இந்த படம் 1982ல் தூர்தர்ஷனில் வெளியானது. படத்தை பார்த்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட படத்தை வாங்கி வெளியிட முடியாது என மறுத்து விட்டார்களாம். இந்த விநியோகஸ்தர்களே இப்படி தான், 'ரொம்ப நல்ல படத்தையும் ரொம்ப மோசமான படத்தையும்' வாங்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
என்னை பொறுத்த வரை இந்த படம் முதல் காரணத்தினால் தான் விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என்பதேயாகும். இந்த படத்துக்கு 'உப்பின் சுவை' என்று பெயர். கண்ணீரின் சுவை என்றும் சொல்லலாம்.. வாழ்வின் சுவை என்றும் கொள்ளலாம்.
உப்பில்லாத சோறு குப்பையிலே என்பார்கள் இந்த படத்தின் பெயரிலேயே 'உப்பி'ருந்ததாலும் தியேட்டரில் நிறைய குப்பை படங்கள் ஓடுவதால் இந்த படமும் தியேட்டர்களுக்கு போய் குப்பையோடு குப்பையாக போய் விடக்கூடாது என்று தான் தூர்தர்ஷன் வாங்கி ஒளிப்பரப்பியதோ என்னவோ.
'மூன்றாம் பிறை' படத்தை இந்தியில் 'சத்மா' என்று எடுத்தார்கள். தமிழில் 'பூங்காற்று புதிதானது..' என தொடங்கும் பாடல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கலாம். அதே பாடல் இந்தியில் வரும் போது இசைஞானி இளையராஜா அவர்கள் 'பூங்காற்று..' டியுனை பயன்படுத்தாமல் 'தம்பிக்கு எந்த ஊரு' படத்திற்கு இவர்கள் இசையமைத்த 'என் வாழ்விலே வரும் அன்பே வா...' பாடலின் டியுனை பயன்படுத்தியிருப்பார்.
இப்போது அந்த டியுனுக்கு குல்ஜார் சாப் பாடல் வரிகள் தர வேண்டும்.
'ஏ ஜிந்தகி தெரே கலா லே..
ஏ ஜிந்தகி தெரே கலா லே..
ஹம் னே பி தெரே ஹர் இக் கம் கோ கலே சே லகாயா
ஹெய் னா'
- என்று எழுதியிருப்பார்.
இதன் அர்த்தம்..
ஓ.. வாழ்க்கையே.. எங்களை அணைத்துக் (அரவணைத்து ஏற்றுக்) கொள்..
நாங்கள் நீ தரும் அனைத்து சோகங்களையும் அணைத்து (ஏற்றுக்) கொள்வதை போல் (அதே போல் வாழ்க்கையே எங்களை அணைத்துக் கொள்)
வாழ்க்கை தரும் சோகங்கள் துயரங்களின் உடல் ஏற்றுக் கொள்வதன் வெளிப்பாடாக வருவது தூய அழுகை தான். அந்த அழுகையின் சுவை தான் வாழ்வின் சுவை. அது தான் நம்கீன். (Namkeen - A Taste of Life)
3 அல்லது 4 பெண்கள் கதாநாயகிகளாக கிடைத்தால் அவர்களை எவ்வளவு துகிலுறிக்க முடியுமோ அவ்வளவு தூரம் துகிலுறித்து ஆடி பாடி கட்டிபிடிக்க விடுவார்கள் நம் திரைப்பட மேமக்கள். அல்லது அந்த மூன்று பெயரையுமே ஒரு ஆணை காதலிக்க வைத்து அவர்களின் தலையோடு நம்முடைய தலையையும் சுற்ற வைப்பார்கள்.
இந்த படத்திலும் 4 கதாநாயகிகள் இருக்கிறார்கள். இவர்களை எவ்வளவு தூரம் நடிக்க வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடிக்க வைத்து அழ வைத்து சிரிக்க வைத்து வாழ சொல்லி மனித உணர்வுகளை துகிலுரித்து பதிவு செய்திருக்கிறார் குல்ஜார் சாப் அவர்கள். Hats Off Sir. இதிலும் காதலிருக்கிறது. நடுத்தெரு காதல் அல்ல.. நல்லதொரு காதல்..
மணிரத்னம் அவர்களின் படங்களான அக்னி நட்சத்திரம், அஞ்சலி படங்களை பார்த்தால் மன்னிக்கவும் பார்க்கவே முடியாது.. அந்த இருட்டில் எப்படி பார்க்க முடியும். அந்த லைட்டிங் எனக்கு புரியவும் இல்லை பிடிக்கவும் இல்லை.
இந்த படத்திலும் முழுக்க முழுக்க இருட்டு தான். பணம் கொழிக்கும் ஹோட்டலின் உள்ளே ரொமான்சுக்காக இருக்கின்ற விளக்கை அணைத்து இருட்டையே செயற்கையாக ஆக்கி இருப்பார்களே அந்த வகையான இருட்டல்ல. மின்சார இணைப்பே இல்லாத அரிக்கன் விளக்கை மட்டுமே நம்பி வாழும் வர்க்கத்தினரின் இல்லத்து இருட்டு. இந்த இருட்டு எனக்கு புரிவதோடு பிடிக்கவும் செய்தது.
மேலே கண்ட காட்சியில் இறுதியாக அந்த பெண், 'மின்சார இணைப்பு இல்லா விட்டால் லைட் எரியாது' என்றும் 'பல வருடங்களாக இப்படித் தான்..' என்று கூறியதும்.. வேறு எதையும் பார்க்காதீர்கள் சஞ்சீவ் குமார் அவர்களின் நடிப்பை தவிர. சில நொடிகளில் எத்தனை பாவனைகள்.. 'அப்ப இவ்வளவு நேரம்.. நான்..' என்று அவர் கேட்டு அவர் படும் பாடு..
சஞ்சீவ் குமார் கெருலாலாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் பழையதாகி விட்டதால் அவர் இந்த படத்தில் பிறந்து இருக்கிறார் என்றே சொல்ல நினைக்கிறேன்.
குல்ஜார் ரொம்ப ஸ்டிரிக்டாம். எல்லோரும் நேரத்துக்கு வந்து விட வேண்டும் என்று கறாராக இருப்பாராம். ஒரு முறை நான்கு பெரிய நடிகைகளும் (வஹிதா ரஹ்மான், ஷர்மிளா தாகூர், ஷபனா ஆஜ்மி, கிரன் விராலே) எல்லோரும் நேரத்துக்கு வந்தும் சஞ்சீவ் குமார் சரியான நேரத்துக்கு வராததால் அவரை நறுக்குன்னு கேள்வி கேட்க வேண்டும் என்று அந்த 4 நடிகைகளும் குல்ஜார் சாபிடம் கோபப்பட்டு அவரின் வருகைக்காக காத்திருந்தார்களாம் .
அப்போது சஞ்சீவ் வந்தாராம். விறுவிறு என்று காஸ்டியுமுக்கு மாறினாராம். காட்சி விளக்கப்பட்டதாம். ஒரே ஷாட். ஒக்கே ஆனது. காட்சி முடிந்ததும் சஞ்சீவ் அந்த நால்வர் அணியும் தன்னையே பிரம்மிப்புடன் கவனித்துக் கொண்டிருப்பதை கண்டாராம். அவர்கள் தங்களுக்குள் இருந்த கோபத்தையும் மறந்து சஞ்சீவை பாராட்டினார்களாம். ஏனெனில் படத்தில் வரும் மிக முக்கியமான கஷ்டமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய காட்சியாம் அது. ஒரே டேக்கில் அற்புதமாக ஸ்பாண்டேனியசாக நடித்து முடித்தாராம். அது தான் சஞ்சீவ் குமார்.
கெருலால் ஒப்பந்தத்தின் பேரில் வேலை செய்யும் லாரி டிரைவர். ஹிமாச்சல பிரதேசத்தில் நாட்டுப்புறத்தில் மழைவாழ் பகுதியில் குலு பள்ளத்தாக்கின் அருகில் உள்ள ஒரு ஊரில் நடக்கும் கட்டுமான பணி வேலை நிமித்தமாக சுமார் 4 மாதங்களாக அந்த ஊரில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் கெருலாலுக்கு. அவர் தங்குவதற்கு வீடு காட்ட அவரை தனிராம் என்பவர் அழைத்து செல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த வீடு ஒரு வயதான தாயாருக்குடையது, அவருக்கு மூன்று மகள்கள் என்று சொல்லிக் கொண்டே வருவார் தனிராம்.
ஒரு சிறுவன் சைக்கிளில் கெருலாலை மோதி விடுவான். அவன் விலகி சென்றதும் கெருலால், "நான் மொதல்லேயே பார்த்திருக்கணும்.." என்பார்
அதற்கு தனிராம், "பார்த்திருந்தா.. சைக்கிள்ள மோதியிருக்க மாட்டீங்க.." என்பார்
உடனே, 'நான் சைக்கிளை சொல்லலை.. வீட்டை சொல்றேன்..' என்பார் பெட்டி படுக்கையுடன் தங்குவதற்கே வந்து விட்ட கெருலால்.
மித்து (ஷபனா ஆஜ்மி) என்பவள் வீட்டில் நிற்பதை பார்த்து, 'இது யாரு?' என்று கெருலால் வினவுகிறார்.
மித்துவை தான் முதன் முதலாக கெருலால் பார்த்திருப்பார். ஆனால் மித்து அவரின் தாயாருக்கு இரண்டாவது மகள்.
'மித்து.. வாடகைக்கு ஆள் வந்திருக்குன்னு சொல்லி அம்மாவ கூட்டிட்டு வா.' என்று அனுப்பி விடுகிறார் தனிராம்.
அப்படியே வந்து கொண்டிருக்கும் போது மரத்திலிருந்து தொப்பென்று குதிக்கிறாள் சிங்கி. அதற்கு தனிரம் சொல்கிறார், 'பழுத்த மாதுளம்பழம் கீழே விழுற மாதிரி விழுறியே..' என்று..
அதற்கு சிங்கி சொல்வாள், 'மாதுளை இல்லை.. மாங்காய்..' என்று மரத்திலிருந்த பறித்த மாங்காயை காட்டுகிறாள்.
இந்த சிங்கியை தான் கெருலால் இரண்டாவதாக சந்திப்பார். ஆனால் சிங்கி அவரின் தாயாருக்கு மூன்றாவது குழந்தை.
தனிராம் சிங்கியை காட்டி, 'இது தான் மூணாவது..' என்பார்
கெருலால், 'ஆனா.. இது தானே இரண்டாவது..' என்கிறார்
'உண்மையிலேயே இரண்டாவது தான் மூணாவது..' இது தனிராம்
'அப்ப முதல்ல பார்த்தது..' இது கெருலால்
'அது இரண்டாவது..' - தனிராம்
'அப்ப மூணாவது..' - கெருலால்
'நம்ம இப்ப தானே மூணாவத பார்த்தோம்..' - தெளிவாக தனிராம்
'ஆனா இது இரண்டாவது தானே..' குழப்பத்துடன் கெருலால்
'இத பாருங்க..' என்று விளக்க ஆரம்பிப்பதற்குள் அந்த வீட்டு ஓனரும் மூன்று பிள்ளைகளுக்கு தாயாருமான (வஹிதா ரஹ்மான்) வருகிறார்.
வயதான மறதியுடையவரான காசு விஷயத்தில் கறாரான இவர் கெருலாலை பார்த்து, 'பாத்தா பிராடு மாதிரில்ல இருக்கு.. ஒழுங்கா வாடகை கொடுத்துடுவீயா.. நான் யாரோட காசையும் நான் வச்சுக்க மாட்டேன்.. யாரும் என்னோட காசயும் வச்சிகிட்டிருக்க விட மாட்டேன்.. நாங்கள்லாம்.. இந்த காச நம்பி தான் அரை வயிற நிரப்பிக்கிறோம்.. அத போய் ஏமாத்திடாதீங்க ' என்று சொல்கிறார். அட்வான்சாக 30 ரூபாய் கேட்டு பெறுகிறார். 40 ரூபாய் கொடுக்கப்படுகிறது
அதை தொடர்ந்து அவர் தங்குவதும் வீட்டில் மின்சார இணைப்பு இல்லை என்று தெரிய வருவதும், தூங்கி நடுஇரவில் எழுந்து பசி வந்து சாப்பாடு கிடைக்காமல் மூன்று பெண்களின் கிண்டலுக்கு ஆளாகி காலையில் எழுந்து தனிராமிடம் சென்று, '30 ரூவாக்கு 40 ரூவா கொடுத்தேன்.. பாக்கி 10 ரூவாய் வரலைன்னாலும் பராவியில்லை.. இனி இந்த வீடு சரிபட்டு வராது - ' என்று கோபப்படுகிறார். தனிராம் சமாதானப்படுத்துகிறார்.
கெருலால் அறைக்கு வெளிச்சத்துக்கு அரிக்கன் விளக்கு, தண்ணி குடிக்க பானை, குளிக்க பக்கெட் எல்லாம் வாங்கி வந்து ஒவ்வொன்றுக்கும் விலை போட்டு வைக்க சொல்கிறார் மூத்தவரான நிம்க்கி (ஷார்மிளா தாகூர்).
(வஹிதா ரஹ்மானும் ஷார்மிளா தாகூரும் ஒரே கால கட்ட நடிகை ஆனாலும் வஹிதா ஷார்மிளாவிற்கு தாயாராக நடிக்க சம்மதித்து விட்டர். முதலில் ஷார்மிளா ரோலுக்கு ஜெமினி கணேசன் அவர்களின் மகள் ரேகாவை தான் குல்ஜார் நடிக்க வைக்க நினைத்திருந்தார்.)
நைட் வேலை முடிந்து வருகிறார், கையில் அரிக்கன் விளக்கு, பானை, பக்கெட் எல்லாம் வாங்கி கொண்டு. அறைக்கு போய் பார்த்தா வாங்கிட்டு வந்த அத்தனையும் ஏற்கனவே வைத்து விலை வேற போட்டு இருக்கு.
எல்லாம் சேர்த்து 9 ரூவாய் 90 காசு என்று போட்டிருக்கு.. 'பாக்கி 10 ரூவாய் அதுல இப்ப மிச்சம் 10 பைசா' என்று வேதனையோடு புலம்பி மேலும் பில்லில் எழுதியிருப்பதை படிக்கிறார், 'அரிக்கன் விளக்கில் எண்ணெய் இப்போது ஃபுல்லாக இருக்கிறது.. தீர்ந்து போனதும்.. காசு கொடுத்து வாங்கி ஊற்றி கொள்ளவும்..' என்று.. பில்லை கசக்கி கீழே எறிகிறார்.
கெருலால் ஒரு முறை லாரியில் செல்லும் போது கோழி திடீரென்று பறந்து வந்து வண்டிக்கு முன்னால் வந்து அடிபடுகிறது. கெருலால் வண்டியை விட்டு இறங்கி பின்பக்க கோழியை தேடி டயரை பார்க்கிறார். அவருக்கு நேர் எதிர்பக்கம் ஒரு சிறுவன் நின்று கொண்டு, 'நீ கொன்னுட்டே..' என்கிறான்.
