Friday, September 24, 2010

இணைய அஞ்சலில் வந்தது -

MIKE TYSON’S SPIRITUAL JOURNEY
By Majed Al-Suqairi

MADINA – Former US heavyweight boxing champion Mike Tyson, who is on a visit to the Kingdom
to perform Umrah, Sunday prayed at the Quba’ and Qiblatain mosques.
He also visited the Islamic University and met the university’s president, Dr. Muhammad Al-Oqla,
and American nationals studying there.
Tyson was mobbed whereever he went. Large numbers of fans gathered around the hotel where he
is staying near the Prophet’s Mosque. Some people waited for hours just to see him and take his pictures.
Tyson had to scurry toward the Prophet’s Mosque for Dhuhr prayers as fans gathered around him in
large numbers. He used the Shimagh of one of his companions to cover his head but the fans
recognized him and followed him.
“I am happy that I have fans who love me here in the Kingdom, but I hope they leave me alone to
enjoy my spiritual moments at the Holy Sites,” he said.
“I couldn’t resist shedding tears when I came to know that I was in one of the gardens of paradise,”
Tyson said referring to Arrawda in the Prophet’s Mosque.
Tyson was accompanied by Shahzad Muhammad, head of the Canadian Dawah Association,
which organized his visit to Saudi Arabia.
“Tyson became emotional when offering Salam to Prophet Muhammad (peace be upon him),”
said Shahzad.
“He cried for more than half an hour while standing in front of the Prophet’s grave, raising his hands.”
“He remained in front of the Rawdah for hours praying, reciting the Qur’an and making supplications,” Shahzad said.
Later Mike Tyson went to the Meqat to change into Ihram for Umrah. - Okaz/SG


-- 

Best Regards 
Mahathir

Wednesday, September 22, 2010

டி.ராஜேந்தர் - சகலகலா வல்லவன்




சரியாக அந்த நபர் வந்து கொண்டிருந்த போது அந்த கைக்குழந்தை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த விளையாட்டு பொருளை தூக்கி எறிந்தது.

நல்ல காலம். அந்த நபரின் மேலே எல்லாம் படவில்லை. கால் கிட்டே வந்து விழுந்தது. அந்த நபர்  பொறுமையாக கீழே குனிந்தார், 


'சாரி.. சார்.. இல்லை சார்.. பரவாயில்லை சார்.. இருக்கட்டும் சார்..' 
- இப்படி பல குரல் கோரஸாக அவர் காதுகளுக்குள் விழுந்ததை பொருட்படுத்தாமல் குனிந்த அவர் அந்த பொருளை எடுத்து குழந்தை கையில் கொடுத்து விட்டு குழந்தையை பார்த்து புன்னகைத்து விட்டு குழந்தையாய் நகர்ந்தார்.

அந்த ஜெண்டில்மேன் வேறு யாருமல்ல.. தமிழ் திரைப்படங்களில் 80களில் கட்அவுட் கட்டி தொங்கிய டி.ராஜேந்தர் அவர்கள் தான்.

டி.ராஜேந்தர் தாய்லாந்த் நாட்டில் - பேங்கோக் நகரில் - பிளோட்டிங் மார்க்கெட்டில் (மிதக்கும் சந்தை) - எடுத்த படம்


இவரை பற்றி கிண்டல் செய்வதற்கு ஆயிரம் பேர் வரிந்து கட்டிக் கொண்டு ஆயிரத்தியோரு காரணங்களை எடுத்துக் கொண்டு வந்தாலும் பாராட்டுவதற்கு குறைந்தது ஆயிரத்து ரெண்டாவது இருக்கத்தான் செய்கிறது என்பது என் கருத்து. அதில் ஒன்றாக நான் மேலே சொன்ன ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு தலை ராகம் மூலம் தமிழ் சினிமாவில் ’வாசமில்லா மலரை’ கொண்டு ஆர்மோனியப் பெட்டியில் ‘அ’னா எழுதினார். 





இந்த படத்தில் 'கூடையில கருவாடு..' பாடலில் ஆடிய மூன்று அரவாணிகளில் நாகூரை சேர்ந்தவரும் ஒருவர்.




தயாரிப்பாளர்களால் இவரின் உழைப்புகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்து விடவே துவண்டு போய் விடாமல் தனது திரைப் பயணத்தை 'இரயில் பயணங்களில்' தொடர்ந்தார். 


பேங்கோக்கில் எனது மாமாவுடன் டி.ராஜேந்தர்

ஒரு தலை ராகத்தின் காதல் மாயவரம் ஏ.வி.சி. கல்லூரியிலும் புகைவண்டியிலும் வளர்ந்துக் கொண்டிருக்க கதையின் இரண்டாம் நாயகியான உஷா என்பவருடன் இவருக்கு காதல் இரு தலை ராகமாகவே இனிதாக இசைக்க தொடங்கியது.

