நான் எப்பவோ எழுதி பாதியிலே எழுதாமல் விட்ட கதை, பழைய கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்த போது அகப்பட்டது, அப்படியே பதிவிடலாம் என்று தோன்றியது.
இது வரை 3 அத்தியாயங்கள் மட்டுமே எழுதி இருந்திருக்கிறேன். இப்போதைக்கு முதல் அத்தியாயம் மட்டும் இங்கே..
துளசி
1 - கல்லூரி நாட்கள்
ராஜாராமன் லட்சுமி தம்பதியரின் குடும்பமே ஒரு பல்கழைக்கழகம் தான். ராஜாராமன் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி லட்சுமி அதே பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். இவர்களின் ஒரே மகளின் பெயர் துளசி. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் துளசி அந்த ஊரில் இருந்த பொறியியல் கல்லூரிக்கு முதல் நாள் வகுப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.
துளசி கல்லூரிக்கு செல்வதற்குள் அவளை பற்றிய சில தகவல்களை சொல்லி முடித்து விட கடமைப் பட்டுள்ளேன். இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்றோ அல்லது இது உயர்ந்த வேலை, இது தாழ்ந்த வேலை என்றெல்லாமோ பார்க்க மாட்டாள், எந்த வேலையை கொடுத்தாலும் ஈடுபாட்டோடு செய்வாள். செய்யும் வேலையை ஒழுங்காக செய் என்பதே இவளது தெய்வீக மந்திரம். மனிதராக இருந்தால் போதும் - இவளுக்கு, நல்லவிதமாக பழகுவாள். ஒரு முறை இவளது வீட்டில் வேலை பார்த்த மங்கை என்பவரின் குழந்தைக்கு ஏதோ பெயர் சொல்லாத கடும் வியாதி வந்து விட்டது. அந்த குழந்தைக்கு குணமாக வேண்டி 9 வியாழக்கிழமை விரதம் இருந்தாள். மருத்துவம், வேண்டுதல் எல்லாத்தையும் மீறி இவளது நல்ல குணம் அந்த குழந்தையை குணப்படுத்தியதாக தான் மங்கை நம்பினாள். மங்கைக்கு உடல் நலம் இல்லாமல் இருந்தால் அல்லது வேறு ஏதோ காரணத்தால் முடியாமல் இருந்தால் வீட்டை பெருக்கி கூட்டி சுத்தம் செய்து விடுவாள். சும்மாவே இருக்க மாட்டாள், வீட்டை அலங்கரிப்பாள், எம்பிராய்டரி போடுவாள், ஓவியம் வரைவாள். தேநீர் நன்றாக போடுவாள் ஆனால் தேநீர் அறவே குடிக்க பிடிக்காது இவளுக்கு.
அவளின் அழகை பற்றி நான் எழுத ஆரம்பித்தால், நான் எழுதி முடிப்பதற்குள், நீங்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் எண்ணி முடித்திருப்பீர்கள். அவ்வளவு எழுதலாம். நான் சொல்ல வருகின்ற அழகு நிறத்தை தோற்றத்தை மட்டும் குறிப்பிடுபவை அல்ல குணத்தை நன்னடத்தை போன்றவைகளையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன்.
கல்லூரியில் முதல் நாள் வகுப்பு அறிமுக நேரங்களாக தான் இருந்தது. துளசியுடன் பள்ளியில் படித்த யாரும் இந்த கல்லூரியில் சேரவில்லை. இவளுக்கு எல்லோருமே புதுமுகங்கள் தான். தேநீர் இடைவேளையில் எல்லோரும் வெளியே போன பிறகும் துளசி தனது இருக்கையிலேயே அமர்ந்து வழங்கப்பட்ட புஸ்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தாள்.
'எக்ஸ்கியூஸ்மி..' குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
அவன் வாயில் புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். நல்ல வளர்த்தி, ஆள் பார்ப்பதற்கு திரை நடிகர் மாதவனை கொஞ்சூண்டு ஞாபகப் படுத்தினான்.
'யெஸ்..' எழுந்து நின்றாள்.
அவன் கையை நீட்டினான், 'ஐயம் துரை..' என்றான்.
பதிலுக்கு கையை பட்டும் படாமல் குலுக்கி விட்டு, 'ஐயம் துளசி..' என்றாள்.
துரை இரண்டு விரலை நீட்டி 'இதுல ஒரு விரல தொடுங்க..' என்றான் புன்னகை மாறாமல்.
'ஐயம் சாரி.. எனக்கு புரியல.. எதுக்கு இதெல்லாம்..' புரியாமல் பார்த்தாள், கேட்டாள்.
'தப்பா நினைக்காதீங்க.. நான் தனியா கேன்டீன் போறதா?, உங்களோட போறதான்னு ஒரு சின்ன டெஸ்ட், நான் எப்போதும் இப்படி தான்.. இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்ல..' விளக்கினான்.
'நம்பலாமா..?' முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டாள்.
'சத்தியமாங்க.. நான் டீ பிரேக்ல பொய்யே சொல்ல மாட்டேன்.. நம்பலாம்.. தொடுங்களேன்..' என்றான்
'..ம்ம்ம்ம்ம்ம்.....' தொட்டாள்.
'யெஸ்.. நீங்க என் கூட வர்ரீங்க..' என்றான்.
'வர்ரத பத்தி ஒண்ணும் இல்ல.. நான் டீ காஃபி குடிக்க மாட்டேன்' என்றாள்.
'டீ காஃபி சேர்ந்து குடிக்க கூடாதுங்க.. ஏதாவது ஒன்னு தான் குடிக்கனும்..' என்றான்.
'சத்தியமா சொல்றேன்.. எவ்வளவோ டிரை பண்ணி பார்த்தேன்.. சிரிப்பே வரலை..' என்றாள்.
'சரிங்க.. அங்கே இருக்குற சிநேக்ஸயாவது வயித்துக்கு அனுப்புவோம்..வாங்க..' என்றான்.
கேன்டீன்.
'உண்மைய சொல்லுங்க.. ரெண்டு விரல்லயும் என்னோட சாப்பிடணும்னு தானே நினைச்சிருந்தீங்க' என்றாள்.
'நான் அப்படி எல்லாம் நினைப்பேனா..? ஒரு விரல்ல நாம சாப்பிடறதுக்கு நீங்க தான் காசு குடுக்கணும், இன்னொரு விரல்ல நான் தான் காசு குடுக்கணும்னு நினைச்சிருந்தேன், நீங்க தாராளம், இப்ப நீங்க தான் காசு கொடுக்கணும்.. கொடுங்க..' என்றான்.
இதயம் எனும் படம் கல்லூரி மாணவர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டதால் அரங்கத்தில் இடம் இல்லாமல் பலர் தவித்தனர். அப்படி தவித்த பலரில் அன்றைய தினத்தில் நம்ம துரையும் அடக்கம். 'என்னடா.. இது.. டிக்கெட் இல்லையே?' என்று யோசித்த விநாடி யாரையோ பார்த்து விட்டு வாய்க்குள் விசிலடித்தான். பெண்களுக்கான டிக்கெட் வழங்கும் பகுதி தனியாக இருந்தது, அங்கு கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது, அந்த கூட்டத்தில் துளசியும் நின்றிருந்தாள். வெயில் தாங்காமல் தலையில் சுடிதாரின் துப்பட்டாவை போட்டு மறைத்திருந்தாள்.
துரை, 'ஹாய்.. என்னங்க, எனக்கு தெரியகூடாதுன்னு தானே இப்படி தலையில துப்பட்டாவ வச்சு மறச்சுட்டு நிக்கறீங்க?' என்றான்.
'இல்லங்க நீங்க வேற..' என்றாள்.
'பின்னே என்ன கப்பல் கவுந்துடுச்சா..' என்றான்.
'வெயில் கொடுமையே தேவல போலருக்கு' என்றாள்.
'சரிங்க நீங்க என்ன அடிக்கிறதுக்குள்ளே, வந்த விஷயத்த சொல்லிடறேன், எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க முடியுமா?' என்று கேட்டான்.
துளசி இரண்டு விரலை நீட்டி ஒன்றை தொட சொன்னாள். யோசிக்காமல் பட்டென்று தொட்டான்.
'போச்சு..' என்றாள்.
'என்னங்க.. எனக்கு டிக்கெட் எடுக்க மாட்டீங்களா..?' என்றான்.
'அதில்லைங்க.. என் டிக்கெட்டுக்கும் நீங்க தான் காசு கொடுக்கணும்..' என்றாள்.
துரை வாய் விட்டு சிரித்தான்.
அடுத்த நாள்,
'படம் எப்படி?' என்றான்.
'நல்லா தானே இருந்துச்சு, ஆனா.., இந்த காதலில் எல்லாம் எனக்கு பெரிசா ஈடுபாடு இல்லை, அதனால, எனக்கு பெரிசா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தல..' என்றாள்.
'இப்படி சொல்றவங்க தான் நாளைக்கு காதல்.. காதால்.. காதல்.. காதல் இல்லையேல் சாதல்ன்னு டயலாக் உடுவாங்க' என்றான்.
'இப்போதைக்கு படிப்பு மேல தான் எனக்கு காதல்.. படிப்பு இல்லையேல் சாதல் தான், கரெக்டா..?' என்றாள்.
'நீங்க இப்படி சொல்றீங்க, என்னோட காதல் ஒரு லவ் லெட்டரால கெட்டு போச்சு' என்றான்.
'எப்படி?' என்றாள்.
'என் கூட ஜெயந்தின்னு ஒரு பொண்ணு படிச்சா, பார்த்தீங்கன்னா, சினிமா நடிகை சுகன்யா மாதிரி இருப்பா,
அழகா இருக்காளேன்னு கவிதை எழுதினேன்
நீயின்றி நானில்லை
நான் குப்பை தொட்டி
நீ பூத்தொட்டி
நாம் இருவரும்
சேர்ந்து செய்வோம்
ஒரு பிள்ளை தொட்டி
'தூ'ன்னு காரி துப்பிட்டு போயிட்டா, அவ துப்பிட்டு போனதுல கூட பெருசா வருத்தம் ஒண்ணுமில்லைங்க, ஆனா அவ சொன்னா பாருங்க ஒரு வார்த்தை, அத தாங்க என்னால தாங்க முடியல' என்றான்.
துளசி சிரித்துக் கொண்டே கேட்டாள், 'என்னா அது..?' என்று
துரை தொடர்ந்தான், 'ஜெயந்தி சொல்றா, 'கண்ணா, நீ வாழ்க்கையில் ரெண்டு விஷயம் மட்டும் எப்பவுமே செய்யாதே, ஒண்ணு கவிதை எழுதுறது, இன்னொன்னு காதலிக்கிறது, நீ நல்லா இருப்பே, நான் சொல்றத கேட்காம எவளயாவது காதலிச்சேன்னு வைய்யி, மவனே, தண்டம் ஒன் தோல உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவேன்னு, ரஜினியையும் நம்பியாரையும் கல்ந்தாப்ல பேசி மிரட்டிட்டு போனாங்க..' என்று துரை பயந்த மாதிரி சொல்ல துளசி சிரிப்பை அடக்க முயன்று தோற்று போய், 'ஜெயந்தி தான் என் குல தெய்வம்..' என்று துரை முறைப்பதையும் பொருட்படுத்தாமல் சிரிசொத்தில்லி(சிரித்து+சொல்லி) முடித்தாள்.
கல்லூரி சுற்றுலா..
பேருந்து புறப்பட சில மணி நேரங்களே இருந்தன.. துரையின் கண்கள் துளசியை தேடின.. இன்னமும் ஏன் வரவில்லை?.. அவன் கண்களுக்கு எல்லாமே கருப்பு வெள்ளையில் தெரிந்தது. வீட்டில் ஏதேனும் நிலைமை சரியில்லாமல் வராமல் போய் விடுவாளோ?, அவள் இல்லை என்றால் இந்த பயணம் ஏதோ கடைசி பயணம் போல் தான் இருக்கும் என உணர்ந்தான்.
அப்பொழுது தான் ஒரு சீருந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தது. சந்தேகமேயில்லை அவளே தான், அவன் கண்களில் நரகாசுரனின் டெத் அன்னிவர்சரி, தீபாவளி என்று சொல்ல வந்தேன்.. இனி இந்த பயணம் புனித பயணமாக தான் இருக்கும் என தோன்றியது அப்போது அவனுக்கு..
இருவரும் அருகருகே அமர்ந்தார்கள். வழி நெடுக துரை துளசியை சிரிக்க வைத்தான். சிறு வயதில் பக்கத்து வீட்டு கொள்ளையில் மாங்காய் திருடியது, பள்ளிகூடத்தில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டது, தயிர் கார அம்மாவை மோதி சைக்கிள் ஓட்ட கத்துக் கொண்டது இப்படியாக அவன் விழுந்து விழுந்து கத்துக் கொண்டதை கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
பிடித்த நடிகர், நடிகை, சிரிப்பு நடிகர், படம், பாடல் இப்படி எல்லாவற்றையும் பேசினார்கள்,
துரை திடீரென்று ஒரு பாடல் பாட ஆரம்பித்தான், திடீரென்று நிறுத்தி, 'நான் நல்லா பாடுறேன்ல..' என்றான்
அதற்கு துளசி, 'ஜெயந்தி இருந்தா உங்க கிட்ட மூணு விஷயம் செய்யக் கூடாதுன்னு சொல்லியிருப்பாங்க, பாடுறது தான் மூணாவது' என்று சிரித்தாள்.
துளசி தங்கியிருந்த அறை கதவு தட்டப்பட்டது. திறந்தாள், துரை நின்றிருந்தான், 'வாங்க' என உள்ளே அழைத்தாள்.
உள்ளே வந்தான், 'எங்கே யாருமே இல்லை?' என்று கேட்டுக் கொண்டே.
'எல்லோரும் வெளியே போயிருக்காங்க.. எனக்கு மயக்கமா இருக்கிற மாதிரி இருந்துச்சு, அதான் நான் போகலை' என்றாள்.
துரை, 'பயன களைப்பா இருக்...' சொல்லிய விநாடி துளசி குமட்டிக் கொண்டு வந்த வாயை பொத்திக் கொண்டு கழிவறைக்கு ஓடி கதவை தாழிட்டு கொண்டாள். ரொம்ப நேரமாகியும் சத்தமும் வராததால் துளசியும் வெளியே வராததால் கழிவறை நோக்கி நகர்ந்தான், 'துளசி..' என்று அழைத்துக் கொண்டு. கதவு திறக்கப்பட்டது, கிட்டதட்ட மயங்கிய நிலையில் தலையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். 'என்னாச்சு..?' என்றான்.
'என்னன்னே தெரியலைங்க..' என்றாள்.
'இங்கே இருக்க வேண்டாம்., வெளியே வாங்க முதல்ல ..' என்றான்.
வெளியே அழைத்து வந்து உட்கார வைத்தான். 'நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்..' என்றாள்.