'அடப்பாவி.. என் கோழியை கொன்னுட்டீயா.?' - எனும் குரல் கேட்டு திரும்பி பார்க்கிறார் கெருலால்.
இரு வயதான பெண்மணிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர், 'விட்டாக்கா என் மேலேயே லாரிய ஏத்தி கொன்னுடுவே போலிருக்கே..' என்கிறார்.
கெருலால் இன்னொருவரை பார்த்து, 'இவங்கள்ட கோழியா..?' என்கிறார்
'அங்கே என்னா கேள்வி வேண்டி கெடக்குது.. எதாயிருந்தாலும் என்கிட்டே கேளு' - கோழியை பறிகொடுத்தவர்
'இது இவங்கள்ட கோழி தான்..' - அந்த இன்னொருவர்
கெருலால், 'சாச்சி, நான் என்னா செய்வேன்.. அதுவா வந்து டயர்ல மாட்டிகிச்சு.. நானா வேணும்னு அது மேல ஏத்தல..'
'அப்ப.. நான் வேணும்னு அது மேல ஏத்திட்டேனா..' - அந்த சாச்சி
கெருலால் கோபமாக, 'கோழி உங்கள்டன்னா.. வூட்லேயே வச்சு வளர்க்க வேண்டியது தானே.. எதுக்கு வெளில ரோட்டுல லாரிலாம் போற எடத்துல வந்து மேய வுடுறீங்க..'
சாச்சி, 'என்ன ஒளற்றே.. பாரு.. இந்த காடி காரன்..' (ஏதோ சொல்ல வந்த விநாடி)
கெருலால் பையிலிருந்து காசை எடுத்து, 'சாச்சி, இந்தாங்க.. 5 ரூவா.. போய் ரெண்டு கோழி வாங்கிக்கிங்க..' பிரச்சினையை முடிக்க பார்க்கிறார்.
சாச்சி, 'ஹூம்.. 5 ரூவா.. பெரிய காச கொடுத்துட்டாரு.. எனக்கு 25 ரூவா வேணும்..(என்று பக்கத்தில் நிற்கும் அந்த இன்னொருவரை பார்த்து) 5 ரூவா கொடுத்து சரிகட்ட பார்க்குறான்..'
அந்த இன்னொருவர், 'அவங்க சொல்றாங்க.. 5 ரூவா கட்டாதுன்னு..'
கெருலால், '25 ரூவாயா.. என்னா சொல்றீங்க.. அந்த காசுக்கு நல்ல ஆடே வாங்கிடலாமே..'
சாச்சி, 'அப்படி வாங்குற ஆடு.. எனக்கு முட்டை போடுமா..?'
கெருலால் விடாமல், 'அப்படின்னா செத்து போன அந்த கோழி மட்டும் பால் கறக்குமா..?'
- இப்படி நிலைமை மோசமாகி கொண்டிருக்க நல்ல வேலையாக எதிர்பார்த்தது போல் நிம்க்கியும் சிங்கியும் வருகிறார்கள்.
நிம்க்கி, 'என்னாச்சு?' என்று கேட்கிறார்
'இவங்கள பாருங்க.. இந்த ரோடு.. லாரி போறதுக்காக உள்ளது.. கோழிகள் போறதுக்காக இல்ல.. நானா வேணும்னு மோதலை.. என் டயர்ல அதுவா திடீர்னு வந்து விழுந்திடுச்சி.. 5 ரூவா கொடுக்கிறேன்.. 25 ரூவா கேக்குறாங்க..' - என்று தன் பக்கத்து நியாயத்தை எடுத்து சொல்ல..
நிம்க்கி ஆச்சர்யத்துடன், 'என்னாது.. 25 ரூவாயா?.. என்னா சாச்சி.. கோழி 25 ரூவாயா? 2.5 ரூவாய்க்கு கிடைக்குமே - அதான் 5 ரூவா தர்ராறே..' என்று முடிக்கும் முன்
சாச்சி, 'அது நல்லா முட்டை போடும்..'
சிங்கி, 'அது என்னா பவுன்லயா முட்டை போடும்? வேணும்டா 5 ரூவாய வாங்கிக்குங்க.. இல்லைன்னா உங்க பாட்டுக்கு போய்ட்டே இருங்க..'
சாச்சி, 'சிங்கி.. நீ இதுல வந்து வுழாதே.. பேசாம மூடிகிட்டு போ.. வந்துட்டா பெருசா.. வக்காலத்து வாங்க.. அவன் என்ன ஒன் புருஷனா..?'
சிங்கி, 'ஆமா.. அவன் என் புருஷன் தான்' என்று கெருலால் கையிலிருந்த காசை பிடுங்கி சாச்சியிடம் திரும்பி, 'இந்த 5 ரூவாய வச்சுக்க.. இல்லாட்டி போ..' என்று சொல்ல
சாச்சி, 'நிம்க்கி, இந்த சிங்கியை அடக்கி வை. இல்லைன்னா நல்லா இருக்காது..' என்று சொல்ல
நிம்க்கி, 'அவ கரெக்டா தான் சொல்றா சாச்சி, அவர் வெளியூர் காரரு.. அவர்கிட்டே போய் நம்ம இப்படி நடந்துக்கலாமா.. உண்மையிலேயே நம்ம எதுவுமே வாங்கிக்க கூடாது.. '
சாச்சி கடுப்பாகி, 'எதுவுமே.. வாங்க கூடாது.. இவ சொல்றா?.. 5 ரூவா கொடு' என்று சிங்கி கையிலிருந்த காசை வெடுக்கென்று பிடுங்கி கொள்ள சிங்கி விறுவிறுவென்று போய் டயர் கீழே உள்ள கோழியை எடுத்து கொள்கிறாள்.
சாச்சி, 'அதை ஏன் எடுக்குறே?' என்று கேக்க
சிங்கி, 'உங்களுக்கு கோழியும் வேணும்.. காசும் வேணுமோ?' என்று சொல்ல
கெருலால், 'அதை கொடுத்துடு.. அதை வச்சு நீ என்ன செய்ய போறே?'
நிம்க்கி, 'வேணாம்.. விட்டுடு.. நீ வேற எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்திகிட்டு..'
சாச்சி 'இங்கே கொடு' என்று கேக்க 'நான் தர மாட்டேன்' என்று எடுத்து கொண்டு ஓட தயாராக..
கெருலால், 'அதை கொடுத்துடேன்.. எறந்து போனதை யாராவது சாப்பிடுவாங்களா?'
'பின்னே உயிரோடு இருக்குறதயா சாப்பிட்வாங்க..' என்று சொல்லி விட்டு ஓரே ஓட்டமாக ஓடி விடுகிறாள் சிங்கி.
சாச்சி கடுஞ் சினத்துடன், 'நான் ஒனக்கு சாபம் கொடுக்குறேன்.. இந்தா வாங்கிக்க.. நீ அதை சாப்டுட்டு காக்கா மாதிரி கத்த தான் போறே..' என்று -
அங்கிருந்து காட்சியிலிருந்து விடை பெற்று வந்ததும்..
நிம்க்கி வாசலில் இருக்கும் கிணத்தடியில் குளித்து கொண்டிருக்கும் போது லாரி வருவது தெரிந்து சிங்கி ஓடி போய் ஒரு துணியை எடுத்துட்டு வந்து கெருலால் வரும் பாதையில் அவருக்கு தனது அக்காள் குளிப்பது தெரியாத படி மறைக்கிறாள்.
'நீங்க மேலே போங்க.. நான் சாப்பாடு கொண்டுட்டு வர்ரேன்..' என்று சொல்ல
'நான் சாப்டு விட்டேன்..' என்று சொல்கிறார் கெருலால்
சிங்கி, 'அப்புறம் ஏன் அந்த கோழியை கொண்டீங்களாம்?' என்று கேக்கிறாள்
கெருலால் ஆச்சர்யமாக, 'அப்படீன்னா.. அந்த கோழிய நீ சாப்ட்டீயா..?' என்று ஆச்சர்யத்துடன் கேக்க..
அவள் சாதாரணமாக, 'நான் மட்டும் இல்லை.. இங்கே எல்லோருமே சாப்பிட்டோம்' என்கிறாள்.
அந்த சாச்சி சொன்னது ஞாபகமிருக்கா, யாரு அந்த கோழிய சாப்பிடுறாங்களோ அவங்க நாளைக்கு காத்தால காக்கா மாதிரி கத்துவாங்களாம்..' என்று அனைவரும் சிரிக்க சிரிக்க சொல்ல.
கெருலால் தொடர்ந்து, 'நான் இன்னைக்கு காலைல வேலைக்கு லேட்டா போயிட்டேன்.. நீ ஒண்ணு செய்.. நாளைக்கு காலைல கொஞ்சம் வெள்ளனமே கத்திடு..' என்று சொல்ல அந்த இடத்தில் சிரிப்பு மழையாய் பெய்கிறது..
ஒரு முறை கெருலாலுக்கு வந்த சாப்பாட்டு கேரியரை மித்துவும் சிங்கியும் திறந்து பார்த்து ருசித்தும் பார்க்கிறார்கள். இவர் வீட்டுக்கு வந்து குளித்து விட்டு சாப்பாட்டு கேரியரை திறந்து பார்க்கும் போது ஒன்றுமே இல்லை - காலியான பாத்திரம் மட்டுமே இருக்கிறது. அந்த ஒரு கனம், 'இதையும் எடுத்து சாப்பிட்டுடாங்களா..?' என்று தவறாக நினைக்கும் போதே நிம்க்கி சாப்பாட்டை சூடு காட்டி கொண்டு வந்து தருகிறார்கள், உடனே அதை கண்டு 'தவறாக நினைத்து விட்டோமே' என்று வருந்தியவுடன், நிம்க்கியிடம், 'இனிமேல் சிங்கியை வெளியே எல்லாம் அனுப்ப வேண்டாம்..' என்று சொல்லும் போது
நிம்க்கி கேட்கிறாள், 'இன்னைக்கு யாரையோ கோபப்பட்டு அடிச்சிட்டீங்களாமே..' என்று கேட்கிறாள்..
'ஆமாம்.. எப்படி உங்களுக்கு தெரியும்..?' என்று ஆச்சர்யப்பட
'அவங்க சிங்கியை பத்தி தவறா பேசினாங்களாமே.. நிஜமாவா..' என்று வினவ
'அது எப்படி உங்களுக்கு..' என்று ஆச்சர்யம் மேலிட 'அவங்கள்ளாம்.. ரொம்ப கீழ்தரமானவங்க.. இனிமே எதாவது வேலையிருந்தா நீங்க போகலாமே..' எ
'முன்னாடில்லாம் நான் தான் போயிட்டு இருந்தேன்........' என்று நிறுத்தி விட்டு, 'பேசுறவங்க யாரா இருந்தாலும் தான் பேசுவாங்க..' என்கிறாள்.
'அப்ப எப்படி?.. ஒண்ணு செய்ங்க.. இனிமே எதாவது வாங்கணும் கொடுக்கணும்னா எங்கிட்டே சொல்லுங்க.. நான் செய்றேன்..' என்கிறார்.
அடுத்த நாள் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்கும் ஒண்ணும் இல்லை.. நாங்களே செஞ்சுக்குறோம்.. நீங்க போன பிறகு நாங்க தானே செய்ய வேண்டி இருக்கும்.. நாங்க இப்படியே வாழ பழகியாச்சு..' என்று சொல்கிறாள்
அதை தொடர்ந்து சிங்கி வெளியே எண்ணெய் வாங்க செல்லும் போது சில பொறுக்கி பொடிசுகள், 'அந்த டிரைவரோட யாரு படுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா.. மொதோ சான்ஸ் வயசானவங்களுக்கு தான்..' என்று வாய்க்கு வந்ததை பேசி வைக்க எண்ணெய்யை தூக்கி வீசி எறிகிறாள்.
அந்த இடத்திற்கு வரும் கெருலாலிடம் தகாத வார்த்தையால் இவளும் பதிலுக்கு திட்டி நடந்ததை சொல்ல, 'அப்படி எல்லாம் சொல்ல கூடாது' என்று அழைத்து சென்று ஒரு டின் எண்ணெய்யை வாங்கி கொடுத்து அடிக்கடி இந்த மாதிரி வர வேண்டாம் என்று சொல்கிறார்.
இந்த கட்டத்தில் ஜுகுனி இருக்கிறாளா? என்று நட்ட நடு ராத்திரியில் அந்த வீட்டிற்கு கத்தியுடன் வருகிறான் ஒருவன். அவனை கெருலால் அடித்து அனுப்பி விட 'அந்த மூணு பொண்ணுங்க..' என்கிறான் அவன். 'ஒனக்கு பொண்ணுங்க கேக்குதான்னு சொல்லி..' அடித்து அனுப்பி விட நிம்க்கி அதை தொடர்ந்து அம்மாவும் விசாரிக்கிறார்கள்.
அம்மாவுக்கு மிகுந்த கவலை ஏற்படுகிறது, கெருலாலிடம், 'நிம்க்கிய பத்தி என்ன நெனைக்கிறே? அவளை கல்யாணம் பண்ணிகிட்டு கூட்டிட்டு போயிடு.. ஒருத்தியாவது நல்லா இருக்கான்னு நான் சந்தோஷமா இருக்கிறேன்..' என்கிறாள்.
கெருலால் தன்னுடைய பாட்டிக்கு கடிதம் எழுதுகிறார் மூன்று பேரையும் பத்தி, ஒன்று ... மூத்தவள் நிம்க்கி உங்களுக்கு மருமகளாக வந்தால் மகிழ்வாக இருக்கலாம்.' என்று எழுதி வைக்கிறார். காலையில் லட்டரை எடுத்து போக மறந்து விட்டு அடுத்த நாள் எடுத்துட்டு போக வேண்டி லட்டரை எடுத்து எழுதியதை திரும்ப படித்து பார்க்கும் போது நிம்க்கி என்ற இடத்தில் மித்தூ என்றிருக்கிறது.
அந்த நேரத்தில் மித்து தேத்தணி போட்டு கொண்டு வருகிறாள், 'இங்க ஒரு லட்டர் வச்சிருந்தேன்.. பார்த்தியா?'
அவள் தலையை ஆட்டுகிறாள் பார்க்கவில்லை என்பது போல்
'நான் இல்லாத நேரத்துல இந்த அறைக்கு வந்தியா?' என்று அதட்டலாக கேட்கிறாள்.