அவரது உயிரில் கலந்தவரை ’உயிருள்ளவரை உஷா’வாக்கி கவுரவித்தார். செயின் செயபாலின் புயல் தமிழ்நாட்டையே சுழற்றி அடித்தது. 

சூலகருப்பனாய் ‘தங்கைக்கோர் கீதம்’ பாடிய அவரை தமிழ் சினிமா ‘பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாட’ விட்டது.

நளினிக்கும் அமலாவிற்கும் முகவரி கொடுத்தார். ’மைதிலி என்னை காதலி’ என்று திரையில் கவிதை எழுதினார். 

இந்தி ஜங்கை ’ஒரு தாயின் சபத’மாக்கினார். திமுகவின் கொள்கை பரப்பினார். பூங்கா நகர் பூக்கள் கொடுத்து வரவேற்றது. 


பேங்கோக்கில் (நடிகைகளே தொடாமலே நடித்த) டி.ராஜேந்தருடன் (நடிகைகளை விடாமலே நடிக்கும்) சிம்பு

உயிருள்ளவரை உஷாவில் ஒரு காட்சி, கடைசி வரை கத்தி கத்தியே பேசி நடித்திருந்தாலும், கடைசியில் ஒரு காட்சியில் கதைப்படி சரிதாவிடம் தொலைபேசியில் உரையாடும் காட்சியில் மிகவும் அமைதியாக பேசி நடித்திருப்பார்.

அதே அமைதியுடன் புதிய டிரெண்டிற்கு ஏற்றவாறு இசையமைக்கிறேன் பேர்வழி என்று எல்லாம் கொடுமை படுத்தாமல் அவருடைய பாணியிலேயே மிகவும் யதார்த்தமான ஒரு தலை ராகத்தையோ அல்லது மைதிலி என்னை காதலியையோ பார்க்க வேண்டும் என ஆவலாய் இருக்கிறது.

Thursday, September 09, 2010

ஈத் முபாரக்

இங்கே சிங்கப்பூரில் நாளைய தினம் நோன்பு பெருநாள். மலாய் மொழியில் இந்த நாளை 'சலாமத் ஹரி ராயா ஈதுல் பித்ரி' என்று சொல்வார்கள். ஒரு மாதம் இறைவனை நினைத்து பசித்திருந்து நல்லவைகளை பழக்கப்படுத்தி பொறுமையாக இருந்து விட்டு நாளைய தினம் குடும்பத்தினரோடும் சகோதரர்களோடும் அண்டைய வீட்டினரோடும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கொண்டாடும் நாள்.

இன்றைக்கு ஒரு விருந்து என்றால் சிறப்பான நாள் என்றால் மதுபானம் தான் மூலதனம். சாராய வாடை இல்லாமல் சாதாரணமாக ஒரு கொண்டாட்டமும் கிடையாது, கூட்டமும் கிடையாது. ஆனால், இந்த பெருநாள் அப்படியல்ல, நோன்பிருந்து பொறுமையாக இருந்து விட்டு பெருநாளன்றும் இறைவனை நினைக்கவும் வணங்கவும் பள்ளிவாசலுக்கு வந்து விட வேண்டும்.

அடுத்த வருடத்தில் என்ன தேதியில் நோன்பு பெருநாள் வரும் என்று இந்த வருடத்திலேயே இங்கே சிங்கையில் கணித்து சொல்லி விடுகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் நாகூரில் அன்றைய இரவு நேரடியாக பிறை பார்க்கப்பட்டு அல்லது அக்கம் பக்கத்து ஊரில் பார்த்ததாக தகவல் வந்த பிறகு தான் நாகூர் தர்காவில் குண்டு போட்டு அடுத்த நாள் பெருநாள் என்று அறிவிப்பார்கள்.

ஒரு முறை அன்றைய தினம் தான் கடைசி நோன்பாக இருக்கும் என்று நினைத்து பிறை பார்க்க ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட்டமாக் நின்று பிறையை வானில் தேட ஆரம்பித்தார்கள். எங்கள் ஊரில் யாரையாவது நீண்ட நாள் கழித்து சந்தித்தால், 'என்னா இது, பொறய பாக்குற மாதிரில்ல இருக்குது' என்று கூட சொல்வார்கள்.