'இப்ப என்ன போச்சு, அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீங்க எதயும் நினைக்காதீங்க..' என்றான்.
அவள் பேசினில் அடைத்துக் கொண்டு வடியாமல் வாந்தியாக எடுத்த அஜீரணங்களை பற்றி கவலைப்பட்டாள், யாரும் வர்ரதுக்கு முன்னாடி சுத்தம் செஞ்சுட்டா நல்லா இருக்கும்' என்று துடித்தாள்.
'அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்' என்றவன் ஓடி போய் யாரையோ பார்த்தான், அந்த யாரோ வந்தார்கள், எல்லாம் சரி செய்யப்பட்டது.
துளசி சொன்னாள், 'வழியில ஒரு கடையில புரோட்டா வாங்கி சாப்பிட்டேன் பாருங்க, அதான் எனக்கு ஒத்துக்கல..' என்றாள்.
'சரி இப்ப எப்படி இருக்கு, அத சொல்லுங்க முதல்ல..' என்றான்.
'இப்ப பரவாயில்லை.. சரி நீங்க வெளியே இருக்கீங்களா..?, நான் டிரஸ் சேஞ் பண்ணனும்' என்றாள்.
ஊர் திரும்பியதும், 'நீங்க செஞ்ச உதவியையும் உங்களையும் மறக்கவே முடியாது' என்றாள்.
சில தினங்கள் கழித்து,
துளசி, துரை இன்னும் சில நண்பர்கள் படிப்பு சம்மந்தமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பி.எம்.டபிள்யு சீருந்து வேகமாக உள்ளே நுழைந்து நின்றது. அனைவரின் கவனமும் அந்த காரில் இறங்கியவர்கள் மீது தான் இருந்தது. உள்ளேயிருந்து கல்லூரி முதல்வர் இறங்கினார், கூடவே ஒரு பெண்மணி இறங்கினார். துளசி தன்னை அறியாமல், 'அத்தை..' என்று ஆச்சரியமாக பார்த்தாள்.
அந்த அத்தை துளசியை பார்த்து விட்டு நேராக துளசியை நோக்கி முதல்வருடன் நெருங்கினார். 'துளசி..' என்று அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
'அத்தை.. நீங்க எப்போ..?' என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.
'அதெல்லாம் இருக்கட்டும்.. ' என்றவர் முதல்வரிடம் , 'இது தான் துளசி, எப்படி இருக்கா பாருங்க, தங்க விக்கிரகம் மாதிரி.. இவ தான் எனக்கு மருமகள், நம்ம சுதாகருக்கு இவ தான்னு சின்ன வயசுலேயே முடிவு பண்ணுனதாச்சே..' என்றாள்.
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Friday, November 28, 2008
Sunday, October 19, 2008
முகலே ஆஸம்
முகலே ஆஸம் (மாட்சிமை தங்கிய முகலாய பேரரசு) என்ற படம் இந்திய சினிமாவிற்கே ஒரு பெருமை. 1960ம் ஆண்டு கருப்பு வெள்ளையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு இரட்டிப்பான லாபத்தை சம்பாதித்து கொடுத்த படம்.
சென்ற ஆண்டு இந்த படம் மீண்டும் கலர் படமாக வெளி வந்தது
வெள்ளி விழாவும் கண்டது
இந்த தலைமுறையினரையும் கவர்ந்திருக்கிறது என்றால்,
இந்த படம் தான் காரணமா? இல்லை,
இந்த காதல் தான் காரணமா?... தெரியவில்லை!.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு கவிதையில் காதல் பற்றி இப்படி எழுதினார்
காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள் - என்று.
படத்தின் கதை என்னவோ எல்லோருக்கும் பரிச்சயமான சலிம் - அனார்கலி கதை தான். இந்த கதை உண்மையாக நடந்ததா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் சரியான பதிலாகும். இருந்தும் இந்த படம் இத்தனை தூரம் பாதிப்பை ஏற்படுத்த நிறைய காரணம் உண்டு அந்த பாத்திரத்தில் நடித்த திலீப் குமாரும் மதுபாலாவும் உண்மையான காதலர்களாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த காவிய காதலின் முடிவும் படத்தின் முடிவும் ஒன்று தான்.
சோகம் சோகம் சோகம்.
மதுபாலா என்ற அழகு பதுமை காதலர் தினமாக அனுசரிக்கப்படும் பிப்ரவரி 14ம் தேதி வின்னில் இருந்து இறங்கியது. மும்தாஜ் கான் என்ற இயற் பெயரை கொண்ட இவர் 13ம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார்.
யூசுப் கான் என்ற இயற் பெயரை கொண்ட திலீப் குமார் பாகிஸ்தானில் பிறந்தவர். இருவரும் 1951ம் ஆண்டு ‘தரானா’ என்ற படத்தில் முதன் முதலாக சந்தித்து காதல் மரத்தின் வேர் புதைத்து நீர் பாய்ச்சினர். பிறகு ‘சங்தில்(1952)’ ‘அமர் (1953)’ போன்ற படங்களில் இணைந்து நடித்த போது காதல் துளிர் விட்டு மரமாக வளர ஆரம்பித்தது.
இந்த நிலையில் ‘நயா தவுர்’ எனும் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்கு திலிப் குமாருடன் அனுப்ப மாட்டேன் என்று மதுபாலாவின் தந்தை கூறிய போது காதல் மரம் காயின்றி கனியின்றி வாடி வதங்க ஆரம்பித்தது. இதன் காரணத்தினால் படத்தில் மதுபாலாவிற்கு பதிலாக வைஜெயந்திமாலா நடிக்க ஒப்பந்தமானார்.
ஒரு கட்டத்தில் மதுபாலாவை நிகாஹ் செய்ய வேண்டி காஜியை (திருமண ரெஜிஸ்தரர்) ஏற்பாடு செய்து விட்டு மதுபாலாவிடம் வீட்டை விட்டு வந்து விட வேண்டும் என திலீப் குமார் கூறிய போது அதை மதுபாலா ஏனோ மறுத்து விட்டார். இதன் பிறகு ஒரு கோர்ட் கேஸில் மதுபாலாவிற்கு எதிராக திலீப் குமார் சாட்சியம் கூற நேர்ந்தது, அப்பொழுது திலீப் குமார் நீதிமன்றத்தில், ‘நான் எனது வாழ்நாளின் கடைசி நாள் வரை அவளை காதலித்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரின் மனதில் உள்ள காதல் இவர்களை ‘முகலே ஆஸம்’ எனும் படத்தில் நடிக்க வைத்தது. இருவரும் காட்சியில் பேசியது தவிர ஒரு வார்த்தை கூட வேறு எதுவும் பேசிக் கொள்ள வில்லை. அப்பொழுது மதுபாலாவிற்கு உடல் நலம் கெட்டிருந்தது (தீராத இதய நோய்). இதை பொருட்படுத்தாது நடித்தார். படத்தை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும் இருவருக்கும் உள்ள காதலின் ஆழம். படத்தின் உள்ள வசனங்களே இவர்களது கதையை பேசியது.
இனி படத்தின் கதை - பிள்ளை வரம் வேண்டி கடும் வெயிலில் சுடும் பாலையில் காலணி கூட அணியாமல் முகலாய பேரரசர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் (- படத்தில் நடித்தவர் பிருதிவிராஜ் கஃபூர் - இவர் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜ்கபூர், ஷம்மி கபூர், ஷஷி கபூரின் தந்தை ரிஷி கபூர், ரந்திர் கபூர், ராஜிவ் கபூரின் தாத்தா, கரிஷ்மா கபூர், கரீனா கபூரின் கொள்ளு தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது) சூ•பி ஞானி செய்கு சலீம் சிஸ்டி என்ற இறையடியாரை சந்தித்து தனது பிள்ளை பாக்கியத்திற்காக இறைவனிடம் மன்றாடும் படி வேண்டுகிறார். இறை நம்பிக்கையாளரின் நெஞ்சிலிருந்து வெளியாகும் துவாவானது (பிரார்த்தனை) தக்தீரையே (விதி) மாற்றக் கூடியது என்ற முஹம்மது நபிகளின் வாய்மொழிக் கேற்ப அழகிய மைந்தன் பிறக்கிறான். இறை நம்பிக்கையாளரின் துஆவானது அக்பரின் தக்தீரையே மாற்றி விடுகிறது. பிரசவம் பார்த்தவரிடம், அக்பர் ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்து “இன்று நீ என்ன கேட்கிறாயோ அது அல்லாஹ் உதவியால் உனக்கு கிடைக்கும்” என்கிறார். அவரோ எதுவும் கேட்க மறுத்து விடுகிறார்.
சலீம் என்ற பெயர் தாங்கி வளரும் இந்த குழந்தை (மேலே படித்தவை யாவும் வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்கள் தான், இந்த சலீம் தான் பிற்காலத்தில் ஜஹாங்கீர் என்று அழைக்கப்பட்டார்) தாய்க்கு செல்ல பிள்ளையாக வளர்கிறது.
அதிக செல்லத்தினாலும் செல்வத்தினாலும் சிறு பிராயத்திலேயே மது, மாது என மனம் போன போக்கில் அலையும் இந்த குழந்தையை வருங்கால இந்தியாவின் மன்னன் இப்படி சீரழிந்து திரிவதா என்று “..இவன் நெற்றியில் உள்ள இவனது தாயாரின் அன்பு பதிந்த முகமூடியை கிழித்து போரில் தரிக்கும் இரும்பு கவசத்தை அணி.. வருங்கால முகலை உன்னிடம் ஒப்படைக்கிறேன்..” என்று தளபதியிடம் கூறி போர்களத்திற்கு அனுப்புகிறார்.
சலீம் போரில் ஈடுபட்டு வெற்றிகளை குவித்து தந்தைக்கு வெற்றி செய்தியை அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் கவித்துவமாக பேசும் சலீமை பார்த்து படை தளபதி, “என்ன ஆச்சர்யம், 14 ஆண்டுகளாக ரத்தத்தில் குளித்த வாளுக்கு கவிதையும் வாசிக்க வருகிறதே” என்று கேட்கும் போது சலீம் சொல்வார், “இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, (உமர்) கய்யாமின் கவிதைகளை கல்லில் எழுதினால் அர்த்தம் மாறிவிடுமா, என்ன..?” என்று.
நேர்ந்து தவம் கிடந்து பெற்ற மகனை பார்க்க பிராயசைப்பட்டு, “உடனே திரும்பவும்” என்று சலீமுக்கு அழைப்பு வருகிறது. அரண்மனை விழாக் கோலம் பூணுகிறது. அரண்மனை சிற்பியிடம் வரவேற்க வேண்டி ஒரு விக்கிரகம் செய்யுமாறு ஆணையிடப் படுகிறது. தவணைக்குள் சிலையை செய்து முடிக்காத சிற்பி மாதிரியாக நின்ற நாதிரா என்ற பெண்ணையே முத்து தோரணங்களால் மறைப்பு போட்டு மூடி சிலை போல் நிற்க வைக்கிறார்.
சலீம் வந்து தாயாரை சந்திக்கிறார். தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை பார்த்து தாய் கேட்கிறார், “நான் பாலூட்டி உனக்கு கொடுத்த ரத்தத்தை எல்லாம் விவசாயிகள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல போர்க்களத்தில் உன் ரத்தத்தை பாய்ச்சினாயா? –
என் கண்ணை விட்டு இவனை மறைத்து விடுங்கள் இல்லை என்றால் என் கண்ணே பட்டு விடும்” என்கிறார்.
சிலையை மூடியுள்ள திரையை அம்பு எய்தி அகற்ற வேண்டும் என சலீம் கேட்கப்படும் பொழுது, சிலை அசையாமல் அப்படியே நிற்கிறது. சலீம் குறி பார்த்து அம்பு எய்தி திரையை விலக்குகிறார். அழகு சிலை வெளிப்படுகிறது, உடனே அக்பர், “நிச்சயமாக இந்த சிலையை சிற்பி வடித்திருக்க முடியாது, இது விண்ணிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்” என் று அழகை அதிசயிக்கிறார்.. அந்த சிலை அசைந்து குனிந்து நன்றி சொல்கிறது. எல்லோருக்கும் ஆச்சர்யம். அக்பர் கேட்கிறார், “ஏன் அம்பு எய்த போதும் கூட அசையாமல் நின்றாய், உன் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டிருந்தால்..?” என்று – “நான் அசைந்து இருந்தால் அது சாஹிபே ஆலம் (சலீம்) அவர்களுக்கு தானே அவமானம், அது அவரின் வீரத்தை சந்தேகிக்கும் படி அல்லவா ஆகி விடும்” என்று ஒரு போடு போடுகிறார்.
அன்று முதல் நாதிரா என்ற அழகி அனார்கலி என்று அழைக்க வேண்டியும் வேலைக்காரியாகவும் நாட்டியக்காரியாகவும் அரண்மணையிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள படுகிகிறார்.
ஒரு பாட்டு போட்டி நடக்கிறது, “காதல் செய்தவர்கள் எல்லோரும் கடைசியில் சோகத்தில் சிக்கி இறந்து விடுவார்கள்” என்று பாடிய ஒருவருக்கு சலீம் பரிசாக பூவையும் “உண்மை தான் அப்படி இறந்தாலும் அவர்களை இந்த உலகம் மறக்காது” என்று பாடிய அனார்கலிக்கு முள்ளையும் காம்பையும் பரிசாக தருகிறார். பரிசை வாங்கி கொண்ட அனார்கலி, “காம்புக்கு தான், தான் வாடி (பூவைப் போல) விடுவோமோ என்ற அச்சமே இல்லை” என்கிறாள்.
அனார்கலியின் தங்கை சுரய்யா என்ற சிறிய மொட்டு தனது அக்காளின் அகத்தின் காதலை முகத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்கிறது. அனார்கலி நான் வேலைக்காரியாக இருந்து கொண்டு ராணியாக வாழ எவ்வாறு ஆசைப்பட முடியும்” என்று மறுக்கிறாள். சுரய்யாவோ, “ஏன் ஆசைப்பட கூடாது?, நீ அல்லாஹ்விடமிருந்து தான் வந்தாய், அவர் அல்லாஹ் அல்லாமல் வேறு யாரிடமிருந்தாவது வந்து விட்டாரா என்ன..?” என்று ஆறுதல் கூறி தூதுவராக செல்கிறாள்.
சலீமின் கடித்தத்தை சுரய்யா கொடுக்கும் போது, “இதோ, அவரின் இதயம்” என்று கொடுக்கிறாள். அனார்கலி கடிதத்தை பெற்றுக் கொள்ள தயங்க, சுரய்யா, “ஆ! உன் இதயம் கொடுக்கும் போது சிறிதும் யோசிக்க வில்லை, இப்பொழுது அவரின் இதயம் (கடிதம்) வாங்கும் போது இவ்வளவு யோசனையா?” என்கிறாள். இதயம் பெறப்படுகிறது.
