Sunday, October 30, 2011

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசை பாடல்கள்

ஹதீஸ் குத்ஸி (மகத்துவமிக்க பெருமானார் (ஸல்) செய்தி):

என்னுடைய சுவர்க்கமோ என்னுடைய பூமியோ என்னை வைத்திருக்க (அடைய, never contain) முடியாது. என் நேசர்களின் இதயத்தில் என்னை வைத்திருக்க இயலும்”
---------------------------------------------------------

மிகப் பெரிய வியாபாரியும் செல்வந்தருமான பீர் சையித் ஹாஜி அலி ஷாஹ் புஹாரி (றலி) அவர்கள் பிறப்பால் உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.  இஸ்லாத்தை பரப்புவதற்காக அனைத்தையும் விட்டு விட்டு வந்த மும்பையில் வொர்லி நதிக்கரையில் அமர்ந்தார்கள்.
நாடி வருவோருக்கெல்லாம் சாந்தி மார்க்கத்தை பரப்பினார்கள். இவர்களின் நினைவாக...


படம்: ஃபிஜா
நடிப்பு: ஹ்ரித்திக் ரோஷன், ஜெயபாதுரி, கரிஷ்மா கஃபூர்
பாடலாசிரியர்: ஷவ்கத் அலி
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

பாப்ரி மஸ்ஜித் இடிப்ப, கலவரத்தை தொடர்ந்து மகன் காணாமல் போய் விடுகிறான். மகனை நினைத்து ஏங்கி தவிக்கும் தாய் மனசாந்திக்காக இறையடியாரின் இல்லம் தேடி செல்கிறார்...

-----------------------------
கி.பி.1142 - ஹிஜ்ரி ஆண்டு 530 - ரஜப் மாதம் - 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் தெற்கு ஆஃப்கானிஸ்தானில் சஞ்சர் எனும் சிறிய கிராமத்தில் இவர்கள் பிறந்தார்கள். இவர்கள் தாய் வழியில் பெருமானார் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவர்களான இமாம் ஹஸன் (றலி) அவர்களின் வழியிலும் தந்தை வழியில் மற்றொரு பேரரான இமாம் ஹுஸைன் (றலி) அவர்களின் வழியிலும் தோன்றியவர்கள்.

இறையருளால் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் வந்து தங்கினார்கள். ஆனால் அப்போது அஜ்மீரை பிருதிவிராஜன் எனும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான்.

இவர்களை அஜ்மீரை விட்டு செல்லும்படி மன்னர் கேட்டுக் கொண்டும் இவர்கள் போக மறுத்து விட்டதால் இவர்கள் மீது மன்னர் மிகவும் கோபம் கொண்டு பல திட்டங்கள் தீட்டினான். ஆனால் திட்டமிடுபவர்களிலெல்லாம் மேலான திட்டமிடுபவனின் நாட்டம் வேறாக இருந்தமையால் கைசேதமடைந்தார் மன்னன்.

ஏழைகளோடு ஏழையாய் ஏழைகளின் உற்ற தோழனாய் “கரீபே நவாஜ் (ஏழைகளின் பங்காளன்)” என்று வழங்கப்பட்டு வந்தார்கள். ஏராளமானோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகிய இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மிஸ்ஸன் வெற்றிகரமாக முழுமையடைந்ததும் ஹிஜ்ரி 633 ரஜப் மாதம் 6 ஆம் நாள் (கிபி 1236) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யீனுத்தீன் ஷிஸ்தி (றஹ்) அவர்கள் தம்முடைய 97வது வயதில் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நினைவாக...




பாடலாசிரியர்: கஷிஃப்
---------------------------------------------------------------------------------
ஹஜ்ரத் ஷெய்க் ஹாஜா சையித் முஹம்மத் நிஜாமுத்தின் (றஹ்) அவர்கள் ஹிஜ்ரி 636 ஆம் ஆண்டு சஃபர் மாதம் 27 ஆம் தேதி அன்று உத்திரபிரதேச மாநிலமான பதாயுன் நகரில் பிறந்தார்கள். ஐந்து வயது நிறைவு பெறும் முன்னரே தந்தையை இழந்தார்கள் ஐந்தாவது வயதில் தாயையும் இழந்தார்கள்.

தாயார் மரணப் படுக்கையில் இருக்கும் போது ஐந்து வயது சிறுவனை “அல்லாஹ்வின் தவக்கலில் (பாதுகாவலில்) விட்டு செல்வதாக” கூறி விட்டு மரணித்தார்கள்.

அன்னையின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. மகனார் மிகப் பெரிய இறைநேசராக வாழ்ந்தார்கள்.

சுல்தான், மந்திரிகள், இவர்களோடு ஒரு போதும் கலந்திருக்காமல் ஏழைகளோடு ஏழைகளாய் வாழ்ந்தார்கள்.

இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவு பொருள்கள் அன்றே அருகில் இருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். நாளைக்கு என்று எதுவும் சேமித்து வைத்திருப்பது கிடையாது. முற்றிலும் இறைவனை சார்ந்தே இருந்தார்கள்.

இறை அழைப்பை ஏற்று புதன்கிழமை ஸஃபர் மாதம், ஹிஜ்ரி 725ல் டில்லியில் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு பயணமானார்கள்.

இவர்களின் உஸ்தாத் ஹஜ்ரத் பாபா ஃபரீத் (றஹ்) அவர்கள்
இவர்களின் மாணவர்களில் ஒருவர் தான் அமீர் குஸ்ரோ (றஹ்) அவர்கள்

அவர்களின் நினைவாக...





படம்: ராக் ஸ்டார்
இயக்கம்: இம்தியாஜ் அலி
பாடல்: இர்ஷாத் காமில்

Ya Nizamuddin Auliya, Ya Nizamuddin Salqa


இறைநேசரே..!
நிஜாமுதீனே!
ஏழைகளின் தோழரே!
நிஜாமுதீனே!

Kadam Badhaa Le, Hadon Ko Mitaa Le,
Aaja Khaali Pan Mein Pee Ka Ghar Tera,
Tere Bin Khaali Aaja, Khali Pan Mein

இடையில் வரும் இடையூறுகள்

மறைந்து போக செய்யுங்கள்
காலியான வெற்றிடம் நான்
என்னை நிரப்பிவிடுங்கள்

Rangreza
Rangreza
Rangrezaa…
Ho… Rang-rezaaaa…..



வர்ணம் பூசுபவரே
என்னை
தங்களின் வர்ணத்திற்கு
பூசி விடுங்கள்


(வர்ணம்- இதற்கு சூஃபியிசத்தில் நிறையவே அர்த்தம் உள்ளர்த்தம் உண்டு; பொதுவாக இஸ்லாத்தில் இணைவதை கூட இதை குறிக்க பயன்பட்டு இருக்கிறது)

Kun Faya Kun
Kun Faya Kun
Faya Kun,
Faya Kun, Faya Kun, Faya Kun

ஆகுக! அது ஆகி விடுகிறது..!



(இது குரான் ஷரீஃபின் வசனம்


 - ஸூரத்துல் பகறா (2) - 117; 
 - ஸூரா யாஸீன் (36) - வசனம் 82;)


Jab Kahin Pe Kuch Nahi
Bhi Nahi Tha
Wahi Tha Wahi Tha
Wahi Tha Wahi Tha



எங்கெங்கும்
எது ஒன்றும்
இல்லாத போது
ஒருவன் மட்டுமிருந்தான்
ஒருவன் மட்டுமே இருந்தான்

Woh Jo Mujh Mein Samaya
Woh Jo Tujh Mein Samaya
Maula Wahi Wahi Maaya

அவனே 

எனது உள்ளுணர்விலும்
இருக்கின்றான்
அவனே
உங்களது உள்ளுணர்விலும்
இருக்கின்றான்
அந்த இறைவனே
எங்கெங்கும் மாயமாய்
(மறைந்தல்ல) நிறைந்திருக்கின்றான்

Kun Faya Kun
Kun Faya Kun
SadaqAllahul-alliyul-Azeem’



ஆகுக! 
எனும் ஒரு சொல் தான்
அது ஆகி விடுகிறது!


(ஆகுக என்ற சொல்லுக்கும் அது ஆகி விடுவதற்கும் கால நேர வித்தியாசமே இருப்பதில்லை - Yes! There is no time difference!)


நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்
Rangreza Rang Mera Tan Mera Mann,
Le Le Rangaayi Chaahe Tan Chaahe Mann,
Rangreza Rang Mera Tan Mera Mann,
Le Le Rangaayi Chaahe Tan Chaahe Mann,



வர்ணம் பூசுபவரே!
என்னுடைய 
எண்ணத்தில்
உங்களது வர்ணத்தை
பூசுங்கள்
என்னுடைய 
மனதில்
உங்களது வர்ணத்தை
பூசுங்கள்
அவ்வாறு பூசுவதற்கு
பதிலாக
என்னுடைய
எண்ணத்தில்
மனதில்
இருக்கும்
அத்தனையையும்
எடுத்துக் கொள்ளுங்கள்


(அப்படி எடுத்து விட்ட பிறகு பூசப்பட்ட வர்ணம் மட்டுமே நிலைத்து நிற்கும்)

Sajra Savera Mere Tan Barse
Kajra Andhera Teri Jalti Lau

Katra Mila Jo Tere Dar Par Se
O Maula…
Maula….. Aaa…



நான்
உங்களிடம் 
நேசம் கொள்ளும்போது
எனது காலையின் 
வெளிச்சம்
எனது இரவின் 
இருட்டை
சுத்தம் செய்கிறது


இறைநேசரான
உங்களின் புகலிடம்
வரும் போது
எனது ஆன்மா
இறையுணர்வு
பெறுகிறது


இறைவா...
இறைவா...

Kun Faya Kun
Kun Faya Kun
Kun Faya Kun
Kun Faya Kun

ஆகுக..!

ஆகி விடுகிறது..!

SadaqAllahul-alliyul-Azeem’
Sadaqa Rasulu-hun nabi-yun-kareem

Sallallaahu Alayhi Wasallam, Sallallaahu Alayhi Wasallam




நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்


நான் இன்னும்
சாட்சி சொல்கிறேன்...!
அந்த இறைவனின் தூதர்
ஹஜ்ரத் முஹம்மத (ஸல்)
மிகவும் உயர்குணமுடையவர்கள்


இறைவனின் 
வாழ்த்தும்
இறைவனின்
சாந்தியும்
அன்னாரின் மீது
உரித்தாகுக..!

O Mujhpe Karam Sarkar Tera
Araz Tujhe, Karde Mujhe, Mujhse Hi Riha
Ab Mujhko Bhi Ho, Deedaar Mera
Karde Mujhe, Mujhse Hi Riha
Mujhse Hi Rihaaaaaaaa



எனது தலைவனே..!
என்மீது கருணை காட்டு..!


நான் வேண்டுவதெல்லாம்
என்னை
என்னிலிருந்து
விடுவித்து விடு..!


எனது 
உண்மையான தோற்றத்தை
எனக்கு
அறிமுகப் படுத்து..!


என்னை
நான் என்று 
நம்பிக் கொண்டிருக்கும்
போலியான
என்னிடமிருந்து
என்னை விடுவி...!


Mann Ke Mere Ye Bharam,
Kachche Mere Ye Karam
Leke Chale Hai Kahaan,
Main Toh Jaanoon Hi Na



எண்ணத்தில்
விளைந்திருக்கும்
வீண்பெருமை
தவறானசெய்கைகளால்
விளைந்து நிற்கும்
சுமைகள்


இவைகளை
சேமிப்பாக 
வைத்துக் கொண்டு
நான் 
எங்கே செல்வது?


ஒன்றும் விளங்கவில்லை..

Tu Hai Mujhmein Samaya,
Kahaan Leke Mujhe Aaya,
Main Hoon Tujhmein Samaya,
Tere Peeche Chala Aaya,
Tera Hi Main Ek Saaya,
Tune Mujhko Banaya,
Main Toh Jag Ko Na Bhaaya,
Tune Gale Se Lagaya
Haq Tu Hi Hai Khudaya,
Sach Tu Hi Hai Khudaya



நீ
என்னுள் 
நுழைந்து விடு


எங்கினும்
என்னை
அழைத்து செல்


நான்
உன்னில்
நுழைந்து விடுகிறேன்


நான் உன்னை
பின் தொடர்கிறேன்


நான் உனது
நிழலாகிறேன்


நியே
என்னை படைத்தாய்..!


நான் 
இந்த உலகிற்கு
அருகதையற்றவனாய்
இருக்கிறேன்..!


நீ 
என்னை அணைத்தாய்..!


நீயே
பேருண்மை, சத்தியம் (ஹக்)


நீயே
உண்மை..

Kun Faya Kun
Kun Faya Kun
Faya Kun,
Faya Kun, Faya Kun, Faya Kun

ஆகுக..!

எனும் ஒரு சொல் போதும்
அது உடனே ஆகி விடும்..!

Jab Kahin Pe Kuch Nahi
Bhi Nahi Tha
Wahi Tha Wahi Tha
Wahi Tha Wahi Tha

எங்கெங்கும்
எது ஒன்றும்
இல்லாத போது
ஒருவன் மட்டுமிருந்தான்
ஒருவன் மட்டுமே இருந்தான்

Kun Faya Kun
Kun Faya Kun




ஆகுக..!
அது உடனே ஆகி விடும்..!

SadaqAllahul-alliyul-Azeem’
Sadaqa Rasulu-hun nabi-yun-kareem

Sallallaahu Alayhi Wasallam, Sallallaahu Alayhi Wasallam



நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்


நான் இன்னும்
சாட்சி சொல்கிறேன்...!
அந்த இறைவனின் தூதர்
ஹஜ்ரத் முஹம்மத (ஸல்)
மிகவும் உயர்குணமுடையவர்கள்


இறைவனின் 
வாழ்த்தும்
இறைவனின்
சாந்தியும்
அன்னாரின் மீது
உரித்தாகுக..!

