Thursday, June 30, 2011

ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகவே இல்லை…! - இஜட். ஜபருல்லாஹ் அவர்கள் 1974ல் அம்பகரத்தூரில் பேசியது

இது மரியாதைக்குறிய ’ரஜப்’ மாதம். உண்மையில் ‘ரஜப்’ என்றால் மரியாதை என்று தான் அர்த்தம்.

ஒரு அருமையான research based மொழிகளை இஜட் நானா கையாண்டு இருக்கிறார்கள்.

எச்சரிக்கை:
ஆதார புருஷர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். உங்களால் தாங்கி கொள்ள முடியாது. அது மாத்திரமல்லாமல், இங்கே உண்மைகளை மட்டுமே கண்டு கொள்ளலாம் நிச்சயமாக (இறைவனின்) உருவங்களை அல்ல. 

பேசிய இஜட் நானா அவர்களுக்கும், தொகுத்த ஹமீத் ஜாஃபர் நானா அவர்களுக்கும், பதிவிட்ட ஆபிதீன் நானா அவர்களுக்கும் நன்றிகள்

--------------------------------------------------------------------------------------------------------------
ஆபிதீன் நானா

ஹமீது ஜாஃபர்:

நானும் சின்ன வயதிலிருந்து எத்தனையோ ஆலிம்கள், மௌலானாக்கள் மிஃராஜின் சிறப்பைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன். எல்லா ஆலிம்சாக்களின் தொனியும் ஒரே மாதிரி, ஒரே தடத்தில்தான் இருந்து வருகிறது. உண்மையான நிகழ்வை அல்லது கருத்தை அல்லது படிப்பினையை அல்லது பயனை இன்றுவரை யாரும் சொல்லவில்லை. தவிர மிஃராஜ் பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இரண்டு. Bukari Vol 1. no 345 & Bukari Vol 4. no 429  ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது; அதாவது அவை தவறாக இருக்கிறது என்றுகூட சொல்லலாம். அவற்றை தொகுத்து வழங்கிய ஆலிம்கள்கூட அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அத்தகைய புத்தகங்களை வாங்கிப் படிக்கிறவர்கள் கண்களில்கூட தவறுகள் சிக்குவதில்லை. சரியான கருத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது என்ற அசையாத நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் மனித அறிவுக்கு அகப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, ஈமானின் ஒரு பகுதி என்றெல்லாம் சொல்லி மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நான் ஹஜ்ரத்திடம் பயிற்சி பெறும்போது அவர்கள் சொன்ன கருத்தினால் தெளிவைப் பெற்றேன்; உண்மையைப் புரிந்துக்கொண்டேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் சென்ற வருடம் மிஃராஜ் பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அதில்கூட நான் உண்மையை சற்று மறைத்தே எழுதினேன். காரணம், படிப்பவர்களுக்கு செரிமானம் ஆகாது என்பதால். உண்மையை மறைத்தேனேயொழிய பொய்யைக் கலக்கவில்லை. இப்போது இன்னும் ஆழமான செய்தியைத் தரப்போகிறேன். படிப்பவர்கள் பயந்துவிடக்கூடாது; அவசரப்பட்டு சொன்னவரையும், என்னையும், ஆபிதீனையும் காஃபிர், முஷ்ரிக் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிடக்கூடாது. தெளிந்த மனத்துடன் கடைசிவரைப் படியுங்கள்.

நீங்களும் இதுவரை எத்தனையோ ஆலிம்கள் மிஃராஜைப் பற்றி சொன்னதை கேட்டிருக்கலாம், எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கலாம். அந்த கருத்துக்கள் எல்லாம் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை ஒரு தட்டிலும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தை மறு தட்டிலும் வைத்துப் பாருங்கள், எந்தத் தட்டு கனமாக இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; எது லேசாக இருக்கிறதோ அதை குப்பையில் போட்டுவிடுங்கள்.

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1974 ம் ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் (இது திருநள்ளாரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரம்) என்ற ஊரில் எங்க ஜஃபருல்லாஹ் நானா பேசியது. அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் அந்த ஊர் நாட்டாண்மை, விஷயம் தெரிந்தவர் ; மார்க்கப் பற்று அதிகம் உள்ளவர், நானா மீது தனி பிரியம் வைத்திருந்தார். இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் ஒன்று நானா மற்றொன்று c.v. அபுபக்கர் ஷா பாக்கவி, இவர் கோயம்புத்தூர் இம்தாதுல் உலமா மதரஸா பிரின்சிபால். ஹஜ்ரத் அவர்கள், மிக விஷேசமானவர்கள் தமிழ் நாட்டில் மதிக்கப்படுபவர்கள். மிகச் சிறந்த பேச்சாளர். அவர்கள் எந்த கூட்டத்திற்கு பேசப்போனாலும் ஜஃபருல்லாஹ்வும் கண்டிப்பாகப் பேசியாகவேண்டும். இது அவர்கள் இடும் நிபந்தனை. அந்த அளவுக்கு நானாமீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர்கள். அன்றைய தினம் நடந்த அந்த கூட்டத்தில் முதல் சிறப்பு சொற்பொழிவாற்ற நானா தொடங்கியவுடன் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, ”வெட்டுவேன், குத்துவேன்” என்றெல்லாம் அமளிதுமளியாகியது. அதே மாதிரி நீங்களும் ஆகாமல் ஜபருல்லாநானாவின் பேச்சைக் கேளுங்கள்.

***

“அல் இஸ்ரா வல் மிஃராஜ்”

தொகுப்பு: ஹமீது ஜாஃபர்

***

ஜபருல்லா ஆரம்பித்தார் :



அஸ்ஸலாமு அலைக்கும், எனக்கு தெரிஞ்சு ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகவே இல்லை…!


(“ஆய்…….. ஊய்ய்………., அடக்கு….., நிறுத்து… எறங்கு….., ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..உய்ய்ய்ய்ய்ய்ய்…” – கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் கத்த ஆரம்பித்துவிட்டனர்.)

சத்தம்போடாதீங்க, நான் உண்மையெ தான் சொல்றேன். ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகலை!

(”உட்காருயா, பேசாதே, காஃபிரு” - மீண்டும் கத்திக்கொண்டு மேடையை நோக்கி வந்தனர் சிலர்.)

உடனே கூட்டத்தின் தலைவர் எழுந்து, ‘உட்காருங்கப்பா, ஒரு வார்த்தைக்கு எந்திரிச்சிட்டீங்க, உட்காரு, அவர் ஒரு சேதி சொல்லுவாரு உங்க கோவம் அடங்கிடும்; கடைசியிலெ பாரு; ரசூலுல்லா சொன்னாஹ என் பின்னாலெ வாங்கன்னு, எங்கே போறேன்னு சொன்னாஹலா? அந்த மாதிரி சொல்லிருக்காஹ, உட்காருங்க …’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹஜ்ரத் c.v. அபுபக்கர் ஷா பாக்கவி எழுந்து ‘ஜஃபருல்லாஹ் அருமையான சிந்தனைவாதி அதுமாத்திரமல்ல அந்த சிந்தனை சரியானத் தடத்திலெ போகுதாங்கிறதை சொல்லிக்கொடுக்கிற ஒரு அருமையான குருவை வச்சிருக்கிறவங்க, அவர்கள் இப்படி சொல்வதென்றால் அருமையான ஒரு செய்தியை உங்களுக்கு கொடுப்பதற்காக. உங்களுடைய உள்ளங்களெல்லாம் கோபத்தாலெ இருந்தாலும் சரிதான் பாசத்தாலெ இருந்தாலும் சரிதான், உங்களுடைய மனத்தைத் திறக்கவேண்டும். திடீரென்று சொன்னால்தான் மனம் திறக்கும் உட்காருங்க’ என்று சொன்னதும் எல்லோரும் அமைதியாக அமர்ந்தனர்.

ஜபருல்லா தொடர்ந்தார் :

இதைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, ’என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்’டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல; அதுக்குப் ’இஸ்ரா’ன்னு பேரு. அங்கேர்ந்து ரசூலுல்லாஹ் மேலே போனாங்கன்னு சொன்னீங்கல்ல. அதுக்கு பேரு ’மெஹ்ராஜு’. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து ’இஸ்ரா’ போனாஹ, ’மெஹ்ராஜு’க்குப் போனாஹாங்குறதுலெ நமக்கு என்ன முன்மாதிரி இருக்கு? நாம போக முடியாதே !

என்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ்? குர்ஆன்லெ, கடுகடுன்னு பேசும்போதுகூட ’யா முஜம்மில்’ அப்டீன்னு அழைக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; ’சிராஜுல் முனீர்’ அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து…. அது மாத்திரமல்ல , ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான்.

நாம் ’அவாம்’. ரசூலுல்லாஹ் யாரு ? நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நாம ’அவாமு’. ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான்? ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம்? அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ், என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ’ரசூல்’ என்கிற வார்த்தையெ போடும்போது – மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) , ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல.? என்னுடைய ’அப்தை’ (அப்து – அடிமை) என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ’ரசூல்’ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய ’அப்து’ என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும் சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ’ஹக்’ வேறே ’ஹல்க்’ வேறே ; அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும் ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத , அல்லாவை மட்டும் தெரிஞ்ச , அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டான். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.