அன்றைய தினம் பிறையே புலப்படவில்லை. வழக்கம் போல் நோன்பு நாளில் தொழும் சிறப்பு தொழுகையான திராவீஹ் தொழுகையை (20 ரக்கத்து தான் அப்பொழுதெல்லாம் 8 கூட்டம் தலையெடுக்காத குழப்பமில்லாத நாட்கள்) நிறைவேற்ற பள்ளிவாசலுக்கு சென்று விட்டோம். கிட்டதட்ட ஐந்து சலாம் முடிந்து விட்டது.  ஆறாவது  ஸலாமிற்குறிய  தொழுகையை நிறைவேற்ற தக்பீர் கட்டினோம் 'அல்லாஹு அக்பர்' குண்டு போட்டு நரகா கொட்ட ஆரம்பித்து பெருநாள் தக்பீர் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அப்புறம் என்ன..? அந்த ஸலாத்தை முடித்து விட்டு பெருநாள் கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. 
"நாளைக்கு பெருநாள்
நம்மளுக்கு ஜோக்.." என தொடங்கும் பாடல் தெருவெங்கும் சிறுவர்களின் வாயில் முனுமுனுக்க ஆரம்பித்தது. அந்த குழப்பமில்லாத நாட்களிலெல்லாம் நாகூரில் ஷாஃபி இமாமின் கருத்துக்களின் படி தொழுகையில் சில விதிகளை கடைபிடித்து தொழுபவர்களும் ஹனஃபி இமாமின் கருத்துக்களின் படி தொழுகையில் சில விதிகளை கடைபிடித்து தொழுபவர்களும் இருந்தார்கள்.

திராவீஹ் தொழுகை 20 ரக்கத்துகள் இரு விதிகளை பின்பற்றுபவர்களும் ஒன்றாக ஒரே வரிசையில் அருகருகே நின்று தான் தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகை முடிந்ததும் வித்ரு எனும் தொழுகையில் அதன் முறையில் சில வித்தியாசங்கள் இருப்பதால் தனித்தனியே தொழுகையை நிறைவேற்றுவார்கள். யார் வேண்டுமென்றாலும் எந்த முறைப்படியும் தொழலாம். என் முறை தொழுகை தான் சரி என்ற எண்ணம் இந்த இரு பிரிவினருக்கும் இருந்ததே இல்லை.

உதாரணமாக நான் வந்து சங்கை மிகு ஹனஃபி இமாம் அவர்கள் வகுத்த  விதிகளின் படி தொழுகையை நிறைவேற்றுவேன். எனது மாமா சங்கை இமாம் அவர்கள் வகுத்த விதிகளின் படி தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகை முடிந்ததும் அனைவரும் ஸலாம் கொடுத்துக் கொள்வோம்.

அந்த நாட்களெல்லாம் வெறும் குழப்பமில்லாத நாட்கள் மட்டுமல்ல துப்பாக்கியில்லாத தோட்டாக்கள் இல்லாது உயிரிழப்பு இல்லாத அருமையான பசுமையான நாட்கள். பெருமானார் அவர்களின் கூற்றின்படி 'கூடாரங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக' இருந்த நாட்கள்.

இன்றைக்கு இந்த மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது என்று தெரியவில்லை? பிரிவுகளாக பிரிந்து உள்ளுக்குள் குரோதத்தையும் விரோதத்தையும் வளர்த்து விட்டார்கள் சில குறை மதியுடைய ஆலிம்ஷாக்கள். அவர்களின் விஷமம் விஷத்தை பரவ செய்து வேருக்கே உலை வைத்து விட்டது. இவர்கள் மார்க்கத்தை போதிக்க வரவில்லை. குழப்பத்தை ஏற்படுத்த வந்து வெற்றியும் கண்டு விட்டார்கள்.

****************************************************************************

தவறி செய்த பாவங்களை மனம் வருந்தி திருந்தி கையேந்தினால் அல்லாஹ் மன்னிப்பான். தெரிந்தே செய்கின்ற குழப்பங்களை பூரா உம்மாவும் மன்னிக்காது.

சகோதரர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்


**********************************************************************************************






************************************************************************************************




************************************************************************************





************************************************************************************





*************************************************************************************

குரான் ஷரீஃப்

ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)

வசன எண்: 19

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.

*****************************************************
இணைப்பு:

http://www.boston.com/bigpicture/2010/08/ramadan_2010.html 


**********************************************************************************

Sunday, September 05, 2010

கண்ணியமிக்க இரவு - குரான் ஷரீஃப்

ஸூரத்துல் கத்ரி - கண்ணியமிக்க இரவு

97:1 நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

97:2 மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

97:3 கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.

97::4 அந்நாளில் மலக்குகளும் ரூஹும் தம் இறைவனின் கட்டளையின் படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.

97:5 ஸலாம்.. அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.