இதயங்கள் சந்திக்கிறது,
அனார்கலி சொல்கிறாள், “அல்லாஹ்வுக்காக சொல்கிறேன், நீங்கள் (வேலைக்காரியான) என்னை சந்திக்க வந்து உங்களின் மதிப்பை இழந்து விடாதீர்கள்” என்று
சலீம், “நான் இந்த மேலோர் கீழோர் எனும் சுவற்றை உடைக்க போகிறேன், அனார்கலி, உன் கண்களை காட்டு நான் அதில் என் காதலை பார்க்க வேண்டும்” என்று கவிதை வசனம் பேசுகிறார்.
அனார்கலி, “என் கண்களை பார்க்காதீர்கள், அதில் வேறொன்றுமில்லை, ஒரு வேலைக்காரியின் சோகத்தை தவிர”
சலீம், “நீ வேலைக்காரி என்பதை மறந்து விடு, நீ எதை சொல்ல பயப்படுகிறாயோ அதை சலீமே உன் கண்களில் படிக்க அனுமதி கொடு”
அனார்கலி, “என் கண்களில் இருக்கும் கனவுகளை பறித்து விடாதீர்கள், நான் இறந்து விடுவேன்”
சலீம், “அனார்கலி, உன் கனவுகளை நிஜமாக்கி காட்டுகிறேன், பார்”
அனார்கலி, “யாரோ வருகிறார்கள் - உங்களை(தன்னை பற்றி கவலை பட வில்லை) பார்த்து விடுவார்கள்”
சலீம், “அவர்கள் பார்க்கட்டும்”
அனார்கலி, “இந்த பணியாளினாள் தங்களின் பிரிவை கூட தாங்கி கொள்ள முடியும், ஆனால் தங்களின் மரியாதைக்கும் மதிப்பிற்கும் ஒரு களங்கம் வந்து விட்டால் தாங்கி கொள்ளவே முடியாது” என்று ஆனந்த கண்ணீர் அல்ல ஆனந்த காதல் வடிக்கிறாள்.
தந்தைக்கு தெரிய வர பாரம்பரியத்தை காரணம் காட்டி காதல் நிராகரிக்கப் படுகிறது. அனார்கலி சிறை வைக்கப் படுகிறாள். சலீம் தன் கைவசம் உள்ள படையை வைத்து கொண்டு தந்தைக்கு எதிராக போர்க் கொடி தூக்குகிறார். சிறையிலிருந்து அனார்கலியை கடத்துகிறார்.
சலீம் என்ன தான் மாபெரும் வீரனாக இருந்தாலும் இந்திய பேரரசிடம் மோதி வென்று விட முடியுமா? சலீம் சிறை பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறார். மரண தண்டனையை திரும்ப பெறுமாறு நாடே கேட்டுக் கொள்கிறது. அனார்கலி திரும்ப ஒப்படைக்கப்பாடலன்றி தண்டனை திரும்ப பெறப்பட மாட்டாது என்று அறிவிக்கப் படுகிறது. சலீம் மறுக்கிறார், ஆனால் அனார்கலியோ சலீமை காப்பாற்ற தாமாகவே வந்து சரணடைகிறார். சலீமுக்கு விடுதலை, அனார்கலிக்கு உயிருடன் கல்லறை கட்ட வேண்டும் என்பது மன்னரின் ஆணை.
அனார்கலி மரண தண்டனைக்கு முன் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறாள், அனார்கலி, “ஒரு நாளேனும் நான் முகலாய பேரரசுக்கு மகாராணியாக இருக்க வேண்டும்” என்கிறார்.
அக்பர், “உன் மனதில் உள்ளது இப்பொழுது வெளியாகி விட்டது, இது தானே உன் ஆசை, மகாராணியாகி சுக போகத்தை அனுபவிக்க வேண்டும் என்பது?” என்கிறார்.
அனார்கலி, “சாஹிபே ஆலம் எனக்கு வாக்கு கொடுத்தார், உன்னை நான் மகாராணியாக்கி காட்டுவேன் என்று, அவரின் ஆசை நிறைவேற வேண்டி தான் நான் இவ்வாறு கேட்கிறேன்” என்கிறாள்
அக்பர் ஒப்புக் கொள்கிறார் ஒரே ஒரு நிபந்தனையோடு, முதலிரவு பாட்டு முடிந்ததும் சலீமை மயக்க மருந்து கலந்த ரோஜாப்பூவை நுகர வைத்து மயக்கமடைய வைத்து விட்டு மரணத்தின் வாசலுக்கு வந்து விட வேண்டும் என்பதே நிபந்தனை. அனார்கலி சம்மதிக்கிறாள்.
அக்பர், “இந்த திட்டம் நடந்தாக வேண்டும், இல்லை என்றால் சலீம் உன்னை இறந்து போக விட மாட்டான், நான் உன்னை வாழ விட மாட்டேன்” என்கிறார்
அனார்கலி, “நான் எப்பொழுதோ இறந்து விட்டேன், இப்பொழுது நீங்கள் பார்ப்பது பேசுவது எல்லாம் ஜனாசாவிடம் (இறந்த உடல்) தான் - நீங்கள் சொல்வது நடக்கும்” என்கிறாள்.
அனார்கலி தலையில் மகாராணி அணியும் கிரீடத்தை (மயக்க மருந்துடைய ரோஜாப்பூவும் இதில் தான் உள்ளது) அக்பர் அணிவித்து விடுகிறார்.
அனார்கலி, “ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் கொடுத்த இந்த மேன்மை தங்கிய பரிசிற்காக நாளை அவர் செய்ய இருக்கும் கொலை குற்றத்தை அனார்கலி மன்னித்து விடுகிறாள்” என்று வார்த்தை சவுக்கடி கொடுக்கிறாள்.
முதலிரவு கொண்டாட்டம் நடைபெறுகிறது, அனார்கலி சலீமை ரோஜாப்பூவை நுகரச் செய்கிறாள்”, சலீம் மயக்க மடைகிறார், அனார்கலியிடம் மயக்க நிலையில், “ஏன் இப்படி செய்தாய்? - என்னை ஏமாற்றி விட்டு போகத் தான் இப்படி செய்தாயா?” என்று கேக்கும் போது அனார்கலி, “நான் உங்களை விட்டு இறந்து போவேனே தவிர ஏமாற்றி விட்டு போக மாட்டேன்” என்கிறாள். சலீம் “அனார்கலி என்னுடையவள், யாரும் தொட விட மாட்டேன்” என்று கத்திக் கொண்டே மயக்கமாகி கீழே விழுகிறார்.
அனார்கலிக்கு மரண அழைப்பு வருகிறது, இந்த கட்டத்தில் மயங்கி விழுந்து கிடக்கும் சலீமை பார்த்து மனதிற்குள் பாடுகிறாள்,
“அல்லாஹ் உங்களுக்கு துணையிருக்கட்டும்
இந்த மனத்தின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளுங்கள்
உங்களது உலகை விட்டு நான் போகிறேன்
எழுந்திருங்கள் - என் இறுதி சலாத்தை பெற்றுக் கொள்ளுங்கள்
நாளை என் ஜனாசா (இறந்த உடலை எடுத்து செல்லும் இறுதி ஊர்வலம்)
நீங்கள் இருக்கும் பக்கமாக போகும்
சத்தியம்! உங்கள் தோள்களால்
அதை தாங்கிக் கொள்ள இயலாது”
என்று பாடி விடைபெறுகிறாள்.
அனார்கலியை சுற்றி கல்லறை எழுப்பப் படுகிறது. கண்கள் மட்டுமே தெரிகிறது.
அடுத்து என்ன? - இது தான் முடிவு..
சில இசை செவிக்கு இனிமை, சில இசை இதயம் தொடும், ஆனால் நவ்ஷத் சாபின் முகலே ஆசம் இசையோ உயிரின் வேர் தொடும். அர்த்தம் தெரியா விட்டாலும் கண்கள் குளமாகும். அர்த்தம் தெரிந்தாலோ கண்கள் இரத்தமாகும்.
இப்படியாக இந்த படம் முழுக்க பேசாமல் நடித்த திலீப் குமாரும் மதுபாலாவும் படத்திலேயே எல்லா வற்றையும் பேசி முடித்து விட்டிருந்தார்கள்.
இதன் பிறகு காலம் சுழன்று கொண்டே இருந்தது, மதுபாலாவின் அழகில் மயங்கி திருமணம் முடிக்க எத்தனையோ பேர் தவமிருந்தும் பின்னனி பாடகரான கிஷோர் குமாரை ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் முஸ்லிமாக வேண்டும் என்ற நிபந்தனையோடு நிகாஹ் செய்து கொண்டார். புகழ் பெற்ற பிண்ணனி பாடகர் கிஷோர் குமார் அன்றிலிருந்து கரீம் அப்துல் ஆனார்.
இந்நிலையில் மதுபாலாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. லண்டனுக்கு ஆபரேஷனுக்காக சென்ற போது மருத்துவர்கள் மிகவும் ரிஸ்க் என்று ஆபரேஷன் செய்யவே மறுத்து விட்டனர்.
படுக்கையிலேயே மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த அவர் முகலே ஆஸம் படத்தை மட்டும் 500 தடவை பார்த்திருக்கிறார். அவர் திலீப் குமாருடனான காதலை இன்னும் மறக்க வில்லை.
ஹாலிவுட்டிற்கு மர்லின் மன்றோவும் கிரேட்ட கார்போவும், ஜப்பானிய சினிமா உலகிற்கு தொஷிரோ மி•ப்யூன் பிரெஞ்ச் திரை துறைக்கு ஜின் கேபனும் பிரிஜிட் பார்டோட்டும் ஆனால் இந்திய வெண்திரை உலகிற்கு என்றும் ஒருவர் உண்டு, அது வேறு யாருமல்ல முடிசூடா அரசி மதுபாலா ஒருவர் தான்.
படுக்கையிலேயே கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் வரை மிகவும் கஷ்டம் அனுபவித்த அவர், பிப்ரவரி மாதம் 23ம் தேதி 1969ம் ஆண்டு உலகை விட்டு பிரிந்து போனார். கண்களாலேயே மொழிகளற்ற மொழி பேசி நடிக்கும் இந்த தேவதை தனது கண்களை இறுதியாக இறுக்கமாக மூடிக் கொண்டது.
திலீப் குமாரும் சாய்ரா பானு என்ற நடிகையை திருமணம் செய்து வாழும் சகாப்தமாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.
திலீப் குமார் நீதிமன்றத்தில் சொன்னது போல், அவரின் கடைசி நாள் வரை மதுபாலாவை காதலித்து கொண்டு தான் இருப்பார்”
ஒரு முறை
காதலில் தோல்வி
அவசியம் வேண்டும்
வாழ்க்கை முழுமையாகும்
இந்த 'கவிதை மாதிரி' யை சொல்லி முடிக்கிறேன்
முகலே ஆஸத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட
பல கோடி பேரில் ஒருவன்
A.Mohamed Ismail

Wednesday, July 23, 2008
ராத்திரி சாப்பாடு - சிறுகதை
எனக்கு பசி எடுத்த போது சாயங்காலம் மணி 5. நான் அன்று மதியாணம் சாப்பிட வில்லை. ஏனென்றால் அலுவலகத்தில் வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, ஆயிடுச்சு என்பதை விட ஆக்கி விட்டேன் என்பது தான் பொருந்தும்,
மேலாளருக்கு என் மீது ஏற்கனவே காண்டு, நான் எப்போ தப்பு செய்வேன் என்று தான் காத்துக் கொண்டிருந்தார், அவருக்கு நானே ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டேன். கேட்கவா வேணும்,
எல்லோருக்கும் முன்னாடி கேட்டே விட்டார், சோறு திங்குறியா? இல்லை வேற ஏதாவதா? என்று வேற ஏதாவதா என்றால் வேறு என்ன பீ தான். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ‘சோறு திங்குறீயா..?’ என்று அவர் என்னை கேட்ட 2 மணிக்கு கூட எனக்கு சாப்பாடு ஞாபகம் வரவில்லை என்பது தான். இத்தனைக்கு காலையிலே காலம் கடந்து விட்டது என்பதற்காக பசியாறாமல் அவசரமாக புறப்பட்டு வந்தேன்.
எல்லாத்தையும் உட்கார்ந்து சரி பார்த்து என் தவறுகளள சரி செய்த போது மணி 4. நண்பர்கள் இடையில் தேநீர் அருந்த அழைத்தார்கள், உணவு உண்ண போனார்கள், சாயங்காலம் மீண்டும் தேநீர் அருந்த கூப்பிட்டார்கள், வாங்கி வரவா என்று கூட கேட்டார்கள். ம்கூம்.. போக வில்லை. பசி நினைப்பு கூட இல்லை. ஐந்து மணி இருக்கும், வேலை பலு குறைந்த போது தான் அதை உணர்ந்தேன். வயிறு குழந்தையாய் அழுதது.
அடடே நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல, என்று ஞாபகப் படுத்திக் கொண்டு உடனே வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தேன், எடுத்தது அவளே தான்.
‘யாரு?’ - குழலினிது யாழினிது என்பர் தம் மனைவி சொல் கேளாதார் - வள்ளுவர் பெருந்தகை மன்னிப்பாராக - அவர் மன்னிக்கா விட்டால் கூட பராவாயில்லை, நான் இப்படி சொல்ல வில்லை என்றால் என் மனைவி என்னை மன்னிக்க மாட்டள், எனக்கு வேறு நல்ல பசி..
‘கண்மனி (இது அவள் பேரல்ல.. நான் கொஞ்சுகிறேனாம்) ராத்திரிக்கு என்ன சாப்பாடு’
‘உங்களுக்கு என்னா வேணும் சொல்லுங்க?’ -
‘தாழிச்ச சோறு’
‘அப்புறம்’
‘தாழிச்சா’
‘அப்புறம்’
‘கோழி பொறிச்சிடு’
‘அப்புறம்’
‘அப்பளம் பொறிக்க முடியுமா?’
‘ஓ..!’
யோசித்தேன்..
‘அவ்வளவு தானா..?, போதுமா..? என்னங்க இது இப்படி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும், ஒரு காய்கறியாவது..’
‘காலி பிளவர் எனக்கு புடிக்கும்.. எல்லாம் முடியுமா?’
‘கண்டிப்பா முடியும்.. காலி பிளவரும்.. உருளை கிழங்கு பொறியலும் செஞ்சு வைக்கிறேனே.. சரியா?’
தொலைபேசி துண்டிக்கப்பட்டது
மக்களே, நான் சொல்றத கேளுங்க.. நீங்கள் நல்ல சாப்பாட்டுக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கனும்,.. பாருங்க பேசிக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி மணி அடிக்கிறது, கொஞ்சம் இருங்க’
‘ஹலோ’ - நான்
‘என்னங்க.. (என் மனைவி தான்) வீட்ல எண்ணெய் இல்ல.. நீங்க போய் கடைல சாப்டுட்டு வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கிட்டு எண்ணெயும் வாங்கிட்டு வந்துடுங்க..’