அடுத்தது ’திர்மிதி’யிலெ இருந்தது ’புஹாரி’லெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாங்க, அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாங்க, இருபதா கொறச்சாங்க, மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாங்க, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாங்க அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ! அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க , இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்ஸலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் , கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ. அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை! இஹலுக்கு (ரசூலுக்கு) சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா , ’உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்’ என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால்? அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு அர்த்தம்னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை, நுபுவத்தை முடிச்சுட்டான், குர்ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார் என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ ஹதீஸிலெ. இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ , ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம்.

நான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க ? அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகல்லெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே! அந்த ஆயத்து பொய்யா போயிடுமே? அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க? அப்ப தொடர்ந்து ’பாங்கு’தானே இருக்கும்? வேறே என்ன நீங்க பண்ண முடியும்? அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது? தொழுதுக்கிட்டே இருந்தா….? அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாங்க. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ’ஷட்டிங்’ பஸ்ஸா – போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு? இப்படித்தான் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாங்க, அலுப்பு பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னாருண்டு!

(சிரிப்பொலி)

இதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நம்ம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இது இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அவங்க இப்படி பேசினாங்க, இவங்க இப்படி பேசினாங்க அப்டீன்னு.. ’இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்’ என்று மூசா(அலை) துஆ செஞ்சாங்க. அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம்? ’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ. என்ன அர்த்தம்? எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமளே recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே , மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க. அடுத்து இன்னொன்னு சொல்றேன்.. ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க , நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களா?ன்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, ’ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்’ அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போன பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல? ஒரு பயணத்துக்கு… சரி , நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே.. ஏன் சொல்லலை, காரணம் என்ன? ’சிந்தியுங்கள்’ என்கிறான் அல்லாஹ்.

நான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை (இது) . ஹஜ்ஜுலே நடக்கிறது பூரா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம் ‘அலை’ஹிஸ்ஸலாத்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்… அங்கே நடக்கிறது பூரா…அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம்! அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ’ஜம் ஜம்’மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா? அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு ’இபாதத்’ செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைப்பிடித்தல்னு அர்த்தம், கீழ்ப்படிதல்ண்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ செய்ய சொன்னான்? சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு? சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது? மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு ’சஜ்தா’ செய்யிண்டான் அதுக்கு முன்னாடி ’சஜ்தா’ செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ? எனவே மனிதர்களுக்கு ’சஜ்தா’ என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் ’சஜ்தா’ செய்ய சொன்னான் அல்லாஹ். சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். ’நான் நெருப்பு ; இவரை மண்ணாலெ படைச்சிருக்கே; இவரையா ’சஜ்தா’ செய்யனும் நான்?’ என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது , முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தா பண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ ’சஜ்தா’ என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.

இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க? எந்த திக்கை வக்கிறீங்க? மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா? தெற்குலெ இல்லை? அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன…? சிலை வச்சா தப்பு , கட்டடம் வச்சா பண்ணலாமா? சிலை வச்சா இணை வைக்கிறது! கட்டடம்னா? அது அல்லாட இல்லம்னா இதெல்லாம் / பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா? அது சொந்த வூடு, இது வாடகை வீடா ? இல்லை , அடமானம் புடிச்சிருக்காரா அல்லா? அல்லா யாருக்கு ’சஜ்தா’ பண்ணச் சொன்னான்? ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ body இருக்குது, ஆதத்துடையது எங்கே இருக்கு? அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா? அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு? முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும்? மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ்ப்படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்ப்படிகிறோம். ’சஜ்தா’ பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப் பண்ணச்சொன்னானோ… இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை ’சஜ்தா’ பண்ணமாட்டேண்டு அவன் சொன்னான்ல , அதையே நீங்களும் சொன்னா? ஆதத்தை ’சஜ்தா’ பண்ணலை , அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்…. அல்லா மாத்திட்டானா இடத்தை? எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்ப்படிதல் அடிமைப் படுத்தல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க? யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை ’காஃபிர்’னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒண்ணு சொல்லவா? தொழும்போது ’நிய்யத்து’ சொல்றீங்களே , அதை சொல்லுங்க பார்ப்போம்! சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே! அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது? அல்லாவைத் தொழுறேண்டுல்ல சொல்லணும். அது என்ன அல்லாவுக்காக? your prayer is to him or for him? அதைச் சொல்லுங்க. அல்லாவைத் தொழுவுறீங்களா, அல்லாவுக்காகத் தொழுவுறீங்களா? இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா..? எதுலெ இருக்கான் அவன்? அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க..? நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா..? For Him or To Him? அதனாலெ அல்லா என்ன சொன்னான்… ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு – அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு – அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் – உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; ’லாயிலாஹ இல்லல்லாஹ்’ / கலிமா – உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான். இல்லாட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள்? ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ’ஃபர்ளு’லெ இருக்கு..? தொழுகை. அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு – அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும்? யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வந்தா அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்?

இந்த செய்தி பூரா அல்லாடதான்னு நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்க முடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம்.

அதனாலெ ’ஆதம்’ என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான்? மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே! தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..?அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..? நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது..

**

’ஹும்….. இதுக்கு மேலே நான் பேசணுமா? பாருங்க, ஒரு அருமையான தத்துவத்தை கொடுத்திருக்கிறார். அல்லாஹ் சொல்றான் . சிந்தியுங்கள் என்று. யோசனை பண்ணிப் பாருங்கப்பா ‘ - (முடிவுரையில்) c v அபுபக்கர் பாக்கவி.

**

நன்றி : இஜட். ஜபருல்லா, ஹமீது ஜாஃபர்

ஆபிதீன்

***

அருஞ்சொற்கள்:

இஸ்ரா - வேகமாகப் பயணித்தல்

மெஹ்ராஜ் – தூல உலகத்திலிருந்து சூக்கும உலகத்துக்கு உயருதல்

சிதரத்துல் முந்தஹா - சுவனத்தில் ஓர் இடம்

ஃபர்ளு - கட்டாயம் செய்யவேண்டிய கடமை

ஹதீஸ் - நபிகளாரின் சொல், செயல்

நிய்யத்து - செயலுக்குமுன் உண்டாகும் எண்ணம்

கபுரு - அடக்கஸ்தலம்

காஃபிர் - இறைவனை நிராகாரிப்பவன்

சஜ்தா - அடிபணிதல், சிரம் தாழ்த்துதல்

வக்து - நேரம்

ஷைத்தான் - இறைவனுக்கு எதிரானவன்

ஆலிம் - (மார்க்க)அறிஞர்

Tuesday, June 28, 2011

புனித மிஹ்ராஜ்

ரஜப் மாதத்தின் 27ம் தேதி இரவில் இறுதி இறை தூதர் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் புனித வாழ்வினிலே ஒரு மிக்க அற்புதமான (supra-ordinary Incident) ஒரு நிகழ்வு நடந்தேறியது.

பெருமானார் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதுவராக தேர்ந்தெடுத்தான். ஆனால் இதற்கு முன்னரும் எத்தனையோ நபிமார்களை அவன் தேர்ந்தெடுத்ததாக தனது வேதத்தில் சொல்லி காட்டுகிறான்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மூலமாக ஒரு வேதத்தை அளித்தான். ஆனால் இதற்கு முன்பும் சில நபிமார்களுக்கு வேதங்களை அளித்து இருக்கிறான்.

ஆனால் இதற்கு முன் எந்த நபிமார்களுக்கும் அருளாத ஒரு பாக்கியத்தை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளினான் என்றால் அது இந்த மிஃராஜ் எனும் பயணத்தை தான் சொல்ல முடியும்.

இந்த பயணத்தில் தனது நேசத்திற்குறியவரான அஹமது (ஸல்)
(- முஹம்மது (ஸல்) அவர்களின் இன்னொரு பெயர், இது அவர்களது தாயாரால் சூட்டப்பட்ட பெயர்) அவர்களை அஹதான (ஒருவன் - அல்லாஹ்) இறைவன் சந்திப்பதற்காக அழைத்துக் கொண்டது தான் இதன் சிறப்பாகும்.

 இத்தகைய சிறப்பும் நெருக்கமான சந்திப்பும் எந்த நபிமார்களுக்கும் கிடைக்காத ஒரு சந்திப்பாகும்.

அஹமது(ஸல்)க்கும் அஹதுக்கும் இருந்த ஒரு மீம் என்ற மறைபொருளுள்ள எழுத்தான இடைவெளியே எஞ்சி இருந்தது.

இந்த இடைவெளியை தான் குரான் ஷரீபின் சூரா நஜ்மில் இறைவன் இவ்வாறு தெரிவிக்கின்றான்.

பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்

வில்லின் இரு முனைகளைப் போல், அதினும் நெருக்கமாக வந்தார்
(Then he drew near, then he came closer Till he was (distant) two bows' length or even nearer)
---------------------------------------------------------------------------------------------

தொழுகை முஃமீன்களுக்கு மிஹ்ராஜ் ஆகும் - அஹமது நபிகள் (ஸல்)

“The nearest a servant of Allah comes to his Lord is when he is prostrating”, that is, during the sujood, "so make supplications in that state." - The Holy Messenger


This Salaat

is not ordained
for the purpose of making you
stand, bow and throw yourselves
down all day long;
rather the purpose is that
the spiritual state made visible
in the prayer should be with you always..
- Rumi (Rah)
---------------------------------------------------------------------------------------------------------------
இப்னு அரபி அவர்கள் மிஹ்ராஜை பற்றி குறிப்பிடும் போது:

"Me'raaj is a secret in a secret. One has to have sound knowledge of the Qudrat of Allah and the Station and Status of His August Divine Messenger before commenting on any matter pertaining to them."



ஆகையினால், மிஹ்ராஜை பற்றி எங்கள் ஹஜ்ரத் அவர்கள் பேசிய செய்திகளை ஹமீது ஜாஃபர் நானா அவர்கள் சிரமம் பாராது எழுதி வைத்ததோடு எனக்கு அன்பு கூர்ந்து இணைய அஞ்சலிலும் அனுப்பி வைத்தார்கள்.

இறையருளால் இங்கே பதியப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------

மிஃராஜ் (விண் பயணம்)



மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள் உரையிலிருந்து

ஹமீது ஜாஃபர்

அரபு மாதமான ரஜபு பிறை 27 ம் இரவு நபி (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்கள் படுத்திருக்கும்போது மிஃராஜ் (விண் பயணம்) சென்றார்கள். ஷரீஅத்தை வைத்துப் பார்க்கும்போது மிஃராஜைப் பற்றி சொல்லப்பட்டிருப்பது, நபி(சல்) அவர்கள் இறைவணக்கம் பண்ணிக்கொண்டிருக்குபோது, இறைவணக்கத்தின் வளர்ச்சியில் வளர்ந்து முதல் வானம், இரண்டாம் வானம் சென்று இப்படி படிப்படியாக ஏழு வானங்களைக் கடந்து உயர்வு மிக்க இருப்பிடமான அர்ஷ் மு அல்லாஹ்வில் இறைவனை சந்திக்கிறார்கள். எப்படி என்றால், மிக நெருக்கமாக 'காபகௌஸைனி' என்கிறார்கள். 'காபகௌஸைனி' என்று சொன்னால் இரண்டு புருவங்களுக்குமுள்ள இடைவெளி எவ்வளவோ அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள்; ஆனால் இரண்டரக் கலக்கவில்லை. அவன் இவர்களாக மாறவுமில்லை, இவர்கள் அவனாக மாறவுமில்லை. ஒரு இடைவெளி இருந்தது.

அப்புறம் சட்டங்கள் வர ஆரம்பித்தன என்று ஹதீஸ் இருக்கிறது. ஒவ்வொரு வானத்திற்குப் போகும்போது அங்கு ஒரு குறிப்பிட்ட நபி இருந்ததாகவும், அங்கு அவர்களைச் சந்தித்ததாகவும், அவர்களிடமிருந்து குறிப்பிட்ட அறிவைப் பெற்றதாகவும் சரித்திரம் சொல்கிறது. இவை எல்லாம் உவமானமாக சொல்லப்பட்டதுதான், உண்மையான பொருள் அதுவே அல்ல. ஏனென்று கேட்டால், ஷரீஅத்தின் சட்டம் என்னவென்றால், ஆண்டவன் என்ற வார்த்தைக்கு கட்டுப்படாத பொருள் என்று அர்த்தம். எந்த வகையிலும் எதனாலும் கட்டுப்படுத்த முடியாதது எதுவோ அது இறைவன்.

நீங்கள், அல்லாஹ்வைத் தேடிக்கொண்டு ரசூல்(சல்) அவர்கள் ஏழாம் வானத்திற்குப் போனார்கள் என்று சொன்னாலும் சரி; நபியை ஏழாம் வானத்திற்கு இறைவன் அழைத்தான் என்று சொன்னாலும் சரி இரண்டுமே தவறு. அப்படியானால் ஆண்டவன் பூமியில் இல்லை, அங்கில்லை, இங்கில்லை என்றால் வேறு எங்கிருக்கிறான்? ஏழாம் வானத்தில் இருக்கிறான் என்று அர்த்தமாகிறது. அது 'குஃப்ரு'. அப்படி சொல்லவே கூடாது. இரண்டாவது, அங்கிருந்து ரசூல்(சல்) அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றால் இறைவனுக்கு இயலாமையை ஏற்படுத்திவிடுவதாகிவிடுகிறது. சந்தேகமில்லாமல் இதுவும் 'குஃப்ரு'தான்.

அப்படியானால் மார்க்கத்தில், ஷரீஅத்தில் ஏன் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது? இதிலுள்ள இரகசியமென்ன? மக்களுக்கு சில உண்மைகளைக் காட்டவேண்டும்; அதேநேரத்தில் அதை மறைக்கக்கூடாது. 'அறிவை மறைப்பது ஹராம்'. தகுதி படைத்தவர்களிடம் சொல்லிவிடவேண்டும். தகுதி இல்லாதவர்களிடம் சொல்லும்போது பட்டும்படாமல் இலைமறை காய்மறைவாக சொல்லிவிடுவார்கள். யாருக்குத் தகுதி இருக்கிறதோ, யாருக்குப் புரிந்துக்கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறதோ அவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படியானால் சஹாபா பெருமக்கள் தகுதி இல்லாமலா இருந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அது உண்மைதான், எல்லோருக்குமல்ல சஹாபாக்களில் ஒரு சிலருக்குத்தான் தகுதி இருந்திருக்கிறது.

ஒரு உதாரணம் சொல்கிறேன், ஒலு செய்வதற்குத் தண்ணீர் இல்லாதபோது 'தயமம்' செய்யலாம் என்று சட்டம் இருக்கிறது. இது எதைக் காட்டுகிறது? ஒலு செய்ய தண்ணீர் இல்லை எனவே மணலைத் தட்டி தயமம் செய்தோம்; ஒலு என்ற கடமையை மீறவில்லை என்பதைக் காட்டுகிறது. தவிர எந்த வகையிலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற நிலை வரும்போதுதான் தயமம் கடமை ஆகிறது. ஒருவர் ரசூல்(சல்) அவர்கள் முன்னே வந்து நின்றார். அவர் உடல் முழுவதும் புழுதி, கைகால்களெல்லாம் மண். என்னவென்று கேட்டால் தயமம் செய்திருக்கிறார். நாசி துவாரத்தை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியவில்லை, எனவே கேட்க வந்து நின்றார். ரசூல்(சல்) அவர்கள் பார்த்து சிரித்துவிட்டார்கள். அவரும் சஹாபிதான்.

இன்னொரு சாரார் இருக்கிறார்கள், அவர்கள் விபரம் புரிந்தவர்கள். இதில் அனேகம்பேர் இருந்தனர். அதில் மிக மிக நெருக்கமானவர்கள், அபு பக்கர் சித்திக்(ரலி), உமர் கத்தாப்(ரலி), உதுமான் பின் கஃப்பான்(ரலி), அலி(ரலி) இன்னும் சில கண்மணி போன்றவர்கள் இருந்தனர். ஒரு சமயம் ரசூல்(சல்) அவர்களிடம் சில கிருஸ்துவர்கள் கேள்வி கேட்டார்கள் அஸ்ஹாபுல் கஹ்பை பற்றி. குகை மனிதர்களைப் பற்றி பைபிளில் முன்னூறு வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் குர்ஆன் முன்னூறு வருடமும் பின் ஒன்பது வருடமும் ஆக மூன்னூற்றிஒன்பது வருடங்கள் தங்கியிருந்ததாகக் கூறுகிறது. அவர்கள் என்ன கேட்டார்கள், எங்களிடமுள்ள பைபிளும் அல்லாஹ் கொடுத்ததுதானே! எங்களிடம் ஒரு மாதிரியும் உங்களிடம் ஒரு மாதிரியும் அல்லாஹ் சொல்கிறானே! அது எப்படி சொல்லலாம்? அப்பொ நீங்கள் சொல்லும் இஸ்லாம் எப்படி சரியானதாக இருக்கமுடியும்? என்று கேட்க பக்கத்திலிருந்த அலி(ரலி) அவர்கள் பெருமானாரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சொன்னார்கள்; 'எந்த அல்லாஹ் சூரியனைப் படைத்தானோ அதே அல்லாஹ்தான் சந்திரனையும் படைத்தான். உங்களுக்கு சூரிய கணக்குப்படி சொல்லிருக்கிறான் எங்களுக்கு சந்திரக் கணக்குப்படி சொல்லிருக்கிறான்' என்றார்கள்.

