Thursday, April 01, 2010

கடவுள் மறுப்பு - ஒரு கடவுளா? பல கடவுளா? -பெரியார்தாசன் - அப்துல்லாஹ்

நான் சொல்ல வரும் செய்திக்கு ஐஸ்-பிரேக்கர் போன்று உதவும் சில செய்திகளை கவனிப்போம்.

மு.மேத்தாவோ அல்லது கவிக்கோவோ சரியாக நினைவிலில்லை. பாபர் மசுதி இடித்த பிறகு கவிதை எழுதினார்கள்.

கடவுள் ஆலயத்தை
இடித்தான்
ஏன் இடிக்கிறாய்
என்று கேட்டேன்
கடவுள் ஆலயம்
அமைக்க என்கிறான்

- இப்படியாக எழுதியிருந்தார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த கோயிலையும் இடித்ததில்லை என்றும் சொல்ல கேட்டதுண்டு.

அடுத்து, இன்னொரு செய்தியும் உண்டு, "மத நம்பிக்கையுள்ளவர்கள் ஒன் கடவுள் தான் பெரிசு என் கடவுள் தான் பெரிசு என்று பார்ப்பதால் தான் சண்டையே வருகிறது.

அப்துஸ் ஸமது சாபு ஒரு முறை திராவிடர் கழகத் தோழர்களுடன் இணைந்து நடந்த கூட்டத்தில் பேசி விட்டு வரும் போது 'இவர்கள் கடவுள் இல்லை (லா இலாஹா - கடவுள் இல்லை) வரை வந்து விட்டார்கள். ஒருவனைத் தவிர (இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர) விற்கும் சீக்கிரமே வருவார்கள்' என்று பொருள் படும் படி சொன்னார்கள்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன், நாத்திகர்களின் கடவுள் மறுப்பு வாதங்களில் முக்கியமாக முன்வைப்பவை கடவுளை மனிதன் தன் கற்பனைக்கேற்ப படைத்தான் என்பதாகும். அதே போல் கடவுளுக்கு பதிலாக அல்லது கடவுளுடைய இடத்தில் அறிவியலை அல்லது இயற்கையை முன்வைப்பவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.

ஒரு கடவுளை அல்ல பல கடவுள்களை மனிதன் தன் விருப்பத்திற்கேற்ப படைத்துக் கொண்டான் என்பதே இஸ்லாத்தின் குற்றச்சாட்டு ஆகும். அவ்வளவு தான் நாத்திகர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வித்தியாசம்.

திரு கோ.வி.கண்ணன் எனக்கு ஒரு முறை எழுதிய பின்னூட்டத்தில், 'இறைவனை மிதமிஞ்சிய புகழ்ச்சியும் சிலை வணக்கங்களும் ஒன்றே என்றும் முன்னது உருவகம் பின்னது உருவம் என்றும் எழுதியிருந்தார். அத்தோடு மட்டுமல்லாமல், உருவகங்களை அமைக்க தெரியாதவர்கள் தான் உருவம் அமைத்து கும்பிடுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார். அதை நாங்கள் இணைவைத்தல், பாவம் என்போம் என்றும் சுட்டியிருந்தார்.

இதை 'இணைவைத்தல், பாவம்' என்று சொல்லாமல் வேறு எதுவும் சொல்ல முடியாது சார். ஏன்னா உருவகம் என்கிறீர்கள். எப்படி நாங்கள் உருவகப் படுத்துகிறோம் என்று நீங்கள் புரிந்து வைத்திருப்பதை விளக்க வேண்டும்.

ஏன்னா இல்லாத ஒன்றை நாங்கள் உருவகப் படுத்தவில்லை, உதாரணமாக, நீங்கள் வந்து யானை முகத்துடைய ஒரு உருவத்தை வரைந்து கடவுள் என்று வழிபடுகையில் நான் 'ஆணை முகத்துடையவனே' என்று உருவகப் படுத்தி வணங்கி வந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களா?

அப்படி என்றால் நாங்கள் நிச்சயாமாக அப்படி செய்யவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். உண்மையில் நாங்கள் இறைவனை சொல்லவில்லை. இறைவனை பற்றி இறைவனே சொல்வதாக குரான் ஷரீஃப் சொல்வதை நம்புகிறோம். அவ்வளவு தான்.

அப்படி என்ன குரான் ஷரீஃப் இறைவனை பற்றி சொல்கிறது என்றால்:

இறைவனாகிய அல்லாஹ் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

இணையற்றவன்! (6:163)

அவனுக்கு சந்ததி இல்லை (2:116)

அனைத்தையும் ஆக்கியவன் (2:29)

புகழுக்குரியவன் (1:1)

படைப்புகளின் போஷகன் (1:1)

என்றும் உள்ளவன் (55:27)

தீர்ப்பு நாளின் அதிபதி (1:3)

அனைத்தையும் நன்கு அறிந்தவன் (35: 38)

ஆற்றல் மிக்கவன் (16:77)

அவன் அறிந்ததை எவரும் அறிய முடியாது (27:65)

நேர் வழியில் செல்வோருக்குத் துணை புரிபவன் (9:115)

மானக்கேடானதை ஏவவில்லை (7: 28)

எளிதான கட்டளைகளை ஏவுவான் (2:128)

அமைதியின் பக்கமே அழைப்பவன் (10:25)

மேற்கூறிய இவையெல்லாம் உருவகங்கள் அல்ல, இல்லாததை மிகைப்படுத்தி அல்லது எக்ஸ்ட்ராவாக புகழ்ந்து கூறியது அல்லமேலே கூறியதை படித்தாலே கடவுள் என்ற அந்த கண்ணியம் இருக்கிறது.

இதுஅல்லாமல் குழந்தையா வந்து அதை திருடினார், துணிமணியை எடுத்துட்டு மரத்துமேலே ஏறினார், கல்யாணத்துக்காக வில்லை உடைத்தார், காதல் செய்தார், புள்ளை குட்டிகளை பெற்றார், - யாரு? கடவுள்..? - இதில் எங்கே இருக்கிறது கண்ணியமான இறைவன்? என்பது தான் நமது கேள்வி.


