Sunday, June 13, 2010

S.M.A.R.T. -

If we fail to plan

We are planning to fail - என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.

அதாவது நாம் திட்டமிட தவறினால்
தோல்விக்கு தான் திட்டமிடுகிறோம்
 - என்று அர்த்தம்.

ஒவ்வொரு காரியத்திற்கும் 'இன்னது' செய்ய போகிறோம் என்று சொல்லிக் கொள்வது அல்லது திட்டமிடுவது அவசியமாகிறது.

ஆங்கிலத்திலே "Goals" என்றும் "Objectives" என்றும் இரண்டு வார்த்தைகள் இருக்கிறது. இவை இரண்டுக்குமே வெவ்வேறு விளக்கங்கள் (recognized definitions) உள்ளது.

எனக்கு தெரிந்தவரை..

"Goals" என்பதற்கு 'இலக்கு' அல்லது 'லட்சியம்' என்பதாக மொழி பெயர்க்கலாம். அதாவது, நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என்ற வினாவுக்கான விடை தான் "Goals"-

இதில் "Objectives"  என்பது உங்களது அந்த 'இலக்கை' 'லட்சியத்தை' அடைய என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பது பற்றியது. 

ஒரு "Goal" க்கு  ஒன்றுக்கு மேற்பட்ட "Objectives" - "குறிகோள்' இருக்கும். கோலானது எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம், உங்களது 'படிப்பு', 'தொழில்', 'குடும்பம்', 'பழக்க வழக்கம்' இவ்வளவு ஏன் வலைப்பதிவில் எழுதுவது இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

உதாரணமாக:

"Goal" :
1. நான் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்


இதற்கான "Objectives":

1.1 தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
1.2 மதுபானம் குடிப்பதை நிறுத்த வேண்டும்
1.3 புகை பிடிப்பதை விட வேண்டும்
1.4 தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும்

"Goal"


2. நான் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து இருக்க கூடாது

இதற்கான "Objectives":


2.1 இருக்கும் கடன்களை அடைத்து முடிக்க வேண்டும்
2.2 குறிப்பிட்ட வீண் சிலவை குறைக்க வேண்டும்
2.3 சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்
2.4 ஆடம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

இப்படியாக உங்களின் "Goals"ஐ அடைய தேவையான "Objectives"ஐ கண்டுபிடித்து எழுதி வைக்க வேண்டும்.

"Objectives"ஐ பொறுத்த வரையில் அது S.M.A.R.T.  ஆக இருக்க வேண்டும் என்று பொதுவாக சொல்வது உண்டு

S.M.A.R.T என்றால்..

Specific - குறிப்பிடும்படியான

Measurable - அளக்கத்தக்க

Achievable -  முடியக்கூடிய

Realistic - யதார்த்தமான

Time-Bound - காலவரையறைக்குட்பட்ட

**************************************************

1. Specific - குறிப்பிடும்படியான

"Objectives" விளக்கமாக, தெளிவாக இருக்க வேண்டும். 'இது தான்' என்று ஆணி அடிப்பது போல் நெத்தி பொட்டில் சுடுவது போல் இருக்க வேண்டும்.

உதாரணமாக, தொழுகையை தொடங்குவதற்கு முன்னர் 'நான் கிப்லாவை (கஃபத்துல்லாஹ்வை) முன்னோக்கி இந்த இமாமை (தலைவரை) பின்பற்றி இந்த நேரத்து (ஐவேளை தொழுகையில் எந்த வேளை என்று குறிப்பிட வேண்டும்) தொழுகையை இத்தனை ரக்கத்துகள் (பொதுவாக இரண்டு அல்லது நான்கு) தொழுவதாக சொல்லிக் (நினைத்து) கொள்கிறோமே.. அதை போல் தெளிவாக இருக்க வேண்டும்.

என்னை பொருத்த வரை மேலே கண்ட தொழுகைக்கான நிய்யத் என்பது ஒரு well-defined obejectives ஆகும்.

2. Measurable - அளக்கத்தக்க

நோன்பு 27 லைலத்துல் கத்ர் வர்ரதுக்குள்ளே 2 முறை குரான் ஷரீஃபை ஓதி முடிச்சிடணும்னு நினைக்கிறோம் இல்லையா? - இதில் '2' தான் அளக்கத்தக்கவாக உள்ளது.

இன்னொரு உதாரணம்: நான் உடற்பயிற்சி செய்வேன் என்று சொல்வதற்கு பதிலாக வாரத்தில் இரண்டு நாள் சனி, ஞாயிறு உடற்பயிற்சி செய்வேன் என்று இருக்க வேண்டும். அந்த Quantity இங்கே அவசியப்படுகிறது.

3. Achievable - முடியக்கூடிய

கணக்கு பரீச்சையில் 10, 15 மார்க் வாங்குகிற மாணவன் ஒருவன் 35, 40 மார்க் வாங்கி பாஸாக வேண்டும் என்றால் முடியக்கூடியதாக இருக்கலாம். அவனே 100 க்கு 100 மார்க் வாங்க வேண்டும் என்று objectives அமைப்பது அடையக் கூடியது தானா என்று பார்க்க வேண்டும்.

முயன்றால முடியலாம் என்பது உண்மையாக இருந்தாலும்  முடியாமல் போய் Motivation குறைந்து விடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.

4. Realistic - யதார்த்தமான

"Objectives" யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றால் சுலபமானதாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. தவிர Achievable எல்லாம் Realistic ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. இருக்கின்ற KSA (KSA - Kingdom of Saudi Arabia அல்ல அது Knowledge, Skills, Attitudes), காலம், பணம் போன்ற வளவசதிகளை வைத்துக் கொண்டு முடியக்கூடியது தானா என்று சிந்திக்க வேண்டும்.

5. Time-Bound - காலவரையறைக்குட்பட்ட

இது எந்த காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்ற கெடு விதிப்பது. ஒரு 4 மாசத்திற்குள் 5 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்பதாக வைத்துக் கொள்வதை குறிக்கும்.

இதில் '4 மாதம்' என்ற காலவறையறைக்குள் உங்கள் Objectivesஐ நிறைவேற்றுவது என்று விதித்து கொள்வது தான் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டும் என்ற அவசரத்தையும் (urgency), தூண்டுகோலையும் (motivation), செயலையுமே (action) உருவாக்கி தரும்.
--------------------------------------------

நீங்களும் வேண்டுமென்றால் டிரை பண்ணி பாருங்களேன்.. நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி 'நல்ல வலைப்பதிவாளராக வர வேண்டும்' என்ற கோலை வகுத்து கொண்டு 'மொக்கைகள் எழுதுவ்தில்லை, பதிவரசியலில் ஈடுபடுவதில்லை, etc., etc.,  என்ற அப்ஜெக்டிவ்சையும் வைத்துக் கொண்டு முயன்று பார்க்கலாமே..

No comments: