Wednesday, August 18, 2010

வேகமாகச் செல்லுபவை - குரான் ஷரீஃப்

ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) - 


குரான் ஷரீஃபின் 100 வது அத்தியாயம்

1 - மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக

2 - பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

3 - பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்

4 - மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

5 - அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக

6 - நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்


7 - அன்றியும் நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்


8 - இன்னும், அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்

9 - அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது

10 - மேலும் இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது

11 - நிச்சயமாக, அவர்களுடைய இறைவன், அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்

*************************************************************

1 comment:

nagoreismail said...

பசித்திருக்கும் நோன்பு நேரத்தில் ‘ராத்திரி சாப்பாட்டை’ ஞாபகப் படுத்தியிருக்கிறீர்கள்.

உங்க ‘மனசு’க்கு ரொம்ப நன்றி

வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்லும் உங்கள் மனசுக்கும் சேர்த்து தான் நன்றி சொல்கிறேன்