அவள் பயந்து பின்வாங்க, 'ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறே.. ஒனக்கு என்ன நாக்கு இல்லை..?' என்று கேட்கிறான். இத்தனை கேள்விகளையும் உண்மையான கோபத்தில் கேட்க வில்லை. ஒரு மாதிரி சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் கேட்கிறான்
அவள் பயந்து போய் ஓடி போனவுடன் நிம்க்கி, 'என்னாச்சு.. மித்து ஏன் அழறா? எனக்கு பயமா இருக்கு.. அவளால வாய் பேச முடியாது.. என்னா சொன்னீங்க.. சொல்லுங்க' என்று கேட்கிறாள்.
கெருலால் அதிர்ந்து, 'வாய் பேச முடியாதவளா..?' என்று கேட்கும் போது
'இத்தனை நாளா நீங்க இத கவனிக்கவே இல்லையா? ' என்று கேட்கிறாள்
கெருலாலுக்கு அப்போது தான் மித்து வாய் பேச முடியாதவள்' என்று தெரிய வருகிறது
அவளிடம் மன்னிப்பு கேட்க துடிக்கிறார். அதன் பிறகு மித்துவிற்கு கெருலாலை சந்திக்கவே பிடிக்காமல் மறைந்தே இருக்கிறாள். கெருலாலால் மித்துவை சந்தித்து மன்னிப்பு கேட்க முடியவில்லை.
ஒரு முறை அவர் மித்துவிற்கு 'பிறந்ததிலிருந்தே வாய் பேச முடியாதா?' என்று நிம்க்கியிடம் வினவும் போது, 'சிறிய வயதில் அவளை யாரோ கடத்தி சென்று விட்டார்கள்.. ரொம்ப நாள் கழிச்சி திரும்ப வந்ததிலிருந்து ஒரு வாய் கூட சாப்பிடலை ஒரு நாளும் தூங்கலை ஒரு வார்த்தை கூட பேசலை.. இப்ப வரை பேசாமலே..' என்று சொல்லி காட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தை விட்டு எறிகிறாள் 'என்னை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்..' என்பதாக..
அப்புறம் அந்த வீட்டிற்கு தேவையான பொருளை வாங்கி கொண்டு வந்து மாட்டு சாணத்தில் வழுக்கி விழுந்ததை பார்த்து மித்து சிரித்து அவளும் விழுந்து ராசியாகிறார்கள்.
அப்போது தான் மித்து கவிதை எழுதுவாள் என்று தெரிய வருகிறது.. 'உன் மனமாவது பேசுகிறதே...' என்று பாதி எழுதிய கவிதையை கேட்டு வியக்கிறார் கெருலால்.
அவர் சென்ற பிறகு தான் எழுதிய அந்த கவிதையை பாடுகிறாள்..
தான் வாய் பேச முடியாதவள்.. அவளின் காதலனோ நாள் முழுதும் சாலையில் வாழும் ஒரு லாரி டிரைவர். அவனை மேகத்தோடு ஒப்பிட்டு இந்த கவிதை பாடுகிறாள். மேகத்தை காதலுக்கு தூது விடுவார்கள். ஆனால் இவளோ மேகத்தையே காதலனாக பாவித்து பாடுகிறாள்.
தொலைதூரத்திலிருந்து
மீண்டும் ஒரு மேகம்
வந்திருக்கிறது..
உனது இறக்கையில்
நான் முத்துக்களை
கட்டி விடுகிறேன்
என்னுடைய ஏரியில்
பூக்களை கொண்டு
நிரப்பிவிடு
நான் ஒரு
பழைய சூஃபியின்
பொருட்டால்
மன்றாடி கேட்டுக்
கொள்கிறேன்..
அவளின் மனதில் குரல் நம் காதை விட மனதில் பதிகிறது
அந்த நேரத்தில் ஊரில் அரங்கு அமைத்து நாட்டியம் நடத்த வண்டியில் மைக் செட் கட்டி விளம்பரத்தோடு வருகிறார்கள். ரோட்டுல சாணம் பொறுக்கிக் கொண்டிருக்கும் அந்த தாயார் அப்படியே போட்டு விட்டு வீட்டிற்கு ஓடி வருகிறார்.
மூன்று பிள்ளைகளையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி 'வெளியே வந்தால் காலை உடைத்து விடுவேன்' என்று அரற்றுகிறார்.
அந்த விளம்பர வண்டி அவர் வீட்டின் வழியாக சென்று மறைந்தவுடன் சற்றே அமைதி பெறுகிறார்.
அந்த இரவு கெருலால் வரும் போது, 'ஏய்.. யார் நீ.. அந்த நாட்டியம் பார்த்துட்டு வர்ரீயா?' என்கிறாள்
'அம்மா.. நான் வேலய முடிச்சிட்டு வர்ரேன்..' என்கிறார் கெருலால்
அப்போது தான் சொல்லி காண்பிக்கிறார் அவரும் இதே போல் ஒரு டுரூப்பில் ஜுகுனி என்ற பெயரோடு நாட்டிய தாரகையாக விளங்கியதையும் அந்த டுரூப்பில் சாரங்கி வாசித்த ஒருவர் தன்னை திருமணம் செய்து மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த கதையையும் அந்த மூன்று பிள்ளைகளையும் நாட்டியத்திற்கே அழைத்து செல்ல முயன்றதையும் நிம்க்கி வலியுறுத்தி பார்த்து முடியாமல் போய் மித்துவை கடத்தி கொண்டு போய் வைத்திருந்ததையும் அவளும் ஒத்துக்காமல் போகவே அவளை அடித்து ஊமையாக்கி விட்ட கதையையும் அழுகையின் ஊடே சொல்லி காண்பிக்கிறாள்.
கெருலால், 'மித்துவை கடத்திட்டு போனது அவளது தந்தையா?' என்று ஆச்சர்யம் கொள்கிறார். 'நீங்க கவலைப்படாதீங்க அம்மா.. உங்க ஆம்புள புள்ள நான் இருக்கேன்ல.. இனிமே யாரும் இந்த வீட்டிற்கு வர மாட்டாங்க.. நான் பார்த்துக்குறேன்.. நீங்க கவலைப்படாதீங்க..' என்று ஆறுதல் சொல்கிறார். அந்த தாயார் கெருலாலின் மார்பிலேயே உறங்கி போகிறார்.
அந்த குடும்பத்திலேயே ஒருவனாக கெருலால் மாறி வரும் போது திடீரென்று காண்ட்ராக்ட் முடிந்து அன்றிரவே வேறு ஊருக்கு திரும்ப சொல்கிறார் ஒப்பந்ததாரர்.
புறப்பட தயாராகும் போது முன்னாளில் கொடுத்திருந்த வாக்குப்படி நிம்க்கியை சிவன் கோயிலுக்கு அழைத்து செல்ல கூப்பிடுகிறார். அவள் மறுக்கிறாள்.
'நீ கடவுள்ட்ட வேண்டிக்க வேண்டாமா?' என்று கேட்கிறாள்
நிம்க்கியோ, 'நான் கடவுள்ட்ட என் தங்கை மித்துவிக்கு உங்களை கணவராக வேண்டி கேட்க போகிறேன்.. என் வேண்டுதல் நிறைவேறுமான்னு நீங்க சொல்லுங்க..' என்று இடியை இறக்குகிறாள்
கெருலால், 'அது எப்படி நிறைவேறும்.. நான் உன்னை எனக்கு கேட்கும் போது..' என்கிறார். (கெருலால் தனது தாயாருக்கு எழுதிய கடிதத்தை தன் தங்கையின் வாழ்வுக்காக மாற்றி எழுதியது நிம்க்கி தான் சொல்ல தான் வேண்டுமோ?)
கெருலாலுக்கு மித்துவை மணமுடிக்க விருப்பமில்லை நிம்க்கி சொல்கிறாள், 'நான் இந்த வீட்டை விட்டுவிட்டு வர முடியாது'
அவளது தாயார் மறதி நிறைந்த முதிய வயதுடையவர்
அவளது மூத்த தங்கை வாய் பேச முடியாதவ.ள்
அவளது இளைய தங்கை விபரம் புரியாதவள்
'நான் திரும்ப வரலாமா?' என்று நிம்க்கியிடம் கேட்கிறார்
'வரலாம்.. ஆனால் எனக்காக வர வேண்டாம்..'
புறப்படும் போது, சிங்கி அழுகிறாள், 'எப்போ வருவீர்கள்?' - கண்களில் கண்ணீருடன் கேட்கிறாள்
'வராம எப்படி.. ஒன் கல்யாணத்துக்கு வரணும்ல..' என்று சொல்கிறார்
மித்துவிடம் சென்று 'நீ கவிதையை எழுதி முடிச்சி வை.. நான் வந்து வாங்கிக்குவேன்..' என்கிறார்
நிம்க்கியிடம் சென்று, 'என்னோட முகவரி மித்துவோட பழைய கவிதை நோட்ல எழுதி வச்சிருக்கேன்.. எப்போ தோணுதோ ஒரே ஒரு கடிதம் போதும்.. ஓடியாந்துடுவேன்..'
சொல்லிவிட்டு அவரின் பயணம் 'ராஹே பே ரெஹ்தே ஹெய்ன்..' என அங்கிருந்து தொடங்குகிறது..
இந்த பாடல் மழை, பனி என அவர் பல காலங்களில் பயனம் செய்வதை சுட்டுவதாக அமைகிறது.
மூன்று வருடங்கள் கழித்து பயணத்தில் ஒரு நாள் ஓரிரவு ஓரிடத்தில் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் போது 'ஒரு நாட்டிய குழு வந்திருப்பதாகவும் அருமையான ஒரு பெண் நடனம் ஆடுகிறது.. அவசியம் பார்க்க வேண்டிய நடனம்..' என்று நண்பர்கள் வற்புறுத்தி அழைத்து செல்ல அந்த நாட்டிய அரங்கிற்கு செல்கிறார்.
அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் நம்கீனின் சுவையை சொல்வதாக அமைகிறது.
கெருலால் அந்த ஊரை விட்டு கிளம்பும் போது அந்த வலியை உங்களாலும் உணர முடிகிறது. படத்தில் இருக்கும் இதமான இருட்டை தாண்டிய வெளிச்சத்தை வேண்டவே இல்லை. உண்மையில் இந்த படத்தில் உப்பின் சுவை மட்டுமல்ல வாழ்வில் காணும் அத்தனை சுவைகளும் கொட்டி கிடக்கிறது.
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Showing posts with label குல்ஜார் சாப் படங்கள். Show all posts

Saturday, June 19, 2010
Tuesday, February 16, 2010
மாவ்சம் - (காலங்கள் - Season) - பழைய இந்தி பட விமர்சனம்
முதலில் கீழே வரும் இந்த பாட்டை கேளுங்கள் (பாருங்கள்). மாவ்சம் என்ற படத்தில் எழுத்தில் வரும் பாடல் இது. பூபிந்தரின் ஆழமான குரலிலிருந்து நம்மை ஆளும் அருமையான கஜல், இந்த பாடல். வைரமுத்து 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' என்று எழுதினார். இந்த கஜல் 'செவியில் விழுந்து டைரக்டாக ஆன்மாவில் நுழைந்து' விடும்.
பார்க்க இருக்கும் யுடியுப் காணொளியில் படத்தின் காட்சிகள் இடம் பெறாது. பாடல் கேட்பதற்காகத் தான் இதை பதிகிறேன்.
மேற்கொண்டு பயணிப்பதற்கு முன்னர்.. இதோ 'இழந்த அமைதியை மீண்டும் இதயம் தேடும்..' அந்த பாடல்
பாடலை பார்த்து முடித்து விட்டீர்களா?
நல்லது.
நான் சொன்னது பொய் இல்லை என்று நீங்கள் இந்த அவசர உலகத்தில் தப்பி தவறி அமைதி விரும்பியாக இருந்தால் உணர்ந்து இருப்பீர்கள்.
அதெல்லாம் இருக்கட்டும்,
நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?
உன்னையே மணமுடிப்பேன் என்று வாக்களித்ததுண்டா?
சந்தர்ப்ப சூழ்நிலையால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போனதுண்டா?
கைபிடிப்பேன் என்ற சொல்லை காப்பற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்க நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்?
- அந்த எல்லை தான் மாவ்சம் சொல்லும் மனித ஆவணம்
வலி நிவாரணி மருந்து கம்பெனி நிறுவனர் டாக்டர் அமர்நாத் கில் 27 வருடங்கள் கழித்து ஓய்வுக்காக டார்ஜ்லிங் செல்கிறார். ஓய்வு என்றால் உடல், மனம் அமைதி பெறுவது என்று வைத்து கொண்டால் அந்த அமைதியை தேடி தான் அவர் செல்கிறார். டாக்டரான அவர் தயாரிக்கும் வலி நிவாரணியால் கூட அவருக்கும் இருக்கும் வலியை போக்கி அமைதியை தர முடியவில்லை.
இப்படி ஒரு வலி இருக்கிறதென்றால் அது காதல் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கும் என்று இயல்பாக வரும் நினைப்பை மாற்றிக் கொள்ளும் படி நான் கேட்க போவதில்லை.
வலிகளை
வரவேற்க
தெரிந்தவர்கள்
காதலிக்க
தகுதியானவர்கள்
ஒன்னுங் கீழ் ஒன்னு எழுதினாலாவது கவிதை எழுத வருதான்னு பார்த்தேன். சரி, ஒத்துக்குறேன், கவிதை தான் எழுத வரவில்லை. ஆனால் மாவ்சம் என்ற கவிதையை பற்றி தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்ற திருப்தியோடு தொடர்கிறேன்.
27 வருடங்களுக்கு முன்பு இதே டாக்டர் கில் இதே டார்ஜிலிங்கில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து காலில் சுளுக்கு உண்டாகி ஒரு ஹெர்பல் மருத்துவரையும் அவரது மகளையும் சந்திக்கிறார், சந்தா என்ற அந்த பெண்ணை மனதார நேசிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் கருத்துக்களை 'ச்சடி மே ச்சடி..' பாடி பரிமாறிக் கொண்ட பிறகு அவளை மணமுடிப்பதாக வாக்களித்து விட்டு புகை வண்டியில் ஊரை பார்க்க புறப்படுகிறார் கில். அதன் பிறகு சந்தா கில்லை
பார்க்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் பரீட்சை முடித்து ரிசல்டுக்காக காத்திருக்கும் போது கில் சொல்கிறார், 'இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் வந்து விடும், அதன் பிறகு நான் யாரை வேணும்னாலும் கொல்லலாம்..' என்று. விளையாட்டுக்காக கூட இப்படி எல்லாம் பேசலமா? - உண்மையிலேயே இதே போன்று ஒரு சம்பவம் நடந்து விட பல சிக்கலால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போக இப்போது 'மன்னிப்பு எனும் ஓய்வு' தேடி தான் இந்த டார்ஜ்லிங் வருகை.
வயசான பிறகு நம் வாழ்க்கையை திரும்பி பார்த்து நாம் யாருக்காவது தவறிழைத்திருந்தால் 'மன்னிப்பு' கேட்டு அவர்களை தேடி போவது என்பது அருமையானவர்கள் செய்யும் காரியம்.
