பத்ரு தரும் பாடம் நிறையவே இருந்தாலும் ஒரே ஒரு குரான் ஷரீஃபின் வசனத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அத்தியாயம் 8: ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றி பொருள்கள்)
11 வது வசனம்
(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
மேலே கண்ட இந்த வசனத்தை கூர்ந்து கவனித்து படித்து பார்த்தால் அந்த யுத்தத்தில் மிகப் பெரிய வழிகாட்டுதலை இறைவன் பத்ருயீன்களுக்கு வழங்கியிருப்பது தெரிய வரும்.
அத்தோடு ஒரு போராளி போருக்கு முன்னால் தன்னை தூய்மைப்படுத்தவும் உறுபடுத்திக் கொள்ளவும் வேண்டும் அதாவது பெரிய ஜிஹாதான தன் மனதையும் நம்பிக்கையின் பால் உறுதிபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து இயம்புகிறது.
இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்வதோடு பத்ரு யுத்தம் சம்மந்தமாக நான் கண்ட இரு காணொளி பதிவுகளை இணைத்துள்ளேன்.
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Sunday, August 29, 2010
Saturday, August 28, 2010
விடியற்காலை - குரான் ஷரீஃப்
89:1 விடியற்காலையின் மீது சத்தியமாக
89:2 பத்து இரவுகளின் மீது சத்தியமாக
89:3 இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக
89:4 செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக
89:5 இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
89:6 உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்தை) என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7 (அவர்கள்) தூண்களுடைய ”இரம்” (நகர) வாசிகள்
89:8 அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை
89:9 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசிந்து வந்த) ஸமூது கூட்டத்தையும் அவன் (என்ன செய்தான் என்று அவர்கள் பார்க்கவில்லையா?)
89:10 மேலும் பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:11 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்
89:12 அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்
89:13 எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்
89:14 நிச்சயமாக உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டும்
இருக்கின்றான்
89:15 ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனை சோதிக்கும் போது அவன்: ”என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகின்றான்.
89:16 எனினும் அவனுடைய உணவு வசதிகளை குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ, ”என் இறைவன் என்னை சிறுமைப்படுத்தி விட்டான்” என கூறுகின்றான்
89:17 அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
89:18 ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
89:19 இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:20 இன்னும் பொருள்களை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
89:21 அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது
89:22 உம்முடைய இறைவனும், வானவரும் அணி அணியாக வரும் போது,
89:23 அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்?
89:24 ”என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை முற்படுத்தி நான்
(அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்
89:25 ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையை போல் வேறு எவனும் வேதனை செய்ய மாட்டான்.
89:26 மேலும் அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
89:27 (ஆனால்) அந்நாளில் நல்லடியார்களிடம் சாந்தியடைந்த ஆத்மாவே!
89:28 நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தியடைந்த நிலையிலும், (அவன்) உன்னிடம் திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
89:29 நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
89:30 மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்)

Labels:
89 ஸூரா ஃபஜ்ர்,
இஸ்லாம்,
திருமறை குரான் ஷரீஃப்
Friday, August 27, 2010
மூன்றாவது கடமையின் மூன்று வகைகள், இமாம் கஜ்ஜாலி (ரஹ்)
நோன்பின் நடுப்பகுதியில் இருக்கின்ற இந்த தருணத்திலே நாம் அனைவரும் இபாதத் எனும் வழிபாடுகளில் மூழ்கியிருப்போம். சஹர் நேரத்தில் விழித்து சாப்பிட ஆரம்பித்தும் சஹர் வரைக்குமே விழித்திருந்து குரான் ஷரீஃப் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் நம் பொழுதுகள் இறைதிருப்தியில் கழிந்து கொண்டிருக்கும்.
நோன்பானது முஸ்லீமானவர்களுக்கு ஐந்து கடமைகளுள் மூன்றாவது கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒருவர் நோன்பில் சஹர் வரை விழித்து கொண்டிருப்பார். சஹர் சாப்பிடும் நேரம் வரும் வரை நொறுக்கு தீனியும் சஹரில் தீனையே நொறுக்கியும் தின்று தீர்ப்பார். சுபுஹுக்கு பாங்கு சொல்லும் நேரம் தான் அவர் தூங்க ஆரம்பிக்கும் நேரம். அப்புறமா அவர் மக்ரிபுக்கு எழுப்பி விட்டால் எழுந்து நோன்பு திறந்து விடுவார்.
இவரை போன்றவர்கள் சந்தித்தால் முதலில் கேக்கும் கேள்வியே, 'இன்னைக்கு சஹருக்கு என்ன சாப்பிட்டீயோம்?' என்பது தான்.