*************************************************************
இணைப்பு:

http://literarymiracle.wordpress.com/

*************************************************************

Friday, September 03, 2010

ரமலான் நோன்பு - குரான் ஷரீஃபின் வசனம் - இணைப்புகள்

குரான் ஷரீஃப்

2வது அத்தியாயம் - ஸூரத்துல் பகறா (பசு மாடு)

62வது வசனம்

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

*******************************************************
மேலே உள்ள வசனம் இஸ்லாம் எப்படி இஸ்லாம் அல்லாத மற்ற நம்பிக்கையாளர்களை அணுகுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.

அத்தோடு அந்த வசனத்தில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெரும்பான்மையானவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையோடு ஸாபியீன்கள் என்ற நம்பிக்கையாளர்களையும் சேர்த்துக் கொள்கிறது. - ஸாபியீன்களை பற்றிய ஒரு கட்டுரை இதோ:
http://maviboncuk.blogspot.com/2006/12/sabians-yazdnism-and-alevism.html

இந்த சாபியீன்கள் என்ற குறைவான எண்ணிக்கையில் இருந்த (ஸாபியீன்கள் என்பது யூத, கிறிஸ்தவ நம்பிக்கை அல்லாத மற்ற அனைத்து நம்பிக்கையாளர்களையும் உள்ளடக்கியது என்பது ஒரு சாராரின் கருத்தாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது) போதிலும் குரான் ஷரீஃபின் இந்த குறிப்பிட்ட வசனத்தில் அவர்களையும் சேர்த்து கொண்டதிலிருந்து  இஸ்லாத்தின் உலகலாவிய அரவணைப்பும் மிகுந்த கருணையுடைய இறைவனின் பேரன்புமே பிரதிபலிக்கின்றது.
மேலும், இந்த வசனம் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் முஸ்லீம் தீவிரவாதிகள் என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் சகோதரர்களிடத்திலே தோலில் கை போட்டு இஸ்லாம் தனது Religious Toleranceஐ பற்றி சொல்லிக் கொள்கிறது.

*******************************************************

ஒரு முஸ்லீம் அல்லாதவரின் ரமலான் மாத அனுபவங்கள்:

http://www.facebook.com/group.php?gid=148359471843894&v=app_2373072738#!/group.php?gid=148359471843894&v=wall

ஆரன் என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சகோதரரின் நோன்பு:

http://pthree.org/2010/08/09/looking-forward-to-ramadan/

இவர்களுக்கு இவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு என்று நம்புவோமாக..

**********************************************************

Thursday, September 02, 2010

மறுமை நாள் - குரான் ஷரீஃப்

ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)

75:1 கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்

75:2 நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்

75:3 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

75:4 அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

75:5 எனினும், மனிதன் தன் எதிரே வர இருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே  நாடுகிறான்.

75:6 ”கியாம் நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாக) கேட்கிறான்.

75:7 ஆகவே, பார்வையும் மழுங்கி-

75:8 சந்திரனும் ஒளியும் மங்கி

75:9 சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

75:10 அந்நாளில், “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.

75:11 ”இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை” (என்று கூறப்படும்)

75:12 அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

75:13 அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

75:14 எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.

75:15 அவன் தன் (பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்து போட்ட போதிலும்!

75:16 (நபியே!) அவசரப்பட்டு அதற்காக குர்ஆனை ஓதுவதற்காக உம் நாவை அசைக்காதீர்.

75:17 நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும் படி செய்வதும் நம் மீதே உள்ளன.

75:18 எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

75:19  பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம் மீதே உள்ளது.

75:20 எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்!

75:21 ஆகவே தான் மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

75:22 அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

75:23 தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

75:24 ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

75:25 இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

75:26 அவ்வாறல்ல! (மரண வேலையில் அவன் உயிர்) தொண்டைகுழியை அடைந்து விட்டால், -

75:27 ”மந்திரிப்பவன் யார்?” - என்று கேட்கப்படுகிறது

75:28 ஆனால் அவனோ நிச்சயமாக அது தான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

75:29 இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

75:30 உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

75:31 ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதி கொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.

75:32 ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

75:33 பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

75:34 கேடு உனக்கே! கேடுதான்!

75:35 பின்னரும் உனக்கே கேடு! அப்பாலும் கேடு தான்.

75:36 வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

75:37 (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டு சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்க வில்லையா?

75:38 பின்னர் அவன் ‘அலக்’ என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

75:39 பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

75:40 (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?