 இதில் பெரிய வேடிக்கை என்ன என்றால் உருவகம் அமைக்க தெரியாதவர்கள் என்று சொன்னது தான்.

நான்கு வேதங்கள் எனப்படுவதே கடவுளை துதி துதி என்று துதித்து ரிஷிகள் பாடிய ரிஷிகளின் துதிப்பாடலகள் தானே.

மற்ற வேதங்கள் எல்லாம் கடவுளை மனிதன் பாடியது தான், கடவுளை மனிதன் செய்தது, அதாவது நாத்திகர்கள் சொல்வது போல் மனிதனின் கற்பனை. அவ்வாறாகவே தான் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அதுவும் தவிர, ஒரு கடவுள் போல் பல கடவுளும் இருந்து விட்டு போகட்டுமே என்று வைத்துக் கொள்வதற்கு கடவுள் பண்டம் பாத்திரமோ அல்லது மரம் செடி கொடியோ அல்ல. நாம் நம் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்வதற்கு.

இறைவனின் பேச்சு என்று வழங்கப்படுகிற குரான் ஷரீஃபில் 'ஒரு இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்றே (5:73) அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப் படுகிறது.

ஒரு சிற்பியையோ அல்லது ஓவியரையோ அழைத்து எனக்கு கடவுள் படம் செய்து அலல்து வரைந்து தாருங்கள் என்று கேட்கிறீர்கள் என்று வையுங்கள்.

அவர் 'எந்த கடவுள்?' என்று கேள்வி கேட்பார்.

சரி என்று ஏதாவது ஒரு கடவுளின் பெயரை சொன்னவுடன் அவரும் வரைந்து தருகிறார் என்று வையுங்கள். அவர் என்ன கடவுளை நேரில் பார்த்தாரா? நிச்சயமாக இல்லை. ஒரு மனிதனால் கடவுளையே வரையவோ செதுக்கவோ முடிகிறது அவர் வரைந்த கடவுளை விட வரைந்தவர் மேலானவரல்லவா?

பெருமானாரின் வாழ்வை நன்கு கவனித்து பார்த்தால் கடவுள் விஷயத்தில் ஒரு இறை கொள்கைக்கும் பல இறை கொள்கைக்கும் நடந்த போராட்டத்தில், விவாதத்தில், போரில் ஒரு இறை கொள்கைக்கு கிடைத்த வெற்றி தான் இஸ்லாமிய வரலாறு.

இந்த ஓரிறை கொள்கை என்பது தமிழுக்கு புதியதும் அல்ல. 'ஒன்றே குலம்
ஒருவனே தேவன்' திருமூலர் சொன்னதை அண்ணாவும் அறிமுகம்  செய்து  வைத்தது தான்.

இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுள் மறுப்பும் தவறு, பல கடவுள் இருப்பு என்று கொள்வதும் தவறு.

நாகூர் தர்ஹால் மஹ்ரிப் தொழுகைக்கு முன்னால் பாதுஷா நாயகம்  கபுருக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் ஒரு முஸ்லிமிடம் 'உன் ரப் யார்?' என்று கேட்டால் என்ன விடை வருமோ (பாங்கு சொல்லியாச்சுன்னா அவர் எழுந்து நவாப் பள்ளிக்கோ அல்லது சின்ன ஹொத்துவா பள்ளிக்கோ போய் விடுவார்) அதே விடை தான் மக்காவுல கஃபதுல்லாஹ்வுக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கிற ஒரு முஸ்லிமிடமிருந்தும் வரும். 'அல்லாஹ்' என்பதே அது.

பெரியார்தாசனாய் இருந்தவர் இப்போது பெரியார் நேசனாய் மாறியுள்ளார் என்பதே எனது கருத்து. இஸ்லாமும் பெரியார் பரப்பியது தான். ஆகவே, இதுவும் ஒரு வகையில் சுய மரியாதை தான். நான் யாருக்கும் அடிமையில்லை கொள்கை தான்.


இஸ்லாத்தை பொறுத்த வரை கடவுள் நம்பிக்கை கூட ஞானம் அல்ல தெளிவு அல்ல, அது எத்தனை கடவுள் என்ற உணமையில் தான் புதைந்து கிடக்கிறது ஞானம்.

அப்துல்லாஹ் சென்னை மக்கா பள்ளியில் பேசிய யுடியுப் காணொளியை நன்றிகளுடன் பதிவில் இணைத்துள்ளேன்.



















.

25 comments:

வால்பையன் said...

சொர்க்கத்தில் உங்களுக்கு பூமியில் மறுக்கப்பட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என்ற வரி இருக்கிறதா தோழரே!?

கோவி.கண்ணன் said...

//ஏன்னா இல்லாத ஒன்றை நாங்கள் உருவகப் படுத்தவில்லை, உதாரணமாக, நீங்கள் வந்து யானை முகத்துடைய ஒரு உருவத்தை வரைந்து கடவுள் என்று வழிபடுகையில் நான் 'ஆணை முகத்துடையவனே' என்று உருவகப் படுத்தி வணங்கி வந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களா?//

கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்...அதில் உருவம் கண்டிப்பாக வந்துவிடும்.

பைபிளில் மனிதனை தன் சாயலில் படைத்தார் என்று வசனம் உண்டு. இஸ்லாமியர்கள் பைபிளை மறுக்கிறார்கள் என்கிறீர்களா ?

கண்டிப்பாக... தன் செயலில் படைத்தார் என்பதைத்தான் சாயல் என்று மொழிப் பெயர்த்து இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

இறைவனுக்கு உங்க வாதப்படி உருவமே இல்லை என்றால் இல்லாத சாயலில் ஒரு மனிதனை உருவாக்க முடியுமா ?

இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்பது மித மிஞ்சிய புகழ்ச்சி இல்லையா ?

அனைத்தும் அறிந்தவனுக்கு உங்களுக்கு எது கொடுக்கனும் என்று தெரியும். பிறகு தொழுகை என்பது எதற்கு உடற்பயிற்சியா ?