அதற்கு பதில் இப்படி வரும், 'இன்னைக்கி வந்து பொறிச்ச எறைச்சியும் கட்லெட்டும் நேத்து கோழியும் குப்பத்தாவும்' என்று
அத்தோடு நின்று விடாது, அடுத்த கேள்வி தொடரும், 'நோன்பு தொறக்க என்னா சாப்பிடலாம்..?' என்று
பதில் பக்காவா இருக்கும், 'முர்தபாவும் முட்டை பிராட்டாவும்' என்று
இப்படியாக மூன்றாம் கடமையை முப்பது நாளும் முழுசாக நிறைவேற்றி விடுவார்கள். இவர்கள் ரொம்பவும் ஸ்டிரைட் ஃபார்வேர்ட். வெள்ளை நூல் ஆரம்பித்த நொடியிலிருந்து கருப்பு நூல் வரும் வரையில் (சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை) எதையும் சாப்பிட மாட்டார்கள், உண்ணவும் மாட்டார்கள்.
'நோன்பாளியின் உறக்கம் கூட இபாதத்' என்ற மொழியில் இவர்கள் சஹருக்கு தூங்கி மக்ரிபுக்கு எழுவது கூட இபாதத் புரிந்ததாக அர்த்தப் படுத்திக் கொள்ளப்படும்.
நோன்பு குறித்து எவ்வளவோ புத்தகங்களும் கட்டுரைகளும் அருமையாக எழுதப்பட்டிருந்தாலுமே கூட இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் இஹ்யா உலூமித்தீனில் எழுதியவைகளே காலம் கடந்தும் இன்னும் கல்பில் நிற்கின்றன.
அவர்கள் நோன்பை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள். முதலாவதாக நோன்பு என்று இவர்கள் குறிப்பிடுவது நான் மேலே குறிப்பிட்டவர்களை போன்றும் இன்னும் ஏராளமானோரை போன்றும் கடமைக்காக பிடிக்கும் நோன்பு,
இரண்டாவது நோன்பு எனப்படுவது சில குறிப்பிட்ட நபர்கள் பிடிக்கும் நோன்பாகும். இது முந்தையதை விட சிறந்தது.
மூன்றாவது நோன்பு மிகவும் மேலானவர்களுக்கான நோன்பாகும். இது முந்தைய இரண்டையும் விட மிகவும் சிறந்தது என்று எழுதவும் வேண்டுமோ?
முதலாவது வகையை பற்றி ஏற்கனவே நான் உதாரணம் கொடுத்திருக்கிறேன் என்றாலும் பொதுவாக இது பெரும்பான்மையானவர்களின் நோன்பை குறிக்கும்.
அத்தகையோர் நோன்பு காலத்தில் சோறு சாப்பிட மாட்டார்கள், தண்ணீர் அருந்த மாட்டார்கள், இன்னும் செக்ஸிலும் ஈடுபட மாட்டார்கள். இவர்களை 'நம்பிக்கையாளர்' என்ற அடைமொழியை காப்பாற்றியவர்கள் என்றும் சொல்லலாம்.
இரண்டாவது வகையினர் ஒரு படி மேலே போய் அவர்கள் பசித்திருப்பது மட்டுமின்றி இன்னும் தீய காரியங்களில் எதிலும் ஈடுபட மாட்டார்கள்.
என்னுடைய பங்களாதேஷ் நண்பர் ஒருவர் நோன்பு திறக்க சாப்பாடு வாங்க கடைக்கு போனார். கடைக்காரர் அப்போது தான் சாப்பிட போகிறார் என்று நினைத்து தட்டில் வைத்து கொடுக்கவும், என் நண்பர், இங்கே சாப்பிட அல்ல என்றும் நோன்பு திறப்ப்பதற்கு என்றும் பேக்கட்டில் கட்டி தரவும் எனவும் கேட்டார்.
அதற்கு அவர் சட்டென்று கடுமொழிகளை பயன்படுத்தி முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானே என்கிற ரீதியில் கோபத்தை தூண்டவே, என் நண்பர், ஒரு வார்த்தை பதில் சொல்லாமல் அழகிய மௌணத்தை கடைபிடித்து பொறுமையாக இருந்து மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விட்டு உணவை கட்டிக் கொண்டு வந்து விட்டார்.
இந்த ரமாலான் தான் அவரை இப்படி மாற்றி வைத்தது. இல்லையென்றால் இவரும் பதிலுக்கு பதில் பேசியிருப்பார். ஆனால் இந்த நோன்பானது அவர்ருக்கு கேரக்டரை கற்றுக் கொடுத்திருந்தது.
