Friday, August 13, 2010

மனிதர்கள், அதிகாலை, ஏகத்துவம் - குரான் ஷரீஃப்

குரான் ஷரீஃப்

... மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

...and recite the Qur’an in slow, measured rhythmic tones.

74 வது அத்தியாயம் ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
4வது வசனம்

*****************************************************************************

ஸூரா நாஸ் (நாஸ் - மனிதர்கள்)

114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2 (அவனே) மனிதர்களின் அரசன்;

114.3 (அவனே) மனிதர்களின் நாயன்.

114.4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

114.5 அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

114.6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.



*******************************************************************************************************


ஸுரா ஃபலக் (ஃபலக் - அதிகாலை)

113.1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

113.2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

113.3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

113.4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

113.5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).







**********************************************************************

ஸூரா அல்-இக்லாஸ் (அல்-இக்லாஸ் - ஏகத்துவம்)

112.1 (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

112.2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112.3 அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

112.4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.






**********************************************************************************************************

2 comments:

புல்லாங்குழல் said...

நல்ல முயற்சி. உங்கள் நல்லெண்ணத்திற்கு இறைவன் நிச்சயம் நற்கூலி வழங்குவான்.

nagoreismail said...

ஸலாமலைக்கும் நூருல் அமீன்..

வருகைக்கும் துவாவுக்கும் நன்றிகள்

உங்களின் "அகப்பார்வை" எனும் நூலை நான் படித்திருக்கிறேன்.

எனது மச்சான் நாகை சர் அஹம்து தெருவை சேர்ந்த முஹம்மது அவர்கள் கொடுத்தார்..

ரமலான் முபாரக்