சந்திரக் கணக்குப்படி வருடத்திற்கு 11 நாள் கூடுதலாக வரும். 33 வருடத்திற்கு ஒரு வருடம் அதிகமாகும்; 100 வருடத்திற்கு மூன்று வருடம் கூடும், 300 வருடத்திற்கு ஒன்பது வருடம் அதிகமாகிவிடும்.

உமர் கத்தாப்(ரலி) அவர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. அவர்களின் மறு சிறப்பு, ரசூல்(சல்) அவர்களிடம் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைத்தவுடனேயே அது தம் வாழ்க்கையில் செயல்படுத்திவிடுவார்கள். அதுபோல் ரசூல்(சல்) அவர்களுக்கு வஹி வந்து அதை சொல்லும்போது இன்னல்லாஹ ஃகபூருர் ரஹீம் என்று முடியும் ஒரு வசனத்தை பெருமானார் அவர்கள் இன்னல்லாஹ என்று சொல்லும்போது, இவர்கள் பக்கத்திலுள்ள சஹாபியிடம் ஃகபூருர் ரஹீம் என்று மெதுவாக சொல்வார்களாம். அப்படியானால் வஹியைப் பெறுவதற்கு ஒரு பக்குவம் இருந்தது என்று சொன்னால் அந்த பக்குவத்தில் கொஞ்சம் இவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்தது என்று அர்த்தமாகிறது. வஹி ஒரு நெருப்பு என்று சொன்னால் அந்த நெருப்பின் சூடு இவர்கள்மீது பட்டுக்கொண்டிருந்தது.

இப்படி இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒன்று சாதாரணமான நபித்தோழர்கள், இவர்கள் வெளி வட்டம். இன்னொன்று மிக நெருக்கமான தோழர்கள், இவர்கள் உள் வட்டம். இந்த இரண்டு பிரிவினருக்கும் புரிகிற மாதிரி செய்தியை சொல்லவேண்டும், எப்படி சொல்வது? உவமானம் காட்டாமல் எப்படி சொல்வது? அதனால்தான் மிஃராஜில் ரசூல்(சல்) அவர்கள் உவமானத்தைக் காட்டினார்கள். மிஃராஜில் மட்டுமல்ல அவர்கள் பேசிய பேச்சு எல்லாமே உவமானம்தான். அதேபோல் குர்ஆனிலும் உவமானம் இருக்கிறது. விண்ணகத்தின் கதவுகள் எல்லாம் திறக்கும்போது... என்று இறை வசனம் இருக்கிறது. அப்படி என்றால் விண்ணகத்தின் கதவுகள் பூட்டுப்போட்டு வைக்கப்பட்டுள்ளதா? உனக்கும் ஆண்டவனுக்கும் இடையேயுள்ள திரைகளெல்லாம் கிழித்தெறியப்படும்போது என்றுதான் அர்த்தம் அங்கே!

ரசூல்(சல்) அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை சொல்கிறேன் அப்போதுதான் மிஃராஜின் செய்தி புரியும். ஒரு நபித்தோழர் அழுதுக்கொண்டே வருகிறார். பெருமானார் அவர்களிடம் வந்து நின்று பொங்கிப் பொங்கி அழுதுக்கொண்டிருக்கிறார். ஏன் மழைப் பொழிகிற மாதிரி அழுகிறீர்கள் என்று கேட்க, தன் வேதனைகளை எல்லாம் சொல்கிறார். அப்படியா, போய் ஆண்டவனிடத்தில் துஆ கேள், மழைப் பெய்யும்போது கேட்கிற துஆ கபூலாகும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னார்கள்.

இதை மக்கள் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால், மழை இறைவனின் அருட்கொடை, அது பெய்யும்போது கேட்கப்படும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று. நான் கேட்கிறேன், மழை அருட்கொடை என்றால் வெயில் அருட்கொடை அற்றதா? மழை பத்து நாள் தொடர்ந்து பெய்யட்டுமே, அப்போது தெரியும் வெயிலின் அருமை. இறைவன் படைத்தது எல்லாமே அருட்கொடைதான். மழை என்ற வார்த்தை கண்ணீரைக் குறிப்பிடுகிறது. மனம் கசிந்து, உள்ளம் உருகி, கண் கலங்கி நீ கேட்கிற துஆ கபூலாகும் என்று அர்த்தம். உண்மை அதுதானே, நம் வாழ்க்கையில் பார்க்கிறோமே!

ரசூல்(சல்) அவர்கள் பேசினார்கள் என்றால் வார்த்தை சுத்தமாக ஆழ்ந்த இலக்கிய நயத்துடன் அழகாகப் பேசுவார்கள். வள வள என்று பேசமாட்டார்கள். அப்படி இருக்கும்போது ரசூல்(சல்) அவர்கள் வார்த்தையை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பண்ணினால் கேலி செய்வதுபோல் ஆகிவிடும். மிஃராஜைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது? "சுபஹானல்லதி அஸரா பி அபுதிஹி லைலன் மினல் மஸ்ஜிதில் ஹராம் இலல் மஸ்ஜிதில் அக்ஸல்லதி பாரக்னா ஹவ்லஹு லி நுரியஹு மின் ஆயாத்தினா..." - ஓர் இரவில் தன் அடியாரை புனிதமிக்க ஹரம் ஷரீஃபிலிருந்து மஸ்ஜிதில் அக்ஸா வரை அழைத்துக்கொண்டுபோன இறைவன் தூய்மையானவன் என்றுதான் குர்ஆனில் இருக்கிறது.

அப்படியானால் அவர்கள் என்ன சொல்ல வந்தார்கள் என்பது சாதாரண கித்தாபுகளில் காணமுடியாது. இதற்கு எழுதப்படாத அறிவு; இல்மு ஃகைர மக்தூபி; இல்மு லத்துன்னி. இந்த அறிவை வைத்து சிலர் தப்ஸீரில் லேசாக கோடிட்டு காண்பித்திருக்கிறார்கள். சூஃபியாக்கள் சொல்கிறார்கள், மனித நிலைக்கும் ஆண்டவனுடைய நிலைக்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது. ஒரு குயவனுக்கும் பானைக்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ அதே தொடர்பு ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது. குயவன் எங்கோ இருக்கிறான் பானை நம் வீட்டில் இருக்கிறது. ஆனால் இதிலுள்ள பெரிய நுணுக்கம் என்ன வென்றால் எவன் படைத்தானோ அவனுடைய ஒரு வித்து இவனிடம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அந்த வித்து தன்னை தூய்மைப் படுத்த நாடுகிறது; எங்கிருந்து வந்ததோ அந்த நிலைக்கு உயர விரும்புகிறது. மேலே இருந்து கீழே வந்தவுடன் தூல உலகத்தில் கட்டுப்பட்டுப் போய்விட்டது. எனவே இங்கு பயிற்சி பண்ணுகிறது. பயிற்சி பண்ணப் பண்ண அந்த வித்து தூய்மைப் பெற்று மூடியிருக்கும் குப்பைகளெல்லாம் நீங்கி மேலே போக ஆரம்பிக்கிறது. மேலே போகும்போது முதலில் ஒரு திரை வரும் அப்புறம் வேறொரு திரை வரும் இப்படி பல திரைகள் இருக்கின்றன. ஒரு திரை உணர்ச்சித் திரை, மறு திரை அறிவு இருக்கிறது என்ற நினைப்பு-கர்வம் என்ற திரை. இப்படி ஒவ்வொரு திரையாக கிழித்தெரியப்படும்போது தான் யார் என்பது தெரியும். எந்த வினாடியில் அது தன்னைப் புரிந்துக்கொண்டதோ அந்த வினாடியில் அது ஆண்டவனைப் பார்த்தது என்று அர்த்தம்.

நுபுவத் - நபித்துவம் பெற்றபிறகு நபியாக வந்து பிரச்சாரம் பண்ணுகிற காலத்தில் எல்லைகளைக் தாண்டி, பல திரைகளைக் கடந்து போகும்போது தெய்வசக்தியை தனக்குத்தானாக கண்ணிற்கு நேராகப் பார்க்கிறார்கள்; ஆண்டவனை நேராகப் பார்க்கிறார்கள். இதுதான் மிஃராஜின் தத்துவம்.

மிஃராஜ் என்ற வார்த்தைக்கு ஏணி என்று அர்த்தம், ஏறிப்போகுதல் என்று பொருள். ஏறுதல் என்றால் சட உலகத்தில் ஒவ்வொரு படியாக கால்வைத்து ஏறுதல் என்று அர்த்தமல்ல. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போதல்; கீழ்த்தரமான மனிதக் கட்டுப்பாடு நிறைந்த சட உலகத்திலிருந்து சடமற்ற சூட்சம நிலைக்கு உயர்தல். அப்படி உயரும்போது எத்தனைத் தடைகள் வருகின்றனவோ அத்தனைக்கும் வானம் என்பார்கள். ஷரீஅத்தில் இப்படித்தான் சொல்வார்கள்.

