Saturday, March 17, 2012

வேலையிட பாதுகாப்பும் ஆரோக்கியமும் - பகுதி 1

உலகம் முழுக்க வேலையிடத்தில் நடக்கும் விபத்துகளால் ஏராளமானோர் அடிபட்டு காயம் ஏற்படுவதுடன் மரணமும் அடைகின்றனர்.

2009ஆம் ஆண்டு இந்தியாவின் ஜெய்ப்பூர் மாநிலத்தில் IOC ஆயில் டிபோட்டில் நடந்த விபத்தை இங்கே பார்வையிடலாம்.

http://dl.dropbox.com/u/43485237/IOC%20fire%20incident.pdf 

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் ஜனவரி முதல் ஜூன் வரை 30 ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர்.


பொதுவாக அதிக அளவு வேலையிட ஆபத்துள்ள வேலையிடம் என்றால் அது கட்டுமான வேலை நடைபெறும் இடம், கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்ப்பு வேலை நடைபெறும் இடம், எண்ணெய், பெட்ரோ இரசாயன வேலை நடைபெறும் இடம், உற்பத்தி துறை தொழிற்சாலைகள் தான்.

மேற்சொன்ன இடங்களிலெல்லாம் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு வெளிநாட்டு ஊழியர் சிங்கப்பூர் வருவதற்கு முகவருக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்பொழுது மனிதவள அமைச்சகத்தினால் வழங்கப்படும் In-Principal Approval எனும் ஆவணத்தில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உள்பட எல்லா விபரங்களும் எழுதியிருக்கிறது.


http://www.mom.gov.sg/MOMDoc/Employer_Kit.pdf  

நான் சொல்ல வருவது, உதாரணமாக, ஒரு ஊழியர் 4000 வெள்ளி கொடுத்து விட்டு சிங்கைக்கு வேலைக்கு வருகிறார் என்று வையுங்கள், அவரும் முகவர் சொன்ன வார்த்தைகளை அதாவது நல்ல வேலை, நல்ல தங்குமிட வசதி முக்கியமாக நல்ல சம்பளம் இப்படியாக எல்லாம் சொல்லி ஆசைப்பட்டு வந்த பிறகு மனதுக்கு பிடிக்காமல் போனாலும் அவர் தொடர்ந்து இங்கே இருந்தாக வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. 

இது ஏனெனில், கொடுக்கப்பட்ட 4000 வெள்ளியை அவர் கடன் வாங்கி வட்டி வாங்கி கட்டியிருப்பார், குடும்ப சூழல், இப்படி பல காரணத்தினால் பொறுத்து போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அப்படியே வேலையில் இருந்து பழகி கொள்ளலாம் என்று இருக்கும் போது தான் வேலையிட ஆபத்துகள் அவர்களை எந்த நேரமும் எதிரிகளை போல் அழிப்பதற்கு காத்திருக்கிறது.

சிங்கப்பூர் சட்டப்படி ஆபத்துகளை குறிப்பிடுவதற்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுகிறது.

1. Hazard

2. Risk

இதில் Hazard என்றால் மனிதர்களுக்கு தீங்கினையும் காயத்தையும் ஏற்படுத்தக்கூடிய எதுவுமே Hazard (anything with the potential to cause harm or injury) எனப்படும்.

இதில் ‘எதுவுமே’ என்பது எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.

ஒரு பாதுகாப்பில்லாத செயல் - (உதாரணமாக ஈரமான தரையில் நின்று கொண்டு மின்சார வேலை பார்ப்பது)

ஒரு பாதுகாப்பில்லாத சூழல் (உதாரணமாக வேலையிடம் போதுமான வெளிச்சம் இல்லமல் இருப்பது)

ஒரு ஆபத்தான இரசாயன பொருள் (உதாரணமாக அரிக்கும் பொருளான அமிலம்)

ஒரு இயந்திரம் (உதாரணமாக ஃபோர்க் லிஃப்ட்)

மின்சார் கம்பி வடங்கள்

இப்படி எதுவா வேணா இருக்கலாம். அப்படி பார்த்தால் வேலையிடத்தில் இருக்கும் அனைத்துமே அடங்கி விடும் எனலாம். 

Risk என்பது மேற்கூறிய Hazardனால் ஏற்படும் விளைவுகளை குறிக்கும்.

உதாரணமாக ராத்திரியில் (பகல்ல கூட தான்) கையில பணம், காசு, நகை எல்லாம் எடுத்துகிட்டு போறது Hazard என்றால் யாராவது நம்மை அடித்து போட்டு பணத்தை எடுத்து செல்வது Risk எனப்படும். 


இன்னும் சொல்லப் போனால் Risk என்பது அப்படி பணம் பறிபோவதற்கு எவ்வளவு தூரம் சாத்தியம் உள்ளது என்பதை பொறுத்து அது low riskஆ அல்லது medium riskஆ அல்லது high riskஆ என்பதை கண்டறிய வேண்டும். அப்படி கண்டறியும் முறைக்கு Risk Assessment என்ற பெயர் வழங்கப்படுகிறது.

இங்கே உள்ள சட்டப்படி எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன் முதலாளி Risk Assessment செய்தாக வேண்டும். அப்படி அவர் செய்ய வில்லை என்றால் அவருக்கும் முதல் குற்றத்திற்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
http://statutes.agc.gov.sg/aol/search/display/view.w3p;page=0;query=DocId:cd9437b7-419b-40de-99a3-09f2e7b8c90a%20Depth:0%20ValidTime:01/10/2007%20TransactionTime:01/10/2007%20Status:inforce;rec=0;resUrl=http://statutes.agc.gov.sg:443/aol/browse/relatedSLResults.w3 

ஆக, ஒரு ஊழியர் அவ்வளவு பணத்தை கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி கொடுத்து வருவதற்கு ஒரேஒரு காரணம் தான். அது தான் கொடுத்ததை விட அதிகமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது. அதாவது ‘லாபம்’ அடைய வேண்டும் என்பது.

ஆனால் வேலையிடத்தில் இருக்கும் ஆபத்துகளினால் உயிரிழப்பு ஏற்பட்டு இறந்து போகிறார்கள் அல்லவா அவர்களுக்கு compensation பணம் கொடுப்பார்கள், உதாரணமாக 4000 வெள்ளி கொடுத்து வரும் அவர் இறந்து விட்டார் என்பதற்காக 100,000 வெள்ளி கொடுக்கிறார்கள் என்று வையுங்கள். அந்த பணம் லாபமா? என்றால் இல்லை - அது Total Loss என்று தான் சொல்லப்படும்.
ஆக, நான் சொல்ல வருவது மேலே சொன்ன Hazard என்பதை வேலையிடத்தில் இருந்து முற்றிலுமாக நிவர்த்தி செய்து விட்டாலோ அல்லது அந்த Hazardனால் ஏற்படும் Riskஐ குறைத்து low risk ஆக்கி விட்டாலோ அந்த இடம் பாதுகாப்பாக அமையும்.


அப்படி செய்வதற்கு அதாவது hazard ஐ நீக்குவதற்கு அல்லது riskஐ குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பாதுகாப்பில் அடங்கும்.


உதாரணமாக, ....


(தொடரும்..)

2 comments:

ப.கந்தசாமி said...

நல்ல விவரங்கள்.

nagoreismail said...

நன்றிகள்