சந்தாவை தேடுகிறார் டாக்டர் கில். ஒரு இடம் ரெண்டு இடம் இல்லை, பல இடங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கிறார். சந்தாவை அல்ல, அவள் கில்லின் வரவை எண்ணி பைத்தியமாக அலைந்து கடைசியாக வாழ்ந்த இடத்தை.
சந்தா இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தாலும் அவளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருந்த தகவல் தெரிய வருகிறது. சந்தா பைத்தியமாக அலைந்த போது கூட கில்லை மறக்காததால் பார்ப்பவர்களிடம் எல்லாம், 'என் பெண்ணை டாக்டராக்கிடுங்கள்..' என்று அழுது கூப்பாடு போடுவாள்.
கேள்விபட்டு குமுறி அழும் டாக்டர் கில் அதிகரிக்கும் குற்ற உணர்ச்சியுடன் அவளின் மகளை பற்றி விசாரிக்கிறார். அவள் வெளியூரில் சம்பாதித்து தன் தாய்க்கு மாசா மாசம் காசு அனுப்பி வைத்துக் கொண்டு வந்ததாகவும் அவளின் தாயார் இறந்த பிறகு அந்த பணம் வருவது நின்று விட்டதாகவும் கேள்விப்படுகிறார்.
அவளின் மகள் பற்றிய மேலதிக தகவல் கிடைக்காமல் ஒரு இடத்தில் காரை நிறுத்தி கடையில் தலைவலிக்கு மருந்து வாங்கும் போது, 'இந்த மாத்திரை சாப்பிடுங்க சார், கில் கம்பெணி மாத்திரை, நல்லா இருக்கும்..' என்கிறார் கடைக்காரர்.
அந்த கடையின் பக்கத்தில் இருக்கும் ஒரு உடல் தொழில் பண்ணக் கூடிய இடத்திலிருந்து பெரிய சத்தம், டாக்டர் கில் அதை கவனிக்கிறார், குறைந்த காசை வைத்துக் கொண்டு தன்னோடு கட்டிலில் பகிர்ந்து கொள்ள வந்ததற்காக அவள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறாள். டாக்டர் திடுக்கிடுகிறார். அந்த முகம், அந்த குரல், தான் 27 வருடத்திற்கு முன்னர் பார்த்த சந்தாவின் முகத்தை, குரலை ஒத்திருக்கிறது.
அவளை காண அந்த விபச்சார விடுதிக்கு செல்கிறார் டாக்டர் கில். அந்த விடுதியின் நிர்வாகியிடம் பேசி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
இதனால் அவருக்கு அந்த வீட்டில் ஏகப்பட்ட அவமானம், கஜிலி என்ற அந்த பெண்ணை டாக்டர் கில்லுடன் பார்த்த சந்திக்க வரும் பணக்காரர்கள் முதல் அந்த வீட்டில் தங்கியிருக்கும் சமைக்கும் வேலை பார்க்கும் பெரியவர் வரை அவரை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்கிறார்கள்.
தனது தாயாரான சந்தாவிற்கு எந்த சூழ்நிலையில் திருமணம் நடந்தது, மருத்துவம் படித்த ஒரு மாணவன் கொடுத்த வாக்கை நம்பி தனது தாயார் ஏமாந்து மனநிலை பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்தது, தனது தந்தையின் சகோதரனே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது, கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலில் விட்டு சென்றது, தனது தாயாரின் நிலைக்கு காரணமான டாக்டரின் மேல் தனக்கு இருக்கும் கோபங்களை எல்லாம் கஜிலி டாக்டரிடம் பதிவு செய்கிறாள்.
கஜிலி தான் ஒருவரை காதலித்ததாகவும் இந்த தொழிலுக்கு வந்த பிறகு அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறாள்.
டாக்டர் கஜிலியிடம், 'ஏன் தவிர்த்து விட்டாய்?' என்று கேட்கிறார்
'என் சூழ்நிலையில் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு போய் அவரை சந்திப்பது' என்று பதில் கேள்வி கேட்கிறாள்
டாக்டர் சொல்கிறார், 'இதே மாதிரி ஒரு காரணம் உங்க அம்மாவை சந்திக்க முடியாமல் போனதற்கு அந்த டாக்டருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?' என்று அவளை யோசிக்க வைக்கிறார்.
கில் கஜிலியிடம் 'உன்னை உன் நிலைமை தெரிந்தும் அவர் ஏற்றுக் கொண்டால், அவரிடம் சேர்ந்து வாழ்கிறாயா?' என்று கேட்டு அவளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது அந்த வீட்டில் 'வீட்டுக்காரர் வெளியே போயிருக்கார்..' என்று ஒரு பெண் சொல்ல கேட்டு உடைந்து திரும்புகிறார்கள்.
டாக்டர் கில் ஒரு விபச்சாரியாக மாறிப் போய் புதிய உலகில் குடி முழுகி போய் வாழ்ந்து கொண்டிருக்கும் கஜிலியை சந்தாவின் மகளாக மாற்ற நினைக்கிறார், அதன் மூலமாக சந்தாவிடம் கேட்காமல் விடப்பட்ட மன்னிப்பை அவள் மகள் கஜிலியிடம் கேட்டு பெறலாம் என்ற நோக்கத்தில்.
கஜிலிக்கு உண்மை தெரிந்து டாக்டர் கில்லை மன்னிப்பாளா? என்பதற்கான விடையை தான் மாவ்சம் படத்தை திரையில் ஓட விடாமல் மனசிலேயே தங்க விடுகிறார்கள்.
இதே கதையை சிவாஜி கனேசன் 'வசந்தத்தில் ஒரு நாள்' என்று தமிழில் நடித்திருப்பார்.
குல்ஜார் சாபின் இயக்கத்தில் இதயங்கள் நனைகிறது.
இந்த படத்தில் பிளேஷ் பேக்குக்கு நடுவே வார்த்தையை காப்பாத்த முடியாமல் போன காதலனும் காதலித்த பெண்ணின் மகளும் சந்தித்து கொள்கிறார்கள்.
சஞ்சீவ் குமார் டாக்டர் கில்லின் சுமையை நன்றாகவே சுமந்து இருக்கிறார். டாக்டார் கில்லின் 27 வருட ஏக்கத்தை முகத்தில் பதிய வைத்திருக்கிறார். சந்தாவாகவும் கஜிலியாகவும் ஷர்மிளா தாகூர் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுந்து நிற்க வைக்கிறார். ஷர்மிளா தாகூருக்கு தேசிய விருது கிடைத்ததாக நினைக்கிறேன்.
படத்துக்கு இசை அமைத்த மதன் மோகனின் நினைவாஞ்சலி என்று தான் பட டைட்டில் கார்டிலேயே போடுவார்கள். படம் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.
மதன் மோகன் பாக்தாதில் பிறந்தவர் என்று நினைக்கிறேன். இவரின் வெளிவராத பாடலை 2004 ஆம் ஆண்டு வெளியான 'வீர்ஜரா' என்ற ஷாருக்கான் நடித்த படத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதகுந்தது.
காஃபி வித் அனு சீசன் 2 வில் பூ படத்தின் இயக்குனர் சசி சொன்னார் அவர் ஒரு நல்ல படத்தை பார்த்து விட்டு வந்த பிறகு நகத்தை வெட்டினாராம், கலைந்து கிடைத்த புத்தகத்தை ஒழுங்கு படுத்தினாராம்
இந்த படத்தை அவரை பார்க்க வைத்து அவருடைய ரியாக்சனை பார்க்க வேண்டும் என்று ஆவல எழுகிறது.

Labels:
இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்,
சஞ்சீவ் குமார்
Sunday, January 31, 2010
இஜாஜத் - (விடைபெறுவதற்கான அனுமதி - Permission to depart) - பழைய இந்தி பட விமர்சனம்
குல்ஜார் சாபின் அனைத்து படங்களுக்கும் மொத்தமா சேர்த்து ஒரே தலைப்பு வைக்க வேண்டும் என்றால் 'சந்திப்பு' என்று வைக்கலாம்
இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.
இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....
இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.
நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை, அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).
இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.
அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.
அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும் அந்த நபருடன் உள்ளே நுழைகிறான்.
அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின் ராஜிவ் காந்தியின் புகைப் படத்தையும் 'எ டயலாக் வித் ராஜிவ் காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள்.
பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.
தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள்.
'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை.
ஹனிமூனுக்கு மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள். பாடல் தொடங்கி விடுகிறது. பாடல் முடிந்து திரும்பும் போது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் 'பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று எழுதப்பட்ட பூங்கொத்தை வழங்குகிறாள். இது மாயாவின் வேலை என்பது அந்த வேலையில் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.
இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.
இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....
இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.
நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை, அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).
இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.
அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.
அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும் அந்த நபருடன் உள்ளே நுழைகிறான்.
அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின் ராஜிவ் காந்தியின் புகைப் படத்தையும் 'எ டயலாக் வித் ராஜிவ் காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள். அவன் டாய்லெட்டிற்கு போன அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறாள் அந்த பெண்.
எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே 'வேற எதுவும் லேடிஸ்க்குன்னு தனி ரூமு இருக்கா?'ன்னு கேட்கிறாள். அவரோ அப்படி எதுவும் இல்லை என்பதுடன் காமனாக இருக்கும் இன்னொரு ரூம் ரொம்ப தூசியுடன் இருப்பதாகவும் இருக்கும் அந்த அறையிலேயே இருக்கும் படியும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லாம் இங்கே தான் நடமாடிக் கொண்டு இருப்போம் என்று சொல்லி அனுப்பி விடுகிறாள்.
இதற்கிடையில் டாய்லெட்டிலிருந்து வெளியேறும் அவன் தான் தனது
பெட்டியின் சாவியை தொலைத்து விட்டதை உணர்ந்து அதே அறையில் இருக்கும் ஒருவரின் பெட்டியை உற்றுப் பார்க்கிறான், உறங்கிக் கொண்டிருந்த அந்த பெட்டிக்குறிய நபரின் மனைவி அவரை எழுப்பி 'இங்கே பாருங்கள்..' என்று பயந்து போய் கூற அவர் எழுந்து 'என்ன வேண்டும்?' என்று கோபமாக கேட்க 'என் பொட்டிட சாவியை தொலைச்சுட்டேன், என்னோடது விஐபி பொட்டி அதான் நீங்க அதே பிராண்ட் பொட்டிய வச்சிருந்தா சாவிய வாங்கி அது சேருதான்னு பார்க்கலாம்னு...' என்று சொல்லவும் அவர் 'என்னோடது சேம்சோனைட்' என்று கூறுகிறார்
பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.இருவரும் மௌனங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டு உள்ளே வருகிறார்கள். சேம்சோனைட் பெட்டி வைத்திருந்த அந்த பெரியவரை அழைத்து செல்ல ஒருவர் வர அந்த இடம் வெறுமையாகிறது.
ஏன் இந்த சந்திப்பு நிகழ வேண்டும்? என்ன பேசுவது? எதை பேசுவது? யார் ஆரம்பிப்பது? இருவருக்குள்ளும் தவிப்பு தணலாய் எறிந்தது.அவளுக்கு அந்த மேகஸின் மேக்ஸிமம் உதவியை செய்தது. புத்தகத்துக்குள் புழுவாய் அவள்.
மௌனம் கலைத்தவர் அப்போது உள்ளே வந்த ஸ்டேஷன் மாஸ்டர். 'சார், சாவி வாங்கிட்டீங்களா?' - 'இல்லை' என்பது போல் அவன் தலையை ஆட்ட - அவர் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி 'மேடம், சாரோட விஐபி பொட்டி, சாவிய தொலைச்சிட்டார், உங்க சாவிய கொடுத்து உதவுனீங்கன்னா, சார் தொறந்துட்டு கொடுத்துடுவார்' - அவள் தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து வந்து கொடுக்கிறாள்.
கொடுத்த அந்த சாவியை பயன்படுத்தி பெட்டியை திறக்க பூட்டு தன்னை விடுவித்து கொள்கிறது. பெட்டியில் வேண்டியதை எடுத்துக் கொண்டு பர்ஸை அப்படியே போட்டு கொடுத்த அந்த சாவியையும் அப்படியே பெட்டியில் போட்டு அந்த பெட்டியையும் திறந்து போட்டு விட்டு டாய்லெட்டிற்குள் மறைகிறான். அவனின் இந்த நடைமுறை அழகியலில் நமக்கு புரிகிறது இவன் சாவியை எப்படி தொலைத்திருப்பான் என்று.
'சார்,' என்று அவனை தேடிக் கொண்டு உள்ளே வரும் டீக்கடை பையன் அவளிடம் சென்று சாரை பத்தி விசாரித்து விட்டு பெட்டி திறந்து கிடப்பதையும் அதில் தெரியும் பர்ஸையும் பார்த்து விட்டு பெட்டியின் அருகே செல்ல அவள் சத்தம் போடுகிறாள், 'நீ அவர் டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தவுடன் டீ கொண்டு வா' என்று சொல்லி விட்டு 'என்னை காவக்காறி மாதிரி ஆக்கி..' என்று பெட்டியிலிருந்து தனது சாவியை எடுத்து கொண்டு பெட்டியை மூடுகிறாள்.
அவன் கதவை திறந்து கொண்டு வருகிறான். அந்த டீக்கடை பையன் இரண்டு டீயை கொண்டு வருகிறான். 'இரண்டு டீ நான் கேக்கலையே?' அவன் குழம்புகிறான்.
'மேடம் தான் கொண்டு வர சொன்னாங்க..' என்கிறான்
அவள் கோபம் கொள்கிறாள், 'நான் எங்கே அப்படி சொன்னேன்..' என்று
அவனை அனுபபி விட்டு, 'இப்ப இரண்டு டீ வந்திருக்கு, நீயும் சாப்பிடலாமே' என்கிறான்.
முதலில் மறுத்து மறுபடியும் சம்மதிக்கிறாள். அடை மழை-சூடான் தேநீர்- இரவின் அமைதி-பிரிந்து வாழ்கிறவர்கள் சந்திக்கிறாள்-அழகான நிமிசங்கள்-மேகத்தில் நடப்பதாய் உணர்வு-உள்ளக்கிடக்கைகளின் பகிர்வு
பேச்சு எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதில் துவங்கி அங்கேயே சுற்றி கொண்டிருக்கும் வேலையில் வெள்ளைக்காரனை கொளுத்த சிகரெட் லைட்டரை தேடுகிறான் அவன்.
இவன் தொலைத்தது ஒண்ணு ரெண்டு அல்ல போலிருக்கிறது- அவள் தனது கைப்பையிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்து வெள்ளைக்காரனை கொளுத்துகிறாள். புகையாய் கரைகிறான் அந்த வெள்ளை நாயகன்,
'அப்ப தான் எனக்காக சிகரெட் லைட்டரை எப்போதும் கைலேயே வச்சிகிட்டு இருப்பே.., இப்ப எதுக்காக சிகரெட் லைட்டரை வைச்சிருக்கே?' என்கிறான். அவள் 'சிகரெட்டுக்காக தான்' - அவன் புரியாமல், 'அப்டின்னா? நீ சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிட்டியா?' என்று கேட்கிறான். அவள் கசப்பாய் சிரிக்கிறாள்.
