சிறு வயது முதல் கமல் ரசிகர் தான் நான், பேசும் படம், ஜெமினி சினிமா போன்ற சினிமா பத்திரிக்கைகளில் வரும் கமல் படங்களை கத்திரித்து பெரிய அட்டை வாங்கி அதில் கோந்து வைத்து ஒட்டி “சகலகலா வல்லவன் கமல்ஹாசனின் இத்திரைக் காவியத்தை காண வந்து அன்பு ரசிக உள்ளங்களுக்கு நன்றி” என்று பெரிதாக ஸ்கெட்சில் எழுதி நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் உள்ள கண்ணாடி அலமாரியில் வைப்பதற்கு கொடுப்போம்.
அதனை காண வீட்டிற்கு தெரியாமல் காலில் செருப்பு கூட போடாமல் (ஏனென்றால் செருப்பு வீட்டில் இல்லை என்றால் எங்கோ வெளியே போயிருப்பது வீட்டிற்கு தெரிந்து விடும் என்பதால், எங்க வீடு கான்வெண்ட் மாதிரி பயங்கர ஸ்ட்ரிக்ட்) கமல்ஹாசன் படத்திற்கு நாங்கள் வைத்த ரசிகர் மன்ற அட்டையை காண சென்று வருவதுண்டு.
நான் தெரிந்தோ தெரியாமலோ “வாப்பாக்காக” என்று ஒரு கதை எழுதி திண்ணை இணைய இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்த கதையில் கூட எனது கதாநாயகனான அஸ்லம் என்பவர் கமல்ஹாசனின் ரசிகராக தான் வருவார். கமல்ஹாசனின் படங்களான, பேர் சொல்லும் பிள்ளை, உன்னால் முடியும் தம்பி, உயர்ந்த உள்ளம் போன்ற படங்களை எல்லாம் கதையில் அங்கங்கே வருவது போல் எழுதியிருந்தேன்.
கமல்ஹாசனின் லஞ்சம் வாங்க கூடாது என்ற கருத்துடைய ‘இந்தியன்’ படத்தை சென்னை சத்யம் தியேட்டரில் ‘பிளாக்கில் டிக்கெட்” வாங்கி பார்த்து இருக்கிறேன். (நல்ல வேளை ஷங்கரின் இந்தியன் தாத்தா பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களை, பிளாக்கில் டிக்கெட் வாங்கி வந்து படம் பார்ப்பவர்களை எல்லாம் வர்மக் கொலை பண்னவில்லை)
சிங்கப்பூர் தொலைகாட்சிக்கு பல வருடங்களுக்கு முன்பு இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது அவர்களுக்கு அளித்த பேட்டியில் ’தனது தந்தையாருக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகம் அதனால் தான் இஸ்லாமிய பெயர் தொனியில் தனது பெயர் அமைந்ததன் காரணம்” என்று அவர் கூறிய போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
சிங்கப்பூர் கேத்தே எனும் திரையரங்கில் ஹேராம் படம் பார்க்கும் போது கூட ஒருத்தர் கத்தினார், “இது தமிழ் படமா? இந்தி படமா?” என்று - பதிலுக்கு திரையரங்கிலேயே நானும் பதில் கூற கத்தினேன், “இது இந்திய படம்” என்று.
காஃபி வித் அனுவில் திலிப் குமாரை யுசுஃப் கான் என்று அழைத்த போது சபாஷ் சொன்னேன்.
சுருக்கமாக சொல்லப் போனால் நான் கமல்ஹாசனின் ஒரு தீவிரவாத ரசிகனாக தான் இருந்தேன் எனலாம்.
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் பரிட்சைக்கு போற பையன் படிச்சிட்டு போனா போதும் சாமி கும்பிட தேவையில்லை என்று சொல்வது, கடவுள் சிலை வாங்கும் போது ‘இது தான் விலையா?’ என்று கிண்டலாக கேட்பது நம்மவர் படத்தில் ‘யாராவது அவசரமா கும்பிடணும் கோயில் எங்கே இருக்குன்னு கேட்டிருக்காங்களா? ஆனா அவசரமா டாய்லெட் போவணும்னு கேப்பாங்க.. அதனால் நம்ம டாய்லெட் தான் அதிகம் கட்டணும்னு..’ இன்னும் எவ்வளவோ படங்களில் தன்னை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிக்கும் ஒரு சிறந்த பகுத்தறிவாளராக காட்டிக் கொண்ட கமல் ஹாசன் அவர்கள் இப்போது ஹே ராம், தசாவதாரம், உன்னை போல் ஒருவன் என எடுத்து விட்டு விஷ்வரூபம் எடுத்து வந்திருக்கிறார்.