 அப்பொ ரசூலல்லாஹ் நேராகப் பார்க்கும்போது என்ன விளைவு வரும்? நாம் ரொம்ப ரொம்ப விரும்பிய ஒன்றை பார்த்தோமென்றால் நம்மையே மறந்துவிடுவோம். இதை பற்றி மௌலானா ரூமி அவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். ஒரு அரசன் இருந்தானாம், ஒரு துறவி தெருவில் போனாராம். அந்த அரசன் கேட்டானாம் துறவியைப் பார்த்து எங்கே போகிறீர்கள் என்று. அல்லாஹ்வைப் பார்க்கப் போகிறேன் என்றாராம் துறவி. அப்படியா! சரி, அல்லாஹ்வைப் பார்க்கும்போது இந்த அடியானைப் பற்றி சொல்லுங்கள் என்று அரசன் சொல்ல, துறவி சொன்னாராம் : 'அடப்போய்யா! நான் அங்கே போனால் என்னையே நான் மறந்துவிடுவேன் அப்படி இருக்கும்போது உன்னை எப்படி நினைப்பது?'

அங்கே அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் புருவ இடைவெளி அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டது என்று சொன்னால் அவர்கள் தன்னையே முழுவதுமாக மறந்துவிட்டார்கள் என்றுதான் பொருள். ஆகவே மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயரக்கூடிய பாதைக்குத்தான் மிஃராஜ் என்று பொருள். இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன. அவற்றை சொல்வதற்கு இது இடமல்ல.

சொல் விளக்கம்:

காப கௌஸைனி - புருவமத்தி

ஹதீஸ் - நபி மொழி; நபி செயல் மற்றும் நடைமுறை

குஃப்ரு - நிராகரித்தல்; இறை நிராகரிப்பு

ஷரீஅத் - சரியை

சஹாபா - நபி தோழர்

(சல்)சல்லல்லாஹு அலைஹிவசல்லம் - சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

(ரலி)ரலியல்லாஹு அன்ஹு - இறைவன் பொருந்திக்கொள்வானாக

தயமம் - இரண்டு கைகளையும் மணலில் தட்டி புறங்கை மற்றும் முழங்கைகள் வரை தடவிக்கொள்ளும் செயல்

இன்னல்லாஹ கஃபூருர் ரஹீம் - நிச்சயமாக இறைவன் பிழை பொருப்பவனும் மிகுந்த அன்புடையோனுமானவன்

துஆ - பிரார்த்தனை

கபூல் - ஏற்றுக்கொள்ளுதல்

இல்மு ஃகைர மக்தூபி - எழுதப்படாத அறிவு

இல்மு லத்துன்னி - வரையறுக்கப்படாத அறிவு

தப்ஸீர் - விரிவுரை


Links:

Mihraj the real and symbolic

http://religiontranscends.com/2007/08/celebrate-lailat-al-miraj/ 

Sunday, June 12, 2011

கவ்வாலி நேரம் - மன் குன்தோ மவ்லா - மர்ஹூம் உஸ்தாத் ஃபதேஹ் அலி கான்

”மன் குன்தோ மவ்லா” என்ற வாக்கியம் இறுது இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீதில் உள்ளதாகும்.


மன் குன் தோ மவ்லா
ஃப அலி-உன் மவ்லா
- என்பதே அந்த ஹதீது


இதன் பொருள், 


என்னை எவர்கள் மவ்லாவாக (தலைவர்) ஏற்றுக் கொண்டார்களோ
அவர்களுக்கு மவ்லாவாக அலி (றலி) அவர்கள் இருக்கிறார்கள்


இந்த ஹதீதை அவர்கள் கதிர் கும் என்ற இடத்தில் அவர்கள் தனது நேசத்திற்குறியவனான இறைவனிடம் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது.


இந்த ஹதீது சம்மந்தமாக இதை எப்படி விளங்குவது என்பது தொடர்பாக ஷியா சுன்னி உலமாக்களிடையே சில கருத்து வேறுபாடுகளும் இருந்து வருகிறது (இதுக்கு தான் பஞ்சமேயில்லையே)


கதிர் கும் சம்மந்தமான சில இணைப்புகள்:


http://www.al-islam.org/encyclopedia/chapter3/2.html


http://en.wikipedia.org/wiki/Hadith_of_the_pond_of_Khumm


http://www.amaana.org/gadhir/gadhir1.htm




தாரா தில்லே தாரா தில்லே தாரே தானி...
தாரா தில்லே தாரா தில்லே தாரே தானி...
ஓ..!
ஹம் தும் தநா நா நா நா, தாநா நா ரே
ஹம் தும் தநா நா நா நா, தாநா நா ரே
யாலாலி யாலாலி யாலா, யா லா ரே
யாலாலி யாலாலி யாலா, யா லா ரே
தாரா தில்லே தாரா தில்லே தாரே தானி...

இதயத்தில் நுழைந்து
இதயத்தில் நுழைந்து
அங்கேயே கரைந்து விடு,
நீயும் நானும் -
இனிய கீதத்தை உள்ளிருந்து இசைத்துவிடு

Saturday, June 11, 2011

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் - 2




பேருண்மை - அல்-ஹக்கு - The Truth


குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 
ஸூரத்து யுனுஸ் (33) 
வசனம்: 31 - 32


“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.


உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?


மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் மஸ்னவியிலிருந்து...

இரு இதயங்களுக்கு மத்தியில்
இருக்கும் சாளரத்தின் வழியே
ஒளியின் மின்னல்
உண்மையை பொய்யிலிருந்து
பிரித்து காட்டுகிறது


Credit:
http://www.sufism.org/society/asma/haqq.html

குரான் ஷரீஃப் தமிழில்: 
http://www.tamililquran.com/qurandisp.php?start=10 


Image Credit:
http://madaniwallpaper.com/51_al_haqq-wallpapers.html

Audio chants of  99 asmaul husna:
http://wahiduddin.net/words/99_chants/99_Names_chanted_Seemi_Ghazi.mp3 

Friday, June 10, 2011

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் - 1



அல் ஃகஃப்ஃபார் - மன்னிப்பவன் - Al-Ghaffar

குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 85 - ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)
வசனம்: 14

அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.


குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 40- ஸூரத்துல் முஃமின் (நம்பிக்கை கொண்டவர்)
வசனம்: 3

பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே  மீள வேண்டியதிருக்கிறது.


மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் மஸ்னவியிலிருந்து:
 
தண்ணீர் அழுக்கிடம் சொன்னது, “அருகில் வா!”
அழுக்கு சொல்லிற்று, “நான் வெட்கத்தால் அவமானமாக இருக்கிறேன்!”
தண்ணீர் பதலளித்தது, “என் உதவி இல்லாமல் எவ்வாறு உன் வெட்கம், அவமானம் கழுவப்பட்டு தூய்மையடைய முடியும்?”
 
Credit:
திருநாமங்கள்:
http://www.sufism.org/society/asma/index.html
 
குரான் ஷரீஃப் தமிழில்:
http://www.tamililquran.com/qurandisp.php?start=85
 
Image Credit:
http://madaniwallpaper.com/99_names_3d-desktop-wallpapers.html

Thursday, June 09, 2011

குரான் ஷரீஃபில் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) - 4

முஹம்மத் (ஸல்) அவர்களின் சீரிய பண்புகள்

1

ஸூரத்துல் அஹ்ஜாப் (33) 
வசனம்: 21

முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி - உஸ்வதுன் ஹஸனதுன் - an excellent (outstanding) example

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

2

ஸூரத்துல் அஹ்ஜாப் (33)
வசனம்: 22

உண்மையாளர் - ஸாதிக் (வஸதக) - Truthful

அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.

3

ஸூரத்துல் கலம் (68)
வசனம்: 4

முஹம்மத் (ஸல்) அவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர்கள் - வ இன்னக அலயா ஹுலுகின் அளீம் - Recieved a Conduct Certificate as "Exalted Moral Character" from the Almighty

மேலும், நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.

4

ஸூரத்துன்னிஸாவு (4)
வசனம்: 65

அவர்களே நீதிபதி

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

5

ஸூரத்துன்னிஸாவு (4)
வசனம்: 175

அவர்களே அத்தாட்சி அவர்களே பேரொளி

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்

6

ஸூரத்துல் ஹாஃக்ஃகா (69)
வசனம்: 40

அவர்கள் கண்ணியமிக்கவர்கள் - கரீம் - Honoured, Noble

நிச்சயமாக, இது கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்

7
ஸூரத்துல் அஃராஃப் (7)
வசனம்: 199

முஹம்மத் (ஸல்) அவர்கள் மன்னிக்கும் மாண்பாளர் - Forgiving

எனினும்  மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

8

ஸூரத்துந் நூர் (24)
வசனம்: 51

அவர்களின் தீர்ப்புக்கு கீழ்படிந்தவர்களே வெற்றியடைந்தவர்கள்
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அழைக்கப்பட்டால், அவர்கள் சொல் எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், கீழ்படிந்தோம்” என்பது தான்; இவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.

9

ஸூரத்துல் ஆலஇம்ரான் (3)
வசனம்: 121

போர் படைத் தளபதி - Brave: Commands Muslims in battle

நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்

Wednesday, June 08, 2011

குரான் ஷரீஃபில் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) - 3

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு குரான் ஷரீஃப் அருளப்பட்டது

1

ஸூரத்துல் ஹிஜ்ர் (15)
வசனம்: 87

அல்லாஹ் பெருமானாருக்கு ஸூரத்துல் ஃபாத்திஹாவையும், குரான் ஷரீஃபையும் அருளினான்

நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான  குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.