இப்படியாய் கவிதையாய் தொடரும் சம்பவங்களில் தனது வழக்கமான 'நேற்றை இன்றில் நுழைக்கும் வேலையை' சரியாய் புகுத்துகிறார் குல்ஜார் சாப். அவர்களின் வாழ்க்கையை நாமும் பின்னோக்கி போய் பார்த்து விட்டு தான் வருவோமே..!
அவன் மஹேந்தர் என்கிற மஹேன் தனது தாத்தா சுதாவை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதை 5 வருடமாக படித்து முடிக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை இப்படி பல காரணம் சொல்லி தட்டி கழித்து வந்த அவனுக்கு அன்று மறுக்க முடியாத சூழ்நிலை.
தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.அவள் நீங்கள் மாயாவை கல்யாணம் செய்து கொண்டு நேரடியாக தாத்தாவிடம் போய் நின்று விடுங்கள் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்கிறாள். யோசிக்கவே நேரம் இல்லாத நேரத்தில் மாயாவை தேடி போகிறான். மாயா பேருக்கு ஏற்றாற் போல் மாயமாய் மறைகிறாள். அவளுக்கும் தெரியும் சுதாவுக்கும் அவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆன செய்தி.
அவள் மாயா. வித்தியாசமானவள் இந்த உலகத்தை விடவும் மாறுபட்டவள். திருமணத்தை புறக்கணிக்கிறாள். அவளுக்கு அதில் நம்பிக்கையில்லை. உடல் சுகத்தை தேடுபவளுமல்ல. அவளின் தேடல் மனசில் தேடல். அவ்வாறு அவள் இருப்பதற்கு அவளுக்குட்பட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றது. அதை எனக்கு மட்டும் ஏனோ புரிந்து கொள்ள முடிகிறது.
அவள் எங்கே போனாள்? திரும்பி வருவாளா? மாட்டாளா? புதிராய் இருக்கும் மாயாவை மறந்து விட முயற்சி செய்கிறேன் என்ற வாக்குறிதியுடன் தாத்தாவின் இஷ்டப்படி சுதாவை கைப்பிடிக்கிறான் மஹேன்.
மஹேனின் பர்ஸில் கூட மாயாவின் படம் தான் இருக்கிறது. சுதா சொல்கிறாள், 'இந்த வீட்ல உள்ள சாமான்கள நான் புழங்கும் போது வேற யாரோடேயோ சாமான புழங்குவது போன்ற உணர்வு இருக்கிறது' என்று
பர்ஸிலிருந்து மாயாவின் போட்டோ கழட்டப்படுகிறது.
இன்று நுழைகிறது..
ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங்க் டாய்லெட்டிற்கு சென்றிருக்கும் மஹேனின் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு சுதா பர்ஸை ஒரு ஆர்வத்தில் திறந்து பார்க்கிறாள்
மீண்டும் அன்று..
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள். இங்கே வீட்டில் தங்கியிருக்கும் போது அவள் புழங்கிய, உடுத்திய சாமான்களை திரும்ப அனுப்பும் போது பதில் கடிதம் போடுகிறாள்.
'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை. அவளை சந்திக்கவே மறுக்கும் மஹேன் சுதாவை மிகவும் நேசிக்க ஆரம்பிக்கிறான். அவளோடு தான் சின்ன வயசில் என்னவாக ஆசைப்பட்டேன் என்று சொல்கிறேன், ஆனா நீ சிரிக்க கூடாது' என்கிறான்.
அவள் சத்தியம் செய்யாத குறையாக சிரிக்க மாட்டேன் என்று சீரியஸாக சொல்கிறாள்.
அவன் 'நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..' என்றதும் அவள் சிரிக்கிறாள்.
தொடர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது தொ(ல்)லைபேசி அழைக்கிறது. இருவரின் முகத்திலும் மாயாவின் ரேகக ஓடுகிறது.
'நீ போய் எடு..' என்று மஹேன் சொல்கிறான்
'அந்த போன் எனக்கு இல்லை..' என்கிறாள் அவள்
போனை எடுக்கிறான். 'நீ செத்த நேரம் பேசு' என்று போனை சுதாவிடம் கொடுக்கிரான். அவள், 'என் கிட்டே ஏன் கொடுக்கிறீங்க.. நான் பேச மாட்டேன்..' என்கிறாள்
அவளின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்து 'என் மேல் சத்தியம்.. நீ பேச வேண்டும்..' என்று போனை கொடுக்க அவள் தயங்கியவாறே வாங்கி காதுக்கு கொடுத்து ஹலோகிறாள். ஆச்சர்யம்.. 'ம்மா...... இல்ல இல்ல.. ஒண்ணுமில்ல.. நான் நல்லா இருக்கேன்.. இங்கே இவங்க...' என்று பேசி வைத்து விட்டு அவனை துரத்துகிறாள்
மாயாவின் எண்ணம் மஹேனையும் சுதாவையும் பிரிக்க வேண்டும் என்பதல்ல, அவளின் எதிர்பார்ப்பு திருமணத்திற்கு முன்பு அவன் காட்டிய அன்பு, காதல் அது அத்தனையும் திரும்ப அவளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே..!
அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.
மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது
மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'
தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்
இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்
இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.
அவளிடம் பேசுகிறான். மஹேன். ஹனிமூன் முடிந்து வந்த பிறகு அவள் தூக்க மாத்திரை எடுத்து கொண்டது, அவளை காண சென்றது, அப்போது அவள் தன் தோள் மீது அழும் போது அவளின் ஹேர் கிளிப் தன் சட்டையில் வந்தது என்றும் சுதா போர்வையை போர்த்தும் போது அவளின் காதணிகல் கழன்று போர்வையில் ஒட்டிக் கொண்டதையும் உதாரணம் காட்டுகிறான்.
சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார்.
'இன்னும் வரலை..' என்று அவளின் கணவர் திரும்ப வர சுதா அழுது கொண்டே வெளியேறுகிறாள். சுதாவின் கணவர், 'யாரது?, சொந்தமா?' என்று கேட்க சுதா அழுகிறாள், கணவருக்கு புரிந்து விடுகிறது, 'மஹேன்..' என்று ஆச்சர்யத்துடன் கேட்டு திரும்பி பார்க்க, பெட்டி படுக்கையுடன் வெயிட்டிங் ரூமின் வாசலில் மஹேன் நிற்கிறான். சுதா திரும்பி திரும்பி மஹேனையே பார்த்துக் கொண்டே நடக்கிறாள்
அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.
மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது
மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'
தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்
இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்
இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.
அவள் 'மாயா இப்போது எங்கே?' என்று கேட்கிறாள்
மஹேன், 'நீ உண்மை புரியாமல் அவசரப்பட்டு லட்டரை எழுதி வச்சிட்டு போயிட்டா.. அன்னைக்கு தான் எனக்கு மொதொ மொதலா ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டு மாசம்.. ஆஸ்பத்திரில இருந்தேன்.. மாயா தான் கவனிச்சிக்கிட்டா.. (இந்த நேரத்தில் தான் சுதா தொலைபேசி பண்ணியிருப்பாள்) நான் மாயாவிடம் சுதாவை போய் அழைத்து கொண்டு வரப் போகிறேன்.. நீ எங்கே போவாய்..?' என்று கேட்கிறான்.
இந்நிலையில் தான் சுதாவின் டைவோர்ஸ் லட்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிர்ச்சியில் மாயா ஒரு முடிவை எடுக்கிறாள். அவளின் முடிவு தான் அது.
சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார். சுதாவின் அருகில் செல்கிறாள். 'என்னை மன்னித்து விடு.. லேட்டாயிடுச்சு.. என் மனைவி காத்துகிட்டிருப்பாள் என்று தெரியும்.. ' என்று கடலை உடைக்கும் பேச்சு..
'சிகரெட் இருக்கா..?' என்று கேட்கவும் அவருக்கு சிகரெட் எடுத்து கொடுத்து தன் கைப்பையிலிருந்து லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறாள்.
மஹேன் இவை அத்தனையும் பார்த்து உறைந்து போகிறான். சுதாவின் கணவன் அவளின் பெட்டியை எடுத்துக் கொண்டு 'சீக்கிரம் வா..' என்று வெளியே செல்ல சுதா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கும் மஹேனிடம் வருகிறாள், 'அவர் தான் என் கணவர், நான் சென்ற ஆண்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன், போன தடவை தான் உங்களிடம் அனுமதி வாங்காமல் வந்துவிட்டேன், இந்த முறை உங்களது அனுமதியை கொடுங்கள்.. ' என்று காலில் விழுந்து கேட்கிறாள்
'உன் கணவர் மிகவும் நல்லவர், என்னை மனசால முடிந்தால் மன்னித்து விடு.. நீ எல்லா சந்தோஷமும் பெற்று நல்லா இருக்கணும்..' என்று மனசால் வாழ்த்தி விடைபெறுவதற்கு அனுமதி வழங்குகிறார்.
அப்போது மழை சுத்தமாக விட்டிருந்தது. வெயிட்டிங் ரூம் காலியாகிறது.
Labels:
இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்
Thursday, January 21, 2010
குஷ்பு - (நறுமணம் - Fragrance) - பழைய இந்தி பட விமர்சனம்
”குஷ்பு" என்றதும் நடிகை குஷ்பு நடித்த படமோ என்று நினைக்க வேண்டாம். இது ஹேமா மாலினி அற்புதமாக நடித்த படம் அல்லது அவரை குல்சார் அவ்வாறு அற்புதமாக நடிக்க வைத்த படம். இந்த படம் என்னுடைய ஞாபகசக்தி எனக்கு ஒழுங்காக சேவை செய்தால் ஷோலே படம் வந்த காலகட்டத்தில் தான் இந்த படமும் வந்தது. ஆனால் ஷோலேவில் வரும் பசந்திக்கும் குஷ்புவில் வரும் குசுமுக்கும் தீச்சுடருக்கும் (ஷோலே) நறுமணத்துக்கும் (குஷ்பு) உள்ள வித்தியாசம்.
குல்சார் படம் என்றாலே ஒருவரை ஒருவர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்து உணர்வு பூர்வமாக கடந்த காலங்களை அசைபோடுவதை கேமரா சுருளுக்குள் போடுவதோடு நம்மையும் சுருட்டி போட்டு விடுவார்.
அந்த சந்திப்பு பாட்டன் பேத்தி பேரன்களை சந்திக்கிற பரிச்சே மாதிரியோ, கணவன் மனைவியை சந்திக்கிற ஆன்ந்தி மாதிரியோ இருக்கலாம். இந்த படத்தில் அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்னை பொறுத்த அளவில் மிகவும் சுவாரசியமானது.
ஏன் என்றால், சின்ன வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் கணவன் மனைவி என்றே ஊராரறிய கொண்டாடப்பட்டவர்கள் கிட்டதட்ட இந்தியாவில் எல்லோர் குடும்பத்திலும் ஏற்படும் சொத்து தகராறினால் பிரிய நேர்ந்து அந்த ஆணுக்கு திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண் பாத்திரம் மட்டும் வறுமையின் காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கின்ற நிலையில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.
சின்ன வயசிலேயே திருமணம் ஆவது அல்லது நிச்சயிப்பது என்பதை பிற்போக்காக நினைத்தால் எனக்கு எனது திருமணமே அப்படி பிற்போக்கானது தான். அதனால் தானோ என்னவோ எனக்கு இந்த படத்தோடு ஒன்ற முடிகிறது.
குல்சார் தான் அந்த குசும் என்ற பெண்ணின் கதாபாத்திரத்தை வடித்தாரோ அல்லது அல்லது குசும் குசுமாகவே இருக்கிறாரோ என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன ஒரு கோபம்?, என்ன ஒரு சுய மரியாதை?, என்ன ஒரு பிடிவாதம்?, என்ன ஒரு காதல்? என்ன ஒரு ஈகோ? என்ன ஒரு போராட்டம்? - இப்படி குசுமின் எல்லா பரிணாமங்களுமே அவளை தனித்து காட்டுகிறது.
சின்ன வயதிலிருந்து ஒருவனை கணவனாக நினைக்க சொல்லி கற்றுக் கொடுக்கிறார்கள். மனம் அவனையே கணவன் என்று நம்பி விடுகிறது. சின்ன வயதிலேயே அவனது நலவாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறாள். மனசில் அவனையே பச்சை குத்தி இருந்தாலும் கையில் பிருந்தாவன் என்ற அவனது பெயரை பச்சை குத்திக் கொள்கிறாள்.
இடையில் வந்த சொத்து தகராறில் குசுமின் தந்தை கொல்லப்பட அந்த கொலைக்கு பிருந்தாவனின் தந்தையே காரணம் என்று ஊரார் சொல்ல பெரும் குழப்பமாகி இரு குடும்பமும் பிரிய நேர்கிறது. பிருந்தாவன் சிறிய வயதிலேயே அவனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகின்றனர்.
குசும் பெரியவளானதும் அவளை அழைத்து கொண்டு அவளது தாயார் பிருந்தாவனின் தந்தையிடம் மாப்பிள்ளை கேட்டு வரும் போது பிருந்தாவனின் தந்தை அவமானப்படுத்தி வீட்டு வாசலில் கூட ஏற விடாமல் அனுப்பி விடுகிறார்.
இந்த நிலையில் தான் பிருந்தாவனும் குசுமும் சந்திக்கிறார்கள். மருத்துவனான பிருந்தாவனுக்கு சரண் என்ற ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை அவர்களது வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை ’அம்மா’ என்று அழைக்கிறது. பிருந்தாவனின் அப்பா இறந்திருக்கும் நிலையில் அம்மாவுடன் வசித்து வருகிறான்.
குசுமின் அண்ணன் குன்ஞ் என்பவர் பொம்மைகள் செய்து கூடையில் வைத்து ஊர் ஊராக சென்று விற்று கிடைக்கும் கால் காசில் தங்கையும் அவனும் கால் வயிறை நிரப்பி வருகிறார்கள். குசுமின் திருமணம் முடிந்த பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வது என்ற அண்ணனிச குறிகோளுடன் வாழ்ந்து வருகிறான். குசுமின் மன ஓசைகளை கலந்து பேச அவரது ஒரே தோழியான மன்னோ என்ற கிராமத்து துருதுரு பெண்.
இந்த பிண்ணனியில் பிருந்தாவனும் குசுமும் சந்தித்து கொண்டால்..? அது தான் குஷ்பு.
படம் முழுக்க குசும் என்ற பெண்ணின் உணர்வு போராட்ட நறுமணம் வீசிக் கொண்டே இருக்கிறது.