Sunday, July 20, 2008
Wednesday, June 25, 2008
கவிதையாம்..
நான் கவிஞன் என்று சொல்லி பல கவிஞர்களின் தற்கொலைக்கு காரணமாக விரும்பவில்லை. அதே நேரத்தில் மனிதர்களை பாடாத கம்பர்கள் மீது எனக்கு மரியாதையும் இல்லை. பாவேந்தரின் பாடலில் பாடாத தேனீக்கள் உண்டோ என்று கேட்பாரே அது போலே காதலை பாடாத கவிஞர்கள் உண்டோ என்று கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு கவிஞர்களுக்கு இந்த காதலுக்கும் தொடர்பு உண்டு. மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ இப்படி எந்த கவிதையின் வடிவும் காதலை பாடாமல் விட்டதில்லை. “பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணுங்க” என்று காதல் செய்ய “தூங்காதே தம்பி தூங்காதே” என்று எழுப்பி விடும் பாடல்களுக்கு என் “கவிதையாம்” கொஞ்சூண்டு “தேவலையாம்” என்று சொன்னாலும் மகிழ்ச்சி தான்.
காதல் ஒரு புதிய அனுபவம்..!
காதலி..!
எனது பெயர் மறந்து விட்டது
முகவரியும் தவறி விட்டது
என் இருப்பு மட்டும்
இருப்பதாய் தெரிகிறது
வார்த்தைகள் இறந்து விட்டன
மௌனங்களும் தொலைந்து விட்டன
நீ பேசுவது மட்டும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது
காட்சிகள் மறைந்து விட்டன
பார்வைகளும் இழந்து விட்டன
உனது முகம் மட்டும்
தெரிந்து கொண்டே
இருக்கிறது
தித்திக்கும் விபத்தாய்
நிகழ்ந்துவிட்ட
நம் சந்திப்பு
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்
காகித பூக்களுக்கு
மத்தியில்
வாசனை பூவாய்
நொடிக்கொரு தரம்
புன்னகையில் மலர்ந்தாய்
உன் மழலை மொழியில்
மழை பெய்த சோலையானது
மனம்
சிரமமில்லாமல்
இதய பலூனுக்குள்
சுலபமாக நுழைந்தது
காதலெனும் ஊசி
வாழ்க்கையில் உன்னை சந்தித்தேன்
உன்னை சந்திப்பது தான்
வாழ்க்கை என்று
தெரிந்து கொண்டேன்
கவிதை நீ..!
அழகாய் இருக்கிறாய்
புரிய மறுக்கிறாய்
காற்று நீ..!
மறைந்து இருக்கிறாய்
உயிரை வளர்க்கிறாய்
ஏட்டுச்சுறைக்காய்
கறிக்கு உதவாது
பல் குத்தும் குச்சி
சிலை வடிக்க உதவாது
காலம் கடந்த எதுவும்
வாழ்க்கைக்கு உதவாது
என் காதலும்
இவ்வகை
என் காதல்
பருவம் தவறிய
மழை
தவறி செய்த
கொலை
எல்லாம் தெரியும் தான்
என் செய்ய
எனது
கற்பூர இதயத்தை
சுற்றிலும் எரிகிறது
காதல் நெருப்பு
அடம் பிடிக்கும்
குழந்தையாய்
என் சொல் பேச்சு
கேட்க மறுக்கிறது
என் மனம்
நல்ல குணமாய்
சொல்லி பார்த்தேன்
பலிக்கவில்லை
சினங் கொண்டு
அதட்டி பார்த்தேன்
பயனில்லை
என் இதயத்தில்
நான் எழுதிய
உனது பெயரை
நீ அழிக்க கிறுக்கிய
கோடுகளும்
அழகிய கவிதையாய்
தெரிகிறது
இந்த பாழாய் போன
காதலால்
மேகங்கள் கூடினால்
மழை வரும்
நாம் கூடாமல் போனோம்
இதோ..!
என் கண்களில்
கண்ணீர் மழை
மழை நீரை இதுவரை
சேமித்ததில்லை -
ஆனால் நீ வந்த
கனவுகளை கூட கலையாமல்
என் இதய தேக்கடியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
கோபங்களால்
உனை பிரிந்தேன்
காலம்
உன் மீதான் காதலை
அழித்து விடும் என்று துணிந்தேன்
ஆனால் காலம்
உன் மீதான கோபத்தை
அழித்து விட்டு
சென்று விட்டது
புதிய அலுவல்கள்
புதிய நண்பர்கள்
புதிய புத்தகங்கள்
புதிய கவிதைகள்
உனை மறக்க
நான் செய்த
மாற்று முயற்சி
படுதோல்வி
உன் நினைவுகள்
உன் சிரிப்பலைகள்
உன் மொழிகள்
உன் சிணுங்கல்கள்
அணை உடைத்த
வெள்ளங்கள்
உனது சிறிய
ஞாபகமும்
மாயன இருட்டில்
கண்கூசும் வெளிச்சமாய்
இரவின் நிசப்தத்தில்
காதுகிழிக்கும் பேரிறைச்சலாய்
சிரமமாய் இருக்கிறது
எனக்கு
இதோ
இந்த நொடியிலலும்
உனது அந்த
சிறிய ஞாபகம் தான்
அந்த ஞாபக
வெளிச்சத்தில்
அந்த ஞாபக
பேரிறைச்சலில்
ஒரு புதிய அனுபவம்
எனக்கு..!
இருந்துக் கொண்டே
இயற்கை எய்துகிறேன்
காதல் ஒரு புதிய அனுபவம்..!
காதலி..!
எனது பெயர் மறந்து விட்டது
முகவரியும் தவறி விட்டது
என் இருப்பு மட்டும்
இருப்பதாய் தெரிகிறது
வார்த்தைகள் இறந்து விட்டன
மௌனங்களும் தொலைந்து விட்டன
நீ பேசுவது மட்டும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது
காட்சிகள் மறைந்து விட்டன
பார்வைகளும் இழந்து விட்டன
உனது முகம் மட்டும்
தெரிந்து கொண்டே
இருக்கிறது
தித்திக்கும் விபத்தாய்
நிகழ்ந்துவிட்ட
நம் சந்திப்பு
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்
காகித பூக்களுக்கு
மத்தியில்
வாசனை பூவாய்
நொடிக்கொரு தரம்
புன்னகையில் மலர்ந்தாய்
உன் மழலை மொழியில்
மழை பெய்த சோலையானது
மனம்
சிரமமில்லாமல்
இதய பலூனுக்குள்
சுலபமாக நுழைந்தது
காதலெனும் ஊசி
வாழ்க்கையில் உன்னை சந்தித்தேன்
உன்னை சந்திப்பது தான்
வாழ்க்கை என்று
தெரிந்து கொண்டேன்
கவிதை நீ..!
அழகாய் இருக்கிறாய்
புரிய மறுக்கிறாய்
காற்று நீ..!
மறைந்து இருக்கிறாய்
உயிரை வளர்க்கிறாய்
ஏட்டுச்சுறைக்காய்
கறிக்கு உதவாது
பல் குத்தும் குச்சி
சிலை வடிக்க உதவாது
காலம் கடந்த எதுவும்
வாழ்க்கைக்கு உதவாது
என் காதலும்
இவ்வகை
என் காதல்
பருவம் தவறிய
மழை
தவறி செய்த
கொலை
எல்லாம் தெரியும் தான்
என் செய்ய
எனது
கற்பூர இதயத்தை
சுற்றிலும் எரிகிறது
காதல் நெருப்பு
அடம் பிடிக்கும்
குழந்தையாய்
என் சொல் பேச்சு
கேட்க மறுக்கிறது
என் மனம்
நல்ல குணமாய்
சொல்லி பார்த்தேன்
பலிக்கவில்லை
சினங் கொண்டு
அதட்டி பார்த்தேன்
பயனில்லை
என் இதயத்தில்
நான் எழுதிய
உனது பெயரை
நீ அழிக்க கிறுக்கிய
கோடுகளும்
அழகிய கவிதையாய்
தெரிகிறது
இந்த பாழாய் போன
காதலால்
மேகங்கள் கூடினால்
மழை வரும்
நாம் கூடாமல் போனோம்
இதோ..!
என் கண்களில்
கண்ணீர் மழை
மழை நீரை இதுவரை
சேமித்ததில்லை -
ஆனால் நீ வந்த
கனவுகளை கூட கலையாமல்
என் இதய தேக்கடியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
கோபங்களால்
உனை பிரிந்தேன்
காலம்
உன் மீதான் காதலை
அழித்து விடும் என்று துணிந்தேன்
ஆனால் காலம்
உன் மீதான கோபத்தை
அழித்து விட்டு
சென்று விட்டது
புதிய அலுவல்கள்
புதிய நண்பர்கள்
புதிய புத்தகங்கள்
புதிய கவிதைகள்
உனை மறக்க
நான் செய்த
மாற்று முயற்சி
படுதோல்வி
உன் நினைவுகள்
உன் சிரிப்பலைகள்
உன் மொழிகள்
உன் சிணுங்கல்கள்
அணை உடைத்த
வெள்ளங்கள்
உனது சிறிய
ஞாபகமும்
மாயன இருட்டில்
கண்கூசும் வெளிச்சமாய்
இரவின் நிசப்தத்தில்
காதுகிழிக்கும் பேரிறைச்சலாய்
சிரமமாய் இருக்கிறது
எனக்கு
இதோ
இந்த நொடியிலலும்
உனது அந்த
சிறிய ஞாபகம் தான்
அந்த ஞாபக
வெளிச்சத்தில்
அந்த ஞாபக
பேரிறைச்சலில்
ஒரு புதிய அனுபவம்
எனக்கு..!
இருந்துக் கொண்டே
இயற்கை எய்துகிறேன்
Sunday, March 23, 2008
இந்தி
இந்தி மொழியின் ஆதிக்க பருப்பு தமிழ்நாட்டில் வேகாததற்கு அறிஞர் அண்ணாவின் முயற்சி ஒரு முக்கிய காரணமாகும்.
ஒரு மாநிலத்தவர் இன்னொரு மாநிலத்தவரோடு பேசுவதற்கு இந்தி மொழியையும் நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டு மக்களோடு உரையாடுவதற்கு ஆங்கில மொழியும் கற்க வேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டது.
அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கதை சொன்னார்கள், ஒருத்தர் பெரிய நாய், சிறிய நாய் என்ற இரண்டு நாய்களை வளர்த்தாராம். பெரிய நாய் நுழைவதற்கு ஒரு பெரிய கதவையும், சிறிய நாய் நுழைவதற்கு வசதியாக இன்னொரு சிறிய கதவையும் தனியாக வைத்திருந்தாராம். பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள், பெரிய நாய் நுழைவதற்கு என இருக்கு ஒரே கதவு வழியாக சின்ன நாயும் தான் நுழையுமே, அதற்கு ஏன் தனியாக ஒரு கதவு வைப்பானேன்..? என்று தானே கேட்பார்கள்.
அது போலவே அயல் நாட்டினருடன் பேசுவதற்கு என படிக்கும் ஆங்கிலத்தத வைத்துக் கொண்டே மற்ற மாநிலத்தவருடன் பேச முடியும் தானே? என்று அண்ணா தனது திறமையான வாதத்தால் இந்தி ஆதிக்கத்தை மண்னை கவ்வ வைத்தார்.
இந்தி படிப்பதில் தவறு ஒன்றுமில்லை என்றாலும் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பாகவே பார்க்கப்பட்டது. தந்தை பெரியார் சொல்வது போல பண்பாட்டு படையெடுப்பு மூளை விளங்காகும். இத்தகைய விளங்கை உடைத்தெறிய தான் அண்ணா அவர்களை போன்றோர்கள் பாடுபட்டார்கள்.
இது இப்படியிருக்க எனக்கு தனிப்பட்ட முறையில் இந்தி படங்களையும் பாடல்களையும முறையே விரும்பி பார்ப்பேன், விரும்பி கேட்பேன். என்னை பொறுத்த வரையில் என் மகளுக்கு வாப்பா (அப்பா) என்றால் டாடி, பிதாஜி அல்லது இன்னும் எத்தனை மொழிகளில் உள்ள நேரடி வார்த்தைகளை வேண்டுமோ தெரிந்து வைத்துக் கொள்ளட்டும். தவறில்லல, ஆனால் என் பிள்ளை என்னை வாப்பா என்று தான் கூப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்
- நாகூர் இஸ்மாயில்

'சண்ட'யில் முடிகிறது
இன்று தமிழ் திரைப்பட வசனகர்த்தா பிரச்சன்னகுமார் அவர்கள் மரணம் என்ற துயரசெய்தி செவிக்கு எட்டியது. பாலைவனச் சோலையில் தொடங்கிய அவரது திரைப் பயணம் 'சண்ட'யில் முடிவடைந்திருக்கிறது.
தீப்பெட்டிக்குள்
எத்தனன குச்சிகள்
அதில்
எத்தனை குச்சிகள்
எரியும்
- 'பறவைகள் பலிவிதம்' எனும் படத்தில் பிரச்சன்னகுமார் எழுதிய கவிதை தான் இது. தாரா என்ற நடிகை ஜனகராஜிடம் இந்த கவிதையை சொல்ல, ஜனகராஜ் சொல்வார், 'இது தான் கவிதையா?, நல்ல வேலை கண்ணதாசன் செத்துட்டார்' என்று
அதற்கு தாரா சொல்வார்கள், ' இல்ல சிவா (படத்தில் ஜனகராஜின் பெயர் என்று நினைக்கிறேன்) நான் தீப்பெட்டின்னு சொன்னது நம்ம காலேஜை, குச்சிங்கறது நாம தான், கனவுங்கற தீமருந்த சுமந்துகிட்டிருக்கோம், அதுல எத்தன கனவு பலிக்க போவுதோ..' என்பார்.
அதற்கு ஜனகராஜ், 'சாரி கீதா (தாராவின் பெயர்) நீ சொன்னதுல என்னமோ இருக்கு, ஆனா எனக்கு தான் புரியல..' என்பார்.
இப்படி என் மனத பாதித்த எத்தனையோ வசனங்களை எழுதிய பிரச்சன்னகுமார் அவர்களின் மரணம் மிகவும் துயரமாக இருக்கிறது.
பிரச்சன்னகுமார் அவர்களின் மனைவியின் தம்பி கணேசுடன் சிங்கப்பூரில் தஞ்சோங் பகாரில் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வ இரங்கலை பதிவு செய்கிறேன்

Monday, November 19, 2007
Thursday, September 27, 2007
காதல் அழிவதில்லை - சிறுகதை
வானம் தவணை முறையில் வெளிச்சத்தை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கும் மாலை நேரம்.