இடையிலே கூட ஒரு பேட்டியில் ‘இஸ்லாமியர்களுக்கு சந்தேகம் வந்து உங்கள் படத்தை போட்டு காட்டும் படி கேட்கிறார்களே” என்ற கேள்விக்கு ‘அவர்கள் கேக்கத்தான் செய்வார்கள்... உயர் சாதிக்காரர்கள் எல்லாம் ஆங்கிலேயரின் அடிவருடிகளாக மாறிய பின்பும் அவர்களின் மொழியான ஆங்கிலத்தை கற்பதே பாவம் (ஹராம்) என்று (ஃபத்வா) கற்காமல் பின் தங்கியவர்கள், அவர்கள் வாழ இறந்த பின்பு புதையுற இந்த மண்ணை தேர்ந்தெடுத்தவர்கள், அவர்களை சுதந்திர இந்தியாவில் முதல் தர குடிமகனாக அல்ல ஐந்தாம் தர குடிமகனாக நடத்துகிறார்கள்..... ஒரு ஐம்பது ஆண்டு காலம் அத்து மீறி (பாலஸ்தீன மண்ணில்) குடியேறிய இஸ்ரேலுக்கே இவ்வளவு தேசப்பற்று இருக்கும் போது.. பல நூற்றாண்டுகாலமாக இங்கேயே வாழ்ந்து வரும் இவர்களின் தேசப்பற்றை சந்தேகிக்கும் போது கோவம் வரத் தான் செய்யும்...” என்பது போல் எல்லாம் இஸ்லாமியர்களின் தோளில் கைபோட்டு ஒரு சகோதர குரலில் அம்பேத்கார் பேசியதை எல்லாம் கமல்ஹாசன் அந்த பேட்டியில் ஆறுதலாக ஆதரவாக பேசியிருப்பார்.
ஆனால் பிரபல பதிவர் பைத்தியக்காரன் என்பவர் (இப்பொழுது இவர்கள் எழுதுவதே இல்லை போலும்) தசாவதாரம் படத்தின் விமர்சனத்தை படித்ததும் கமல்ஹாசனின் நுண்ணரசியலை அவர் புட்டு புட்டு வைத்திருப்பார். அதே போல் அடுத்து நான் படித்தது சுகுணா திவாகரின் கமல் படத்தை பற்றிய விமர்சன பதிவு.
உன்னை போல் ஒருவன்: http://suguna2896.blogspot.sg/2009/09/blog-post_19.html
தசாவதாரம்: http://suguna2896.blogspot.sg/2008/06/blog-post.html
தோழர் வே.மதிமாறன் தனது பதிவில் சொல்லியிருப்பது போல் கமல்ஹாசனுக்கு அரசியலும், மதமும் கிடையாது ஆனால் ஜாதி இருக்குமோ என்ற நிலைக்கு வரவேண்டியிருக்கிறது அல்லது தான் ஆடாவிட்டாலும் தனது ஜாதி சதை ஆடி வருகிறதோ என்ற கேள்வி எழுகின்றது.
விஸ்வரூபம் படம் வெளி வரும் முன்பே அது இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தியலை மனதில் பதிய வைக்கும் படமாகத் தான் இருக்கும் என்று வே.மதிமாறன் கவுண்டமணியின் டயலாக்கோடு எழுதியிருப்பார்கள்.
சமீபத்தில் விஸ்வரூபம் படத்திற்கு எதிரான டி.என்.டி.ஜே. நடத்திய கூட்டத்தில் பேசிய பி.ஜே. அவர்கள் பாரதிராஜாவையும் மனுஷ்யபுத்திரனையும் கமல்ஹாசனையும் கொஞ்சம் தரக்குறைவாக பேசியிருப்பார். அதன் பிறகு தன் வலைத்தளத்தில் அதற்கான காரணத்தை சொல்லி காமெடி பண்ணியிருப்பார். அப்புறம் தொலைகாட்சி பேட்டியில் நாகரீகமாக பேசியிருக்கிறாராம்.
இதை பற்றி ஒருவர் முகபுத்தகத்தில் எழுதும் போது அவர் பொதுமேடையில் ஒரு மாதிரியும் (அதாவது தனக்கு ஆதரவான பெரும் கூட்டத்தை பார்த்தவுடன் உணர்ச்சி பிழம்பில் ஒரு மாதிரியும்) தொலைக்காட்சி பேட்டியில் ஒரு மாதிரியும் பேசுவார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
எனக்கு இதே கருத்து தான் கமல்ஹாசனின் தொலைகாட்சி பேட்டியில் இஸ்லாமிய ஆதரவு குரலோடு பேசுவதும் படங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை கதையினூடே மக்கள் மனதில் பதிய வைப்பதுமாக நடந்து கொள்கிறாரோ என்றே தோன்றுகிறது.