2

ஸூரத்துந் நஜ்ம் (53)
வசனம்: 3 - 4

Totally Inspired

அவர் தம் இச்சைப்படி பேசுவதில்லை.
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.



3

ஸூரத்துஷ் ஷூஃரா (26)
வசனம்: 192 - 197

அகிலங்களின் இறைவன் அருள்பாலிக்கப்பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் இதயத்தில் இறக்கிய குரான் ஷரீஃப் - ரப்பில் ஆலமீன், கல்ப் - Allah revealed the Noble Quran Shareef in His (upon Him be holy benedictions) Blessed Heart

மேலும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.

அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக உம் இதயத்தின் மீது-

தெளிவான அரபி மொழியில்.

நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் இருக்கிறது.

பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?


4

ஸூரத்துல் அலஃக் (96)
வசனம்: 1

The first revelation He (upon Him be holy benedictions) received


படைத்த உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக.


5

ஸூரத்துல் ஜுமுஆ (62)
வசனம்:

நம்மை பரிசுத்தப்படுத்த நம்மிலிருந்தே ஒருவர்

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.


- இன்ஷா அல்லாஹ் தொடரும்

Tuesday, June 07, 2011

குரான் ஷரீஃபில் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) - 2

அல்லாஹ்வின் நேசர்களில் முதன்மையானவர்கள்

1

ஸீரத்துல் ஆல இம்ரான் (3)
வசனம்: 31

அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டுமென்றால் நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும் - ஃபத்தபிஊனி யுஹ்பிப்குமுல்லாஹு -  If you want to gain the love from Allah then follow him (upon Him be holy benedictions)

நீர் கூறும்: நீங்கள் அல்லாஹ்வை நேசீப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் மிக்க கருணைய உடையவனாகவும் இருக்கின்றான்.

2

அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அழைக்கின்றான் - Allah addresses him with love and affection

A

ஸூரத்து தாஹா (20)
வசனம்: 1

தாஹா

B

ஸூரத்து யாஸீன் (36)
வசனம்: 1

யாஸீன்

C

ஸீரத்துல் முஸ்ஸம்மில் (73)
வசனம்: 1

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

(O you wrapped up in your raiment)

D
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (74) 
வசனம்: 1


போர்த்திக் கொண்டிருப்பவரே!

(O you enveloped in your cloak)

3

ஸூரத்துல் ஹுஜுராத் (49)
வசனம்: 7

”அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் உங்களிடையே இருக்கிறார்” என்று அல்லாஹ் கூறுகிறான் - ரஸூலுல்லாஹ் - Allah says: Realise that My Prophetic Messenger himself is with you

அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர்  இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிபட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.

4

ஸூரத்துத் தவ்பா (9)
வசனம்: 128

அல்லாஹ் மிக்க கருணையாளன், மிக்க கிருபையாளன் என்ற தனது தன்மை பெயர்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது சூட்டுகிறான் - ரஊப், ரஹீம் -  Allah describes Hajrath Mohamed (Sal) with His own attributes of Most Kind and Merciful

நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்க்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கின்றது; அன்றி அவர் உங்களையே பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

5

ஸூரத்துன்னிஸாவு
வசனம்: 113

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் கிருபையையும் பெற்றவர்கள் - Possessor of Allah's Grace and Mercy

உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.

6

அவர்களை கொண்டே நம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் அருள்

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.

(Certainly, Allah has shown a special favour to the believers by raising among them a (Prophetic) Messenger from among themselves who recites to them His revelations, and purifies them, and teaches them the Scripture and the Wisdom, although before (he came to them) they were in manifest error)
 
 7

ஸூரத்துல் அன்ஃபால் (9)
வசனம்: 33

முஹம்மத் (ஸல்) அவர்கள் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் வேதனை செய்வதில்லை - Allah does not punish the people if He is in their midst

ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை

8

ஸூரத்துல் ஃபத்ஹ் (48)
வசனம்: 10

முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி செய்வது அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்வது போன்றது - பைஅத் - Allegiance to Him is allegiance to Allah


நிச்சயமாக எவர்கள் உம்மிடம் வாக்குறுதி செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.


- இன்ஷா அல்லாஹ் தொடரும்

Monday, June 06, 2011

குரான் ஷரீஃபில் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்)

பெருமானார் (ஸல்) அவர்களின் மேன்மைமிக்க பதவி

1

ஸூரத்துல் மாயிதா (5)
வசனம் 15

பேரொளி - நூர் - Sacred Light

வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்மிடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்து கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை உங்களுக்கு விளக்கி காட்டுவார். இன்னும் அநேகத்தை விட்டுவிடுவார் (forgiving much). நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவுமுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

2

ஸூரத்துல் அஹ்ஜாப் (33)
வசனம்: 56

அல்லாஹ்(ஜல்) அருள் புரிகிறான் - ஸலாம், ஸலவாத், தஸ்லீமாத் - Allah Blesses Him

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்.  நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

3

ஸூரத்துல் அன்பியா (21)
வசனம்: 107

அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை - ரஹ்மத்தல் லில்ஆலமீன் - Mercy for all the Worlds

நாம் உம்மை அகிலத்தாருக்கெல்லாம் (meaning, not just send for one community, He (upon Him be holy benedictions) sent down as Mercy for the entire humanity and all the worlds) ஒரு அருட்கொடையாக வேயன்றி அனுப்பவில்லை


4

ஸூரத்து முஹம்மத் (ஸல்) (47)
வசனம்: 2

பெயரே புகழுக்குரியவர் (புகழப்பட்டவர்) - முஹம்மது (ஸல்) - His Name is Muhammad (Meaning the Most Praised One)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல அமல்களை செய்து, முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது இறக்கி அருளப்பட்டவையின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்துள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

5

ஸூரத்து அலம் நஷ்ரஹ் (94)
வசனம்: 4

அவர்களை நினைவு கூர்வதை மேலோங்கச் செய்வது - வரஃபனா லக திக்ரக் - Allah has exalted his Zikr

மேலும், நாம் உமக்காக உம்மை நினைவு கூர்வதை மேலோங்கச் செய்தோம்

6

ஸூரத்துந் நஜ்ம் (53)
வசனம்: 8 - 9

மிஹ்ராஜ் இரவில் அவர்களின் நிலை உயர்த்தப்பட்டது - சும்ம தனா ஃபததல்லா ஃப கான காப கவ்சைனி அவ்அத்னா - His Exaltation in the night of Mihraj

பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்
வில்லின் இரு முனைகளைப் போல், அதினும் நெருக்கமாக வந்தார்

(Then he drew near, then he came closer
Till he was (distant) two bows' length or even nearer)

7

ஸூரத்து பனீ இஸ்ராயில் (17)
வசனம் 79

புகம் பெற்ற தலம் - மகாமம் மஹ்மூதன் - His Station of Praise

இன்னும் இரவின் பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையை தொழுது வருவீராக; உம்முடைய இறைவன் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும்

- இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Saturday, June 04, 2011

கலைஞரும் கம்பரும்

காலத்தை வென்று வாழும் - 88வது பிறந்த நாள் விழா காணும் கலைஞர் அவர்களுக்கு - காலத்தை வென்று மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று.

-------------------------------------

வழக்கம் போல் காரைக்குடியில் நடக்கின்ற கம்பர்விழாவுக்கு, வழக்கத்திற்கு மாறாக நான் வந்திருக்கிறேன்.

என்ன பேசப் போகிறேன் என்கின்ற, வினாக்குறியோடு நீங்களெல்லாம் கூடியிருக்கிறீர்கள் என்பதனை நானறிவேன்.

“ஒரு காலத்தில், கம்பராமாயனத்தை எரிக்க வேண்டுமெனச் சொன்னவனாயிற்றே! இவன் எப்படி இங்கு வந்தான்?” என்று நீங்கள் கேட்பதை விட - “கம்பராமாயனத்தை எரிக்க வேண்டுமென்று சொன்னவனாயிற்றே! எப்படி இவனை அழைத்தார்கள்?” என்று கேட்பதுதான் பொருத்தமான கேள்வியாகும்.

ஆகவே எனக்கு இருக்கிற துணிவைவிட என்னை இங்கு அழைத்தவர்களுக்கு இருக்கிற துணிவு அதிகம் என்று கருதுகிறேன்.

