Saturday, January 07, 2012

திரைக்கதை வைத்தியர் - கே.பாக்யராஜ் 2


இணைப்பு: திரைக்கதை வைத்தியர் - கே.பாக்யராஜ் 1


அம்மா, அண்ணன், சொந்தங்கள், நண்பர்கள் என்று யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து வெற்றி கொடியை பறக்க விட்டவர் யாரென்று கேட்டால் எல்லோருக்கும் நடிகர் அஜித்தின் ஞாபகம் வரலாம், ஆனால் எனக்கு கே.பாக்யராஜ் அவர்களின் ஞாபகம் தான் வரும்.

சாதாரண நிலையிலிருந்து யாருடைய தயையும் இல்லாமல்  தனது தனிப்பெரும் திறமையினால் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மாபெரும் கலைஞர் இவர். 

இவருடைய படங்களை கேள்வி - பதில் பகுதிகளாக அதாவது இடைவேளை வரை கேள்வி பகுதியாகவும் இடைவேளைக்கு பின்பு அந்த கேள்விகளுக்குறிய பதில் பகுதியாகவும் என்னால் பார்க்க முடிகிறது. 

சிறப்பான கேள்விகளை தேர்ந்தெடுத்து நகைச்சுவை, குடும்ப உறவுகள், இனிய பாடல்கள் கலந்து கேள்விகளை அடுக்கி கொண்டே வருவார், பிறகு அழுத்தமான, ஆழமான, நெகிழ வைக்கும் காட்சிகளை கொண்டு அந்த கேள்விகளுக்கான விடையை தெளிவாக சொல்லி முடிப்பார்.

தமிழ் சினிமாவில் வந்த காதல் படங்களில் அது கல்லூரி காதலாகட்டும், அலுவலக காதலாகட்டும், ஏழை - பணக்காரன், வெவ்வேறு மதங்கள், ஜாதிகள், இப்படி எத்தனை எத்தனையோ வந்து குவிந்து கொண்டிருக்கும் காதல் படங்களிலேயே இது வரை நான் பார்த்த படங்களில் சிறந்த படம் என்று ஒரு காதல் படத்தை கேட்டால் அது இவர் இயக்கிய டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தை தான் சொல்வேன்.

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்

அந்த ஏழு நாட்கள் படத்தில் ராஜேஷ் ஒரு வசனம் சொல்வார், “பிஞ்சு மனசுல எதுவும் ஆழமா பதிஞ்சிடும்...” என்று. அது போல் வாட்ச்மேன் மகனான ராஜா தன்னுடைய முதலாளி மகளான ராதாவோடு சிறு வயதில் பள்ளிகூடத்தில் ஒன்றாக படித்த போது ஏற்பட்ட பழக்கத்தை பெரியவனான பின்பும் காதல் என்று கற்பனை வளர்த்து கொண்டு வேலை இல்லாத வெட்டி ஆஃபிஸர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய அப்பாவாக வருபவர் கல்லாபெட்டி சிங்காரம். என்ன நடிகர் சார் இவர்? - இவரின் முதல் அறிமுக காட்சியில் இவர் தான் முதலாளி என்பது போல் காட்டப்படும் பாருங்கள்.. நகைச்சுவைக்கு நான் கியாரண்டி கையெழுத்து போட்டு தர்ரேன்.

பழகியவை ஆழமாக பதிவதற்கு அதே ஊரில் தொடர்ந்து வளர்ந்து வரும் சூழலும் காரணமாக அமைந்திருக்கிறது,ஆனால் ராதாவோ சிறு வயதிலேயே வெளியூருக்கு படிக்க சென்று விட்டு பெரியவளானதும் திரும்ப அந்த ஊருக்கு வருகிறாள். 