-----------------------------------------------------------

Sunday, October 23, 2011

அஜான் (பாங்கு) - தொழுகைக்கான அழைப்பு

குரான் ஷரீஃப்


37வது அத்தியாயம் - ஸூரத்து நூர் (பேரொளி)


வசனம்: 37


மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கலோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த நாளை அவர்கள் அஞ்சுவார்கள்

They are such whom neither wordly commerce nor striving after gain can divert from the remembrance of Allah, and from constancy in prayer, and from charity: They are people filled with awesome consciousness of the Day when hearts and eyes will be convulsed. 


---------------------------------------------------------------------------------------------



தொழுகை முதன் முதலில் தனித்தனியாக தான் தொழப்பட்டு வந்தது. இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை பெருகி விடவே பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகையை கூட்டுத் தொழுகையாக ஜமாத்தாக தொழ வைக்க நாடினார்கள்.

எல்லோருக்கும் தொழுகை வரும் நேரத்தை அறிவிப்பது எப்படி என்று கலந்தாலோசித்தார்கள்.

மணி அடிப்பது
எக்காளம் ஊதுவது
பறையறைவது
தீப்பந்தம் காட்டுவது

- மேற்படியல்லாமல் உள்ளத்தை தொடக்கூடியதாய் இருக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டார்கள். 

முதல் நாள் கூடிய கூட்டத்தில் முடிவொன்றும் கிட்டவில்லை. மறுநாள் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்க்ள் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்கள்:

ஒருவர் உயரத்தில் நின்று உரத்த சப்தமிட்டு மக்களை தொழுகைக்கு அழைக்கிறார் 

- என்று கூறவும். இதே சாரமுடைய கனவை அப்துல்லாஹ் பின் ஜைத் (ரலி) அவர்களும் கண்டதாக கூறவே பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இந்த முறை, வழக்கம் மிகவும் பிடித்து போனது.

முதலில் தொழுகைக்கான அழைப்பை விடுத்தவர்கள்: 

ஹஜ்ரத் பிலால் (றலி) - 
(இவர்கள் அரபியல்லாதவர்கள்,  ஹபஷி இனத்தை 
சேர்ந்தவர்கள்.  அடிமை இனம் என்று கருதப்பட்டவர் அஜான் கொடுத்து நாங்கள் தொழுகைக்கு வருவதா என்றும் அரபி சரியாக உச்சரிக்க வரவில்லை என்றெல்லாம் குறைகள் எழுந்தன. பெருமானார் (ஸல்) அவர்களோ இவர்கள் அவ்வாறு உச்சரிப்பது தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானதாக இருக்கின்றது என்று கூறி மனதளவில் உருவாக இருந்த பேத உணர்வுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். 
இந்த ஹபஷி இனத்தை சேர்ந்தவர்களைத் தான் இஸ்லாமிய அரசின் இரண்டாவது கலிபாவான உமர் (றலி) அவர்கள் ”ஸய்யிதினா (தலைவர்)” என்று அழைப்பார்கள். 
இது தான் இஸ்லாமிய உணர்வு. இறைவன் முன் அனைவரும் சமம். மேலோர் கீழோர் என்பதெல்லாம் மருந்துக்கும் இங்கே கிடைக்காது)

முதலில் அழைப்பு விடுக்கப்பட்ட தொழுகை: 

லுஹர் (நண்பகல்)

முதலில் பாங்கு சொன்ன இடம்: 


பனூ நஜ்ஜார் என்ற இனத்தை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு சொந்தமான உயர்ந்த வீட்டின் மேல் தளம்.
-----------------------------------------------------------------
இவ்வாறு 1432 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அழைப்பு இன்று முதல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

உலகின் வலது கோடி வெலிங்க்டனில் (நியுஜிலான்ந்) ஆரம்பித்து ஜாவா, ஜகார்த்தா, இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு, ஆப்ரிக்க, அமெரிக்க, என எல்லா கண்டங்களையும் உள்ளடக்கி மெக்ஸிகோ வரைக்கும் உள்ள டிரில்லியன் கணக்கான பள்ளிவாயில்களில் இந்த பாங்கு சத்தம் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

அந்த வகையில் இந்த அழைப்பு ஒலி தான் உலகின் ஒரே ஒரு தொடர்ச்சியான மாறாத இன்னும் அதிகமான முறையில் எழுப்பப்படும் இறைதுதி பாடல் என்று சொல்ல முடியும்.

இந்த அழைப்பில் நிறைய சிறப்பம்சங்கள் இருக்கின்றன். 

முஸ்லிம்களை மாத்திரமே தொழுகைக்கு வாருங்கள் என்று இந்த அழைப்பொலி அழைக்கவில்லை. 
மாறாக உலக மக்கள் அனைவரையும் அழைக்கின்றது. 
அதுவும் எப்படி அழைக்கின்றது என்றால்.. 

