அப்படி செய்வதற்கு அதாவது hazard ஐ நீக்குவதற்கு அல்லது riskஐ குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பாதுகாப்பில் அடங்கும்.
உதாரணமாக, ....(தொடரும்..)
------------------------------------------------------
உதாரணமாக
வேலையிட ஆபத்து என்பது கடினமான இயந்திரங்களில் கட்டுமான பணியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமல்ல ஹெல்மெட்டே போடாமல் டை கட்டிக் கொண்டு ஏஸியின் கீழே உட்கார்ந்து கொண்டு எந்த ஒரு பாரத்தையும் தூக்கி வெயிலையே பார்க்காதவர்களுக்கு கூட வரலாம்..
எப்படியெனில்.. தொடர்ச்சியாக கணினியை பார்த்துக் கொண்டே இருப்பதை எடுத்துக் கொண்டால் கண் வலி, கழுத்து வலி, கை வலி எல்லாம் வந்து தொலைக்கும். இப்படி வரும் ஆபத்துகளை ergonomic hazards என்பார்கள்.
(hazardsஐ பல வகையாக classify பண்ணலாம். physical hazards (e.g. noise, heat, vibration), chemical hazards (toxic, flammable, explosive, acid, alkali), electric hazards (damaged cable, damage socket, electrical overload), mechanical hazards (unguarded rotary parts of the machine), biological hazards (bacteria, virus causes various infectious diseases such as SARS,தற்போது பயமுறுத்தி கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல்) அந்த வகையில் நாம் மேலே கணினியினால் வரும் இந்த பாதிப்புக்கு ergonomic hazard என்று பெயர்)
இந்த பல வலிகளை வராமல் தடுக்க ஒரு வழி அல்ல பல வழிகள் உள்ளது. இந்த வழிகளை கட்டுபடுத்தும் வரிசைமுறை என்று சொல்வார்கள், அதாவது ஆங்கிலத்தில் Hierarchy of Controls என்று சொல்வார்கள்.
இந்த வரிசையில் முதலாவதாக வருவது “நீக்குதல்” (Elimination) - அதாவது எது ஆபத்து ஏற்படுத்துகிறதோ அதனை முற்றிலுமாக நீக்கி விடுதல்.
அதாவது கணினியை அலுவலகத்திலிருந்து அகற்றி விடுவது. (இப்படி சொன்னால் சண்டைக்கு எல்லாம் வரக் கூடாது)
பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் அப்படி நீக்கி விடுவது ஒன்றும் தவறல்ல.. உதாரணமாக, ஆஸ்பெஸ்டாஸ் என்று ஒரு கனிமம் உள்ளது. அது fire proof க்காக கூரைகளில் எல்லாம் பயன்படுத்தப் பட்டு வந்தது.
ஆனால் இது சிங்கப்பூரில் முற்றிலுமாக தடை செய்து விட்டார்கள். ஏன் என்றால் இது நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும்.
அதை நீக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் hierarchy of control இருக்கும் ஒரு வழிகளில் கணினியை நீக்குவது தான் முதலாவது வரிசையில் உள்ளது.
இது சரியாக வராது அதாவது reasonably practicable இல்லை என்றால் இரண்டாவது வரிசையில் இருக்கும் கட்டுபடுத்தும் முறைக்கு செல்லலாம்.
(குறிப்பு:
“reasonably practicable” என்பது சிங்கப்பூர் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அழகான அர்த்தமுள்ள வார்த்தை..
அதாவது வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலையினால் ஆபத்து காத்து இருக்கிறது. அந்த வேலையின் போது ஏற்படும் ஆபத்துகளினால் ஏற்படும் விளைவுகளை தடுக்க முதலாளி reasonably practicable நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
reasonably - can afford to do it, செலவு செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்
practicable - capable of being done, நடைமுறைக்கு சாத்தியமானதாக இருத்தல் வேண்டும்)
அப்படி இரண்டாவது வரிசையில் இருப்பது "substitute" மாற்றுதல் என்பதாகும். இதை ஒரு உதாரணம் மூலமாக சொல்வதென்றால் வாள் போய் கத்தி வந்தது என்பார்கள் அல்லவா? அதுவே தான். ஆஸ்பெஸ்டாஸுக்கு பதிலாக கேல்சியம் சிலிகேட் பயன்படுத்துவதை இது குறிக்கும். ஆஸ்பெஸ்டாஸ் என்ன தேவைக்கு பயன்படுத்தினோமோ அந்த தேவையை இது நிறைவேற்றி விடும், அதே சமயத்தில் ஆஸ்பெஸ்டாஸால் வரும் பேராபத்து இதில் இல்லை.
கணினிக்கு பதிலாக வேறொரு வேலைக்கு வேறொரு வழிமுறையை கையாள்வது. இதற்கும் (reasonably practicable) சாத்தியமில்லை என்றால் மூன்றாவது வரிசைக்கு தாவ வேண்டியது தான்.
மூன்றாவது வரிசையில் இருப்பது "Engineering Controls" - பொறியியல் கட்டுப்பாடுகள்
glare, contrast இவைகளை சரி செய்தால் நம்ப முடியாத அளவிற்கு கண் வலியை குறைத்து விடும். நல்ல வெளிச்சம் இருத்தல் வேண்டும். கணினி அமைந்திருக்கும் இடம் உங்கள் கண்களுக்கு ஏற்றவாறு அமைத்தல் வேண்டும்.
இந்த தளத்திற்கு சென்று விட்டு வாருங்கள்: http://ergonomics.about.com/od/office/ss/computer_setup.htm
இதற்கு அடுத்த வரிசையில் வருவது management/administrative controls - நிர்வாக நடவடிக்கைகள்
20 நிமிடத்திற்கு ஒரு தரம் கணினி திரையிலிருந்து கண்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும். தூரத்தில் உள்ளதை அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும்.
கட்டக் கடைசியாக வருவது "Personal Protective Equipment" - சுய பாதுகாப்பு சாதனங்கள்
Anti-radiation வகை கண்ணாடிகளை அணிந்து கொள்வதை இது குறிக்கும்.
இப்படியாக ஆபத்தினால் ஏற்படும் விளைவுகளை தடுக்க சரியான, முறையான நடவடிக்கைகளை எடுத்து கண்களை கணினி திரையிலிருந்து வெளியாகும் கதிரிலிருந்தும், நமக்கு பிடிக்காததை அல்லது பிடிக்காதவர் எழுதியதை நல்லா உருக்கி அந்த எழுத்தையே எரித்து விடுவது போல் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லா... இவ்வளவு நேரம் குனிஞ்சு எழுதுனதுல கழுத்த சுளுக்கிகிச்சு.. எந்த கண்ட்ரோல யூஸ் பண்ணலாம்...
Elimination....?

No comments:
Post a Comment