முன்பு சொன்ன வேதங்களில் பிழை இருந்ததால் இறுதியாக நான் குரானை இறக்கினேன்.....என்று சொல்லிய இறைவன்......இன்னொரு முறை வந்து குரானில் பிழை இருக்கிறது மீண்டும் மாற்றப் போகிறேன் என்று சொன்னால் அதைத்தான் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ?

தீர்ப்பு நாள் நாளைக்கே வந்து அல்லா உங்கள் முன்பு நின்றால் கூட அவரே அவர்தான் அல்லா என்று உங்களுக்கு நிருபனம் செய்வது கடினம் சார். உள்ளுணர்வு சொல்லும் நாங்கள் அறிந்து கொள்வோம் என்று பதிலுரைத்தால் அதுவெறும் சமாளிப்பு மட்டுமே.

நான் கடவுளுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்று வாதிட வரவில்லை. ஆனால் அப்படி உருவம் இருக்கு என்று சொல்லிக் கும்பிடும் உரிமை மற்றவருக்கு இருக்கு.

ஒன்றை சரி தவறு என்று சொல்வதில் நம்பிக்கைகளை அளவுகோளாகக் கொண்டுவரவே முடியாது.

உங்களுக்கு சம்பளம் கொடுப்பது முதலாளி ஆனாலும் இறைவன் கொடுக்கிறான் என்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். இங்கு உங்களை அறியாமலேயே உங்கள் முதலாளியை இறைவனின் செயலுக்கு இணை வைக்கிறீர்கள் என்றே பொருள்.

இணை வைத்தல் ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நான் செய்யலை, அந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று வெறுமன நினைத்துக் கொள்ளலாம் அவ்வளவு தான். இணைவைத்தல் வெறும் சொல்லோ செயலோ மட்டுமில்லை, தேவையற்றவற்றிற்கெல்லாம் இறைவனை காரணமாகச் சுட்டுவதும் கூட இணை வைத்தல் தான்

nagoreismail said...

வால்பையன் சார்,

அது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.. மன்னிக்கவும் சார்.!

நன்றிகள்

nagoreismail said...

"கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்...அதில் உருவம் கண்டிப்பாக வந்துவிடும்."

- எப்படி சார், காத்தும் தான் எங்கும் இருக்கு என்கிறோம், அதுக்கு என்ன உருவம் மனதில் தோன்றுகிறது.

"பைபிளில் மனிதனை தன் சாயலில் படைத்தார் என்று வசனம் உண்டு. இஸ்லாமியர்கள் பைபிளை மறுக்கிறார்கள் என்கிறீர்களா ?"

- பைபிலை இஸ்லாமியர்கள் மறுக்கவில்லை.

"கண்டிப்பாக... தன் செயலில் படைத்தார் என்பதைத்தான் சாயல் என்று மொழிப் பெயர்த்து இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

இறைவனுக்கு உங்க வாதப்படி உருவமே இல்லை என்றால் இல்லாத சாயலில் ஒரு மனிதனை உருவாக்க முடியுமா ?"

- சார், இதை ஒரு உதாரணம் மூலமாக நான் சொல்கிறேன்,

இரண்டு கையும் இல்லாத ஒரு அரசன் 'இந்த நாடே என் கையில் இருக்கிறது' என்று சொன்னால் அதெப்படி கை இல்லாதவன் கையில் இருக்கிறது என்கிறான் என்ற கேள்வியை போன்று தான், என்றாலும் இதை பற்றி விளக்கமாக பிறகு எழுதலாம்.

"இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்பது மித மிஞ்சிய புகழ்ச்சி இல்லையா ?"

- இல்லை சார், ஏன்னா, நடக்கிற அல்லது ஓடுகிற மனிதனை பார்த்து பறக்கிறான் என்று சொல்லவில்லை, பறக்கின்ற பறவையை பார்த்து 'இது பறக்கும்' என்று சொன்னால அது நிச்சயமாக மித மிஞ்சிய புகழ்ச்சியாக இருக்க முடியாது. அது பறவைக்குறிய இயல்பான ஒன்றை குறிப்பிடுவது போல் தான் ஆகும்

"அனைத்தும் அறிந்தவனுக்கு உங்களுக்கு எது கொடுக்கனும் என்று தெரியும். பிறகு தொழுகை என்பது எதற்கு உடற்பயிற்சியா ?

முன்பு சொன்ன வேதங்களில் பிழை இருந்ததால் இறுதியாக நான் குரானை இறக்கினேன்.....என்று சொல்லிய இறைவன்......இன்னொரு முறை வந்து குரானில் பிழை இருக்கிறது மீண்டும் மாற்றப் போகிறேன் என்று சொன்னால் அதைத்தான் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ?"

இதையெல்லாம் படிக்கும் போது, எனக்கு நம்ம வீரத்தளபதி ரித்திஷ் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் சொல்கிறாரே, 'உங்கள்ட்ட யாரோ தப்பாவே சொல்லி அனுப்பி விட்டிருக்காங்க..' என்று - அது தான் நினைவிற்கு வருகிறது.

என்றாலும், இது பற்றி உங்களுடன் நேரிடையாக உரையாடலாம் தேவை ஏற்படும் பட்சத்தில்.

இன்னும் நிறைய எழுதியிருக்கிறீர்கள். அதில் முக்கியமாக உருவம் அமைத்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றும் எழுதியுள்ளீர்கள். எனக்கு இதில் கருத்து மாறுபாடு உள்ளது.

