துக்களில் வலிய புகுத்தப்பட்ட தோல்சேவை (அருவருக்கத்தக்க ஆபாச) காட்சிகளோ (skin show) வசனங்களோ இருக்கவே இருக்காது. குடும்பத்தோட பார்க்கக்கூடிய படம், குடும்பப் படம் என்பதற்கெல்லாம் உண்மையான சான்றாக இவரின் படத்தை முதன்மையாக சொல்லலாம்.


இப்போது இருக்கும் இயக்குனர்களிடம் ஆபாசமாக இல்லாமல் ஒரு படம் எடுங்கள் என்று சொன்னால் இண்டஸ்ட்ரிய விட்டு ஓடியே போய் விடுவார்கள். இவர்களுக்கு பிழைப்பே இறக்குமதி செய்யப்பட்ட வட (வடை அல்ல) இந்திய தோலில் (தோல் பிஸினஸ்) தான் ஓடிக் (அல்லது ஒட்டிக்) கொண்டிருக்கிறது.


------------------------------------------------------------------------


இந்தியாவின் ஷோமேன் என்று அழைக்கப்பட்ட ராஜ்கபூரும் ஹ்ரிஷிகேஷும் நண்பர்கள். பெங்காலியான இவரை ராஜ்கபூர் ‘பாபுமூஷாய்’ என்று தான் அழைப்பார். பாபுமூஷாய் என்றால் பெங்காலியில் மிகவும் மரியாதையோடு அழைப்பதை குறிக்கும். (நம்ம கூட தமிழில் ‘சார்(?)’ என்று அழைப்போமே அந்த வார்த்தையை விட மிகவும் மரியாதையான நெருக்கமான வார்த்தை)


தன்னுடைய இதய நண்பர் ராஜ்கபூர் நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டு கொண்டிருந்ததை பார்த்து சினிமாக்காரரான இவர் திரையில் நண்பனின் கதையை வடிக்க எண்ணினார். அத்தோடு இவருக்கு எம்.வி.மேத்திவ் என்ற இன்னொரு நெருங்கிய நண்பரும் இருந்தார். இவர் Epicurean Philosophyயில் நம்பிக்கை உள்ளவர். 


Epicurean Philosophy என்றால் வலிகள், வேதனைகள் எதையும் பொருட்படுத்தாமல் எந்த விதமான செண்டிமெண்ட்ஸுக்கும் இடம் கொடாமல் வாழ்க்கையை, வாழ்ந்து கொண்டிருக்கும் தருணங்களை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது தான்.


இரண்டு நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட அனுபவங்களை வைத்துக் கொண்டு செதுக்கிய சிற்பம் தான் ஆனந்த். 


----------------------------------------------------------------------------


ஆனந்தாக ராஜ்கபூரின் தம்பி ஷஷி கபூரை செண்டிமெண்டாக (?) நடிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் முடியாமல் போனது. பிரபல பிண்ணனி பாடகர் கோல்டன் வாய்ஸ் கிஷோர் குமாரை நடிக்க கேட்கும்படி இவரது இல்லத்திற்கு சென்றார்.


கிஷோர் குமார் காசு விஷயத்தில் ரொம்பவும் கறாரான பேர்வழி. தனக்கு தர வேண்டிய காசை எவரும் தராமல் பாக்கி வைத்திருந்தால் எந்த எடம் எந்த சபை என்றெல்லாம் பார்க்க மாட்டார், இப்படி தான் ஒரு முறை எம்.வி.ராமன் என்று ஒரு இயக்குனர் இவருக்கு 5000 ரூபாய் தராமல் பாக்கி வைத்திருந்தார். இவரின் படப்பிடிப்பு தளத்திற்கு கிஷோர் வரும் போதெல்லாம் ‘பாஞ்ச் ஹஜார் ருபியா (5000 ரூவா)’ என்று கத்திகிட்டே இருப்பாராம்.


இப்படிப்பட்டவரை தான் ஹ்ரிஷிகேஷ் நடிக்க வைக்க ஆசைப்பட்டார், கிஷோரும் பெங்காலி தான். ஆனால் கிஷோர் தனது வீட்டின் காவலாளியிடம் ‘ஒரு பெங்காலி வருவான், அவன் ஸ்டேஜ் நாடகத்துக்கு இன்னும் தர வேண்டிய காசை தரலை.. அதனால அவன் வந்தான்னா வீட்டு வாசற்படி ஏற விட்டுடாதே..’ என்று வேறொரு பெங்காலி காரரை பற்றி பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு சென்று விட்டார்.