நீங்க எப்படி ஆரம்பிக்க போறீங்க? சுஜாதா கேட்டாள்.
அவள் காதலன் சுந்தர் சலைத்துக் கொண்டான்,” சே.. காதலை காதலிக்கிட்ட சொல்ற அவஸ்தையை விட வீட்ல சொல்ற அவஸ்தை தாங்க முடியலை”.
சுஜாதா, “நீங்க கண்டிப்பா சொல்லிடுவீங்களா? என்றாள்.
சுந்தர், சொல்லாமல்.. நான் அப்பாகிட்ட எப்படி சொல்றதுன்னு ஒத்திகை பார்த்துட்டேன். நீயும் கண்டிப்பா சொல்லிடு” என்றான்.
சுஜாதா பதறினாள், “சம்மதிக்கலைன்னா..?”
சுந்தர் தீர்மானமாக சொன்னான், சம்மதிச்சா நல்ல சன்னதியில கல்யாணம்- சம்மதிக்கலைன்னா நாளை ROMல் கல்யாணம்”- இருவரும் புறப்பட்டார்கள்-
சுந்தர் வீடு-
அப்பா பாலசந்தர் கத்தினார்- “உனக்கு கல்யாணத்துக்கு இது தருணம் அல்ல- நான் செத்து போயிடலை உனக்கு எப்ப பெண் பார்க்கணும்னு எனக்கு தெரியும் அது வரைக்கும் பேசாமல் இரு- நான் வேற எதையும் கேட்க தயாராயில்லை”.
சுஜாதா வீடு-
விவாகரத்தான அக்கா வித்யா திட்டினாள்- “இன்னும் படிப்பு முடியலை பெரிசா படிச்சு முன்னுக்கு வரப் போறேன்னு சொன்னே- காதல், கத்திரிக்காய் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு படிக்கிற வழியை பாரு- உனக்கு காதல் இப்ப ரொம்ப முக்கியம் இல்லை- வேற ஏதாவது என் கிட்ட சொல்லணுமா?
ROM-
இனிதாக திருமணம் நடந்தது- மணமக்கள் இருவரும் மாலையும் கையுமாக வெளியே வந்தார்கள்- அதிர்ந்தார்கள்- வெளியே சுந்தரும் சுஜாதாவும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்- சற்று முன் திருமணம் நடந்தது அல்லவா? அதில்
மணமகன்- பாலசந்தர்(சுந்தர் அப்பா)
மணமகள்- வித்யா(சுஜாதா அக்கா)

அழகு - சிறுகதை
“ஏங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்களே கவனிச்சீங்களா?” என்று தன் கணவன் குமாரை கேட்டாள் ரூபா.
குமார் அந்த கேள்வியில் ஆர்வம் இல்லாதவனாக, “அதுக்கு என்ன இப்ப?” என்றான்.
ரூபா எரிச்சலாக, “உங்கள்ட்ட போய் சொன்னேனே, அட... வேறு ஒண்ணுமில்லைங்க..அந்த பொண்ணு வெளியேயே வரலை, ஏன் தெரியுமா?” என்றாள்.
குமார் அலட்சியமாக, “ஓஹோ! அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சு போச்சா, சரி சொல்லேன்.. ஏனாம்?” என்றான்.
ரூபா,”அந்த பொண்ணை ஜன்னல் வழியா பார்த்தேன்.. ஸ்கேல் வச்சு அளந்து எடுத்து பொன்னால செஞ்ச சிலை மாதிரி இருக்கா, அவ்வளவு அழகு- ஆனால் அவ மாப்பிள்ளை.. அய்யோ..! கரிசட்டி! தேயிலை கல்ரு.. 4ஆர் சைஸில் ஒரு போட்டொவே தலையில ஒட்டலாம்.. வழுக்கைதலை.. நல்லா வீடு கட்டி சாப்பிடுவான் போல, ஆள் வர்றதுக்கு முன்னாடியே வயிறு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி போவுது..” என்று தொடர
குமார் கையமர்த்தினான்,”இரு.. இரு.. அடுத்தவங்களை பத்தி இப்படி பேசறது தவறு.. இதுக்கு மேல தாங்காது.. நான் குளிக்க போறேன்” என்று குளியலறைக்குச் சென்றான்.
ரூபாவுக்கு இருப்பு கொள்ளவில்லை, அதே குடியிருப்பில் வேறு தளத்தில் வசிக்கும் தோழி ஜெயந்தி வீட்டிற்கு சென்று சற்று முன் பேசியதை மறு ஒலிபரப்பு செய்தாள்.
இருவரும் வெறும் வாயை மென்றே ஏப்பம் விடுபவர்கள்- அவல் கிடைத்துள்ளது சும்மா விடுவார்களா? இருவரும் வம்பளந்தார்கள்- நாளை ரூபாவின் பக்கத்து வீட்டிற்கு செல்வது என முடிவெடுத்தார்கள்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறந்தான் ராஜேஷ், வாசலில் பார்த்த முகமான ரூபாவை கண்டு புன்முறுவலுடன்ரூபா, ஜெயந்தி இருவரையும் வரவேற்றான்,””உள்ளே வாங்க..”
இருக்கையை காட்டி”உட்காருங்கள்” என்று உள்ளே சென்றான்.
ரூபா ஜெயந்தியிடம், “அவ வரட்டும், நான் கேட்கிறேன்,’ஏன்ம்மா, வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா?- காதல் திருமணமா?- ஆள பார்த்தா எமனுக்கு வாகனமா இருந்தவர் போலிருக்கே.. இவரை போய்..” என்று முடிக்குமுன்
விவாகரமான ஜெயந்தி குறுக்கிட்டு, “நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்பேன் எப்படி இந்த ஆள் பக்கத்துல படுக்க முடியுது?” என்று கூறி சிரித்து யாரோ வரும் சத்தம் கேட்டு சதாரித்து அமர்ந்தனர்.
ராஜேஷ் தன் மனைவி உமாவை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி கொண்டு வந்தான்.
ரூபா, ஜெயந்தி அதிர்ந்தனர். இருவரும்,”இவங்களுக்கு..” என்றனர்.
ராஜேஷ் சொன்னான், ஆமாம்.. ஒரு விபத்துல கால் போயிடுச்சு.. அந்த அதிர்ச்சியில பேச்சும் போயிடுச்சு” என்றான்.
இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சக்கர நாற்காலியில் புன்னகையுடன் உட்கார்ந்திருக்கும் அந்த பெண்மணியை பார்த்தார்கள். அவளோ தன் கண்வனிடம் திரும்பி சைகையில் ஏதோ சொல்ல, ராஜேஷ், ”அடடே... பாருங்க.. நான் மறந்தே போயிட்டேன்.. என்ன சாப்பிடறீங்க..” என்றான்.
இருவரும் கண்ணீர் மல்க பார்த்தனர். அப்போது ராஜேஷ் அவர்களுக்கு அழகாக தெரிந்தான்

மணவாழ்வு - சிறுகதை
சிங்கப்பூர் கிம் செங் சாலையின் வாரத்தின் கடைசி நாள் ரொம்ப சுறுசுறுப்பாக இருந்தது. ‘கிரேட் வர்ல்ட் சிடி(Great World City)’ என்ற பிரமாண்ட கடை தொகுதி(shopping complex)க்கு எதிரே கிம் செங் பிளாசாவை ஒட்டி சாலையின் ஓரத்திலேயே மஞ்சள் கோடு போடப்பட்டிருந்ததை மறைத்துக் கொண்டு ஒரு சீருந்து வந்து நின்றது.
சீருந்தின் இயக்கத்தை நிறுத்தாமல் சுட்டிக் காட்டும் விளக்கை போட்டு விட்டு சீருந்தில் இருந்து இறங்கி அந்த சிறிய உணவகத்தில் நுழைந்தான் அவன்.
அந்த சாலையோர கடையில் தேத்தணி குடித்ததற்கு வெள்ளி(காசு) கொடுத்து விட்டு திரும்பிய ராஜேஷ் அதிர்ந்தான். போக்குவரத்து துறை அதிகாரியான அந்த பொண்மணி ராஜேஷின் சீருந்தின் மீது ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.
ராஜேஷ் பதட்டத்துடன் ஓடி வந்து, ‘சாரிலா.. இப்ப தான் வந்தேன்.. உடனே எடுத்துடறேன்..’ என்றான்.
மேக்கப் போடாமலே அழகாக இருந்தாலும் மேக்கப் போட்டு அழகை கூட்டாமல் அழகை கெடுத்திருந்த உமா சொன்னாள், ‘இந்த மாதிரி மஞ்சள் கோடு போட்டிருந்தா மொதோ காடிய நிறுத்தவே கூடாதுன்னு தெரியாதா?’ என்று.
ராஜேஷ், ‘தெரியும் மேடம் அதான் இப்ப எடுத்துடறேன்னு சொல்றேன்ல..’ என்றான்.
சொல்லி முடிக்கு முன், ‘சத்தம் போடாதீங்க.. டோண்ட் ஷவுட்.. ஓகே.. எதாயிருந்தாலும் ஆபீஸ்ல போய் பேசிக்குங்க..’ என்று அதிரடியாக கூறிவிட்டு தன் வாகனத்தில் ஏறி பறந்தாள்..
ராஜேஷ் அஞ்சலகம் சென்று சிங்கப்பூர் சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக வரிசையில் நின்று அபராதத்தை கட்டினான்.
ராஜேஷ் மீண்டும் அவன் வேலை பார்க்கும் அலுவலகம் சென்று சில வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினான்.
குளியலறை சென்று களைப்பு நீங்கி ஹார்லிக்ஸ் போட்டு குடித்துக் கொண்டே தொலைகாட்சியை இயக்கி விட்டு ‘அப்பாடா..’ என்று சோபாவில் சாய்ந்தான்.
சிறிது நேரம் கழித்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ராஜேஷ் அசைய கூட இல்லை. கதவை திறந்து கொண்டு உமா உள்ளே வந்தாள்.
நேராக படுக்கையறை சென்றாள். தோல்பையை எடுத்து வீசினாள். அந்த பை ராஜேஷ¤ம் உமாவும் மணக்கோலத்தில் எடுத்த புகைப்படத்தின் மீது போய் விழுந்தது.
உமா அந்த புகைப்படத்தை எடுத்தாள். இமை கொட்டாமல் சிறிது நேரம் அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இதய ஒளியை சோக மேகம் மூடியது..
கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது..
அந்த புகைப்படம் அவர்களது பழைய காதல் கதையை சுருக்கமாக நமக்கு எழுதி காட்டுகிறது.. படித்து பார்ப்போம்..
ராஜேஷ் தான் எப்போதும் செல்லும் ப(B)•பலோ சாலையில்(buffalo road) உள்ள ‘புளு டயமண்ட்’ கடையில் புகுந்தான். எப்போதும் அமரும் அதே இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.
பிடித்த உணவு பதார்த்தங்களை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது தொலைபேசி மணி அழைத்தது..
தனது கை தொலைபேசியை எடுத்து பார்த்தான். அவனுக்கு அழைப்பு வரவில்லை. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று யோசித்த விநாடி பக்கத்து நாற்காலியில் ஒரு தொலைபேசி இருப்பதை கண்டான்.
‘பிரைவேட் நம்பர்’ என்று காட்டிய அந்த அழைப்பிற்கு ‘ஹலோ’ என்று பதில் கொடுத்தான்.
மறுமுனையில் தேனினும் இனிய குரல், ‘ஹலோ.. என் பேர் உமா சார்.. நீங்க இப்ப பேசறது என்னோட ஹேண்ட் போன் தான் நான் தான் மறந்து வச்சுட்டேன்..’ என்று அழகாக இனித்தது.
ராஜேஷ் குரலை கேட்ட மாத்திரத்திலேயே குரலுக்குறிய முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், ‘என் கிட்டே தான் பத்திரமா இருக்கு..’ என்றான்.
உமா, ‘சார் நான் இப்ப ‘பாஸிர் ரிஸ்’ ல இருக்கேன்.. நீங்க எப்போ எங்கே வர சொல்றீங்களோ அங்க வந்து வாங்கிக்கறேன்..’ என்றாள்.
ராஜேஷ் இடத்தை சொன்னான்..
நேரத்தை சொன்னான்..
அடையாளத்தை சொன்னான்..
ராஜேஷ் குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருந்தான் என்பதை விட தவமிருந்தான் என்பதே சரி..
உமா எனும் பூலோக தேவதை அடையாளம் கண்டு வந்தது..
ராஜேஷ் மட்டும் கவிஞர் வாலியாக இருந்திருந்தால் ‘என்ன விலை அழகே?’ என்றும் கவியரசு வைரமுத்துவாக இருந்திருந்தால் ‘அன்பே.. அன்பே.. கொல்லாதே..’ என்றும் பாடியிருந்திருப்பான்.
அவன் ராஜேஷாக இருந்ததால்..
‘உனது பேச்சு என்னவோ
தென்றல் தான்
ஆனால்
என் மனதில்
புயலின் பாதிப்பை
அல்லவா ஏற்படுத்திவிட்டது’ என்று
யோசிக்க மட்டும் முடிந்ததே பெரிய விஷயம் தான்.
எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது தடவை ஏறெடுத்து பார்த்தது கிடையாது. ஆனால் உமாவை பார்க்கும் முன்னாடியே பார்க்க துடித்தது எப்படி?
எல்லா அழகும் காதலை சொல்லி விடுவதில்லை. காதலை சொல்லும் அழகு மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். அந்த மாற்றம் இப்போது ராஜேஷ¤க்கு ஏற்பட்டிருந்தது.
ஆமாம், ராஜேஷ் உமா மீது காதல் வயப்பட்டிருந்தான். ஆங்கிலத்திலும் தமிழ் திரைப்படத்திலும் சொல்வார்களே, அதே love at first sight தான்..
காதல் என்ற இரத்தம் இல்லாத இரசாயன யுத்தம் தொடங்கியாகி விட்டது. இனி காதல் வெற்றியை அறிவிக்க வேண்டும்..
காதலை சொல்வது எப்படி? புஸ்தகம் கடையில் விற்கிறதா? சிராங்கூன் சாலையிலும் குட்டி இந்தியா கடைத் தொகுதியிலும் தேடிப் பார்த்தான்.
ஒரு முறை துணிந்து விட்டான். எப்படியும் சொல்லி விடுவது என்று எண்ணி தொலைபேசியை கையிலெடுத்தான். வந்த தைரியம் ரிடர்ன் டிக்கெட் வாங்கி விட்டு வந்த வழியே சென்று விட்டது.
தொலைபேசியை கையிலேயே வைத்து பார்த்துக் கொண்டிருந்த போது மணி ஒலித்தது. அழைப்பது ‘உமா’ என்று சொல்லியது.
எடுத்து ஒரு வித கலக்கத்துடன், ‘ஹலோ’ என்றான்.