இப்படியாக நோன்பு காலத்தில் தன் கைகள் செய்யும் தீவினையிலிருந்தும், தன் நாவு செய்யும் தீவினையிலிருந்தும் இன்னும் காது, கால், பார்வை எனும் அனைத்து உறுப்புகளும் செய்யும் தீய செயல்களிலிருந்தும் விலகியே இருப்பார்கள். முடிந்த வரை நல்லதே பேசுவார்கள். இல்லை என்றால் மௌணத்திலேயே இருப்பார்கள்.
இவர்கள் முதலில் வரும் வகையினரை விட ஒரு படி மேலானவர்கள் என்று சொல்லலாம்.
மூன்றாவது வகை நோன்பு என்பது நபிமார்களுக்கும், இறை நெறுக்கத்தை உடைய சூஃபியாக்களுக்கும் உடையது என்று சொல்லலாம். இவர்களின் நோன்பில் இறைவனை பற்றிய சிந்தனையை தவிர்த்து வேறு எதிலுமே சிந்தனையை கூட செலுத்த மாட்டார்கள்.
இவர்கள் காணக் கிடைக்க மாட்டார்கள் என்றாலும் இது சாத்தியப்படுமா? என்றும் பலர் திகைக்கிறார்கள். வேறு சிலரோ இப்படி எல்லாம் யாரும் இருக்கவே முடியாது என்றும் அடித்து சொல்வார்கள். வெகு சிலர் மட்டுமே இந்த நிலையை அடைய முயற்சியும் பயிற்சியும் மேற்கொண்டு தனக்குள்ளாகவே போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.
இணைப்பு: http://baalawi.com/articles/fiqh/661-al-imam-al-ghazali-on-fasting-from-book-of-forty-principles-from-the-foundations-of-religion.html

Sunday, August 22, 2010
விரிவாக்கல் - குரான் ஷரீஃப்
குரான் ஷரீஃபின் 94 வது அத்தியாயம்
1 - நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
2 - மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்க்னோம்
3 - அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது
4 - மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்
5 - ஆதலின் நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது
6 - நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது
7 - எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக
8 - மேலும், முழு மனதுடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக

94 ஸூரா அலம் நஸ்ரஹ்,
இஸ்லாம்,
திருமறை குரான் ஷரீஃப்
Wednesday, August 18, 2010
வேகமாகச் செல்லுபவை - குரான் ஷரீஃப்
ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) -
குரான் ஷரீஃபின் 100 வது அத்தியாயம்
1 - மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக
2 - பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
3 - பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்
4 - மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
5 - அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக
6 - நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்
7 - அன்றியும் நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
8 - இன்னும், அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்
9 - அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது
10 - மேலும் இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது
11 - நிச்சயமாக, அவர்களுடைய இறைவன், அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்
*************************************************************

100 ஸூரா ஆதியாத்தி,
இஸ்லாம்,
திருமறை குரான் ஷரீஃப்
Tuesday, August 17, 2010
சுலைமான் நபி - எறும்புகள் - வைரமுத்துவின் எறும்புகள் கவிதை
குரான் ஷரீஃப் 6 (சூரத்துல் அன்ஆம் - ஆடு, மாடு, ஒட்டகம்): 38 வது வசனம்
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும்உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.

பூமியில் இருக்கும் அத்தனை படைப்புகளும் நம்மை போன்ற சமூகமாக வாழ்வதாக குரான் ஷரீஃப் சொல்கிறது.
அந்த வகையில் குரான் ஷரீஃபில் எறும்புகளின் வாழ்க்கை முறையை பற்றி சொல்லப்படுகிறது. எறும்பு ஒன்று சுலைமான் நபியிடம் உரையாடியதாக கூட வருகிறது. இத்தகைய எறும்புகளை பற்றி நான் படித்த செய்தி ஒன்று ஆச்சர்யமாக கூட இருந்தது.
அந்த செய்தி இங்கே:
These insects have the strength to carry food up to seven times their own body weight, and set up amazingly complex colonies, nests and homes, with social orders in which every member has a role. Each ant in a colony seemed to have its own schema, and yet the group as a whole appeared to be highly organized. This organization is accomplished under strict supervision and through interaction among individuals.
Ants live together in large colonies organized under one powerful female ant which rules, known as the queen. Ants usually nest in soil or wood, and a single ant colony may contain as many as 20 million individual ants. Most of them are female; only a few male ants are produced to mate with the queen.