Wednesday, September 01, 2010

அற்பப் பொருள்கள் - குரான் ஷரீஃப்

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருள்கள்)

107:1 (நபியே!) நியாயத் தீர்ப்பை பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

107:2 பின்னர் அவன் தான் அநாதைகளை விரட்டுகிறான்.

107:3 மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை

107:4 இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடு தான்

107:5 அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும் அசிரத்தையாக)வும் இருப்போர்

107:6 அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்

107:7 மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்

Sunday, August 29, 2010

பத்ரு யுத்தம்

பத்ரு தரும் பாடம் நிறையவே இருந்தாலும் ஒரே ஒரு குரான் ஷரீஃபின் வசனத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அத்தியாயம் 8: ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றி பொருள்கள்)

11 வது வசனம்

(நினைவு கூறுங்கள்:)  நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.

மேலே கண்ட இந்த வசனத்தை கூர்ந்து கவனித்து படித்து பார்த்தால் அந்த யுத்தத்தில் மிகப் பெரிய வழிகாட்டுதலை இறைவன் பத்ருயீன்களுக்கு வழங்கியிருப்பது தெரிய வரும்.

அத்தோடு ஒரு போராளி போருக்கு முன்னால் தன்னை தூய்மைப்படுத்தவும் உறுபடுத்திக் கொள்ளவும் வேண்டும் அதாவது பெரிய ஜிஹாதான தன் மனதையும் நம்பிக்கையின் பால் உறுதிபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து இயம்புகிறது.

இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்வதோடு பத்ரு யுத்தம் சம்மந்தமாக  நான் கண்ட இரு காணொளி பதிவுகளை இணைத்துள்ளேன்.



Saturday, August 28, 2010

விடியற்காலை - குரான் ஷரீஃப்

89:1 விடியற்காலையின் மீது சத்தியமாக

89:2 பத்து இரவுகளின் மீது சத்தியமாக

89:3 இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக

89:4 செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக

89:5 இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

89:6 உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்தை) என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

89:7 (அவர்கள்) தூண்களுடைய ”இரம்” (நகர) வாசிகள்

89:8 அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை

89:9 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசிந்து வந்த) ஸமூது கூட்டத்தையும் அவன் (என்ன செய்தான் என்று அவர்கள் பார்க்கவில்லையா?)

89:10 மேலும் பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

89:11 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்

89:12 அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்

89:13 எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்

89:14 நிச்சயமாக உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டும்
இருக்கின்றான்

89:15 ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனை சோதிக்கும் போது அவன்: ”என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகின்றான்.

89:16 எனினும் அவனுடைய உணவு வசதிகளை குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ, ”என் இறைவன் என்னை சிறுமைப்படுத்தி விட்டான்” என கூறுகின்றான்

89:17 அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

89:18 ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

89:19 இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

89:20 இன்னும் பொருள்களை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

89:21 அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது

89:22 உம்முடைய இறைவனும், வானவரும் அணி அணியாக வரும் போது,

89:23 அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்?

89:24 ”என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை முற்படுத்தி நான்
(அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்

89:25 ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையை போல் வேறு எவனும் வேதனை செய்ய மாட்டான்.

89:26 மேலும் அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

89:27 (ஆனால்) அந்நாளில் நல்லடியார்களிடம் சாந்தியடைந்த ஆத்மாவே!

89:28 நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தியடைந்த நிலையிலும், (அவன்) உன்னிடம் திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

89:29 நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

89:30 மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்)




Friday, August 27, 2010

மூன்றாவது கடமையின் மூன்று வகைகள், இமாம் கஜ்ஜாலி (ரஹ்)

நோன்பின் நடுப்பகுதியில் இருக்கின்ற இந்த தருணத்திலே நாம் அனைவரும் இபாதத் எனும் வழிபாடுகளில் மூழ்கியிருப்போம். சஹர் நேரத்தில் விழித்து சாப்பிட ஆரம்பித்தும் சஹர் வரைக்குமே விழித்திருந்து குரான் ஷரீஃப் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் நம் பொழுதுகள் இறைதிருப்தியில் கழிந்து கொண்டிருக்கும்.

நோன்பானது முஸ்லீமானவர்களுக்கு ஐந்து கடமைகளுள் மூன்றாவது கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒருவர் நோன்பில் சஹர் வரை விழித்து கொண்டிருப்பார். சஹர் சாப்பிடும் நேரம் வரும் வரை நொறுக்கு தீனியும் சஹரில் தீனையே நொறுக்கியும் தின்று தீர்ப்பார். சுபுஹுக்கு பாங்கு சொல்லும் நேரம் தான் அவர் தூங்க ஆரம்பிக்கும் நேரம். அப்புறமா அவர் மக்ரிபுக்கு எழுப்பி விட்டால் எழுந்து நோன்பு திறந்து விடுவார்.