உமா, ‘உங்களை இன்னைக்கு சந்திக்கலாமா?’ என்று கேட்டாள்.
ராஜேஷ் அதற்காக காத்திருந்தவனாக, ‘எப்ப? எங்கே?’ என்றான்.
இருவரும் சந்தித்தார்கள்.
உமா தான் முதலில் தைரியமாக ஆரம்பித்தாள், ‘நா சொல்றேன்னு என்ன தப்பா நினைக்காதீங்க.. நான் உங்கள காதலிக்கிறேன்..’ என்று..
போச்சுடா.. உமாவிற்கும் அதே love at first sight தான் போலிருக்கிறது..
வானம் தூறலாவது போடாதா என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தவனுக்கு அடைமழையையே பரிசாக பெற்றது போலிருந்தது ராஜேஷ¥க்கு.
அவர்களது காதல் கூட அழகு தான். காமம் என்பது காதலர்களுக்கு உறியது அல்ல தம்பதிகளுக்கு உறியது என்பதை நன்றாகவே அந்த தமிழ் நெஞ்சங்கள் உணர்ந்திருந்தது.
பெரிய ஆச்சரியம் தான் இல்ல..
எதிர்ப்பே இல்லாத காதல். அதாவது இருவரது பெற்றோர்களுக்கும் இருவரது குடும்பங்களையும் பிடித்திருந்தது.
அழகிய திருமணம். மலரினும் மெல்லிது காமம் என்ற குறளுக்கு ஏற்ப சிறப்பான தாம்பத்ய வாழ்க்கை..
அந்த புகைப்படம் சொன்ன கதையை நாம் படித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில் ராஜேஷ் வசந்தம் சென்றல் தொலைக் காட்சியில் பவளகாந்தம் கந்தசாமி அவர்கள் அழகிய தமிழில் வாசித்த தமிழ் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான்.
போக்குவரத்துறை அலுவலக பணிமனை சிற்றுண்டிச்சாலை..
‘இவர் இந்த அளவுக்கு ஏன் மேல வெறுப்பு காட்டுவார்ன்னு நா நினைக்கவே இல்லலா..’ என்றாள் உமா
‘என்னாச்சு.. ஜி.எம்.(general manager) கூப்டாரே என்ன சொன்னாரு..’ என்றாள் உமாவின் தோழி ரமா.
‘இல்ல.. நேத்து ரோட் ஓரத்துல கார நிறுத்திட்டு உள்ள போயிருந்தாரு.. நான் சூரா வச்சேன்.. அது தப்பா.. அது பீக் அவர் தெரியுமா..?’ என்றாள் உமா.
‘சரி இப்ப என்னாச்சு அதனால..’ என்றாள் ரமா.
‘நான் தான் சொன்னேன்.. எதா இருந்தாலும் ஆபீஸ்ல வந்து பேசிக்குங்கன்னு.. ஆனா அதுக்காக ஆபிஸ்க்கு போன் பண்ணி என்ன பத்தி கம்ப்ளய்ண்ட் கொடுத்திருக்காருலா..?’ என்று அழுதாள் உமா.
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம். ஆனால் வெறுப்பு வந்து விடக் கூடாது.
காதலித்து செய்த திருமணம்..
பெரியோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம்..
இன்று நீதிமன்றத்தின் வாசலில் வந்து நிற்கிறதே..
புரிந்து கொண்டவர்கள் பிரிய நினைப்பது ஏன்..?
இந்த அவசர உலகத்தில் காதல் கூட அவசர அவசரமாக தான் வந்து தொலைக்கிறது. கேட்டால் love at first sight என்கிறார்கள். கல்யாணம் முடிந்து விவாகரத்து கோருவது காதலை விட அவசரமாக வந்து விடுகிறது. இதை எப்படி சொல்ல போகிறார்கள்.. divorce at first fight என்றா..? தெரியவில்லை.
ராஜேஷ் அவனது நண்பர்களை ஒரு ஞாயிறன்று விடுமுறையில் நண்பர்களை வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
உமாவிடம் இது பற்றி பேசிய போது,
‘என்ன கேக்காம ஏன் நீங்களா கமிட் பண்றீங்க’ என்று முதலில் கோபப்பட்டு பிறகு ஒத்துக் கொண்டாள்.
ஞாயிறு வந்தது..
நண்பர்களும் வந்தார்கள்..
உமா மட்டும் வீட்டில் இல்லை..
உமாவின் தோழி ரமாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தெரிய வர உமா சமையல் வேலையை அப்படியே போட்டு விட்டு அவசரமாக சென்று விட தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிறகு தான் ராஜேஷ¥க்கே தெரிந்தது.
நண்பர் வட்டாரம் ராஜேஷை, ‘உன் ஒய்•புக்கு சமைக்க தெரியலைன்னா ஏதாவது ரெஸ்டோரண்ட்ல லன்ச்சை வச்சிருக்கலாமே’ என்று விளையாட்டக சொல்ல ராஜேஷ் பெரிய அவமானமாக உணர்ந்தான் அதை.
இது சம்மந்தமாக ராஜேஷ¥க்கும் உமாவிற்கும் வாக்குவாதம் நடந்த போது வாய்க்கு எட்டியது கைக்கும் எட்டி விட்டது. பேசிக் கொண்டே இருக்கும் போது கோபத்தில் உமாவை அடித்து விட்டான் ராஜேஷ்.
உமாவின் தோழி ரமா சொன்னாள், ‘என்னால தான் இவ்வளவும்’ என்று.
உமா, ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல அவருக்கு தான் எம்மேல பாசமே இல்ல.. அவருக்கு ஆச ஆசயா பொறந்த நாளன்னைக்கு மோதிரம் ஒண்ணு வாங்கி கொடுத்தேன்.. அப்படி பாசம் உள்ளவரா இருந்தா என்ன செஞ்சிருக்கணும்.. பத்திரமா வச்சிருக்கணும் தானே.. ஆனா அவர் என்ன செஞ்சார் தெரியுமா? என் கிட்டே கூட கேக்காம அவர் கூட வேல பார்க்குற ஒரு பொண்ணுக்கு அவ கல்யாணத்தன்னைக்கி கி•ப்டா கொடுத்துட்டாரு தெரியுமா..?’ என்று கலங்கினாள் உமா.
ரமா அவளை தேற்ற நினைத்து, ‘நீ ஏன்லா அப்படி நினைக்கிறே? அவர் உரிமையா எடுத்து கொடுத்திருக்கலாம் இல்லயா?’ என்றாள்.
உமா தன் கைப் பையிலிருந்து ஒரு எழுதுகோலை(pen) எடுத்து ரமாவின் முகத்திற்கு நேராக நீட்டி, ‘இது என்ன தெரியுமா? அவர் வாங்கி கொடுத்த பென்.. ஒகே..’ என்று திரும்ப பையில் வைத்துக் கொண்டே, ‘நான் பத்திரமா வச்சில்ல.. அத மாதிரி தானே நானும் எதிர்பார்ப்பேன்.. அவரும் நான் கொடுத்ததை பத்திரமா வச்சிருக்கணும்ணு..’ என்றவள் மெல்லிழைத் தாள்(tissue paper) எடுத்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, ‘யாரையாவது நேசிச்சேன்னா அவங்க பரிசா கொடுத்த பொருளையும் நேசிப்பே.. இப்படி ஈஸியா தூக்கி கொடுத்துட மாட்டே..’ என்றாள்.
ராஜேஷின் நண்பர்கள் சொன்னார்கள், ‘நீங்க பிரியறதுக்கு நாங்க எந்த விதத்திலேயாவது காரணமா இருந்திருந்தா எங்களை மன்னிச்சிடு’ என்று.
ராஜேஷ், ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அவளுக்கு எம்மேல பிரியமிருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது’ என்றான்.
நண்பர்களில் ஒருவன், ‘நீயேன் அப்படி நினைக்கிறே.. வீட்டுக்கு வர்ர விருந்தை விட ஹாஸ்பிடல்ல பிரண்ட் இருக்கும் போது போய் பார்க்குறதுல என்ன தவறு?’ என்று கேட்டான்.
ராஜேஷ், ‘நோ லா.. நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணுமில்லைலா.. ஹாஸ்பிடல்ன்னா.. ஆக்ஸிடெண்ட் கேஸா என்ன..? எப்பவும் வர்ர வயித்து வலி.. யூசுவல் பெய்ன்.. தட்ஸ் ஆல்.. சரி.. எங்கிட்டே சொல்லிட்டு போலாம்ல.. குளிச்சிட்டு வர்ரதுக்குள்ள வீட்ட பூட்டிட்டு போயிட்டா எப்படி..? என்ன செஞ்சிருக்கணும்? எங்கிட்டே சொல்லிருக்கணும்.. நானே கூட்டிட்டு போயிருப்பேன்.. அவளுக்கு பாசமே இல்லலா.. எம்மேல மரியாதையும் இல்ல..’ என்று தன் பக்கமிருந்த நியாயத்தை சொன்னான்.
வக்கீல் வடிவழகன் வீடு-
வக்கீல் வடிவழகன் ராஜேஷையும் உமாவையும் பார்த்து, ‘உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு விவாகரத்துன்னு தீர்ப்பு கிடைச்சிடும்..’ என்றார்.
இருவரும் நன்றி சொன்னார்கள்.
வடிவழகன், ‘நீங்க எங்கிட்டே •பர்ஸ்ட் டைம் வந்தப்ப நான் சொல்றத கேக்குற ஸ்டேஜ்ல நீங்க ரெண்டு பேருமே இல்ல.. அதான் நாளைக்கு டிவோர்ஸ் நிச்சயங்குற பட்சத்துல ரெண்டு பேரயும் கூப்ட்டு பேசிடலாம்னு தோணுச்சி..’ என்றவர் சிறிது மௌணத்திற்கு பிறகு, ‘பேசலாமா?..’ என்று இருவரையும் பார்த்து கேட்டார்.
இருவரும் தலையை ஆட்டி ‘ப்ளீஸ்’ என்றார்கள்.
‘நீங்க ரெண்டு பேருமே ஒர்கிங் கபுள்ஸ் ஆமாவா.. இல்லயா?’ என்றார் வடிவழகன்.
இருவரும் ‘ஆமா..’ என்றார்கள்.
‘நீங்க ரெண்டு பேரும் எத்தனை வருஷமா வேல பார்க்குறீங்க..?’-வடிவழகன்.
‘நான் பிரைவேட் கன்சர்ன்ல செவன் இயர்ஸா மேனேஜரா ஒர்க் பண்ணிட்டிருகேன்’-ராஜெஷ்
‘நான் போக்குவரத்து துறைல கடந்த நாளு வருஷமா வேல பார்க்குறேன்’-உமா
வடிவழகன் தன் கண்ணாடியை கழட்டி தன் சட்டையில் துடைத்து திரும்ப மாட்டி விட்டு ‘இத்தனை வருஷத்துல நீங்க எப்பவாவது உங்க வேலய ரிசைன் பண்ணணும்னு நினைச்சதுண்டா..? ஆபிஸ்ல ஏதாவது பிரச்சினை வந்து..’ என்று முடிக்குமுன்.
‘யெஸ் அப்படி நினைச்சதுண்டு.. ஆனா அவ்வளவு ஈஸியா தூக்கி போட்டுட முடியாது.. வேலையாச்சே..’ என்றான் ராஜேஷ்.
‘நான் கூட நினைச்சிருக்கேன்.. பட்.. வேலைன்னா பிரச்சினை இல்லாம இருக்காது.. ஆமா தானே.. ஸோ.. நான் வர்ர பிரச்சினைய சமாளிச்சிட்டு இல்லன்னா.. பொறுத்துட்டு போயிடுவேன்..’ என்றாள் உமா.
வடிவழகன்- ‘ரெண்டு பேரும் வேலய விடறதுக்கு முன்னாடி இவ்வளவு தூரம் சிந்திச்சிருக்கீங்களே.. இந்த மாதிரி வாழ்க்கைய விடணும்னு வந்திருக்கிறீங்களே.. இதுக்கு முன்னாடியும் நீங்க சிந்திச்சு இருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்..’
இருவரும் மௌணம் காத்தனர்..
‘திருமணங்கறது ஒரு ஒப்பந்தம்.. வாழ்க்கை முழுவதற்கும் இடையில ஏற்படற கஷ்டம் நஷ்டம் எதுவும் பிரிக்க முடியாத பந்தம்..’
இருவரும் கூர்ந்து கவனித்தார்கள்..
‘விவாகரத்துண்ணா.. கொடுமை படுத்துறது.. நடத்தை சரியில்லாம போயிடறது.. குடிச்சிட்டு கலாட்டா பண்றது.. நாலு காசு சம்பாதிக்காம குடும்பத்த கவனிக்காம பட்டினி போடறது.. இந்த மாதிரியான் காரணங்களுக்காக பிரிஞ்சு போயிடறதுக்கு சட்டம் கொடுக்குற மாற்று வாழ்க்கை.. ஆனா விவாகரத்த போயி தன்னம்பிக்கைன்னு சொல்லிக்கிறாங்க.. காலம் அப்படி இருக்கு.. என்ன செய்றது?.. ஆனா நீங்க..’
வடிவழகன் பேச்சை நிறுத்தி விட்டு இருவரது முகம் மாறுவதையும் கவனித்தார்..
‘ஆனா நீங்க.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பிரியப்பட்டிருக்கீங்க.. இனி புரிஞ்சிக்கணும்.. விட்டு கொடுக்கணும்.. வேலய அவ்வளவு சீக்கிரம் விட்டுடாத நீங்க வாழ்க்கைய ரொம்ப சுலபமா விட்டுட நெனைச்சது தான் வேதனை..’ என்றவர்..
‘சரி.. நீங்க ரெண்டு பேரும் இந்த பேப்பர்ல சைன் வைங்க..’ என்று எழுதுகோலை தேடினார்.. அது இல்லை..
உமா அதை கவனித்து விட்டு, ‘எங்கிட்டே இருக்கு..’ என்று தன் கைப் பையிலிருந்து எழுதுகோலை எடுத்தாள்..
வடிவழகன் அழகாக இருந்த எழுதுகோலை பார்த்து விட்டு, ‘எங்கே.. காட்டுங்க.. அழகா இருக்கே.. எங்கே வாங்குனீங்க? விலை என்ன.?’ என்றார்.
உமா, ‘இவங்க தான் வாங்கி கொடுத்தாங்க..’ என்று அழ ஆரம்பித்து விட்டாள்..
ராஜேஷ் கண்களில் கண்ணீருடன் உமாவை திரும்பி பார்த்தான்..
வடிவழகன் சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, ‘மண வாழ்க்கைங்கறது ஆழமான சுவையான கருத்துள்ள புஸ்தகத்தை படிக்கிற மாதிரி.. காசு கொடுத்து வாங்கிட்டு படிக்கிறதுக்கு முன்னாடியே கிழிச்சு போட வந்துட்டீங்களே..’ என்றார்.
