நான் நினைத்த கருத்தை எழுதுவதற்கு இரண்டு விஷயங்கள் எனக்கு உறுத்தலாய் இருக்கின்றன.
1. இறந்தவர்களை பற்றி எதுவும் தவறாக எழுதிவிடுவோமோ என்ற ஐயம்
2. ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு பேசுவது
அப்படி எதை பற்றி எழுதப் போகிறேன் என்று கேட்டால்,
அக்டோபர் 2 Vs. ஏப்ரல் 14
காந்தியை பற்றிய படம் 18 கோடியில் செலவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. சமீபத்தில் கூட அதாவது ஜுலை 2006ல் ஒரு படம் வெளியானது, "லகே ரஹோ முன்னா பாய்' என்ற இந்தி படம் தான் அது. அதில் 'பாபு (- இது இந்தி பாபு -அப்பான்னு அர்த்தம்)' வின் செய்திகளை, "மனிதநேயம், உண்மை, வன்முறையின்மை போன்ற செய்திகளையெல்லாம் ரொமான்ஸ் கலந்து சொன்னார்கள்.
ஆனால் பாபா சாஹேபை பற்றி எடுத்து முடித்த ஒரு படத்தை வெளியிடுவதற்கு ஒன்றரை வருடம் ஆனதாக அந்த படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஜாபர் படேல் கூறுகிறார்.
அது மட்டுமல்ல மேலும் அவர் கூறும் போது, 'அம்பேத்காருடைய கருத்துக்களை அதன் உண்மையான வடிவில் சித்தரிப்பது மிகவும் கடினம்' என்றும் கூறியிருந்தார்.
“When I made a film on Ambedkar, I realised it’s indeed difficult to do depict his ideas and achievements in their true light. My film took one-and-half-years to be released in the country due to censorship issues. In this country, it is extremely difficult to portray Ambedkar’s philosophy in its true sense,” said Patel.
“To me Lage Raho Munnabahi is too much a romanticised version of the whole Gandhian philosophy. Dr Ambedkar’s philosophy is much deeper than that. Ambedkar did not just talk about Dalits, but he also spoke about human rights,” said Jabbar Patel.
அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்,
1. அம்பேத்காரை பற்றிய படம் என்றால் கிட்டதட்ட காந்தியை வில்லன் போல் காட்டியாக வேண்டும்
2. அம்பேத்கார் தலித் மக்களின் உரிமைக்காக போராடினார் என்பதாக இருக்க கூடும்
ஆனால் எது எப்படியோ இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்று போற்றப்படும் காந்தி அவர்களை நினைவு கொள்கின்ற அளவுக்கு அல்லது மதிக்கின்ற அளவுக்கு இந்தியாவின் "சட்ட வரைவு குழு"விற்கே தலைவராக இருந்து இந்திய நாட்டின் உச்ச சட்டத்தையே (Supreme Law) வடிவமைத்த (உலகிலேயே நீளமான சட்டம் - the lengthiest Constitution in this world - 22 பகுதிகளாக 440 ஆர்டிகிள்ஸ் - 12 அட்டவணையுடன் 96 திருத்தங்கள் - ஆதாரம்: விக்கிபீடியா) டாக்டர் அம்பேத்காரை நினைவு கொள்கிறார்களா அல்லது மதிக்கின்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அப்படி மதிக்க விடாமல் அவர்களை எது தடுக்கின்றது என்பதை அறிவது அப்படி ஒன்றும் அம்பேத்காரின் படத்தை வெளியிடுவது போன்று கஷ்டமான காரியமல்ல. ஆனால் அம்பேத்காரை கொண்டாட விரும்பாதவர்கள் அவர்களை அறியாமலே 26 சனவரி தினத்தை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த கொண்டாட்டம் என்னளவில் அம்பேத்காரை கொண்டாடுவது போல் தான்.
அம்பேத்கார் 14 ஏப்ரல் 1891ஆம் ஆண்டு மஹர் என்றழைக்கப்படும் தீண்டத்தகாததாக ஆக்கப்பட்ட குலத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் 'ம்ஹௌ' எனும் ஊரில் பிறந்தார். பிறப்பின் மீதே திணிக்கப்பட்ட இந்த வன்முறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதுமே போராடினார்
என்னை பொறுத்தவரை அவரின் போராட்டமே அவர் நன்றாக படித்ததில் தொடங்குகிறது. இன்றைக்கும் அம்பேத்காரை பின்பற்றுபவர்கள் அல்லது மதிப்பவர்கள் தொடங்குகின்ற புள்ளியாக நன்றாக படிப்பது என்பதிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
அன்றைக்கு அவர் படித்த சூழ்நிலையை படித்து பார்த்தால், கண்ணீர் கொதிக்கும். ஆசிரியரின் உதவி கிடைக்காது, பள்ளிகூடம் உள்ளேயே வர முடியாது இதையே படிக்க முடியலை இன்னும் கொடுமை என்ன என்றால் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் மேல்சாதியினர் மேலே நின்று கொண்டு தண்ணீர் ஊற்றுவார்களாம், இவர்கள் கீழே இருந்து கொண்டு குடிக்க வேண்டுமாம், ஏனெனில் அந்த தண்ணீரையோ அல்லது குவளையையோ தொட கூடாது என்பதே காரணமாக இருந்தது.
இந்தியாவிலேயே அரசாங்க பள்ளியில் சேர்ந்து 1907ல் முதன் முதலாக மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர் என்ற பெயரை வாங்கினார். இது அன்றைக்கு அந்த சமூகத்துக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது.
1908ல் ஸ்காலர்ஷிப்பில் கல்லூரி படிப்பை படித்து முடிக்கிறார். 1912ல் அவர் எக்கனாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டத்தை பெறுகிறார். அதன் பிறகு பரோடா அரசாங்க வேலை ஏற்றுக் கொள்கிறார்.
அவர் இஸ்லாத்தை பற்றியும் குறைகள் சொல்லியிருக்கிறார், 'பர்தா அணிவது, அடிமைகள் முறை' - இவைகள் இஸ்லாத்தில் இருப்பதாக கூறி கண்டித்திருக்கிறார்.
14ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு நாக்புர் எனும் ஊரில் தலித் மக்கள் 500,000 பேருடன் பவுத்த மதத்தை தழுவினார்.
அன்றைக்கு அவர் மிகப் பெரிய கூட்டமாக மதம் மாறியது இன்றைக்கும் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்வதனால் தான் 'மத மாற்ற தடை சட்டமே வந்தது'
டிசம்பர் 6, 1956 ஆம் ஆண்டு டில்லியில் அவருடைய வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டார் என்று அறியப்படுகிறது.
மேலும் நான் இன்றைக்கு படித்த கருத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டேன், நான் அரசியலில் நிபுணர் அல்ல, நான் சொல்வதில் தவறுகள் இருக்கலாம், எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.
அம்பேத்கார் இந்தியர்கள் அல்லது இந்திய பூர்வீகம் என்று சொல்லி கொள்ளும் ஒவ்வொருவராலும் மதிக்கப்பட வேண்டியவர் என்பது மட்டுமே அது.
No comments:
Post a Comment