பிருந்தாவன் குசும் வீட்டு வேலை செய்யும் அந்த வீட்டில் உள்ள ஒரு மூதாட்டிக்கு வைத்தியம் பார்க்க வருகிறான். இருவரும் சந்தித்து கொண்டாலும் அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியவில்லை.
அந்த பணக்கார பெண்ணின் மகன் அவனை பிருந்தாவன் என்று கூப்பிடும் போது அது தனது மனம் கொண்டாடும் கணவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது குசுமுக்கு. இந்நிலையில் பிருந்தாவனுக்கு வந்ததோ வேறு சந்தேகம். அதாவது அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது பிளேக் எனும் நோயாக இருக்குமோ என்று. அது பரவக்கூடிய வியாதி என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான்.
அப்போது குசுமுக்கு ஊசி போட சம்மதிக்க வைத்து கையை பிடிக்கும் போது கையில் பச்சை குத்தியது எறிந்திருப்பதை பார்க்கிறான். ‘இது எப்படி ஏற்பட்டிச்சு..?’ என்று வினவும் போது அவள் பதிலேதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.
இப்படி தொடர்கிறது அவர்களது சந்திப்பு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிய வந்த பிறகு குசும் வேலை செய்யும் வீட்டிற்கு சரணை அழைத்து வருகிறான். சரணை குசும் வந்து பார்த்து ‘லட்டு தருகிறேன்’ என்று கூறி சமையல் கட்டுக்கு கூட்டிட்டு போகிறாள்.
அங்கே லட்டை சாப்பிட்ட பிறகு ‘தண்ணீர்’ கேட்கிறான் சரண்.
அதற்கு நீ ‘அம்மா தண்ணி கொடுங்க’ன்னு என்னை கூப்பிட்டால் தான் தண்ணீர் தருவேன் என்று சொல்கிறாள் குசும்.
சரணோ சொல்ல மாட்டேன் என்று தண்ணீரை பிடுங்குகிறான், அவளோ இறுக்கமாக பிடித்து கொண்டு தர மறுக்கிறாள். படத்தில் இருக்கும் சொத்து தகராறுக்கு பிறகு நடக்கும் தண்ணி சண்டை இது. ஆனால் இந்த சண்டை அழகான சண்டை. அப்படியே ஒருவர் மாத்தி ஒருவர் பிடிவாதமாக தண்ணீர் செம்பை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்க சரண் திடீரென்று ‘அம்மா’ என்று நாக்கை வெளியே நீட்டி கோரணி முகம் காட்டிவிட்டு ஓட அவனை பின் தொடர்ந்து குசும் ஓட நினைத்து திரும்ப அங்கே வாசலில் பிருந்தாவன் நிற்கிறான் அத்தனையையும் கவனித்துக் கொண்டு.
இப்படி படத்தில் பாடல்கள் மட்டுமல்ல மேலே சொன்னது போல் நிறைய கவிதைகளும் உண்டு.
பிருந்தாவனுக்கு எந்த சூழ்நிலையில் கல்யாணம் நடந்தது என்பது குல்சாரின் பிளேஷ் பேக் யுக்தியில் அழகாக சொல்லி காட்டப்படுகிறது.
குசுமிடம் அவளது தோழி பிருந்தாவன் பற்றி கேட்கும் போது, ‘நான் அவரை நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா அவர் என்னை நினைக்கலை’ என்று
தோழி விடாமல் கேட்கிறாள், ‘அது எப்படி சொல்றே, அவர் ஒன்னை நெனைக்கலைன்னு..?’ என்று
குசும், “அப்படி அவர் என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கிறவரா இருந்தா அவர் ஏன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்’ என்று
தோழி மன்னோவோ மன்றாடுகிறாள், ‘அவர் வந்து கூப்பிட்டால் அவர் கூட போய் வாழுவியா என்று
குசும் சொல்கிறாள், ’நான் ஒன்றும் கையாலாகதவள் இல்லை, தான தர்மம் மாதிரில்லாம் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று
ஒரு முறை குசுமின் வீட்டிற்கு பிருந்தாவன், அவனது தாயார், சரண் மூவரும் வரும் போது வீட்டிற்கு வந்தவர்களை கவனிக்க இருக்கின்ற தண்ணீரை குடிக்க குடுக்கும் போது ‘நான் மதியானம் சாப்டுக்கிறேன், இப்ப ஒண்ணும் வேணாம்’ என்று பிருந்தாவனின் தாயார் என்னமோ அவர் வீடு போல் கட்டிலில் படுத்து விட குசுமுக்கு தயக்கம் ஏற்படுகிறது.
தயக்கத்திற்கு காரணம், வீட்டில் சமைப்பதற்கு என்று ஏதும் அப்போது இல்லை என்பதே. வாசலில் உள்ள அறையில் நின்று கொண்டு சரணை அழைக்கிறாள். சரண் வருகிறான். சரணிடம் ‘ஒன் அப்பாவ போய் கூப்பிடு’ என்கிறாள்
சரண் உள்ளே போய், ‘பாபா, உங்கள அவங்க கூப்பிடுறாங்க..” என்கிறான்
பிருந்தாவன், ‘அவங்க..? அவங்கன்னா யாரு..?’ என்கிறான்
சரண் பிருந்தாவனின் தாயார் பக்கம் திரும்பி, “அவங்க தான், அம்மான்னு கூப்பிட்டா தான் குடிக்க தண்ணி தருவேண்டாங்கல்ல அவங்க தான்..’ என்கிறான் தாயாரும் மகனாரும் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன் என்று சொல்வதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை.
உடனே பிருந்தாவன் குசுமிடம் வருகிறான், குசும் பேசுகிறான், அவளால் நேரடியாக சொல்ல விஷயத்தை வீட்டில் எதுவும் இல்லை என்பதை சொல்ல முடியவில்லை.
‘என்னால் மார்க்கெட்டுக்கு போக முடியாது, அண்ணன் நைட்டுக்கு தான் வருவார்’ என்கிறாள் குசும்
பிருந்தாவன், ‘என்ன போய் வாங்கிட்டு வரணும்?’ என்கிறான்
குசும் என்ன தான் செய்வாள்? பாவம் அவள்.
குல்சார் சாபின் படங்களில் பெரும்பாலும் தாலாட்டும் அர்த்தமுள்ள கவித்துவமுள்ள பாடல்கள் நிச்சயம்.
ஓ மாஜி ரே பாடல் செவிகளுக்கு கிஷோர் குமார் தரும் விருந்து
சரி, குசும் பிருந்தாவனிடம் என்ன தான் பதில் சொன்னாள்?
பிருந்தாவனுக்கு எந்த சூழலில் திருமணம் நடந்தது?
இறுதியில் பிருந்தாவனும் குசுமும் இணைந்தார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாட்டு புத்தகத்தில் எழுதியிருக்கிற மாதிரி சின்ன திரையில் காண்க..!
நடிப்பு
பிருந்தாவன் - ஜிதேந்திரா
குசும் - ஹேமா மாலினி
பிருந்தாவனின் தாயார் - துர்கா கோடே
சரண் - மாஸ்டர் ராஜு
குன்ஜ் - அஸ்ரானி
மன்னோ - ஃபரிதா ஜலால்
இந்த கதாபாத்திரங்கள் அல்லாமல் லக்கி என்ற ஒரு கதாபாத்திரமும் உள்ளது. அதை ஏற்று நடித்தது யாரென்றால் ‘ஷர்மிளா தாகூர்’.
-----------------------------------------------------------------------------------------------------------
அடுத்ததா ‘இஜாஜத்’ என்ற குல்சார் சாபின் படத்தை பற்றி படிக்க அவசியம் வாங்க..!

Friday, December 18, 2009
மாச்சிஸ் (- தீக்குச்சி) இந்தி பட விமர்சனம்
சீக்கியர்களை முட்டாள்களாக சித்தரிக்கும் குறுந்தகவல்களையும் இணைய அஞ்சல்களையும் படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தவர்களுக்கு அவர்களின் கடந்த கால வேதனைகளை பற்றியும் 80களில் அவர்கள் அனுபவித்த துன்பங்களை பற்றியும் படித்து மனம் குமுறியதுண்டா என்று தெரியவில்லை.
இன்றைக்கு ஒரு சமூகத்தில் புள்ளையாண்டான் படித்து விட்டு அமெரிக்காவில் நன்ன உத்தியோகத்துல இருந்தா தான் பெருமை. வேறொரு சமூகத்தில் வாப்பா பயணத்துல இருக்காஹா என்றால் தான் பெருமை.
ஆனால் ராணுவத்தில் இன்ன ரேங்கில் இருக்கிறான் என்று பெருமைபடும் ஒரு சமூகம் இருக்கிறதென்றால் அது சீக்கிய சமூகமாகத் தான் இருக்கும்.
அந்த சமூகத்தின் புனித தலமான பஞ்சாப் கோவிலில் புளு ஸ்டார் ஆபரேஷன் என்ற பெயரில் ராணுவம் (எந்த ராணுவத்தில் பணியாற்றுவதை பெருமை என்று கருதினார்களோ அதே ராணுவம் தான்) உள்ளே புகுந்ததை தொடர்ந்து இந்தியாவில் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதன் காரணத்தால் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தமும் நினைத்து பார்க்கையில் அல்லது படித்து பார்க்கையில் ரத்தம் உறைய வைப்பவையாகவே இருக்கிறது.
தீவிரவாதிகளை பந்தாடும் விஜயகாந்துகளும் அர்ஜுன்களும் ஸ்டார்களாக வேண்டுமென்றால் மின்னியிருக்கலாம், ஆனால் சமுதாய அக்கறை உள்ள கதாபாத்திரங்களாக நம்முடன் வாழவிலை என்பது தான் உண்மை.
இளைஞர்கள் என்பவர்கள் தீக்குச்சியை போன்றவர்கள், அவர்களுக்கு ஏற்படும் சின்ன உரசலிலும் தீ பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அப்படி தீ பற்றிக் கொண்ட தீக்குச்சிகளின் கதை தான் மாச்சிஸ். அதுமட்டுமல்ல அப்படி உரசுவதற்கு காரணமாக காவல் துறையினரின் வழக்கமான விருந்தோம்பல்களும் அரசியல்வாதியின் அரசியல் இயல்புகளுமே காரணம் என்பதையும் இந்த படம் சுட்டிக் காட்ட தவறவில்லை.
ஒரு அரசியல்வாதியை சுட்டதற்காக 'ஜிம்மி' என்ற தீவிரவாதியை தேடி அலையும் இன்ஸ்பெக்டர் 'வொஹ்ரா' 'ஜஸ்வந்த் சிங்'கின் வீட்டில் ஜிம்மி ஆயுதங்களுடன் மறைந்து இருப்பதாக கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு போலிஸ் படைகளுடன் விரைகிறார்.
ஜஸ்வந்த் சிங் வீட்டில் அவரின் தங்கை வீரன் என்கிற வீரேந்திரா (தபு), மற்றும் அவரின் தாயார் இவர்களுடன் தான் குடி இருக்கிறார். ஜஸ்வந்த் சிங்கின் நண்பன் பாலி என்கிற கிரிபால் சிங்குக்கும் வீரனுக்கும் திருமணம் செய்வது பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது தான் போலீஸ் படை உள்ளே நுழைகிறது.
ஜஸ்வந்த் சிங்கிடம், 'மறைத்து வைத்திருக்கும் தீவிரவாதியையும் அயுதங்களையும் மரியாதையாக ஒப்படைத்து விடும் படி' கேட்கிறது.
'அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாது' என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் போகவே 'அந்த தீவிரவாதி பேரு என்னா?' என்று கேட்கிறார் ஜஸ்வந்த் சிங்
'ஜிம்மி' என்ற பெயரை சொன்னவுடன் சிரித்துக் கொண்டே 'எனக்கு ஜிம்மியை தெரியும்' என்று வீட்டுக்கு பின்புறம் அவ்வளவு போலீஸையும் கூட்டிக் கொண்டு போய் 'ஜிம்மி..' என்று கூப்பிட ஜிம்மி வருகிறது. ஜிம்மி அவர் வீட்டு நாய்.
ஜஸ்வந்த் சிங் அந்த நாயை காட்டி, 'இது தான் எனக்கு தெரிந்த ஜிம்மி, இதுக்கு துப்பாக்கி எல்லாம் பிடிக்க தெரியாதே..' என்றதும் வெந்து போகிறார் வெஹ்ரா.
விசாரணைக்கு வரவேண்டும் என்று ஜஸ்வந்த் சிங்கை போலீஸ் கையோடு அழைத்து கொண்டு போகிறது. 'உடனே விட்டுவிடுவோம்' என்று அழைத்து செல்கிறது போலீஸ். வீரனின் அழுகை தாங்க முடியாமல் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் ஸ்டேஷனாக ஏறி இறங்கி பார்த்தும் ஒரு தகவலும் கிடைக்க வில்லை. எங்கு அழைத்துக் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
போலீஸ்காரர்கள் இது மாதிரி தான் யார் எவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள், சரியான ஆதாரம் கிடைக்க வில்லையென்றால் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள், எவன் கிடைக்கிறானோ அவனை அழைத்து கொண்டு போய் மூன்றாம் தர டிரீட்மெண்ட் கொடுத்து 'இது தாண்டா போலீஸ்' என்று படம் காட்டுவார்கள்.
15 நாட்களுக்கு பிறகு படுகாயமடைந்த நிலையில் வந்து சேருகிறான் ஜஸ்வந்த் சிங். கொதித்து போகிறான் நண்பன் பாலி. தன்னுடைய உறவினன் ஒருவன் தீவிரவாதியாக இருக்கிறான் என்பதால் அவனை கண்டு அந்த போலீஸை தண்டிக்க உதவி கிடைக்கும் என்று அவனை காண புறப்படுகிறான்.
பஞ்சாபில் சிங் அதிகம் பயணிக்கும் பஸ்ஸில் சிங் அல்லாத ஒருவர் கேமராவுடன் ஏறுகிறார். ஒரு பேருந்து நிறுத்தம் வருகிறது. பாலியுடன் அந்த கேமரா மேனும் இறங்கி வருகிறான், ஆனால் அவனிடத்தில் கேமரா இல்லை.
பாலி சொல்கிறான், 'பாய் சாப், உங்க கேமரா.." என்று -
அந்த கேமரா பார்ட்டி விழிக்கிறான், திடீரென்று கார் வருகிறது, தட்டு தடுமாறி காரின் உள்ளே புகுந்து பறந்து மறைகிறான்.
பஸ் வெடித்து சிதறுகிறது.
இந்நிலையில் தான் குண்டு தயாரிக்கும் சனாதானையும் தீவிரவாதிகளின் தலைவன் சந்திக்கிறான், (நான் இங்கே தீவிரவாதிகள் என்று எழுதுகிறேன், ஆனால் தீவிரவாதிக்கான சரியான அர்த்தம் (recognised definition) என்ன என்று எனக்கு தெரியவில்லை). இவனுடைய உறவினன் இறந்து விட்டது தெரிய வருகிறது.
