உலகெங்கிலும் இன்றைக்கு பல் வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கிடையே பகைமை உணர்வு மேலோங்கி கிடக்கிறது. ஆனால் சிங்கப்பூர் மட்டும் எந்த வித பகைமை உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் அரசாங்கத்தின் திறமையான நிர்வாகத்தால் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சிங்கப்பூரில் Inter-Religious Organisation (IRO) எனும் அமைப்பு இயங்கி வருகிறது. மனித வள அமைச்சில் என்னுடைய பழைய மேலதிகாரியான் திரு. அமீர் அலி அப்தே அலி என்பவர்கள் தான் இதன் முந்தைய தலைவராக இருந்து வந்தார்கள்.
அண்டை நாடுகளிலெல்லாம் மதப் பூசல்கள் ஏற்படும் போது IRO அமைப்பு பல் வேறு நிகழ்வுகளை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்த தேசிய கடமையாற்றி வருகிறது.
தேசிய தொழிற் சங்க காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் மலாய் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரே ஒரு ரேசியல் கமெண்டை தனது ஃபேஸ் புக்கில் பதிவு செய்து விட்டார். பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான கமெண்டுகளே பதிவு செய்யப்படுகிறது. உடனே அந்நிறுவனம் அவரை பதவி நீக்கம் அதிரடியாக செய்து விட்டது. அதன் பிறகு அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது வேறு விஷயம்.
எங்களுக்கு எல்லாம் தகவல் அனுப்பப்பட்டது, தகவல் அல்ல கட்டளை என்று தான் சொல்ல வேண்டும், எந்த மத ரீதியான கமெண்டும் எந்த மீடியத்திலும் பதிவு செய்யக் கூடாது.
எனக்கு பல்வேறு மதங்கள் பிடிக்காமல் போகலாம், ஆனால் சிங்கப்பூர் வாசியான எனக்கு என் மதத்தின் அருமை பெருமைகளை பற்றி பேச மட்டுமே இடம் உண்டு, அடுத்த மதத்தை பற்றி விமர்சிக்கவோ அவமதிக்கவோ இடம் கிடையாது.
என் வகுப்பிற்கு வரும் பெரும்பாலானவர்கள் என் மதத்தை சாராதவர்கள் தான், ஒரு முறை எனது வகுப்பிற்கு இங்கே சிங்கையில் கோயில் கட்டுவதற்கு சிற்பிகள் எல்லாம் வந்தார்கள். வேட்டி சட்டை தான் அணிந்து வந்தார்கள். எல்லோரையும் அன்புடன் தம்பி அல்லது அண்ணன் என்று தான் அழைத்து பழகினேன்.
மத ரீதியான மனதை புண்படுத்தும் பதிவுகளை எவராகிலும் பதிவு செய்தால் சிங்கப்பூர் பகைச் செயல் குற்ற தடுப்பு சட்டத்தின் படி முதல் தடவை குற்றத்துக்கு 5,000 சிங்கப்பூர் வெள்ளி அபராதம் 3 வருட சிறை தண்டனை (அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டு தண்டனையும்) இரண்டாவதும் அதை தொடர்ந்து செய்யும் குற்றத்துக்கும் 5 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும்.
நான் என் பதிவில் எங்கேனும் யார் மனதையும் புண்படுத்தும் படி எழுதியிருந்ததாக குறிப்பிட்டால் எந்த நிபந்தனையும் இல்லாமல் மன்னிப்பு கேட்டு நீக்க கடமைப்பட்டுள்ளேன்.
எல்லோரும் இணக்கமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் காரணம்.
No comments:
Post a Comment