தொடர்புடையவை:
ஹஜ்ரத் வீடு - முதல் பகுதி இங்கே:
http://nagoreismail786.blogspot.com/2012/03/blog-post_16.html
---------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சிறுவயதில் நாகூர் வஹ்ஹாப் சாப் பள்ளியில் (தெருபள்ளி தெரு குளத்திற்கு எதிரே) உள்ள மதரஸாவில் அரபி பாடம் ஓத கற்றுத் தெரிவதற்கு சேர்த்து விட்டார்கள்.
முதல் நாள் ‘இக்ர.. (ஓதுவீராக..!)’ என தொடங்கும் வசனத்தை எனக்கு சாபு ஓத சொல்லி கொடுத்தார்கள்.
தொடர்ச்சியாக ஐந்து கலிமாவும் சொல்லி கொடுத்தார்கள்.
லா இலாஹா இல்லல்லாஹ்.. முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்..
அல்லாஹ்வைத் தவிர வேறு அல்லாஹ் இல்லை... முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்.
நான் சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் அப்படியே திருப்பி சொன்னேன்.
அப்போது அந்த குழந்தை பருவத்தில் எந்த மத குடும்ப சூழலில் நான் பிறந்திருந்தாலும் மேலே சொன்ன கலிமா ஷஹாதாவிற்கு பதிலாக வேறு ஒரு வாசகத்தை சொல்லி கொடுக்கப்பட்டிருந்தாலும் நான் அதனையே பின்பற்றி சொல்லியிருக்கத் தான் செய்வேன்.
ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ம்மாவுக்கு பயந்தோ வாப்பாவுக்கு பயந்தோ அல்லது ஓதி கொடுக்கின்ற சாபுவுக்கு பயந்தோ அப்படியே பின்பற்றி கலிமாவை ஒப்பித்து கொண்டிருந்தேன்.
அதாவது முறைப்படி முஸ்லிமாகியிருந்தேன். சமுதாயத்தில் என்னை நானே முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள அனுமதி கிடைத்தது. ஆனால் உண்மையான நம்பிக்கை என் மனதுக்குள் நுழையவில்லை. குரான் ஷரீஃபில் வரும் வாக்கியத்தை கவனிக்கலாம்:
குரான் ஷரீஃப் - 49. ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) - 14 வது வாக்கியம்
“நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொண்டோம்” என்று நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள். “நீங்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் இஸ்லாத்தை தழுவினோம்” என்று (வேண்டுமானால்) கூறுங்கள்”, (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் ஈமான் (நம்பிக்கை) நுழையவில்லை; .............”
மேலே உள்ள வாக்கியத்தின் படி ‘முஸ்லிமாக இருப்பதற்கும்’ ”ஈமானுடன் இருப்பதற்கும்” நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது.
முஸ்லிமாக இருப்பதை ஒரு வீட்டிற்குள் செல்வதை குறிக்கும் என்றால் ஈமான்தாரியாக இருப்பதற்கு அந்த வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு அறைக்குள் செல்வதை குறிக்கும்.
முஸ்லிமாக இருப்பதற்கு வக்து தவறாமல் குனிந்து எழுந்து அவசரகதியில் தொழுகையை கடனாக கழித்து விட வேண்டுமென்றால் ஈமான்தாரியாக இருப்பதற்கு உடலோடு சேர்த்து உள்ளத்தையும் ரூஹையும் வளைக்க கடமையாற்றியாக வேண்டும்.
முஸ்லிமாக இருப்பது வெளிப்படையானவற்றை குறிக்கும் என்றால் ஈமான்தாரியாக இருப்பது மறைவானவற்றை குறிக்கும், ஏனெனில் அல்லாஹ் குரான் ஷரீஃபில் “..அவர்கள் இதயங்களில் நுழையவில்லை..” என்று சொல்கிறான்.
இதயத்தில் நுழைவது என்பது வெளிப்படையாக தெரியக்கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
சரி, ஈமான் கொள்வது என்றால், எதை ஈமான் கொள்வது? எப்படி ஈமான் கொள்வது?
இந்த கட்டத்தில் குரான் ஷரீஃபில் வரும் இன்னொரு வாக்கியத்தையும் நினைவில் கொள்வது நன்மை பயக்கலாம்.
