ரூமி அவர்கள்ரோஜா மலர் குடியிருப்பில் நண்பர்களோடு குழுமி விருந்துண்டு கொண்டிருக்கும் போது நான் ரூமியிடம் உரையாடினேன். நான் அவர்களிடம் நெருங்கி ஒரு சில கனம் உரையாடுவதற்கும் எனக்கு அனுமதி கிடைத்தது.
நான் உங்களை பார்த்து அப்படியே செய்பவன் நான். எனக்கு உங்களின் எண்ணங்களில் உதித்த கதைகளை திருட வேண்டும் என்ற எண்ணம் இல்லா விட்டாலும் நான் உங்களின் கதைகளை திருடுகிற உங்களை பார்த்து அப்படியே போலியாக பின்பற்றுகிறவன் தான் நான்..” என்று அவர்களிடத்தில் முறையிட்டேன்.
ரூமி அவர்கள் சிரித்தார்கள், அப்போது அவர்கள் நல்ல ஆன்ம ஞானத்தோடு இருந்ததாக அறிகிறேன். அவர்கள் சொன்னார்கள், ”இளமையில் நான் அணிந்த ஆடைகளை போலவோ அல்லது நான் உண்ணுகின்ற உணவை வைக்கும் தட்டையை போலவோ நான் எழுதிய அந்த கதைகள் எல்லாம் எனக்கு மட்டுமே சொந்தமான எனது உரிமை பொருள்கள் அல்ல. நானும் எனது கதைகளும் ஒரு சில காலம் ஒன்றாக இணைந்திருந்தோம். நான் இறந்த பிறகு, இறைவன் வைரங்களை பூமிக்கு அடியில் மறைத்து வைத்திருப்பது போல் எனது கதைகளையும் புதைத்து விடுவான்.
அவற்றை எடுத்து வேறு அறிவார்ந்த சபை முன்னர் வெளியிடுவதன் மூலம் இறந்து விட்ட என்னை மட்டும் மரியாதை செய்யவில்லை என்னுடைய ஆசிரியர்களையும் மரியாதை செய்து விடுவதோடு பெருமைக்குறிய இறைவனுக்கு உலகில் உள்ள எந்த ஒரு பரிசுமே இறைவனுக்கு பொருத்தமான பரிசு பொருளாக அமையாதிருப்பினும் மூன்று பரிசுகளை தந்தவராகுறீர்கள்.
அவர்கள் மேலும் சொன்னார்கள், “ஞாபகத்தில் வையுங்கள்... நான் எனது வார்த்தைகளை அத்தாரிடமிருந்து நான் கடனாக பெற்றது, மேலும் அந்த வார்த்தைகள் அவர்களும் (அத்தாரும்) நானும் சனாயிடமிருந்து கடனாக பெற்றது. ஆகவே நீங்கள் காப்பி அடித்ததாக சொல்லப்படும் எங்களின் அந்த கதைகள் யாவுமே நாங்களே கடனாக பெற்றது தான். உண்மையில் அனைத்துமே அவனது (இறைவனது) கைகளிலிருந்து தான் அனைத்துமே கடனாக பெறப்படுகிறது.
”நீங்கள் கொடுத்ததை விட அதிகம் எடுத்திருந்தால், இறைவன் உங்களை மன்னிக்கட்டும்”
-------------------------------------------------------------------------------------------
நீங்கள் மேலே படித்தது கீழே இருக்கும் லிங்கிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது.
2 comments:
அற்புதமான தகவல்.
சூஃபிகள் எதையும் தமக்கு சொந்தம் கொண்டாடுவதில்லை. முன்னால் உள்ள விளக்கிலிருந்து தன் விளக்கை ஏற்றிக் கொள்கிறார்கள். ஆனால் ஒளியின் மூலமோ ஒன்றே ஒன்றுதான் என்பதனால் எதையும் அவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை. தன் மூலம் வெளியான அனைத்துக்கும் நன்றி செலுத்துவதிலே அவர்கள் வாழ்க்கை கழிகின்றது.
Post a Comment