கம்பராமாயனம், சுமார் பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலே பிரச்சினைக்குரிய ஒன்றாக ஆயிற்று. அதனை எரிக்க வேண்டும் என்கின்ற புயல்வேகப் பிரச்சாரம் தமிழ் நாட்டிலே பெரியார் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டுப் பல சொற்போர்கள் தமிழகத்தில் நடைபெற்றன. நாவலர் சோமசுந்தர பாரதியாரை எதிர்த்தும், சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையை எதிர்த்தும் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொற்போர் புரிந்தார்கள். இறுதியாக அண்னா அவர்களின் கருத்துக்களை எதிர்ப்பதற்காக வந்தவர்கள், கம்பராமாயனத்தை அதனுடைய கவிநயத்திற்காக எரிக்காமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்களே தவிர அந்தக் கதாபாத்திரங்களின்பால் தங்களுக்குள்ள பக்தியை வெளிப்படுத்தவில்லை. அன்று கிடைத்த அந்த வெற்றியின் காரணமாகத்தான் எரிக்கின்ற முயற்சி கைவிடப்பட்டது.

எரிப்பதிலே பலவகை உண்டு. அடுப்பெரிப்பது நல்ல அறுசுவையான் உணவு கிடைப்பதற்காக; அதைப் போலவே கம்பராமாயாணத்தை எரிக்க வேண்டும் என்று கூறியதும் கம்பனுடைய கவியுள்ளத்தை மட்டும் புலவர்கள் நாட்டு மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான், என்பதை புலவர் பெருமக்கள் புரிந்து கொண்டார்கள்.

ஆகவே, புலவர்கள் புரிந்து கொண்ட பிறகு அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியதில்லை என்றுதான் அந்த முயற்சி கைவிடப்பட்டது!

இங்கே தலைமை வகித்துப் பேசிய நண்பர் அவர்கள் மிகத் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டார்கள்.

இந்த விழா இராமனை பாராட்டுவதற்காகவோ - இலக்குவனை பாராட்டுவதற்காகவோ நடைபெறுவது அல்ல - இது கம்பனை பாராட்டுகிற விழா என்று குறிப்பிட்டார்கள். நானும் அதற்காகத்தான் வந்திருக்கிறேன்!

நாங்கள் கம்பனைப் பாராட்டுகிறோம் என்பது, திரு சா. கணேசன் அவர்கள் அழைத்து நான் இங்கே வந்த பிறகு புரிந்து கொள்கிற ஒன்றல்ல, உலகத் தமிழ் மாநாடு நடை பெற்றபொழுது தமிழ் நாட்டுப் புலவர் பெருமக்களுக்கெல்லாம் சென்னை கடற்கரையில் சிலைகள் வைத்த நேரத்தில், கம்பருக்கும் ஒரு சிலை வைத்துள்ள நாங்கள் கம்பனைப் பாராட்டத் தவறியவர்களல்லார் - கம்பனுடைய தமிழைப் பாராட்டத் தவறியவர்களல்லார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இராவணனை இரக்கமற்ற அரக்கன் என்று கம்பர் கூறியதை எதிர்த்து அவன் நீதிமன்றத்திலே ஒரு வழக்குத் தொடர்கிறான்.

இராவணன் நீதிமன்றத்தில் கம்பனைக் குற்றஞ் சாட்டி வழக்குத் தொடர்ந்து பேசுகிற நேரத்தில் அவனுடைய அந்த வாதத் திறமையையும் கம்பனுடைய கவிதைத் திறமையையும் பார்த்து, என்ன தீர்ப்புச் சொல்வதென்று புரியாமல் திகைத்து நீதிதேவன் மயங்கி விழுந்து விடுகிறான் - - திரை விழுகின்றது; நாடகம் முடிகின்றது.

அந்த வாதத்தை கேட்டவர்கள் அனைவரும் மயங்குகிறார்கள்; ஆகவே நீதிதேவன் மயங்குவதில் வியப்பில்லை என்ற கருத்துப்பட அண்ணா அவர்கள் “நீதிதேவன் மயக்கம்” என்ற அந்த நாடகத்தை முடித்திருக்கிறார்கள். இதிலே அண்ணாதான் இராவணனாக நடித்தார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.

வால்மீகி இராமாயணத்தில் வருகின்ற கதாபாத்திரங்களுக்கெல்லாம் கம்பர் தமிழ் வடிவம் கொடுத்து - தமிழர்களது கலாச்சாரம் தமிழர்களுடைய பண்பாடு - தமிழர்களுடைய நெறி - இவைகளுக்கு ஒப்பக் கொண்டு வர மிகவும் முயன்றிருக்கின்றார்.

கோடிட்டுக் கொள்ள வேண்டும் - முயன்றிருக்கிறார் என்றுதான் நான் கூறினேன்.

இறுதியாக, அவர்களைத் தமிழ் காதாபாத்திரங்களாகக் கம்பர் கொண்டு வந்துவிடவில்லை. அதற்கு ஆதாரம் தேவை என்றால் எனக்குப் பாதுகாப்பாகச் சிலம்புச் செல்வர் ம.பொசி. அவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் எதிரிலே வைத்துக் கொண்டுதான் நான் இந்த விவாதத்தைத் துவங்குகிறேன். எனக்கு ஒரு நண்பர் கடிதம் எழுதினார்; “கம்பர் விழாவில் கலந்து கொள்கிறீர்களாமே! மிகவும் நன்று! வியப்படைகிறோம்! ஆனாலும் மகிழ்ச்சி கொள்கிறோம்! விழாவிலே உங்களுக்குப் பயன்படுகிற வகையிலே சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுடைய ‘கம்பர் கவியின்பம்’ என்ற புத்தகத்தை உங்கட்கு அனுப்பி வைக்கிறேன்” என்று தெரிவித்து, அந்த புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். அதை நான் நேற்றுப் புகை வண்டியில் வருகிற நேரத்தில் முழுதும் படித்துப் பார்த்தேன்.

தலைவர் அவர்கள் இராமன் வாலியைக் கொன்றது சரிதான் என்று அவனே வாதாடியதாகக் குறிப்பிட்டார். இன்று எனக்கு பிறகு பேசவிருக்கிற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி என்ன கூறுகிறார்கள் என்று கவனித்தால் ‘இராமன், வாலியைக் கொன்றது நீதியற்ற செயல் என்ற முடிவுக்கு நான் வரவேண்டியவனாக இருக்கிறேன்!’ என்றுதான் புத்தகத்தையே முடிக்கிறார்.

அதற்கு மேல் அவர் என்ன நினைக்கிறார் என்பதற்குப் புத்தகத்தில் இடமில்லை.

கம்பனிலும் இடமில்லை என்கிறார் திரு சா. கணேசன் அவர்கள். ஆகவேதான் பின்னால் இருந்து தாக்குவது - மறைந்திருந்து தாக்குவது - தமிழர்களது போர் முறையல்ல என்பதால் தான், கம்பர், வாலியின் வாயுரையாகவே வீரத்தினுடைய மகிமையைப் பற்றி பேசச் செய்கிறார்.

“இவ்வலவு பெரிய மாவீரனான இராமனே என்னை மறைந்திருந்து தாக்கலாமா?” என்ற கேள்வியை வாலியின் மூலமாகக் கம்பரே எழுப்புகிறார் போலும்!

அதற்கு இராமனால்கூடப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த விழாவினுடைய தலைவர் அவர்கள், “சுக்ரீவனுடைய மனைவியை வாலி அபகரித்துக் கொண்டான். அதற்காக வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றது ஓரளவிற்கு நியாயந்தான்” என்று விவரித்தார்.

ஆனால், தன்னுடைய மனைவியை வாலி அபகரித்துக் கொண்டான் என்று குற்றஞ்சாட்டி அதற்காக அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தானே சுக்ரீவன், அந்தச் சுக்ரீவன் வால்மீகி இராமயணத்திலே என்ன செய்தான்? வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி தாரையைத் தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொண்டான். இது வால்மீகி இராமாயணத்தின்படி, ஆனால், கம்பர் இதற்கு இடம் தரவில்லை.

வால்மீகி இராமாயணத்தில் வாலி இறந்ததும் அவனுடைய மாளிகைக்கு இலக்குவன் செல்கிறான். அப்படிச் செல்கிற நேரத்தில், வாலியினுடைய மனைவியான தாரை - கணவனை இழந்த தாரை - மிக அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு - ஆண்கள் பார்த்தால் - கவர்ந்திடத் தக்கவண்ணம் மிக ஒயிலாக இலக்குவனுக்கு முன்னால் வருகிறான். அப்படி வருகிற நேரத்தில் இலக்குவனுக்கூட அயோத்தியிலிருக்கிற தன்னுடைய மனைவியின் ஞாபகம் வந்துவிடுகிறது என்று வால்மீகி எழுதுகிறார்.

ஆனால் கம்பரோ தாரையை அப்படிப்பட்ட பெண்ணாகச் சித்தரித்துக் காட்ட விரும்பவில்லை. இலக்குவன் வாலியினுடைய மாளிகைக்குச் செல்கிற நேரத்தில், தாரை வெள்ளுடை பூண்டு, தமிழ்நாட்டுப் பெண்களுக்குரிய விதவைக் கோலத்தோடு தலைவிரி கோலத்தோடு வருகிறாள்! இவ்வாறு தாரையைப்பற்றிக் கம்பர் வர்ணிக்கிறார்.