ஆனால் அப்படி வழிபடுவதை தான் நான் தவறு என்கிறேனே தவிர, வழிபடுபவர்கள் மீது எனக்கு எந்த விரோதமும் கிடையாது என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

வருகைக்கும் மேலான கருத்துக்களை பதிவு செய்ததற்கும் நன்றிகள்

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

\\பைபிளில் மனிதனை தன் சாயலில் படைத்தார் என்று வசனம் உண்டு. இஸ்லாமியர்கள் பைபிளை மறுக்கிறார்கள் என்கிறீர்களா \\
ஈசா (யேசு) நபி (அலை) க்கு அருளப்பட்ட பைபிளை எல்லா முஸ்லிம்களும் நம்புவோம்.. ஆனால் அந்த தூய்மையான வேதம் இப்போது எங்கே? மனிதர்கள் இறைவன் தந்த வார்த்தைகளை மாற்றிவிட்டனர்..அதே போலத்தான் யூதர்களின் தவ்ராத்தும்:
4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, ‘நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!’ என்று கூறி, ‘ராயினா’ என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் ‘நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிபட்டோம்;’ (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும் மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும் – ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

அடுத்து நீங்க‌ள் என்ன‌ கேட்பீர்க‌ள்? குரானுக்கு முந்தைய‌ வேத‌ங்க‌ளின் பாதுகாப்பு அந்த‌ந்த‌ ச‌மூக‌த்திட‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டது: ஆனால் குரானின் பாதுகாப்பு அல்லாஹ்விடம் உள்ளது: இறுதி தீர்ப்பு நாளின் வரை குரான் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே இருக்கும் என்று இறைவன் கூறுகிறான்.. திருக்குரான் அருள‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌லாற்றை ப‌டித்தால் இதை ப‌ற்றி அறிவீர்க‌ள்..

Anonymous said...

\\கண்டிப்பாக... தன் செயலில் படைத்தார் என்பதைத்தான் சாயல் என்று மொழிப் பெயர்த்து இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்\\
நிச்ச‌ய‌மாக‌ இப்போழுது ஈசா ந‌பி (அலை) அவ‌ர்க‌ளிட‌ம் அருள‌ப்ப‌ட்ட‌ தூய்மையான‌ பைபிள் உல‌கில் இல்லை.. அத‌னால் இது த‌வ‌று.. இஸ்லாத்தின் ப‌டி இந்த‌ வ‌ச‌ன‌மும் த‌வ‌று:
﴾அவன் மனிதப் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனது சந்ததியை உண்டாக்கினான். பின்னர் அதனைச் செவ்வையாக உருவாக்கி தன்னுடைய ரூஹிலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான்.﴿ (அல்குர்ஆன் - 32:7,8,9) இதுபோன்ற வசனங்கள் இன்னும் குர்ஆனில் காணப்படுகின்றன. (15:29/ 38:72/ 66:12/ 21:91)
\\இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்பது மித மிஞ்சிய புகழ்ச்சி இல்லையா ?\\
இப்படி கேட்ப‌து, ம‌னித‌னுக்கு எல்லாம் தெரியும் என்ற‌ அக‌ங்கார‌ம் இல்லையா? கோடான‌கோடி ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளில் ஒன்றான‌ சூரிய‌னையே வெறும்க‌ண்ணால் ந‌ம்மால் பார்க்க‌ இய‌லாத‌ போது இறைவ‌னின் ஆற்ற‌லையா ச‌ந்தேக‌ப்ப‌டுவ‌து? இறைவ‌ன் அணைத்தும் அறிந்த‌வ‌ன் என்று என்ற‌ ம‌னித‌னும் ப‌ரைசாற்ற‌வில்லை: இறைவ‌னே த‌ன் வேத்த்தில் ம‌னித‌ர்க‌ளுக்கு விள‌ங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்க்காக‌ கூறும் விவ‌ர‌ம்.
\\அனைத்தும் அறிந்தவனுக்கு உங்களுக்கு எது கொடுக்கனும் என்று தெரியும். பிறகு தொழுகை என்பது எதற்கு உடற்பயிற்சியா ?\\
(51:56) இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
தொழுகை என்ப‌து இறைவ‌னுக்கு செய்யும் வ‌ண‌க்க‌ம். அனைத்தும் அறிந்த‌ இறைவ‌னுக்கு என்ன‌ கொடுக்க‌ வேண்டும் என்ப‌து தெரியும் என்ப‌தில் ச‌ந்தேக‌மேயில்லை... அவ‌ன் கொடுப்ப‌தும் கொடுக்காத‌தும் ந‌ம்முடைய‌ செய‌ல்க‌ளை வைத்துதான் என்ப‌தையும் நினைவில் கொள்க‌..
\\முன்பு சொன்ன வேதங்களில் பிழை இருந்ததால் இறுதியாக நான் குரானை இறக்கினேன்.....என்று சொல்லிய இறைவன்......இன்னொரு முறை வந்து குரானில் பிழை இருக்கிறது மீண்டும் மாற்றப் போகிறேன் என்று சொன்னால் அதைத்தான் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ?\\
ஐயா, குரானில் எங்கே இறைவ‌ன் ம‌ற்ற‌ வேத‌ங்க‌ளில் பிழை இருப்ப‌தாக‌ சொல்கிறான் என்று நீங்க‌ள் சுட்டிக்காட்டினால் ந‌ன்றாக‌ இருக்கும்.. ஒவ்வொரு ச‌மூக‌த்திற்க்கும் ஒரு இறை தூதுவ‌ரும், ஒரு வேத‌மும் அருள‌ப்ப‌ட்ட‌து என்ப‌து தான் குரான் கூறும் க‌ருத்து.. கடைசியாக‌ ம‌னித‌ குல‌ம் அத்த‌னைக்கும் சேர்த்து அருள‌ப்ப‌ட்ட‌து தான் குரான்..
\\தீர்ப்பு நாள் நாளைக்கே வந்து அல்லா உங்கள் முன்பு நின்றால் கூட அவரே அவர்தான் அல்லா என்று உங்களுக்கு நிருபனம் செய்வது கடினம் சார். உள்ளுணர்வு சொல்லும் நாங்கள் அறிந்து கொள்வோம் என்று பதிலுரைத்தால் அதுவெறும் சமாளிப்பு மட்டுமே.\\
தீர்ப்பு நாளென்ன‌ ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பு நாளைப்போன்ற‌தா? அது எப்ப‌டி இருக்கும், அப்போது உல‌க‌ம் எந்த‌ நிலையில் இருக்கும், ம‌னித‌ர்க‌ள் எவ்வாறு இருப்பார்க‌ள், என்று ப‌ல‌ விசய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.. அல்லாஹ் அவ‌ன்தான் என்று நிரூபிக்க‌ வேறெந்த‌ வழியும் தேவையில்லை, அவ‌ன் பேராற்ற‌ல் மிக்க‌வ‌ன்.. அதை அறிய‌ அவ‌ன் நினைத்தாலேய‌ன்றி வேறு வ‌ழியில்லை..
***
brother Kovi, your half baked knowledge on Islam wont help.. இஸ்லாத்தை அறிய, அதைப்பற்றி விமர்சனம் செய்ய முதலில் குரானை அறிந்துக்கொள்ளுங்கள்.. அதை முழுமையாக படியுங்கள், புரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேளுங்கள், பிறகு நபி (சல்) அவர்களின் வாழ்க்கையை படியுங்கள்..
பிறகு சந்திப்போம்! இன்ஷா அல்லாஹ்

கோவி.கண்ணன் said...