உங்களின் இறைவன் ஒருவனே என்று தான் அழைக்கின்றது. 
அதாவது நீங்கள் அனைவரும் ஒரே ஒரு மூலத்திலிருந்து உண்டாக்கப்பட்டவர்கள் தான். 

Don't divide... be divine..

..என்பது தான் அது





----------------------------------------------------------------
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்

அஷ்ஹது அன்ல்லாஇலாஹா இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ல்லாஇலாஹா இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதன்ர் ரஸுலுல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதன்ர் ரஸுலுல்லாஹ்

ஹய்ய ஆலஸ் ஸலாத்
ஹய்ய ஆலஸ் ஸலாத்

ஹய்ய ஆலல் ஃபலாஹ்
ஹய்ய ஆலல் ஃபலாஹ்

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்


இதன் பொருள்:

அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்

(அல்லாஹ் என்றால் ஏக இறைவன்)

வேறு அல்லாஹ் இல்லை அல்லாஹ் ஒருவனைத் தவிர என்று சாட்சியம் கூறுகின்றேன்
வேறு அல்லாஹ் இல்லை அல்லாஹ் ஒருவனைத் தவிர என்று சாட்சியம் கூறுகின்றேன்

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் கூறுகின்றேன்
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் கூறுகின்றேன்

தொழுகைக்கு வாருங்கள்
தொழுகைக்கு வாருங்கள்

வெற்றிபெற வாருங்கள்
வெற்றிபெற வாருங்கள்
(come to attainment, success, salvation)


அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்

Wednesday, October 19, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

என்னுடைய சீன நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் பெயர் எட்வர்ட் லீ..

அவரிடம் ”குட் மார்னிங்..” என்று சொன்னேன்

அவர் திருப்பி கேட்டார், “வாட் இஸ் தேர் டு பி குட் மார்னிங்.. இட்ஸ் எ டெர்ரிபுள் மார்னிங் ஃபார் மீ டுடே..” என்று

அன்றிலிருந்து அவரிடம் அப்படி சொல்வதே இல்லை...
----------------------------------------------------------------------------------------

- ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவில் உள்ள கோத்தா திங்கிக்கு நண்பர்கள் படைசூழ காரில் பயணமானோம்.

கோத்தா திங்கி: http://en.wikipedia.org/wiki/Kota_Tinggi

அங்கே அருவியில் குளித்தி முடித்து தயார் செய்து கொண்டு சென்ற சோறு கறியை எல்லாம் சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தோம்.

நான் நாகூரில் உடுத்துவது போல் கைலியை உடுத்தி இருந்தேன்.

அப்போது நண்பர் ஒருவரிடம் பெருமையாக கைலியை பற்றி பேசிக் கொண்டிருந்தேன், ”எங்க ஊர்லயெல்லாம் இப்படி தான்.. கைலிய உடுத்திகிட்டு தலைல தொப்பிய போட்டுகிட்டு..”அஸ்ஸலாமு அலைக்கும்”ன்னு...

நான் சொல்லி முடிக்கும் முன்னரே

அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருவர் நின்று தலைசாய்த்து

“வ அலைக்கும் ஸலாம்..” என்று பதிலளித்தார்

நான் அவரை நோக்கி புன்முறுவல் பூத்தேன்..

நண்பர் ஆச்சர்யப்பட்டார்.
-------------------------------------------------------------------------------------
படித்தவையிலிருந்து:

மொழிபெயர்ப்பு நூல்:
அரேபியாவில் சில நாள் (வில்லியம் லூயி)

தமிழில் ஆசிரியர்:
எனது ஆசான்: மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்

முதற் பதிப்பு வெளியான ஆண்டு:
பிப்ரவரி 1958

‘மணிவிளக்கு’ சஞ்சிகையில் ‘மக்கா யாத்திரை’ என்ற பெயரில் வெளியான கட்டுரை.

வில்லியம் லூயி என்பார் தனது மனைவி ஹெலனுக்கு எழுதிய கடிதம்:
....
அராபியர்கள் ஒருவரை யொருவர் சந்திக்கும் போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பார் ஒருவர். அதற்கு மற்றவர் உடனே பதிலளிப்பார், ‘வ அலைக்கு முஸ்ஸலாம்’ என்று. இவற்றிற்கு முறையே ‘இறையருள் உங்களுக்கு உண்டாகட்டும்’ என்றும், ‘உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும்’ என்றும் பொருளாம். என் நண்பர் இதைச் சொன்னார்.