ஆனால் சனாதனிடம் துணையாக சேர்ந்து கொள்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் வொஹ்ரா என்ற இன்ஸ்பெக்டருடன் வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரை (இவர் தான் நண்பனை காட்டடி அடித்திருப்பார்) மார்க்கெட்டில் வைத்து சுட்டு விட போலீஸ் அவனை தேடி மீண்டும் ஜஸ்வந்த் சிங் வீட்டிற்கு செல்கிறது.
அங்கே என்ன நடக்கிறது, வீரன் என்ன ஆனாள், பாலியும் வீரனும் சந்தித்தார்களா?, பாலியால் வொஹ்ராவை தண்டிக்க முடிந்ததா? என்ற பல கேள்விகளுக்கு மாச்சிஸ் விடை சொல்கிறது.
குல்ஜார் சாப் படம் என்றால் பிளேஷ் பேக் இல்லாமலா? படம் ஆரம்பித்த சில காட்சிகளுக்கு பிறகு தீவிரவாதிகளில் ஒருவனாக பாலி இருக்கிறான். அப்போது அவர்கள் பாடும் 'சோட் ஆயே ஹம்..' 'சப்பா சப்பா..' பாடல்களும் அருமை. பானி பானி பாடல் தென்றல். இசை விஷால் பரத்வாஜ். (அப்பாஸ் மஸ்தான் தயாரிப்பில் வந்த கமினே என்ற இந்தி படத்தின் இயக்குனர்)
ஒரு கட்டத்தில் எந்த ஜிம்மியை தேடி போலீஸ் ஜஸ்வந்த் வீட்டிற்கு வந்ததோ அந்த ஜிம்மியை பாலி சந்திக்கும் போது ஜிம்மி தான் எப்படி இந்த போராளியானேன் என்று தெரிவிப்பார்.
தனது தந்தையை அவரது டர்பனை கழட்டி அந்த டர்பனாலேயே கைகளை பின்னால் கட்டி டயரில் நெருப்பை வைத்து கழுத்தில் மாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லி அழுவார்.
இப்படி ஒவ்வொருவர் தீவிரவாதியாகவோ அல்லது போராளியாகவோ மாற ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றது. அதைப் பற்றி யாராவது அக்கறையோடு பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை.
இந்த படம் ரிலீசான போது கஷ்மீரிலும், பஞ்சாபிலும் தடை செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தின் வெற்றியை தடை செய்ய முடியவில்லை.
தீவிரவாதிகள் படம் என்றதும் ஒரு மணிரத்னம் படமாகவோ அல்லது விஜய்காந்த் படமாகவோ நினனத்து கொண்டு பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
படத்தின் ஆரம்பத்தில் வரும் 'சோட் ஆயே ஹம்..' பாடல்
'சப்பா சப்பா' பாடல்
சில நியாயங்கள் காயங்களால் விளைகிறது. அது நியாயமா இல்லையா என்று வாதிப்பதை விட காயங்களுக்கு மருந்து அல்லது காயங்களுக்கு காரணமானவைகளை அடியோடு ஒழிப்பது (apply to the source) இது ஒன்றே சிறந்த வைத்தியமாக இருக்க முடியும்.

Wednesday, December 02, 2009
பரிச்சே - பழைய இந்தி பட விமர்சனம்
பரிச்சே - அடையாளம் அல்லது அறிமுகப்படுத்துதல் என்று அர்த்தம் - ராய் சாஹேப் என்பவரின் கதை. ராய் சாஹேப் கண்டிப்பும் அன்பும் சம அளவில் கலந்த உருவம்.
அவருக்கு ஒரே மகன் நீலேஷ். நீலேஷ் இசையில் அதீத ஆர்வம் உடையவர். நீலேஷுக்கு அவர் வீட்டில் வேலை பார்க்கும் நாராயணன் மூலமாக பெண் பார்க்க போக இருப்பது தெரிய வருகிறது.
பெண் பார்க்க புறப்பட இருக்கும் சரியான நேரத்தில் ராய் சாஹேப் நீலேஷின் அறைக்கு வருகிறார், நீலேஷ் இன்னமும் தயாராகாமல் இருப்பதை கண்டு, 'நாராயணன் உன்னிடம் சொல்லவில்லையா..?' என்று வினவுகிறார்.
'இல்ல பாபுஜி.. நான் என்னுடைய குருநாதரோடு இன்றைக்கு கச்சேரி பண்ண இருக்கிறேன்.. இப்ப கிளம்பி விடுவேன்.." என்கிறார்
ராய் சாஹேபுக்கு கடும் கோபம் வருகிறது, 'நான் அங்கே முதலில் செல்கிறேன், நீ சரியாக வந்து விட வேண்டும்..' என்று கூறி விட்டு கோபமாக சென்று விடுகிறார்
அப்பாவை போலவே பிடிவாதமுடைய நீலேஷ் வீட்டை விட்டு வெளியேறி கச்சேரிக்கு செல்வதோடு தன்னுடைய குருநாதரின் மகளையே மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
ராய் சாஹேபின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மருமகளுக்கு ஆசி வழங்கி விட்டு நீலேஷிடம் 'உள்ளே அழைத்து கொண்டு போ" என்கிறார்
ராய் சாஹேபை சந்திக்க நீலேஷ் வருகிறார், 'பாபுஜி.. கூப்பிட்டீங்களா..?' என்று கேட்கிறார்
'சாப்டியா." - அப்பா
'ம்' - மகன்
'பஹூ..' என்று மருமகள் சாப்பிட்டாச்சா என்று கேட்கிறார்
'ம்..' என்று சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார் மகன்
'அவங்க அவங்க வாழ்க்கைய அமைச்சுக்க அவங்க அவங்களுக்கு உரிமை இருக்கு..' என்பதோடு இரும்பு பெட்டியின் சாவியை கொடுத்து, 'எனக்கு பெத்த கடமை இருக்கு.. இதுல எவ்வளவு பணம் வேணுமோ எடுத்துக்க.. நான் எப்படி என் இஷ்டத்துக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுகிட்டேனோ.. அதே மாதிரி நீயும் வெளியே போய்.. உனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கைய அமைச்சுக்க..' என்கிறார்
தன்மானமும் பிடிவாதமும் நீலேஷுக்கு பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விடவே தன் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்
2 பெண் பிள்ளைகள் 3 ஆண் பிள்ளைகள் என்று வரிசையாக பெற்று மனைவி இழந்த நிலையில் கடும் வறுமையில் வாடுகிறார். வறுமையோடு அதன் கூட பிறந்த சகோதரரான வியாதியும் ஒட்டிக் கொள்ளவே தனது முடிவு நெருங்குவதை உணர்கிறார்.
தனது அப்பாவுக்கு கடிதம் எழுதுகிறார், 'பாபுஜி, நீங்கள் சொன்ன மாதிரியே என் வாழ்க்கையை நான் அமைத்து கொண்டேன், இப்ப கூட நான் எனக்காக இந்த கடிதத்தை எழுத வில்லை, எனக்கு முடிவு நெருங்கி விட்டதாக உணர்கிறேன், உங்களை விட்டால் என் குழந்தைகளுக்கு ஆதரவில்லை..' என்று
கடிதம் வந்த போது ஊரில் இல்லாமல் கடிதம் பார்த்ததும் உடனே கிளம்பி சென்று 5 பேர பிள்ளைகளையும் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டிலேயே படிப்பு சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
ஆனால், பிடிவாதத்திலே ராய் சாஹேப் கூட இந்த 5 குழந்தைகளுக்கு பேரன் தான், அவ்வளவு கோபம் ராய் சாஹேப் மீது, அதாவது ராய் சாஹேப் தான் தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணம் என்று நம்பும் குழந்தைகள் ராய் சாஹேபுக்கும் அவரின் தங்கை சாதி தேவிக்கும் அடங்காமல் தொல்லைகள் கொடுத்து கொண்டும் கொடுக்கும் தண்டனைகளை 'சாப்பாடு கிடையாது', 'இங்கேயே ராத்திரி முழுக்க தூங்காமல் நிக்க வேண்டும்' என்று அனுபவித்து கொண்டும் வருகிறார்கள்.
இந்த 5 பிள்ளைகளில் மூத்தவளான ரமா தான் வழிகாட்டி. அவளுக்கு கட்டுப்பட்டு தான் அத்தனை பிள்ளைகளும் ராய் சாஹேபின் கடும் டிசிபிளினுக்கு வளையாமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரவி என்பவர் வேலையில்லாத பட்டதாரி, ஒரு வேலைக்கு இண்டர்வியு செல்வார், அங்கே இவருக்கு ஒரு வயதான நபரை கூப்பிட்டு ரவிக்கு என்னென்ன வேலை என்று சொல்லி கொடுக்கும்படி முதலாளி கூறுவார்.
அந்த வயதான நபர் ரவியை அழைத்து சென்று, வேலையை பத்தி சொல்லி கொடுத்து விட்டு, 'முதலாளி ரொம்ப நல்லவர், என் மகள் கல்யாணத்துக்கு நான் கேக்காமலே பணமெல்லாம் கொடுத்தார், இப்ப அவர் என்ன ஒண்ணும் சொல்லல.. நான் தான் போறேன்னு சொல்றேன்.. எனக்கு வயசாயிடுச்சு.. கண்ணு சரியா தெரியலை.." என்று கண்கலங்க அந்த வேலையை ஒத்துக் கொள்ள ஏனோ மனமில்லாமல் வந்து விடுகிறார்.
இப்படி வேலையில்லாமல் இருக்கும் ரவி தன்னுடைய மாமா வீட்டிற்கு வருகிறார். அவர் ராய் சாஹேபிடம் அந்த 5 பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்க அழைத்து செல்கிறார்.
அந்த குழந்தைகளுக்கு பாடமும் புத்தியும் சொல்லி கொடுக்க வந்தவர்கள் குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தால் 'பேய் போல் வருவது..', 'ஆமை முதுகில் மெழுகுவர்த்தி கொளுத்து இருட்டில் வாத்தியார் ரூமுக்கு போக விடுவது' இப்படியாக செய்ய போக துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட ஆரம்பிப்பார்கள்.
அந்த வேலைக்கு ரவி வருகிறார், ரவியிடமும் குழந்தைகள் குறும்பு தனங்கள் செய்ய ரவிக்கு நெற்றியில் அடிபட்டு விடுகிறது, இதை சாதி தேவி கண்டுகொண்டு, 'இது குழந்தைகளின் வேலை தான்..' என்று கூறும் போது, 'இது குதிரை வண்டியில் அடிபட்டது..' என்று பொய் சொல்லி குழந்தைகளை அன்றைய தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார்.
ராய் சாஹேபுக்கு ரவி மீது நம்பிக்கை வருகிறது, 'குழந்தைகள் செய்திருந்தாலும் அதை குழந்தைகளை காட்டி கொடுக்காமல் இருந்தீர்களே..' என்று ரவியிடமே சொல்கிறார்.
இந்த சூழலில் குழந்தைகளில் குறும்புதனமும் நின்றபாடிலை, ராய் சாஹேபும் சாதி தேவியும் வெளியூர் கிளம்புகிறார்கள்.
ரவி எப்படி குழந்தைகளை திருத்தி அவர்களது தாத்தாவுக்கு பேரப் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளுக்கு தாத்தாவையும் அறிமுகம் செய்து வைக்கிறார் (பரிச்சே) என்பதை உணர்வுப் பூர்வமாக சொல்லி இருப்பார் குல்ஜார் சாப் இதற்கிடையே ரமா, ரவியின் கவித்துவமான காதல் வேறு.
குல்ஜார் சாபின் படங்கள் என்றாலே பிளேஷ் பேக்கில் தான் கதை சொல்வார். இந்த படமும் விதிவிலக்கல்ல.
ரவியாக ஜிதேந்திரா, ரமாவாக ஜெயபாதுரி, ராய் சாஹேபாக பிரான், நீலேஷாக சஞ்சீவ் குமார், ரவியின் மாமாவாக ஏ.கே.ஹங்கால் மாமியாக லீலா மிஷ்ரா, அப்புறம் அந்த மற்ற 4 குழந்தைகள் யாவரும் நம் பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள்.
ஆர்.டி.பர்மன், குல்ஜார் சாப், கிஷோர் குமார் முக்கோணங்கள் இணைந்தால் காற்று, எரிபொருள், வெப்பம் இணைந்தது போல் இசைத்தீ பரவிக் கொள்ளும்.
நீலேஷ் தன் மனைவியை இழந்து வறுமையில் வாடும் போது தனது மகள் ரமாவுடன் சேர்ந்து 'பீட்டி நா பிதாயி ரெய்னா..' என்ற பாடலை இங்கே பாருங்கள்
ரவி வேலை கிடைக்காமல் முஸாஃபிர் போல் அதாவது நாடோடி போல் வேலையில்லாமல் அலைந்து திரிந்து தனது மாமாவின் கடிதம் பார்த்து மாமாவின் ஊருக்கு வரும் போது வரும் , 'முஸாஃபிர் ஹுன் யாரோ..' என்ற இசை அற்புதங்களை இங்கே காணலாம்
பறவை கிளையில் உட்கார்ந்து ஆடி விட்டு பறந்த பிறகும் ஆடும் கிளையை போலே இந்த படத்தை எப்போதோ பார்த்த பிறகும் இன்னமும் இந்த படத்தை பற்றிய பாத்திரங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது

Sunday, October 18, 2009
ஆன்ந்தி - (புயல்) - பழைய இந்தி பட விமர்சனம்
அரசியலுக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. இது மத்த எல்லா மாநிலத்தை விட தமிழ்நாட்டிற்கு ரொம்பவே பொருந்தும். பாபா என்ற சுமாராக கூட இல்லாத படத்தை திரையிட விடாது பொட்டியுடன் பொட்டியை கட்டியது தமிழக அரசியலின் அல்லது சினிமாவின் வரலாற்று சிறப்புகளில் ஒன்று.
இதே போல் குல்சார் சாப் அவர்கள் இயக்கிய ஆன்ந்தி என்ற படத்தை அன்றைக்கு (1975 வாக்கில்) வெளியிட விடாமல் தடுத்து நிறுத்தியதும் அரசியல் செல்வாக்கு தான், அது மட்டுமல்ல அந்த படத்தில் பாடிய கிஷோர் குமாரின் பாடல்களை இரண்டு வாரத்துக்கு ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாது தடை செய்திருந்தார்கள் என்றும் படித்ததுண்டு.
அவ்வாறு ஆன்ந்தி - புயல் என்று தமிழில் அர்த்தம் - படத்தை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்ததற்கு காரணம் என்ன என்றால், படத்தின் கதை இந்திரா காந்தி அவர்களின் கதையை ஒத்து இருந்தது தான். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு படம் வெளியாக முடிந்தது.