ராஜா தனது காதலியாக தான் ராதா தன்னை காண வருகிறாள் என்று எண்ணிக் கொண்டு பந்தாவாக டிரஸ், கேப் எல்லாம் போட்டுக் கொண்டு இரயில்வே ஸ்டேஷனுக்கு போய் அவரிடம், “ஐயம் ராஜா.. வாட்ச்மேன் சன் ராஜா..” என்று பஞ்ச் டயலாக் பேச - அவரோ, “பெட்டியெல்லாம் எடுத்துக்குங்க..” என்று சொல்கிறார்.

ராதா எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்பதை எவ்வளவு அழுத்தமாக சொல்லியிருப்பார். இவரின் காட்சிஅமைப்பில் ஒன்றை கவனிக்கலாம், ஒரு அழுத்தமான காட்சியை சொல்வதற்கு முன்பு அதற்கு முந்தைய லீட் காட்சியில் நகைச்சுவையை வைத்திருப்பார் - அதெல்லாம் பார்த்து அனுபவிக்கணும்.

உள்ள கதவை நீ மெல்ல திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும் 
                                                   - என்று ஏங்கியபடி கவிபாடுகிறான் ராஜா.

ஒரு கட்டத்தில் ராதாவுக்கு ராஜா தன்னை தான் காதலிக்கிறார் என்று தெரிய வரும் போது, “உங்களோட லவ் எவ்வளவு சின்சியரானது, டீப்பானதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, ஆனால் உங்க முட்டாள்தனத்தை தான் என்னால ஜூரணிக்க முடியல.. Let's forget the past..... எனக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. எனக்கு ஃபிக்ஸ் பண்ண மாப்பிள்ளை நாளைக்கி வரப் போறார்..” என்று கேள்வி பகுதியை நிறைவு செய்கிறார். 
(இப்போது பாக்யராஜ் தன்னை காதலிக்க சொல்லி கொஞ்சம் டிரை பண்ணி பாருங்களேன் என்றெல்லாம் சொல்லி பரிதாபப்பட வைப்பார்.)

கேள்வி என்னவென்றால் என்ன காரணம் இருந்தால் ராதாவுக்கு ராஜா மீது காதல் வரும் என்பதே அந்த கேள்வி.

இப்பொழுது ராதாவுக்கு நிச்சயம் செய்திருப்பவரும் அந்த ஊருக்கு வருகிறார். இவர் பணக்காரர், மெத்த படித்தவர், இப்படிபட்டவர்களுக்கு பணக்காரர்களோடு பழகும் முறையை பற்றி மட்டுமே தெரியும் அதுமட்டுமல்லாமல் நாகரீகம் என்ற பெயரில் எளியவர்களை அவமானப்படுத்துவதும் மட்டுமே அடையாளமாக கொண்ட பணத்தோடு திமிரும் படைத்த கூட்டத்தை சார்ந்தவர்களில் இவரும் ஒருவர். 

திரைக்கதை வைத்தியர் தன் வித்தையை காட்டும் நேரம்...

அதில் முக்கியமாக..

மழை கொட்டிக் கொண்டிருக்கும் இரவு பொழுதில் ஒரு ரிசப்சனுக்கு போயிட்டு ராதாவும் அவரது நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் காரில் திரும்பி வருவார்கள். காரை ராஜா தான் ஓட்டி வருவார். வரும் வழியில் கார் பழுதாகி நின்று விடும். அதை தொடர்ந்து ராதாவும் அந்த நிச்சயித்தவரும் டிராவலர்ஸ் பங்களாவிற்கு செல்வார்கள்.

அங்கே டிரஸ் சேஞ்ச் பண்ண அறைக்குள் ராதா செல்ல அதை நிச்சயித்தவர் சாவி இடுக்கில் எட்டி பார்க்கிறார். அவருடைய நிழல் வெளிச்சத்துக்கு வந்ததை நிழலை வைத்து கண்டு கொண்ட ராதா சட்டென்று தனது ஆடையை சரி செய்து கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறார்.

காரை பழுது செய்து கொண்டிருக்கும் ராஜாவிடம் வீட்டிற்கு போகலாம் என்று சைக்கிளில் வரும் போது மழையிருட்டில் சைக்கிள் கீழே விழுந்து புடவை சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது.

ராஜா புடவையை எடுக்க முயற்சிக்கும் போது இன்னொரு காரின் விளக்கு வெளிச்சம் புடவை இல்லாமல் ரவிக்கையோடு நனைந்து இருக்கும் ராதா மீது அடிக்கிறது. ராஜா கோபப்பட்டு கல்லெடுத்து அடிக்க வர கார் பின்வாங்குகிறது.

அதை தொடர்ந்து.. சின்ன வயதில் ராஜாவும் ராதாவும் சேர்ந்து எடுத்த போட்டோவை டிரஸர் பண்ணி வைத்திருந்த ராஜாவிடமிருந்து ராதா வாங்கி, ராதா அவரை மட்டும் தனியாக வெட்டி பிரித்து வைத்திருந்திருப்பார். இப்போது பழுதாகி நின்ற காரை நிச்சயிக்கப்பட்டவர் சரி செய்து எடுத்து வரும் போது டேஷ் போர்டில் ராஜாவின் போட்டோ இருப்பதை பார்த்து எடுத்து வந்து இரண்டையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து பார்ப்பார்.

நிச்சயிக்கப்பட்ட அவர் ராதாவிடம் சராமரியாக கேள்விகள் கேட்கிறார், இறுதியாக, “... ஆஸ்திக்கு என்னையும் ஆசைக்கு அவனையும் செட் அப் பண்ற உன்னோட ஸ்டைல இன்னையோட விட்டுடு..” என்று சொல்லி விட்டு போட்டோ ஆல்பத்தை விட்டு எரிகிறார்.

போட்டோக்கள் கீழே சிதறி கிடக்கிறது. அதில் ஒரு போட்டோ ராதா சிறு வயதில் எடுத்த போட்டோ, அதை பற்றி முன்பு ராஜாவிடம் காட்டி, “இது என்ன டிரஸ் ஒரு மாதிரியா இருக்கு..” என்று கேட்க..

ராஜா பதிலளிப்பார், “ஐயையோ, அது டிரஸ் இல்லீங்க... சின்ன வயசுல நீங்க டிரஸ் இல்லாம எடுத்த போட்டோ.. இப்ப நீங்க பெரிய பொன்னாயிட்டீங்க.. அத அப்படியே பாத்தா நல்லாயிருக்காதுண்ணு நான் தான் இங்க்லேயே டிரஸ் பண்ணி விட்டேன்..”

- வேறு என்ன வேணுங்கறீங்க... ”ஐ லவ் யு ராஜா..” - ராஜாவின் அந்த நாள் பொன்னான நாள் தான்.

இதற்கிடையே பலவித காரணங்களால் தனது காதலை தனது தந்தையிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள் ராதா. ஆனால் ராதாவுக்கு நிச்சயிக்கப்பட்டவரின் தந்தையான அந்த பணக்கார ஜெண்டில்மேனோ ராதாவின் டைரியை படித்து படத்தோட மொத்த கதை திரைக்கதையையும் தெரிந்து கொள்கிறார்.

அவர் ராதாவின் காதலை கைகூட வைக்க நினைக்கும் போது அவரது மகன் குறிக்கிடுகிறார், “பத்திரிக்கை கொடுத்துட்டு இப்ப இப்படி முடிவெடுத்தா நம்ம ஃபேமிலி ஸ்டேட்டஸ் என்னாவுறது..” என்கிறார்

அதற்கு அந்த ஜெண்டில்மேன், “......... நானும் உங்க அம்மாவும் 40 இயர்ஸுக்கு மேலா தாம்பத்யம் நடத்தியிருக்கிறோம். ஆனா எங்க பெட்ரூம்ல ஒரு நாள் கூட லைட் எறிஞ்சதேயில்லை.. அப்படிப்பட்ட எங்களுக்கு பொறந்த நீ.. ஒரு பொண்ணு பாத்ரூம்ல குளிக்கும் போது எட்டி பார்த்திருக்கிறியே.. அதுல போகாத பிரஸ்டிஜா இதுல போவ போவுது... ...... 

கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்..”  என்று பதில் சொல்கிறார் திரைக்கதை வைத்தியர்.

பிறந்த நாள் வாழ்த்துகள், சார்..

2 comments:

Anonymous said...

A.Mohamed Ismail, on செப்டம்பர்27, 2009 at 4:03 மாலை said:

அடடே! இஸ்லாத்தை பற்றி இன்னொரு கட்டுரையா?
”இஸ்லாம் பிறப்பும் இருப்பும் – ஓர் எளிய அறிமுகம்” – இந்த தலைப்பே தவறு. உங்கள் கட்டுரை இஸ்லாத்தின் அறிமுகமாய் இல்லை என்பதே காரணம்.

நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ’இஸ்லாம் பிறப்பும் இருப்பும் – நான் அறிந்தவை” என்ற தலைப்பே பொருத்தமானது.

நீங்கள் எழுதுவதையே நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்து இதை அறிமுகம் என்று தலைப்பிடும் போது இஸ்லாம் தான் கூறிய கருத்துக்களை நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறல்ல.

நீங்கள் சூரியனை பார்க்கிறீர்கள், அதற்கு சக்தி உள்ளது, அதை சூரிய பகவான் என்று வணங்குபவர்களும் உள்ளர். இப்படி எத்தனையோ பகவான்கள் உள்ளனர், உதாரணமாக சனி பகவான் இப்படி.. இவற்றை எல்லாம் சக்தி இருப்பதாகவும் கடவுளாகவும் அனுஷ்டிக்கும் போது இஸ்லாம் மட்டுமே அவை எல்லாம் உருவாக்கப்பட்டவை என்றும் அவற்றை வணங்க கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

மனிதர்கள் கடவுள் என வணங்கப்பட்டோர்களின் ஆலயங்கள் இருக்கும் தெருவில் கூட நடமாடக் கூடாது என்று தடுத்து வைக்கப் பட்ட போது, வேதங்கள் மனிதர்களை பாவிகளே என்றும் சூத்திரன் என்றும் விளித்த போது இஸ்லாத்தின் வேதம் மட்டுமே மனிதர்களே என்று அழைத்தது,

எனக்கு இஸ்லாம் கூறும் கருத்துக்களின் மீது நம்பிக்கை உள்ளது. இத்தகைய நம்பிக்கையை உடையவரே முஸ்லீம் ஆவார்.

இத்தகைய நம்பிக்கையுடையோர் யாவரும் சகோதரர்கள் தான். புதிதாக நம்பிக்கை கொள்வோர் இந்த நாடு, மொழி கடந்த உலக சகோதரத்துவ நம்பிக்கையில் தங்களை இணைத்து கொள்கிறார்கள். ஒரே திசையை நோக்கி வணங்குவதற்காக நிற்கிறார்கள்.

இதில் இந்த நம்பிக்கைக்கு வராதவர்களை பற்றியோ அல்லது நம்பிக்கையிலிருந்து வெளியேறுகிறவர்களை பற்றியோ அல்லது நம்ப சொல்கின்ற ஒன்றில் சந்தேகம் கொள்பவர்களையோ பற்றி அது அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இப்படி யாராக இருப்பினும் அதனால் இஸ்லாத்திற்கு ஒன்றும் நஷ்டமல்ல, அவர்கள் தான் நஷ்டமடைகிறார்கள்.

தவிர, உங்களை நம்ப சொல்கின்ற ஒன்றினால் உங்களுக்கு எந்த சமுதாய தீமையையும் விளைவிக்காத போது எதனால் நீங்கள் கவலையடைகிறீர்கள்.