இவ்வித உரையாடல் நண்பர்களுக்கு மத்தியில் தான் நடைபெறும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் “முஸ்லிம் என்ற சகலரிடமும் இத்தகைய உரையாடல் நடைபெறலாம்” என்று நண்பர் விளக்கினார். “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு வந்தனம் செலுத்தலாம். அப்படித்தான் செலுத்துகிறார்கள் அராபியர்கள், இவ்வாறுதான் நபி முஹம்மது அவர்கள் கற்பித்தார்கள்.”

அன்று ஒரு நாள் சில சாமான்கள் வாங்கும் பொருட்டு கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். நண்பரும் என்னுடன் வந்தார். ஒரு கடையில் நண்பர் பேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு எதிரில் ஒரு அராபியர் வந்தார். அதோடு சும்மா இருந்துவிடவில்லை. “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றும் கூறி விட்டார். பாவம், என்னை அவர் ஒரு முஸ்லிம் என்று எண்ணி விட்டார் போலும்!

இவ்வாறு சொல்லப்பட்ட உடனேயே பதிலளித்து விட வேண்டுமாம. எனக்கு அது தெரியாது. அதற்குரிய விடையும் மறந்துபோய்விட்டது. எத்தனை விவரங்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்!

என்னிடமிருந்து விடை வராததால் அந்த அரேபியர் என்னை முறைத்துப் பார்த்தார். நான் என்ன செய்யலாம்? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, மறந்து போன அந்த விடையாவது நினைவிற்கு வருகிறதா? அதுதான் கிடையாது. ஓடி விடலாமா என்று கூட எண்ணி விட்டேன்.

அந்த சமயத்தில் நல்லை வேலையாக நண்பர் குறுக்கிட்டார். அந்த அராபியரிடம் ஏதேதோ புரியாத மொழியில் பேசினார். அராபியரின் முகம் தெளிந்தது. புன்னகையுடன் என்னை நெருங்கி முதுகில் ஒரு தட்டு தட்டினார். மறுபடியும் அரபி மொழியில் ஏதோ சில வார்த்தைகளை உதிர்த்தார். எனக்குப் புரியவில்லை. நண்பரைப் பார்த்தேன். “ஒன்றுமில்லை, ‘எல்லா இடங்களையும் சுற்றிப் பாருங்கள்!” என்று தான் கூறுகிறார்” என்றார் நண்பர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பது நண்பர்களுக்கு மட்டுமல்ல, எல்லா முஸ்லிம்களுக்கும் சொந்தம் என்ற விவரம் கண்கூடாகத் தெரிந்தது,  ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாக்கியத்திற்கு இருக்கும் மதிப்பு அளவிடர்கரியது. இரண்டு உள்ளங்களை அல்லவா அது பிணைத்து விடுகிறது.
......
---------------------------------------------------------------------------
குரான் ஷரீஃப்


அத்தியாயம்: 4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)


வசனம்: 86


உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது , அதற்கு பிரதியாக அதைவிட அழகான ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பி கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான்.


ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவை:


ஆறு குணங்களை இறை நம்பிக்கையாளர்கள் வெளிப்படுத்த வேண்டும்..


அதில் ஒன்று.. 


ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறிக் கொள்வது.


பிறிதோரிடத்தில் அவர்கள் (ஸல்) சொன்னார்கள்:


ஓ மக்களே!
ஸலாத்தை பரப்புங்கள்
உணவளியுங்கள் (ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும்)
உங்களுடைய ரத்த சொந்தமுடையவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
மற்றவர் உறங்கும் போது எழுந்து தொழுகை செய்யுங்கள்
சாந்தியுடன் சொர்க்கம் செல்வதற்குறிய வழி
-----------------------------------------------------------------------



-----------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் (இறையருள்) உண்டாகுக!

Peace be with you!


இது எங்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவை தான். ஆனால் இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. பெருமானார் (ஸல்) அவர்கள் ஒழுங்கு படுத்தி அழகு படுத்தினார்கள்.


புதிய ஏற்பாட்டின் படி பார்த்தாலும் நபி ஈஸா (அலை) அவர்களும் இவ்வகையான வந்தனத்தை கூறியுள்ளார்கள்:


ஆதாரம்: Luke 24:36


http://www.biblegateway.com/passage/?search=Luke+24%3A36-49&version=NIV

While they were still talking about this, Jesus himself stood among them and said to them, “Peace be with you.”


ஆதாரம்: John 20: 19 - 21 


http://www.biblegateway.com/passage/?search=John+20%3A19-23&version=NIV

On the evening of that first day of the week, when the disciples were together, with the doors locked for fear of the Jewish leaders, Jesus came and stood among them and said, “Peace be with you!” 


After he said this, he showed them his hands and side. The disciples were overjoyed when they saw the Lord. 