அந்த நல்ல நேரம் பார்த்து பெங்காலியான ஹ்ரிஷிகேஷ் அவர்கள் ஆனந்த படத்தில் ஆனந்தாக நடிக்க கிஷோரை கேட்க சென்ற போது வீட்டு வாசலிலேயே காவலாளியால் தடுத்து நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அந்த காவலாளி கிஷோர் சொன்ன பெங்காலி ஹ்ரிஷிகேஷ் தான் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே காரணம்.


எல்லாம் நல்லதுக்குத் தான், அப்படி ஒரு சம்பவம் நடக்க போய் தான் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவுக்கு உள்ள ராஜேஷ் கண்ணா அவர்கள் அந்த பாத்திரத்தை ஏற்று ஆனந்தாகவே இறந்து காட்டி உயிர் ஊட்டியதை பார்க்க முடிந்தது. எபிகூரியன் ஃபிலாசபியை மீறி எமோஷனலாக கண்ணீர் சிந்த முடிந்தது.


----------------------------------------------------------------------------
தொடரும்...

Thursday, April 28, 2011

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் (திரைப்பட பாடல்கள்)

தேனின் சுவை 
காதுகளுக்கு..!


அர்த்தமுள்ள வரிகள்
வாழ்க்கைக்கு..!
----------------------------------------------------------




டெல்லியில் அவளோடு பழகியிருக்கிறான். கவிதையாய் பழகியுமிருக்கிறான். உறுதி செய்யப்பட்ட மரணத்தை உடல் பரிசோதகர்கள் அறிவித்து விட அவளை விட்டு தூரமாக மும்பைக்கு பயணிக்கின்றான்.

வாழ்க்கையை போலவே அவனும் புதிரானவன். மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவன். சோகங்களை தனக்குள் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் உயர்மனநிலை படைத்தவன்.

அவன் காதலியிடமிருந்து தூரமாக வந்ததே அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்பதால் தான். இதோ அவனது சோகங்கள் ராகங்களாக... ராகங்கள் ஏழுவர்ணக் கனவுகளாக...

------------------------------------------------


கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் துக்கம்

Teri ankhon ke saye churaye rasili yaadon ne,

(அந்த கனவானது)
உனது விழிகளின்
வழி
எண்ணங்களை 
களவாடி
இனிய நினைவுகளால்
நிரப்பி விடும்



Choti baaten,
சிறிய விஷயங்கள்

Choti choti baaton ki hai yaadein bani,

சிறிய விஷயங்கள்
தான்
நாம் அதிகமாக
நினைவில் வைத்துக்
கொள்வது

Bhoole nahin bithi hui ek choti ghadi,

ஒரு 
சின்ன கனத்தை
கூட
நான்
மறக்கவே இல்லை


Janam janam se, aankhen bichaaye, tere liye in rahon mein,

பல பிறப்புகளாய்
வழி மேல்
விழி வைத்து
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்..

Bhole bhale,

குழந்தைத்தனம்
(சிறுபிள்ளைத்தனமான என்ற அர்த்தத்தில் சொல்வோமே அதுவல்ல - ஒரு குற்றங் குறை அறியாத கள்ளம் கபடமில்லாத)

Bhole bhale dil ko behlate rahe,
உனது
குழந்தைத்தனமான
இதயத்தால்
நான்
களிப்படைகிறேன்

Tanhai mein tere khayalon ko sajate rahe,

தனிமையில்
உனது நினைவுகளை
ஆடையாய்
அணிந்து கொள்கிறேன்

Kabhi kabhi tho, aavaaz dekar, mujhko jagaya khabon ne,

சில பொழுதுகளில்
உனது
குரல் கேட்கிறது
அந்த குரல்
என்னை 
விழிப்படைய செய்கிறது


Roothi raatein,

கோபமான இரவுகள்

Roothi hui raaton ko jagaya kabhi,

கோபமான இரவுகளை
நான்
சில பொழுதுகளில்
வாங்கி வருகிறேன்

Tere liye bithi subah ko bulaya kabhi,

வேறு 
சில பொழுதுகளில்
அழகான அமைதியான சுபுஹ் (விடிந்தும் விடியாத அதிகாலை) நேரங்களை
வாங்கி வருகிறேன்

Tere bina bhi, tere liye hi, diye jalaye raaton mein,

நீயின்றி
உனக்காக
இரவில்
விளக்கை ஏற்றுகிறேன்
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)

----------------------------------------------------------



தனது சோகங்களை பகிர்ந்து கொள்ளாததற்கு காரணம் சொல்கிறான், ‘அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் செல்ஃபிஷ்’ என்று.

அவன் தங்கையாக பாவிக்கும் அவளது திருமண நாளன்று தன்னை நீண்ட நாள் வாழ வாழ்த்தும் படி வேண்டி நிற்கிறாள்.

அவனோ, ‘தன் வயதை கூட தர முடியாதே..’ என்று உளம் புழுங்குகிறான்.