குரான் ஷரீஃப் - 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு) - 2 மற்றும் 3 வது வாக்கியங்கள்
2 - அது திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. முத்தகீன்களுக்கு நேர்வழிகாட்டியாகும்.
3 - (முத்தகீன்களான) அவர்கள், மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள், ...............”
மேலே சொன்ன 2வது வாக்கியத்தில் தமிழ் மொழிபெயர்ப்பில் “இது திருவேதமாகும்...” என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும், ’இது’ என்றால் ’இந்த குரான் ஷரீஃப்’ என்று பொருள்படும் படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும்,
ஆனால் ‘இது’ என்ற வார்த்தைக்கு அரபியில் ‘ஹாதல்” என்ற வார்த்தை தான் வர வேண்டும். அப்படி வராமல் ‘தாலிகல்” என்ற வார்த்தை வந்திருக்கிறது, தாலிகல் என்ற வார்த்தைக்கு ‘அந்த’ என்பது தான் சரியான நேரடி பொருளாகும்.
ஆனால் ‘அந்த’ என்று எந்த மறைவான வேதநூலை பற்றி இறைவன் சொல்கிறான். இது ஒரு கேள்வி?
அடுத்து ‘முத்தகீன்கள்” என்ற அரபி வார்த்தை.
’தக்வா உடையவர்களை’ ‘முத்தகீன்கள்’ என்று குறிக்க பயன்படுகிறது. ‘தக்வா’ என்ற வார்த்தைக்கு தமிழ் மொழிபெயர்ப்பில் ‘பயபக்தியுடைவர்கள்’ என்று தமிழ்சொல் கொடுத்திருப்பார்கள்.
ஆனால் ‘தக்வா’ என்றால் ஆங்கிலத்தில் self-awareness, the act of shielding/protecting oneself, (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Taqwa).
’விழித்திரு’ என்று சொல்வார்கள் அல்லவா, விழித்திரு என்றால் ”தூங்காமல் ராத்திரி பூரா கண்ணு முழிச்சிகிட்டு இரிக்கிறது” என்று அர்த்தமல்ல, எப்போதும் சுய கவனிப்போடு, சுய நிதானத்தோடு, எப்போதும் தயாராக இருப்பது, புலன்களின் உணர்வுகளோடு இருப்பது இப்படி குறிக்கும்.
உங்கள் விரல் அசைவது, உங்கள் கண்ணில் வரும் கருப்பு விழி அசைவதிலிருந்து அது எதை பார்த்துக் கொண்டிருக்கிறது, அதில் எந்த பொருள்கள் எல்லாம் கண்ணில் தெரிந்துக் கொண்டிருக்கிறது என்பது உள்பட உங்களை பற்றிய ஒரு closed observationல் இருப்பதை குறிக்கும்.
அதாவது எப்போதும் ‘தன்னை அறிந்த நிலை’யில் இருப்பதை ’தக்வா’ எனும் வார்த்தை குறிக்கும் என்றால் ‘தன்னை அறிந்த நிலையில் இருப்பவர்களை’ ‘முத்தகீன்கள்’ என்று குறிக்கும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீது ஒன்று நினைவிற்கு கட்டாயம் வந்தாக வேண்டும்.
’தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’
(-எல்லாம் ஒரு சர்க்கிளுக்கு குள்ளேயே சுற்றி வருவதை உணர்ந்து கொள்ளலாம்.)
இது வரை:
’அந்த திருவேதம்’ என்றால் எது?’
- இதற்கு குரான் ஷரீஃப் என்று பொருள் தர்ஜூமாவில் கிடைத்தாலும் அது தான் சரியானது என்று உறுதியிட்டு கூறிவிட முடியாது.
இதை பற்றி மிக அற்புதமாக இங்கே சொல்லாடப்பட்டிருக்கிறது: http://pirapanjakkudil.blogspot.sg/2011/08/blog-post_27.html
’அந்த திருவேதம் யாருக்கு வழி காட்டுகிறது?’
-Self-awarenessஓடு இருந்து தன்னை காத்து கொள்கின்றவர்களுக்கு
இப்போது அடுத்த கேள்வி -
“அப்படி Self-awareness சுயநினைவோடு இருப்பவர்களின் குணாதிசியங்கள் என்ன?”
