Tuesday, July 10, 2012

தௌஹீது-பலதில் ஒன்று - சூஃபி ஆவணப்படம்

வரலாற்றின் அடிப்படையில் நாம் பல மக்களாக, பல குழுக்களாக, பல நிறங்களாக, பல பிரிவினர்களாக, பல நம்பிக்கையுடைவர்களாக (அல்லது எந்த நம்பிக்கையும் இல்லாதவராக), பல நாட்டினராக, பல தேசத்தினராக, இப்படி பல பலவென பலவாறாக பிரிந்து கிடந்தாலும் இந்த பூமி என்ற ஒன்றில் தான் வசிக்கிறோம்.

எல்லை கோடுகள் போட்டு நம்மை நாமே பிரித்து வைத்திருக்கலாம், ஆனால் ஒரு சுனாமி வந்து காட்டி கொடுத்து விட்டது.. நாம் எல்லோரும் இருப்பது ஒரு பூமியில் தான் என்பதை.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியானது நாட்டின் எல்லை கோடுகளை கொஞ்சமும் மதிக்காமல் இந்தியா, சிரிலங்கா, தாய்லாந்த் எல்லா நாட்டிலும் அதன் அழிச்சாட்டியத்தை காட்டி விட்டு தான் சென்றது.

இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் பாதிப்பு இருக்கத்தான் செய்யும், ஏனெனில் நாம் யாரும் Independent கிடையாது Inter-dependent தான்.

Yes, the world is inter-dependent.

டாக்டர். தாரிக் எம். காதிர் என்பார் மிக அழகான ஒரு ஆவணப்படத்தை எடுத்து நம் பார்வைக்கு வைத்திருக்கிறார்.

அந்த படம் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக எடுத்துக் கொண்ட உலகில் வாழும் பல பாகத்தினர் எப்படி வாழ்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. 

கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ல இந்த படம் 3 பாகங்களை உடையதாக அமைந்திருக்கிறது.

முதல் பாகம்: The Way of Salat 
இரண்டாம் பாகம்: The Way of Zikr - Allah is the first and last (starts from 28:40)
மூன்றாம் பாகம்: The Way of Sadaqah - To give is to be true (begins from 1:10:01)


No comments: