Sunday, June 12, 2011

கவ்வாலி நேரம் - மன் குன்தோ மவ்லா - மர்ஹூம் உஸ்தாத் ஃபதேஹ் அலி கான்

”மன் குன்தோ மவ்லா” என்ற வாக்கியம் இறுது இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீதில் உள்ளதாகும்.


மன் குன் தோ மவ்லா
ஃப அலி-உன் மவ்லா
- என்பதே அந்த ஹதீது


இதன் பொருள், 


என்னை எவர்கள் மவ்லாவாக (தலைவர்) ஏற்றுக் கொண்டார்களோ
அவர்களுக்கு மவ்லாவாக அலி (றலி) அவர்கள் இருக்கிறார்கள்


இந்த ஹதீதை அவர்கள் கதிர் கும் என்ற இடத்தில் அவர்கள் தனது நேசத்திற்குறியவனான இறைவனிடம் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது.


இந்த ஹதீது சம்மந்தமாக இதை எப்படி விளங்குவது என்பது தொடர்பாக ஷியா சுன்னி உலமாக்களிடையே சில கருத்து வேறுபாடுகளும் இருந்து வருகிறது (இதுக்கு தான் பஞ்சமேயில்லையே)


கதிர் கும் சம்மந்தமான சில இணைப்புகள்:


http://www.al-islam.org/encyclopedia/chapter3/2.html


http://en.wikipedia.org/wiki/Hadith_of_the_pond_of_Khumm


http://www.amaana.org/gadhir/gadhir1.htm




தாரா தில்லே தாரா தில்லே தாரே தானி...
தாரா தில்லே தாரா தில்லே தாரே தானி...
ஓ..!
ஹம் தும் தநா நா நா நா, தாநா நா ரே
ஹம் தும் தநா நா நா நா, தாநா நா ரே
யாலாலி யாலாலி யாலா, யா லா ரே
யாலாலி யாலாலி யாலா, யா லா ரே
தாரா தில்லே தாரா தில்லே தாரே தானி...

இதயத்தில் நுழைந்து
இதயத்தில் நுழைந்து
அங்கேயே கரைந்து விடு,
நீயும் நானும் -
இனிய கீதத்தை உள்ளிருந்து இசைத்துவிடு

6 comments:

ஆபிதீன் said...

இஸ்மாயில், எனக்கு மிகவும் பிடித்த கவாலி இது. நன்றி. - நானா

nagoreismail said...

நானா, இதே பாடலை இன்னொரு அருமையான குரலில் கேட்டு மகிழ உங்கள் மெயிலை பாருங்கள்..

ஸலாமுடன்

ஆபிதீன் said...

கேட்டேன். தெரியலையே... 'சாப்ரி' பிரதர்ஸா? ஆபிதா, ஜீலாகான் என்று பலரையும் கேட்டதுண்டு. நம்ம ஜாஃபர்நானா இப்போதுதான் 'ஜாஃபர் ஹுசைன் கான்'-ன் மன் குன்து மௌலா'வைக் கொடுத்தார். எல்லாருமே 'மன்'னில் குந்துகிறார்களென்றாலும் நுஸ்ரத் நுஸ்ரத்துதான் மௌலா!

nagoreismail said...

டெல்லி நிஜாமுதீன் அவ்லியா மஜாரில் - இருவரது கவ்வாலி கேட்ட அனுபவம்

http://crazylazy.wordpress.com/2009/07/01/qawwali-at-nizamuddin-dargah-in-delhi/

மன் குன்தோ மவ்லாவின் பாடல் வரிகள் ஆங்கிலத்தில்

http://nusrat.info/man-kunto-maula/

’நுஸ்ரத் நுஸ்ரத்துதான் மௌலா!’

- நம்ம ஆளுங்க இதுல ஏதாவது சர்ச்சைய கொண்டு வந்துட போறாங்க.. அதனால.. இப்படி..

நுஸ்ரத் தான் கவ்வாலி கலைஞர்களின் மவ்லா - சந்தேகமே இல்லை..!

ஹமீது ஜாஃபர் said...

’மன்குன்து மவ்லா’ இக்கவிதை ஹஜ்ரத அமீர் குஸ்ரு(ரஹ்) அவர்களால் இயற்றப்பட்டது. இதை பாடாத உருது பாடகர்களே இல்லை என சொல்லலாம். ஒவ்வொருவரும் அவர்களுக்கான ராகத்தில் பாடியிருக்கிறார்கள். நுஸரத் அலி கான், ஜாஃப்ர் ஹுசைன் கான், ஜிலா கான், ஆபிதா பர்வின், அஜீஜ் மியான் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொருவர் பாடும்போது ஒரு வகையான உயிரோட்டம் ஊடே நிற்கின்றது.

nagoreismail said...

http://www.youtube.com/watch?v=TkvQbxjAwjg&feature=player_embedded

இதுவும் அருமையாக இருக்கிறது