//- எப்படி சார், காத்தும் தான் எங்கும் இருக்கு என்கிறோம், அதுக்கு என்ன உருவம் மனதில் தோன்றுகிறது. //

காற்றுக்கு உருவம் இல்லை ...சரி.

அதை ஒரு ஓவியனால் வரைய முடியும். வரைகிறார்கள். தென்னை மரத்தின் ஓலைகள் ஒருபக்கமாக நோக்கி இருப்பதாக வரைவது காற்றையும் சேர்த்து வரைவது தான்.

புழுதி அடிக்கும் இடத்தில் நிற்கும் ஒருவரால் காற்றின் முகவரி உருவம் தெரிந்து கொள்ள முடியும்.

ஊருக்கு வழிகேட்டால் 'இந்த பக்கமாக இருக்கிறது' என்று கையைக் காட்டுவிங்க, ஊர் அங்கே இருப்பதன் அடையாளம். திசை தொழுதல் கூட அப்படித்தான். உங்களுக்கு தொழுவதற்கு ஒரு திசை தேவைப்படும் போது சிலருக்கு சிலை தேவைப்படுது, அவர்களைப் பொருத்த அளவில் நீங்கள் திசைகளை நோக்கி வணங்குபவர்கள். நீங்கள் செய்வது உருவகம், அவர்கள் உருவம் அவ்வளவு தான். இதுல நாங்க தான் உண்மையாக இறைவனை வழிபடுகிறோம் என்று சொல்லிக் கொள்ள அவரவர்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் நீ தவறு என்று சுட்டிக்காட்ட ஒருவருக்கும் உரிமை இல்லை.

//இரண்டு கையும் இல்லாத ஒரு அரசன் 'இந்த நாடே என் கையில் இருக்கிறது' என்று சொன்னால் அதெப்படி கை இல்லாதவன் கையில் இருக்கிறது என்கிறான் என்ற கேள்வியை போன்று தான், என்றாலும் இதை பற்றி விளக்கமாக பிறகு எழுதலாம்.//

மனப்பால் குடிக்கிறீர்களா என்றால் பால் குடிப்பதாக பொருள் இல்லை என்று எனக்கும் தெரியும். உவமைகள் உதாரணம் ஆகாது.

கோவி.கண்ணன் said...

//brother Kovi, your half baked knowledge on Islam wont help.. இஸ்லாத்தை அறிய, அதைப்பற்றி விமர்சனம் செய்ய முதலில் குரானை அறிந்துக்கொள்ளுங்கள்.. அதை முழுமையாக படியுங்கள், புரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேளுங்கள், பிறகு நபி (சல்) அவர்களின் வாழ்க்கையை படியுங்கள்..
பிறகு சந்திப்போம்! இன்ஷா அல்லாஹ்//

போச்சுட சாமி, அல்லாவின் முழுவேதத்தை கரைத்துக் குடித்தவர்களில் குண்டு வைப்பவர்களும் உள்ளார்கள், எந்த தவறுமே செய்யாத நான் அரைகுறையாக இருப்பதில் தவறே இல்லை.

வால்பையன் said...

//அது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.. மன்னிக்கவும் //


அப்படினா குரானில் அது இல்லையா?
எனக்கு சொன்னவங்க பொய் சொல்லிட்டாங்களா!?

Robin said...

//ஆனால் அந்த தூய்மையான வேதம் இப்போது எங்கே? மனிதர்கள் இறைவன் தந்த வார்த்தைகளை மாற்றிவிட்டனர்..அதே போலத்தான் யூதர்களின் தவ்ராத்தும்://
இதெல்லாம் உங்கள் பெருமானார் தான் இறைதூதர் என்று நம்பவைப்பதற்காக சொன்ன பொய்கள். ஏனென்றால் பைபிள் படி பார்த்தால் முகமது போலி தீர்க்கதரிசி லிஸ்ட்டில்தான் வருவார்!

//குரானின் பாதுகாப்பு அல்லாஹ்விடம் உள்ளது: //
குரானின் பாதுகாப்பு அல்லாவிடம் உள்ளது ஆனால் பைபிளின் பாதுகாப்பு மட்டும் அவரிடம் இல்லை. முரண்பாடாக இல்லை?

//பெருமானாரின் வாழ்வை நன்கு கவனித்து பார்த்தால் கடவுள் விஷயத்தில் ஒரு இறை கொள்கைக்கும் பல இறை கொள்கைக்கும் நடந்த போராட்டத்தில், விவாதத்தில், போரில் ஒரு இறை கொள்கைக்கு கிடைத்த வெற்றி தான் இஸ்லாமிய வரலாறு.//
இந்த ஓரிறை கொள்கையை யூத மார்க்கத்திலிருந்துதான் பெருமானார் காப்பியடித்துக் கொண்டார்.

Anonymous said...

\\போச்சுட சாமி, அல்லாவின் முழுவேதத்தை கரைத்துக் குடித்தவர்களில் குண்டு வைப்பவர்களும் உள்ளார்கள், எந்த தவறுமே செய்யாத நான் அரைகுறையாக இருப்பதில் தவறே இல்லை.\\

என்ன ஒரு சப்பைக்கட்டு!!! முழுவேதத்தையும் கரைத்துக்குடித்தவர்கள் யார், யார், எங்கெங்கே குண்டு வைத்தார்கள் என்று கொஞ்சம் சொல்லலாமே? நானும் தெரிந்துக்கொள்வேன்..

மற்றபடி உங்களிடம் பேசினால் நேரத்தை வீணாக்குவது என்பதை ஒரு வரியில் விளக்கிவிட்டீர்கள்!! நீங்களே உங்கள் நிலையை விளக்கியதற்க்கு நன்றி!

வால்பையன் said...

//என்ன ஒரு சப்பைக்கட்டு!!! முழுவேதத்தையும் கரைத்துக்குடித்தவர்கள் யார், யார், எங்கெங்கே குண்டு வைத்தார்கள் என்று கொஞ்சம் சொல்லலாமே? நானும் தெரிந்துக்கொள்வேன்..//

நீங்க இப்படி சொன்னது பின்லேடனுக்கு தெரிஞ்சா உங்களை காஃபீர்ன்னு சொல்லிருவாரு!

nagoreismail said...

கோவி சார், நன்றி சார் உங்க பதில்களுக்கு.

அருள்மிகு காற்றாண்டவரை ஓவியர் வரைய முடியும் கதாசிரியர் கண்ணு, காது, மூக்கு வச்சு அது இங்கே தான் பொறந்ததிலிருந்து ஆரம்பித்து குடும்ப சண்டைகளை எல்லாம் எழுதி ஒரூ சூப்பர் ஹிட் கதையை எழுதவும் முடியும்.
ஆனா அது எல்லாம் உண்மையாக முடியாது. பொய் கற்பனையன்றி வேறில்லை.

கடவுள் தன் சாயலில் மனிதைனை படைத்தார் என்பதற்கு கடவுளுக்கு கண், காது, நரம்பு, ரத்தம் போன்ற அமைப்புகள் உண்டு பசி, தாகம், காமம் போன்ற உணர்வுகளும் உண்டு, மலம், மூத்திரம் போன்ற உபாதைகளும் உண்டு என்று பொருளல்ல என்பதே உண்மை.

ஏனெனில் புனித பைபிளின் முதல் பாகமான பழைய ஏற்பாடு என்பதே சிலை வணக்கத்தை எதிர்த்த வரலாறு தான். அதில் சிலர் சிலைகளை - விக்கிரகங்களை உடைத்த வரலாறு கூட வரும் என்று கருதுகிறேன்.

அப்படியிருக்க எப்படி புனித பைபிளில் முதல் பாகத்தில் சிலை வணக்கம் கூடாது என்று சான்று பகர்ந்து விட்டு சாயலில் அதாவது உருவத்தில் படைத்தார் என்று முரணாக வரும்.

அது என்னவென்றால், நாம் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது. அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தான் நான் கை இல்லாத அரசனின் உதாரணத்தை கூறினேன்.

இன்னமும் நான் எனது கருத்தை முழுமையாக சொல்லி விட்டதாக எண்ணவில்லை.

ஆகையால் இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு வரும் போது பதிவாகவே எழுதுவேன்.

என்றாலும், உங்களின் மேலான கருத்துக்களுக்கும் சிலை வணக்கத்தாருக்கு அவ்வாறு வணங்க உரிமை உண்டு என்று தொடர்ந்து வாதாடி வருவதற்கும் நன்றி

nagoreismail said...

"போச்சுட சாமி, அல்லாவின் முழுவேதத்தை கரைத்துக் குடித்தவர்களில் குண்டு வைப்பவர்களும் உள்ளார்கள், எந்த தவறுமே செய்யாத நான் அரைகுறையாக இருப்பதில் தவறே இல்லை."

-
ஒருவர்: ஏன்ப்பா நீ பிளஸ் டூ படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டே

மற்றொருவர்: அந்த படிப்பை முழு வருஷமும் ஒழுங்கா படிச்ச எத்தனையோ பேர் ஃபைலா போய் குட்டி சவரா போனவர்களும் இருக்கிறார்கள், பெயிலே ஆகாத நான் பாதியிலேயே நிறுத்தியதில் எந்த தவறுமே இல்லை

- என்பது போல் இருக்கிறது

nagoreismail said...

"அப்படினா குரானில் அது இல்லையா?
எனக்கு சொன்னவங்க பொய் சொல்லிட்டாங்களா!?"

- சார், சொன்னவங்க கிட்டேயே நீங்க கேட்டு பார்த்துக் கொள்ளுங்கள்

நன்றி

nagoreismail said...

ராபின் சார்,

கருத்துக்கு நன்றி. உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் சார்,

ஜீஸஸ் (Peace Be Upon Him) மற்றும் அன்னார்களின் தாயார் அன்னை மரியம் அவர்கள் (Peace Be Upon Him) இருவரும் சர்ச்சுக்கு போயிருக்கிறார்களா?

அப்படி போயிருந்தால் அந்த சர்ச்சில் எந்த உருவம் அவர்கள் முன்னால் இருந்தது?

nagoreismail said...

சகோதர் நாஸியா,

வருகைக்கு நன்றி

Robin said...

//ஜீஸஸ் (Peace Be Upon Him) மற்றும் அன்னார்களின் தாயார் அன்னை மரியம் அவர்கள் (Peace Be Upon Him) இருவரும் சர்ச்சுக்கு போயிருக்கிறார்களா? //

நண்பரே, இயேசு கிறிஸ்து சமாதான பிரபு என்றழைக்கப்படுகிறார், அப்படிபட்டவருக்கு சமாதானம் உண்டாவதாக என்று சொல்வதன்மூலம் அவரை இகழ்கிறார்கள். சமாதானம் கொடுப்பவருக்கு சமாதானம் உண்டாவதாக என்று சொன்னால் என்ன அர்த்தம்? இருந்தாலும் இது உங்கள் தவறல்ல உங்கள் பெருமானார் சொல்வதால் நீங்களும் அதையே சொல்ல வேண்டியுள்ளது!

இயேசுவும் அவரது தாயாரும் சர்ச்சுக்கு செல்லவில்லை. ஏனென்றால் அப்போது சர்ச் என்று ஒன்றும் இல்லை. அவர்கள் சென்றது யூத ஆலயம் (Holy Temple, Jerusalem). பின்னர் அந்த இடத்தில் இஸ்லாமியர்களால் அல்-அக்சா மசூதி கட்டப்பட்டது. யூத மார்க்கத்திலும் கிறிஸ்தவத்திலும் சிலை வழிபாடு கிடையாது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் நடைபெறும் சிலை வழிபாடுகூட பைபிளுக்கு விரோதமானதுதான்.

அரேபியாவில் முதலில் சிலை வழிபாடு இருந்தது என்பதும் பின்னர் முகமது அவர்கள் அதை மாற்றினார் என்பதும் நீங்கள் அறிந்ததே. இப்படி சிலை வழிபாட்டுக்கு எதிரான கொள்கையும் யூத மற்றும் கிறித்தவ தாக்கத்தினால்தான் ஏற்பட்டிருக்கவேண்டும்.

NO said...

//இதுஅல்லாமல் குழந்தையா வந்து அதை திருடினார், துணிமணியை எடுத்துட்டு மரத்துமேலே ஏறினார், கல்யாணத்துக்காக வில்லை உடைத்தார், காதல் செய்தார், புள்ளை குட்டிகளை பெற்றார், - யாரு? கடவுள்..? - இதில் எங்கே இருக்கிறது கண்ணியமான இறைவன்? என்பது தான் நமது கேள்வி//

//நான்கு வேதங்கள் எனப்படுவதே கடவுளை துதி துதி என்று துதித்து ரிஷிகள் பாடிய ரிஷிகளின் துதிப்பாடலகள் தானே'//

மேலே இருப்பது நண்பர் திரு நாகூர் இஸ்மாயில் சொன்னது!

கீழே இருப்பது நாசியா என்பவர் திரு கோவி அவர்களை பார்த்து சொன்னது!

//brother Kovi, your half baked knowledge on Islam wont help.. இஸ்லாத்தை அறிய, அதைப்பற்றி விமர்சனம் செய்ய முதலில் குரானை அறிந்துக்கொள்ளுங்கள்.. அதை முழுமையாக படியுங்கள், புரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேளுங்கள், பிறகு நபி (சல்) அவர்களின் வாழ்க்கையை படியுங்கள்..
பிறகு சந்திப்போம்! இன்ஷா அல்லாஹ்//

அதாவது திரு கோவி அவர்கள் ஒரு சின்ன விமர்சனத்தை வைத்தவுடன் வெகுண்டு, நான்றாக அறிந்து கொண்டு என் மதத்தைப்பற்றி பேசுங்கள் என்பதுதான் நாசியா அவர்கள் சொல்லுகிறார்கள்!

நீங்க ஒரு மதவெறியராக இல்லாமல் இருந்தால் முதலில் நாகூர் இஸ்மாயில் இடம்தானே இதை சொல்லணும்!

அவரு மட்டும் இந்து மதத்தையும் கிருத்துவ மதத்தையும் (திரு ராபின் அவர்களின் பின்னூட்டங்களை கவனியுங்கள்) நன்றாக தெரிந்து வைத்தா அதைப்பற்றி ஏளனமாக பேசுகிறார்???

இப்படி மற்ற மதத்தவர் எல்லோரும் பேச எவ்வளவு நேரமாகும்??? உங்க மதத்த விமர்சிக்க வேண்டுமென்றால் மத்த எல்லோரும் அதில் PHD செய்து, ஆராய்ந்து, மேலும் பாராட்டினால்தான், நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள், பேச ஒருவர் தகுதி உள்ளவரென்று!! ஆனால் நீங்க மற்ற மதங்களை போட்டு தாக்கலாம். ஏதாவது என்றால் உங்க ஜாகீர் நாயக்கு முதல் பல உளறல் திலகங்களை சுட்டிக்காட்டி தோ பார் அவர் சொல்லிட்டார் இவர் சொல்லிட்டார் என்ற மேற்கோள் வேறு.
என்ன செய்ய, என் மதம் என் நம்பிக்கை, எங்கள் தூதர், இதெல்லாம்தான் மெய், மற்ற எல்லோர் சொல்லுவதும் பொய் என்று சொல்லி விட்டு, அதற்க்கு மறு பேச்சு யாராவது சொன்னால், பாரு இஸ்லாமை தாக்குகிறான் என்று குதிப்பீர்கள்! உங்களை பொறுத்தவரையில், மத்த மதங்களை தாக்குவது உங்களின் birth right, அதையே உங்கள் மதத்திற்கு யாராவது செய்தால் அவர்களின் Birth தே is not right!!!

திருந்துங்க சார்.

(வலை உலகில் உள்ள இஸ்லாமியர்களின் வால் பையன் எங்கே??? - தேடினாலும் கிடைக்காது! அப்படியே ஒரு வந்தாலும் வால் பையன், அறுபட்டு கால் பையனாக ஆகிவிடுவார் )

நன்றி

NO said...

//ஒரு கடவுளை அல்ல பல கடவுள்களை மனிதன் தன் விருப்பத்திற்கேற்ப படைத்துக் கொண்டான் என்பதே இஸ்லாத்தின் குற்றச்சாட்டு ஆகும். அவ்வளவு தான் நாத்திகர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வித்தியாசம்.//

திரு வால், திரு தருமி - வேணும் வேணும், நல்லா வேணும்.....

Robin said...