இவரை போன்றவர்கள் சந்தித்தால் முதலில் கேக்கும் கேள்வியே, 'இன்னைக்கு சஹருக்கு என்ன சாப்பிட்டீயோம்?' என்பது தான்.

அதற்கு பதில் இப்படி வரும், 'இன்னைக்கி வந்து பொறிச்ச எறைச்சியும் கட்லெட்டும் நேத்து கோழியும் குப்பத்தாவும்' என்று

அத்தோடு நின்று விடாது, அடுத்த கேள்வி தொடரும், 'நோன்பு தொறக்க என்னா சாப்பிடலாம்..?' என்று

பதில் பக்காவா இருக்கும், 'முர்தபாவும் முட்டை பிராட்டாவும்' என்று

இப்படியாக மூன்றாம் கடமையை முப்பது நாளும் முழுசாக நிறைவேற்றி விடுவார்கள். இவர்கள் ரொம்பவும் ஸ்டிரைட் ஃபார்வேர்ட். வெள்ளை நூல் ஆரம்பித்த நொடியிலிருந்து கருப்பு நூல் வரும் வரையில் (சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை) எதையும் சாப்பிட மாட்டார்கள், உண்ணவும் மாட்டார்கள்.

'நோன்பாளியின் உறக்கம் கூட இபாதத்' என்ற மொழியில் இவர்கள் சஹருக்கு தூங்கி மக்ரிபுக்கு எழுவது கூட இபாதத் புரிந்ததாக  அர்த்தப் படுத்திக் கொள்ளப்படும்.

நோன்பு குறித்து எவ்வளவோ புத்தகங்களும் கட்டுரைகளும் அருமையாக எழுதப்பட்டிருந்தாலுமே கூட இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் இஹ்யா உலூமித்தீனில் எழுதியவைகளே காலம் கடந்தும் இன்னும் கல்பில் நிற்கின்றன.

அவர்கள் நோன்பை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள். முதலாவதாக நோன்பு என்று இவர்கள் குறிப்பிடுவது நான் மேலே குறிப்பிட்டவர்களை போன்றும் இன்னும் ஏராளமானோரை போன்றும் கடமைக்காக பிடிக்கும் நோன்பு,

இரண்டாவது நோன்பு எனப்படுவது சில குறிப்பிட்ட நபர்கள் பிடிக்கும் நோன்பாகும். இது முந்தையதை விட சிறந்தது.

மூன்றாவது நோன்பு மிகவும் மேலானவர்களுக்கான நோன்பாகும். இது முந்தைய இரண்டையும் விட மிகவும் சிறந்தது என்று எழுதவும் வேண்டுமோ?

முதலாவது வகையை பற்றி ஏற்கனவே நான் உதாரணம் கொடுத்திருக்கிறேன் என்றாலும் பொதுவாக இது பெரும்பான்மையானவர்களின் நோன்பை குறிக்கும்.

அத்தகையோர் நோன்பு காலத்தில் சோறு சாப்பிட மாட்டார்கள், தண்ணீர் அருந்த மாட்டார்கள், இன்னும் செக்ஸிலும் ஈடுபட மாட்டார்கள். இவர்களை 'நம்பிக்கையாளர்' என்ற அடைமொழியை காப்பாற்றியவர்கள் என்றும் சொல்லலாம்.

இரண்டாவது வகையினர் ஒரு படி மேலே போய் அவர்கள் பசித்திருப்பது மட்டுமின்றி இன்னும் தீய காரியங்களில் எதிலும் ஈடுபட மாட்டார்கள்.

என்னுடைய பங்களாதேஷ் நண்பர் ஒருவர் நோன்பு திறக்க சாப்பாடு வாங்க கடைக்கு போனார். கடைக்காரர் அப்போது தான் சாப்பிட போகிறார் என்று நினைத்து தட்டில் வைத்து கொடுக்கவும், என் நண்பர், இங்கே சாப்பிட அல்ல என்றும் நோன்பு திறப்ப்பதற்கு என்றும் பேக்கட்டில் கட்டி தரவும் எனவும் கேட்டார்.

அதற்கு அவர் சட்டென்று கடுமொழிகளை பயன்படுத்தி முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானே என்கிற ரீதியில் கோபத்தை தூண்டவே, என் நண்பர், ஒரு வார்த்தை பதில் சொல்லாமல் அழகிய மௌணத்தை கடைபிடித்து பொறுமையாக இருந்து மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விட்டு உணவை கட்டிக் கொண்டு வந்து விட்டார்.