எங்கள் பண்டிகைகளை பார்த்தீர்கள் என்றால் நோன்பு இருப்போம், ஒரு சத்தம் வராது, மேளம் இருக்காது, கொட்டு சத்தம் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இருக்காது, ஜகாத் கொடுப்போம், 100க்கு 2.5 சதவீதம் உறவினர்களுக்கு, ஏழைகளுக்கு, வழிப்போக்கர்களுக்கு கொடுக்கிறோம், அவ்வளவு பெரிய கூட்டம் ஹஜ், ஒரு சாராய வாடை இருக்காது, இதெல்லாம் இஸ்லாம் அல்லாத ஒன்றினால் சாத்தியமா? கூறுங்கள்.

என்ன பாய் ஒரு பின்னூட்டத்த படிச்சிட்டு அப்படியே உங்க தளதுக்கு வந்தேன் இப்படி ஏமாத்திட்டிங்களே பாக்யராஜ் உங்களை ரொம்ப இம்ரஸ் பன்னிட்டாரு அப்புரம் ஏன் திரைகதை வைத்தியம் வேலை செய்யலை, அதையும் அப்படியே எழுதுங்க!

nagoreismail said...

"என்ன பாய் ஒரு பின்னூட்டத்த படிச்சிட்டு அப்படியே உங்க தளதுக்கு வந்தேன் இப்படி ஏமாத்திட்டிங்களே.."

- நீங்க என்ன கற்பனை பண்ணிகிட்டு வந்தீங்களோ..? யாருக்கு தெரியும்..? ஏமாத்திட்டீங்களேன்னா என்ன அர்த்தம்.. நான் எழுதுனதை படிச்சபிறகு நான் வஹ்ஹாபியிசத்தை பின்பற்றுவனாத்தான் இருப்பேன் என்று நீங்க நம்பி வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. அப்படியே பார்த்தாலும் நான் உங்களை ஏமாத்தலை.. நீங்க தான் உங்களையே ஏமாத்திகிட்டீங்க... ஐ எம் சோ சாரி அபவ்ட் தட்..

”..பாக்யராஜ் உங்களை ரொம்ப இம்ரஸ் பன்னிட்டாரு..”

- நிச்சயமாக, நல்ல கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என்ற வகையில்..

”..அப்புரம் ஏன் திரைகதை வைத்தியம் வேலை செய்யலை, அதையும் அப்படியே எழுதுங்க!"

- அதுக்கு காரணம் இப்ப இருக்கிற மக்களோட ரசனை தான். மக்களோட ரசனை கான்ஸ்டண்ட்டா மாறிகிட்டே இருக்கு..

சரி, நீங்க ”வேலை செய்யலை” என்று எழுதியிருக்கிறீர்கள்.. ஐ டோண்ட் அண்டர்ஸ்டேண்ட்.. பாக்யராஜ் சார், என்ன இம்ப்ரெஸ் பண்ணியிருக்கார் சரி... நான் ஏன் என்னய இம்ரஸ் பண்ணின மாதிரி எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ணனும்னு நான் எதிர்பார்க்கணும்.

“வேலை செய்யலை..” என்பது கமர்சியல் வெற்றியை தான் குறிக்கும் என்றால் ஐ எம் லீஸ்ட் கேர் அபவ்ட் தட்.. என்னய இம்ப்ரஸ் பண்ணல என்பது போல் நீங்கள் அர்த்தம் கொண்டிருந்தால்.. ஐ எம் சாரி அகேய்ன்.. ஹி இஸ் இம்ரெஸ்ட் இன் மோஸ்ட் ஆஃப் ஹிஸ் மூவிஸ்.. தட்ஸ் மோர் தென் இனஃப் ஃபார் மீ..
இப்ப சமீபத்துல வந்த இவரோட “பாரிஜாதம்” படம் கூட நல்ல திரைக்கதை (கதைக்குள் கதை) தான். ஆனால் கதை இன்னும் ஹெவியாக இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.