இந்த இடத்தில் பி.ஜே அவர்களின் வலைதளத்தில் ஒரு விளக்கம் அளித்திருப்பார், அதாவது மனுஷ்ய புத்திரனை மிருக புத்திரன் என்று அழைத்ததற்கு அவர் தரும் ஆதாரங்கள், அலி (றலி) அவர்கள் மீது மண் ஒட்டியிருந்ததை பார்த்து விட்டு ‘மண்ணின் தந்தை’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அழைத்தது, அபுஹுரைரா (றலி) அவர்களை அதாவது பூனையை மிகப் பிரியமாக வளர்த்ததற்காக பூனையின் தந்தை என்று அழைக்கப்பட்டதை எல்லாம் குறிப்பிட்டு அதே அடிப்படையில் தான் மிருகபுத்திரன் என்று அழைத்தேன் என்று செம காமெடி பண்ணியிருப்பார்.
மண்ணின் தந்தை என்பதோ பூனையின் தந்தை என்பதோ அவர்களின் தோழமையோடு உரிமையோடு நட்போடு சொல்லிய வார்த்தைகள். அடுத்தவர் மனதை புண்படுத்திய வார்த்தைகள் அல்ல.. பூனையின் தந்தை என்று சொல்வதற்கும் மிருகத்தின் மகன் (மிருக குணம் படைத்தவனின் மகன்) என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது.
அன்னாரின் வார்த்தைகளை ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவது போல் அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் பல பேர் என்றால் சில பேர் அன்னாரை இனி மேல் அப்படியெல்லாம் பேசாமல் இருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார்கள், ஒருத்தர் கூட இந்த தவறுக்கு மன்னிப்பு கேக்க வேண்டும் என்று கேட்க வில்லை.
இது என்னுடைய கருத்து தான், தவறாக கூட இருக்கலாம், ஆனால் அது தவறாக இருக்கும் பட்சத்தில் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பெறும் வரை அல்லாஹ்விடம் எந்த மன்னிப்பும் கிட்டாது என்றே நம்புகிறேன்.
அடுத்து பார்த்தீங்கன்னா, கமல்ஹாசன் யார் யாரோடு இருந்தார் வாழ்கிறார் என்று பட்டியல் போடுகிறார், செந்தில் தேடுற ஆள் இவர்கள் தான் போலிருக்கிறது, கரகாட்ட நண்பர்கள் வைத்திருந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரியை வைத்திருந்தது யார் என்று அறிந்து கொள்ள செந்தில் ஆவலாக இருந்தார். அதெல்லாம் கணக்கெடுக்குறதா உங்கள் வேலை...?
சரி போய் தொலையட்டும், நமக்கு வேலையில்லை...
சில நண்பர்களின் பதிவை பார்த்தேன், ஒருவர் கேட்டிருந்தார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்திருப்பது பற்றி, அதாவது பேராசியருக்காக ஓட்டு போட்ட மக்கள் பின் லேடன், முல்லா உமர் எல்லா தீவிரவாதிகளையும் தெரிந்த பிறகு தான் இவர்களையும் தேர்ந்தெடுத்தார்களாம்.
அதாவது அரேபியரான் பின் லேடனும் முஸ்லிம் தான் ஆஃப்கானியரான முல்லா உமரும் முஸ்லிம் தான் தமிழரான ஜவாஹிருல்லாஹ்வும் முஸ்லிம் தான் - இந்த ஒற்றுமை தெரிந்திருந்தும் தமிழரான இவரை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்கிறார்கள்.
அப்படி பார்த்தால் காந்தியை சுட்டது கூட ஒரு இந்து தான், அதுக்காக இந்து நண்பர்களுக்கு ஓட்டு போடக் கூடாது என்று முஸ்லிம்களை சொல்லி விட முடியுமா? -
இன்னொரு பதிவில் வேறொரு நண்பர், ஆப்கானில் அன்பின் வடிவான புத்தர் சிலையையே குண்டு வைத்து தகர்த்தவர்கள் தலிபான்கள், அவர்களை படத்தில் காட்டும் போது அவர்கள் குரான் ஷரீஃப் ஓதுவதையோ, தொழுகை செய்வதையோ காட்டுவதை எவ்வாறு விட முடியும் என்று கேட்கிறார்கள்.