- அவர்களில் முதன்மையான குணாதிசியமானது ‘அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள்’
’யுமினூன’ என்ற அரபி வார்த்தை ஈமான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. அதாவது ‘மறைவான வற்றின் மீது ஈமான் கொண்டிருப்பார்கள்’
இப்போது முதலில் மேலே சொன்ன ‘ஹுஜுராத்’ எனும் அத்தியாயத்தில் வந்த வாக்கியத்தோடு தொடர்பு படுத்தி பார்ப்போம்.
“...ஏனெனில் உங்களுடைய இதயங்களில் ஈமான் (நம்பிக்கை) நுழையவில்லை..”
நம்பிக்கை என்றால் என்ன?
உதாரணமாக, ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி ஒரு நண்பர் சொன்னார், “இன்னும் கொஞ்ச நாளில் மொபைல் போனிலேயே இண்டர்நெட் பார்ப்பார்கள்..” என்று
அதற்கு இன்னொரு நண்பர் சொன்னார், “முட்டாளாய்யா நீ... எவனாவது மவுஸை போனில் கனெக்ட் பண்ணி ஊரெல்லாம் எடுத்துகிட்டு போவானாய்யா.. அதெல்லாம் நடக்குற காரியமா?” என்றார்
ஆனால் இன்றைக்கு காலம் ‘யார் முட்டாள்’ என்று காட்டி கொடுத்து விட்டது.
முதலாம் நண்பர் வைத்திருந்தது அவர் புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நம்பினார்.
ஆனால் இன்றைக்கு மொபைல் போனில் இண்டர்நெட் என்பது மறைவான ஒன்றல்ல.
இப்போது ஒருவர் வந்து, “மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கலாம்’ என்றால் அதை ஒருவர் ஏற்றுக் கொள்வதை நம்பிக்கை என்று சொல்ல முடியாது.
வெளிப்படையான ஒன்றை நம்புவது என்பது தேவையில்லாத ஒன்று.
மறைவான ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு தான் நம்பிக்கை தேவைப்படுகிறது.
அப்படியா, அப்போ, மறைவான வற்றின் மீது நம்பிக்கை கொள்வது விளங்குகிறது, ஆனால் ’மறைவானவை’ என்றால் என்ன?
இன்னைக்கு மறைவான ஒன்று காலப்போக்கில் வெளிப்படையாகக் கூடிய ஒன்ரையா இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, உதாரணமாக மொபைல் போனில் இண்டர்நெட், etc, etc,..?
எந்த மறைவானவற்றை பற்றி இந்த இடத்தில் குரான் ஷரீஃப் குறிக்கிறது.
’மறைவான’ என்ற வார்த்தைக்கு ‘அல்-கைப்’ என்ற வார்த்தை பயன்படுகிறது.
அதாவது, ‘அல்-கைப்’ என்றால் அது இறைவன் தான்.
ஏனெனில் ஸுரத்துல் பகறாவில் 3 (தொடர்ச்சி), 4 மற்றும் 5 என தொடரும் வசனங்களில் நம்பிக்கை வைக்க வேண்டிய மற்றவைகளை பற்றி குறிப்பிடும் போது அருளப்பட்ட வேதங்கள், மறுமை உள்பட இன்றைக்கு பார்க்க முடியாத மறைவான ஒவ்வொன்றும் தனியே குறிப்பிடப்பட்டே உள்ளது, அப்போது தனித்தனியாக குறிப்பிடப்படாத ஒன்றான ஒன்றை பொதுவாக ‘அல்-கைப்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்து பார்க்கும் போது ‘அல்-கைப்’ (unseen) என்பது இறைவனையே குறிக்கும் என்பது சூஃபியாக்களின் கருத்தாகும்.
இதை தான் பெருமானார் (ஸல்) அவர்களும் ‘தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ என்றார்கள்.
சுயநினைவோடு இருக்கும் இவர்கள் மறைவான இறைவன் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
ஆனால் இறைவன் மறைவாக தான் இருக்கின்றானா?
குரான் ஷரீஃப் - ஸூரத்துல் ஹதீத் (இரும்பு) - 4 வது வாக்கியம்
”..... நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்...”