ஆனால், வால்மீகி இராமயணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு ஏற்றவாறு அந்தப்புலமையினைக் கையாண்டு, கம்பர் தமிழர்களுக்காக இராமாயணத்தைப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருக்கிற கதாபாத்திரங்களைப் பற்றி ஓரிடத்திலே நியாயமாகப் பேசுகிறார்கள். பிறிதோரிடத்தில் அவர்களைப்பற்றி நியாயக் குறைவாகப் பேசுகிறார்கள்.

கதாபாத்திரங்கள் அல்ல முக்கியம்; நானே கூட எத்தனையோ கதைகளை எழுதியிருக்கிறேன்.

நான் எழுதிய கதாபாத்திரங்களைப் பாராட்டுவதற்காகச் சிறப்புக் கூட்டங்கள் நடத்தியதில்லை. எத்தனையோ கதைகளை எழுதிய பிறகு, எழுத்தாளர் என்ற அளவிலே தான் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள், எத்தனையோ அருமையான நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் எத்தனையோ பாத்திரங்களை எல்லாம் படைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் பாராட்டுவதற்காக விழா நடந்ததில்லை. இப்படியெல்லாம் பாத்திரங்களைப் படைத்திருக்கின்றாரே - இன்னின்ன கருத்துக்களை எடுத்து இயம்பியிருக்கின்றாரே! என்பதற்காகத்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களை நான் பாராட்டுகிறேன்.

அதைப் போலவே நமது சா. கணேசன் அவர்கள் பல பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காக அல்ல, அப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்குகின்ற திறமை பெற்றமைக்காகத்தான் பாராட்டப் பெற்றிருக்கின்றார்.

சிலம்புச் செல்வர் எழுதியிருக்கின்ற “கம்பர் கவியின்ப”த்திலே கூட ஓரிடத்திலே கண்ணனையும் இராமனையும் ஒப்பிடுகிறார்.

யுத்த களத்திலே இராவணன் நிராயுதபாணியாக நிற்கிறான், அந்த நேரத்திலே இராமன், “இன்று போய் நாளை வா” என்று சொல்லி இராவணனை அனுப்பி வைக்கின்றான். இதுவன்றோ யுத்த மரபு? இதுவன்றோ யுத்த தர்மம்? என்று இராமனை சிலம்புச் செல்வர் பாராட்டுகிறார். அங்கே பராட்டி விட்டுக், கண்ணனை இழுத்து நிறுத்தி, யுத்தகளத்தில் நீதியுடன் நடந்து கொள்ளவில்லை. இந்தக் கண்ணன் தந்திர முறைகளால் யுத்த நெறிக்கு முரண்பாடாகக் கர்ணனைக் கொல்வதற்கு உடன் பாடாக இருந்தான். ஆகவே கண்ணன் காட்டிய வழியை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.; யுத்த தந்திரங்களில் கண்ணன் சிறந்தவனாக இருக்கின்றான். ஆனால் பிடிக்க வேண்டிய முறைகளும் நல்ல முறைகளாக இருக்கவேண்டும் என்று ம.பொ.சி அங்கே வாதிட்டுக் கண்ணனைக் குற்றவாளியாக்கி, இராமனை தர்மவானாக ஆக்கிக் காட்டுகிறார்.

மறுபடியும் ஒரு பத்துப் பக்கம் புரட்டினால் அங்கே பழைய படியும் அவர் கண்ணனையும் இராமனையும் சந்திக்க வைக்கிறார்; வாலி வதைப் படலத்தில்!

வாலி வதைப் படலத்தில் இராமன் செய்தது தவறுதான்; இரு சகோதரர்களின் பிரச்சினையில் தலையிட்டு, ஆயுதத்தால் ஒருவனைக் கொன்று முடிவு கட்டுவது நல்லதல்ல என்று - கூறி இராமனைக் குற்றவாளியாக்கிவிட்டுப், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சகோதரச் சண்டை என்று வந்த பிறகு - கண்ணன் தன் கையில் ஆயுதம் தாங்காமலேயே - அதில் குறுக்கிடாமலிருந்தார், அவர் ஆயுதம் தாங்கவில்லை. ஆகவே கண்ணனுடைய செயலை இந்த இடத்தில் சிறந்தது; இராமனுடைய செயல் ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல என்று இதே புத்தகத்தில் இரண்டு இடங்களில் இத்தகைய இருவேறு கருத்துக்களை கூறுகிறார் சிலம்புச் செல்வர்.

நான் சிலம்புச் செல்வரைக் குறை கூறவில்லை. அந்தக் கதாபாத்திரங்கள் இப்படிபட்ட முரண்பாடான நிலைகளில் படைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த நூலாக இருந்தாலும், எப்படி அந்தக் கதாபாத்திரங்கள் படைக்கப் பட்டிருந்தாலும், விமர்சிக்கிற நாமே குழப்பங்களுக்கு ஆளாகிற அளவுக்கு அந்தக் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கதாபாத்திரங்கள் மூலமாகப் பேசப்படுகின்ற தமிழ் இருக்கிறதே, அந்த கதாபாத்திரங்கள் மூலமாகக் கம்பர் வடித்திருக்கின்ற உண்மை இருக்கிறதே, அதன் மூலமாக அவன் தமிழுக்கு ஆற்றியிருக்கின்ற தொண்டு இருக்கிறதே, அது தமிழ் உள்ளளவுந் தமிழ்நாடு உள்ளளவுந் தமிழகத்திலே கடைசித் தமிழன் உள்ளளவும் பாராட்டத்தக்கதாகும் என்பதை நான் மறுக்கவில்லை.

திரு ம.பொ.சி. எங்கே சிறு தவறு நடந்தாலும் மன்னிக்க மாட்டார். ஆகவேதான் பக்கத்துக்கு பக்கம் அவருடைய “கம்பர் கவி இன்பம்” என்ற நூலில் கம்பராமாயாணத்தின் கதாபாத்திரமானாலும் வால்மீகியுனுடைய கதாபாத்திரமானாலும் தனது வன்மையான கண்டனங்களைப் பொழிகிறார்; அதே நேரத்தில் சமாதானங்களையும் சொல்கிறார்.

இராமாயணத்தின் வாலி வதைப்படலம் கம்பராமாயாணத்திற்கே களங்கம் என்று கூறிவிட்டு அடுத்துச் சொல்கிறார்; “என்ன செய்வது? சந்திரனிலேயே கலங்கமில்லையா?” என்று.


ஆகவே சந்திரனில் களங்கம் இருப்பதனாலேயே சந்திரனுக்கு அழகு என்று குறிப்பிட்டு, அவர் கம்பராமாயணத்தைக் காப்பாற்ற விரும்புகிறார். எதற்காக? தமிழுக்காக!

ஆக, எரிக்கவேண்டும் என்று சொன்ன நேரத்தில் நாங்கள் என்னென்ன கருத்துக்களச் சொன்னோமோ; இன்னமும் சொல்கிறோமோ அதே கருத்துக்களை, எரிக்க வேண்டாம் என்ற தரப்பிலே சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அன்றைக்கே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். ஆகவே, அவர் குற்றம் இருக்கிற இடத்தில் கண்டிக்கும் ஆற்றல் படைத்தவர் என்று நான் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று இந்த விழாவில் கல்ந்து கொள்கிற சிலம்புச் செல்வர் ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தை எதிர்த்து மாநாடு நடத்தினார். இன்று திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு உறுதுணையாக இருக்கிறார்! என்ன காரணம்?


திராவிடநாடு பிரிவினைக் கொள்கையை நாங்கள் விட்டு விட்ட காரணத்தால் எங்களுடன் இணைந்திருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்; இணைந்தார்.


அதைப் போலவே நான் கம்பர் விழாவிலே பேச வந்திருக்கிறேன் என்றால், இப்போது பெரும்பாலான புலவர்கள் கம்பருடைய கவிநயத்தை மாத்திரம் பாராட்டுகிறார்கள்; பாத்திரங்களை விட்டு விட்டார்கள் என்ற காரணத்தினால் நான் இங்கு வந்திருக்கிறேனே அல்லாமல் வேறல்ல! ஆக, விட்டுக் கொடுக்கின்ற தன்மை இருசாரருக்கும் வருகின்ற நேரத்தில், ஒருவரோடொருவர் கலந்து அணுகி நெருங்கிட வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த முறையில் தான் இந்த விழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பினை நான் பெற்றேன்.

இந்த விழா மூலமாகக் கம்பனுடைய புகழை ஒருவருக்கொருவர் எண்ணி மகிழ்கிற அதே நேரத்தில், கம்பன் வளர்த்த புகழ்த் தமிழ் மேலும் வளர்க்கப்பட, அந்த தமிழுக்கு மேலும் ஆக்கம், ஊக்கம் அளிக்கப்படக் கம்பனை பாராட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது! அந்தத் தமிழ் ஏற்றம் பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

1969-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் காரைக்குடி கம்பர் விழாவில் ஆற்றிய உரை

நன்றி:
நூல்: மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
தமிழ்க்கனி பதிப்பகம், சென்னை - 34
இரண்டாம் பதிப்பு: 1979
விலை ரூபாய்: 6
அச்சிட்டோ: முரசொலி அச்சகம், சென்னை - 34