சிலையை குண்டு வைத்தவர்களையே தீவிரவாதிகளாக சித்தரிக்கிறீர்களே, எத்தனையோ குழந்தைகள் உள்பட சிவிலியன்களை மேலிருந்து குண்டு போட்டு சிலையாக்கினார்களே அவர்களை பற்றி உலக மகா உத்தமர்கள் போல் காட்டியிருக்கிறீர்களே அது ஏன்..? என்று கேட்கிறோம்.
எனக்கு இன்னும் நாகூரில் நடந்த இந்து - முஸ்லீம் கலவரம் நடந்த சமயம் என் கண்ணால் பார்த்த காட்சி ஒன்று ஞாபகமிருக்கிறது, ரயிலடிக்கு அந்த பக்கம் மீனவ நண்பர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கம்பையும் கட்டையையும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள், ரயிலடிக்கு இந்த பக்கமாக முஸ்லிம்கள் கம்பும் கட்டையுமாக காத்து கொண்டிருக்கிறார்கள், அப்பொழுது மிகவும் தைரியமாக ஒரு மீனவ நண்பர் முஸ்லிம் தெருவில் நடந்து போனார், அப்பொழுது அவர் சொன்னார், “நாங்க விக்கிறோம்.. நீங்க வாங்குறீங்க... நம்ம அடிச்சிகிட்டா நாம வாழவே முடியாது... எனக்கு எல்லாம் தெரிஞ்சவங்க... என்னய எவரும் எதுவும் செய்ய முடியாது அப்படி செய்யவும் மாட்டாங்க...: என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து போனார்.
ரோஜா படத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு முஸ்லிம் தீவிரவாத வில்லன்கள் தேவைப்படுகிறார்கள், அதுவும் அவர்களை ஒழிக்கும் ஹீரோக்கள் எல்லாம் பெரும்பாலும் அக்ரஹாரத்திலிருந்து தான் வருகிறார்கள்.
குரான் ஷரீஃபின் கூற்றுப்படி நாம் அனைவரும் ஆண் பெண் உள்பட யாவரும் ஒரே ஆன்மாவிலிருந்து வந்தவர்கள், சகோதர சகோதரிகள். இறைவனின் குடும்பங்கள், யார் இறைவனின் குடும்பத்தை நேசிக்கிறார்களோ அவர்களை இறைவனும் நேசிக்கிறான் என்று அகிலங்களின் அருட்கொடை (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
எங்களுக்கு ஐந்து கடமைகள் மட்டுமே உண்டு. அவை...
1. கலிமா (அல்லாஹ்வை தவிர அல்லாஹ் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதார் ஆவார்கள் என்று சாட்சி பகர்வது)
2. ஐவேளை தொழுகை - அல்லாஹ்வுக்காக குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அசைவுகளை செய்து குறிப்பிட்ட குரான் ஷரீஃப் வாக்கியத்தை உச்சரிப்பது.
3. நோன்பு - குறிப்பிட்ட மாதத்தில் பசி, தாகம் முதல் அனைத்து கெட்ட உணர்வுகளையும் உருவாவதை கவனித்து கட்டுப்படுத்தும் ஒரு மகத்தான சுய பயிற்சி
4. ஜகாத் - எத்தகைய வருமானமுடையவருக்கும் சேமிப்பில் இருக்கும் செல்வத்தில் இரண்டரை விகிதம் ஏழை வரியாக உற்றார் உறவினர் ஆரம்பித்து ஏழை எளியோர் அநாதைகள் உள்பட யாவருக்கும் பகிர்ந்து கொடுப்பது.
5. ஹஜ் பயணம் - ஆயுளில் ஒரு முறையேனும் குறிப்பிட்ட மாதத்தில் இனம், மொழி, நாடு, பாலினம், நிறம், இன்னும் என்னென்ன பிரிவினைகள் மனிதர்களிடையே பொறாமையினால் ஏற்பட்டதோ அவையனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு உண்மை முஸ்லிமாக (இறைவனுக்கு வழிபட்டவனாக) ஒரே குடும்பமாக ஒரே மாதிரியான சீருடையோடும், ஒரே மாதிரியான முழக்கத்தோடும் உடல் சுத்தத்தோடும் இஸ்லாமிய ஆன்மீக மையமான கஃபா ஆலயம் சென்று கிரியைகள் செய்து மன சுத்தம் பெற்று திரும்புவது.
மேற்கூறிய ஐந்து தான் எங்கள் கடமையாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர நீங்கள் படம் காட்டுகிற தீவிரவாதம் எங்கள் கடமையில் இல்லை என்பதை சினிமா தீவிரவாதிகளுக்கு ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள இதை பதிவாக்கியிருக்கிறேன்.
வஸ்ஸலாம்...