இவனது வானம் இரவாடைக்கு (நைட் டிரஸ்ஸுக்கு) மாறிக் கொண்டிருக்கிறது..

அப்போது இவனது நினைவுகளில்..

-------------------------------------------------


kahii.n duur jab din Dhal jaae

எங்கேயோ 
தொலை தூரத்தில்
நாளின் முடிவில்

saa.Njh kii dulhan badan churaae

மாலைப் பொழுதெனும்
மணமகளின்
உடல்
களவாடப்படும் பொழுது

chupake se aae

ரகசியமாக

mere Kayaalo.n ke aa.ngan me.n

எனது நினைவுகளின்
தலைவாசலில்

koi sapano.n ke diip jalaae, diip jalaae

யாரோஒருவர்
கனவுகளெனும்
விளக்கை
ஏற்றினர்


kabhii yuu.Nhii.n, jab huii.n, bojhal saa.Nse.n

சில பொழுதுகளில்
எனது சுவாசம்
காரணமின்றி
கடினமாகிறது

bhar aaii baiThe baiThe, jab yuu.Nhii.n aa.Nkhe.n

காரணமின்றி
என் கண்கள்
கண்ணீரில்
நனைந்து விடுகிறது

tabhii machal ke, pyaar se chhal ke

யாரோ ஒருவர்
உள்ளத்தில் 
கிளர்ச்சியை தூண்டியதுடன்
காதலோடும் என்னுடன் 
காலாற நடக்கின்றனர்

chhue koii mujhe par nazar na aae, nazar na aae

இதயத்தை தொடும்
அவர்
கண்களுக்கு மட்டும் தென்படவில்லை

kahii.n to ye, dil kabhii, mil nahii.n paate

சில பொழுதுகளில்
இரு இதயங்கள்
சந்தித்துக் 
கொள்வதில்லை

kahii.n se nikal aae, janmo.n ke naate

ஆனால்
சில பொழுதுகளில்
சந்தித்தேயிராத
அந்த இதயங்களுக்குறியவர்கள்
ஜென்மம் வரை 
இணைந்திருக்கின்றனர்

ghanii thii ulajhan, bairii apanaa man

என்ன புதிர் இது
இந்த இதயத்தில்
என்ன முரண்பாடு
இந்த இதயத்திற்குள்

apanaa hii hoke sahe dard paraae, dard paraae

ஒருவருக்கு
உரிமையாயிருக்கிறது
பிறரின்
சோகங்களை
சுமக்கிறது



dil jaane, mere saare, bhed ye gahare

என் இதயத்திற்கு
மட்டுமே 
தெரிந்த 
இரகசியம்

ho gae kaise mere, sapane sunahare

எப்படி 
என் கனவுகள்
தங்கமாக
மாறுகிறதென்பது

ye mere sapane, yahii to hai.n apane

இது என்னுடைய
கனவு
இது ஒன்றுதான்
இப்போது எனக்கென
இருக்கும்
ஒரே ஒரு
உறவு

mujhase judaa na ho.nge inake ye saaye, inake ye saaye

என்னை விட்டு
பிரிவதில்லை
அந்த கனவின்
நிழலும் கூட
அந்த கனவின்
நிழலும் கூட

----------------------------------------------------------




’நேற்று நல்லா தாங்க எங்கூட பேசிக் கொண்டிருந்தார்..’

‘போன வாரம் கூட கடைத்தெருவில் பார்த்தேன்..’

‘நல்லா தானே இருந்தார்..’

- நம்மிடம் இருந்தவர் எங்கே மறைந்து போனார்..?

அதுவும் போன இடம் சொல்லாமல்...?

போய் வந்தவர் யாராவது இருப்பின் நில்லுங்கள்..!

போன இடம் பற்றி பகிருங்கள்....

--------------------------------------------------------



Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர்.. 

Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்               


Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே இருக்கும் விழித்தெழுவதில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே கழித்திருக்கும் விழித்தெழுவதேயில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும் 


Ek din sapno ka raahi
ஒரு நாள், கனவினை பின் தொடர்ந்த அவர்


 Chalaa jaaye sapno se aage kahan
கனவினை கடந்து சென்று விடுவார்,
கனவினை கண்டவர் எங்கே தான் கண் காணாத இடத்திற்கு சென்று விட்டார்?

Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்


Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும் Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்


Sukh dukh sang sang jhele
சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்


Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்Sukh dukh sang sang jhele
சுக துக்கங்க(ளில்)ளை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர்


Wahi chunkar khaamoshi
அவரே அவர் எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் மௌணமாக... 


Yun chale jaaye akele kahan
எங்கே தான் தன்னந்தனியாக செல்கின்றனரோ...?


Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்


Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்