குல்சார் சாப் கதை சொல்லும் அழகே தனி. பிளேஷ் பேக் காட்சிகள் இல்லாமல் அவரால் படமே எடுக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் படங்களில் பிளேஷ் பேக் காட்சிகள் நிறைந்து இருக்கும். ஒரே தடவையில் பிளேஷ் பேக் காட்சிகள் வந்து முடிந்து விடாது, இடையிடையே பிளேஷ் பேக் காட்சிகள் வந்தவண்ணம் இருக்கும். குல்சார் சாபின் படங்களான பரீச்சே, கோஷிஷ், இஜாஜத், அங்கூர், நம்கீன் இன்னும் அத்தனை கவிதை(யான படங்க)ளும் இதற்கு சாட்சி, அதற்கு, இந்த ஆன்ந்தியும் விதிவிலக்கல்ல..
ஆர்த்தி தேவி (சுசித்ரா சென் - இவர் 12B படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்த மூன்மூன் சென் என்ற நடிகையின் தாயார் மற்றும் தாஜ்மஹால் படநாயகி ரியா சென், ரய்மா சென்ஆகிய நடிகைகளின் பாட்டி)என்ற சக்தி வாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் சந்திரசேன் (ஓம்சிவ்பூரி) மேடையில் காட்டமாக கேள்விகள் கேட்டு இடைதேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கும் அரசியல் நாடகம் நடத்துவதில் இருந்து படம் தொடங்குகிறது.
ஆர்த்தி தேவியை இடை தேர்தல் நடக்கும் ஊருக்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர் வந்தால் தங்குவதற்கு இருக்கும் கட்சிக்கு சொந்தமான அலுவலகம் எரிந்து சாம்பலாகிய நிலையில் அவர் தங்குவதற்கு ஹோட்டலில் வசதி செய்ய திட்டமிடுகிறார் அவரின் பிரச்சார குழு தலைவர் (ஓம்பிரகாஷ்).
ஒம்பிரகாஷ் ஹோட்டல் மேனேஜர் ஜே.கே.யை (சஞ்சீவ் குமார்) சந்தித்து தங்களுக்கு தெற்கு கிளையில் உள்ள எல்லா அறைகளையும் வேண்டும் என்று புக் செய்கிறார்.
ஜே.கேவுக்கு ஆச்சரியத்துடன், "இவ்வளவு ரூம் தேவைப்படுகிறதே அப்படி யார் வருகிறார்கள்?" என்று கேட்க, "ஆர்த்தி தேவி வருகிறார்", என்றதும் சற்று தடுமாறுகிறார்.
ஆர்த்தி தேவி ஹோட்டலில் வந்து இறங்கியவுடன் அங்கு இருக்கும் ஊதுவர்த்தி, மண் பானையில் தண்ணீர் போன்று அவருக்கு பிடித்தமான அத்தனையும் கண்டு ஆச்சர்யம் கொள்கிறார். அவருக்கு பிடித்த பூவையும் ஹோட்டல் சார்பாக பரிசாக வழங்கப்படுகிறது. எல்லாம் ஜே.கே.யின் ஏற்பாட்டின் படி தான் நடந்திருக்கின்றது.
ஆர்த்தி தேவி மகிழ்ந்து தனக்கு பிடித்தவைகளை யாரோ தெரிந்து வைத்துக் கொண்டு தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்கிறார்.
ஜே.கே விடம் சமையல்காரராக இருக்கு பிந்தா காக்கா (A.K.ஹங்கல்) என்பவரிடம் "நீங்கள் (ஆர்த்தி தேவியை) பார்த்தீங்களா?" என்று ஜே.கே. கேட்கிறார்
பிந்தா காக்கா, "உங்கள்ட்ட கேக்காம எப்படி போய் பாக்குறது?" என்கிறார்
"இதுல எண்ட்ட கேக்க என்ன இருக்கு? என்னய விட அதிக உரிமை உங்களுக்கு தான் இருக்கு, நீங்க ஆர்த்திய சின்ன வயசிலிருந்து தூக்கி வளர்த்திருக்கிறீங்க.. அப்புறமா பிஸியா இல்லாத நேரமா பார்த்து போய் பாருங்க" என்கிறார்
தொடர்ந்து பிந்தா காக்கா போய் பார்க்க ஆர்த்தி தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார், "நீங்கள் எப்படி இங்க..?" என்று ஆச்சர்யம் கொள்கிறார்
"நான் சாபோடு தான் இருக்கேன்.. இப்ப சாப் இந்த ஹோட்டல்ல தான் வேல பார்க்குறாங்க.." என்கிறார்
ஊதுபத்திக்கும், மண்பானைக்கும், பூக்களுக்கும் அர்த்தம் புரிந்து விடுகிறது ஆர்த்தி தேவிக்கு, "காக்கா, நான் இங்கே கொஞ்ச நாளைக்கு இருப்பேன், நீங்க அடிக்கடி வந்து பாருங்க.." என்று விடைபெறுகிறார்.
"இஸ் மோடு (சாலையில் உள்ள வளைவுகள்) ஸே ஜாதே ஹேய்ன்" - என்ற நினைவுகள் பாடலாக பின்னோக்கி ஜே.கேயின் பார்வைகளில் நகர்கின்றது.
அதாவது குழப்பமான பல வளைவுகளை உடைய சாலையில் நின்று ஆர்த்தி தேவி ஜே.கேயை நினைத்து பாடுகிறார்,
எந்த வளைவுகள் வழியாக நான் போவது?
கற்களாளான அரண்மனை அல்லது மாளிகை(கோடீஸ்வரர்கள் வசிக்குமிடம், கண்ணாடி வீடுகள் (நடுத்தர வர்க்கம் வசிக்கும் வீடுகள் என கொள்ளலாம்), பறவையின் கூடு போன்ற சிறிய வீடு (ஏழைகள் வசிப்பது)
இப்படி பல இடங்களுக்கு வழிகள் இருக்கிறது? - எந்த வழியில் சென்றாள் தன் காதலனிடம் (காதலியிடம்) தன்னை கொண்டு போய் சேர்க்கும்? என்று -
பல பேருக்கு இந்த பாட்டு பிடிக்காது என்று தான் நான் நினைக்கிறேன் ஏன்னாக்கா இது மிகவும் அருமையான கருத்தாழமிக்க பாடல் - எங்கே இப்போ உள்ள கவிஞர்களை இதே போல் எழுத சொல்லுங்களேன் பார்ப்போம்? - அவங்க "போடா போடி" என்று எழுதுவார்கள்.
பாடல் நினைவுகள் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முடிவுறுகிறது. ஜே.கே போய் கதவை திறக்கிறார். வாசலில் ஆர்த்தி தேவி. இருவரும் ஒரு கனம் திகைத்து போய் வாயடைத்து போய் நிற்கிறார்கள்.
இருவரும் கணவனும் மனைவி என்றும் தற்போது பிரிந்து இருக்கிறார்கள் என்றும் யூகிக்க முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காட்சிகள் அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் கவிதைகளாகவும் பதிகின்றன.
படத்தில் ஒட்டு மொத்த கதை..
ஆர்த்தி தேவி மிகவும் பிரபலமானவர்.தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகிறார். ஹோட்டலில் தங்குகிறார். ஹோட்டல் மேனேஜர் தான் தனது கணவர் என்று தெரிய வருகிறது. குழந்தைக்கு பிறகு தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் ஈடுபாடுகள் இருந்ததால் குடும்பத்தையும் குழந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் போகிறது, இதன் காரணமாக கணவனுக்கு மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். 9 வருடம் கழித்து மறுபடியும் இந்த ஹோட்டல்ல் சந்தித்து இருக்கிறார்கள்.
ஆர்த்தி தேவி பிரபலமாக இருப்பதால் தனது தனிப்பட்ட வாழ்க்கை அரசியலுக்கு பிரச்சினையாக வரக் கூடாது என்று கருதினாலும் தனது கணவரை அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து சந்திப்பது, ஒன்றாக உணவருந்துவது, வெளியே போய் வருவது என்று இருக்கிறார்.
அப்படி வெளியே முதன் முறையாக ரொம்ப நாளைக்கப்புறம் வரும் போது ஒரு பாடல் வருகிறது.
"தேரே பினா ஜிந்தகி சே கோய் சிக்வா தோ நஹி சிக்வா நஹி..
தேரே பினா ஜிந்தகி சே லேகின் ஜிந்தகி தோ நஹி ஜிந்தகி நஹி.."
- என்று வரும் அந்த பாடல்..
அந்த பாடல் காட்சியில் இருவரும் பேசிக் கொள்வது போல் வசனமும் இடம் பெறுகிறது, ஏதோ எனக்கு தெரிந்த மொழியில்.. எனக்கு தெரிந்த வரையில்..
பெண்: ரொம்ப நாளைக்கப்புறம்... வெளியே வர்ர மாதிரி ஒரு உணர்வு...
ஆண்: என்ன அது..?
பெண்: ஒரு யுகம் தாண்டி வந்த மாதிரி இருக்கு
ஆண்: ம்.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு.. (ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை காட்டி) இந்த கட்டடம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அந்த காலத்துக்கு..
பெண்: ம்.. இன்னொரு ஜென்மம் கெடைச்சு வந்த மாதிரி..இல்ல?
ஆண்: நாம் ஒண்ணு செய்வோம்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும் தெனமும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரி இருக்கும்.. (ஆர்த்தி தேவி குளிரில் நடுங்குவதை பார்த்து) ஒன் ஷால் எங்கே?
பெண்: நான் மறந்துட்டேன்
ஆண்: நீ இன்னும் மாறவே இல்லை.. இத வச்சுக்க.. (மாட்டி விடுகிறார்)
பாடல் ஆரம்பமாகிறது..
பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை
சரணம் 1:
பெண்:
நான் போய் சேர வேண்டிய இடம் உன் பாதங்களை பின்பற்றியதாக இல்லாமல் வேறு எங்கேயோ தூரமாக விலகி சென்று விட்டது
நீ என்னுடன் இருந்திருந்தால் உன்னுடன் சேர்ந்து நான் போக வேண்டிய இடங்கள் குறைவில்லாமல் இருந்திருக்கும்
வசனம்:
ஆண்: ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..? அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள்.. நீ பகல்ல பார்த்தா தான் தெளிவா தெரியும்
(எதிரே கையை நீட்டி) இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..
(வேறொரு பக்கம் கையை காட்டி)பகல்ல இங்கே.. (என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)
பெண்: ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க.. நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..
ஆண்: இந்த நிலவை பாரு.. இது ராத்திரியில மட்டும் தான் வரும்.. பகல்ல வெளியே வர்ரதில்ல..
பெண்: இது தான் எப்போதும் வருதே
ஆண்: ஆமா வரும்.. ஆனா எடைல.. அமாவாசை இருக்கு.. உண்மையில.. எப்போதும் அமாவாசை வர்ர நாள்லேந்து தொடர்ந்து 15 நாளைக்கு இருட்டாவே இருக்கும்.. ஆனா இந்த தடவை அமாவாசை வந்ததிலிருந்து ரொம்ப வருஷமா வரவே இல்ல..
பெண்: (தன்னை தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டு) 9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..
சரணம் 2:
பெண்:
உன்னுடைய தோளில் சாய்ந்து கொண்டு அழுது தீர்க்க வேண்டும் போலிருக்கிறது..
உன்னுடைய கண்களிலும் அழுததற்கான தடங்கள் தெரிகிறது..
சரணம் 3:
ஆண்:
நீ மட்டும் ஒரு வார்த்தை சொன்னால் இந்த நிலவு மறைந்து போகாமல் தங்கி விடும், இந்த நிலவின் இரவுகள் நீடித்து இருக்கும்..
ஆனால் அப்படி நீ சொன்னால் கூட அது இந்த ஒரு இரவுக்கு மட்டும் தான்.. தொடர்ந்து வாழ்க்கை பூராவும் இருக்குமா என்று தெரியவில்லை

- இப்படியாக முடிகிறது அந்த பாடல்
கணவன் மனைவியின் பிரிவுகளின் வலியை இவ்வளவு உணர்வு பூர்வமாக எந்த வசனங்களும் பாடல்களும் சொன்னதில்லை என்பது என்னுடைய கருத்து.
படத்தில் ஆர்த்தி தேவியின் அரசியல் எதிரிகள் ஹோட்டல் மேனேஜருடன் ஆர்த்தி தேவிக்கு உறவு என்ற ரீதியில் குழப்பம் ஏற்படுத்த பல பிரச்சினைகள் புயலாக (ஆன்ந்தி) புறப்பட்டு வருகிறது.
ஆர்த்தி தேவியின் அரசியல் வாழ்க்கை, தேர்தல் முடிவு என்னாயிற்று? கணவருடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? சிம்லாவில் படித்து கொண்டிருக்கும் தனது குழந்தையை கண்டாரா? என்பதை எல்லாம் உணர்வு பூர்வமாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.
பெர்ஃபார்மென்ஸை பொறுத்த மட்டில் இந்த படத்தில் சஞ்சீவ் குமாரும், சுசித்ரா சென்னும் நடிப்பு பாடம் நடத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். எக்ஸலண்ட்.
அவுட் ஸ்டேண்டிங்.. மாஸ்டர் பீஸ்..
இந்த படத்தில் வேறு ஏதேனும் நுண்ணரசியல்கள் இருக்கலாம், எனக்கு தெரியவில்லை, ஏனெனில் அந்த பாடத்தில் நான் நர்ஸரி தான் படித்து வருகிறேன்.
பாடல்களை பொறுத்த வரை,
1.
சலாம் கீஜியே என்ற அரசியல் கிண்டல் பாடலும் முஹம்மது ரஃபி வாய்ஸில் கேட்டு மகிழலாம்.
2.
இஸ் மோடு ஸே ஜாதே ஹேய்ன் என்ற அர்த்தமுள்ள கணவன் மனைவிக்கான பாடலும் உள்ளது
3.
தும் ஆகயிஹே நூர் ஆகயா ஹே (நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது) என்ற காதல் பாடலும் உள்ளது
4.
தேரே பினா ஜிந்தகி சே கோயி என்ற பிரிவின் வலியும் உள்ளது
கிஷோர் - லதா - ஆர்.டி.பர்மன் - குல்ஜார் சாப் சேர்ந்தால் பாடல் ஹிட் தானே
சாப்பாட்டிலிருந்து கக்கூஸ் போறது வரை புயல் வேகத்தில் அவசரமாக போய் விட்ட இந்த உலகத்திலிருந்து என்னை அமைதியான மென்மையான் உலகத்துக்கு சில நேரங்களுக்காவது அவ்வப்போது அழைத்து செல்லும் படங்களில் இந்த புயலும் - ஆன்ந்தியும் - ஒன்று என்று தான் நான் சொல்வேன்

Subscribe to:
Posts (Atom)