ராஜேஷ் அழுத உமாவை, ‘அழாதே உமா..’ என்று கண்களை துடைத்து விட்டான் அழுது கொண்டே..
உமா வடிவழகனிடம், ‘என்ன மன்னிச்சிடுங்க நா இனிமே இந்த மாதிரி தப்பை நெனைச்சு கூட பார்க்க மாட்டேன்..’ என்றாள்.
ராஜேஷ், ‘நா கூட இனிமே சரியா நடந்துக்கறேன்..’ என்றான்.
இருவரும் வக்கீல் வடிவழகனுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார்கள். சீருந்தில் இருவரும் அமர்ந்து கொண்டனர். உமா அழுதுக் கொண்டே இருந்தாள்.
ராஜேஷ் வானொலி ஒலி 96.8ஐ இயக்கி விட்டான்..
அதில் ஓசை படத்தில் வரும் ‘ஒரு பாடல் நான் கேட்டேன்..’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
ராஜேஷ், ‘தண்ணி குடிக்கலாமா?’ என்றான்.
உமா, ‘ம்’ என்றாள்.
ராஜேஷ் அந்த குடியிருப்பு பகுதியில் நுழைந்து சீருந்து நிறுத்துமிடத்தில் கொண்டு போய் நிறுத்தினான்.
ராஜேஷ் உமாவிடம், ‘இப்பல்லாம் அஞ்சு நிமிஷம் காடிய நிறுத்தினாலும் பார்க்கிங் கூப்பன் வச்சுட்டு தான்லா இறங்குறது..’ என்றவன் ‘கூப்பன் அந்த பாக்ஸ்ல தான் இருக்கு.. தொறந்து எடேன்..’ என்றான்.
உமா திறந்தாள். அங்கே ஒரு மோதிரம் வைக்கும் நகை பெட்டியும் இருந்தது.
உமா, ‘என்ன இது?’ என்று கேட்டாள்.
ராஜேஷ், ‘இதுவா.. மோதிரம் நீ வாங்கி கொடுத்தது தான்.. அது கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு அதான் சரி பண்ணலாம்னு கழட்டி வச்சிருக்கேன்..’ என்றான்.
உமா ஆச்சரியத்துடன் கேட்டாள், ‘அப்ப நீங்க அந்த ஜெயாவுக்கு பிரசெண்ட் பண்ணது..?’ என்று..
ராஜேஷ், ‘ஆமா.. யெஸ்.. யு ஆர் கரெக்ட் பார்க்க ரெண்டு மோதிரமும் ஒரே மாதிரி தான் இருக்கும்..’ என்றான்.
உமா, ‘என்ன சொல்றீங்க.. அப்ப அது வேற மோதிரங்கறீங்களா?’ என்றாள்.
ராஜேஷ், ‘ஆமா.. வேறென்னா.. நீ வாங்கி கொடுத்ததயா தூக்கி கொடுக்க முடியும். யாரையாவது நேசிச்சேன்னா அவங்க பரிசா கொடுத்த பொருளையும் நேசிப்பே.. ஆமாவா இல்லையா?.. உங்கிட்ட இருக்கிற பேனா.. என்கிட்டே இருக்கிற மோதிரம்.. இப்படி.. இதெல்லாம் ஈஸியா தூக்கி கொடுத்துட முடியாது இல்லையா?’ என்றான்.
உமாவால் அழுகையை கட்டுப்படுத்த முடிய வில்லை.
மணவாழ்வு- இனிமேல் தான் அவர்களுக்கு ஆரம்பம்.

கடுமையிலிருந்து விடுபடு! (Relax!)
எனக்கு என் பாட்டியார் பொன்னாச்சிம்மா மீது கொள்ளை பிரியம், அவர்களை பற்றி திண்ணை இணைய தளத்தில் ஒரு கதையே எழுதி இருந்தேன், நிற்க..
எனக்கு சாதாரணமாகவே விரல்கள் நடுங்கும், இன்னும் ஏதோ சிறிய பதட்டமான சூழ்நிலை என்றால் கூட கைகளில் இன்னும் உதறல் கூடி விடும், வயதானவர்களுக்கு குளிரில் நடுங்குமே அது போல் அல்லது அதை விட அதிகமாக நடுநடுங்க ஆரம்பித்து விடும். நான் எப்போதும் கடுமையாகவே இருப்பேன், பேருந்துகளில் உட்கார்ந்து இருக்கும் போது கூட தேவையே இல்லாமல் கம்பிகளில் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்வேன்.
இப்படியாக தேவைக்கு மீறிய அச்சம் ஏற்படும் காரணத்தால் நான் என் உடலிலிருந்து அதிக சக்தியை விரயமாக்கி இருக்கிறேன், வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்பது உணவுக்கும் குடிநீருக்கும் மட்டும் தான் பொருந்தும் என்று நினைத்திருந்தேன். அப்புறம் ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்களின் மாணவனாக மாறிய பிறகு தான் அது உடலின் அசைவுக்கு கூட பொருந்தும் என்று தெரிந்து கொண்டேன், தெளிந்து கொண்டேன்.
ஒரு முறை என் பெரியம்மாவின் மகளார் சேச்சி சிறு வயதில் சிறிய மணியை விளையாடும் போது அவரது மூக்கின் உள்ளே திணித்து விட்டார், தொடர்ந்து அழ ஆரம்பித்து விட்டார், என் பாட்டியார் பொன்னாச்சிம்மா என்ன? ஏது? என்று கவனித்த போது செய்தி தெரிந்திருக்கிறது, அதே நேரத்தில் சில விருந்தாளிகள் திடீரென்று வந்து விட்டார்கள், உடனே பொன்னாச்சிம்மா கொஞ்சம் கூட பதட்டமில்லாமல் சேச்சியை சோபாவில் தூக்கி உட்கார வைத்து விட்டு, 'ஏன் குழந்தை அழுகிறது?' என்று கேட்ட விருந்தாளியாய் வந்த பெண்டிர்களுக்கு ஒரு பதிலை சொல்லி விட்டு, வந்தவர்களை உபசரித்து அனுப்பி வைத்து விட்டு, சேச்சியின் நாசியில் மிளகாய் பொடியை காண்பித்தார், ஒரு தும்மல் தான், நாசியின் உள்ளே சென்ற சிறிய மணியானது வந்து வெளியே விழுந்தது, சேச்சியின் அழுகை நின்றது.
நானாக இருந்திருந்தால் பதட்டமடைந்து அழுது புரண்டு வீட்டையே இரண்டாக்கி இருப்பேன். எது நடந்தாலும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும், பொன்னாச்சிம்மாவிடம் கற்றுக் கொண்டது. தன் மரணத்தின் இறுதி நேரத்திலும் பதட்டப்படாமல், 'யாரும் அழ கூடாது, இது தான் சரியான நேரம்' என்றவர் தான் எனது பாட்டியார்.
பிரச்சினை வரும் போது பதட்டப்படாமல் இருந்தால் அல்லது வீணாக உடலில் இருந்து அதிக சக்தியை விரயமாக்காமல் இருந்தால் பிரச்சினைகளின் தீர்வை நம் மனசே சொல்லி விடும் இன்ஷா அல்லாஹ்..

Tuesday, August 07, 2007
என் காதல்..
அடித்த
புயல் மழைக்கு
இரும்பு கட்டிடங்களே
இருந்த இடம்
இல்லாமல் போகும்
என்னுடையது
பூஞ்சோலை..!
இறப்பதற்காகவே
மரணத்தின்
கருப்பையில்
வளர்ந்தது
என் காதல் சிசு..!
கிழக்கு திசைக்கு
இத்தனை
பக்கத்திலா
மேற்கு திசை
விடிந்தவுடன்
அஸ்தமித்து விட்டதே..!
எனது
முதல் எழுத்தே
முற்றுப்புள்ளி தான்..
முடிவு என்ன என்று
நன்றாய் தெரிந்திருந்தும்
தொடங்கியிருந்தேன்
எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
தெரியவில்லை..!
தொழிலாளர்கள்
உலகத்தில்
புரட்சியாளர்களே அதிகம்
தோல்வியாளர்கள்
உலகத்தில்
காதலர்களே அதிகம்..!
அவளுடனான
முதல் சந்திப்பு
இன்னமும் பசுமையய்..
இதோ
என் தங்கை
பெயர் புன்னகை
மனோதத்துவம் படிக்கிறாள்
அறிமுகம் செய்கிறான்
நண்பன் ஒருவன்
இந்த மோதிரம்
எங்கே வாங்கினாய்..?
ஆசையாய் கேட்டது
நண்பனின் தாய்
பேங்காக்..
- நான்..
இந்த சட்டை
சிங்கப்பூரா..?
ஆர்வமாய் கேட்டது
நண்பனின் தந்தை
ஊரில் சிங்கப்பூர் கடையில்..
- நான்..
அழுதிருந்தாயா..?
கண்களில் தெரிகிறதே
தேனாக கேட்டது
புன்னகை
புன்னகைத்தேன்
- நான்..
அணிகலன் விசாரிப்பின்
நடுவே
அழுகையை விசாரித்தவள்
எனக்கு
அழகாய் தெரிந்தாள்
தேள் கொட்டிய
இடத்தில்
தேன் கொட்டியது
போல்..
அருமை
பாட்டியாரின் மரணம்
தொண்டை
அடைக்கும் துயரம்
பூட்டி தானே
வைத்திருந்தேன்
உன் கண்களுக்கு
புலப்பட்ட தெப்படி..?
உங்களுக்கு அழுகை
பிடிக்காதா..?
- நான்..
அழுவது பிடிக்கும்
புலம்புவது பிடிக்காது
கூட்டத்தில் சிரி
தனிமையில் அழு
"எனக்கு தெரிந்தது
உங்களுக்கு தெரிந்தால்
அதிகமாக அழுவீர்கள்
குறைவாக சிரிப்பீர்கள்"
ஹதீஸ் அறிவாயோ..?
தெளிவாய் இருந்தாள்
உங்களுக்கு இஸ்லாமும்
தெரியுமா?
- நான்..
என் வீட்டு
நூலகத்தில்
மகாகவி பாரதியின்
பகவத் கீதையும்
உண்டு
தமிழர் தலைவரின்
கீதையின் மறுபக்கமும்
உண்டு
என் ஆரம்பம்..
என் கருத்து
மட்டுமே சரி
என்ற புள்ளியில்
தொடங்குவதில்லை
அதனால் தான்
இதுவரை நான்
தோற்றதுமில்லை
உங்களிடம்
கற்க வேண்டியது
நிறைய உள்ளது
- நான்..
கற்க வேண்டியது
நிறைய உள்ளது
இதுவே
இதுவரை
நான் கற்றது
அடைக்கப்பட்ட இடத்திற்குள்
தென்றலாய் நுழைந்தது
புன்னகையின் புன்னகை
சிறைப்பட்டிருந்த
என் துயரங்களை
விடுதலை செய்து
பறக்க விட்டாள் -
நானே அவளுக்குள்
சிறைபட்டேன்
அன்று
அவளுக்கு
பிறந்த நாள்..
பூக்களிடம் விசாரித்தேன்
உனது
பிறந்த தினம்
என்றென்று தெரியாதாம்-
மறந்து போயும்
சொல்லிவிடாதே
இன்று தவிர
மற்ற நாளில்
பூக்காமல்
இருந்து விடும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் வாழ்த்து
படித்ததும் -
என்னை காதலிக்கிறாயா..?
கேட்டே விட்டாள்
சுற்றி வளைக்க
தெரியாது
அவளுக்கு
என்னை மணமுடிக்கிறாயா..?
போட்டு உடைத்தேன்
துணிச்சல் தான் -
அவளிடம் கற்றது
அடர்த்தியான நிசப்தம்
இருவருக்கும் இடையில்
இடைஞ்சலாய்
அவளின்
நாளை சந்திக்கிறேன்
எனும் சொல்லில்
மௌனம் கலைந்தது
விடை தெரியாமல்
அன்றைய பகலும்
விடைபெற்றது
தூக்கம் தொலைந்த கண்கள்
இரவுகளின்
இருட்டு இரகசியங்களை
எனக்கு
வெட்ட வெளிச்சமாக்கியது..!
ஆளில்லாத நெடுஞ்சாலையில்
தனியாய் நிற்கும்
தொலைதொடர்பு கம்பிகளாய்
நின்றேன்
என் வீட்டு
சன்னலின் ஓரத்தில்..
என் பறவை வந்துவிடாதா..?
ஏமாற்றாமல்
சொன்னபடி வந்துவிட்டாள்
"உன்னை விட்டு போகிறேன்"
என்று சொல்ல
'டூமீல்' சத்தம்
என் காதுக்குள்..
தோட்டாக்களை
விட வலிமையானது
அவள் வார்த்தைகள்
முன்பு..
அவள் புன்னகை
அவள் சிரிப்பு
அவள் சொல்
அவள் வார்த்தை
நிஜத்தில்..
அவள் ஸ்பரிசம்
அவள் அணைப்பு
அவள் முத்தம்
அவள் உறவு
கனவில்..
இன்று..
கனவிலும்
நிஜங்கள் கூட
இல்லை..!
அன்று சொன்னது..
கதையில் வரும்
அனைத்து பாத்திரங்களிலும்
கதாரிசிரியர் இருப்பார்
என்
உணர்வில் உயிரில்
நீ இருப்பாய்..!
இன்று சொல்வது..
நான் உன்னுள்
இருப்பதாக
சொல்
இப்பொழுதே
இறந்து விடுகிறேன்..!
இப்படிக்கு -
உன் காதலன்
புயல் மழைக்கு
இரும்பு கட்டிடங்களே
இருந்த இடம்
இல்லாமல் போகும்
என்னுடையது
பூஞ்சோலை..!
இறப்பதற்காகவே
மரணத்தின்
கருப்பையில்
வளர்ந்தது
என் காதல் சிசு..!
கிழக்கு திசைக்கு
இத்தனை
பக்கத்திலா
மேற்கு திசை
விடிந்தவுடன்
அஸ்தமித்து விட்டதே..!
எனது
முதல் எழுத்தே
முற்றுப்புள்ளி தான்..
முடிவு என்ன என்று
நன்றாய் தெரிந்திருந்தும்
தொடங்கியிருந்தேன்
எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
தெரியவில்லை..!
தொழிலாளர்கள்
உலகத்தில்
புரட்சியாளர்களே அதிகம்
தோல்வியாளர்கள்
உலகத்தில்
காதலர்களே அதிகம்..!
அவளுடனான
முதல் சந்திப்பு
இன்னமும் பசுமையய்..
இதோ
என் தங்கை
பெயர் புன்னகை
மனோதத்துவம் படிக்கிறாள்
அறிமுகம் செய்கிறான்
நண்பன் ஒருவன்
இந்த மோதிரம்
எங்கே வாங்கினாய்..?