இஸ்லாமிய நண்பர்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். உங்களுக்கு உங்கள் சமயத்தின்மேல் எவ்வளவு பற்று உள்ளதோ, அதை போல தான் மற்றவர்களுக்கும் அவர்கள் மதங்கள் மேல் பற்று இருக்கும். உங்கள் மதத்திலுள்ள நல்ல கருத்துக்களை சொல்லும்வரை உங்களை யாரும் கேள்வி கேட்க போவதில்லை. அதே நேரம் மற்ற மதங்களை மற்றவர்களின் நம்பிக்கைகளை விமர்சிக்கும்போது அவர்கள் உங்கள் மத நம்பிக்கைகளை விமர்சிப்பார்கள். அதற்கு நீங்கள் மனதளவில் தயார்படுத்தி கொள்ளவேண்டும். மற்றவர்கள் விமர்சிக்கும்போது சிறு பிள்ளைகளை போல வெகுண்டு எழாமல் அறிவுபூர்வமாக விவாதிக்க முயற்சி செய்யுங்கள். மதங்களை பொறுத்தவரை நம்பிக்கை அடிப்படையில் சில கருத்துக்கள் இருக்கும், அவற்றை பற்றி விவாதம் வந்தால் இது எங்கள் நம்பிக்கை, இதில் விவாதிக்க விருப்பமில்லை என்று சொல்லி விடலாம். அதை விடுத்து ஆத்திரப்படுவதால் எந்த பயனும் இல்லை.

நீங்கள் ஒன்றை நம்புவதால் அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்றோ மற்றவர்கள் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பது தவறு. பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்லாத இஸ்லாமிய அறிஞர்களே கிடையாது. இதையே பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதுதான் குரான் என்று என்னாலும் விவாதிக்கமுடியும். அதற்கு ஆதாரமாக பல தரவுகளை என்னால் தர முடியும். இஸ்லாமிய மதம் என்பது முகமது அவர்களுக்கு அல்லா தன் தூதன் மூலமாக வசனங்களை இறக்கினார் என்ற ஒரே நம்பிக்கையினால் ஏற்பட்டதுதான். ஓரிறை கொள்கை என்பதும் யூத மார்க்கத்தில் ஏற்கனவே இருந்து வந்த கொள்கைதான். ஆனால் குரானையும் பைபிளையும் ஒப்பிட்டு பார்த்தால் பைபிளிலுள்ள பல சம்பவங்களும் கருத்துக்களும் ஒரு சில மாற்றங்களுடன் அப்படியே குர்ஆனில் இருப்பதை தெரிந்து கொள்ளளலாம். இதற்கு நீங்கள் ஏற்கனவே இருந்த பைபிள் மாற்றப்பட்டுவிட்டது அதனால்தான் அல்லா பிரெஷ் ஆக இறக்கினார் என்று சப்பை கட்டு கட்டுகிறீர்கள். அல்லா முகமதுக்கு வசனங்களை இறக்கினார் என்பது தன் சுய லாபத்திற்காக சொன்ன பொய் என்று நினைத்து குரானையும் பைபளையும் ஒப்பிட்டுப்பாருங்கள், இயேசு நாதரின் வாழ்க்கை வரலாறையும் முகமதுவின் வாழ்கை வரலாறையும் ஒப்பிட்டு பாருங்கள். அதன் பிறகு உங்களுக்கு எது சரியாக படுகிறதோ அதை பின்பற்றுங்கள். அதை விடுத்து உங்கள் சார்பாகவே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். நான் இந்த பரிசோதனையை ஏற்கனவே செய்து பார்த்துவிட்டேன். இயேசு நாதரையும் முகமதுவையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்தான் தெரிகிறது.

பதிவுலகம் என்பது படித்தவர்கள் நிறைந்த இடம். கருத்து சுதந்திரம் உள்ள இடம். இங்கு வெறுமனே ஒரு கருத்தை சொல்வதால் யாரும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்குரிய தகுந்த ஆதரங்களுடன் வரவேண்டும். மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுமையும் இருக்கவேண்டும்.

வால்பையன் said...

//"அப்படினா குரானில் அது இல்லையா?
எனக்கு சொன்னவங்க பொய் சொல்லிட்டாங்களா!?"

- சார், சொன்னவங்க கிட்டேயே நீங்க கேட்டு பார்த்துக் கொள்ளுங்கள்//


சொர்க்கம் பற்றிய குரானின் சுட்டி கொடுங்களேன், வரு இருக்குன்னு வாதாடுறார்! மதுகோப்பையுடன் பெண்கள் இருப்பார்களாம் சொர்க்கத்தில்!

வால்பையன் said...

(வலை உலகில் உள்ள இஸ்லாமியர்களின் வால் பையன் எங்கே??? - தேடினாலும் கிடைக்காது! அப்படியே ஒரு வந்தாலும் வால் பையன், அறுபட்டு கால் பையனாக ஆகிவிடுவார் )



புரியவில்லை! என்ன சொல்ல வருகிறீர்கள்!?

NO said...

திரு வால் - நான் சொல்லவந்தது தங்கள் சொந்த மதத்தையும் (அதாவது நீங்கள் இந்துவாக இருந்திருக்கூடும், இப்பொழுது இல்லை என்ற புரிதலில்) விமர்சித்தோ, தாக்கியோ எழுதும் உங்களிப்போன்ற பதிவர்கள் , இஸ்லாமிய பதிவர்களுள் எங்கேஎன்பதுதான்?

அதற்காக, எந்த ஒரு மதத்தையும் தாக்க வேண்டும் என்றோ சிறுமை படுத்த வேண்டும் என்றோ கூறவில்லை! அதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை!

சொல்ல வருவது, விமர்சனத்தை செய்யும் மற்றும் ஏற்கும் பக்குவம் சுத்தமாக இல்லாதவர்கள் ஏன் மற்ற மதத்தை தாக்குகிறீர்கள் என்பதுதான்! அதற்குதான் இந்த வால் பையன் உவமை!!!! மேலும் நான் சொல்லவந்தது, அப்படி ஒருவர் தன பெயர் தெரியும்படி செய்தால், அவர் கதி அவ்வளவுதான்! வரலாறு பேசுகிறது. சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின், அய்மான் அல் ஹிர்சி போன்ற பலர் அதற்க்கு சாட்சி!

மறுபடியும் சொல்லுகின்றேன், என் குறிக்கோள் மத விமர்சனம் இல்லை!

நான் எழுதியதின் நோக்கம் திரு நாகூர் இஸ்மாயில் போன்ற தீவிர மத பற்றாளர்கள் எப்படி மற்ற மதங்களின் மேல் கல்லடிக்கலாம் என்பதுதான்!