One of the most unusual things about ants is their ability to communicate. Signaling each other with distinctive hormones, ants work together to build and move their nests, raise the young, and find food. Ants sometimes fight other ant colonies, and they even arrest other ants and enslave them.
குரான் ஷரீஃப் 27 (சூரத்துலந் நம்லி - எறும்புகள் எனும் அத்தியாயம்) : 18 (வது வசனம்)
இறுதியாக எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் (பெண்) எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி); “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)’” என்று கூறிற்று.
மேலே கண்ட குரான் ஷரீஃபின் வசனத்தில் பெண் எறும்பு தலைமை பொறுப்பில் இருக்கிறது என்பது ஒரு செய்தி, அது அல்லாமல் கவனிக்க வேண்டிய சில செய்திகளும் உள்ளது, ஒரு தலைமை பொறுப்பில் இருக்கும் எறும்பு மற்ற எறும்புகளை காப்பாற்றும் நோக்கத்தில் ‘நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று சொல்கிறது. இன்றைக்கு தலைவர்களாக இருப்பவர்களுக்கே இது ஒரு பெரும் பாடமாக இருக்கிறது. தன் நலனை பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் தனக்கு கீழ் இருப்பவர்களை பற்றியும் கவலை கொண்டு காப்பாற்றும் எண்ணம் எறும்புக்கு இருக்கிறது.
அடுத்து, சுலைமான் நபியும் அவர்களுடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு என்று கூறுவதை கவனியுங்கள். என்ன அழகான பேச்சு. யாரையும் குற்றம் குறை சொல்லவில்லை. நம்ம போய் சுலைமான் நபியிடத்திலே சொல்ல முடியாது, சுலைமான் நபியவர்களும் அவர்களுடைய சேனைகளும் கீழே எறும்புகள் உள்ளதா என்று பார்த்து அதன் மேல் காலை வைத்து நசுக்குவதுமில்லை, ஆகையினால் அவர்கள் அறியாத வண்ணம் நசுக்கி விடப் போகிறார்கள் என்று உள்ளதை உள்ளபடி கூறுகிறதே. இதில் ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் அல்லவா படிப்பினை இருக்கிறது.
இதில் அவ்வளவு பாடம் இருந்ததால் தான் எறும்பின் இந்த பேச்சை கேட்ட சுலைமான் நபி அவர்கள் சிரித்து விட்டு இறைவனிடத்திலே நன்மைகள் செய்ய அருள் செய்வாக என்று துவா கேட்டார்கள். சுலைமான் நபி ஓர் அரசர். தமிழில் கூட இவர்களின் வாழ்க்கையை பற்றி ‘இராஜநாயகம்’ என்ற படைப்பு உண்டு. இராஜநாயகம் என்றால் அரசர்க்கு எல்லாம் தலைவர் என்று அர்த்தம்.
(குறிப்பு: இந்த இராஜநாயகம் எனும் நூலில் உள்ள இலக்கியத்தை தான் ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில் அவர்கள் கூட சிலாகித்து ‘இனிக்கும் இராஜநாயகம்’ என்ற நூலை வடித்தார்கள்).
இப்படிப்பட அரசர்க்கெல்லாம் தலைவரான சுலைமான் நபியவர்களுக்கே எறும்புகள் மூலமாக கூட வாழ்வு முறையை இறைவன் கற்றுக் கொடுத்தான் என்றே நான் கருதுகிறேன். அதற்காக சுலைமான் நபியவர்கள் இறைவனுக்கு நன்றி கூட செலுத்துகிறார்கள்.

குரான் ஷரீஃப் (சூரத்துலந் நம்லி - எறும்புகள் எனும் அத்தியாயம்) : 19 (வது வசனம்)
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
************************************************************
எறும்பு - எழுதியவர் - கவிப்பேரரசு வைரமுத்து
எறும்புகளே எறும்புகளே
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!
உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?
நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்
ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?
பேதை மனிதரே
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?
உங்கள் பொழுது போக்கு?
வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு
ஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன - சாய்வு
இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?
உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று
செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.
இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!
சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்
ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடு
மாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்
எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!
உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?
மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.
நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?
வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளை
சேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?
கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!
உங்களால் மறக்க முடியாதது?
உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.
எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?
எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்
சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?
அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.
சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?
இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு
அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு
எறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!
மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?
நன்றி எறும்பே நன்றி!
நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்? எதற்கு
காணாத காமதேனுவைப் பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!
Subscribe to:
Posts (Atom)