ரொம்ப அலர்ட்டாக இருக்க வேண்டும். நீங்கள் இருக்கின்ற இடத்தில் எல்லாம் இறைவனும் இருக்கின்றான். உதாரணமா, வகுப்பில் வாத்தியார், ‘இஸ்மாயில்’ - இஸ்மாயிலாகிய நான், ‘உள்ளேன் அய்யா’ என்று விளித்தால் அவன் என்னுடனே சேர்ந்து ‘உள்ளேன் அய்யா’வாக தான் இருக்கிறான்.
ஆனால் இந்த ‘உள்ளேன் அய்யா’வை நம்ப வேண்டும். அப்படி வரும் நம்பிக்கைக்கு பல படித்தரங்கள் உண்டு.
என் நண்பர் மொபைல் போன் இண்டர் நெட் சொன்னேன் அல்லவா, அந்த உதாரணத்தோடு ஒப்பிடுவோம்.
இரண்டாம் நண்பர் மறைவான வற்றை நம்பவில்லை, எப்படி?
மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கலாம் என்ற செய்தி பிற்காலத்தில் நிறைவேறக் கூடிய ஆனால் அதே சமயத்தில் உரையாடல் நடந்த அந்த காலகட்டத்தில் மறைவாக இருந்த செய்தி. அதை இரண்டாம் நண்பர் ஏற்கவில்லை.
முதலாம் நண்பர் மறைவானவற்றை நம்பினார், எப்படி?
‘மொபைல் போனில் இண்டர்நெட் வராத போதே, அவ்வாறு வரும் என்று நம்பினார்.
ஆனால் மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்க கூடிய இந்த காலகட்டத்தில் இரண்டு நண்பர்களுமே நம்புகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இது நம்பிக்கை கூட அல்ல, ஏனெனில் முன்னர் சொன்னது போல் மறைவானவற்றை ஏற்றுக் கொள்வதற்கு தான் நம்பிக்கை தேவை. இப்போது இரண்டு நண்பர்களுமே நம்பவில்லை, அனுபவிக்கிறார்கள்.
ஆக,
1. மறைவானவற்றை நம்ப மறுப்பது ஒரு நிலை
2. மறைவானவற்றை ஒப்புக்கொள்கிறேன் என்று கேள்வி கேட்காமல் சொல்வது அடுத்த நிலை - இது தான் நான் குழந்தையில் கலிமா சொன்ன நிலை - இது தான் நான் முஸ்லிம் எனும் வீட்டிற்குள் நுழைந்து விட்ட நிலை
3. மறைவானவற்றை அதாவது முதன்மையாக அல்-கைப் எனும் இறைவனை நம்புவது அடுத்த நிலை - இது தான் முஸ்லிம் எனும் வீட்டிற்குள் இருக்கும் ஈமான் எனும் அறைக்குள் நுழையும் நிலை
முதன்மையாக அல்-கைப் எனும் இறைவனை அதாவது மறைவானவற்றை நம்புபவர்கள் தான் முத்தகீன்களான சுய உணர்வோடு இருப்பவர்கள்.
இப்படி சுய உணர்வோடு இருப்பவர்களான அல்-கைபை நம்புபவர்களுக்கு தான் ’அந்த’ வேதநூல் நேர்வழியை காட்டுகிறது.
அப்படி காட்டியதோடு முடிவடையவில்லை, வழிகாட்டுதல் என்பது ஊர் போய் சேர்ந்து விடுவது ஆகாது. அந்த வழிகாட்டுதலோடு சென்றால்... அடுத்த நிலை வரும்...
4. மறைவானவற்றைஅல்-கைபை நம்புவதில் இருந்து உணர்வுப்பூர்வமாக உள்ளுணர்வுகளால் அனுபவிப்பது என்பதே அந்த அதற்கும் அடுத்து இருக்கும் மேலான நிலை - இது தான் சூஃபியாக்களின் நிலை.
நான் எனக்கு குழந்தை பருவத்தில் ஓதி கொடுத்த வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்து சொன்ன போது அதை திரும்ப சொல்லி ஒப்புக் கொண்டேன். அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணின் படி இரண்டாவது நிலையில் இருந்தேன், ஆனால் எங்கள் ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது தான் ஈமான் எனும் வீட்டிற்குள்ளேயே நுழைந்தேன்.
ஆனால் எங்கள் ஹஜ்ரத் அவர்கள் இருந்ததோ......
எனக்கும் அந்த நிலைக்கு உயர ஆசை எனும் துவா பிறந்தது....