Again Jesus said, Peace be with you! As the Father has sent me, I am sending you.” 22 And with that he breathed on them and said, “Receive the Holy Spirit. 23 If you forgive anyone’s sins, their sins are forgiven; if you do not forgive them, they are not forgiven.”
--------------------------------------------------------------------------
Link: http://www.muslimtents.com/aminahsworld/Salaam.html

Saturday, October 15, 2011

சாலையில் வாழ்நாளை கழிக்கின்றேன் - குல்ஜார் சாபின் ‘நம்கீன்’ பட பாடல்

சாலையில்
வாழ்நாளை கழிக்கும்
ஒரு வழிபோக்கர்
கெருலால்.

தனது பயணங்களின்
நடுவே
ஒரு முறை

சிலநாள் மட்டும்
ஓர் ஊரில் (ஹிமாச்சல் பிரதேஷ்)
தங்க நேர்கிறது.

அது ஒரு
சிறிய கிராமம்
அங்கே
உயிர் விட
தயாராயிருக்கும்
மாடி வீடு
நான்கு பெண்மணிகள்
வசிக்கும்
அழகிய கூடு

அம்மா -
நாட்டின் தலைவி
அல்ல
இவர் குடும்ப தலைவி
ஆனாலும் ஒற்றுமை
ஒன்றுண்டு
இவருக்கும்
மறதி உண்டு

பேசும் பேச்சு
ஒருசாராரின்
கலாச்சாரமாய்
கருதிய காலமுண்டு

கலாச்சாரத்தில்
இடிவிழுந்ததாலோ
என்னவோ
இவர்

தனக்குத்தானாக
பேசிக்
கொள்வதுமுண்டு

இவருக்கு
வயிற்றில் முளைத்த
மூன்று முகங்கள்

நிம்க்கி, மித்து, சிங்க்கி

பருவ மேகம்
வந்த பின்னும்
மழை பொய்த்த
பூமி
இவர்கள்

கெருலாலின்
வாகனம்
இங்கே தான்
ஓய்வு கேட்டது

ஆரம்பத்தில்
பழைய வண்டியாய்
மக்கர் செய்தாலும்
பழகப்பழக
விரைவுச் சாலை
பயணமாய் தொடர்கிறது..
வாழ்க்கை

கடைசி கியரில்
அதிவேக
பயணம்
விபத்தாய்
அமைகிறது
“வெளியூர்
செல்லும் படி”
வந்த
மேலாளரின்
உத்திரவு...

அந்த வாழ்க்கை
பயணத்தை
முடித்துக் கொண்டு
இந்த
சாலை பயணத்தை
தொடங்குகிறார்
நம் கெருலால் -

இதோ
வழிபோக்கர்களின்
உலக கீதம்...


---------------------------------------------------
படத்தில் வரும் காட்சி கீழே...

raah pe rahate hai, yaadon pe basar karate hai

khush raho yehale watan  hum to safar karate hai

சாலையில்
வசிக்கின்றேன்
நினைவுகளில்
வாழ்கின்றேன்

என் சொந்தங்களே..!
மகிழ்வாய் இருங்கள்
நான்
இதோ
இப்போது
என் பயணத்தை
மேற்கொள்கின்றேன்!!


jal gaye jo dhoonp mein to saayaa ho gaye
aasamaan kaa koee konaa, thodaa so gaye
jo gujar jaatee hain bas  us pe gujar karate hai
முதல் சரணம்: கடும் வெயில் கொதிக்கும் அனல்

கொளுத்தும் கதிரில்
எரியும் உடலில்
நிழலை தேடினேன்
வானின் குடையில்
ஏதோஒரு மூலையில்
உறங்கி போகின்றேன்
கடந்து போகின்ற
ஒன்றில்
தங்கி போகின்றேன்
நான்


(வாட்டும் வெயிலில் ஓய்வு ஒழிச்சலின்றி பயணம் மேற்கொள்ளும் லாரி ஓட்டுபவர்கள் பயணத்தின் 
நடுவே சாலையில் தங்கி ஓய்வெடுப்பதுண்டு - அனைவரும் ஒரு நிமிடமும் நிற்க விரும்பாத கடந்து 
செல்கின்ற இந்த சாலையின் நடுவே தான் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்)

udate pairo ke tale jab bahatee hain jameen
mud ke humane koee manjil dekhee hee nahee
raat din raahon pe hum  shaam o shehar karate hai 

இரண்டாம் சரணம்: கடும் குளிர் குளுவும் மழை

பாதத்தின் கீழே
பறக்கும் பூமி
ஆறாய் ஓடுகிறது
அவசர கதியில்
விடுபட்ட வாழ்வை
மறந்தே போகின்றேன்
ராவும்பகலும் சாலையில்
நான்
ஓய்வெடுக்கும் இடமே
என்நகரம்