இந்த ரமாலான் தான் அவரை இப்படி மாற்றி வைத்தது. இல்லையென்றால் இவரும் பதிலுக்கு பதில் பேசியிருப்பார். ஆனால் இந்த நோன்பானது அவர்ருக்கு கேரக்டரை கற்றுக் கொடுத்திருந்தது.

இப்படியாக நோன்பு காலத்தில் தன் கைகள் செய்யும் தீவினையிலிருந்தும், தன் நாவு செய்யும் தீவினையிலிருந்தும் இன்னும் காது, கால், பார்வை எனும் அனைத்து உறுப்புகளும் செய்யும் தீய செயல்களிலிருந்தும் விலகியே இருப்பார்கள். முடிந்த வரை நல்லதே பேசுவார்கள். இல்லை என்றால் மௌணத்திலேயே இருப்பார்கள்.

இவர்கள் முதலில் வரும் வகையினரை விட ஒரு படி மேலானவர்கள் என்று சொல்லலாம்.

மூன்றாவது வகை நோன்பு என்பது நபிமார்களுக்கும், இறை நெறுக்கத்தை உடைய சூஃபியாக்களுக்கும் உடையது என்று சொல்லலாம். இவர்களின் நோன்பில் இறைவனை பற்றிய சிந்தனையை தவிர்த்து வேறு எதிலுமே சிந்தனையை கூட செலுத்த மாட்டார்கள்.

இவர்கள் காணக் கிடைக்க மாட்டார்கள் என்றாலும் இது சாத்தியப்படுமா? என்றும் பலர் திகைக்கிறார்கள். வேறு சிலரோ இப்படி எல்லாம்  யாரும்  இருக்கவே முடியாது என்றும் அடித்து சொல்வார்கள். வெகு சிலர் மட்டுமே இந்த நிலையை அடைய முயற்சியும் பயிற்சியும் மேற்கொண்டு தனக்குள்ளாகவே போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.


 இணைப்பு: http://baalawi.com/articles/fiqh/661-al-imam-al-ghazali-on-fasting-from-book-of-forty-principles-from-the-foundations-of-religion.html

Sunday, August 22, 2010

விரிவாக்கல் - குரான் ஷரீஃப்

குரான் ஷரீஃபின் 94 வது அத்தியாயம்

1 - நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?

2 - மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்க்னோம்

3 - அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது

4 - மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்

5 - ஆதலின் நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது


6 - நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது

7 - எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக

8 - மேலும், முழு மனதுடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக


Wednesday, August 18, 2010

வேகமாகச் செல்லுபவை - குரான் ஷரீஃப்

ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) - 


குரான் ஷரீஃபின் 100 வது அத்தியாயம்

1 - மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக

2 - பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

3 - பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்

4 - மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

5 - அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக

6 - நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்


7 - அன்றியும் நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்


8 - இன்னும், அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்

9 - அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது

10 - மேலும் இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது

11 - நிச்சயமாக, அவர்களுடைய இறைவன், அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்

*************************************************************

Tuesday, August 17, 2010

சுலைமான் நபி - எறும்புகள் - வைரமுத்துவின் எறும்புகள் கவிதை

குரான் ஷரீஃப் 6 (சூரத்துல் அன்ஆம் - ஆடு, மாடு, ஒட்டகம்): 38 வது வசனம்


பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும்உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லைஇன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.


பூமியில் இருக்கும் அத்தனை படைப்புகளும் நம்மை போன்ற சமூகமாக வாழ்வதாக குரான் ஷரீஃப் சொல்கிறது.

அந்த வகையில் குரான் ஷரீஃபில் எறும்புகளின் வாழ்க்கை முறையை பற்றி சொல்லப்படுகிறது. எறும்பு ஒன்று சுலைமான் நபியிடம் உரையாடியதாக கூட வருகிறது. இத்தகைய எறும்புகளை பற்றி நான் படித்த செய்தி ஒன்று ஆச்சர்யமாக கூட இருந்தது.

அந்த செய்தி இங்கே:


These insects have the strength to carry food up to seven times their own body weight, and set up amazingly complex colonies, nests and homes, with social orders in which every member has a role. Each ant in a colony seemed to have its own schema, and yet the group as a whole appeared to be highly organized. This organization is accomplished under strict supervision and through interaction among individuals. 

Ants live together in large colonies organized under 
one powerful female ant which rules, known as the queen. Ants usually nest in soil or wood, and a single ant colony may contain as many as 20 million individual ants. Most of them are female; only a few male ants are produced to mate with the queen.