ஆசையாய் கேட்டது
நண்பனின் தாய்
பேங்காக்..
- நான்..
இந்த சட்டை
சிங்கப்பூரா..?
ஆர்வமாய் கேட்டது
நண்பனின் தந்தை
ஊரில் சிங்கப்பூர் கடையில்..
- நான்..
அழுதிருந்தாயா..?
கண்களில் தெரிகிறதே
தேனாக கேட்டது
புன்னகை
புன்னகைத்தேன்
- நான்..
அணிகலன் விசாரிப்பின்
நடுவே
அழுகையை விசாரித்தவள்
எனக்கு
அழகாய் தெரிந்தாள்
தேள் கொட்டிய
இடத்தில்
தேன் கொட்டியது
போல்..
அருமை
பாட்டியாரின் மரணம்
தொண்டை
அடைக்கும் துயரம்
பூட்டி தானே
வைத்திருந்தேன்
உன் கண்களுக்கு
புலப்பட்ட தெப்படி..?
உங்களுக்கு அழுகை
பிடிக்காதா..?
- நான்..
அழுவது பிடிக்கும்
புலம்புவது பிடிக்காது
கூட்டத்தில் சிரி
தனிமையில் அழு
"எனக்கு தெரிந்தது
உங்களுக்கு தெரிந்தால்
அதிகமாக அழுவீர்கள்
குறைவாக சிரிப்பீர்கள்"
ஹதீஸ் அறிவாயோ..?
தெளிவாய் இருந்தாள்
உங்களுக்கு இஸ்லாமும்
தெரியுமா?
- நான்..
என் வீட்டு
நூலகத்தில்
மகாகவி பாரதியின்
பகவத் கீதையும்
உண்டு
தமிழர் தலைவரின்
கீதையின் மறுபக்கமும்
உண்டு
என் ஆரம்பம்..
என் கருத்து
மட்டுமே சரி
என்ற புள்ளியில்
தொடங்குவதில்லை
அதனால் தான்
இதுவரை நான்
தோற்றதுமில்லை
உங்களிடம்
கற்க வேண்டியது
நிறைய உள்ளது
- நான்..
கற்க வேண்டியது
நிறைய உள்ளது
இதுவே
இதுவரை
நான் கற்றது
அடைக்கப்பட்ட இடத்திற்குள்
தென்றலாய் நுழைந்தது
புன்னகையின் புன்னகை
சிறைப்பட்டிருந்த
என் துயரங்களை
விடுதலை செய்து
பறக்க விட்டாள் -
நானே அவளுக்குள்
சிறைபட்டேன்
அன்று
அவளுக்கு
பிறந்த நாள்..
பூக்களிடம் விசாரித்தேன்
உனது
பிறந்த தினம்
என்றென்று தெரியாதாம்-
மறந்து போயும்
சொல்லிவிடாதே
இன்று தவிர
மற்ற நாளில்
பூக்காமல்
இருந்து விடும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் வாழ்த்து
படித்ததும் -
என்னை காதலிக்கிறாயா..?
கேட்டே விட்டாள்
சுற்றி வளைக்க
தெரியாது
அவளுக்கு
என்னை மணமுடிக்கிறாயா..?
போட்டு உடைத்தேன்
துணிச்சல் தான் -
அவளிடம் கற்றது
அடர்த்தியான நிசப்தம்
இருவருக்கும் இடையில்
இடைஞ்சலாய்
அவளின்
நாளை சந்திக்கிறேன்
எனும் சொல்லில்
மௌனம் கலைந்தது
விடை தெரியாமல்
அன்றைய பகலும்
விடைபெற்றது
தூக்கம் தொலைந்த கண்கள்
இரவுகளின்
இருட்டு இரகசியங்களை
எனக்கு
வெட்ட வெளிச்சமாக்கியது..!
ஆளில்லாத நெடுஞ்சாலையில்
தனியாய் நிற்கும்
தொலைதொடர்பு கம்பிகளாய்
நின்றேன்
என் வீட்டு
சன்னலின் ஓரத்தில்..
என் பறவை வந்துவிடாதா..?
ஏமாற்றாமல்
சொன்னபடி வந்துவிட்டாள்
"உன்னை விட்டு போகிறேன்"
என்று சொல்ல
'டூமீல்' சத்தம்
என் காதுக்குள்..
தோட்டாக்களை
விட வலிமையானது
அவள் வார்த்தைகள்
முன்பு..
அவள் புன்னகை
அவள் சிரிப்பு
அவள் சொல்
அவள் வார்த்தை
நிஜத்தில்..
அவள் ஸ்பரிசம்
அவள் அணைப்பு
அவள் முத்தம்
அவள் உறவு
கனவில்..
இன்று..
கனவிலும்
நிஜங்கள் கூட
இல்லை..!
அன்று சொன்னது..
கதையில் வரும்
அனைத்து பாத்திரங்களிலும்
கதாரிசிரியர் இருப்பார்
என்
உணர்வில் உயிரில்
நீ இருப்பாய்..!
இன்று சொல்வது..
நான் உன்னுள்
இருப்பதாக
சொல்
இப்பொழுதே
இறந்து விடுகிறேன்..!
இப்படிக்கு -
உன் காதலன்
Saturday, June 23, 2007
ஆச்சிமா
இவர்
என் தந்தையின்
அன்னை-
'இஸ்மாயில்'
என பெயரிட்டார்
என்னை
சஹர் உணவிலேயே
சதை போடுது இங்கே
பலருக்கு-
வருஷம் முழுதும்
நோன்பு பிடித்த தேகம்
இவருக்கு
பரணில் குரானை
தூங்க வைத்த பாவம்
எங்களுக்கு-
பொருளோடு குரானை
தூங்காமல் படித்த பெருமை
உங்களுக்கு
புரியவில்லை எனக்கு-
உலகமே தெரியாது
என்பதால்
சொத்து சுகம்
கேட்கவில்லையா?
உலகமே நிலைக்காது
என்பதால்
சொத்து சுகம்
சேர்க்கவில்லையா?
ஆச்சிமா..!
உங்கள் வாழ்க்கை
இருக்கிறது
எனக்கு
ஆச்சரியமா..!
தேநீரிலும்
வெறுநீரிலுமே
உங்கள் வயிறு
நிரம்பியது
ஒடுக்கலானையும்
அத்தரையுமே
உங்கள் மனசு
விரும்பியது
உங்களது
கஜானா குறைந்தால்
அபாய் அப்பாவிற்கு
கைகள் தான் அரித்தது-
அபாய்அப்பா
சொல்லாமல் போனதால்
உங்களது
இதயம் அல்லவா துடித்தது
சேத்தநானாவாம்
சேத்தப்பா
தங்கச்சி என்றழைத்த
பொன்னாச்சி(மா)
அன்பிற்கு
இரு சாட்சி-
மறைந்து போனதே
அந்த
அழகிய காட்சி..!
வாழ்வில்
அயர்ந்து உறங்கி
உங்களை யாருமே
பார்த்தது இல்லை
என்றா
ஐந்தாண்டுகள்
உறக்கத்திலேயே
இருந்தீர்கள்!
யாயிச்சாவிற்கு மட்டுமா
என்ன..?
பிள்ளை சபியாவிற்கும்
பேரன் அன்சாரிக்கும்
அல்லவா
குழந்தையாய்
இருந்தீர்கள்!
ஆச்சிமா..!
உங்கள் வாழ்க்கை
இருக்கிறது
எனக்கு
ஆச்சரியமா..!
ஊர் வந்தால்..
உங்களை தான்பார்க்க முடியாது
என எண்ணியிருந்தேன்..!
நீங்கள்
வாழ்ந்த வீட்டையும்
பார்க்க முடியாது
போலும்..!
என் செய்ய
பேய் பிடித்தால்
பாப்பாவூர்
ஊர் சொல்கிறது-
பணம் பிடித்தால்
எந்தஊர்
ஊர் சொல்லுமா?
யாரங்கே..!
இனி
'ஆச்சி(மா) வீடு எங்கே?'
என எவரும் கேட்டால்
என் இதயம்காட்டுங்கள்..!
காசுக்கு கல் தான்
விலைபோகும்
என் கல்புமா
விலை போகும்..?
கண்ணீர் துளிகளுக்கிடையே
இந்த கவிதை துளிகளையும்
சிந்தியது..
இஸ்மாயில்
என் தந்தையின்
அன்னை-
'இஸ்மாயில்'
என பெயரிட்டார்
என்னை
சஹர் உணவிலேயே
சதை போடுது இங்கே
பலருக்கு-
வருஷம் முழுதும்
நோன்பு பிடித்த தேகம்
இவருக்கு
பரணில் குரானை
தூங்க வைத்த பாவம்
எங்களுக்கு-
பொருளோடு குரானை
தூங்காமல் படித்த பெருமை
உங்களுக்கு
புரியவில்லை எனக்கு-
உலகமே தெரியாது
என்பதால்
சொத்து சுகம்
கேட்கவில்லையா?
உலகமே நிலைக்காது
என்பதால்
சொத்து சுகம்
சேர்க்கவில்லையா?
ஆச்சிமா..!
உங்கள் வாழ்க்கை
இருக்கிறது
எனக்கு
ஆச்சரியமா..!
தேநீரிலும்
வெறுநீரிலுமே
உங்கள் வயிறு
நிரம்பியது
ஒடுக்கலானையும்
அத்தரையுமே
உங்கள் மனசு
விரும்பியது
உங்களது
கஜானா குறைந்தால்
அபாய் அப்பாவிற்கு
கைகள் தான் அரித்தது-
அபாய்அப்பா
சொல்லாமல் போனதால்
உங்களது
இதயம் அல்லவா துடித்தது
சேத்தநானாவாம்
சேத்தப்பா
தங்கச்சி என்றழைத்த
பொன்னாச்சி(மா)
அன்பிற்கு
இரு சாட்சி-
மறைந்து போனதே
அந்த
அழகிய காட்சி..!
வாழ்வில்
அயர்ந்து உறங்கி
உங்களை யாருமே
பார்த்தது இல்லை
என்றா
ஐந்தாண்டுகள்
உறக்கத்திலேயே
இருந்தீர்கள்!
யாயிச்சாவிற்கு மட்டுமா
என்ன..?
பிள்ளை சபியாவிற்கும்
பேரன் அன்சாரிக்கும்
அல்லவா
குழந்தையாய்
இருந்தீர்கள்!
ஆச்சிமா..!
உங்கள் வாழ்க்கை
இருக்கிறது
எனக்கு
ஆச்சரியமா..!
ஊர் வந்தால்..
உங்களை தான்பார்க்க முடியாது
என எண்ணியிருந்தேன்..!
நீங்கள்
வாழ்ந்த வீட்டையும்
பார்க்க முடியாது
போலும்..!
என் செய்ய
பேய் பிடித்தால்
பாப்பாவூர்
ஊர் சொல்கிறது-
பணம் பிடித்தால்
எந்தஊர்
ஊர் சொல்லுமா?
யாரங்கே..!
இனி
'ஆச்சி(மா) வீடு எங்கே?'
என எவரும் கேட்டால்
என் இதயம்காட்டுங்கள்..!
காசுக்கு கல் தான்
விலைபோகும்
என் கல்புமா
விலை போகும்..?
கண்ணீர் துளிகளுக்கிடையே
இந்த கவிதை துளிகளையும்
சிந்தியது..
இஸ்மாயில்
Thursday, May 17, 2007
ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்களின் பொன் மொழிகள்:
1. கடன் வாங்கும் போது இருக்கும் அதே மனநிலை அந்த கடனை திருப்பி கொடுக்கும் போதும் இருக்க வேண்டும்.
2. பிறரை குறை சொல்லக் கூடாது, தன்னை பற்றி சிந்திக்க வேண்டும், நாம் பிறரிடம் கண்டு பிடித்த அந்த குறை நம்மிடம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
3. தனக்கென இருக்கும் நனமையை பிறருக்கு எந்த சிரமமும் இல்லாமல் அடைய வேண்டும்

Tuesday, January 23, 2007
அறிமுகம் - முடிவு
திண்ணையில் நான் எழுதிய முதல் கதை "வாப்பாக்காக" கதை தான். எனது "பொன்னாச்சிமா" என்ற கதையை படித்து விட்டு அது உண்மையில் எனது பாட்டியாரின் வாழ்க்கையை தான் கதை போல் எழுதியிருந்தேன் - இந்த கதையை படித்து விட்டு தட்ஸ்தமிழில் துணை ஆசிரியராக இருந்த ரமேஷ் என்ற நண்பர் தட்ஸ்தமிழுக்காக கதை எழுதுமாறு கேட்டார், "தேவை இந்த மனங்கள்" என்று எழுதி அனுப்பினேன் - தற்சமயம் ரமேஷ் என்ற நண்பர் கீற்று இணைய தளத்தில் பணி புரிவதாக அறிகிறேன் -தமிழ் மணத்தில் பின்னூட்டம் மட்டுமே எழுதியிருக்கிறேன் - கதை எழுத காரணமாக இருந்த கதைகள் என்றால் நாகூர் ரூமியின் , "குட்டியப்பா"வும் ஆபிதீன் அவர்களின் "குழந்தை"யையும் சொல்லலாம்.
நாகூர் இஸ்மாயில்
நாகூர் இஸ்மாயில்
அறிமுகம் - தொடர்ச்சி
ஊரில் இருக்கும் போது எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க 'புவன் ஒரு கேள்விக்குறி" , "மர்மம்", "எங்க வீட்டு திருடன்" போன்ற வேடிக்கை படங்களை குடும்பத்தார்களே நடித்து அதை வீடியோ கேமராவில் காட்சி பிடித்து ஒலிஒளி நாடாவில் மாற்றம் செய்து குடும்பத்தார்கள், தெருவாசிகள் மட்டுமே பார்த்து ரசித்து இருக்கிறோம், கதை வசனம் என்னவோ நான் எழுதி தந்து விடுவேன், என் மச்சான் ஒருத்தர் இயக்குவார், இதன் தொடர்ச்சியாக திண்ணையிலும், தட்ஸ்தமிழ் டாட் காமிலும் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளேன் - நாகூர் இஸ்மாயில்
அறிமுகம்
எனது பெயர் முஹம்மது இஸ்மாயில், நாகூரில் பிறந்து நாகூர், காரைக்கால், நாகப்பட்டினம் என அருகாமையில் உள்ள ஊர்களில் படித்து புருணை சென்று வேலை அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் ஊர் திரும்பும் வழியில் சிங்கை வந்து மனித வள அமைச்சில் வேலை கிடைத்து 8 வருடங்களாக வேலை பார்த்து தற்சமயம் தேசிய தொழிற் சங்க காங்கிரஸில் பயிற்றுவிப்பாளராக பணி புரிந்து வருகிறேன்.
நாகூர் இஸ்மாயில்
நாகூர் இஸ்மாயில்
Subscribe to:
Posts (Atom)