(அதிவேகமாக பயணம் செய்யும் போது சாலையை கவனித்தால் 
அது பறந்து போகின்ற மாதிரி - 
ஆறு ஓடுவது போல் ஓடிக் கொண்டே இருப்பதை கவனித்திருக்கலாம் - 
இத்தகைய அவசர பயணத்தில் வாழ்வின் அழகான பக்கங்களை 
திரும்பி பார்க்க நேரமிருப்பதில்லை - நம் முகத்தில் ’கண்’ முன்னே தானே இருக்கிறது 
அதனால் இருக்கலாம் - இதற்கு நடுவே இவர்கள் ஓய்வெடுக்கும் இடமே இவர்களின் ஊராகிறது)   

aise ujde aashiyaane tinke udgaye
bastiyon tak aate aate raste mud gaye
hum thahar jaaye jahaan ho usko sehar karte hai

மூன்றாம் சரணம்: கடும் காற்று அலைகழிக்கும் புயல்

கனவுகூடு அழிகின்றது
நினைவு குடிலோ
சிதறுகின்றது
இலக்கை நோக்கி
செல்ல செல்ல
பாதை மாறுகின்றது
பயண வழியில்
எங்கேனும்
நிறுத்திய இடமே
என்நகரம்

(கோட்டை போல் கட்டிய ஏழைகளின் கனவுகள் எல்லாம் பணக்காரர்களின் காணும்
கனவுகளால் இடிந்து போகின்றது -
ஏழைகளான இவர்கள் முன்னேறி செல்ல செல்ல பணக்காரர்கள் பாதைகளை
இவர்களின் வசதிக்கு ஏற்றாற் போல் மாற்றி மாற்றி அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் -
கண் சரியாக பார்க்காமல் போன தவற்றால் தவறி விழுந்தாலும் காலில் அடிபட்டால்
வலி காலுக்கு தானே வரும் - கண்களுக்கு வராது அல்லவா? -
அது போலே பணக்காரர்கள் தவறு செய்தாலும் ஏழைகளுக்கே வலி 
வந்து சேருகிறது - நாளின் முடிவில் இவர்கள் எந்த ஊரில் வண்டியை நிறுத்த
நேருகிறதோ அந்த இடமே இவர்களின் நகரமாகிறது)


விசில் அடிச்சி கூப்பிடறது
விசில் அடிச்சி ரசிக்கிறது
இப்படி எதுவுமே
எனக்கு பிடிக்காது
ஆனால்
இந்த விசில்....



------------------------------------


நம்கீன் - இந்த படத்தின் ஆடியோ கேஸட்டில் குல்ஜார் சாப் பேசுவார்.
இதனை அப்படியே இங்கே எழுதி விடுகிறேன்..


ராஹோன் பெ ரெஹ்னே வாலே யெ முஸாஃபிர் - கெருலால்
ஸஃபர் ஸஃபர் கர்தே கர்தே
எக் பார் தூர்
தராஜ் கெ பஹாதோன் மெய்ன் ஜா கர் ருக் கயா

எக் சோட்டா ஸா காவோன் தா
ஆர்
உஸ் காவோன் மெய்ன்
டூட்டா பூட்டா ஸெ எக் கர்

ஜஹான் சார் அவ்ரத்தோன் கா ஏக்
அதூர்சா பரிவார் ரெஹ்தா தா


அம்மா தி ஸாத் ஸெ ஊப்பர் கி
குச் ஸாத்தியாயி ஹுயி சி
குச் பெகி ஹுயி
அப்னே ஆப் ஹி செ பாத்தேன் கர்தி ரெஹ்தி தி

ஆர் உஸ் கி தீன் பேடியான்
நிம்க்கி, மித்து ஆர் சிங்க்கி
ஸாதி கிஸி கி நஹி ஹோ பாயி

லோக் கெஹ்தெ ஹெய்ன்
மா பாப் கெ
சீந்தெ நா படெ ஹொன்தெ
தொ தீனோ பிஹாயி ஜாதின்
தேக்னெ மெய்ன் பி தொ ஆகிர், அச்சே: காஸி ஹெய்ன்

படி
ஸாதி ஸெ
உம்ர் ஸெ
குஜர் சுகி ஹெ

ஆர் சோட்டி
லட்கோன் கி தரா
ராஸ்தோன் மெய்ன்
துட்டெ மார்த்தி ச்சல்த்தி ஹெய்ன்

ஸாதி கி
உம்ர் கோ
பஸ் பஹுன்ச்சி கி
அப் பஹுன்ச்சி

ஆர் மன்ஜ்லி
பெச்சாரி குங்கி ஹெய்
கெருலால் நெ அக்ஸர் உஸெ
குங்குனாதெ சுனா ஹெய்
பெஹ்னெய்ன் கெஹ்தி ஹெய்ன் கி
வொஹ் கீத் லிகா கர்த்தி ஹெய்ன்