One of the most unusual things about ants is their ability to communicate. Signaling each other with distinctive hormones, ants work together to build and move their nests, raise the young, and find food. Ants sometimes fight other ant colonies, and they even arrest other ants and enslave them.


குரான் ஷரீஃப் 27 (சூரத்துலந் நம்லி - எறும்புகள் எனும் அத்தியாயம்) : 18 (வது வசனம்)

இறுதியாக எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் (பெண்) எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி); “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)’” என்று கூறிற்று.

மேலே கண்ட குரான் ஷரீஃபின் வசனத்தில் பெண் எறும்பு தலைமை பொறுப்பில் இருக்கிறது என்பது ஒரு செய்தி, அது அல்லாமல் கவனிக்க வேண்டிய சில செய்திகளும் உள்ளது, ஒரு தலைமை பொறுப்பில் இருக்கும் எறும்பு மற்ற எறும்புகளை காப்பாற்றும் நோக்கத்தில் ‘நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று சொல்கிறது. இன்றைக்கு தலைவர்களாக இருப்பவர்களுக்கே இது ஒரு பெரும் பாடமாக இருக்கிறது. தன் நலனை பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் தனக்கு கீழ் இருப்பவர்களை பற்றியும் கவலை கொண்டு காப்பாற்றும் எண்ணம் எறும்புக்கு இருக்கிறது.

அடுத்து, சுலைமான் நபியும் அவர்களுடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு என்று கூறுவதை கவனியுங்கள். என்ன அழகான பேச்சு. யாரையும் குற்றம் குறை சொல்லவில்லை. நம்ம போய் சுலைமான் நபியிடத்திலே சொல்ல முடியாது, சுலைமான் நபியவர்களும் அவர்களுடைய சேனைகளும் கீழே எறும்புகள் உள்ளதா என்று பார்த்து அதன் மேல் காலை வைத்து நசுக்குவதுமில்லை, ஆகையினால் அவர்கள் அறியாத வண்ணம் நசுக்கி விடப் போகிறார்கள் என்று உள்ளதை உள்ளபடி கூறுகிறதே. இதில் ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் அல்லவா படிப்பினை இருக்கிறது.


இதில் அவ்வளவு பாடம் இருந்ததால் தான் எறும்பின் இந்த பேச்சை கேட்ட சுலைமான் நபி அவர்கள் சிரித்து விட்டு இறைவனிடத்திலே நன்மைகள் செய்ய அருள் செய்வாக என்று துவா கேட்டார்கள். சுலைமான் நபி ஓர் அரசர். தமிழில் கூட இவர்களின் வாழ்க்கையை பற்றி ‘இராஜநாயகம்’ என்ற படைப்பு உண்டு. இராஜநாயகம் என்றால் அரசர்க்கு எல்லாம் தலைவர் என்று அர்த்தம். 


(குறிப்பு: இந்த இராஜநாயகம் எனும் நூலில் உள்ள இலக்கியத்தை தான் ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில் அவர்கள் கூட சிலாகித்து ‘இனிக்கும் இராஜநாயகம்’ என்ற நூலை வடித்தார்கள்). 




இப்படிப்பட அரசர்க்கெல்லாம் தலைவரான சுலைமான் நபியவர்களுக்கே எறும்புகள் மூலமாக கூட வாழ்வு முறையை இறைவன் கற்றுக் கொடுத்தான் என்றே நான் கருதுகிறேன். அதற்காக சுலைமான் நபியவர்கள் இறைவனுக்கு நன்றி கூட செலுத்துகிறார்கள்.


குரான் ஷரீஃப் (சூரத்துலந் நம்லி - எறும்புகள் எனும் அத்தியாயம்) : 19 (வது வசனம்)

அப்போது அதன் சொல்லைக் கேட்டுஅவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும்என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காகநான் நன்றி செலுத்தவும்நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும்எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.

************************************************************


எறும்பு - எழுதியவர் - கவிப்பேரரசு வைரமுத்து

எறும்புகளே எறும்புகளே
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!

உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?

நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்

ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?

பேதை மனிதரே
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?

உங்கள் பொழுது போக்கு?

வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு

ஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன - சாய்வு

இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று

செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.

இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!

சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்

ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடு

மாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்

எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!

உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?

மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.

நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?

வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளை

சேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?

கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!

உங்களால் மறக்க முடியாதது?

உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.

எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?

எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்

சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?

அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.

சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?

இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு

அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு

எறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!

மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?

நன்றி எறும்பே நன்றி!

நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்எதற்கு

காணாத காமதேனுவைப் பற்றி

இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!